12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Accountancy Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
முத்து என்பவர் ரூ.10 மதிப்புள்ள 20 சாதாரண பங்குகளை வைத்திருந்தார். அவர் அதன் விண்ணப்பத் தொகையாக ரூ.2 செலுத்திய நிலையில் ஒதுக்கீட்டுப் பணம் ரூ.3 மற்றும் முதல் அழைப்பு பணம் ரூ.1 செலுத்தவில்லை. முதல் அழைப்புக்கு பின்னர் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்ய முடிவு செய்தனர். பங்கு ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
2.
அனிதா என்பவர் தஞ்சாவூர் மோட்டார் வரையறு நிறுமத்தின் ரூ.10 மதிப்புள்ள 500 நேர்மைப் பங்குகளை வைத்துள்ளார். அவர் விண்ணப்பத்தின் மீது ரூ.3, ஒதுக்கீட்டின் மீது ரூ.5 செலுத்தி உள்ளார். ஆனால் முதலாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையான ரூ.2 செலுத்தவில்லை. அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
3.
ஜெமினி வரையறு நிறுமம் பங்கொன்றுக்கு ரூ.10 மதிப்புள்ள ரூ. 7 அழைக்கப்பட்ட 20 சாதாரண பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது. மகேஷ் என்பவர் அப்பங்குகளுக்கான விண்ணப்பம் மற்றும் ஒதுக்கீடு பணம் ரூ.5 செலுத்தி இருந்தார். அவற்றில் 15 பங்குகள் பங்கொன்றுக்கு ரூ.6 வீதம் பெற்றுக் கொண்டு ரூ.7 வீதம் செலுத்தப்பட்ட பங்குகளாக நரேஷ் என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. பங்கு ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
4.
மருது நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 150 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.4 இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் ஒறுப்பிழப்பு செய்தது. அவற்றில் 100 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்தது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
5.
அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
1.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (20 × 6) | ப | 120 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீடு க/கு (20 × 3) | 60 | ||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (20 × 1) | 20 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (20 × 2) | 40 | ||||
| (பங்குகள் ஒறுப்பிழப்பு செய்தது) |
2.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (500 × 10) | ப | 5,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (500 × 2) | 1,000 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (500 × 8) | 4,000 | ||||
| (அழைப்புப் பணம் செலுத்தாததால் 500 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) |
3.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்குமுதல் க/கு (20 × 7) | ப | 140 | |||
| நேர்மைப் பங்குமுதல் அழைப்பு க/கு (20 × 2) | 40 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (20 × 5) | 100 | ||||
| (ரூ.7 அழைக்கப்பட்ட 20 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (15 × 6) | ப | 90 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | 15 | ||||
| நேர்மைப்பங்கு முதல் க/கு | 105 | ||||
| (15 பங்குகள் ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 60 | |||
| முதலினக் காப்பு க/கு | 60 | ||||
| (பங்கு ஒறுப்பிழப்பு கணக்கு முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
குறிப்பு:
முதலினக் காப்பிற்கு மாற்றுவதற்கான கணக்கீடு
15 பங்குகளை ஒறுப்பிழப்பு செய்ததற்கான தொகை = \(\frac {100}{20}\) x 15 = 75
கழிக்க: மறுவெளியீட்டு நட்டம் = 15
___
முதலினக் காப்பிற்கு மாற்ற வேண்டியது 60
___
பங்கு ஒறுப்பிழப்பு கணக்கில் உள்ள மீதமுள்ள தொகை (40-15) = ரூ. 25 இருப்புநிலைக் குறிப்பில் தோன்றும்.
4.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| பங்குமுதல் க/கு (150 × 10) | ப | 1,500 | |||
| பங்கு இறுதி அழைப்பு க/கு (150 × 4) | 600 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (150 × 6) | 900 | ||||
| (150 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (100 × 9) | ப | 900 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (100 × 1) | ப | 100 | |||
| பங்குமுதல் க/கு (100 × 10) | 1,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட 100 பங்குகள் ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 500 | |||
| முதலினக் காப்பு க/கு | 500 | ||||
| (மறுவெளியீட்டின் இலாபம் முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
குறிப்பு:
150 பங்குகளுக்கான ஒறுப்பிழப்புத் தொகை = ரூ.900
100 பங்குகளுக்கான ஒறுப்பிழப்புத் தொகை = \(\frac {900}{150}\) x 100 = ரூ.600
இலாபம் அல்லது நட்டம் = ஒறுப்பிழப்புத் தொகை – மறுவெளியீட்டுத் தள்ளுபடி
= 600 – 100
நிகர ஆதாயம் = ரூ. 500
5.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (200 × 10) | ப | 2,000 | |||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்பு க/கு (200 × 3) | 600 | ||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (200 × 7) | 1,400 | ||||
| (200 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (200 × 6) | ப | 1,200 | |||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (200 × 4) | ப | 800 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு (200 × 10) | 2,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1,400-800) | ப | 600 | |||
| முதலினக் காப்பு க/கு | 600 | ||||
| (பங்கு ஒறுப்பிழப்பு கணக்கு முதலினக் காப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards