12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு வணிகக் கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium business Mathematics Important Questions)
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஈருறுப்பு பரவல்: வரையறு.
2.
தமிழ்நாட்டிலுள்ள ஒரு பள்ளியில், 1000 மாணவர்களைக் கொண்ட ஒரு மாதிரியில் அவர்களது சராசரி எடை 119 பவுண்டுகளாக (lbs) உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மொத்த மாணவர்களின் சராசரி எடை 120 பவுண்டுகளாகவும், (lbs) திட்டவிலக்கம் 30 பவுண்டுகளாவும் (lbs) இருக்குமானால், சராசரிக்கான திட்டப்பிழையைக் கணக்கிடுக
3.
சமவாய்ப்பு மாறியின் பொருள் என்ன என்பதனை விவரிக்கவும்.
4.
தனித்த சமவாய்ப்பு மாறியை வரையறுக்கவும்.
5.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
(2-y")=y"2+2y'
6.
u0=560, u1=556, u2=520, u4=385, எனில் u3=465 என நிரூபி.
7.
f(-1)=202, f(0)=175, f(1)=82 மற்றும் f(2)=55 எனில் f(0.5) காண்க.
8.
தீர்க்க: (D2-3D-4)=0
9.
உற்பத்தி பொருள்களின் தேவைச்சார்பு p =e-x, p=0.5 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.
10.
x - 2y - 12 = 0 என்ற வளைவரையானது y -அச்சு, y = 2 மற்றும் y=5 என்ற கோடுகளுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.
11.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }+6x+13 } } \)
12.
மதிப்பிடுக: \(\int { \frac { 2 }{ 3x+5 }} \)dx
13.
\(\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
14.
\(\left( \begin{matrix} 1 & 5 \\ 3 & 9 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
15.
சமவாய்ப்பு மாறியின் பரவல் சார்பை விளக்கவும்
16.
X என்ற தனித்த சமவாய்ப்பு மாறியின் நிகழ்தகவு நிறைச் சார்பு ஆனது

எனில், X -இன் திரள் பரவல் சார்பைக் கண்டுபிடிக்கவும். மேலும் வரைபடம் வரையவும்
17.
ஒரு மாணவன் பட்டம் பெறுவதற்கான நிகழ்தகவு 0.4 ஆகும். இவ்வாறு இருப்பின் ஐந்து மாணவர்களுள் (அ) ஒருவர் மட்டும் பட்டதாரியாக (ஆ) குறைந்தபட்சம் ஒருவர் பட்டதாரியாக இருப்பதற்கான நிகழ்தகவை காண்க.
18.
கீழ்க்கண்ட கேண்டல்- பாபிங்டன் ஸ்மித் சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி.
| 23 | 15 | 75 | 48 | 59 | 01 | 83 | 72 | 59 | 93 | 76 | 24 | 97 | 08 | 86 | 95 | 23 | 03 | 67 | 44 |
| 05 | 54 | 55 | 50 | 43 | 10 | 53 | 74 | 35 | 08 | 90 | 61 | 18 | 37 | 44 | 10 | 96 | 22 | 13 | 43 |
| 14 | 87 | 16 | 03 | 50 | 32 | 40 | 43 | 62 | 23 | 50 | 05 | 10 | 03 | 22 | 11 | 54 | 36 | 08 | 34 |
| 38 | 97 | 67 | 49 | 51 | 94 | 05 | 17 | 58 | 53 | 78 | 80 | 59 | 01 | 94 | 32 | 42 | 87 | 16 | 95 |
| 97 | 31 | 26 | 17 | 18 | 99 | 75 | 53 | 08 | 70 | 94 | 25 | 12 | 58 | 41 | 54 | 88 | 21 | 05 | 13 |
1550 முதல் 8000 வரையிலான 4 இலக்க எண் கொண்ட 10 சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்க.
19.
20.
ஒரு மாவட்டத்தின் மக்கள்த் தொகை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| ஆண்டு(x) | 1881 | 1891 | 1901 | 1911 | 1921 | 1931 |
| மக்கள்தொகை (y) (ஆயிரத்தில்) |
363 | 391 | 421 | - | 467 | 501 |
1911 ம் ஆண்டிற்கான மக்கள் தொகையைக் காண்க.
21.
தீர்க்க: yx2dx+e-xdy=0
22.
செவ்வகலம் 4a ஆகவும், அச்சினை x -அச்சிற்கு இணையாகவும் கொண்ட பரவளையத் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.
23.
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் MR =\(\frac { 2 }{ x+3 } -\frac { 2x }{ (x+3)^{ 2 } } +5\) எனில் அந்நிறுவனத்தின் தேவைச் சார்பு P =\(\frac { 2 }{ x+3 } +5\) எனக் காட்டுக.
24.
y=x2 என்ற பரவளையத்திற்கும் y=4 என்ற கோட்டிற்கு இடைப்பட்ட பரப்பைக் காண்க.
25.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 1 }{ x+\sqrt { { x }^{ 2 }-1 } } \)
26.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 1 }{ \sin^{ 2 }x \cos^{ 2 }x } \)
27.
ரூ.8,600 ஆனது இரண்டு விதமான கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு முதலீடானது 4\(\frac{3}{4}\)-ம் மற்றொரு முதலீடானது 6\(\frac{1}{2}\)%-ம் ஆண்டு வருவாயை ஈட்டுத் தருகிறது. ஓர் ஆண்டில் இரு முதலீடுகளுக்கான மொத்த வருமானம் ரூ.431.25 எனில் ஒவ்வொரு கணக்கிலும் செய்யப்பட்ட முதலீட்டு தொகையினைக் காண்க.
28.
x + y = 5, 2x + y = 8 ஆகிய சமன்பாடுகள் ஒருங்கமைவு உடையது எனில் அவற்றைத் தீர்க்க.
29.
சராசரி மதிப்பு 4 மற்றும் திட்ட விலக்கம் 3 உடைய ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 உறுப்புகளைக் கொண்ட ஒரு கூறின் சராசரி 63.5 எனில் சராசரியின் மாறுபாடு குறிப்பிடத்தக்கதா?
30.
X என்பது ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி என்க. அதன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பானது.

எனில், X -இன் சராசரி மற்றும் மாறுபாட்டை கண்டுபிடிக்கவும்
31.
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது வீச்சு[-3, 3] உடைய நிகழ்தகவு அடர்த்திச் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

வளைவரையின் பரப்பு ஒன்று என்பதை சரிபார்க்கவும்.
32.
ஒவ்வொரு முப்பது நாள்களிலும் சராசரியாக ஒன்பது நாள்கள் மழை பொழிகின்றது. குறைந்தபட்சம் வாரத்தில் இரண்டு நாள்கள் மழை பொழிவதற்கான நிகழ்தகவினைக் காண்க.
33.
கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து மாத வருமானம் ரூ.26-க்கு மிகாமல் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை லாக்ராஞ்சியின் சூத்திரத்தைப் பயன்படுத்தி காண்க.
| வருமானம் மிகாமல்(ரூ) | 15 | 25 | 30 | 35 |
| தொழிலாளர்களின் எண்ணிக்கை | 36 | 40 | 45 | 48 |
34.
உலோகம் மற்றும் துத்தநாகத்தில் உள்ள காரீயத்தின் உருகும் நிலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ‘T’ என்பது வெப்பநிலை (பாகையில்) மற்றும் P என்பது உலோகத்தில் காரீயத்தின் சதவீதம்.
| P | 40 | 50 | 60 | 70 | 80 | 90 |
| T | 180 | 204 | 226 | 250 | 276 | 304 |
84 சதவீத காரீயம் கொண்ட உலோகத்தின் உருகும் நிலையைக் காண்க .
35.
தீர்க்க: \(\frac { dy }{ dx } \)+ycosx=2cosx
36.
தீர்க்க: (D2-3D+2)y=e4x இங்கு x = 0 மற்றும் x = 1 எனில் y = 0.
37.
ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களின் இறுதிநிலை செலவு சார்பு C'(x)=5+0.13x, இறுதிநிலை வருவாய் சார்பு R'(x) =18 மற்றும் மாறாச் செலவு ரூ.120 எனில், இலாபச் சார்பைக் காண்க.
38.
உற்பத்தி செய்யப்படும் x அழகு பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு \(\frac { dC }{ dx } \)=100-10x+0.1x2 என்க. அந்நிறுவனத்தின் மாறாச் செலவு ரூ.500 எனில், அந்நிறுவனத்தின் மொத்தச் செலவுச் சார்பு மற்றும் சராசரி செலவு ஆகியவற்றை காண்க.
39.
\(\int _{ a }^{ b }{ dx } \) மற்றும் \(\int _{ a }^{ b } xdx\) எனில், a மற்றும் b-ன் மதிப்புகளைக் காண்க.
40.
மதிப்பிடுக: \(\int _{ -1 }^{ 1 }{ x\sqrt { x+1 } } \)
41.
‘a’ மற்றும் ‘b’ இன் எம்மதிப்புகளுக்கு x + y + z = 6, x + 2y + 3z = 10, x + 2y + az = b என்ற சமன்பாடுகள்
(i) எந்த தீர்வும் பெற்றிராது
(ii) ஒரே ஒரு தீர்வை பெற்றிருக்கும்
(iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என ஆராய்க.
42.
λ-ன் எந்த மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாடுகள் ஒரே ஒரு தீர்வை பெற்றிராது என தர முறையில் காண்க:
3x-y+λz=1, 2x+y+z=2, x+2y-λz=1
43.
ஒரு உற்பத்தியாளர் தயாரிக்கும் மின் விசை மாற்றுக்குமிழ்களில் (Switches) 2 சதவீத தயாரிப்புகள் குறைபாடுள்ளவை என்று அறியப்படுகிறது. ஒரு பேழையில் இருக்கும் 50 மின்விசை மாற்றுக்குமிழ்களில் அதிகபட்சமாக 2 குறைபாடுகள் இருப்பதற்கான நிகழ்தகவானது.
2.5 e-1
e-1
2 e-1
இவை ஏதுமில்லை
44.
கூறு அளவையைப் பயன்படுத்தி முழுமைத் தொகுதி பண்பளவைக்கான மிக சிறந்த மதிப்பை பெற முற்படும் முறையே ______.
மதிப்பீட்டு முறை
மதிப்பீட்டு அளவை
பிழற்சியான மதிப்பீடு
திட்டப் பிழை
45.
ஒரு தொடர்ச்சியான நிகழ்தகவு பரவலில் c என்பது ஒரு மாறிலி என்றால் P(X=c) எப்போதும் எதற்கு சமமாக இருக்கும்.
பூஜ்ஜியம்
ஒன்று
எதிர்மறை
காண இயலாது
46.
h=1 எனில், Δ(x2)= _____.
2x
2x-1
2x+1
1
47.
48.
y=ex எனும் வளைவரை 0 யிலிருந்து 1 எனும் எல்லைகளுக்குள் x -அச்சுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு _____.
(e-1) ச.அலகுகள்
(e+1) ச.அலகுகள்
\(\left( 1-\frac { 1 }{ e } \right) \) ச.அலகுகள்
\(\left( 1+\frac { 1 }{ e } \right) \) ச.அலகுகள்
49.
n>0 எனில், \(\Gamma \)(n) -க்கு சமமான தொகையீடு _____.
\(\int _{ 0 }^{ 1 }{ { e }^{ -x }x^{ n-1 } } dx\)
\(\int _{ 0 }^{ 1 }{ { e }^{ -x }x^{ n } } dx\)
\(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -x }x^{ -n } } dx\)
\(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -x }x^{ n-1 } } dx\)
50.
ஒரு மாறுதல் நிகழ்வு அணியில் உள்ள அனைத்து உறுப்புகளின் மதிப்பும் எந்த எண்ணுக்கு சமமாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கும்?
2
1
0
3
1.
X என்ற சமவாய்ப்பு மாறி ஈருறுப்புப் பரவலைப் பின்பற்றி அதனுடைய பண்பளவைகளான n மற்றும் p ஆகியவை குறையற்ற மதிப்பினைக் கொண்டிருப்பின், அதன் நிகழ்தகவு நிறை சார்பு
P (X = x) = p(x)
2.
\(\mathrm{n} =1000, \bar{x}=120 \mathrm{lbs} \)
\(\hat{\sigma} =\mathrm{s}=30 \mathrm{lbs}, \varphi=119 \mathrm{lbs} \)
\(\mathrm{S} . \mathrm{E} =\frac{\hat{\sigma}}{\sqrt{n}}=\frac{s}{\sqrt{n}}=\frac{30}{\sqrt{1000}} =\frac{30}{31.623}=0.9487
\)
3.
அடிப்படை கணிதத்தில், ஒரு மாறி என்பது ஒரு தெரியாத எண்ணை பிரதிபலிக்கும் ஒரு அகரவரிசை எழுத்தாகும், சமவாய்ப்பு மாறி என்பதும் ஒரு மாறி, அது மேலும் சமவாய்ப்பிற்கு உட்பட்டது என்பது அதன் பொருள், அதாவது இது வெவ்வேறான மதிப்புகளைப் பெற்றிருக்கும்.
4.
சாத்தியமான மதிப்புகளால் வரையறுக்கப்பட்ட எண்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு மாறி அல்லது ஒரு எண்ணத்தக்க மெய்யெண்களின் முடிவிலாத் தொடரானது தனித்த சமவாய்ப்பு மாறி என வரையறுக்கப்படுகிறது.
5.
\(\left(2-y^{\prime \prime}\right)^2=y^{\prime\prime 2}+2 y^{\prime} \)
\( 4-4 y^{\prime \prime}+y^{\prime\prime 2}=y^{\prime\prime 2}+2 y^{\prime} \)
\( 4 y^{''}+2 y^{\prime}-4=0 \)
வரிசை =2 ; படி =1
6.
\(\begin{array}{|c|c|c|c|c|c|}
\hline \boldsymbol{x} & 0 & 1 & 2 & 3 & 4 \\
\hline \mathbf{u}_x & 560 & 556 & 520 & - & 385 \\
\hline
\end{array}\)
நான்கு மதிப்புகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதால்
\( \Delta^4 \mathrm{u}_0=0 \)
\((\mathrm{E}-1)^4 \mathrm{u}_0=0 \)
\(\left(\mathrm{E}^4-4 \mathrm{E}^3+6 \mathrm{E}^2-4 \mathrm{E}+1\right) \mathrm{u}_0=0 \)
\( \mathrm{u}_4-4 \mathrm{u}_3+6 \mathrm{u}_2-4 \mathrm{u}_1+\mathrm{u}_0=0 \)
\( 385-4 \mathrm{u}_3+6(520)-4(556)+560=0 \)
\( 385-4 \mathrm{u}_3+3120-2224+560=0 \)
\( 4 \mathrm{u}_3=1841 \Rightarrow \mathrm{u}_3=460.25
\)
7.
\(\begin{array}{|c|c|c|c|c|} \hline \boldsymbol{x} & \boldsymbol{y} & \Delta \boldsymbol{y} & \Delta^2 \boldsymbol{y} & \Delta^3 \boldsymbol{y} \\ \hline-1 & 202 & & & \\ \hline & & -27 & & \\ \hline 0 & 175 & & -66 & \\ \hline & & -93 & & 132 \\ \hline 1 & 82 & & 66 & \\ \hline & & -27 & & \\ \hline 2 & 55 & & & \\ \hline \end{array}\)
x0 =-1, h=1,x0 + nh = 0.5
n = 1.5
\(\mathrm{y}=y_0+\frac{n}{1 !} \Delta y_0+\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_0 +\frac{\mathrm{n}(\mathrm{n}-1)(\mathrm{n}-2)}{3 !} \Delta^3 y_0 \)
\(=202+\frac{1.5}{1 !}(-27)+\frac{(1.5)(0.5)}{2}(-66) +\frac{(1.5)(0.5)(-0.5)}{6} 132 \)
\(\mathrm{y}=202-40.5-24.75-8.25=128.5
\)
8.
(D2-3D-4)=0
துணைச் சமன்பாடு :
m2-3m-4
⇒ (m-4)(m+1)=0
m=-1,4
மூலங்கள் மெய் மற்றும் வெவ்வேறானவை.
∴ நிரப்புச் சார்பு: CF=Ae-x+Be4x
பொதுத் தீர்வு : y=Ae-x+Be4x
9.
\( \mathrm{p}=\mathrm{e}^{-x}, \mathrm{p}=0.5=\frac{1}{2} \)
\( \frac{1}{2}=\mathrm{e}^{-x} \Rightarrow \mathrm{e}^x=2 \)
\( x=\log _\epsilon 2\)
நுகர்வோர் உபரி
\(C S =\int_0^{x_0} f(x) d x-x_0 p_0 \)
\(=\int_0^{\log _e 2} e^{-x} d x-\frac{1}{2} \log _e 2\)
\( =-\left[e^{-x}\right]_0^{\log _ \in 2}-\frac{1}{2} \log _e 2 \)
\( =-\left[e^{-\log _e 2}-e^0\right]-\frac{1}{2} \log _e 2
\)
\(=-\left(\frac{1}{2}-1\right)-\frac{1}{2} \log _e 2=\frac{1}{2}-\frac{1}{2} \log _e 2 \)
\(=\frac{1}{2}\left[1-\log _e 2\right] \)
C.S.=\(\frac{1}{2}\)[1-loge2] அலகுகள்
10.
x-2y-12=0
x=2y+12

தேவைப்படும் பரப்பு
=\(\int _{ 2 }^{ 5 }{ xdy } \)
=\(\int _{ 2 }^{ 5 }{ \left[ 2y+12 \right] } dy=\left[ y^{ 2 }+12y \right] _{ 2 }^{ 5 }\)
=(25+60)-(4+24)=57 சதுர அலகுகள்.
11.
\(\int { \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }+6x+13 } } } \)
\(=\int { \frac { dx }{ \sqrt { { \left( x+3 \right) }^{ 2 }+13-9 } } } =\int { \frac { dx }{ \sqrt { { \left( x+3 \right) }^{ 2 }+{ { 2 }^{ 2 } } } } } \)
\(\left[ \because \int { \frac { dx }{ \sqrt { { x }^{ 2 }+{ a }^{ 2 } } } =\log { \left| x+\sqrt { { x }^{ 2 }+{ a }^{ 2 } } \right| } +c } \right] \)
\(=\log { \left| x+3+\sqrt { { x }^{ 2 }+6x+13 } \right| } +c\)
12.
\(\int { \frac { 2 }{ 3x+5 } dx } =2\int { \frac { 1 }{ 3x+5 }} \)dx
\(=\frac { { 2 } }{ 3 } \log\left| 3x+5 \right| +c\)
13.
A =\(\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right) \)என்க.
A-ன் வரிசை 3 x 3 ∴ ρ(A) ≤3
வரிசை மூன்று உடைய சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} 5 & 3 & 0 \\ 1 & 2 & -4 \\ -2 & -4 & 8 \end{matrix} \right| \)=0
∴ மூன்றாம் வரிசைக் கொண்ட சிற்றணிக்கோவை பூச்சியமாவதால், ρ(A)≠ 3 ஆகும்.
இரண்டாம் வரிசை கொண்ட ஒரு சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது \(\left| \begin{matrix} 5 & 3 \\ 1 & 2 \end{matrix} \right| \)=7≠ 0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 2 ஆகும். ∴ ρ(A) =3
14.
A=\(\left( \begin{matrix} 1 & 5 \\ 3 & 9 \end{matrix} \right) \)என்க
A-ன் வரிசை 2 x 2 ∴ ρ(A) ≤2
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது
\(\left| \begin{matrix} 1 & 5 \\ 3 & 9 \end{matrix} \right| \)=-6≠0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 2 ஆகும். ∴ ρ(A) ≤2
15.
x1, x2, ...xn என்ற எண்ணத்தக்க மெய் மதிப்புகளை உடைய தனித்த சமவாய்ப்பு மாறி X -ன் நிகழ்தகவுகள் p(x1), p(x2), p(x3) ... P(xn)..., எனில், இதன் தனித்த திரள் பரவல் சார்பு அல்லது பரவல் சார்பு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
அனைத்து x ∈ R -க்கு, \( F_x(x)=\mathrm{P}(\mathrm{X} \leq x), \)
அதாவது, \(F_x(x)=\sum_{x<x_i} p\left(x_i\right)\) தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X இன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு fx(x)எனில், சார்பு Fx(x) பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது,
\(F_X(x)=\mathrm{P}[\mathrm{X} \leq x]=\int_{-\infty}^x f(t) d t,-\infty<x<\infty\)
இது தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X - இன் பரவல் சார்பு அல்லது (சில நேரங்கள்) திரள் பரவல் சார்பு என்று அழைக்கப்படுகிறது,
16.
கொடுக்கப்பட்ட நிகழ்தகவு பரவல் p(x) இன் மதிப்புகளிலிருந்து நாம் பெறுவது
\(\mathrm{F}(3) =P(X \leq 3)=\mathrm{p}(3)=0.3 \)
\(\mathrm{F}(5) =P(X \leq 5)=\mathrm{p}(3)+\mathrm{p}(5) \)
\( =0.3+0.2=0.5 \)
\(\mathrm{F}(8) =P(X \leq 8)=\mathrm{p}(3)+\mathrm{p}(5)+\mathrm{p}(8)\)
\(=\mathrm{F}(5)+\mathrm{p}(8)=0.5+0.3=0.8 =0.8+0.2=1 \)
\(\mathrm{F}(10) =\mathrm{P}(X \leq 10)=\mathrm{F}(8)+\mathrm{p}(10) \)
\(\mathrm{F}_x(x) =\left\{\begin{aligned} 0, & x<3 \\ 0.3, & 3 \leq x<5 \\ 0.5, & 5 \leq x<8 \\ 0.8, & 8 \leq x<10 \\ 1, & x \geq 10 \end{aligned}\right. \)
17.
பட்டம் பெறுவதற்கான நிகழ்தகவு p= 0.4
∴ q = 1– p
= 1 – 0.4
= 0.6
(i) ஒருவர் மட்டும் பட்டதாரியாக இருப்பதற்கான நிகழ்தகவு =P(X = 1) = 5C1(0.4)(0.6)4
=0.2592
(ii) குறைந்தபட்சம் ஒருவர் பட்டதாரியாக இருக்க நிகழ்தகவு = P(x ≥ 1)
= 1- P(x=0)
= 1- 5C0(P)0(q)5-0
= 1- 5C0(0.4)0(0.6)5
= 1 – 0.0777
= 0.9222
18.
கொடுக்கப்பட்ட 2 இலக்க எண்களைக் கொண்ட சமவாய்ப்பு அட்டவணையிலிருந்து 1550 முதல் 8000 வரையிலான 4 இலக்கம் கொண்ட 10 மாதிரிகளை தேர்ந்தெடுக்க முதலில் இரண்டு இலக்க எண்களை மற்ற இரண்டிலக்க எண்களும் இணைந்து 4-இலக்க எண்களாக மாற்ற வேண்டும். அதாவது, அட்டவணையின் 5-வது மற்றும் 6-வது நிரல்களை நிழலிட்டவாறு இணைத்து முதல் ஐந்து மாதிரியையும் 8வது மற்றும் 9வது நிரல்களை இணைத்து அடுத்த ஐந்து மாதிரிகளையும் கொண்டு தேவையான 10 மாதிரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். கீழ்கண்ட அட்டவணையில் இரு நிரல்களை இணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சமவாய்ப்பு மாறிகளைக் காணலாம்.
எனவே, தேவையான 10 மாதிரிகளை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
| 5901 | 4310 | 5032 | 5194 | 1899 |
| 7259 | 7435 | 4362 | 1758 | 5308 |
19.
20.
f(x) -ல் ஐந்து மதிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால், f(x) ஒரு நான்காம்படி பல்லுறுப்புக்கோவை என எடுத்துக் கொள்வோம்.
\( \Delta^5 \mathrm{y}_0=0 \Rightarrow(\mathrm{E}-1)^5 \mathrm{y}_0=0 \)
\(\left(\mathrm{E}^5-5 \mathrm{E}^4+10 \mathrm{E}^3-10 \mathrm{E}^2+5 \mathrm{E}-1\right) \mathrm{y}_0= 0 \)
\( \mathrm{E}^5 \mathrm{y}_0-5 \mathrm{E}^4 \mathrm{y}_0+10 \mathrm{E}^3 \mathrm{y}_0-10 \mathrm{E}^2 \mathrm{y}_0+5 \mathrm{Ey}_0-\mathrm{y}_0=0 \)
\( \mathrm{y}_5-5 \mathrm{y}_4+10 \mathrm{y}_3-10 \mathrm{y}_2+5 \mathrm{y}_1-\mathrm{y}_0=0 \)
\( 501-5(467)+10 \mathrm{y}_3-10(421)+5(391)-363=0 \)
\( 501-2335+10 \mathrm{y}_3-4210+1955-363=0 \)
\( 10 \mathrm{y}_3=4452 \Rightarrow y_3=445.2 \)
= 445.2 இலட்சங்கள்
21.
\( \mathrm{y} x^2 \mathrm{~d} x+\mathrm{e}^{-x} \mathrm{dy}=0 \)
\( \mathrm{e}^{-x} \mathrm{dy}=-\mathrm{y} x^2 \mathrm{~d} x \)
\( \frac{d y}{y}=-\frac{x^2 d x}{e^{-x}} \)
\(-\int \frac{d y}{y}=\int e^{+x} x^2 d x \)
\( \int e^x x^2 d x=-\int \frac{d y}{y} \)
\( \mathrm{u}=x^2 \quad \int d v=\int e^x d x \)
\( u^{\prime}=2 x \quad \mathrm{v}=\mathrm{e}^x \)
\(u^{\prime \prime}=2 \quad \mathrm{v}_1=\mathrm{e}^x \)
\( \mathrm{v}_2=\mathrm{e}^x \)
\( \int u d v=\mathrm{uv}-u^{\prime} v_1+u^{\prime \prime} v_2 \)
\( \int e^x x^2 d x=x^2 \mathrm{e}^x-2 x e^x+2 \mathrm{e}^x\)
(1) -ம் பிரதியிட
\(x^2 \mathrm{e}^x-2 x \mathrm{e}^x+2 \mathrm{e}^x =-\log \mathrm{y}+\mathrm{c} \)
\(\mathrm{e}^x\left(x^2-2 x+2\right)+\log \mathrm{y} =\mathrm{c} .\)
ex(x2-2x+2)+log y=c
22.
பரவளையத் தொகுப்பின் சமன்பாடு
\((\mathrm{y}-\mathrm{k})^2 =4 \mathrm{a}(x-h)\)
\(2(\mathrm{y}-\mathrm{k}) \frac{d y}{d x} =4 \mathrm{a} \)
\((\mathrm{y}-\mathrm{k}) \frac{d y}{d x}=2 \mathrm{a} \)
\(\mathrm{y}-\mathrm{k} =\frac{2 a}{\frac{d y}{d x}}\)
சமன்பாடு (1) -ல், x -ஐப் பொறுத்து வகைப்படுத்த
\((y-k) \frac{d^2 y}{d x^2}+\left(\frac{d y}{d x}\right)^2 =0 \)
\(\left(\frac{2 a}{d y}\right)\left(\frac{d^2 y}{d x}\right)+\left(\frac{d y}{d x}\right)^2 =0 \)
\(2 a \frac{d^2 y}{d x^2}+\left(\frac{d y}{d x}\right)^3 =0\)
2a\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } +\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }\)=0
23.
\( \mathrm{MR}=\frac{2}{x+3}-\frac{2 x}{(\mathrm{x}+3)^2}+5\)
\( \mathrm{R}=\int\left(\frac{2}{x+3}-\frac{2 x}{(x+3)^2}+5\right) d x \)
\( =2 \log (x+3)-2 \int \frac{x d x}{(x+3)^2}+5 x+k \)
\( \frac{x}{(x+3)^2}=\frac{x+3-3}{(x+3)^2} \)
\( =\frac{x+3}{(x+3)^2}-\frac{3}{(x+3)^2} \)
\(\mathrm{R}=2 \log |x+3|-2 \int \frac{x+3}{(x+3)^2} d x +6 \int \frac{d x}{(x+3)^2}+5 x+k \)
\(\mathrm{R}=2 \log |x+3|-2 \int \frac{d x}{(x+3)} +6 \int(x+3)^{-2} d x+5 x+k \)
\( =2 \log |x+3|-2 \log |x+3| +6 \frac{(x+3)^{-1}}{-1}+5 x+k \)
\(\mathrm{R}=\frac{-6}{(x+3)}+5 x+k \)
x=0, R=0 எனில், k=2
\( \mathrm{R}=\frac{-6}{x+3}+5 x+2 \)
\(=\frac{-6+2 x+6}{x+3}+5 x\)
\(R =\frac { 2 }{ x+3 } +5\)
தேவைச் சார்பு P= R/x =\(\frac { 2 }{ x+3 } +5\) எனவே நிறுவப்பட்டது.
24.
y=x2 என்பது மேல் நோக்கித் திறந்த பரவளையம். இது y - அச்சைப் பொறுத்து சமச்சீரானது.
பரப்பு \(=2 \int_c^4 x d y \)
\(x^2=\mathrm{y} \Rightarrow x=\sqrt{y} \)
பரப்பு \(=2 \int_0^4 y^{1 / 2} d y\)
\(=2\left[\frac{y^{3 / 2}}{3 / 2}\right]_0^4 \)
\( =\frac{4}{3}\left[4^{3 / 2}-0\right] \)
\(=\frac{4}{3}(8)=\frac{32}{3}\)
\(=\frac { 32 }{ 3 } \) ச.அலகுகள்
25.
\(\int { \frac { dx }{ x+\sqrt { { x }^{ 2 }+1 } } } \)
\(\int { \frac { 1 }{ x+\sqrt { { x }^{ 2 }-1 } } } \times \frac { x-\sqrt { { x }^{ 2 }-1 } }{ x-\sqrt { { x }^{ 2 }-1 } } dx\)
\(=\int { \frac { \left( x-\sqrt { { x }^{ 2 }-1 } \right) dx }{ { x }^{ 2 }-\left( { x }^{ 2 }-1 \right) } } \)
\(\left[ \because \left( a+b \right) (a-b)={ a }^{ 2 }-{ b }^{ 2 } \right] \)
\(=\int { \frac { \left( x-\sqrt { { x }^{ 2 }-1 } \right) dx }{ { x }^{ 2 }-{ x }^{ 2 }-1 } } \)
\(\int { \left( x-\sqrt { { x }^{ 2 }-1 } \right) } dx\)
\(=\int { x\quad dx } -\int { \sqrt { { x }^{ 2 }-1 } dx } \)
\(=\frac { { x }^{ 2 } }{ 2 } -\left[ \frac { x }{ 2 } \sqrt { { x }^{ 2 }-1 } -\frac { 1 }{ 2 } \log { \left| x+\sqrt { { x }^{ 2 }- } \right| } +c \right] \)
\(\left[ \because \int { \sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } dx=\frac { x }{ 2 } } \sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } -\frac { { a }^{ 2 } }{ 2 } \log { \left| x+\sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } \right| +c } \right] \)
= \(\frac { { x }^{ 2 } }{ 2 } -\frac { x }{ 2 } \sqrt { { x }^{ 2 }-1 } +\frac { 1 }{ 2 } log\left| x+\sqrt { { x }^{ 2 }-1 } \right| +c\)
26.
\(\int \left( \frac { 1 }{ \sin ^{ 2 } x\cos ^{ 2 } x } \right) dx=\int \frac { \sin ^{ 2 } x+\cos ^{ 2 } x }{ \sin ^{ 2 } x\cos ^{ 2 } x } d\)
\(=\int \left( \frac { \sin ^{ 2 } x }{ \sin ^{ 2 } x\cos ^{ 2 } x } +\frac { \cos ^{ 2 } x }{ \sin ^{ 2 } x\cos ^{ 2 } x } \right) dx\)
\(=\int \left( \sec ^{ 2 } x+{ cosec }^{ 2 }x \right) dx\)
\(=\tan x-\cot x+c\)
27.
x ,y என்பன முறையே இரண்டு கணக்குகளிலும் முதலீடு செய்யப்பட்ட தொகை என்க.
x + y = 8600 ..(1)
\(4\cfrac { 3 }{ 4 } \times \cfrac { x }{ 100 } +6\cfrac { 1 }{ 2 } \times \cfrac { y }{ 100 } =431.25\)
\(\Rightarrow \cfrac { 19x }{ 400 } +\cfrac { 13y }{ 3200 } =431.25\)
\(\Rightarrow \cfrac { 19x+26y }{ 400 } =431.25\)
19x + 26y = 172500
x + y = 8600
19x + 26y = 172500 ...(2)
\(\Delta =\left| \begin{matrix} 1 & 1 \\ 19 & 26 \end{matrix} \right| =1(26)-1(19)\)
= 26-19 =7
\({ \Delta }x=\left| \begin{matrix} 8600 & 1 \\ 172500 & 26 \end{matrix} \right| =8600(26)-1(172500)\)
= 223600 - 172500 = 51100
\(\Delta y=\left| \begin{matrix} 1 & 8600 \\ 19 & 172500 \end{matrix} \right| =1(172500)-19(8600)\)
= 172500 - 163400 = 9100
\(x=\cfrac { \Delta x }{ \Delta } -\cfrac { 51100 }{ 7 } =7300\)
\(y=\cfrac { \Delta y }{ \Delta } =\cfrac { 9100 }{ 7 } =1300\)
\(\therefore\) 4\(\frac{3}{4}\)% -ல் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.7,300
6\(\frac{1}{2}\)% -ல் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.1300
28.
கொடுக்கப்பட்ட தொகுப்பிற்கான அணி சமன்பாடு
\(\left( \begin{matrix} 1 & 1 \\ 2 & 1 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \end{matrix} \right) =\left( \begin{matrix} 5 \\ 8 \end{matrix} \right) \)
A X =B
| அணி A | விரிவுபடுத்தப்பட்ட அணி [A,B] | அடிப்படை உருமாற்றம் |
| \(\\ \left( \begin{matrix} 1 & 1 \\ 2 & 1 \end{matrix} \right) \) | \(\left( \begin{matrix} 1 & 1 & 5 \\ 2 & 1 & 8 \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 1 & 1 \\ 0 & -1 \end{matrix} \right) \) | ~\(\left( \begin{matrix} 1 & 1 & 5 \\ 0 & -1 & -2 \end{matrix} \right) \) | R2 ⟶ R2 - 2R1 |
| ρ(A)=2 | ρ([A,B])=2 |
ஏறுபடிவ அணியில் உள்ள பூச்சியமற்ற நிரைகளின் எண்ணிக்கை 2 ஆகும்.
ρ(A)=ρ([A,B])=2=மதிப்பிடவேண்டிய மாறிகளின் எண்ணிக்கை
∴ கொடுக்கப்பட்ட தொகுப்பு ஒருங்கமைவுடையது மேலும் ஒரே ஒரு தீர்வு உண்டு.
கொடுக்கப்பட்ட தொகுப்பினை \(\left( \begin{matrix} 1 & 1 \\ 0 & -1 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \end{matrix} \right) =\left( \begin{matrix} 5 \\ -2 \end{matrix} \right) \)என எழுதலாம்.
⇒ x + y = 5 .........(1)
y = 2
∴ (1) ⇒ x + 2 = 5
x = 3
தீர்வு: x = 3, x = 2
29.
கூறு அளவு n =100
கூறு சராசரி \(\bar{x}=3.5\)
முழுமைத் தொகுதி சராசரி μ =4
முழுமைத் தொகுதி திட்டவிலக்கம் S.D \(\sigma=3\)
இன்மை கருதுகோள்: H0:μ =4 (முழுமைத் தொகுதி சராசரியிலிருந்து எடுக்கப்பட்டது μ=4 )
மாற்று கருதுகோள்: \(\mathrm{H}_1: \mu \neq 4\) (இரு முனை)
மிகைகாண் நிலை \(\alpha=5 \%=0.05\)
கூறுபண்பளவை Z
\(\mathrm{Z} =\frac{\bar{x}-\mu}{\frac{\sigma}{\sqrt{n}}} \sim \mathrm{N}(0,1) =\frac{3.5-4}{\frac{3}{\sqrt{100}}}\)
\(=\frac{-0.5}{0.3}=-1.667 \)
\(\therefore|Z| =1.667\)
மறுக்கும் அளவு 5 % மிகைகாண் நிலை
\(Z_{\alpha / 2} =1.96 \)
|Z| =1.667<1.96
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட குறைவாக உள்ளது. அதாவது, Z < Zα/2 .5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
30.
X - ன் சராசரி \(=\mathrm{E}(\mathrm{X})=\int_{-\infty}^{\infty} x f(x) d x \)
\( =\int_1^{\infty} x\left(\frac{3}{x^4}\right) d x \)
\(=3 \int_1^{\infty} x^{-3} d x=3\left[\frac{x^{-2}}{-2}\right]_1^{\infty} \)
\(=\frac{-3}{2}\left[\frac{1}{x^2}\right]_1^{\infty}=\frac{-3}{2}\left[\frac{1}{\infty}-1\right]=\frac{3}{2} \)
\(\mathrm{E}(\mathrm{X})^2 =\int_{-\infty}^{\infty} x^2 f(x) d x=\int_1^{\infty} x^2\left(\frac{3}{x^4}\right) d x \)
\( =3 \int_1^{\infty} \frac{1}{x^2} d x=3 \int_1^{\infty} x^{-2} d x \)
\( =3\left[\frac{x^{-1}}{-1}\right]_t^{\infty}=-3\left[\frac{1}{x}\right]_1^{\infty} \)
\(=-3[0-1]=3\)
X - ன் திட்டவிலக்கம் \(=E\left(X^2\right)-[E(X)]^2\)
\(=3-\left(\frac{3}{2}\right)^2=3-\frac{9}{4}=\frac{3}{4}\)
31.
நிரூபிக்க: \(\int_{-\infty}^\infty f(x) d x=1\)
அதாவது \(\int_{-3}^3 f(x) d x=1\)
\(\text { LHS }= \int_{-3}^3 f(x) d x \)
\(= \int_{-3}^{-1} \frac{1}{16}(3+x)^2 d x+\int_{-1}^1 \frac{1}{16}\left(6-2 x^2\right) d x +\int_1^3 \frac{1}{16}(3-x)^2 d x \)
\(= \frac{1}{16}\left[\frac{(3+x)^3}{3}\right]_{-3}^{-1}+\frac{1}{16}\left[6 x-\frac{2 x^3}{3}\right]_{-1}^1+ \frac{1}{16}\left[\frac{(3-x)^3}{-3}\right]_{3}^{1} \)
\(= \frac{1}{48}\left[2^3-0\right]+\frac{1}{16}\left[6-\frac{2}{3}-\left(-6+\frac{2}{3}\right)\right] - \frac{1}{48}\left[0 -2^3\right] \)
\(= \frac{8}{48}+\frac{1}{16}\left[6-\frac{2}{3}+6-\frac{2}{3}\right]+\frac{8}{48}\)
\( =\frac{16}{48}+\frac{1}{16}\left[12-\frac{4}{3}\right] \)
\( =\frac{1}{3}+\frac{1}{16}\left[\frac{32}{3}\right]=\frac{1}{3}+\frac{2}{3}=\frac{3}{3}=1=\text { RHS }
\) எனவே நிறுவப்பட்டது
32.
மழை பொழிவதற்கான நிகழ்தகவு p =\(\frac { 9 }{ 30 } =\frac { 3 }{ 10 } \) மற்றும் q =1-p=\(\frac { 7 }{ 10 } \).
P(X = x)=\({ n }_{ C_{ x } }\)px qn-x
ஒரு வாரத்திற்கு ஏழு நாள்கள் எனில் P(X = x) =\(\left( \begin{matrix} 7 \\ 3 \end{matrix} \right) \left( \frac { 3 }{ 10 } \right) ^{ x }\left( \frac { 7 }{ 10 } \right) ^{ 7-x }\)
குறைந்தபட்சம் இரண்டு நாள்கள் மழை பொழிவதற்கான நிகழ்தகவுகள்,
P(x≥2)=1-P(X>2)
=1-[p(X=0)+P(X=1)]
P(X=0)=\(\left( \begin{matrix} 7 \\ 0 \end{matrix} \right) \left( \frac { 3 }{ 10 } \right) ^{ 0 }\left( \frac { 7 }{ 10 } \right) ^{ 7-0 }\)
=0.0823
மற்றும் P(X=1)=\(\left( \begin{matrix} 7 \\ 1 \end{matrix} \right) \left( \frac { 3 }{ 10 } \right) \left( \frac { 7 }{ 10 } \right) ^{ 7-1 }\)
=0.2471
எனவே , தேவையான நிகழ்தகவு = 1– [P(x = 0) +P(x = 1)]
= 1– [0.082 + 0.247]
= 0.6706
33.
x0 = 15, x1 = 25, x2 = 30, x3 = 35 x = 26
y0= 36, y1 = 40, y2 = 45, y3 = 48,
∴ y = f(x) = \(\frac { (x-{ x }_{ 1 })(x-{ x }_{ 2 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 0 }-{ x }_{ 1 })({ x }_{ 0 }-{ x }_{ 2 })({ x }_{ 0 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 0 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 2 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 1 }-{ x }_{ 0 })({ x }_{ 1 }-{ x }_{ 2 })(x_{ 1 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 1 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 1 })(x-{ x }_{ 3 }) }{ ({ x }_{ 2 }-{ x }_{ 0 })({ x }_{ 2 }-{ x }_{ 1 })({ x }_{ 2 }-{ x }_{ 3 }) } \times { y }_{ 2 }+\frac { (x-{ x }_{ 0 })(x-{ x }_{ 1 })(x-{ x }_{ 2 }) }{ ({ x }_{ 3 }-{ x }_{ 0 })({ x }_{ 3 }-{ x }_{ 1 })({ x }_{ 3 }-{ x }_{ 2 }) } \times { y }_{ 3 }\)
\(y= \frac{(1)(-4)(-9)}{(-10)(-15)(-20)} 36+\frac{(11)(-4)(-9)}{10(-5)(-10)} 40 +\frac{(11)(1)(-9)}{(15)(5)(-5)} 45+\frac{(11)(1)(-4)}{(20)(10)(5)} 48 \)
\(= -0.432+31.68+11.88-2.112 \)
\(= 41.016 \sim 41\) நபர்கள்
34.
\(\begin{array}{|c|c|c|c|c|c|c|} \hline \mathbf{P} & \mathbf{T} & \nabla_{\mathbf{T}} & \nabla^2 \mathbf{T} & \nabla^3 \mathbf{T} & \nabla^4 \mathbf{T} & \nabla^5 \mathbf{T} \\ \hline 40 & 180 & & & & & \\ \hline & & 24 & & & & \\ \hline 50 & 204 & & -2 & & & \\ \hline & & 22 & & 4 & & \\ \hline 60 & 226 & & 2 & & -4 & \\ \hline & & 24 & & 0 & & 4 \\ \hline 70 & 250 & & 2 & & 0 & \\ \hline & & 26 & & 0 & & \\ \hline 80 & 276 & & 2 & & & \\ \hline & & 28 & & & & \\ \hline 90 & 304 & & & & & \\ \hline \end{array}\)
P = 84
நியூட்டனின் பின்நோக்கு இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்த
Pn = 90, h = 10
Pn + nh = 84
⇒ 90 + n(10) = 84
⇒ 10n = 84 - 90 = -6
n = -6/10 = -0.6
\( \mathrm{T}=T_n+\frac{n}{1 !} \nabla T+\frac{n(\mathrm{n}+1)}{2 !} \nabla^2 T +\frac{n(\mathrm{n}+1)(\mathrm{n}+2)}{3 !} \nabla^3 T +\frac{n(\mathrm{n}+1)(\mathrm{n}+2)(\mathrm{n}+3)}{4 !} \nabla^4 T+\ldots
\)
\( \mathrm{T}=304+(-0.6)(28)+\frac{(-0.6)(0.4)}{2 !}(2) +\frac{(-0.6)(0.4)(1.4)}{3 !}(0) + \frac{(-0.6)(0.4)(1.4)(2.4)(3.4)}{5 !}(4) \)
\(=304-16.8-0.24-0.091392=286.96\)
35.
\(\frac { dy }{ dx } \)+ycosx=2cosx
இது \(\frac { dy }{ dx } + Py = Q \) என்ற அமைப்பில் உள்ளது.
இங்கு,\( \mathrm{P}=\cos x, \mathrm{Q}=2 \cos x \)
\( \int P d x=\int \cos x d x=\sin x \)
\( y e^{\int P d x}=\int Q e^{\int P d x} d x+c \)
\( \text { ye } \sin x=\int(2 \cos x) e^{\sin x} d x+c \)
\( \text { ye }{ }^{\sin x}=2 \int \cos x e^{\sin x} d x+c \)
\( \mathrm{t}=\sin x, \mathrm{dt}=\cos x \mathrm{~d} x \)
\( \mathrm{ye}^{\sin x}=2 \int e^t d t+c \)
\( y e^{\operatorname{tin} x}=2 \mathrm{e}^t+\mathrm{c} \)
\( \text { ye } e^{\sin x}=2 \mathrm{e}^{\sin x}+\mathrm{c} \)
yesinx=2esinx+c
36.
(D2-3D+2)y=e4x
துணைச் சமன்பாடு
m2 - 3m + 2 = 0
(m-1)(m-2) =0
m =1,2
நிரப்புச் சார்பு: \(A e^{m_1 x}+B e^{m_2 x}=\mathrm{Ae}^x+\mathrm{Be}^{2 x}\)
சிறப்புத் தொகை \(=\frac{e^{4 x}}{D^2-3 D+2}\)
(D - க்கு பதிலாக 4 ஐப் பதிலிட)
சிறப்புத் தொகை \(=\frac{e^{4 x}}{16-12+2}=\frac{e^{4 x}}{6}\)
தீர்வு:
\( \mathrm{y}=\mathrm{C} . \mathrm{F}+\text { P.I } \)
\( \mathrm{y}=\mathrm{A} \mathrm{e}^x+\mathrm{Be}^{2 x}+\frac{e^{4 x}}{6}\)
x=0 மற்றும் y=0 எனில்,
\(0 =\mathrm{A}+\mathrm{B}+\frac{1}{6} \)
\(6 \mathrm{~A}+6 \mathrm{~B} =-1\)
x=1 மற்றும் y =0 எனில்,
\(0 =\mathrm{Ae}+\mathrm{Be}^2+\frac{e^4}{6} \)
\(\mathrm{~A}+\mathrm{Be}+\frac{e^3}{6} =0 \)
\(6 \mathrm{~A}+6 \mathrm{Be} =-\mathrm{e}^3\)
(1) மற்றும் (2) ஆகியவற்றைத் தீர்க்க
\(6 \mathrm{~B}(1-\mathrm{e}) =-1+\mathrm{e}^3 \)
\(6 \mathrm{~B} =-\frac{\left(1-e^3\right)}{1-e}=-\left(1+\mathrm{e}+\mathrm{e}^2\right) \)
\(\mathrm{B} =-\frac{\left(1+e+e^2\right)}{6} \)
(1) -ம் பிரதியிட,
\(6 \mathrm{~A}-1-\mathrm{e}-\mathrm{e}^2 =-1 \)
\(6 \mathrm{~A} =\mathrm{e}+\mathrm{e}^2\)
\(\mathrm{~A} =\frac{e+e^2}{6}\)
சிறப்புத் தீர்வு
\(\mathrm{y} =\frac{\left(e^2+e\right)}{6} e^x-\frac{\left(e^2+e+1\right)}{6} e^{2 x}+\frac{e^{4 x}}{6} \)
6y=(e2+e)ex-(e2+e+1)e2x+e4x
37.
இறுதிநிலை செலவு சார்பு C'(x)=5+0.13x
\(C(x) =\int(5+0.13 x) d x \)
\( =5 x+\frac{0.13 x^2}{2}+k_1\)
\( =5 x+0.065 x^2+\mathrm{k}_1\)
x =0, C=120 எனில்,\(\mathrm{k}_1=120\)
செலவுச் சார்பு : \( C(x)=5 x+0.065 x^2+120 \)
\( R^{\prime}(\mathrm{x})=18 \)
வருவாய்ச் சார்பு : \( \mathrm{R}=\int 18 d x=18 x+\mathrm{k}_2 \)
x = 0, R = 0 எனில்
\( \mathrm{k}_2=0 \)
\( \mathrm{R}=18 x \)
இலாபச் சார்பு : \(\text { P(x ) }=\mathrm{R}(x)-\mathrm{C}(x) \)
\(=18 x-5 x-0.065 x^2-120 \)
\(=13 x-0.065 x^2-120 \)
38.
\(\frac{d C}{d x} =100-10 x+0.1 x^2 \)
\(\mathrm{C} =\int\left(100-10 \mathrm{x}+0.1 \mathrm{x}^2\right) d x \)
\(\mathrm{C} =\left[100 x-\frac{10 x^2}{2}+\frac{0.1 x^3}{3}\right]+k \)
\(\mathrm{k} =500 \) எனக் கொடுக்கப்பட்டுள்ளது
\(\mathrm{C} =100 x-5 x^2+\frac{0.1 x^3}{3}+500 \)
\(\mathrm{AC} =\frac{C}{x}=100-5 x+\frac{0.1 x^2}{3}+\frac{500}{x}\)
\( =100-5 x+\frac{x^2}{30}+\frac{500}{x}
\)
39.
\(\int _{ a }^{ b } xdx\)=1 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
\(\left[ x \right] _{ a }^{ b }\)=1
b-a=1 .....(1)
மேலும், \(\int _{ a }^{ b } xdx\)=1 எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
\(\left[ \frac { { x }^{ 2 } }{ 2 } \right] _{ a }^{ b }\)=1
b2-a2=2
(b+a)(b-a)=2
b+a=2 ......(2) [∵ b-a=1]
(1)+(2) ⇒ 2b=3
∴ b=\(\frac { 3 }{ 2 } \)
இப்போது, \(\frac { 3 }{ 2 } \)-a =1 [∵ (1) லிருந்து]
∴ a=\(\frac { 1 }{ 2 } \)
40.
\(\int _{ -1 }^{ 1 }{ x\sqrt { x+1 } } \)dx=\(\int _{ 0 }^{ 2 }{ (t-1)\sqrt { t } dt } \)
=\(\int _{ 0 }^{ 2 }{ \left( { t }^{ \frac { 3 }{ 2 } }-{ t }^{ \frac { 1 }{ 2 } } \right) } dt\)
=\(\left[ \frac { 2t^{ \frac { 5 }{ 2 } } }{ 5 } -\frac { 2t^{ \frac { 3 }{ 2 } } }{ 3 } \right] _{ 0 }^{ 2 }\)
=\(\frac { 8\sqrt { 2 } }{ 5 } -\frac { 4\sqrt { 2 } }{ 3 } \)
=\(\frac { 4\sqrt { 2 } }{ 15 } \)
| t = x +1 என்க. dt = dx | ||
| x | -1 | 1 |
| t | 0 | 2 |
41.
தரப்பட்ட சமன்பாட்டு தொகுப்புக்குரிய அணிச் சமன்பாடானது
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 2 & a \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 6 \\ 10 \\ b \end{matrix} \right) \)
A X = B
| விரிவுபடுத்தப்பட்ட அணி [A,B] | அடிப்படை உருமாற்றங்கள் |
| \(\left( \begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ a \end{matrix}\begin{matrix} 6 \\ 10 \\ b \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ a-1 \end{matrix}\begin{matrix} 6 \\ 4 \\ b-6 \end{matrix} \right) \) | R2 ⟶ R2 - R1 R3 ⟶ R3 - R1 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ a-3 \end{matrix}\begin{matrix} 6 \\ 4 \\ b-10 \end{matrix} \right) \) | R3 ⟶ R3 - R2 |
கடைசி சமான அணி ஏறுபடிவ வடிவில் உள்ளது.
நிலை (i) தீர்வு இல்லை:
ρ(A) ≠ ρ([A,B]) எனில் தொகுப்பிற்கு தீர்வு இல்லை. a-3=0 மற்றும் b-10≠0 எனும்போது மட்டுமே ρ(A) ≠ ρ([A,B]) ஆகும்.
∴ a=3, b≠10 எனும்போது தொகுப்பிற்கு தீர்வு இல்லை.
நிலை (ii) ஒரே ஒரு தீர்வு:
ρ(A) = ρ([A,B])=மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை, எனில் தொகுப்பிற்கு எண்ணிக்கையற்ற தீர்வுகள் உண்டு.
இங்கு a-3≠0, எனில் ρ(A) = ρ([A,B])=3
∴ a≠3 மற்றும் b\(\in \)R எனில் தொகுப்பிற்கு ஒரே ஒரு தீர்வு உண்டு.
நிலை (iii) எண்ணிக்கையற்ற தீர்வுகள்:
ρ(A) = ρ([A,B]) < மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை, எனில் தொகுப்பிற்கு எண்ணிக்கையற்ற தீர்வுகள் உண்டு.
இங்கு a-3=0, b-10=0 எனில் ρ(A) = ρ([A,B])=2<3
எனவே a=3 மற்றும் b =10 எனும் போது தொகுப்பிற்கு எண்ணிக்கையற்ற தீர்வுகள் உண்டு.
42.
கொடுக்கப்பட்ட தொகுப்பிற்கான அணிச் சமன்பாடு
\(\left( \begin{matrix}3 & 1 & λ\\ 2&1&1\\ 1& 2& -λ\end{matrix} \right) \)\(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 1\\2\\ -1\end{matrix} \right) \)
AX =B
சமன்பாட்டுத் தொகுப்பானது ஒருங்கமைவுடையது மற்றும் ஒரேயொரு தீர்வு இல்லாமலிருப்பதால்,
ρ(A,B ) = ρ(A) < 3 எனவே |A | =0
\(\begin{vmatrix} 3 & -1 & \lambda \\ 2 & 1 & 1 \\ 1 & 2 & -\lambda \end{vmatrix}\) = 0
3(-\(\lambda \)-2) + 1 (-2\(\lambda \)-1)+\(\lambda \)(4-1) = 0
-3\(\lambda \) - 6 - 2\(\lambda \)-1+3\(\lambda \) = 0
-2\(\lambda \) =7
\(\lambda \)=\(\frac { -7 }{ 2 } \)
43.
\( \mathrm{p}=\frac{2}{100}, \lambda=\mathrm{np}=50\left(\frac{2}{100}\right)=1 \)
\(P(X \leq 2) =\mathrm{P}(\mathrm{X}=0)+\mathrm{P}(\mathrm{X}=1)+\mathrm{P}(\mathrm{X}=2) \)
\(=\mathrm{e}^{-1}+\mathrm{e}^{-1}(1)+\frac{e^{-1}(1)}{2 !} \)
\( =e^{-1}\left[2+\frac{1}{2}\right]=2.5 \mathrm{e}^{-1}\)
44.
(a)
மதிப்பீட்டு முறை
45.
(a)
பூஜ்ஜியம்
46.
\(\Delta \mathrm{f}(x) =\mathrm{f}(x+\mathrm{h})-\mathrm{f}(x) \)
\(\Delta\left(x^2\right) =(x+\mathrm{h})^2-x^2 {\left[\because \mathrm{f}(x)=x^2\right]} \)
\(=(x+1)^2-x^2=2 x+1 {[\because \mathrm{h}=1]}
\)
47.
(b)
48.
பரப்பு \(=\int_0^1 e^x d x=\left[e^x\right]_0^1=e^1-e^0=\mathrm{c}-1\)
49.
(d)
\(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -x }x^{ n-1 } } dx\)
50.
(c)
0
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards