12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் I 2019 -2020 ( 12th Standard Tamil Medium Biology Book Back and Creative Important Question All Chapter I 2019-2020 )
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
விந்து செல்லின் ________ பகுதி கருமுட்டையின் பிளவிப் பெருகலின் போது, முதல் பிரிவில் முக்கிய பங்காற்றுகிறது.
அண்மை சென்ட்ரியோல்
சேய்மை சென்ட்ரியோல்
அக்ரோசோம்
உட்கரு
2.
இரத்த வகுப்புகளின் பாரம்பரியத்தை விளக்கியவர்?
பெர்னஸ்டின்
பிஷர்
வீனர்
பெர்ட்ரம்
3.
இன உறுப்புகளின் வெளிப்பகுதி புடைப்புகள்________ நோயின் அறிகுறி
பிறப்புறுப்பு மருக்கள்
பிறப்புறுப்பு அக்கி
மேகப் புண்
AIDS
4.
| பகுதி-I | பகுதி-II | ||
|---|---|---|---|
| அ. | அர்ரீனோடோகி | i | சொனோபியா |
| ஆ. | தெலிடோகி | ii. | ரீடியா லார்வாக்கள் |
| இ | ஆம்ஃபிடோகி | iii. | தேனீக்கள் |
| ஈ. | இளம்உயிரி கன்னி இனப்பெருக்கம் | iv | ஏஃபிஸ் |
அ-ii,ஆ-iv,இ-iii,ஈ-i
அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii
அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i
அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii
5.
அமினோ அமிலம் கடத்து RNA வின் எந்த முனையில் இணைகிறது
5' முனை
3' முனை
எதிர்க்குறியீடு
D \(\psi \) C வளையம்
6.
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்
அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்
7.
டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது _____.
தையமின் என்ற நைட்ரஜன் காரத்தினைக் கொண்டிருத்தல்.
ஓரிழை உடைய சுருண்ட வடிவம்.
சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்
பீனைல் அலனைன் எனும் அமினோ அமிலத்தில் உள்ள ஒத்த வரிசையில் அமைந்த நியூக்ளியோடைடுகள்
8.
தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ்படலத்தின் அடிப்படை ______.
ஆலன்டாயிஸ்
ஆம்னியான்
கோரியான்
கரு உணவுப்பை
9.
பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
13- டிரைசோமி
18- டிரைசோமி
21- டிரைசோமி
மேற்கண்ட எதுவும் இல்லை
10.
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
உறுதிக் கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.
'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.
‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.
'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது
'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை
11.
ஏரியோலார் சுரப்பிகள் எங்குள்ளன? அவற்றின் முக்கியத்துவம் கூறு.
12.
கருவுறா முட்டை முழு உயிரியாக மாற முடியுமா?
13.
எவ்வகைப் பால்வினைத் தொற்றுநோய்களைக் குணப்படுத்த இயலாது?
14.
துண்டாதல் என்றால் என்ன?
15.
பொருளற்ற குறியீடு என்றால் என்ன?
16.
மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.
17.
அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

(தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)
18.
19.
வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
20.
எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?
21.
இயற்கையான கரு எங்கு பதிகிறது? பிற இடங்களில் அந்நிய பதிவைப் பற்றிக் கூறு.
22.
Zo-Zz வகை பால் நிர்ணயம் Zz -Zw பால் நிர்ணய முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
23.
24.
பாக்டீரியாவில் படியெடுத்தல் மொழிபெயர்தல் எங்கு நடைபெறுகிறது?
25.
கரு கண்காணிப்புக் கருவி பற்றி விவரி?
26.
கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
AAU, CGA, UAU மற்றும் GCA
27.
மனித விந்து செல் உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.
28.
வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.
29.
முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டி ஈனும் விலங்குகளின் சேய்களை விட பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.
30.
அக்ரோசம் வினையை விவரி.
31.
யூஜெனிக் பாரம்பரியம் பற்றி குறிப்பு வரைக.
32.
கருப்பை வாய்ப் புற்றுநோய் - விளக்குக.
33.
பலபிளவு முறை பற்றி விரிவாக விடையளி.
34.
DNA ரேகை அச்சிடல் செய்முறை படிகளைத் தருக.
35.
அ) கீழ்க்கண்ட வரைபடத்தைக் கண்டறிக
ஆ) இவ்வரைபடத்தை ‘இரட்டிப்பாதல் பிளவாகக்‘ கொண்டு வரைக. அதன் பாகங்களைக் குறிக்கவும்.
இ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் முறைக்குத் தேவைப்படும் ஆற்றலின் மூலம் யாது? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் நொதிகள் யாவை?
ஈ) இரண்டு வார்ப்புருவ இழைகளின் துருவத் தன்மை அடிப்படையில் புரதச் சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பிடுக
36.
பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.
37.
முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.
38.
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.
39.
பழப்பூச்சியை (டிரோசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?
40.
கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும் இழப்பு மீட்டல்
41.
கரு உறைநிலைக் குளிரூட்டல்
42.
13 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை ________
43.
நாடாப்புழுவின் இரண்டாம் நிலை விருந்தோம்பி _______ ஆகும்.
44.
அலேக் ஜெப்ரி உருவாக்கியது புதிய தொழில்நுட்ப முறை _________
45.
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன
46.
அ) காட்மியம் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும்
ஆ) போதைப்பொருள் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும்
இ) இனச்சொல் சுரப்பி பாதிப்பு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும்
ஈ) தூக்கமின்மை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்
47.
a) தலாசிமியா விற்கான குரோமோசோம் 16,11 ல் அமைந்துள்ளது.
b) பினைல் கீட்டோனூரியா விற்கான ஜீன் 12ல் உள்ளது.
c) அல்பீனிசம் டைரோசினேஸ் குறைபாட்டினால் ஏற்படுகிறது.
d) ஹன்டிங்டன் கோரியா ஒரு ஓங்கு பால் குரோமோசோம் கெடுதி ஜீனால் ஏற்படுகிறது.
48.
அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல்
ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபிஸ்
49.
1. முதல் மரபணுப் பொருள் RNA ஆக இருக்கக்கூடும்.
2. DNA மற்றும் ஹிஸ்டோன் புரதங்களின் ஒட்டு மொத்த மின் ஆற்றல் - ஜீரோ
3. படியெடுத்தலின் துவக்கத்திற்கு வினையூக்கியாக இருப்பது பாலிமரேஸ்
4 ரிபோசோம் தூது RNA வினால் தூண்டப்பட குறிப்பிட்ட அடர்வு Mg ++ தேவை.
50.
a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின்
b. பினைல் கீட்டோனூரியா - டைரோசின்
c.அல்பீனிசம் - மெலனின்
d.ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
51.
அ.முகிழ்த்தல்
ஆ.ஸ்போர்கள் உருவாக்கம்
இ.வேறுபட்ட செல் சேர்க்கை
ஈ.அபோலைசிஸ்
52.
மரபுக்குறியீடுடன் தொடர்பற்றது
அ) சிதைவு குறியீடுகள்
ஆ) குழப்பமானவை
இ) எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது
ஈ) தனித்துவம் வாய்ந்தது
53.
அ) கேன்டிடியாசிஸ் - பூஞ்சை
ஆ) டிரைகோமோனியாசிஸ் - வைரஸ்
இ) பிறப்புறுப்பு மருக்கள் - வைரஸ்
ஈ) கிளாமிடியாசிஸ் - பாக்டீரியா
54.
| பகுதி -I | பகுதி-II | ||
| அ | அக முகிழ்த்தல் | a | பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவாகும். |
| ஆ | மீண்டும் உருவாக்குதல் | b | வெட்டுண்ட பகுதி முழுமையாக உருவாகும் |
| இ | புற முகிழ்த்தல் | c | பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவாகும். |
| ஈ | சீராக்கல் இழப்பு மீட்டல் | d . | சேதமுற்ற திசுக்கள் சரி செய்யப்படும் |
55.
அ) ஒரே முழு பாலிபெப்டைடுக்கு குறியீடாகும் DNA - வின் பகுதி - சிஸ்ட்ரான்
ஆ) தொடர்புடைய பணியைச் செய்யும் ஒரு கூட்டமான ஜீன்கள் - ஒபரான்
இ) ஒன்றிற்கு மேற்பட்ட பாலிபெப்டைடுகளுக்கு குறியீடாகும் பாக்டீரியா மற்றும் வைரஸின் ஜென்கள் - பாலிசிஸ்ட்ரானிக் ஜீன்
(ஈ) மிகப்பெரிய மனித ஜீன் - டிஸ்டிராபின்
56.
1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண்
2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண்
3. டவுண் சிண்ட்ரோம் - டிரைசோமி 23
4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
| நிகழ்வு | நடைபெறும் இடம் | |
|---|---|---|
| அ | படியெடுத்தல் | நியுக்ளியோலஸில் |
| ஆ | நகலெடுத்தல் | சைட்டோபிளாசம் |
| இ | மொழிபெயர்த்தல் | ரிபோசோம்கள் |
| ஈ | தோற்ற மாற்றமடைதல் | புரதம் |
58.
ஹெலிகேஸ்
59.
உறுதிக்கூற்று : செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் தூண்டுதல் மூலம் நடைபெறுகிறது.
காரணம் :அவை உயிரி மூலம் தூண்டப்படுகிறது.
அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு
ஈ.' 'உ' தவறு ஆனால் 'கா' சரி
60.
உறுதிப்படுத்துதல் A: கடத்து RNA, RNA க்களில் மிகச் சிறிய மூலக்கூறாகும்.
காரணம் R: கடத்து RNA க்கள் அமினோ அமிலங்களை சைட்டோபிளாசத்திலிருந்து புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்கிறது.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
இ) 'A' சரியானது 'R' தவறானது
ஈ) 'A' மற்றும் 'R' தவறானது
61.
அ.பலசெல் உயிரிகள் சிலவற்றில் ஸ்ட்ரோபிலா ஆக்கம் எனும் சிறப்பு வகை,நீள்மட்ட இருசமபிளவு முறை ஆகும்.
ஆ. வோர்ட்டிசெல்லாவில் பன்மடி பகுப்பு நடைபெறுகிறது.
இ.பாலிலி இனப்பெருக்கம் மூலம் உருவாகும் இளம் உயிரியல் மரபியல் வேறுபாடுகள் காணப்படும்.
ஈ.இணைவு முறை இனப்பெருக்கம் ஒரு பாலிலி இனப்பெருக்க வகையாகும்.
62.
பின்வருவனவற்றுள் எது AUG ஐப் பொருத்த வரையில் சரியான கூற்று?
அ) இது மெத்தியோனின் குறியீடாகும்.
ஆ) இது துவக்கக் குறியீடாகும்
இ) இது புரோகேரியாட்டில் மெத்தியோனின் குறியீடாகும்.
ஈ) இவையனைத்தும்
63.
TMV வைரஸ், பாக்டீரியோஃபேஜ் θβ ரெட்ரோ வைரஸ் ஆகியவை RNA வை மரபணுப் பொருளாகப் பயன்படுத்துகின்றன
1.
(a)
அண்மை சென்ட்ரியோல்
2.
(a)
பெர்னஸ்டின்
3.
(b)
பிறப்புறுப்பு அக்கி
4.
(d)
அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii
5.
(b)
3' முனை
6.
(b)
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
7.
(c)
சர்க்கரை, நைட்ரஜன் காரங்கள் மற்றும் பாஸ்பேட் ஆகியவை உடைய நியூக்ளியோடைடுகள்
8.
(a)
ஆலன்டாயிஸ்
9.
(a)
13- டிரைசோமி
10.
(d)
'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை
11.
1. பால் காம்பைச் சுற்றியுள்ள, நிறமிகளாலான வட்ட வடிவப் பரப்பு.
2. இதிலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகள், இங்கு தோலில் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன.
12.
1. தேனீக்களில் கருவுறாத அண்டம் ஆண் தேனீக்களாக வளர்கின்றன. இது கன்னி இனப்பெருக்க முறை எனப்படும்.
2. எனவே ஆண் தேனீக்களில் பாதியளவே குரோமோசோம்கள் உள்ளன.இதுவே ஒற்றைமய இரட்டைமய பால் நிர்ணயம் எனப்படும்.
13.
வைரஸ் பால்வினைத் தொற்றுக்களைக் குணப்படுத்த இயலாது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளால் நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.
14.
பெற்றோர் உடலானது பல துண்டுகளாகப் பிரிகின்றது. பிரிந்த ஒவ்வொரு துண்டும் புதிய உயிரிகளாக வளரும் திறனுடையது.
15.
16.
1. மரபணுக்குறியீடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
2. இது பொதுவான எல்லா உயிரின மண்டலங்களுக்கு உட்கரு அமிலங்களையும் அதே முக்குரியங்களையும் பயன்படுத்தியே அமினோ அமிலங்களிலிருந்து புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
3. தூது ஆர்.என்.ஏவில் உள்ள UUU எல்லா உயிரினங்களிலும் பினைல் அலனைன் என்னும் அமினோ அமிலத்திற்கானது.
4. விதிவிலக்குகள் (மிகச் சில)
i. எ.கா. புரோகேரியோட்டுகள், மைட்டோகாண்டிரியா, குளோரோபிளாஸ்ட் ஆகியவற்றின் மரபுத் தொகுதி
ii. பொதுவாக வேறுபாடுகள் மிகக் குறைவு ஒற்றுமைகளே அதிகம் உள்ளன.
iii. இது போன்ற மரபணுக்குறியீடுகளின் எல்லா சிறப்புப் பண்புகள் பொதுவாக எல்லா உயிரினங்களிலும் பொதுவானது.
5. எனவே மரபணு குறியீடு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
17.
A. தடுப்பு முறை
B. பாலூட்டும் கால மாதவிடாயின்மை
C. கருக்குழல் தடை
D. CuT
18.
19.
| ஒத்தயினச்செல் பால் நிர்ணயம் | வேறுபட்ட இனச்செல் பால் நிர்ணயம் | ||
|---|---|---|---|
| 1. | ஒத்த இனச்செல்களை கொண்ட பெண் உயிரிகள் ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றன. | 1. | வேறுபட்ட இனச்செல்களை கொண்ட ஆண் உயிரிகள் இரண்டு வகையான விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன. |
| 2. | (உ.ம்) மனிதர்களில் பெண் ஒத்த இனச்செல்களை உருவாக்குபவை X குரோமோசோம் மட்டும் | 2. | மனிதர்களில் ஆண் இரண்டு விதமான இனச் செல்களை உற்பத்தி செய்கின்றன.X மற்றும் Y குரோமோசோம் கொண்ட இனச்செல்கள் |
20.
(i) அமீபா பிளவுறுத்தல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
(ii) பிளவுறுதல் என்பது செல் பிரிதல்.
21.
1. இயற்கையாக கருப்பையின் உட்சுவரில் கரு பதித்தல் நடைபெறும்.
2. கருவுற்ற அண்டம், கருப்பைக்கு வெளியே பதிந்து வளரும் நிகழ்வு ;'இடம் மாறிய கர்ப்பம் ' எனப்படும்.
3. இது 95% அண்ட நாளங்களுக்குள் நடைபெறும்.
4. அண்ட நாளங்களுக்குள் கரு வளர்ந்தால்,உட்புற இரத்தக் கசிவு, நோய்த்தொற்று ஏற்படும் அண்ட நாளம் வெடித்து இறப்பும் ஏற்படலாம்.
22.
| Zo -Zz வகை பால் நிர்ணயம் | Zz -Zw வகை | ||
| 1. | வேறுபட்ட இனச்செல்களை உருவாக்கும் பெண் உயிரிகள் இரண்டு விதமான முட்டைகளை இடுகின்றன.Z குரோமோசோம் கொண்டு ஒன்றும் Z குரோமோசோம் இல்லாமலும் முட்டைகள் உருவாகின்றன.(Zo) | வேறுபட்ட இனச்செல் வகையான பெண் உயிரிகள் Z குரோமோசோம்களை கொண்டும் W குரோமோசோம்களை கொண்ட முட்டைகளை உருவாகின்றன. | |
| 2. | ஆண்கள் ஒத்த இனச்செல் பண்புகளை உடையவர்களாய் ஒரே விதமான முட்டைகளை உருவாகின்றன . | ஆண்கள் ஒத்த இனச்செல் பண்புகளை உடையவர்களாய் ஒரே விதமான Zz விந்து செல்களை உருவாக்குகின்றன. | |
| 3. | அந்திப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, வீட்டு கோழிகளில் நடைபெறுகிறது. | ஜிப்சி அந்திப்பூச்சி சில மீன்கள் ஊர்வன பறவைகளில் காணப்படுகின்றன. | |
23.
24.
(i) பாக்டீரியாவில் தெளிவான உட்கரு காணப்படாததால் தனித்தனியாக இரண்டு படிகளும் நடைபெற இட மில்லாததால் இரண்டும் ஒன்றாகவே செல்லில் நடைபெறுகிறது.
(ii) படியெடுத்தல் முடியுமுன்னே மொழிபெயர்த்தல் துவங்குகிறது.
25.
26.
27.
28.

இவ்வகையான பால் நிர்ணயித்தலில் ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்புகளை (ஹெடிரோகேமிட்டிக்) உடையவர்.
XX -XO வகை
(i) எ.கா.பூச்சிகள்,கரப்பான்பூச்சி,வெட்டுக்கிளி.
(ii) ஆண்கள் ஹெட்டிரோகேமிட்டிக் வகையினர் ஒரு X குரோமோசோம் உடையவர்.
(iii) இரண்டு வகையான விந்துகளை உற்பத்தி செய்கின்றன.
(iv)ஒன்று X குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இல்லை.
(v) சேய்களின் பால் அவைகளின் விந்துகள் எந்த அண்டத்துடன் இணைகிறதோ அதைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. X விந்து அல்லது Y விந்து.
XX-XY வகை(லைகஸ் வகை )
(i) உ.ம். மனிதன் மற்றும் பழப்பூச்சி
(ii) ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்பினை உடையவர்.
(iii) அவர்கள் இரண்டு விதமான விந்துக்களை சில 'X' குரோமோசோம் கொண்டும் உள்ளன.
(iv) கருவின் பாலானது அது எவ்வகை விந்துவால் கருவுறுதல் அடைகிறது என்பதை பொறுத்தது.
(v) 'X' குரோமோசோம் உடைய விந்துக்கள் பெண் உயிரியையும் 'Y' குரோமோசோம் உடைய விந்துக்கள் ஆண் உயிரியையும் உருவாக்கும்.
29.
(i) குட்டி ஈனும் உயிரிகளின் இளம் உயிர் தாயின் கருப்பையில் வளர்கிறது.
(ii) முட்டையிடும் உயிரிகள் முட்டையை வெளியே இடுகிறது.
(iii) அந்த முட்டையின் வளர்ச்சியை, வெளிப்புறச் சுற்று சூழலை கட்டுப்படுத்துகிறது.
(iv) எனவே முட்டையிடும் விலங்குகளின் சேய்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
30.
1. விந்து செல், அண்டத்தினுள் நுழைய, கரோனா, ரேடியேட்டாவின், பல அடுக்கு கிரானுலேசா செல்களைத் துளைக்க வேண்டும்.
2. விந்து செல்லின் அக்ரோசம் சவ்வு சிதைவுறுகிறது.
3. இதனால் ஹையாலுரோனிடேஸ் என்ற புரதச் செரிப்பு நொதி வெளிப்படுகின்றது.
4. கரோனோ ரேடியேட்டா, சோனா பெலூசிடா போன்றவை சிதைக்கின்றன. எனவே விந்து செல் அண்டகத்தினுள் நுழைகின்றது.இது 'அக்ரோசம் வினை எனப்படும்.
31.
யூஜெனிக் முறைமை:
1. யூஜெனிக்ஸ்(கிரேக்க மொழி-நல்ல பிறப்பு )என்பது மனித குலத்தின் பாரம்பரிய பண்புகளை வளப்படுத்துவதற்கான முறையாகும்.
2.சிறப்பு தன்மையற்ற பண்புகளை நீக்கி நல்ல சிறப்பான பண்புகளை சந்ததியில் அதிகப்படுத்துவதே இம்முறையின் நோக்கம் ஆகும்.
எதிர்மறை யூஜெனிக்ஸ் முறைமை:
1. மரபு ரீதியான குறைபாடுடைய உயிரிகளை குழந்தை பெறுவதில் தடை செய்தல்.
2. பாலியல் கல்வி
3. குடும்ப கட்டுப்பாட்டு முறைகள்
4. தானாகவே முன்வந்து கருத்தடை செய்தல், கருச்சிதைவு.
5. தானாகவே ஒத்துழைப்பவர்களுக்கு சிறப்பு ஊக்கம் அளித்தல் .
நேர்மறை யூஜெனிக்ஸ் முறைமை :
1. அதிக குழந்தைகள் பெறுவதற்கு ஊக்கப்படுத்துதல்
2. சிறப்பு பண்புகளை வருவித்தல்
யூஜெனிக்ஸின் நவீன முறைகள் :
1. செயற்கை முறை கருத்தரிப்பு - கொடையாளர்
2. கருமுட்டை கொடையாளர்
3. ஜீன் சிகிச்சை
4. குளோனிங்
5. மரபு பொறியியல்
32.
1. காரணி - மனித பாபில்லோமா வைரஸ்
2. அறிகுறிகள் : இடுப்பு வலி, கலவிக்கால்வாய் திரவமிகைப்போக்கு, இரத்தப்போக்கு
3. காரணிகள் - 1) பலருடன் பாலியல் தொடர்பு ,2) நீண்ட நாள் கருத்தடை மாத்திரைப் பயன்பாடு
4. கண்டறிதல் : HPV ஆய்வு, பாப் பூச்சு சோதனை, எக்ஸ்ரே, CT, MRI,PET ஸ்கேன்
5. சிகிச்சை : கதிர்வீச்சு சிகிச்சை, அறுவைச் சிகிச்சை
6. தடுப்பு முறைகள்
- 30 வயதிற்கு மேல் பெண்கள் பரிசோதனை
- வாழ்க்கை முறை மாற்றம்
- சத்தான உணவு
- புகையிலைப் பயன்பாடு தவிர்ப்பு
- இளவயதுத் திருமணம் தவிர்த்தல்
- ஓரிணை இனப்பெருக்கம்
- சீரான உடற்பயிற்சி
33.
1. சாதகமற்ற சூழலில் இனப்பெருக்கம் செய்வதற்காகத் சில உயிரிகளில் பல பிளவுமுறை நடைபெறுகிறது.
2. உட்கரு தொடர்ந்து பிரிவடைந்து பல உட்கருக்களாக உருவாகின்றன.
3. பல பிளவு முறையில் சமமான செல் பிரிதலினால் ஒரு உயிரியிலிருந்து நான்கு அல்லது பல சேய் உயிரிகள் தோன்றுகின்றன.
4. மேலும் பிளவுறுதல் நிகழ்வு முழுமையடையும் வரை சேய் உயிரிகள் பிரிவதில்லை.
5. இதற்கு பன்மடிப் பகுப்பு என்று பெயர்.
6. பிளாஸ்மோடியத்தில் சைஷாண்ட் மற்றும் உசைட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுகிறது.
7. சைஷான்ட் நிலையில் மீரோசைட்டுகள் உருவாகின்றன.
8. உசைட் நிலையில் ஸ்போரோசோயிட்டுகள் உருவாகின்றன.
9. அமீபாக்கள் சாதகமற்ற சூழலில் உறையாக்கம் மூலமும் இனப்பெருக்கம் செய்கிறது.

34.

துணைக்கோள் DNAக்கள்
1. இவை எந்தப்புரதத்திலும் குறியீடு செய்வதில்லை
2. இவையே DNA ரேகை அச்சிடலில் பயன்படுபவை
3. இவற்றில் அதிகபட்ச பல்லுருவத்தன்மை காணப்படுகிறது.
இதனாலே இவை DNA ரேகை அச்சிடலில் பயன்படுகிறது.
35.
அ) இரட்டிப்பாதல் - இரட்டிப்பாதல் பிளவு காணப்படும்.
ஆ)
A - வார்ப்புரு இழை
B - இரட்டிப்பாதல் பிளவு
C - வழிகாட்டு இழை
D - பின்தங்கு இழை
இ) டி - ஆக்ஸி நியூக்ளியோடைடு டிரைபாஸ்பேட் பாலிமெரைசேஷன் நிகழ்வுக்கான ஆற்றலைத் தருவதோடு அந்த வினைக்கான தளப்பொருளாகவும் உள்ளது.
ஈ) DNA - இரு இழைகளாலானது. ஒன்றுக்கொன்று ஒத்த தன்மை கொண்ட எதிரெதிர் திசை அமைப்பைக் கொண்டால்
அ) ஒன்று 5' ⟶ 3' என்றும் மற்றது 3' ⟶ 5' திசை நோக்கி காணப்படும்.
ஆ) இதனாலே புரதம் தயாரித்தலின் படியெடுத்தலில் இரு இழைகளும் பங்கு பெற இயலவில்லை அதற்கு இரு காரணங்கள் உள்ளன.
1. இரு இழைகளுமே வார்ப்புரு செயலாற்றுமேயானால், RNA விற்கான குறியீடு இரண்டிலும் வெவ்வேறு வரிசையில் இருக்கும்.
இதனால் புரதத்தின் அமினோ அமில வரிசையிலும் பாதிப்பு ஏற்படும் - இதனால் DNA வின் ஒரு பகுதியிலிருந்து இரு வேறு புரதங்கள் உற்பத்தியாகி மரபுத்தகவல் பரிமாற்ற நிகழ் முறையில் சிக்கல் ஏற்படும்.
2. இரு வித RNA மூலக்கூறுகள் ஒரே நேரத்தில் உற்பத்தியாகுமேயானால் RNA வின் இரு இழைகளும் ஒன்றுக்கொன்று நிகரொத்ததாக இருக்கும். இது RNA ⟶ புரதமாக மொழிபெயர்க்கப்படுவதைத் தடுக்கிறது.
36.
(i) இது கருவின் குறைபாடுகளை, கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
(ii) கருவின் குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
(iii) வளர்கருவின் பால் தன்மை அறியலாம்.
(iv) பால் தெரிந்தால் பெண்கருக்கொலை செய்ய வாய்ப்புள்ளது.
(v) எனவே இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
37.
| நோயின் பெயர் | நோய்க்காரணி | அறிகுறிகள் | நோய் வெளிப்படும் காலம் |
| பாக்டீரிய பால்வினைத் தொற்று (Bacterial STI) | |||
| கொனோரியா அல்லது வெட்டை நோய் (Gonorrhoea) |
நைசீரியா கொனோரியா (Neisseria gonorrhoeae) |
(i) சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு (ii) பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு |
2-5 நாட்கள் |
| கிரந்தி அல்லது மேகப்புண் (Syphilis) | டிரிபோனிமா பாலிடம் (Treponema pallidum) |
(i) முதல்-நிலை - பாலுறுப்புகளின் புறப்பகுதியில் வலியற்ற புண்கள். (ii) இரண்டாம் நிலை - தோல் புண்கள், சொறி, தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம் காய்ச்சல் மற்றும் முடி உதிர்வு |
10-90 நாட்கள் |
| (iii)மூன்றாம் நிலை - பாலுறுப்புகளின் மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப்பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை மனநல பாதிப்பு, பார்வைகோளாறு இதயப்பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன. | |||
| கிளாமிடியாசிஸ் (Chalmy diasis) |
கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் (Chlamydia trachomatis) |
கண் இமை அரிப்பு, சிறுநீரக இனப்பெருக்கப் பாதை, சுவாசப்பாதை மற்றும் கண்ணின் கன்ஜங்க்டிவா ஆகியவற்றில் தூண் எப்பிதீலிய செல்கள் பாதிப்பு | 2-3 வாரங்கள் அல்லது 6 வாரங்கள் வரை |
| லிம்போகிரானுலோமா வெனரியம் (Lymphogranuloma venereum) | கிளாமிடியா ட்ராகோமேடிஸ் | பிறப்புறுப்பின் தோல் அல்லது கோழைப்படல பாதிப்பு, சிறுநீர் வடிகுழாய் அழற்சி, உள்கருப்பை வாய் அழற்சி, வாய் அழற்சி, ஆங்காங்கே கேடு தரும் புண்கள், இனப்பெருக்க உறுப்பு யானைக்கால் நோய். | |
| வைரஸ் பால்வினைத் தொற்று(Viral STI) | |||
| பிறப்புறுப்பு அக்கி (Genital herpes) |
ஹெர்பஸ் சிம்ப்லெக்ஸ்(Herpes simplex virus) | (i) பெண்களின் பெண் கிரிவெளியிதழ், கலவிக்கால்வாய், சிறுநீர் வடிகுழாய் ஆகியனவற்றைச் சுற்றி புண்கள் ஆண்களில் ஆண்குறியைச் சுற்றி புண்கள். (ii) சிறுநீர் கழிக்கும் போது வலி (iii)மாதவிடாய் சுழற்சிகளுக்கிடையே இரத்தப்போக்கு (iv) தொடை இடக்குகளின் நிணநீர் முடிச்சுகளில் வீக்கம். |
2-21 நாட்கள் (சராசரி 6 நாட்கள்) |
| பிறப்புறுப்பு மருக்கள் (Genital warts) |
மனித பாபிலோமோ வைரஸ் (HPV)(Human papilloma virus) | (i) இன உறுப்புகளின் வெளிப்பகுதி, கருப்பைவாய், மலவாயைச் சுற்றிய பகுதிகளில் கடினமான புடைப்புகள் (கட்டிகள்) | 1-8 மாதங்கள் |
| கல்லீரல் அழற்சி (Genital warts) | ஹிபாடிடிஸ் வைரஸ்(HBV) (Hepatitis-B virus) | (i) சோர்வு, மஞ்சள் காமாலை, காய்ச்சல் தோல் தடிப்பு,வயிற்றுவலி. (ii) கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு |
30-80 மாதங்கள் |
| எய்ட்ஸ்(AIDS) | மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ்(HIV) | (i) நிணநீர், முடிச்சுகள் பெரிதாதல்,நீண்டநாள், காய்ச்சல்,நீண்டநாள் வயிற்றுப்போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல். | 2-6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் |
| பூஞ்சை பால்வினைத் தொற்று(Fungal STI) | |||
| கேன்டிடியாசிஸ் (Candidiasis) |
கேன்டிடா அல்பிகன்ஸ்(Candida albicans) | (i) வாய், தொண்டை, குடற்பாதை மற்றும் கலவிக்கால்வாய் ஆகிய பகுதிகளில் தாக்கம் (ii) கலவிக்கால்வாயில் அரிப்பு (அ) புண்கள் (iii) கலவிக்கால்வாய் திரவம் மிகைப்போக்கு (iv) வலியுடன் சிறுநீர் கழித்தல் |
|
| புரோட்டோசோவா பால்வினைத் தொற்று (Protozoan STI): | |||
| டிரைக்கோமணியாசிஸ் (Trichomoniasis) |
டிரைகோமோனாஸ் வாஜினாலிஸ் (Trichomonas vaginalis) | (i) கலவிக்கால்வாய் அழற்சி, பச்சை மஞ்சள் கலந்த கலவிக் கால்வாய் திரவ வெளிப்பாடு, அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு, சிறுநீர் வடிகுழல் அழற்சி, விந்தக மேல் சுருள் நள அழற்சி, புரோஸ்டேட் சுரப்பி அழற்சி | 4-28 நாட்கள் |
38.
மாதவிடாய் சுழற்சி :
பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை கர்ப்ப காலம் தவிர, சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி(அண்டகச் சுழற்சி) நிகழும்.
1. மாதவிடாய் நிலை (3-5 நாட்கள்) (Menstrual Phase) :
(i) புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறைகிறது.
(ii) கருப்பைச் சுவர் எண்டோமெட்ரியம், அதன் இரத்தக் குழல்கள் சிதைந்து,மாதவிடாய் ஒழுக்கு வெளியாகும்.
(iii) அண்டம் கருவுறாவிட்டால் மாதவிடாய் ஏற்படும்.
(iv) மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது,கருவுற்று இருப்பதன் அறிகுறி.
(v) மன அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள், இரத்த சோகை போன்றவற்றால் மாதவிடாய் ஏற்படாது.
2. நுண்பை நிலை(பெருகு நிலை): (Follicular Phase,Proliferative Phase)
(i) மாதவிடாயின் 5 ஆம் நாளிலிருந்து, அண்டம் விடுபடும் வரை உள்ள காலகட்டம்.
(ii) FSH,LH ஹார்மோன்களின் சுரப்பு சீராக அதிகரிக்கிறது.
(iii) முதல்நிலை நுண்பை செல்கள், முதிர்ந்த கிராபியன் நுண்பை செல்களாக மாறுகின்றன.
(iv) எண்டோமெட்ரியம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.
(v) நுண்பை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அவற்றினிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கின்றது.
3. அண்ட செல் விடுபடும் நிலை (Ovulatory Phase)
(i) LH,FSH ஹார்மோன்கள் உச்ச நிலையை அடைகின்றன.
(ii) LH எழுச்சியினால் முதிர்ந்த கிராபியன் நுண்பை உடைகிறது.
(iii) இரண்டாம் நிலை அண்ட செல், அண்டகச் சுவர் வழியாக வயிற்றுக்குழியை அடைகிறது. இது அண்டம் விடுபடுதல் எனப்படும்.
4. லூட்டியல் அல்லது சுரப்பு நிலை(Luteal (or) Secretory Phase)
(i) எஞ்சியுள்ள கிராபியன் ஃபாலிக்கிள்,கார்ப்பஸ் லூட்டியம் எனும் இடைக்கால நாளமில்லா சுரப்பியாகும்.
(ii) கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. இது கருமுட்டை புதிய ஏற்ற சூழலை உருவாக்கும்.
(iii) கருப்பை உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த, திரவத்தை கருவிற்கு உற்பத்தி செய்கிறது. இது சுரப்பு நிலை.
(iv) கருவுறுதல் நிகழாவிடில், கார்பஸ் லூட்டியம் சிதைந்து, கார்பஸ் அல்பிகன்ஸ் எனும் வடுவாகிறது.
39.
(i) C.B. பிரிட்ஜஸ் என்பவர் முதன் முதலில் பழப்பூச்சிகளில் மரபணு சமநிலை மூலம் பால் நிர்ணயிக்கப்படுவதைக் கண்டறிந்தார்.
(ii) பெண் தன்மைக்கான மரபணுக்களும் உடல் குரோமோசோம்களுக்கும் இடையேயான மரபுச் சமநிலையை இப்பூச்சிகளில் பாலினத்தை நிர்ணயிக்கிறது.
(iii) ஒவ்வொரு X குரோமோசோமிலும் பெண் தன்மைக்கான மரபணுக்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு 1.5.
(iii) ஆண் தன்மைக்கான மரபணுக்கள் உடல் குரோமோசோம்களில் உள்ளன.அவற்றின் மதிப்பு 0.
(iv) இயல்பான ஆண் A A xy ஆகும். எனவே ஆண் பெண் நிர்ணய விகிதம் 2:3 (AA xx =2.3) என்ற விகிதத்தில் உள்ளது. இங்கே மரபணு சமநிலை பெண் உயிரிக்கு சாதகமாக அமைகிறது.
40.
ஆ)
| இரு சமப்பிளவு முறை அமீபாவில் | பல பிளவுமுறை பிளாஸ்மோடியத்தில் |
|---|---|
| இது ஒரு எளிய முறை | பிளாஸ்மோடியத்தில் சைசான்ட் மற்றும் ஊசைட் நிலையில் பல பிளவுமுறை நடைபெறுகிறது. |
| சுருங்கும் நுண்குமிழ் செயலிழந்து மறைந்து விடும். | சைசான்ட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுதலுக்கு சைசோகனி என்று பெயர். |
| உட்கரு மணி மறைந்துவிடும். | இதன் சேய் உயிரிகள் மெரோசோயிட்டுகள் ஆகும். |
| உட்கருவானது மறைமுகப் பிரிவு முறையில் பிளவுபடும். | ஊசைட் நிலையில் நடைபெறும் பல பிளவு முறை ஸ்போரோகனி என்றும் சேய் உயிரிகள் ஸ்போரோசோயிட்டுகள் ஆகும். |
| செல்லின் நடுவில் சுருக்கம் ஏற்பட்டு சைட்டோபிளாசம் பிரியும். |
ஆ)
| பல்லி இழப்பு மீட்டல் | பிளனேரியாவில் இழப்பு மீட்டல் | ||
|---|---|---|---|
| 1. | இது மீண்டும் உருவாக்குதல் முறையாகும் | 1. | இது சீராக்கல் முறையாகும். |
| 2. | வெட்டுண்ட வாலை மீண்டும் பெறுதல். | 2. | உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன. |
41.
( )
கருமுட்டையை அண்டநாளத்தினுள் செலுத்துதல்
42.
( )
பட்டாவ் சிண்ட்ரோம்
43.
( )
பன்றி
44.
( )
DNA ரேகை அச்சிடல்
45.
( )
mRNA, tRNA
46.
தூக்கமின்மை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்
47.
ஹன்டிங்டன் கோரியா ஒரு ஓங்கு பால் குரோமோசோம் கெடுதி ஜீனால் ஏற்படுகிறது
48.
நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
49.
3. படியெடுத்தலின் துவக்கத்திற்கு வினையூக்கியாக இருப்பது பாலிமரேஸ்
50.
ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
51.
வேறுபட்ட செல் சேர்க்கை
52.
ஈ) தனித்துவம் வாய்ந்தது
53.
டிரைகோமோனியாசிஸ் - வைரஸ்
54.
அக முகிழ்த்தல் - பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவாகும்.
55.
இ) ஒன்றிற்கு மேற்பட்ட பாலிபெப்டைடுகளுக்கு குறியீடாகும் பாக்டீரியா மற்றும் வைரஸின் ஜென்கள் - பாலிசிஸ்ட்ரானிக் ஜீன்
56.
பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
இ) மொழி பெயர்த்தல் - ரிபோசோம்கள்
58.
DNA வின் சுருள் நீக்குகிறது
59.
'உ' சரி ஆனால் 'கா' தவறு
60.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
61.
( )
வோர்ட்டிசெல்லாவில் பன்மடி பகுப்பு நடைபெறுகிறது.
62.
( )
ஈ) இவையனைத்தும்
63.
(a)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards