12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Biology subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
அத்தி மற்றும் குளவி இடையில் நடைபெறும் இடைச்செயல்களை விளக்குக.
2.
உயிரினங்களால் மண் உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விவரி.
3.
4.
சில உயிரினங்கள் யூரிதெர்மல் என்றும் மற்ற சில ஸ்டெனோதெர்மல் என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன.
5.
சூழ்நிலையியல் சமானங்கள் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
6.
சூழ்நிலையியல் - வரையறு
7.
செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.
8.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையின் பெயர் என்ன? அதன் 4 வகைகள் யாவை?

9.
‘கசப்புகளின் அரசன் ’ என அழைக்கப்படுவது எது? அதன் மருத்துவ முக்கியத்துவத்தை குறிப்பிடு.
10.
மனித ஆரோக்கியத்திற்குக் காரணமான உடல் நீர்மங்களின் பெயர்களைத் தருக.
11.
மரச்சாமான்கள் ( நாற்காலி போன்றவை ) செய்ய உகந்த கட்டை எது என்பதை விவாதி.
12.
சோற்றுக்கற்றாழையின் ஒப்பனைப் பயன்பாட்டை எழுது.
13.
முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.
14.
வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.
15.
சூழல்மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கிவிட்டால் என்ன நடைபெறும்?
16.
நிகர முதல்நிலை உற்பத்தி திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது. விவாதி
17.
தவறுதலாகப் பொருள்படும், பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு என்ன?
18.
PV/PV என்ற ஓங்கு மரபணு கொண்ட ஆண் டுரோசோஃபிலாவை இரட்டை ஒடுங்கு மரபணு கொண்ட பெண் டுரோசோஃபிலாவுடன் கலப்பு செய்து F1 ஐ பெறுக. பின்பு F1 ஆண் பழப் பூச்சியை இரட்டை ஒடுங்கு பெண் பழப் பூச்சியுடன் கலப்பு செய்க.
i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
ii) சரியான மரபணு வகையை கலப்பினை வரைக .
iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?
19.
நியுக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைப் பயன்படுத்துவாய்?
20.
ஸ்பைருலினா போன்ற நுண்ணுயிர்களை வளர்ப்பதற்கு என்ன பொருட்களைப் பயன்படுத்துவாய்?
21.
மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
22.
‘அபாய நிலை மற்றும் அரிதான தாவர சிற்றினங்கள் பெருகுவதற்கு திசு வளர்ப்பு சிறந்த முறையாகும்’. விவாதி.
23.
பிரித்தெடுக்கப்பட்ட ஒரு பிரையோபில்லம் இலை புதிய தாவரங்களை தோற்றுவிக்கிறது எவ்வாறு?
24.
பதியமிடல் என்றால் என்ன?
25.
கருவியலுக்கு ஹாப்மீஸ்டரின் பங்களிப்பை குறிப்பிடுக.
1.
(i) நேர்மறை இடைச்செயலான - ஒருங்குயிரி நிலை அத்தி மற்றும் குளவி இடையில் நடைபெறும் இடைச்செயலாகும்.
(ii) அத்திப்பழங்களுள் காணப்படும் மலர்களை மகரந்தச்சேர்க்கை அடைய செய்ய குளவிகளால் மட்டுமே முடியும் என்பதால் அத்திப்பழங்களுக்கும் குளவிகளுக்கும் இடையே நேரடியான தொடர்பு உள்ளது.
(iii) அத்திப்பழங்களினுள் காணப்படும் மலர்களை குளவிகள் (தங்கள் கருமுட்டைகளை இடும் இடமாக தேர்வு செய்யும் போது) மகரந்தச்சேர்க்கை அடைய செய்கிறது. அதற்கு பதிலாக அத்திப்பழங்களில் உருவாகும் இளம் விதைகளை உணவாக குளவிகளின் இளம்புழுக்களுக்கு (லார்வாக்கள்) உணவாக பயன்படுகிறது.
2.
(i) மண் உருவாக பாறை உதிர்வடைதல் முதற்காரணமாகிறது.
(ii) உயிரியலில் வழி உதிர்வடைதல் உருவாக மண் உயிரிகளான பாக்டீரியம், பூஞ்சை, லைக்கன்கள் மற்றும் தாவரங்களின் மூலம் உருவாக்கப்படும் சில வேதிப்பொருட்கள், அமிலங்கள் ஆகியவை அடங்கும்.
3.
4.
யூரிதெர்மல்:
அதிக வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்துக் கொள்ளும் உயிரினங்கள்.
எ.கா. ஜோஸ்டீரா (கடல் ஆஞ்சியோஸ்பெர்ம்) மற்றும் ஆர்ட்டிமீசியா ட்ரைடென்டேட்டா.
ஸ்டெனோதெர்மல்:
குறைந்த வெப்பநிலை மாறுபாடுகளை மட்டும் பொறுத்து கொள்ளக்கூடிய உயிரினங்கள்.
எ.கா. மா மற்றும் பனை (நில வாழ் ஆஞ்சியோஸ்பெர்ம்கள்)
5.
(i) வகைப்பாட்டியலில் வேறுபட்ட சிற்றினங்கள் வெவ்வேறு புவிப் பரப்புகளில் ஒரே மாதிரியான வாழிடங்கள் பெற்றிருந்தால் அவற்றைச் சூழ்நிலையியல் சமானங்கள் என அழைக்கிறோம்.
(எ.கா): இந்திய மேற்குத்தொடர்ச்சி மலைகளிலுள்ள குறிப்பிட்ட சில தொற்றுத்தாவர ஆர்கிட் சிற்றினங்கள், தென் அமெரிக்காவில் உள்ள தொற்றுத்தாவர ஆர்கிட்களிலிருந்து வேறுபடுகிறது
இருப்பினும் அவை அனைத்தும் தொற்றுத் தாவரங்களே.
6.
(i) இயற்கை வாழிடங்கள் அல்லது உறைவிடங்களிலுள்ள உயிரினங்களான, தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பற்றிய படிப்பு - ரெய்ட்டர் (1885)
(ii) உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையேயான பரஸ்பர உறவு பற்றிய படிப்பே சூழ்நிலையியல் எனப்படுகிறது - எர்னஸ்ட் ஹெக்கெல் (1889)
7.
வரையறை:
சில தனிச் செல்களையோ (அ) செல் தொகுப்பையோ நீர்ம ஊடகத்தில் ஆய்வுக் கூட சோதனை முறையில் வளர்க்கும் முறை - செல் மிதவை வளர்ப்பு எனப்படுவது.
8.
இது திசு வளர்ப்பின் அடிப்படைத் தொழில்நுட்ப முறை
2) ஊடகம் தயாரித்தல்
3) வளர்ப்புச் சூழல்
4) கேலஸ் தூண்டப்படுதல்
5) கருவுருவாக்கம்
6) வன்மையாக்குதல்
9.
(i) நிலவேம்பு (ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா).
(ii) கல்லீரல் பாதுகாப்பி
(iii) கல்லீரல் நோய்களுக்குப் பயன்படும்.
(iv) நிலவேம்பு, 8 மூலிகைகளும் சேர்ந்தே நிலவேம்புக் குடிநீர் மலேரியா, டெங்கு சிகிச்சையின் போது பயன்படும்.
10.
(i) வாதம்
(ii) பித்தம்
(iii) கபம்
11.
(i) தென்கிழக்கு ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்ட தேக்கு (டெக்டோனா கிராண்டிஸ்)
(ii) புதிய வன்கட்டை, தங்கநிறப் பழுப்பாகவும், ஒளியில் வெளிப்படும்போது, அடர்நிறமாகவும் மாறும்.
(iii) கரையான், பூஞ்சைகளுக்கு எதிர்ப்பாற்றல் கொண்டது. எனவே நீண்ட காலப் பயன்பாட்டுக்கு உகந்தது.
(iv) உடைதல், கீறல் இல்லாததால் தச்சகர்களுடன் தோழமையானது.
(v) இரயில் வண்டி, பார வண்டி, கப்பல், பாலம், படகு, கதவு நிலைகள், தகவுகள் செய்யப் பயன்படும்.
12.
(i) அலாயின் (குளுகோசைடுகளின் கலவை) மற்றும் இதன் களிம்பு தோலுக்கு ஊட்டமளிக்கும்.
(ii) குளிர்ச்சியான, ஈரப்பதமூட்டும் பண்பு, களிம்பு, பூச்சு, ஷாம்பு, முகச்சவர களிம்பு செய்யப்பயன்படும்.
(iii) மூப்படைந்த தோலைப் பொலிவாக்கும்.
(iv) இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் குழைவுத் தன்மை, பாக்டீரியா எதிர்ப்பி,ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி, கிருமி நாசினி பண்புகள் கொண்டது.
13.
| முதல் நிலை அறிமுகப்படுத்துதல் | இரண்டாம் நிலை அறிமுகப்படுத்துதல் | |
| அ | புதிய சூழ்நிலைக்கு தன்னை தகவமைத்து கொள்ளும் | இந்த இரகமானது தேர்ந்தெடுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. |
| ஆ | மரபணு வகை விகிதத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது. | மேம்பட்ட இரகத்தை தனித்து பிரித்தல், இந்த இரகத்தை உள்ளூர் இரகத்துடன் கலப்பது. |
14.
வணிக ரீதியாக வளர்க்கப்படும் வேளாண் காடுகளில் தாவரச் சிற்றினங்களான கேசுரைனா, யூக்ளிப்டஸ், மலை வேம்பு, தேக்கு, கடம்பு ஆகியவை அடங்கும்.
இவை மரம் சார்ந்த தொழிற்சாலைகளில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
15.
1. சூழல் மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கும் போது மொத்த உணவு வலையும் (Food Web) பாதிக்கப்படுகிறது.
2. முதல் நிலை நுகர்வோர் (அ) தாவர உண்ணிகள் தங்களின் உணவாக உற்பத்தியாளர்கள் இல்லாமையால் இறந்து போக நேரிடும்.
3. அதனால் உணவு வலையில் உள்ள மற்ற விலங்குகளும் தங்களுக்கு உணவு இல்லாமல் இறக்க நேரிடும்.
4. சூழ்நிலை மண்டலத்தின் அழிந்து போன நுகர்வோர் எண்ணிக்கை அழிந்துபோன உற்பத்தியாளர்களுக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
5. வளிமண்டலத்தின் CO2 மற்றும் O2 சுழற்சி இருக்க உற்பத்தியாளர்களே காரணம்.
6. இந்த உற்பத்தியாளர்களை நீக்கிவிட்டால் CO2 மற்றும் O2 சுழற்சி சமநிலை அற்றதாக மாறிவிடும்.
7. இதனால் மூச்சுக் காற்றான ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
16.
1. மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுவது சூழல் மண்டலத்திலுள்ள தற்சார்பு ஊட்ட உயிரிகளால் ஒளிச்சேர்க்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவு ஆற்றல் அல்லது கரிமப்பொருட்கள் அல்லது உயிர்த்திரள் மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
2. ஆனால் நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுவது தாவரத்தின் சுவாசச் செயலால் ஏற்படும் இழப்பிற்குப் பிறகு எஞ்சியுள்ள ஆற்றல் விகிதமே நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எனப்படுகிறது. (NPP)
NPP=GPP -சுவாச இழப்பு
3. எனவே நிகர முதல்நிலை உற்பத்தித்திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது ஆகும்.
17.
| தவறுதலாக பொருள்படும் தகுதிமாற்றம் | பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் |
| ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான் அல்லது மரபுக்குறியன் வேறோரு அமினோ அமிலத்திற்கான கோடான் (அ) மரபுபுக்குறியன் மாறுவதால் அமினோ அமிலவரிசையில் மாற்றம் ஏற்படுகிறது. Eg.TTA ⟶ AAT அமினோ அமிலம் லியூசின் |
ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான (அ) மரபுக்குறியின் முடிவு (அ) நிறுத்துக்குறியனாக மாற்றமடையும் சடுதிமாற்றம் தவறுதலாகப் பொருள்படும் (அ) ஒத்திலாச் சடுதி மாற்றம் என்று பெயர். Eg.TTA ⟶ AAT நிறுத்தக்குறியின் UAA |
18.
i) முழு பிணைப்பு
ii)

19.
இவை DNA மூலக்கூறுக்குள், குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNA ஐத் துண்டிக்கின்றன. இதற்கு தடைகட்டு களம் (Restriction sites)
அ) எக்சோநியுக்ளியேஸ்
Options நொதி
இவை DNA மூலக்கூறின் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது.
(எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ்
ஆ) எண்டோநியுக்ளியேஸ் நொதி
இவை DNA மூலக்கூறுகளின் உட்புறம் உள்ள பாஸ்ஃபோ-டை-எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
(எ.கா) Hind II, EcoRI, Pvul, Bam H1, Taq 1 போன்றவை
20.
1. உருளைக்கிழங்கு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையிலிருந்து கிடைக்கும் ஸ்டார்ச் கொண்ட கழிவுநீர்.
2. வைக்கோல்
3. வெல்லச்சக்கைப்பாகு
4. விலங்கு உரம்
5. கழிவு நீர்
21.
(i) 1900 இல் டி - விரிஸ் கோரன்ஸ் & வான் செர்மாக் இவர்கள் மூவரும், மெண்டலின் ஆய்வுகளை மறு ஆய்வு செய்தனர்.
(ii) மெண்டலின் ஆய்வுகள் 1865 இல் கண்டறியப்பட்டாலும் அது உலகம் 35 ஆண்டுகள் ஆயிற்று.
22.
நுண் பெருக்கம்
திசு வளர்ப்பின் மூலம் முழுத்தாவரமானது ஒரு தனி செல், சிறு துண்டுகளிலிருந்து திசு வளர்ப்பு மூலம் பெறப்படுகிறது.
நிறைகள்
1. விரும்பிய பண்புள்ள தாவரங்கள், குறைந்த காலத்தில் விரைவாகப் பெருகும்.
2. உருவாகும் தாவரங்கள், ஒத்த மரபணு சார் பண்புகளைக் கொண்டிருக்கும்.
3. எந்தப்பருவத்திலும் திசு வளர்ப்பை மேற்கொள்ளலாம்.
4. உயிர்ப்பு திறனற்ற, முளைக்கும் திறனற்ற விதைகளை உருவாக்கும் தாவரங்களை, திசு வளர்ப்பின் மூலம் பெருக்கமடையச் செய்யலாம்.
5. அரிதான, அபாயத்திற்கு உட்படுத்தப்பட்ட தாவரங்களைப் பெருக்கமடையச் செய்யலாம்.
6. ஆக்குத்திசு வளர்ப்பு மூலம் நோய்களற்ற தாவரங்களை உருவாக்கலாம். (Meristem culture)
7. திசு வளர்ப்பினால், செல்களை மரபணு சார் ரீதியாக மாற்றமடையச் செய்யலாம்.
23.
சில தாவர இலைகளில் மாற்றிடத்து மொட்டுகள் தோன்றும். இவை பெற்றோர் தாவரத்தினின்று பிரிந்து புதிய தனித்தாவரமாக வளரும். (எ.கா) பிரையோபில்லம். இதில் சதைப்பற்றுள்ள, விளிம்பில் பள்ளங்களுடன் இலைகள் உள்ளன. இப்பள்ளங்களில் வேற்றிட மொட்டுக்கள் தோன்றும். இவை இலைவளர் மொட்டுக்கள் (Epihyllous buds) எனப்படும். இவை அழுகியதும், இவ்வமைப்புகளில் வேர் உண்டாகி தனித்தாவரமாகும்.
24.
1. பெற்றோர் தாவரத்தண்டு தாவரத்தோடு ஒட்டியிருக்கும் போது அதிலிருந்து வேர்கள் தோன்ற தூண்டப்படும்.
2. வேர் தோன்றிய பகுதி வெட்டி நீக்கப்பட்டு புதிய தாவரமாகும்.
(எ.கா): ஜாஸ்மினம், இக்ஸோரா
25.
1. நான்மய மகரந்தத்தூள் அமைப்பை விளக்கினான்
2. தலைமுறை மாற்றத்தை தாவரங்களில் கண்டறிந்தார்.
3. பூக்கும் தாவரங்களின் கருவியிலைக் கண்டறிந்தார்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards