12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு வணிகக் கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் (12th Standard Tamil Medium business Mathematics Book Back and Creative Important Questions)
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஆறு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள், ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு நிர்வாக நிலைக்கு விண்ணப்பிக்கின்றனர். இரண்டு விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேர்காணல் குழுவில் உள்ள பெண்களின் எண்ணிக்கை X எனக் குறிக்கப்பட்டு. X இன் நிகழ்தகவு நிறைச் சார்பு பின்வருமாறு கண்டறியப்பட்டுள்ளது.
| X = x | 0 | 1 | 2 |
| P(x) | \(\cfrac { 2 }{ 11 } \) | \(\cfrac { 5 }{ 11 } \) | \(\cfrac { 4 }{ 11 } \) |
நேர்காணல் குழுவில் எத்தனை பெண்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
2.
பெர்னோலி முயற்சி: வரையறு.
3.
4.
சமவாய்ப்பு மாறியின் பொருள் என்ன என்பதனை விவரிக்கவும்.
5.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
\(\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } +y+\left( \frac { dy }{ dx } -\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } \right) ^{ 3/2 }\)
6.
பின்வரும் அட்டவணையிலிருந்து நியூட்டனின் பின்நோக்கு சூத்திரத்தைப் பயன்படுத்தி படி 4 -ஐ கொண்ட பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
| x | 1 | 2 | 3 | 4 | 5 |
| y | 1 | -1 | 1 | -1 | 1 |
7.
u0=560, u1=556, u2=520, u4=385, எனில் u3=465 என நிரூபி.
8.
தீர்க்க: (x2+x+1)dx+(y2-y+3)dy=0
9.
உற்பத்தி பொருள்களின் தேவைச்சார்பு p =e-x, p=0.5 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.
10.
இறுதிநிலை வருவாய் சார்பு R'(x)=1500-4x-3x2 எனில், வருவாய் சார்பு மற்றும் சராசரி வருவாய் சார்பைக் காண்க.
11.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 1 }{ \sqrt { { 9x }^{ 2 }-7 } } \)
12.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 1 }{ x \log x } \)
13.
3 அலகுகள் தொழிலாளரின் சம்பளம் மற்றும் 2 அலகுகள் மூலதனம் கொண்டு தயாரிக்கப்படும் உற்பத்தி பொருள்களுக்கான செலவு ரூ.62 ஆகும். 4 அலகுகள் தொழிலாளரின் சம்பளம் மற்றும் 1 அலகு மூலதனம் கொண்டு பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால் அதன் மொத்த செலவு ரூ.56 எனில், அணிக்கோவை முறையில் தொழிலாளர் மற்றும் மூலதனத்தின் ஒரு அலகுக்கு ஆகும் செலவினைக் காண்க.
14.
\(\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
15.
ஒரு தனித்த சமவாய்ப்பு மாறி X இன் நிகழ்தகவு பரவல் சார்பு

இங்கு k ஒரு மாறிலி எனில், (a) k -ன் மதிப்பு யாது ? மற்றும் (b) P(X> 2) -ஐ காண்க
16.
f(x) மூலம் வரையறுக்கப்படும் சார்பு f(x)=ke−2x ,0≤x<∞ ஆனது ஒரு அடர்த்தி சார்பு எனில், மாறிலி k மற்றும் சராசரி ஆகியவற்றைக் கண்டுபிடிக்கவும்.
17.
சமவாய்ப்பு மாறி X என்பது ஈருறுப்புப் பரவலாகும். மேலும் அதன் சராசரி மதிப்பு E(x)=2 மற்றும் மாறுபாட்டளவை மதிப்பு \(\frac { 4 }{ 3 } \) எனில் P(x = 5) இன் மதிப்பு காண்க.
18.
கீழ்க்கண்ட கேண்டல்- பாபிங்டன் ஸ்மித் சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி.
| 23 | 15 | 75 | 48 | 59 | 01 | 83 | 72 | 59 | 93 | 76 | 24 | 97 | 08 | 86 | 95 | 23 | 03 | 67 | 44 |
| 05 | 54 | 55 | 50 | 43 | 10 | 53 | 74 | 35 | 08 | 90 | 61 | 18 | 37 | 44 | 10 | 96 | 22 | 13 | 43 |
| 14 | 87 | 16 | 03 | 50 | 32 | 40 | 43 | 62 | 23 | 50 | 05 | 10 | 03 | 22 | 11 | 54 | 36 | 08 | 34 |
| 38 | 97 | 67 | 49 | 51 | 94 | 05 | 17 | 58 | 53 | 78 | 80 | 59 | 01 | 94 | 32 | 42 | 87 | 16 | 95 |
| 97 | 31 | 26 | 17 | 18 | 99 | 75 | 53 | 08 | 70 | 94 | 25 | 12 | 58 | 41 | 54 | 88 | 21 | 05 | 13 |
1550 முதல் 8000 வரையிலான 4 இலக்க எண் கொண்ட 10 சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்க.
19.
கீழ்க்காணும் சமன்பாடுகளை கிரேமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க.
5x + 3y = 17, 3x + 7y = 31
20.
21.
h = 1 எனில், Δ\(\left[ \frac { 5x+12 }{ { x }^{ 2 }+5x+6 } \right] \) -ஐ மதிப்பிடுக.
22.
பின்வருவனவற்றை தீர்க்க:
\(\frac { dy }{ dx } -\frac { y }{ x } \)=x
23.
ஆதி வழிச்செல்லும் அனைத்து நேர்கோட்டுத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.
24.
தொகையிடலை பயன்படுத்தி y -1=x என்ற கோடு, x-அச்சு, x=-2 மற்றும் x=3 என்னும் எல்லைக்குள் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
25.
y=|x+3| என்ற வளைவரையை வரைக. மேலும் \(\int _{ -6 }^{ 0 }{ |x+3| } dx\)-இன் மதிப்பைக் காண்க.
26.
பின்வருவனவற்றை தீர்க்க.
f(x) =\(\begin{cases} x, \\ -x, \end{cases}\begin{matrix} x & \ge & 0 \\ x & < & 0 \end{matrix}\) எனும் பொழுது \(\int _{ -1 }^{ 1 }{ f(x) } dx\) -ன் மதிப்பைக் காண்க.
27.
பின்வருவனவற்றை இரண்டாம் அடிப்படைத் தேற்றத்தை பயன்படுத்தி மதிப்பிடுக.
\(\int _{ -1 }^{ 1 }{ \frac { 2x+3 }{ { x }^{ 2 }+3x+7 } } dx\)
28.
A=\(\left( \begin{matrix} 0 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 3 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
29.
ஒரு சமவாய்ப்பு மாறி X- இன் நிகழ்தகவு அடர்த்தி சார்பு பின்வருமாறு

எனில், E(X) மற்றும் V(3X–2) -ஐ காண்க
30.
ஒரு பல் பொருள் அங்காடியில் ஒரு வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட சோப்பின் சராசரி 146.3 ஆக உள்ளது. விளம்பரத்திற்கு பிறகு 400 கடைகளை மாதிரி எடுத்ததில் வாராந்திர சராசரி விற்பனை 153.7 மற்றும் அதன் திட்ட விலக்கம் 17.2 எனில், விளம்பர பிரச்சாரம் வெற்றியடைந்தாக கருதலாமா?
31.
சொற்றொடர்கள், (i) நிகழ்தகவு நிறைச்சார்பு (ii) நிகழ்தகவு அடர்த்திச் சார்பு மற்றும் (iii) நிகழ்தகவு பரவல் சார்பு ஆகியவற்றை விளக்கவும்.
32.
A என்ற விளையாட்டு வீரரும் B எனும் மற்றொரு விளையாட்டு வீரரும் கலந்து கொள்ளும் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு விகிதம் 3:2 ஆகும். ஐந்து முறை விளையாடும் விளையாட்டில் A எனும் விளையாட்டு வீரர் குறைந்த பட்சம் 3 முறை வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவினைக் காண்க.
33.
ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மக்கள்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| வருடம்:x | 1941 | 1951 | 1961 | 1971 | 1981 | 1991 |
| மக்கள்தொகை (இலட்சியத்தில்):y | 20 | 24 | 29 | 36 | 46 | 51 |
இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி 1946 –ம் ஆண்டுக்கான மக்கள் தொகையைக் காண்க.
34.
கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து மாத வருமானம் ரூ.26-க்கு மிகாமல் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை லாக்ராஞ்சியின் சூத்திரத்தைப் பயன்படுத்தி காண்க.
| வருமானம் மிகாமல்(ரூ) | 15 | 25 | 30 | 35 |
| தொழிலாளர்களின் எண்ணிக்கை | 36 | 40 | 45 | 48 |
35.
தீர்க்க: cos2x\(\frac { dy }{ dx } \)+y=tanx
36.
வகைக்கெழு சமன்பாட்டைத் தீர்க்க y2dx+(xy+x2)dy=0
37.
y2=27x3 என்ற வளைவரைக்கும் மற்றும் x=0, y=1, y=2 என்ற கோடுகளுக்குள் அடைப்படும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
38.
உற்பத்தி பொருள்களின் தேவை சமன்பாடு x=\(\sqrt { 100-p } \) மற்றும் அளிப்பு சமன்பாடு x =\(\frac { p }{ 2 } -10\) எனில், சந்தையில் சமநிலையின் கீழ் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் உபரியைக் காண்க.
39.
பின்வருவனவற்றை வரையறுத்த தொகையீடுகளின் பண்புகளைக் பயன்படுத்தி மதிப்பிடுக.
\(\int _{ 0 }^{ 1 }{ \frac { x }{ (1-x)^{ \frac { 3 }{ 4 } } } } dx\)
40.
மதிப்பிடுக: \(\int _{ 0 }^{ 1 }{ [e^{ a \log x }+{ e }^{ x \log a }]dx } \)
41.
வெவ்வேறு தரகு வீதங்களையுடைய A, B, C என்ற மூன்று பொருள்களை கடந்த மூன்று மாதங்களில் ஒரு விற்பனையாளர் விற்பனை செய்ததற்கான விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
| மாதங்கள் | விற்பனை செய்த அலகுகள் | பெற்ற மொத்த தரகு | ||
| A | B | C | ||
| ஜனவரி | 90 | 100 | 20 | 800 |
| பிப்ரவரி | 130 | 50 | 40 | 900 |
| மார்ச்சு | 60 | 100 | 30 | 850 |
கிரேமரின் முறையில், A, B, C என்ற பொருள்களுக்கான தரகு வீதத்தைக் காண்க.
42.
ஒரு வாகன தயாரிப்பு நிறுவனமானது S1, S2 மற்றும் S3 என்ற மூன்று வகையான எஃகு இரும்புகளையும் பயன்படுத்தி C1, C2 மற்றும் C3 என்ற மூன்று வகையான மகிழுந்து வாகனங்களை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கு தேவையான எஃகு இரும்பு R டன்களில் மற்றும் மூன்று வகையான மகிழுந்து வாகனங்களுக்கும் தேவையான மொத்த எஃகு இரும்பு விவரம் பின்வரும் அட்டவணையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
| எஃகு வகைகள் | வாகனங்களின் வகைகள் | இருப்பிலுள்ள மொத்த எஃகு | ||
| C1 | C2 | C3 | ||
| S1 | 3 | 2 | 4 | 28 |
| S2 | 1 | 1 | 2 | 13 |
| S3 | 2 | 2 | 1 | 14 |
நிறுவனம் தயாரிக்கும் ஒவ்வொரு வகையான வாகனங்களின் எண்ணிக்கையை காண்க.
43.
ஈருறுப்புப் பரவலின் பண்பளவைகளான சராசரியின் மதிப்பு 4 மற்றும் மாறுபாடு 4/3 எனில் P(X ≥ 5) இன் மதிப்பானது _____.
(2/3)6
(2/3)5(1/3)
(1/3)6
4(2/3)6
44.
இரண்டாவது வகைப்பிழை என்பது________ஆகும்.
H0 தவறு எனில் ஏற்பது
H0 உண்மை எனில் ஏற்பது
H0 உண்மை எனில் மறுப்பது
H0 தவறு எனில் மறுப்பது
45.
ஒரு தனித்த நிகழ்தகவுச் சார்பு p(x) எப்போதும் குறையற்றது மற்றும் அது அமையும் இடைவெளியானது _____.
0 மற்றும் \(\infty \)
0 மற்றும் 1
–1 மற்றும் +1
\(-\infty \) மற்றும் \(+\infty \)
46.
c ஒரு மாறிலி எனில் Δc= _____.
c
Δ
Δ2
0
47.
y=cx+c− c3 எனில் அதன் வகைக்கெழுச் சமன்பாடு ____.
\(y=x\frac { dy }{ dx } +\frac { dy }{ dx } -\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }\)
\(y+\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }=x\frac { dy }{ dx } -\frac { dy }{ dx } \)
\(\frac { dy }{ dx } +y=\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }-x\frac { dy }{ dx } \)
\(\frac { d^{ 3 }y }{ dx^{ 3 } } \)=0
48.
தேவைச் சார்பு p-க்கு , \(\int { \frac { dp }{ p } } =k\int { \frac { dx }{ x } } \) எனில், k= ____.
\(\eta _{ d }\)
-\(\eta _{ d }\)
\(\frac { -1 }{ { \eta }_{ d } } \)
\(\frac { 1 }{ { \eta }_{ d } } \)
49.
\(\int _{ 0 }^{ \frac { \pi }{ 3 } }{ \tan x } dx\) -ன் மதிப்பு ______.
log 2
0
log\(\sqrt{2}\)
2 log2
50.
\(\frac { { a }_{ 1 } }{ x } +\frac { b_{ 1 } }{ y } ={ c }_{ 1 },\frac { { a }_{ 2 } }{ x } +\frac { b_{ 2 } }{ y } \), Δ1=\(\left| \begin{matrix} { a }_{ 1 } & { b }_{ 1 } \\ { a }_{ 2 } & { b }_{ 2 } \end{matrix} \right| \); Δ2=\(\left| \begin{matrix} { b }_{ 1 } & { c }_{ 1 } \\ { b }_{ 2 } & { c }_{ 2 } \end{matrix} \right| \), Δ3=\(\left| \begin{matrix} { c }_{ 1 } & { a }_{ 1 } \\ { c }_{ 2 } & { a }_{ 2 } \end{matrix} \right| \) எனில்,, (x,y)-ன் மதிப்பு ______.
\(\left( \frac { { \triangle }_{ 2 } }{ { \triangle }_{ 1 } } ,\frac { { \triangle }_{ 3 } }{ \triangle _{ 1 } } \right) \)
\(\left( \frac { { \triangle }_{ 3 } }{ { \triangle }_{ 1 } } ,\frac { \triangle _{ 2 } }{ { \triangle }_{ 1 } } \right) \)
\(\left( \frac { { \triangle }_{ 1 } }{ { \triangle }_{ 2 } } ,\frac { { \triangle }_{ 1 } }{ { \triangle }_{ 3 } } \right) \)
\(\left( \frac { { -\triangle }_{ 1 } }{ { \triangle }_{ 2 } } ,\frac { { -\triangle }_{ 1 } }{ { \triangle }_{ 3 } } \right) \)
1.
நேர்காணல் குழுவில் உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு எண்ணிக்கை
\(E\left( X \right) =\underset { x }{ \Sigma } x{ P }_{ x }\left( x \right) \)
= \(\left[ \left( 0\times \cfrac { 2 }{ 11 } \right) +\left( 1\times \cfrac { 5 }{ 11 } \right) +\left( 2\times \cfrac { 4 }{ 11 } \right) \right] \)
= \(\cfrac { 13 }{ 11 } \) (தோராயமாக ஒரு பெண்)
2.
ஒரு சமவாய்ப்பு சோதனை இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும். அவ்விளைவானது இரு வகைப்படும் அவை வெற்றி (S) மற்றும் தோல்வி (F) ஆகும். அதனுடைய நிகழ்தகவுகள் முறையே p மற்றும் q எனக் குறிக்கப்படும். அது பெர்னோலி சோதனை (அல்லது முயற்சி) என்று அழைக்கப்படும்
3.
4.
அடிப்படை கணிதத்தில், ஒரு மாறி என்பது ஒரு தெரியாத எண்ணை பிரதிபலிக்கும் ஒரு அகரவரிசை எழுத்தாகும், சமவாய்ப்பு மாறி என்பதும் ஒரு மாறி, அது மேலும் சமவாய்ப்பிற்கு உட்பட்டது என்பது அதன் பொருள், அதாவது இது வெவ்வேறான மதிப்புகளைப் பெற்றிருக்கும்.
5.
\(\frac{d^2 y}{d x^2}+y+\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^{3 / 2}=0\)
\(\frac{d^2 y}{d x^2}+y=-\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^{3 / 2}\)
இருபறமும் வர்க்கப்படுத்த
\(\left(\frac{d^2 y}{d x^2}+y\right)^2 =\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^3 \)
வரிசை =3 ; படி =3
6.
\(\begin{array}{|c|c|c|c|c|c|}
\hline x & \boldsymbol{y} & \Delta \mathbf{y} & \Delta^2 \mathbf{y} & \Delta^3 \mathbf{y} & \Delta^4 \mathbf{y} \\
\hline 1 & 1 & & & & \\
\hline & & -2 & & & \\
\hline 2 & -1 & & 4 & & \\
\hline & & 2 & & -8 & \\
\hline 3 & 1 & & -4 & & 16 \\
\hline & & -2 & & 8 & \\
\hline 4 & -1 & & 4 & & \\
\hline & & 2 & & & \\
\hline 5 & 1 & & & & \\
\hline
\end{array}\)
\( x_0+\mathrm{nh}=x, x_0=1, \mathrm{~h}=1 \Rightarrow \mathrm{n}=x-1 \)
\( \mathrm{y}=y_0+\frac{n}{1 !} \Delta y_0+\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_0+ \)
\( \frac{n(\mathrm{n}-1)(\mathrm{n}-2)}{3 !} \Delta^3 y_0+\frac{n(\mathrm{n}-1)(\mathrm{n}-2)(\mathrm{n}-3)}{4 !} \Delta^4 y_0 \)
\( =1+\frac{(x-1)}{1 !}(-2)+\frac{(x-1)(x-2)}{2 !}(4) +\frac{(x-1)(x-2)(x-3)}{3 !}(-8) \)
\( =(1-2 x+2)+2\left(x^2-3 x+2\right)-\frac{4}{3}\left(x^2-3 x+2\right) \)
\( =1-2 x+2+2 x^2-6 x+4-\frac{4}{3}\left(x^3-6 x^2+11 x-6\right) +\frac{2}{3}\left(x^4-7 x^3+12 x^2-3 x^3+21 x^2-36 x+2 x^2-14 x+24\right) \)
\(=1-8 x+6+2 x^2-\frac{4 x^3}{3}+8 x^2-\frac{44}{3} x+8 +\frac{2}{3} x^4-\frac{20 x^3}{3}+\frac{70 x^2}{3}-\frac{100 x}{3}+16 \)
\(y=\frac{2 x^4}{3}-8 x^3+\frac{100 x^2}{3}-56 x+31
\)
7.
\(\begin{array}{|c|c|c|c|c|c|}
\hline \boldsymbol{x} & 0 & 1 & 2 & 3 & 4 \\
\hline \mathbf{u}_x & 560 & 556 & 520 & - & 385 \\
\hline
\end{array}\)
நான்கு மதிப்புகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதால்
\( \Delta^4 \mathrm{u}_0=0 \)
\((\mathrm{E}-1)^4 \mathrm{u}_0=0 \)
\(\left(\mathrm{E}^4-4 \mathrm{E}^3+6 \mathrm{E}^2-4 \mathrm{E}+1\right) \mathrm{u}_0=0 \)
\( \mathrm{u}_4-4 \mathrm{u}_3+6 \mathrm{u}_2-4 \mathrm{u}_1+\mathrm{u}_0=0 \)
\( 385-4 \mathrm{u}_3+6(520)-4(556)+560=0 \)
\( 385-4 \mathrm{u}_3+3120-2224+560=0 \)
\( 4 \mathrm{u}_3=1841 \Rightarrow \mathrm{u}_3=460.25
\)
8.
(x2+x+1)dx+(y2-y+3)dy=0
இது, f(x)dx+g(y)dy=0 என்ற வடிவில் உள்ளது.
தொகையிட நாம் பெறுவது,
\(\int { ({ x }^{ 2 }+x+1) } dx+\int { ({ y }^{ 2 }-y+3) } dy\)=c
\(\left( \frac { { x }^{ 3 } }{ 3 } +\frac { { x }^{ 2 } }{ 2 } +x \right) +\left( \frac { { y }^{ 3 } }{ 3 } -\frac { { y }^{ 2 } }{ 2 } +3y \right) \)=c
9.
\( \mathrm{p}=\mathrm{e}^{-x}, \mathrm{p}=0.5=\frac{1}{2} \)
\( \frac{1}{2}=\mathrm{e}^{-x} \Rightarrow \mathrm{e}^x=2 \)
\( x=\log _\epsilon 2\)
நுகர்வோர் உபரி
\(C S =\int_0^{x_0} f(x) d x-x_0 p_0 \)
\(=\int_0^{\log _e 2} e^{-x} d x-\frac{1}{2} \log _e 2\)
\( =-\left[e^{-x}\right]_0^{\log _ \in 2}-\frac{1}{2} \log _e 2 \)
\( =-\left[e^{-\log _e 2}-e^0\right]-\frac{1}{2} \log _e 2
\)
\(=-\left(\frac{1}{2}-1\right)-\frac{1}{2} \log _e 2=\frac{1}{2}-\frac{1}{2} \log _e 2 \)
\(=\frac{1}{2}\left[1-\log _e 2\right] \)
C.S.=\(\frac{1}{2}\)[1-loge2] அலகுகள்
10.
இறுதிநிலை வருவாய்ச் சார்பு
\(R^{\prime}(\mathrm{x})=1500-4 x-3 x^2\)
வருவாய்ச் சார்பு: \(\mathrm{R}=\int\left(1500-4 \mathrm{x}-3 \mathrm{x}^2\right) d x\)
\(=1500 x-\frac{4 x^2}{2}-\frac{3 x^3}{3}+k\)
x =0, R=0 எனில், k =0
வருவாய்ச் சார்பு: \(\mathrm{R}=1500 x-2 x^2-x^3\)
சராசரி வருவாய்ச் சார்பு:
\(\mathrm{AR}=\frac{R}{x}=1500-2 x-x^2\)
11.
\(\int { \frac { dx }{ \sqrt { { 9x }^{ 2 }-7 } } } \)
\(=\int { \frac { dx }{ \sqrt { 9\left( { x }^{ 2 }-\frac { 7 }{ 9 } \right) } } } \)
\(=\frac { 1 }{ 3 } \int { \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }{ \left( \frac { \sqrt { 7 } }{ 3 } \right) }^{ 2 } } } } \)
\(\left[ \because \int { \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }+{ a }^{ 2 } } } =\log { \left| x+\sqrt { { x }^{ 2 }+{ a }^{ 2 } } \right| +c } } \right] \)
\(=\frac { 1 }{ 3 } \log { \left| x+\sqrt { { x }^{ 2 }-\frac { 7 }{ 9 } } \right| } +c\)
\(=\frac { 1 }{ 3 } \log { \left| x+\sqrt { \frac { { 9x }^{ 2 }-7 }{ 3 } } \right| } +c\)
\(=\frac { 1 }{ 3 } \log { \left| 3x+\sqrt { { 9x }^{ 2 }-7 } \right| } +c\)
12.
\(\int (\frac { 1 }{ x \log x } )dx \)
\(=\int \frac {dt}{t} = \log |t| + c \)
= log|logx|+c
t =log x, dt = 1/x dx
13.
x,y அலகுகள் தொழிலாளர் அலகு, மூலதனம் அலகு ஆகியவற்றின் விலையைக் குறிக்கட்டும்.
3x + 2y = 62
4x +y = 56
\(\Delta =\left| \begin{matrix} 3 & 2 \\ 4 & 1 \end{matrix} \right| =3(1)-4(2)=3-8=-5\not =0\)
∴ கிரேமரின் விதியைப் பயன்படுத்தலாம்
\(\Delta x=\left| \begin{matrix} 62 & 2 \\ 56 & 1 \end{matrix} \right| =62(1)-56(2)=62-112=-50\)
\({ \Delta }_{ y }=\left| \begin{matrix} 3 & 62 \\ 4 & 56 \end{matrix} \right| =3(56)-4(62)\)
= 168 - 248 = -80

\(\therefore\) தொழிலாளருக்கான ஒரு அலகு செலவு ரூ.10 மற்றும் முதலீட்டிற்கான ஒரு அலகு செலவு ரூ.16
14.
A =\(\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right) \)என்க.
A-ன் வரிசை 3 x 3 ∴ ρ(A) ≤3
வரிசை மூன்று உடைய சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right| \)=0
∴ மூன்றாம் வரிசைக் கொண்ட சிற்றணிக்கோவை பூச்சியமாவதால், ρ(A)≠ 3 ஆகும்.
இரண்டாம் வரிசை கொண்ட ஒரு சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} 5 & 3 \\ 1 & 2 \end{matrix} \right| \)=7≠ 0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 2 ஆகும். ∴ ρ(A) =3
15.
(a) \(\sum p_i =1 \)
\(2 \mathrm{k}+3 \mathrm{k}+4 \mathrm{k} =1 \)
\(9 \mathrm{k} =1 \Rightarrow \mathrm{k}=\frac{1}{9}\)
(b) \(P(X>2) =P(X=3)+P(X=5) =3 k+4 k=7 k=\frac{7}{9}\)
16.
f(x) என்பது ஒரு அடர்த்தி சார்பு எனில்
\(\int _{ -\infty }^{ \infty }{ f(x) } dx=1\) என்பது நமக்குத் தெரியும்
\(\int _{ 0 }^{ \infty }{ { ke }^{ -2x } } dx=1\)
\(k\int _{ 0 }^{ \infty }{ { { e }^{ -2x }dx=1 } } \)
\(k\left[ \cfrac { { e }^{ -2x } }{ -2 } \right] _{ 0 }^{ \infty }=1\)
\(\Rightarrow k=2\)
\(\\ E(X)=\int _{ -\infty }^{ \infty }{ xf(x)dx } \)
= \(\int _{ 0 }^{ \infty }{ xk{ e }^{ -2x }dx } \)
= \(2\int _{ 0 }^{ \infty }{ { xe }^{ -2x }dx } \)
= \(\\ 2\left\{ \left[ \cfrac { xe^{ -2x } }{ -2 } \right] _{ 0 }^{ \infty }-\int _{ 0 }^{ \infty }{ \cfrac { { e }^{ -2x } }{ -2 } dx } \right\} \left( \therefore \int { udv=uv-\int { vdu } } \right) \)
= \(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -2x }dx } \)
= \(\cfrac { 1 }{ 2 } \)
17.
ஈருறுப்புப் பரவலின் நிகழ்தகவு அடர்த்தி சார்பு p(x)=\({ n }_{ C_{ x } }\)px /qn-x
ஈருறுப்புப் பரவலின் சராசரி np மற்றும் மாறுபாடு npq என்பதாகும்.
np = 2 .......(1)
npq =\(\frac { 4 }{ 3 } \) .....(2)
\(\frac { (2) }{ (1) } \Rightarrow \frac { \frac { 4 }{ 3 } }{ 2 } =\frac { 4 }{ 6 } =\frac { 2 }{ 3 } \)
q=\(\frac { 2 }{ 3 } \) மற்றும் p = 1 - \(\frac { 2 }{ 3 } =\frac { 1 }{ 3 } \)
P(X=5) =6C5\(\left( \frac { 1 }{ 3 } \right) ^{ 5 }\left( \frac { 2 }{ 3 } \right) ^{ 6-5 }\) =0.01646
18.
கொடுக்கப்பட்ட 2 இலக்க எண்களைக் கொண்ட சமவாய்ப்பு அட்டவணையிலிருந்து 1550 முதல் 8000 வரையிலான 4 இலக்கம் கொண்ட 10 மாதிரிகளை தேர்ந்தெடுக்க முதலில் இரண்டு இலக்க எண்களை மற்ற இரண்டிலக்க எண்களும் இணைந்து 4-இலக்க எண்களாக மாற்ற வேண்டும். அதாவது, அட்டவணையின் 5-வது மற்றும் 6-வது நிரல்களை நிழலிட்டவாறு இணைத்து முதல் ஐந்து மாதிரியையும் 8வது மற்றும் 9வது நிரல்களை இணைத்து அடுத்த ஐந்து மாதிரிகளையும் கொண்டு தேவையான 10 மாதிரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். கீழ்கண்ட அட்டவணையில் இரு நிரல்களை இணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சமவாய்ப்பு மாறிகளைக் காணலாம்.
எனவே, தேவையான 10 மாதிரிகளை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
| 5901 | 4310 | 5032 | 5194 | 1899 |
| 7259 | 7435 | 4362 | 1758 | 5308 |
19.
5x + 3y = 17,
3x + 7y = 31
\(\Delta =\left| \begin{matrix} 5 & 3 \\ 3 & 7 \end{matrix} \right| =35-9= 26 \not = 0\)
கிரேமரின் விதியைப் பயன்படுத்தலாம்
\(\Delta x=\left| \begin{matrix} 17 & 3 \\ 31 & 7 \end{matrix} \right| \) = 119 - 93 = 26
\(\Delta y=\left| \begin{matrix} 5 & 17 \\ 3 & 31 \end{matrix} \right| \)= 155 - 51 = 104

\(\therefore\) தீர்வு (1, 4)
x = 1, y = 4
20.
21.
Δ\(\left[ \frac { 5x+12 }{ { x }^{ 2 }+5x+6 } \right] \)
பகுதி பின்னமாக பிரித்தல் முறைப்படி
\(\frac { 5x+12 }{ { x }^{ 2 }5x+6 } =\frac { A }{ x+3 } +\frac { B }{ x+2 } \)
A=\(\frac { 5x+12 }{ x+2 } [x=-3]=\frac { -15+12 }{ -1 } =\frac { -3 }{ -1 } \)=3
B=\(\frac { 5x+12 }{ x+3 } [x=-2]=\frac { 2 }{ 1 } \)=2
\(\therefore \frac { 5x+12 }{ { x }^{ 2 }5x+6 } =\left[ \frac { 3 }{ x+3 } +\frac { 2 }{ x+2 } \right] \)
\(\triangle \left[ \frac { 5x+12 }{ { x }^{ 2 }5x+6 } \right] =\triangle \left[ \frac { 3 }{ x+3 } +\frac { 2 }{ x+2 } \right] \)
=\(\left[ \frac { 3 }{ x+1+3 } -\frac { 3 }{ x+3 } \right] +\left\{ \frac { 2 }{ x+1+2 } -\frac { 2 }{ x+2 } \right\} \)
=\(3\left[ \frac { 3 }{ x+1+3 } -\frac { 3 }{ x+3 } \right] +2\left[ \frac { 1 }{ x+3 } -\frac { 1 }{ x+2 } \right] \)
=\(\left[ \frac { -3 }{ (x+4)(x+3) } -\frac { 2 }{ (x+3)(x+2) } \right] \)
=\(\frac { -5x-14 }{ (x+2)(x+3)(x+4) } \)
22.
\(\frac { dy }{ dx } -\frac { y }{ x } = x \)
இது \(\frac{d y}{d x}+P y=\mathrm{Q}\) என்ற அமைப்பில் உள்ளது
இங்கு, P=-1 / x, Q =x
\(\int P d x=-\int \frac{d x}{x}=-\log x \)
தொ. கா\(=e^{\int P d x}=\mathrm{e}^{-\log x}=1 / x\)
தீர்வு :
\(y e^{\int P d x} =\int Q e^{\int P d x} d x+c \)
\(\frac{y}{x} =\int x \frac{1}{x} d x+c \)
\(\mathrm{y} / x =x+\mathrm{c}\)
\(\frac { y }{ x } \)=x+c
23.
ஆதி வழிச்செல்லும் நேர்கோட்டுத் தொகுப்பைக் குறிக்கும் சமன்பாடு
y = mx ⇒ \(\frac { dy }{ dx } = m \)
y=x\(\frac { dy }{ dx } \)
24.
y-1 = x
| x | 0 | -1 |
| y | 1 | 0 |

y - 1 = x ⇒ y = x + 1
பரப்பு \(=\int _{ b }^{ a }{ ydx }\)
\(=\int _{ -1 }^{ -2 }{ ydx } +\int _{ -1 }^{ 3 }{ ydx } \left[ \because \int _{ a }^{ b }{ f(x)dx=-\int _{ b }^{ a }{ f(x)dx } } \right] \)
\(=\int _{ -1 }^{ -2 }{ (x+1)dx+\int _{ -1 }^{ 3 }{ (x+1)dx } } \)
\(={ \left( \frac { { x }^{ 2 } }{ 2 } +x \right) }_{ -1 }^{ -2 }+{ \left( \frac { { x }^{ 2 } }{ 2 } +x \right) }_{ -1 }^{ 3 }\)
\(=-\left( +\frac { 1 }{ 2 } -1 \right) -\left( 2 -2 \right) +\left( \frac { 9 }{ 2 } +3 \right) -\left( \frac { 1 }{ 2 } -1 \right) \)
\(=- +\frac { 1 }{ 2 } -1 + \frac { 9 }{ 2 } +3 - \frac { 1 }{ 2 } -1 = \frac { 7 }{ 2 } +5\) \(=\frac { 17 }{ 2 } \) ச.அலகுகள்
25.
y=|x+3| =\(\begin{cases} x+3, & x\ge -3 \\ -(x+3), & x<-3 \end{cases}\)
தேவைப்படும் பரப்பு =\(\int _{ -6 }^{ 0 }{ y } dx\)
=\(\int _{ -6 }^{ -3 }{ y } dx+\int _{ -3 }^{ 0 }{ y } dx\)
=\(\int _{ -6 }^{ -3 }{ -(x+3)dx } +\int _{ -3 }^{ 0 }{ (x+3) } dx\)
=\(\left[ \frac { (x+3)^{ 2 } }{ 2 } \right] _{ -6 }^{ -3 }+\left[ \frac { (x+3)^{ 2 } }{ 2 } \right] _{ -3 }^{ 0 }\)
\(=\left[ 0-\frac { 9 }{ 2 } \right] +\left[ \frac { 9 }{ 2 } -0 \right] \)=9 சதுர அலகுகள்

26.
\(\int _{ -1 }^{ 1 }{ f\left( x \right) } dx=\int _{ -1 }^{ 0 }{ f\left( x \right) } dx+\int _{ 0 }^{ 1 }{ f\left( x \right) } dx\)
\(=\int _{ -1 }^{ 0 }{ -x } dx+\int _{ 0 }^{ 1 }{ x } dx\)
\(=\int _{ 0 }^{ -1 }{ x } dx+\int _{ 0 }^{ 1 }{ x } dx\)
\(\left[ \because \int _{ a }^{ b }{ f\left( x \right) dx=-\int _{ b }^{ a }{ f\left( x \right) } dx } \right] \)
\(={ { \left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] } }_{ 0 }^{ -1 }+{ \left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] }_{ 0 }^{ 1 }\)
\(=- \left[ { \left(0 -\frac { 1 }{ 2 } \right) } \right] +\frac { 1 }{ 2 } -0= 1\)
= 1
27.
t = x2 + 3x + 7
⇒ dt = (2x + 3)
இங்கு x = -1, t = (-1)2 +3(-1)+7 = 1-3 + 7= 5
x = 1, t = 12 +3(1)+7 = 11
\(\int _{ -1 }^{ 1 }{ \frac { 2x+3 }{ { x }^{ 2 }+3x+7 } } dx=\int _{ 5 }^{ 11 }{ \frac { dt }{ t } } ={ \left( \log { t } \right) }_{ 5 }^{ 11 }\)
\(=\log { 11 } -\log { 5 } \)
\(=\log { \left( \frac { 11 }{ 5 } \right) } \)
28.
A-ன் வரிசை 3 x 4 ∴ ρ(A) ≤3.
அணி A -ஐ, ஏறுபடி வடிவத்திற்கு மாற்றியமைக்க
| அணி A | அடிப்படை உருமாற்றங்கள் |
| A=\(\left( \begin{matrix} 0 \\ 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 3 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 3 \end{matrix} \right) \) ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 3 \\ 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 3 \end{matrix} \right) \) |
R1 ↔️ R2 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ -5 \end{matrix}\begin{matrix} 3 \\ 2 \\ -8 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ -3 \end{matrix} \right) \) | R3 ⟶ R3-3R1 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 3 \\ 2 \\ 2 \end{matrix}\begin{matrix} 2 \\ 1 \\ 2 \end{matrix} \right) \) | R3 ⟶ R3 + 5R2 |
ஏறுபடிவ அணியில் உள்ள பூச்சியமற்ற நிரைகளின் எண்ணிக்கை 3 ஆகும். ∴ ρ(A) =3.
29.
\(\mathrm{E}(\mathrm{X})=\int_{-\infty}^{\infty} x f(x) d x\)
\( =\int_0^1 x\left(3 x^2\right) d x=3 \int_0^1 x^3 d x \)
\( =3\left[\frac{x^4}{4}\right]_0^1=\frac{3}{4}(1-0)=\frac{3}{4} \)
\( \mathrm{E}\left(\mathrm{X}^2\right)=\int_{-\infty}^{\infty} x^2 f(x) d x \)
\( =\int_0^1 x^2\left(3 x^2\right) d x=3 \int_0^1 x^4 d x \)
\(=3\left[\frac{x^5}{5}\right]_0^1=\frac{3}{5} \)
\( \mathrm{~V}(\mathrm{X})=\mathrm{E}\left(\mathrm{X}^2\right)-[\mathrm{E}(\mathrm{X})]^2\)
\( =\frac{3}{5}-\left(\frac{3}{4}\right)^2=\frac{3}{5}-\frac{9}{16} \)
\(=\frac{48-45}{80}=\frac{3}{80} \)
\( V(\mathrm{aX}+\mathrm{b})=\mathrm{a}^2 \mathrm{~V}(\mathrm{X}) \) என்பது தெரியும்
\(\mathrm{V}(3 \mathrm{X}-2)=9 \mathrm{~V}(\mathrm{X}) \)
\(=9\left(\frac{3}{80}\right)=\frac{27}{80} \)
30.
கூறின் அளவு n = 400 கடைகள்
கூறு சராசரி \(\bar { x } \) = 153.7 சோதனைகள்
கூறு திட்ட விலக்கம் SD s = 17.2 சோப்புகள்
முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் m = 146.3 சோப்புகள்
முழுமைத் தொகுதியின் திட்டவிலக்கம் கொடுக்கப்படாததால் கூறு திட்ட விலக்கம் s =σ என கொள்வோம்.
இன்மை கருதுகோள் : விளம்பர பிரச்சாரம் வெற்றியாக இல்லை. H0 : μ = 146.3 (விளம்பரத்திற்கு முன்னும் பின்னும் வாராந்திர சோப்பு விற்பனையில் சிறப்பான வித்தியாசம் இல்லை)
மாற்று கருதுகோள் H0 : μ> 146.3 (வலதுமுனை சோதனை) விளம்பர பிரச்சாரம் வெற்றிகரமானதாக உள்ளது)
மிகைகாண் நிலை ∝ = 0.05
கூறுபண்பளவை சோதனைக்கு ஏற்பக் கணக்கிடல்
\(Z=\frac { \bar { x } -\mu }{ \frac { \sigma }{ \sqrt { n } } } \sim N(0,1)\)
\(Z=\frac { 153.7-146.3 }{ \frac { 17.2 }{ \sqrt { 400 } } } \)
\(=\frac { 7.4 }{ 0.86 } =8.605\)
\(\therefore\) Z=8.605
கணக்கிடப்பட்ட மதிப்பு Z = 8.605 மற்றும் எதிர்பார்க்கப்படும் மதிப்பு அல்லது அட்டவணை மதிப்பு Z∝ = 1.645 ஆகியவற்றிலிருந்து 8.605 > 1.645 என பெறுகிறோம்.
கண்டறியப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட அதிகமாக உள்ளதால் Z>Z∝ , 5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 மறுக்கப்படுகிறது. எனவே விளம்பர பிரச்சாரம் சோப்பு விற்பனையை அதிகரித்துள்ளது என கருதலாம்.
31.
(i) நிகழ்தகவு நிறைச் சார்பு:
X என்ற தனித்த சமவாய்ப்பு மாறியின் தனித்த மதிப்புகள் \(x_1, x_2, \ldots x_{\mathrm{n}}, \ldots\)என்க.மேலும் இதன் நிகழ்தகவு சார்பு \(\mathrm{P}_{\mathrm{x}}(x)\) எனக் குறிப்பிடப்படுகிறது எனில்
\( P_X(x)=p(x) \)
\(= \begin{cases}P\left(X=x_i\right)=p_i=p\left(x_i\right), & x=x_i, i=1,2, \ldots n, \ldots \\
0 & , x \neq x_i\end{cases}\) என வரையறுக்கப்படுகிறது.
(ii) நிகழ்தகவு அடர்த்திச் சார்பு:
தொகையிடக்கூடிய ஒர் இடைவெளி \(\left[\mathrm{t}_1\right., \mathrm{t}_2 ]\) இல் (திறந்த அல்லது மூடிய) அமையும் ஒரு சமவாய்ப்பு மாறி X - இன் நிகழ்தகவு \(f_x (x)\) ஆனது நிகழ்தகவு அடர்த்திச் சார்பு என்று வரையறுக்கப்படுகிறது:
\(P\left(\mathrm{t}_1 \leq \mathrm{X} \leq \mathrm{t}_2\right)=\int_{t_1}^{t_1} f_X(x) d x\)
(iii) நிகழ்தகவு பரவல் சார்பு :
தனித்த பரவலில், சமவாய்ப்பு மாறியின் பரவல் சார்பு
\(F_X(x)=P(X \leq x)=\sum_{x<x_i} P\left(x_i\right),(-\infty<x<\infty)\) என வரையறுக்கப்படுகிறது.
தொடர்ச்சியான பரவலில், சமவாய்ப்பு மாறியின் பரவல் சார்பு
\(F_X(x)=\mathrm{P}[\mathrm{X} \leq x]=\int_{-\infty}^x f(t) d t,-\infty<x<\infty\) என வரையறுக்கப்படுகிறது.
32.
p என்பது A என்பவர் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு ஆகும். ஈருறுப்பு பரவலின் பண்பளவைகள் n மற்றும் p என்பனவாகும். இங்கு முயற்சிகளின் எண்ணிக்கை n = 5, p = 3/5, q =1-\(\frac { 3 }{ 5 } =\frac { 2 }{ 5 } \) என்பதாகும். (∵ q = 1-p)
5 முறை விளையாடும் விளையாட்டில் A எனும் வீரர் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு
P(X=x) = p(x) =5Cx\(\left( \frac { 3 }{ 5 } \right) ^{ x }\left( \frac { 2 }{ 5 } \right) ^{ 5-x }\)
A என்பவர் குறைந்தபட்சம் 3 முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பின் நிகழ்தகவு
P(x≥3) = P(X=3)+P(X=4)+P(X=5)
=5C3\(\left( \frac { 3 }{ 5 } \right) ^{ 3 }\left( \frac { 2 }{ 5 } \right) ^{ 2 }+5C4\left( \frac { 3 }{ 5 } \right) ^{ 4 }\left( \frac { 2 }{ 5 } \right) ^{ 1 }+5C5\left( \frac { 3 }{ 5 } \right) ^{ 5 }\left( \frac { 2 }{ 5 } \right) ^{ 0 }\)
=0.6826.
33.
| x | 1941 | 1951 | 1961 | 1971 | 1981 | 1991 |
| y | 20 | 24 | 29 | 36 | 46 | 51 |
1946-ஆம் ஆண்டின் மக்கள்தொகையை கணக்கிடுவதற்கு (அதாவது x=1946 க்கு y -ன் மதிப்பை கணக்கட) நாம், நியூட்டனின் முன்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்துவோம்.
y(x=x0+nh)=\({ y }_{ 0 }+\frac { n }{ 1! } \triangle y_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ 0 }+....\)
x=1946 ∴ x0+nh=1946, x0=1941, h=10
1941+n(10)=1946 ⇒ n=0.5
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y | Δ5y |
| 1941 | 20 | |||||
| 4 | ||||||
| 1951 | 24 | 1 | ||||
| 5 | 1 | |||||
| 1961 | 29 | 2 | 0 | |||
| 7 | 1 | -9 | ||||
| 1971 | 36 | 3 | -9 | |||
| 10 | -8 | |||||
| 1981 | 46 | -5 | ||||
| 5 | ||||||
| 1991 | 51 |
y(x=1946)=\(20 +\frac { 0.5 }{ 1! } (4)+\frac { 0.5(0.5-1) }{ 2! } (1)+\frac { 0.5(0.5-1)(0.5-2) }{ 3! } (1)+\frac { 0.5(0.5-1)(0.5-2)(0.5-3) }{ 4! } (0)+\frac { 0.5(0.5-1)(0.5-2)(0.5-3)(0.5-4) }{ 5! } (-9)\)
=20+2-0.125+0.0625-0.24609
=21.69 இலட்சங்கள்
34.
x0 = 15, x1 = 25, x2 = 30, x3 = 35 x = 26
y0= 36, y1 = 40, y2 = 45, y3 = 48,
∴ y = f(x) = \(\frac { (x-{ x }_{ 1 })(x-{ x }_{ 2 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 0 }-{ x }_{ 1 })({ x }_{ 0 }-{ x }_{ 2 })({ x }_{ 0 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 0 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 2 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 1 }-{ x }_{ 0 })({ x }_{ 1 }-{ x }_{ 2 })(x_{ 1 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 1 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 1 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 2 }-{ x }_{ 0 })({ x }_{ 2 }-{ x }_{ 1 })({ x }_{ 2 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 2 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 1 })(x-{ x }_{ 2 }) }{ ({ x }_{ 3 }-{ x }_{ 0 })({ x }_{ 3 }-{ x }_{ 1 })({ x }_{ 3 }-{ x }_{ 2 }) } \times { y }_{ 3 }\)
\(y= \frac{(1)(-4)(-9)}{(-10)(-15)(-20)} 36+\frac{(11)(-4)(-9)}{10(-5)(-10)} 40 +\frac{(11)(1)(-9)}{(15)(5)(-5)} 45+\frac{(11)(1)(-4)}{(20)(10)(5)} 48 \)
\(= -0.432+31.68+11.88-2.112 \)
\(= 41.016 \sim 41\) நபர்கள்
35.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } +\frac { 1 }{ cos^{ 2 }x } y=\frac { tanx }{ cos^{ 2 }x } \) என எழுதலாம்.
அதாவது, \(\frac { dy }{ dx } \)+y sec2x=tanxsec2x
இது \(\frac { dy }{ dx } \)+Py=Q என்ற வடிவில் உள்ளது.
இங்கு P=sec2x, Q=tanxsec2x
\(\int { P } dx=\int { sec^{ 2 }x } dx=tanx\)
I.F=\(e^{ \int { p.dx } }=e^{ tanx }\)
தேவையான தீர்வு: y(I.F)=\(\int { Q(I.F)dx } +c\)
yetanx=\(\int { \tan x \sec^{ 2 } } xe^{ \tan x }dx+c\)
tanx-=t என்க.
sec2xdx=dt
∴ yetanx=\(\int { te^{ t } } dt+c\)
=\(\\ \int { td } (e^{ t })+c\)
=tet-et+c
=tanxetanx-etanx+c
yetanx=etanx(tanx-1)+c
36.
y2dx+(xy+x2)dy=0
(xy+x2)dy=-y2dx
\(\frac { dy }{ dx } =\frac { -{ y }^{ 2 } }{ xy+{ x }^{ 2 } } \) .....(1)
இது ஒரே படியுள்ள x, y- இல் அமைந்த சமபடித்தான வகைக்கெழு சமன்பாடாகும்.
y=vx மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என பிரதியிட,
∴ (1) ஆனது
\(v+x\frac { dv }{ dx } =\frac { -{ v }^{ 2 }{ x }^{ 2 } }{ xvx+{ x }^{ 2 } } \)
=\(\frac { -{ v }^{ 2 } }{ v+1 } \)
\(x\frac { dv }{ dx } =\frac { -v^{ 2 } }{ v+1 } -v\)
=\(\frac { -{ v }^{ 2 }-{ v }^{ 2 }-v }{ v+1 } \)
\(x\frac { dv }{ dx } =\frac { -(v+2v^{ 2 }) }{ 1+v } \)
மாறிகளை பிரிக்கக் கிடைப்பது,
\(\frac { 1+v }{ v(1+2v) } dv=\frac { -dx }{ x } \)
\(\frac { (1+2v)-v }{ v(1+2v)dv } dv=\frac { -dx }{ x } \) (∵ 1+v=1+2v-v)
\(\frac { 1 }{ v } -\frac { 1 }{ 1+2v } dv=\frac { -dx }{ x } \)
இருபுறமும் தொகையிட, நாம் பெறுவது
\(\int { \left( \frac { 1 }{ v } -\frac { 1 }{ 1+2v } \right) dv } =-\int { \frac { dx }{ x } } \)
logv-\(\frac{1}{2}\)log(1+2v)=-logx+logc
\(log\left( \frac { v }{ \sqrt { 1+2v } } \right) =log\left( \frac { c }{ x } \right) \)
\(\frac { v }{ \sqrt { 1+2v } } =\frac { c }{ x } \)
v=\(\frac { y }{ x } \) என பிரதியிட,
\(\frac { \frac { y }{ x } }{ \sqrt { 1+\frac { 2y }{ x } } } =\frac { c }{ x } \)
\(\frac { y\sqrt { x } }{ \sqrt { x+2y } } =c\)
\(\frac { { y }^{ 2 }x }{ x+2y } = k \)
இங்கு k=c2
37.
y2=27x3 என்பது ஓர் அரை முப்படிப் பரவளையம்
பரப்பு \(=\int_c^d x d y \)
\(x^3 =\frac{y^2}{27} \Rightarrow x=\frac{y^{2 / 3}}{3}\)
பரப்பு \(=\frac{1}{3} \int_1^2 y^{2 / 3} d y=\frac{1}{3}\left[\frac{y^{5 / 3}}{5 / 3}\right]_1^2\)
\(=\frac{1}{5}\left[2^{5 / 3}-1\right] \)
\(\frac { 1 }{ 5 } \left[ (2)^{ \frac { 5 }{ 3 } }-1 \right] \) ச.அலகுகள்
38.
\(x=\sqrt{100-p} \quad x=\frac{p}{2}-10 \)
\(x^2=100-\mathrm{p} \quad x+10=\frac{p}{2} \)
\(\mathrm{p}_{\mathrm{d}}=100-x^2 \quad \mathrm{p}_{\mathrm{s}}=2 x+20\)
சமநிலையில் \(\mathrm{p}_{\mathrm{d}}=\mathrm{p}_{\mathrm{s}}\)
\(100-x^2 =2 x+20 \)
\(x^2+2 x-80 =0 \)
(x+10)(x-8) =0
[ x என்பது குறை எண்ணாக இருக்க முடியாது]
\(\therefore\) x ன் ஒரே மதிப்பு =8
\(\mathrm{p}=100-64=36\)
நுகர்வோர் உபரி
\(\mathrm{CS}=\int_0^{x_0} f(x) d x-p_0 x_0\)
\(=\int_0^8\left(100-x^2\right) d x-288 \)
\( =\left[100 x-\frac{x^3}{3}\right]_0^8-288 \)
\( =800-\frac{512}{3}-288 \)
\(=512-\frac{512}{3}=\frac{1024}{3}\)அலகுகள்
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =p_0 x_0-\int_0^{x_2} g(x) d x \)
\(=288-\int_0^8(2 x+20) d x \)
\( =288-\left[\frac{2 x^2}{2}+20 x\right]_0^8 \)
=288-(64+160)=288-224
=64 அலகுகள்
C.S=\(\frac { 1024 }{ 3 } \) அலகுகள், P.S = 64 அலகுகள்
39.
I = \(\int _{ 0 }^{ 1 }{ \frac { x }{ { \left( 1-x \right) }^{ \frac { 3 }{ 4 } } } } dx\) \(=\int _{ 1 }^{ 0 }{ \left( { \left( 1-x \right) }^{ 1-\frac { 3 }{ 4 } }-{ \left( 1-x \right) }^{ -\frac { 3 }{ 4 } } \right) } dx\)
\(\left[ \because \int _{ a }^{ b }{ f\left( x \right) } dx=-\int _{ b }^{ a }{ f\left( x \right) dx } \right] \)
\(=\int _{ 1 }^{ 0 }{ \left( \frac { 1-x }{ { \left( 1-x \right) }^{ \frac { 3 }{ 4 } } } -\frac { 1 }{ { \left( 1-x \right) }^{ \frac { 3 }{ 4 } } } \right) } dx\)
\(=\int _{ 1 }^{ 0 }{ \left( { \left( 1-x \right) }^{ 1-\frac { 3 }{ 4 } }-{ \left( 1-x \right) }^{ -\frac { 3 }{ 4 } } \right) } dx\)
\(=\int _{ 1 }^{ 0 }{ { \left( 1-x \right) }^{ \frac { 1 }{ 4 } }dx-\int _{ 1 }^{ 0 }{ { \left( 1-x \right) }^{ -\frac { 3 }{ 4 } } } } dx\)
\(={ \left[ \frac { { \left( 1-x \right) }^{ \frac { 1 }{ 4 } +1 } }{ -1\left( \frac { 1 }{ 4 } +1 \right) } -\frac { { \left( 1-x \right) }^{ -\frac { 3 }{ 4 } +1 } }{ -1\left( -\frac { 3 }{ 4 } +1 \right) } \right] }_{ 1 }^{ 0 }\)
\(={ \left[ -\frac { { { \left( 1-x \right) }^{ \frac { 5 }{ 4 } } } }{ \frac { 5 }{ 4 } } +\frac { { \left( 1-x \right) }^{ \frac { 1 }{ 4 } } }{ \frac { 1 }{ 4 } } \right] }_{ 1 }^{ 0 }\)
\(={ \left[ -\frac { 4 }{ 5 } { \left( 1-x \right) }^{ \frac { 5 }{ 4 } }+4{ \left( 1-x \right) }^{ \frac { 1 }{ 4 } } \right] }_{ 1 }^{ 0 }\)
\(=-\frac { 4 }{ 5 } \left( { 1 }^{ \frac { 5 }{ 4 } } \right) +4\left( { 1 }^{ \frac { 1 }{ 4 } } \right) -0\)
\(=-\frac { 4 }{ 5 } (1)+4(1)=-\frac { 4 }{ 5 } +4\)
\(=4(\frac {4 }{ 5 }) =\frac { 16 }{ 5 } \)
40.
\(\int _{ 0 }^{ 1 }{ [e^{ alogx }+{ e }^{ xloga }]dx } \)=\(\int _{ 0 }^{ 1 }{ ({ x }^{ a }+a^{ x }) } dx\)
=\(\left[ \frac { { x }^{ a+1 } }{ a+1 } +\frac { { a }^{ x } }{ loga } \right] _{ 0 }^{ 1 }\)
=\(\left( \frac { 1 }{ a+1 } +\frac { a }{ loga } \right) -\left( 0+\frac { 1 }{ loga } \right) \)
=\(\frac { 1 }{ a+1 } +\frac { a }{ loga } -\frac { 1 }{ loga } \)
=\(\frac { 1 }{ a+1 } +\frac { (a-1) }{ loga } \)
41.
x ,y ,z என்பன முறையே A ,B மற்றும் C ஆகிய பொருட்களின் ஓரலகிற்கான தரகுத் தொகை என்க .
90x + 100y + 20z = 800
130x + 50y+ 40z = 900
60x + 100y + 30z = 850
அனைத்து சமன்பாடுகளையும் 10-ஆல் வகுக்க
9x + 10y + 2z = 80
13x + 5y+ 4z = 90
6x + 10y + 3z = 85
\(\Delta =\begin{vmatrix} 9 & 10 & 2 \\ 13 & 5 & 4 \\ 6 & 10 & 3 \end{vmatrix}\)
= 9 (15 - 40) - 10 (39 - 24) + 2 (130 - 30)
= 9(- 25) -10(15) + 2(100)
= - 225 - 150 + 200
= -175\(\neq \)0
∴ கிரேமரின் விதியைப் பயன்படுத்தலாம் .
\({ \Delta }_{ x }=\begin{vmatrix} 80 & 10 & 2 \\ 90 & 5 & 4 \\ 85 & 10 & 3 \end{vmatrix}\)
= 80 (15 - 40) -10 (270 - 340) + 2 (900 - 425)
= -2000 + 700 + 950
=-350
\({ \Delta }_{ y }=\begin{vmatrix} 9 & 80 & 2 \\ 13 & 90 & 4 \\ 6 & 85 & 3 \end{vmatrix}\)
= 9(270 - 340) - 80(39 - 24) + 2(1105 - 540)
= - 630 - 1200 + 1130
=-700
\({ \Delta }_{ z }=\begin{vmatrix} 9 & 10 & 80 \\ 13 & 5 & 90 \\ 6 & 10 & 85 \end{vmatrix}\)
= 9(425 - 900) - 10(1105 - 540) + 80(130 - 30)
= - 4275 - 5650 + 8000 = -1925
\(x=\frac { { \Delta }_{ x } }{ { \Delta } } =\frac { -350 }{ -175 } =2\\ y=\frac { { \Delta }_{ y } }{ { \Delta } } =\frac { -700 }{ -175 } =4\\ z=\frac { { \Delta }_{ z } }{ { \Delta } } =\frac { -1925 }{ -175 } =11\\ \)
' A ' வின் ஓரலகிற்கான தரகுத் தொகை Rs. 2
' B ' வின் ஓரலகிற்கான தரகுத் தொகை Rs. 4
' C ' வின் ஓரலகிற்கான தரகுத் தொகை Rs.11
42.
C1 வகை வாகனங்களின் எண்ணிக்கை x என்க.
C2 வகை வாகனங்களின் எண்ணிக்கை y என்க.
C3 வகை வாகனங்களின் எண்ணிக்கை z என்க.
∴ 3x+2y+4z=28
x+y+2z=13
2x+2y+z=14
இங்கு Δ=\(\left| \begin{matrix} 3 & 2 & 4 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right| \)=-3≠0
Δx=\(\left| \begin{matrix} 8 & 2 & 4 \\ 13 & 1 & 2 \\ 14 & 2 & 1 \end{matrix} \right| \)=-6
Δy=\(\left| \begin{matrix} 3 & 28 & 4 \\ 1 & 13 & 2 \\ 2 & 14 & 1 \end{matrix} \right| \)=-9
Δz=\(\left| \begin{matrix} 3 & 2 & 28 \\ 1 & 1 & 13 \\ 2 & 2 & 14 \end{matrix} \right| \)=-12
∴ கிரேமரின் விதிப்படி
x=\(\frac { \triangle x }{ \triangle } =\frac { -6 }{ -3 } \)=2
y=\(\frac { \triangle y }{ \triangle } =\frac { -9 }{ -3 } \)=3
z=\(\frac { \triangle z }{ \triangle } =\frac { -12 }{ -3 } \)=4
∴ உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு வகையான வாகனங்களின் எண்ணிக்கை முறையே 2, 3 மற்றும் 4 ஆகும்.
43.
சராசரி = np = 4, மாறுபாடு = npq = 4/3
\(\Rightarrow 4 q =\frac{4}{3} \Rightarrow q=\frac{1}{3} \)
\(p=1-q =1-\frac{1}{3}=\frac{2}{3} \)
\(n p =4 \Rightarrow n\left(\frac{2}{3}\right)=4 \Rightarrow n=6 \)
\(P(X \geq 5) =P(X=5)+P(X=6) \)
\( =6 C_5\left(\frac{2}{3}\right)^5\left(\frac{1}{3}\right)+6 C_6\left(\frac{2}{3}\right)^6 \)
\( =\frac{2^5}{3^6}[6+2]=4\left(\frac{2}{3}\right)^6 \)
44.
(a)
H0 தவறு எனில் ஏற்பது
45.
(b)
0 மற்றும் 1
46.
(d)
0
47.
\(\mathrm{y} =\mathrm{c} x+\mathrm{c}-\mathrm{c}^3 \Rightarrow \frac{d y}{d x}=\mathrm{c} \)
\(\therefore \mathrm{y} =x \frac{d y}{d x}+\frac{d y}{d x}-\left(\frac{d y}{d x}\right)^3 \)
48.
கொடுக்கப்பட்டது : \(\int { \frac { dp }{ p } } =k\int { \frac { dx }{ x } } \) ...(1)
நமக்கு தெரிந்தது, \(-\int { \frac { dp }{ p } } =\frac { 1 }{ { \eta }_{ d } } \int { \frac { dx }{ x } } \) ...(2)
(1) மற்றும் (2) ஐ ஒப்பிட k = \(\frac { -1 }{ { \eta }_{ d } } \)
49.
\(\int _{ 0 }^{ \frac { \pi }{ 3 } }{ \tan x } dx = [ \log \sec x ]^ \frac { \pi }{ 3 }_ 0\)
= log sec π/3 - log sec 0
= log2 - log1 = log 2
50.
Δ =\(\left| \begin{matrix} { a }_{ 1 } & { b }_{ 1 } \\ { a }_{ 2 } & { b }_{ 2 } \end{matrix} \right| \) = Δ1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards