12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Accountancy Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ஜனனி, கமலி மற்றும் லட்சுமி மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிறுவனத்தின் தொழிலுக்கு அளித்த பங்களிப்புக்காக, கூட்டாண்மை ஒப்பாவணத்தின் விதிமுறைகளின் படி, கமலிக்கு மாத ஊதியம் ரூ.10,000 அனுமதிக்கப்பட்டது மற்றும் லட்சுமிக்கு கழிவு ஆண்டுக்கு ரூ.40,000 அனுமதிக்கப்பட்டது. கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
2.
கவிதா என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்
(i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
(ii) ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால்
(iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்
3.
கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.
4.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.
5.
நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.
1.
கமலியின் ஊதியம் = ரூ.10,000 x 12 = ரூ.1,20,000
லட்சுமியின் கழிவு = ரூ.40,000
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| கமலியின் ஊதியம் க/கு | ப | 1,20,000 | |||
| கமலியின் முதல் க/கு (கமலியின் ஊதியம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
1,20,000 | ||||
| லட்சுமியின் கழிவு க/கு | ப | 40,000 | |||
| லட்சுமியின் முதல் க/கு (லட்சுமியின் கழிவு முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
40,000 | ||||
| இலாபநட்டப் பகிர்வு க/கு | ப | 1,60,000 | |||
| கமலியின் ஊதியம் க/கு | 1,20,000 | ||||
| லட்சுமியின் கழிவு க/கு (ஊதியம் மற்றும் கழிவு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
40,000 |
2.
மொத்த எடுப்புத் தொகை = ரூ.2,500 x 12 = ரூ.30,000
(i) எடுப்புகள் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6.5
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 6.5 }{ 12 } \)
= ரூ.650
(ii) எடுப்புகள் ஒவ்வொரு மாத இடையிலும் எடுத்திருந்தால்:
சராசரி காலம் = 6
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 6 }{ 12 } \)
= ரூ.600
(iii) எடுப்புகள் ஒவ்வொரு மாத இறுதியிலும் எடுத்திருந்தால்
சராசரி காலம் = 5.5
= ரூ.30,000 x \(\frac { 4 }{ 100 } \times \frac { 5.5 }{ 12 } \)
= ரூ.550
3.
(i) நிறுவனத்தின் பெயர், தன்மை மற்றும் தொழில் செய்யும் இடம்
(ii) தொழில் தொடங்கிய நாள் மற்றும் தொழிலின் கால அளவு
(iii) அனைத்துக் கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி
(iv) ஒவ்வொரு கூட்டாளியும் அளித்த முதல்
(v) இலாபப் பகிர்வு விகிதம்
(vi) முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி வீதம்
4.
கூட்டாண்மையின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
(i) கூட்டாண்மை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 என வரையறை செய்யப்பட்டுள்ளது.
(ii) தொழில் நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தைப் பகிர்ந்துகொள்ள கூட்டாளிகளுக்கிடையே உடன்பாடு இருக்க வேண்டும். உடன்பாடு எழுத்து வடிவிலோ அல்லது பேச்சு வடிவிலோ அல்லது உட்கிடையாகவோ இருக்கலாம்
(iii) கூட்டாண்மை உடன்பாடு ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தைப் பகிர்வதாக இருக்க வேண்டும்.
(iv) கூட்டாண்மை நிறுவனத்தை கூட்டாளிகள் அனைவருமோ அல்லது அனைவரின் சார்பில் அவர்களில் ஒருவரோ நடத்தலாம்.
5.
| வ.எண்: | வேறுபாட்டின் அடிப்படை | நிலைமுதல் முறை | மாறுபடும் முதல் முறை |
|---|---|---|---|
| 1. | கணக்குகளின் எண்ணிக்கை | ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் அதாவது, முதல் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு பராமரிக்கப்படுகின்றன | ஒவ்வொரு கூட்டாளிக்கு ஒரே ஒரு கணக்கு அதாவது, முதல் கணக்கு பராமரிக்கப்படுகிறது |
| 2. | முதல் தொகையில் மாற்றம் | கூடுதல் முதல் கொண்டு வரும்போது அல்லது முதல் தொகையை நிரந்தரமாக திரும்ப எடுக்கும் போது, தவிர மற்ற நேரங்களில் முதல் தொகை வழக்கமாக மாறாமல் நிலையாக இருக்கும் | முதல் தொகை பருவந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் |
| 3. | இறுதி இருப்பு | முதல் கணக்கு எப்பொழுதும் வரவிருப்பையே காட்டும். ஆனால், நடப்புக் கணக்கு பற்றிருப்பையோ அல்லது வரவிருப்பையோ காட்டும் | முதல் கணக்கு பொதுவாக வரவிருப்பையே காட்டும். இது பற்றிருப்பையும் கூட காட்டலாம் |
| 4. | சரிக்கட்டுதல்கள் | முதல் மீது வட்டி, எடுப்புகள் மீது வட்டி, ஊதியம் மற்றும் கழிவு, இலாபம் அல்லது நட்டப் பங்கு தொடர்பான அனைத்துச் சரிக்கட்டுதல்களும் நடப்புக் கணக்கில் செய்யப்படும். | முதல் மீது வட்டி, எடுப்புகள் மீது வட்டி, ஊதியம் மற்றும் கழிவு, இலாபம் அல்லது நட்டப்பங்கு தொடர்பான அனைத்துச் சரிக்கட்டுதல்களும் முதல் கணக்கில் செய்யப்படும் |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards