12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Biology subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மிர்மிகோஃபில்லி என்றால் என்ன?
2.
வெப்ப அடுக்கமைவு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
3.
ஏரியில் காணப்படும் மிதக்கும் தாவரங்களின் வெளிப்பகுதிகளை விட, மூழ்கிக் காணப்படும் தாவரங்கள் குறைவான ஒளியைப் பெறுவது ஏன்?
4.
ஓபிரிஸ் ஆர்கிட் தேனீக்களின் மூலம் எவ்வாறு மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகிறது.
5.
ஓம்புயிரிகளில் வெற்றிகரமாக ஒட்டுண்ணி வாழ்க்கையினை மேற்கொள்ள உதவும் இரண்டு தகவமைப்பு பண்புகளை வரிசைப்படுத்துக.
6.
லைக்கன் ஒரு கட்டாய ஒட்டுயிரிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் விளக்குக.
7.
தாவர திசு வளர்ப்பில் அடங்கியுள்ள அடிப்படைக் கொள்கைகளை விளக்குக.
8.
பாரம்பரிய மருத்துவ முறைகள் என்றால் என்ன? அது எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? அவற்றின் நோக்கங்கள் யாவை ?
9.
ஒருவர் தினமும் ஒரு கோப்பை காஃபி அருந்துவது அவருடைய ஆரோக்கியத்திற்கு உதவும். இது சரியா? சரியென்றால் நன்மைகளை வரிசைப்படுத்து.
10.
பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்பின் தோற்றம் மற்றும் விளையுமிடத்தை எழுதுக.
11.
பயிர் பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்னென்ன?
12.
ஒரு குறிப்பிட்ட சூழல்மண்டலத்தின் பிரமிட் வடிவமானது எப்பொழுதும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. அதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
13.
கீழ்கண்ட தரவுகளைக் கொண்டு உணவு சங்கிலியை உண்டாக்குக.
பருந்து, தாவரங்கள், தவளை, பாம்பு, வெட்டுக்கிளி
14.
குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.
15.
மேலே கொடுக்கப்பட்ட படத்தின் மூலம் சடுதிமாற்ற வகையைக் கண்டறிந்து விளக்குக.
16.
ஒரு தாங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?
17.
தடைகட்டு (ரெஸ்ட்ரிக்க்ஷன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக் கூறி, உயிரிதொழில்நுட்பவியலில் அதன் பங்கைக் குறிப்பிடுக?
18.
pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீர் அறிந்து கொள்வது என்ன?
19.
முழுமைபெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.
20.
மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிக்கான காரணங்கள் யாவை?
21.
டபீட்டத்தின் பணிகளை பட்டியலிடுக.
22.
23.
பல்கருநிலை என்றால் என்ன ? வணிகரீதியில் இது எவ்வாறு பயன்படுகிறது?
24.
‘மூடுவிதைத் தாவரங்களின் கருவூண் திசு மூடாவிதைத் தாவரங்களின் கருவூண் திசுவிலிருந்து வேறுபடுகிறது’. ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்கள் விடையை நியாயப்படுத்தவும்.
25.
தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்க இருபால் மலர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் இரண்டு உத்திகளைப் பட்டியலிடுக.
1.
(i) எறும்புகள் சில நேரங்களில் மா, லிட்சி, ஜாமுன், அக்கேஷியா போன்ற சில தாவரங்களைத் தங்குமிடமாக எடுத்துக் கொள்கின்றன.
(ii) இந்த எறும்புகள் தாவரத்திற்கு தொந்தரவு அளிக்கும் உயிரினங்களிடமிருந்து காக்கும் காப்பாளராகவும் இதற்குப் பதிலாக தாவரங்கள் எறும்புகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தையும் அளிக்கின்றன.
(iii) இது மிர்மிகோஃபில்லி என அழைக்கப்படுகிறது. (எ.கா) அக்கேஷியா மற்றும் அக்கேஷியா எறும்பு.
2.
(i) பொதுவாக வெப்ப அடுக்கமைவு நீர் சார்ந்த வாழ்விடத்தில் காணப்படுகிறது.
(ii) நீரின் ஆழம் அதிகரிக்க அதன் வெப்பநிலை அடுக்குகளில் ஏற்படும் மாற்றமே வெப்பநிலை அடுக்கமைவு என அழைக்கப்படுகிறது.
(iii) மூன்று வகையான வெப்ப அடுக்கமைவுகள் காணப்படுகின்றன.
1. எபிலிம்னியான் - நீரின் வெப்பமான மேல் அடுக்கு
2. மெட்டாலிம்னியான் - நீரின் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் ஒரு மண்டலம்
3. ஹைப்போலிம்னியான் - குளிர்ந்த நீருள்ள கீழ் அடுக்கு
3.
(i) நீரில் மிதக்கும் தாவரங்களின் வெளிப்பகுதிகளை விட மூழ்கிக் காணப்படும் தாவரங்கள் குறைவான ஒளியைப் பெறுகின்றன ஏனென்றால் நீரில் மூழ்கிக் காணப்படும் தாவரங்கள் வளிமண்டல காற்றுடனோ மற்றும் நீரின் மேற்பரப்புடனோ தொடர்பு கொண்டிருப்பதில்லை.
(ii) மிதக்கும் நீர்வாழ் தாவரங்களின் (அ) வேரூன்றி மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்களின் இலைகள், பூக்கள் சூரிய ஒளியை நீரின் உட்பகுதிக்கு செல்ல அனுமதிப்பதில்லை. எனவே இவை குறைவான ஒளியைப் பெறுகின்றன.
4.
(i) ஒரு உயிரி தனது அமைப்பு, வடிவம், தோற்றம், நடத்தை ஆகியவற்றை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழும் வாய்ப்பைப் பெருக்கவும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் நிகழ்த்தப்படும் ஒரு செயலாகும்.
(ii) பூக்களில் காணப்படும் பாவனை செயல்கள் மகரந்தச் சேர்க்கையாளர்களை கவர உதவுகிறது.
எடுத்துக்காட்டு:
ஒபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்து காணப்பட்டு ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்துகின்றன. இது மலர் பாவனை செயல்கள் என அழைக்கப்படுகின்றன.
5.
முழு ஒட்டுண்ணிகள்:
ஒரு உயிரினமானது தனது உணவிற்காக ஓம்புயிரி தாவரத்தினை முழுவதுமாகச் சார்ந்திருத்தல் அது முழு ஒட்டுண்ணி என அழைக்கப்படுகிறது. இவை மொத்த ஒட்டுண்ணிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
(எ.கா) ஓம்புயிரிகளான அக்கேசியா, டுராண்டா மற்றும் பல்வேறு தாவரங்களின் மீது கஸ்குட்டா என்ற தாவரம் முழுதண்டு ஒட்டுண்ணியாகக் காணப்படுகின்றன. மலர்தலை தூண்ட தேவையான ஹார்மோன் கூட கஸ்குட்டா ஓம்புயிரி தாவரத்திலிருந்து பெறுகிறது.
பாதி ஒட்டுண்ணி:
ஒரு உயிரினமானது ஓம்புயிரியிலிருந்து நீர் மற்றும் கனிமங்களை மட்டும் பெற்று தானே ஒளிச்சேர்க்கையின் மூலமாக தனக்கு தேவையான உணவினைத் தயாரித்துக் கொள்பவை பாதி ஒட்டுண்ணி எனப்படும்.
(எ.கா) விஸ்கம் மற்றும் லோரான்தஸ் - தண்டு வாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
சந்தனக்கட்டை வேர்வாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
6.
(i) லைக்கன்கள் (ஆல்கா மற்றும் பூஞ்சை) இவற்றிற்கிடையே காணப்படும் ஒருங்குயிரி நிலையில் இரண்டுமே பயனடைகின்றன.
(ii) லைக்கன்கள் எனப்படுவது ஆல்காக்கள் மற்றும் பூஞ்சைகள் இணைந்த கூட்டுயிரி வாழ்க்கை
(iii) பொதுவாக லைக்கன்களில் ஆல்காக்கள் பசும்பாசிகள் (அ) நீல பசும் பாசிகள், பூஞ்சைகள் அஸ்கோமைசீட்டுகள் (அ) பேசிடியோமைசீட்டுகள் வகையைச் சார்ந்தவை.
(iv) ஆல்காக்கள் பச்சையத்தின் உதவியால் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட்டு கரிம உணவை பூஞ்சைகளுக்கு அளிக்கிறது.
(v) பூஞ்சைகள் அதற்கு பதிலாக நீரையும் கனிம உப்புகளையும் சேமித்து ஆல்காக்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது.
(vi) இதனால் லைக்கன்கள் தாவரங்கள் காணப்படாத மிகுந்த வறண்ட சூழல்களிலும் வளர உதவுகின்றது.
7.
1. முழு ஆக்குத்திறன்
மரபியல் திறன்களைக் கொண்டுள்ள உயிருள்ள தாவரச் செல்களை ஊட்ட (கரைசல்) ஊடகத்தில் வளர்க்கும் போது - அது முழுத் தனித் தாவரமாக வளர்ச்சியடையும் பண்பு.
2. வேறுபாடுதல்
செல்களில் உயிரிய, வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்களை ஏற்படுத்தி அவற்றைச் சிறப்பாக அமைப்பு மற்றும் பணியினை மேற்கொள்ளச் செய்தல்.
3. மறுவேறுபாடுறுதல்
(i) வேறுபாடுற்ற ஒரு செல் ⟶ மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல்.
(ii) ஊட்டச்சத்து ஊடகத்தில் கேலஸ் திசு ⟶ முழுத் தாவரமாதல்
4. வேறுபாடிழத்தல்
முதிர்ச்சியடைந்த செல்கள் ⟶ மீண்டும் ஆக்குத்திசுவாக மாறி ⟶ கேலஸ் போன்ற திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி (அவ்வாறு உயிருள்ள தாவர செல்களின் திசுக்களின் வேறுபாடுறுதலும், வேறுபாடிழத்தலும் உள்ளார்ந்து ஒரு சேரக் காணப்பட்டால் அவை முழுஆக்குத்திறன் பெற்றுள்ளதாக கருதப்படும்)
8.
பாரம்பரிய மருத்துவ முறையின் வகைகள்
1) நிறுவன மயமாக்கப்பட்ட (அல்லது) ஆவணப்படுத்தப்பட்ட முறை
(i) இதில் சித்தா, ஆயுர்வேதா என்ற இந்திய முறைகள் 2000 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.
(ii) அறிகுறிகள், நோய் கண்டறிதல், குணப்படுத்தும் மருந்து தயாரித்தல், அளவு மற்றும் உணவு, சிகிச்சை உணவு, தினசரி மற்றும் பருவகால உணவு ஆகியன உள்ளன.
2) நிறுவனமயமாக்கப்படாத முறை
(i) ஆவணங்கள் இல்லை.
(ii) இத்தகைய அறிவு வாய்மொழியாக உள்ளது.
(iii) கிராமப்புற பழங்குடி மக்களால் நடைமுறைப்படுத்தப்படும்.
பாரம்பரிய முறை கவனம்
(i) ஆரோக்கியமான வாழ்க்கை முறை
(ii) ஆரோக்கியமான உணவு
(iii) ஆரோக்கியத்தைப் பராமரித்தல்
(iv) நோயைக் குணப்படுத்துதல்.
9.
(i) காஃபெயின் அசிட்டைல்கோலைன் என்ற நரம்பிடைக் கடத்தி செயல்திறனை அதிகரிக்கிறது.
(ii) கொழுப்படைந்த கல்லீரல் நோய் சிர்ரோஸிஸ் (கல்லீரல் இழைநார் நோய்) புற்றுநோய்களை குறைக்கிறது
(iii) இரண்டாம் வகைச் சர்க்கரை நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது.
10.
1. துவரை (Red gram) தோற்றம், விளையுமிடம்
தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம், குஜராத்தில் பயிரிடப்படும்.
2. பாசிப்பயறு (Green gram) தோற்றம், விளையுமிடம்
இந்தியாவில் தோன்றியதற்கான தொல்லியல் சான்றுகள் மகாராஷ்டிராவில் கிடைத்தன. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாட்டில் அதிகப் பயிரிடப்படும்.
11.
(i) சடுதி மாற்றப் பயிர்பெருக்கம் தான் தற்போது பயன்படுத்தப்படும் மிகச்சிறந்த வழிமுறையாகும்.
(ii) முல்லர் மற்றும் ஸ்டேட்லர் தான் சடுதிமாற்ற பயிர் பெருக்கம் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.
(iii) இது மரபுவழிப் பயிர்பெருக்க உத்திகளில் மேற்கொள்ளப்படும் புதிய வழிமுறையைக் குறிக்கிறது.
(iv) இது மரபுவழிமுறைகளிலுள்ள குறைபாடுகளை உழவியல் மற்றும் பயிரின் தரப்பண்புகளை மேம்படுத்தும் முறையாகும்.
(v) இது விதையிலாப் பயிர்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரே வழிமுறையாகும்.
(vi) இயற்கை காரணிகள் - புறஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே, ஆல்பா, பீட்டா, காமா, போன்ற கதிர்வீச்சுகள்.
(vii) வேதியியல் காரணிகள் - சீசியம், இதைல் மீத்தேன், சல்போனேட் மற்றும் யூரியா போன்றவை.
(viii) இதுபோன்ற காரணிகள் புதிய இரகப் பயிரை உருவாக்க சடுதிமாற்றத்தை தூண்டுகின்றன.
(x) சடுதி மாற்றம் மூலம் மரபணு கொண்ட குறு இரகக் கோதுமை
(xi) உவர்தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்ட அடோமிகா 2 அரிசி ரகம்.
12.
1. வனச்சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் சற்று வேறுபட்ட வடிவத்தை கொண்டிருக்கிறது. ஏனென்றால்.
2. பிரமிடின் அடிப்பகுதி (T1 உற்பத்தியாளர்) குறைவான எண்ணிக்கையிலான பெரிய மரங்களை கொண்டுள்ளது.
3. (தாவர உண்ணிகள் T2) பழம் உண்ணும் பறவைகள், யானை, மான் உற்பத்தியாளர்களை விட அதிக எண்ணிக்கையில் இரண்டாம் ஊட்ட மட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
4. இறுதிஊட்ட மட்டத்தில் (T4) காணப்படும் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் விட (சிங்கம்) மூன்றாம் ஊட்ட மட்டத்தில் (T3) உள்ள இரண்டாம்நிலை நுகர்வோர்களை விட (நரி மற்றும் பாம்பு) குறைவான எண்ணிக்கையை கொண்டுள்ளது.
5. எனவே வனச் சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் கதிரிழை வடிவத்தில் தோன்றுகிறது.

13.
1. உற்பத்தியாளர்களிடமிருந்து ஆற்றல் இறுதி உண்ணிகள் வரை கடத்தப்படுவது உணவுச் சங்கிலி என்று அழைக்கப்படுகிறது.
2. இந்த உணவுச் சங்கிலியில் ஆற்றல் உற்பத்தியாளர்களிடமிருந்து (தாவரங்கள்) ➝ முதல்நிலை நுகர்வோர்கள் (வெட்டுக்கிளி) ➝ இரண்டாம் நிலை நுகர்வோர்கள் (தவளை) ➝ மூன்றாம் நிலை நுகர்வோர் (பாம்பு) ➝ கொன்று தின்பவை (பருந்து) முதலியவற்றிற்கு கடத்தப்படுகிறது.
3. இது நேர்க்கோட்டில் அமைந்த பின்னல் இணைப்பை வெளிப்படுத்துகிறது.

14.
ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோடிட்களுக்கிடையே இணையான துண்டுகள் பரிமாற்றப்பட்டு புதிய மரபணு சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர்.
இதில் பல நிலைகளை உடையது
1) இணை சேர்தல்
2) நான்கமை உருவாதல்
3) குறுக்கேற்றம் மற்றும் முடிவுறுதல்
i) இணை சேர்தல்:
புரோபேஸ் 1 இன் சைக்கோட்டின் நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே நெருங்கிய இணை உருவாகிறது.
இது இரட்டை இணை (அ) பைவாலண்ட், இது இணைசேர்தல் (அ) சினாப்சிஸ் என்று பெயர் இணைதல் தொடங்குவதைப் பெருத்து 3 வகைப்படும்.
1. மையம் தொடங்கி இணைசேர்தல்
2. நுனி தொடங்கி இணைசேர்தல்
3. இடையிலா இணை சேர்தல்
ii) நான்கமை உருவாதல்:
இரட்டை இலையில் -இரண்டு ஒத்த அமைப்புடைய சகோதரி குரோமாடிட்களை உருவாகத் தொடங்குகிறது - இதில் நான்கு குரோமோடிடுகளைப் பெற்றிருக்கிறது -நான்கமை நிலை என்று
iii) குறுக்கேற்றம்:
பாக்கிடீன் நிலையில் குறுக்கேற்றம் நிகழ்கிறது-
ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோடிடுகளுக்கிடையேே இணைவுப்புள்ளிகள் (கயாஸ்மாக்கள்)- எனும் (X) வடிவ அமைப்பு உருவாகிறது. இவற்றில் குரோமோடிடுகள் உடைந்து துண்டுகள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
1) அண்மைக்கால ஆய்வு: மேம்படுத்தப்பட்ட இழை அமைப்பு கொண்ட இணை பிணைப்புக் கூட்டமைப்பு -இணைசேர்தல் (அ) கயாஸ்மா தோன்றுதலுக்கு வழி வகுக்கிறது. (விதி விலக்கு - சில ஆண் டுரோசோஃபிலா வில் இணைப்பிணைப்புக் கூட்டமைப்பு உருவாவதில்லை)
iv) முடிவுறுதல்:
குறுக்கேற்றத்தின் பின் கயாஸ்மாவானது குரோமாடிட்களின் நுனிப்பகுதியை நோக்கி நகர்கிறது இது முடிவுறுத்தல் எனப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம்கள் முழுமையாகப் பிரிகிறது.
15.
1. மரபணு அமைவிடத்தில் மாறுபாடு ஏற்படுகிறது.
2. இதில் இரட்டிப்பான துண்டு - இயல்பு பகுதிக்கு அருகில் ஆனால் மரபணு வரிசை மாறிக் காணப்படுகிறது. சென்டிரோமியர் இந்தப்பகுதியில் வராததால் இது (பாராசென்டிரிக் தலைகீழ் திருப்பம்)
16.
| பண்புகள் | செயல்/பணி | |
| அ | தன்னிச்சையாகப் பெருக்கமடைய திறன் | ஓம்புயிரி செல்களுக்குள் அவற்றுடைய DNA செருகலுடன் தன்னிச்சையாக பெருக்கமடைந்து பல மடங்கு நகல்களை உற்பத்தி செய்கிறது. |
| ஆ. | சிறிய அளவு -குறைந்த மூலக்கூறு எடை கொண்டிருக்க வேண்டும் (10kb க்கும் குறைவு) | இதனால் ஓம்புயிரி செல்லுக்குள் நுழைத்தால், மாறுதல் எளிதாகிறது. |
| இ. | பெருக்கமடைதல் தோற்றுவிக்க காணப்பட வேண்டும்.(Ori) | காணப்பட்டால் மட்டுமே ஓம்புயிரி செல்லுக்குள் தன்னிச்சையாகப் பெருக்கமடைய இயலும். |
| ஈ. | அடையாளக் குறி (உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு) கொண்டிருக்க வேண்டும். | இதனால் மரபணு மாற்றமடைந்த ஓம்புயிரி செல்லுக்குள் அதனை அடையாளம் கண்டறிய முடியும். |
| உ. | DNA செருகலோடு ஒருங்கிணைவதற்கு தனிப்பட்ட இலக்குக் கலங்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தாங்கியிருக்கும் DNA செருகலுடன் சேர்ந்து ஓம்புயிரி செல்லின் மரபணு தொகுப்புடன் ஒருங்கிணையும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். | இதனால் ஓம்புயிரியின் மரபணு தொகுப்புக்குள் எடுத்துச் செல்லப்பட இயலும். |
| ஊ. | ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நகலாக்க களங்கள் (MCS) கொண்டிருப்பது சிறப்பானது. | MCS இருப்பதால் தேவைப்படும் தடைக்கட்டு நொதிகளின் பயன்பாட்டிற்கு வழிவகை செய்கிறது. |
17.
1. இது மூலக்கூறு கத்தரிக்கோல் எனப்படுகிறது.
2. 1963 ஆம் ஆண்டு எ.கோலை பாக்டீரியாவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது.
3. இது DNA மூலக்கூறுக்குள் குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNA ஐ துண்டிக்கின்றன. இது தடைகட்டு களம் எனப்படும்.
4. செயல்படும் விதம் அடிப்படையில் பிரிப்பது
அ. எக்சோ நியூக்ளியேஸ்
DNA மூலக்கூறின் உட்புறம் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது.
(எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ் III
ஆ. எண்டோ நியூக்ளியேஸ்
இது நொதி மூலக்கூறின் உட்புறம் உள்ள ஃபாஸ்ஃபோடை - எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
(எ.கா) Hind II, EcoR 1, Pvul, Bam H1, Taq போன்றவை
எண்டோ நியூக்ளியேஸ் 3 வகுப்புகளைக் கொண்டது.
வகை I, II மற்றும் இவை செயல்படும் விதத்தில் சிறிய வேறுபாடுகளைக் கொண்டது.
வகை - II : இது மறுகூட்டிணைவு தொழில் நுட்பத்தில் அதிகம் பயன்படுகிறது. இது 4-8bp கொண்டுள்ள வரிசைக்குள்ளே DNA வை அடையாளம் கண்டறிந்து Hind II
குறிப்பிட்ட வரிசையிலுள்ள 6 கார இணைகளை அடையாளம் கண்டறிந்து அங்கு DNA மூலக்கூறுகளைத் துண்டிக்கிறது (Recognition sequences). இது வரை வேறுபட்ட அடையாள தொடர்வரிசை உடைய ஏறத்தாழ 900 தடைகட்டு நொதிகள் பாக்டீரியங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
18.
1. pBR 322 என்பது மறுகட்டமைக்கப்பட்ட பிளாஸ்மிட் ஆகும்.
2. இதில் 4361 bp கொண்டுள்ளது.
3. p = பிளாஸ்மிட்
4. BR - பிளாஸ்மிட் உருவாக்கி, அறிஞர்களான பொலிவர் மற்றும் ரொட்ரிக்ஸ் ஆகிய இருவரையும் குறிக்கின்றன.
5. 322 = அவர்களுடைய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பிளாஸ்மிட்டின் எண்ணிக்கையாகும்.
இதில் காணப்படுவன
1. இரு வேறுபட்ட உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு மரபணுக்கள் (ampR, tetR)
2. பல தடைக்கட்டு நொதிகளுக்கான அடையாளக் களங்கள் (Hind III, EcoRI, Bam H1, SalI, PvuII, Pst1, ClaI)
3. Ori -மரபணு
4. Rop - பிளாஸ்மிட் பெருக்கமடைவதில் ஈடுபடும் புரதங்களையும் Rop குறியீடு செய்கிறது.
19.
| முழுமைபெறா ஓங்குத்தன்மை | இணை ஒடுங்குத்தன்மை | |
| 1. | ஓங்கு அல்லீல்கள் பிறிதொரு ஓங்கு அல்லீலைத் கட்டுப்படுத்தவில்லை - இருவகை அல்லீல்களும் கூட்டாகச் செயல்பட்டு இடைப்பட்ட நிறம் தோன்றியுள்ளது. | ஒரு உயிரியல் மாற்றுப் பண்புடைய இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்விற்கு இணை ஓங்குத்தன்மை என்று பெயர். |
| 2. | அல்லீல்கள் கலப்புற்றதாக வெளிப்பட்டது. | அல்லீல்கள் கலப்புற வில்லை. |
| 3. | ஹைபிரிட் - இரு அல்லீல்களுக்கும் இடைப்பட்ட வெளிப்பாட்டை கொண்டிருக்கிறது. | ஒவ்வொரு அல்லீல்களும் தனித்தனியாக வெளிப்படுத்திக் கொண்டன. |
| 4. | புதிய புறத்தோற்றப் பண்பு உருவானது | புதிய புறத்தோற்றப் பண்பு உருவாகவில்லை |
| 5. | எ.கா ஸ்நேப்டிராகன் மலரின் நிறம் (சிவப்பு x வெள்ளை) | மனித இரத்த வகை(ABO) |
20.
(i) கணித மற்றும் புள்ளியியல் மற்றும் நிகழ்வு விரைவு முறை அணுகு முறை
(ii) கையாண்ட முறைகளின் துல்லியமான புள்ளியியல் நிகழ்வுகள்
(iii) பட்டாணித் தாவரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட எதிரிடைப் பண்புகள் - தனிப்பட்ட குரோமோசோம்களில் உள்ள காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது.
(iv) தூயகால்வழி பெற்றோர்கள் - தேர்ந்தெடுப்பது பல தலைமுறைகளில் தற்கலப்பு மேற்கொண்டது.
(v) அனைத்துக்கும் மேல் தோட்டப்பட்டாணியைத் (Pisum sativum) தெரிவு செய்தது - அதன் சாதகமான பண்புகள்
(vi) ஒரு பருவ தாவரம் பல தலைமுறைகளை ஆய்வு செய்ய இயலும்.
(vii) ஒற்றை மரபணுவால் கட்டுப்படுத்தப்பட எதிரிடைப் பண்புகள் தெளிவானவை.
(viii) இயல்பான தற்கருவுருதல்
(x) பெரிய மலர்களாதலால், ஆண் மடலாக்கம், மகரந்தச் சேர்க்கை மற்றும் கலப்புறுதல் எளிதானது.
21.
1. வளரும் நுண்வித்தகத்திற்கு ஊட்டமளிக்கிறது.
2. உபிஷ் உருவுகள் மூலம், ஸ்போரோபொலினின் உற்பத்திக்கு உதவுவதால், மகரந்தச் சுவர் உருவாக்கத்தில் உதவும்.
3. போலன்கிட்டிற்குத் தேவையான வேதிபொருட்களைத் தந்து, மகரந்தத்துகளின் பரப்புக்கு கடத்தும்.
4. சூலக முடியின் ஒதுக்குதல் வினைக்கான, எக்சைன் புரதங்கள் டபீட்ட செல்களினின்று பெறப்படுகின்றன.
22.
23.
ஒரு விதையில் ஒன்றுக்கு மேற்பட்ட கரு காணப்பட்டால் அது பல்கருநிலை எனப்படும்.
1. சிட்ரஸ் தாவர சூல்திசுவிலிருந்து பெறப்படும் நாற்றுக்கள் பழப்பண்ணைக்கு நல்ல நகல்களாக உள்ளன.
2. பல்கருநிலை வழி தோன்றும் கருக்கள் வைரஸ் தொற்று இல்லாமல் உள்ளன.
24.
| மூடுவிதைத் தாவரங்களின் கருவூண் திசு | மூடாவிதைத் தாவரங்களின் கருவூண் திசு | |
| 1 | மும்மடிய குரோமோசோம்கள் கொண்டது. | ஹாப்ளாய்டு (Haploid) கருவூண் திசு உள்ளது |
| 2 | மூவிணைதல் மூலம் உருவாகும் | கருவுறுதலுக்கு முன்னரே கருவூண் திசு உருவாகும். |
| 3 | கருவைச் சூழ்ந்து கருவூண்திசு காணப்படும். இது ஸ்டார்ச்சை உணவாகத் தரும். | பல விதையிலைகளைக் கொண்ட கரு (எ.டு பைன்) உருவாகும். முதல் நிலை கருவூண் திசு அதற்கு உணவாகிறது. |
25.
i) இருகால முதிர்வு (Dichogamy)
மகரந்தப்பையும், சூலக முடியும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சி அடையும்.
அ) ஆண் முன் முதிர்வு (Proandry)
மகரந்த தாள்கள், சூலக முடிக்கு முன்னரே முதிர்ச்சி அடையும் (எ.கா) ஹீலியாந்தஸ்.
ஆ) பெண்முன் முதிர்வு (Protogyny) (புரோடோகைனி)
சூலக முடி மகரந்ததாளுக்கு முன்னரே முதிர்ச்சியடையும் (எ.கா) அரிஸ்டலோகியா.
ii) பாலுறுப்பு தனிப்படுத்தல் (Herkogamy)
மகரந்தத்தாளும், சூலக முடியும் அமைந்திருக்கும் விதம், மகரந்தச் சேர்க்கையைத் தடுக்கும்.
(எ.கா) குளோரியோசா சூபர்பா
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards