12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II 2020 ( 12th Standard Tamil Medium Biology Book Back and Creative Important Question II 2020 )
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இடம் மாறிய கர்ப்பத்தில் 95%_______ ல் நடைபெறும்.
அண்டகம்
அண்ட நாளம்
கருப்பை
கருப்பை முகப்பு
2.
அரிதான இரத்த வகை
A
B
AB
O
3.
பாக்டீரியாவினால் உண்டாகும் நோயல்ல
டிரைகோமோனியாசிஸ்
மேகப்புண்
வெட்டை நோய்
கிளாமிடியாசிஸ்
4.
| பகுதி-I | பகுதி-II | ||
|---|---|---|---|
| அ. | அர்ரீனோடோகி | i | சொனோபியா |
| ஆ. | தெலிடோகி | ii. | ரீடியா லார்வாக்கள் |
| இ | ஆம்ஃபிடோகி | iii. | தேனீக்கள் |
| ஈ. | இளம்உயிரி கன்னி இனப்பெருக்கம் | iv | ஏஃபிஸ் |
அ-ii,ஆ-iv,இ-iii,ஈ-i
அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii
அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i
அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii
5.
RNA பாலிமெரேஸ் படியெடுப்பது
ஊக்குவிக்கும் மற்றும் அமைப்பு மரபணு
ஊக்குவிக்கும் மற்றும் முடிவுறுப்பகுதி
அமைப்பு மரபணு மற்றும் முடிவுறும் பகுதி
அமைப்பு மரபணு மட்டும்
6.
7.
தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?
டி.என்.ஏ மூலக்கூறின் 5 முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.
டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.
8.
முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.
விந்தக நுண் குழல்கள்
விந்து நாளம்
விந்தகமேல் சுருள்குழல்
விந்துப்பை
9.
ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது.
பறவை மற்றும் சில ஊர்வனவற்றில் காணப்படுகிறது
பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளனர்.
ஆண்கள் ஒத்தயினச்செல்லை உற்பத்தி செய்கின்றனர்.
இவை ஜிப்சி அந்தி பூச்சியில் காணப்படுகின்றன.
10.
எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
அர்ரீனோடோக்கி
தெலிடோக்கி
ஆம்ஃபிடோக்கி
'அ' மற்றும் 'இ' இரண்டும்
11.
ஆண்ட்ரோஜன் இணைப்புப் புரதங்கள் பற்றிக் கூறு.
12.
'X ' சார்ந்த ஜீன் பாரம்பரியத்திற்கு உதாரணம் தருக.
13.
இனப்பெருக்க நலன் என்றால் என்ன?
14.
கீழ்கண்டவற்றை வேறுபடுத்துக.
15.
DNA ஹைட்ரோ - கேட்டலிட்டிக் மற்றும் ஆட்டோ - கேட்டலிட்டிக் தன்மையுடையது விளக்குக.
16.
மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டுவரும் இரண்டு வழிகளைக் கூறுக.
17.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
18.
மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?
19.
20.
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.
21.
இயல்பான குழந்தைப் பிறப்பு நடைபெற இயலாதபோது, தீர்வு என்ன?
22.
Zo-Zz வகை பால் நிர்ணயம் Zz -Zw பால் நிர்ணய முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
23.
மருத்துவ ரீதியான கருக்கலைப்பின் நன்மைகள்,தீமைகள் கூறு.
24.
அமீபாக்கள் சாதகமற்ற சூழ்நிலைகளில் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன?
25.
UTR (அ) மொழி பெயர்க்கப்படாத பகுதிகள் என்றால் என்ன?
26.
வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்ததன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்?
27.
முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக
28.
அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி
29.
இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?
30.
இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை. நியாயப்படுத்து.
31.
விந்து செல் உருவாக்கத்தில் ஹார்மோன்களின் பங்கு எது?
32.
குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
33.
மலட்டுத்தன்மைக்கான பிற காரணங்கள் கூறு.
34.
உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகளை விவரி.
35.
DNA ரேகை அச்சிடல் செய்முறை படிகளைத் தருக.
36.
அ) கீழ்க்கண்ட வரைபடத்தைக் கண்டறிக
ஆ) இவ்வரைபடத்தை ‘இரட்டிப்பாதல் பிளவாகக்‘ கொண்டு வரைக. அதன் பாகங்களைக் குறிக்கவும்.
இ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் முறைக்குத் தேவைப்படும் ஆற்றலின் மூலம் யாது? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் நொதிகள் யாவை?
ஈ) இரண்டு வார்ப்புருவ இழைகளின் துருவத் தன்மை அடிப்படையில் புரதச் சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பிடுக
37.
“ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.
38.
குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
39.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?
40.
இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?
41.
8 பிளாஸ்டோமியர் கொண்ட கருமுட்டை அண்ட நாளத்தினுள் செலுத்துதல் ________
42.
21 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை _______
43.
இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ________ எனப்படும்.
44.
மீத்திறனுள்ள கணினிகளை பயன்படுத்தி சிறுதுப்பாக்கி வரிசையாக்கம் என்ற முறையின் மூலம் நீளத் துண்டுகளை வரிசைப்படுத்துவது _______
45.
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன
46.
| பகுதி-I | பகுதி-II | ||
|---|---|---|---|
| அ | பாலிலி இனப்பெருக்கம் | a . | மரபணு ஒத்த |
| ஆ | பாலினப்பெருக்கம் | b. | மரபணு ஒத்த |
| இ | அமீபா | c | எளிய இரு சமபிளவு |
| ஈ | பாரமீசியம் | d | நேரடி செல்பகுப்பு |
47.
அ) மரபுக்குறியீடு முக்குறியன்களானது - வில்கின்ஸ்
ஆ) DNA இரட்டிப்படைதல் - மெசல்சன் மற்றும் ஸ்டால்
இ) TMV வின் மரபணு RNA - பிராங்கெல் கான்ராட்
ஈ) நொதிகள் பாலிநியுக்ளியோடைட் பாஸ்பாரிலேஸ் - மார்ஷல் நிரன்பெர்க் மற்றும் செவேரோ ஒசோவா
48.
பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்கவும்.
| பால்வினை நோய்கள் | நோய்க்காரணி |
| அ) கிரந்தி அல்லது மேகப் புண் | i) டிரிபோனிமா பாலிடம் |
| ஆ) லிம்போகிரானுலோ வெனீரியம் | ii) கிளாமிடியா ட்ராகோமேடிஸ் |
| இ) கேன்டியாசிஸ் | iii) அல்புகா கேன்டிடா |
| ஈ) பிறப்புருப்பு மருக்கள் | iv) மனித பாப்பிலோமா வைரஸ் |
49.
1. தலாசீமியா ஒரு உடல் குரோசோம்களின் ஒடுங்கு ஜீன்களினால் ஏற்படும் குறைபாடு
2. பீனைல் கீட்டோன் யூரியா ஒரு உடல் குரோமோசோம்களில் உள்ள ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
3. அல்பீனிசம் என்பது மெலானின் இல்லாமையால் வருவது.
4. ஹண்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
50.
a) ஆண்டி D எதிர்ப்பொருள் இயல்பான மனிதர்களின் பிளாஸ்மாவில் இருப்பதில்லை.
b) Rh -காரணி முதன் முதலில் ரீசஸ் குரங்கில் இருந்து கண்டறியப்பட்டது.
c) Rh -நேர்மறையாளர்கள் Rh-எதிர்மறையாளர்கள் இரத்தத்தினை பெறும்பொழுது எதிர்ப்பொருள் உருவாகிறது.
d) Rh -எதிர்பொருள் தூண்டி RBC யின் மேற்பரப்பில் காணப்படுகிறது.
51.
அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல்
ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபிஸ்
52.
1. ஜேக்கோப் & மோனாடு லேக் ஓபரான் மாதிரியை முன்மொழிந்தார்
2. அடக்கி மூலம் லேக் - ஓபரானின் நெறிப்படுத்தல், படியெடுத்தலின் தொடக்கத்தைக் கட்டுப்படுத்தும் எதிர்மறை நிகழ்வாகும்
3. 'S' அலகு ரிபோசோமின் இரு துணை அலகுகளின் வீழ்படிவு திறனைக் (sedimentation coefficient) குறிக்கிறது
4. பெர்மியேஸ் நொதி செல்லை விட்டு லேக்டோஸை வெளியேற்றத் தேவைப்படுகிறது.
53.
2 டிரைசோமி நிலையின் அறிகுறியானது
a ) துருத்திய நாக்கு
b) எப்பொழுதும் திறந்துள்ள வாய்
c) மனநலக் குறைபாடு
d) பிளவுபட்ட உதடு
54.
அ.முகிழ்த்தல்
ஆ.ஸ்போர்கள் உருவாக்கம்
இ.வேறுபட்ட செல் சேர்க்கை
ஈ.அபோலைசிஸ்
55.
ஈ. கோலையில் லாக்டோஸ் வளர்சிதை மாற்றம் __________ நடைபெற நொதி தேவைப்படவில்லை.
அ) நியுக்ளியோஸ்
ஆ) பெர்மியேஸ்
இ) β கேலக்டோஸிடேஸ்
ஈ) டிரான்ஸ் அசிட்டலேஸ்
56.
1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண்
2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண்
3. டவுண் சிண்ட்ரோம் - டிரைசோமி 23
4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
அ) RNA தயாரிக்கும் இடம் - நியுக்ளியஸ்
ஆ) படியெடுத்தலில் இன்ட்ரான்களை நீக்கி எக்ஸான்கள் இணைவது - இழைத்தல்
இ) ரிபோசோம்கள் வரிசையாக இணைந்து காணப்படுவது - பாலிசோம்கள்
ஈ) RNA பாலிமரேஸ் நிகழ்வு நிறுத்தப்படக் காரணமான காரணி - சிக்மா
58.
லிகேஸ்
59.
உறுதிக்கூற்று : மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
காரணம்: சுறாவின் குட்டிகள் தாய் சேய் இணைப்பு திசுக்கள் அற்று காணப்படும்.
அ. 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் அல்ல.
இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு
ஈ .' 'உ' தவறு ஆனால் 'கா' சரி
60.
உறுதிப்படுத்துதல் A: எ.கோலையில் மொழிபெயர்த்தலின் தொடக்கமாக தொடக்கி கூட்டமைப்பு உருவாகிறது.
காரணம் R: N ஃபார்மைல் மெத்தியோனைன் கடத்து தூது இன் துவக்க முக்குறியத்தில் இணைகிறது.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
இ) 'A' சரியானது 'R' தவறானது
ஈ) 'A' மற்றும் 'R' தவறானது
61.
அ.கன்னி இனப்பெருக்கம் மூலம் இளம் சேய் செல்கள் புதிய உயிரியை தோற்றுவிப்பது தான் இளம் செல்சேர்க்கை எனப்படும்.
ஆ. குட்டி ஈனும் உயிரிகளின் முட்டை கடினமான முட்டை ஓடுகள் உடையதாக இருக்கும்.
இ.ஹைட்ரா ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.
ஈ. முழுவளர்ச்சி பெற்ற ஜெம்மியூல் உறுதியான பந்து போன்ற அமைப்புடையதாகும். இதன் வெளிப்பகுதியில் உணவுப் பொருள் தாங்கிய ஆர்க்யோசைட்டுகள் உள்ளன
62.
பின்வருவனவற்றுள் எது AUG ஐப் பொருத்த வரையில் சரியான கூற்று?
அ) இது மெத்தியோனின் குறியீடாகும்.
ஆ) இது துவக்கக் குறியீடாகும்
இ) இது புரோகேரியாட்டில் மெத்தியோனின் குறியீடாகும்.
ஈ) இவையனைத்தும்
63.
mRNA வில் ரிபோசோம் பிணையும் பகுதி - S-D தொடர் எனப்படும்.
1.
(b)
அண்ட நாளம்
2.
(c)
AB
3.
(a)
டிரைகோமோனியாசிஸ்
4.
(d)
அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii
5.
(d)
அமைப்பு மரபணு மட்டும்
6.
(c)
7.
(c)
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
8.
(c)
விந்தகமேல் சுருள்குழல்
9.
(b)
பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளனர்.
10.
(a)
அர்ரீனோடோக்கி
11.
1. FSH செர்டோலி செல்களின்று ஆண்ட்ரோஜன் இணைப்புப் புரத உற்பத்தியை அதிகரிக்கிறது.
2. இது ஸ்பெர்மியோஜெனிசிஸ் நடைபெற உதவுகிறது.
12.
1. சிவப்பு பச்சை நிறக்குருடு - டால்டோனிசம்
2. ஹீமோபிலியா
3. டச்சென்ஸின் தசை நலிவு நோய்
13.
அமைப்பு, செயல்ரீதியாக இயல்பாகச் செயல்படும் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்ட சமூகத்தை குறிப்பது இனப்பெருக்க நலன் எனப்படும்.
14.
| புற முகிழ்த்தல் | அக முகிழ்த்தல் | ||
|---|---|---|---|
| 1 | பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவாகும். | 1. | பெற்றோர் உடலின் உள்ளே மொட்டுகள் உருவாகும். |
| 2. | (எ.கா) ஹைட்ரா | 2. | (எ.கா) நாக்டிலூகா |
| பலபிளவுமுறை | துண்டாதல் | ||
|---|---|---|---|
| 1. | பெற்றோர் உடல் ஒத்த அமைப்புடைய பலசேய் உயிரிகளாகப் பிரிவடைகின்றது. | 1. | பெற்றோரின் உடலானது பல துண்டுகளாகப் பிரிகின்றது. பிரிந்த ஒவ்வொரு துண்டும் புதிய உயிரியாக வளரும். |
| 2. | (எ.கா) அமீபா | 2. | (எ.கா) நாடாப்புழு |
| முழுமையான கன்னி இனப்பெருக்கம் | முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் | ||
|---|---|---|---|
| 1. | ஒரு பெற்றோர்களால் நிகழும் பாலினப் பெருக்கம் நடைபெறாது. | 1. | சில விலங்குகளில் பாலினப் பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கமும் நடைபெறும். |
| 2. | இவ்விலங்குகளில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாகும். | 2. | இதில் கருவுற்ற முட்டைகள் பெண் இனமாகவும் கருவுறாத முட்டைகள் ஆண் இனமாகவும் உருவாகும். |
15.
1. DNA ஹைட்ரோ - கேட்டலிட்டிக்
mRNA மற்றும் புரதத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருக்கிறது
2. DNA ஆட்டோ - கேட்டலிட்டிக்
DNA - தனது உருவாக்கத்தையும் மேற்கொள்கிறது - இதற்கு இரட்டிப்படைதல் என்று பெயர்.
16.
1. அறிவியலாளர்கள் மனிதனில் பல வேறுபட்ட ஒற்றை காரமூல டி.என்.ஏக்கள் காணப்படக்கூடிய 1.4 மில்லியன் இடங்களைக் கண்டறிந்துள்ளனர்.
2. இது ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பு எனப்படும்.
3. இது மருத்துவம் மற்றும் உயிரியலில் புரட்சிகரமான மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது.
4. நோய்களின் அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கு மூலக்கூறு மருத்துவ அடிப்படையில் சிகிச்சையளிப்பதே முக்கியமாகும்.
5. இது கதிர்அரிவால் அனீமியா, B தலசேமியா, C சிஸ்டிக் பைப்ரோசிஸ் போன்ற நோய்களுக்கு ஜீன் சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலும்.
6. ஒரு சில மருந்துகள் குறித்த செயல்பாடு, நோய்வாய்ப்படும் தன்மை மற்றும் சூழல் காரணிகளை நச்சுகள் போன்றவை குறித்து அறிய முடிகிறது.
17.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
18.
(i) கருவுறுதல் நிகழ்ந்தவுடன், அண்டத்தின் சைட்டோபிளாசத்தில் காணப்படும். கார்டிகல் துகள்கள் அண்டத்தைச் சுற்றி, கருவுறுதல் சவ்வு(Fertilization) என்ற தடையை ஏற்படுத்தும்.
(ii) இதனால் மேலும் விந்து செல்கள் உள் நுழைவது தடுக்கப்படும். இதனால் பல விந்து செல்களால் கருவுறுதல் (polyspermy) தடுக்கப்படும்.
19.

20.
(i) முட்டையானது கருவுறாமல் ஒரு உயிராக வளர்வது கன்னி இனப்பெருக்கம் எனப்படும்.
(ii) (எ.கா) ரோட்டிபர், தேனீக்கள், மற்றும் வான்கோழி.
21.
1. கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத்திசுவின் தன்மை போன்ற காரணங்களால் இயல்பான குழந்தைப் பிறப்பு நடைபெறாது.
2. அப்போது தாயின் வயிற்றுப் பகுதியிலும், கருப்பையிலும் சிறு வெட்டு ஏற்படுத்தி, அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை வெளியில் எடுக்கப்படும். இதற்கு '''வயிறுவழி மகப்பேறு'' 'அல்லது' ''அறுவை வழி மகப்பேறு''' என்று பெயர்.
22.
| Zo -Zz வகை பால் நிர்ணயம் | Zz -Zw வகை | ||
| 1. | வேறுபட்ட இனச்செல்களை உருவாக்கும் பெண் உயிரிகள் இரண்டு விதமான முட்டைகளை இடுகின்றன.Z குரோமோசோம் கொண்டு ஒன்றும் Z குரோமோசோம் இல்லாமலும் முட்டைகள் உருவாகின்றன.(Zo) | வேறுபட்ட இனச்செல் வகையான பெண் உயிரிகள் Z குரோமோசோம்களை கொண்டும் W குரோமோசோம்களை கொண்ட முட்டைகளை உருவாகின்றன. | |
| 2. | ஆண்கள் ஒத்த இனச்செல் பண்புகளை உடையவர்களாய் ஒரே விதமான முட்டைகளை உருவாகின்றன . | ஆண்கள் ஒத்த இனச்செல் பண்புகளை உடையவர்களாய் ஒரே விதமான Zz விந்து செல்களை உருவாக்குகின்றன. | |
| 3. | அந்திப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, வீட்டு கோழிகளில் நடைபெறுகிறது. | ஜிப்சி அந்திப்பூச்சி சில மீன்கள் ஊர்வன பறவைகளில் காணப்படுகின்றன. | |
23.
1. முதல் மும்மாதத்திற்குள் செய்வது பெண்ணின் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்காது.
2. இரண்டாம் மும்மாதத்தில் கருக்கலைப்பு அதிக ஆபத்து, ஏனெனில், வளர்கரு தாயின் உடற்திசுவில் நன்கு இணைந்து இருக்கும்.
3. பாலினப்பாகுபாட்டால், பெண்சிசுக்கொலைக்குப் பயன்படும்.
4. போலி மருத்துவர்கள் செய்வது பாதுகாப்பற்றது.
5. முதல் கர்ப்பக் கலைப்பு கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தும்.
24.
1. இச்சூழலில் ஸ்போர் உருவாக்கம் முறையில் மேலுறையை உருவாக்காமல் எண்ணிக்கையில் பெருக்கமடைகின்றன.
2. உட்கரு பல சிறு துண்டுகளாக உடைகிறது.
3. பின் ஒவ்வொரு துண்டைச் சுற்றிலும் உட்கரு சவ்வு உருவாகும்.
4. பின்னர் சைட்டோபிளாசத்தினால் சூழப்பட்டு ஒரு ஸ்போர் உறையை உருவாக்குகிறது.
5. சூழ்நிலை சாதகமாகும் போது பெற்றோர் உடல் சிதைந்து ஸ்போர்கள் வெளியேறி ஒரு இளம் அமீபாவாக வெளிவருகிறது.
25.
(i) தொடக்க குறியீடு (AUG) மற்றும் நிறைவு குறியீட்டுக்கும் இடையே காணப்படும் தூது RNA பகுதியில் இடையில் உள்ள சில பகுதிகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதில்லை
(ii) இதற்கு (UTR) UnTranslated Regions என்று பெயர்
26.
1. DNA அமைப்பு மாதிரியைக் கொண்டு - DNA பாதி பழைமை பேணும் தன்மை - தெரியவந்தது.
2. இரட்டை இழை பிரிந்து - ஒரு முனையில் ஹைட்ரஜன் பிணைப்பு நீங்கி பிரிதலடைய ஒரு இழை வார்ப்பாக செயல்பட்டது.
3. மேலும் சார்காஃபின் 4 கார இணை விதியை இவர்கள் பயன்படுத்தி மேலும் இரட்டிப்பாதல் மற்றும் 4 காரங்கள் 20 அமினோ அமிலங்களுக்கும் குறியீடாவது குறித்த புரிதல் சாத்தியமானது.
4. DNA இந்த கார இணையில் ஏற்படும் மாற்றம் அமினோ அமிலக் குறியீடு மாறுவதால் திடீர் மாற்றம் (அ) சடுதி மாற்றம் ஏற்படக்காரணமானது போன்றவைகளை தெளிவாக இருவரும் அறிந்து கொள்ள வழி வகுத்தது.
27.
அ) கொனோரியா அல்லது வெட்டை நோய்:
நோய்க்காரணி: நீஸ்ஸெரியா கொனோரியே
அறிகுறிகள்: சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு.
பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு
நோய் வெளிப்படும் காலம்: 2 - 5 நாட்கள்
ஆ) கிரந்தி அல்லது மேகப்புண்:
நோய்க்காரணி: டிரிபோனிமா பாலிடம்
அறிகுறிகள்:
முதல்நிலை: பாலுறுப்புகள் புறப்பகுதியில் வலியற்ற புண்கள்
இரண்டாம் நிலை: தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம், காய்ச்சல் மற்றும் முடிஉதிர்வு.
மூன்றாம் நிலை: மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப் பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை, மனநலபாதிப்பு, பார்வைக் கோளாறு, இதயப் பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன.
நோய் வெளிப்படும் காலம்: 10 - 90 நாட்கள்
இ) கல்லீரல் அழற்சி:
நோய்க்காரணி: ஹிபாடிடிஸ்
அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள்காமாலை, காய்ச்சல், தோல் தடிப்பு, வயிற்று வலி.
கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு.
நோய் வெளிப்படும் காலம்: 30 - 80 நாட்கள்
ஈ) எய்ட்ஸ் (AIDS):
நோய்க்காரணி: மனித தடைகாப்பு குறைப்பு வைரஸ்.
அறிகுறிகள்: நிணநீர் முடிச்சுகள் பெரிதாதல், நீண்ட நாள் காய்ச்சல், நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல்.
நோய் வெளிப்படும் காலம்: 2 - 6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்.
28.
(i) மனித அண்டசெல் நுண்ணிய, ஓடு அற்ற, கரு உணவு அற்ற செல்.
(ii) இதன் சைட்டோபிளாசம் 'பிளாசம்' எனப்படும்.
(iii) இதன் பெரிய உட்கரு 'வளர்ச்சிப்பை' (Germinal vesicle ) எனப்படும்.
(iv) அண்ட செல் 3 உறைகளைக் கொண்டது.
1) உட்புற மெல்லிய ஊடுருவும் விட்டலின் சவ்வு.
2) தடித்த நடு அடுக்கு 'சோனா பெலூசிடா'
3) வெளிப்புற தடித்த 'கொரோனா ரேடியேட்டா' நுண்பை செல்களால் சூழப்பட்டது.
(iv) விட்டலின் சவ்வுக்கும், சோனா பெலூசிடாவுக்கும் இடையே விட்டலின் புற இடைவெளி (Perivitelline Space) உள்ளது.
29.
| இடைபால் உயிரி | |
| குரோமோசோம் ஜீனோடைப் மற்றும் பாலின புறத்தோற்ற சேர்ந்த XY ஆண் மற்றும் XX பெண் அல்லாத அமைப்பு | மிகைபெண் அதிக எண்ணிக்கையில் X குரோமோசோம் உடையவர் அவர்களில் 44 உடல் குரோமோசோம் மற்றும் 3X குரோமோசோம் உள்ளது. மும்மய X நோய் குறியீடு என்று பெயர். |
| பால் பண்புகளில் மாற்றத்தை முக்கியமாக ஒரே குரோமோசோம் இனச்செல்கள் பால் ஹார்மோன்கள் அல்லது பிறப்புறுப்புகள் உண்டு ஆண் அல்லது பெண் என்று கருத முடியாது. | மூளை வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை மிகை ஆண் (XYY ஆண்) |
| அதிகப்படியான X மற்றும் Y குரோமோசோம் உள்ளது. | XYY குறியீடு என அழைக்கப்படுகிறது. |
| இருபால் உயிரினம் அல்லது ஹெர்மாப்ரோடைட் ஆகும். | அதிகப்படியான Y குரோமோசோம் உண்டு. |
| அண்டக மற்றும் விந்தக திசுக்கள் காணப்படும். | மூளை குறைபாடு மற்றும் குற்றச்செயலில் ஈடுபடும் தன்மை |
| வெளிப்புற பிறப்புறுப்பு துளைகள் குறைபாடுயுடையவை |
30.
(i) அமீபா ஒரு செல் உயிரியாகும். இவை அழிவற்றவை எனப்படும்.
(ii) ஒரு முதிர்ந்த அமீபா மைட்டாசிஸ் மூலம் இரண்டு இளம் அமீபாகவே உருவாகிறது.
31.
1. ஹைபோதலாமஸின், கொனடோடிராபின் வெளிவிடு ஹார்மோன் விந்து செல்லாக்கத்தை தொடங்கும்.
2. GnRH முன் பிட்யூட்டரி மீது செயல்படும்.
3. முன் பிட்யூட்டரி 2 கொனடோடிராபின்களை வெளியிடும்.
(a) FSH (நுண்பை செல் தூண்டும் ஹார்மோன்)
(b) LH (லூட்டினைசிங் ஹார்மோன்)
4. FSH விந்தக வளர்ச்சியைத் தூண்டும்.
5. செர்டோலி செல்கள் ஆண்ட்ரோஜன் இணைவுப் புரதத்தை உற்பத்தி செய்யும்.
6. FSH ஸ்பெர்மியோஜெனிசிஸ் நடைபெற உதவும்.
7. LH இடையீட்டு செல்கள் மீது செயல்படும். அவை டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்யும். இவ்வாறாக விந்து செல் உருவாக்கம் தூண்டப்படும்.
32.
1. ஜீயோ மற்றும் லிவான் (1960) ஆகியோர் மனித இரத்தத்தில் உள்ள லிம்போசைட்டுகளை எளிய முறையில் வளர்த்தனர்.
2. மறைமுகப்பிரிவு இச்செல்களில் தூண்டப்பட்டது.
3. கால்க்சின் சர்த்த உடன் அச்செல்கள் செல்பிரிதல் நிகழ்வை அதே நிலையில் நிறுத்திவிட்டு.
4. மெட்டோபேஸ் குரோமோசோம்கள் படமெடுக்கப்பட்டது.
5. படத்திலிருந்து ஒவ்வொரு குரோமோசோமும் தனித்தனியாக வெட்டியெடுக்கப்பட்டது
6. இவைகள் அவற்றின் ஒத்த இணைகளோடு வரிசையாக அமைத்தனர். இத்தகைய வரிசையமைப்பே குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எனப்படும்.
7. குரோமோசோம்களில் உள்ள பட்டை அமைப்பின் மூலம் குரோமோசோம்களை வேறுபடுத்தி அறிய முடியும்.
33.
1. இடுப்புக்குழி வீக்க நோய், கருப்பை தசைநார்க்கட்டி, கருப்பை உட்படல அழற்சி
2. பெண்களின் உடல் கொழுப்பு குறைதல், பசியின்மை உடல் எடை குறித்த மனக்கோளாறு
3. இறுக்கமான ஆடைகளால், ஆண்களில் விந்தக வெப்பநிலை உயர்தல்.
4. கீழிறங்கா விந்தகம், வேரிகோசீஸ் எனும் விதைப்பை சிறை வீக்கம்
5. விந்தக, அண்டக குறைவளர்ச்சி.
6. பெண்கள், விந்து எதிர்பொருள் உருவாக்கல்
7. ஆண்களில் சொந்த விந்துக்கு எதிராக சுயதடைகாப்பு
34.
இரண்டு ஒற்றை மய இனச்செல்கள் இணைவதே ஒருங்கிணைவாகும்
ஒருங்கிணைவு முறையின் பல்வேறு வகைகள்:
i) தன் கருவுறுதல்:-
ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து கரு முட்டையை உருவாக்குகின்றன.
2. எ.கா: ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.
ii) அயல் கருவுறுதல்:
1.ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது.
2. எ.கா: மனிதன்.
iii) முழு சேர்க்கை:
1. கீழ் நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வுயிரிகளே இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
2. எ.கா: டிரைக்கோநிஃம்பா.
iv) இளம் சேர்க்கை:
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன.
v) மாறுபட்ட செல் சேர்க்கை:
அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை புதிய மாறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
vi) ஒத்த செல் சேர்க்கை:
1. அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ஒத்த செல் சேர்க்கை எனப்படும்.
2. எ.கா: மோனோசிஸ்டிஸ்.
vii) வேறுபட்ட செல் சேர்க்கை:
முற்றிலும் வேறுபட்ட இரு இனச்செல்கள் ஒன்றிணையும் முறை வேறுபட்ட செல் சேர்க்கை எனப்படும்.
35.

துணைக்கோள் DNAக்கள்
1. இவை எந்தப்புரதத்திலும் குறியீடு செய்வதில்லை
2. இவையே DNA ரேகை அச்சிடலில் பயன்படுபவை
3. இவற்றில் அதிகபட்ச பல்லுருவத்தன்மை காணப்படுகிறது.
இதனாலே இவை DNA ரேகை அச்சிடலில் பயன்படுகிறது.
36.
அ) இரட்டிப்பாதல் - இரட்டிப்பாதல் பிளவு காணப்படும்.
ஆ)
A - வார்ப்புரு இழை
B - இரட்டிப்பாதல் பிளவு
C - வழிகாட்டு இழை
D - பின்தங்கு இழை
இ) டி - ஆக்ஸி நியூக்ளியோடைடு டிரைபாஸ்பேட் பாலிமெரைசேஷன் நிகழ்வுக்கான ஆற்றலைத் தருவதோடு அந்த வினைக்கான தளப்பொருளாகவும் உள்ளது.
ஈ) DNA - இரு இழைகளாலானது. ஒன்றுக்கொன்று ஒத்த தன்மை கொண்ட எதிரெதிர் திசை அமைப்பைக் கொண்டால்
அ) ஒன்று 5' ⟶ 3' என்றும் மற்றது 3' ⟶ 5' திசை நோக்கி காணப்படும்.
ஆ) இதனாலே புரதம் தயாரித்தலின் படியெடுத்தலில் இரு இழைகளும் பங்கு பெற இயலவில்லை அதற்கு இரு காரணங்கள் உள்ளன.
1. இரு இழைகளுமே வார்ப்புரு செயலாற்றுமேயானால், RNA விற்கான குறியீடு இரண்டிலும் வெவ்வேறு வரிசையில் இருக்கும்.
இதனால் புரதத்தின் அமினோ அமில வரிசையிலும் பாதிப்பு ஏற்படும் - இதனால் DNA வின் ஒரு பகுதியிலிருந்து இரு வேறு புரதங்கள் உற்பத்தியாகி மரபுத்தகவல் பரிமாற்ற நிகழ் முறையில் சிக்கல் ஏற்படும்.
2. இரு வித RNA மூலக்கூறுகள் ஒரே நேரத்தில் உற்பத்தியாகுமேயானால் RNA வின் இரு இழைகளும் ஒன்றுக்கொன்று நிகரொத்ததாக இருக்கும். இது RNA ⟶ புரதமாக மொழிபெயர்க்கப்படுவதைத் தடுக்கிறது.
37.
ஆரோக்கியமான மக்கள், உடல்நலம் மிக்க குழந்தைகளைப் பெற்று சமுதாயத்திற்கு பங்களிக்கின்றனர்.
i) பாலியல் கல்வி:
விடலைப் பருவம் சார்ந்த மாற்றங்கள் பற்றிய தகவல்களை பாலியல் கல்வி மூலம் பள்ளிகளில் கொண்டு வருதல்.
ii) கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வு:
மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த கருத்தடை முறைகள் பயன்படும். எனவே எளிதில் கிடைக்கும், பயனர் நட்பு கருவிகள், பக்க விளைவு இன்றி, பாலுணர்வைத் தடை செய்யாமல் பயன்படுத்தலாம்.இதில் தற்காலிக,நிரந்தர முறைகள் உள்ளன.
(எ.கா).1) இயற்கைக் கருத்தடை முறை - பாலூட்டும் கால மாதவிடாயின்மை
2) தடுப்பு முறைகள் - வேதிப்பொருட்கள், இயக்கத் தடுப்பு முறை
3) ஹார்மோன் வழித்தடுப்பு
4) உள்கருப்பைச் சாதனங்கள் (Ex,CuT)
38.
குழந்தை பிறப்பு,பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின்,ரிலாக்ஸின் பங்கு.
ரிலாக்ஸின்:
(i) ரிலாக்ஸின் இடுப்பு எலும்பு மூட்டுகளைத் தளர்வடையச் செய்கிறது.
(ii) கருப்பையின் வாய்ப்பகுதியை, வலிமையான சுருக்கங்களால் விரிவடைய செய்கிறது.
ஆக்ஸிடோசின்:
(i) பால் சுரப்பின் மீச்சிறு கதுப்புகளிலிருந்து விசையுடன் பாலை வெளித்தள்ள ஆக்ஸிடோசின் உதவுகின்றது. இது நிர்பந்த அனிச்சைக் செயல்(Let Down Reflex) எனப்படும்.
(ii) கருப்பையை, கர்ப்ப காலத்தின் முந்தைய நிலைக்கு மாற்றுகின்றது.
39.
(i) பாலினங்களை அடையாளம் காண உதவுகின்றது.
(ii) நீக்கம் இரட்டித்தல் இடம் பெயர்தல் குரோமோசோம்கள் பிரியாநிலை போன்ற குரோமோசோம் பிறழ்ச்சிகளை கண்டறிய பயன்படுகிறது.
(iii) ஒழுங்கற்ற பன்மயம் கண்டறிய பயன்படுகிறது.
(iv) சிற்றினங்களுக்கிடையேயான பரிணாம உறவுகளை கணிக்க உதவுகின்றது.
(v) மனிதனில் காணப்படும் மரபியல் நோய்களை கண்டறியலாம்.
40.
இளவுயிரி நிலை :
(i) இது நிலை உயிரியின் பிறப்பிற்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக் காலம்.
(ii) சில விலங்குகளின் இளம் உயிரிகள்
பசு - கன்று,
பூச்சி - லார்வா,
மனிதகுரங்கு - குழந்தை,
பூனை - பூனைக்குட்டி,
இனப்பெருக்க நிலை :
(i) ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித்தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும்.
(ii) ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும்.
(iii) பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இளம் உயிரிகள் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும். எ.கா) முயல், கோழிகள்
41.
( )
உடல் வெளிக்கருவுறல்
42.
( )
டவுன் சிண்ட்ரோம்
43.
( )
முதுமை நிலை
44.
( )
சிறு துப்பாக்கி வரிசையாக்கம்
45.
( )
mRNA, tRNA
46.
ஆ.பாலினப்பெருக்கம் -மரபணு ஒத்த
47.
அ) மரபுக்குறியீடு முக்குறியன்களானது - வில்கின்ஸ்
48.
49.
அன்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
50.
Rh -நேர்மறையாளர்கள் Rh-எதிர்மறையாளர்கள் இரத்தத்தினை பெறும்பொழுது எதிர்ப்பொருள் உருவாகிறது
51.
நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
52.
4. பெர்மியேஸ் நொதி செல்லை விட்டு லேக்டோஸை வெளியேற்றத் தேவைப்படுகிறது.
53.
பிளவுபட்ட உதடு
54.
வேறுபட்ட செல் சேர்க்கை
55.
அ) நியுக்ளியோஸ்
56.
பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
இ) ரிபோசோம்கள் வரிசையாக இணைந்து காணப்படுவது - பாலிசோம்கள்
58.
DNA துண்டுகளை ஒட்டுகிறது
59.
'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
60.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
61.
( )
ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.
62.
( )
ஈ) இவையனைத்தும்
63.
(a)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards