12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Biology subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
விலங்குகள் மூலம் கனி மற்றும் விதைகள் பரவுதல் பற்றி குறிப்பு வரைக.
2.
உவர்சதுப்பு நிலத்தாவரங்களில் ஏதேனும் ஐந்து புறத்தோற்றப் பண்புகளை வரிசைப்படுத்துக.
3.
நீர்த் தாவரங்களின் வகைகளை அதன் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கவும்.
4.
மண் அடுக்கமைவு என்றால் என்ன? மண்ணின் வெவ்வேறு அடுக்குகளைப் பற்றி விவரிக்கவும்.
5.
வெப்பநிலை அடிப்படையில் ராங்கியர் எவ்வாறு உலகத் தாவரக் கூட்டங்களை வகைப்படுத்தியுள்ளார்?
6.
விலங்குகள் மூலம் விதை பரவுதலானது காற்று மூலம் விதை பரவுவதிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதைக் குறிப்பிடுக.
7.
மரபணுவளக்கூறு பாதுகாப்பு பற்றி நீர் அறிவது என்ன? அவற்றை விவரி.
8.
நறுமணப் பொருட்களின் அரசன், அரசி யாவை ? அவற்றை விளக்கி, அவற்றின் பயன்களையும் விளக்குக.
9.
தமிழ்நாட்டில் எந்த மருத்துவ பாரம்பரிய முறை (TSM) பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டதும், கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுமாகும்? விளக்குக
10.
நீயறிந்த ஏதாவது இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தை தருக.
11.
பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.
12.
மீண்டும் காடுகள் உருவாக்குவதால் ஏற்படும் விளைவுகள் யாவை மற்றும் வேளாண் காடு வளர்ப்பின் நன்மைகள் யாவை?
13.
14.
கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக.
உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது-பருந்து - 50, தாவரங்கள் -1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.
15.
16.
17.
18.
Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.
19.
பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.
20.
21.
இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலை விதைகளின் அமைப்பை வேறுபடுத்துக.
22.
மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.
23.
நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.
24.
மாற்று சூலகத்தண்டு நீளம் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
25.
மென் சூல்திசு மற்றும் தடி சூல்திசு வேறுபடுத்துக.
1.
கனிகள் மற்றும் விதைகள் பரவுதலில் மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகள், பறவைகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
i. கொக்கிகளுடன் கூடிய கனிகள் (Hooked fruit): கனிகள் மற்றும் விதைகளில் காணப்படும் கொக்கிகள் (சாந்தியம்) நுண்ணிழை செதில்கள் (அன்ட்ரொபோகன்) முள் போன்ற அமைப்புகள் (அரிஸ்டிடா) விலங்குகளின் உடல்கள் மீது அல்லது மனிதனின் உடைகளின் மீது ஒட்டி கொண்டு எளிதில் பரப்புகின்றன.
ii. ஒட்டிக் கொள்ளும் கனிகள் மற்றும் விதைகள்(Sticky fruits and seeds):
அ) சில கனிகளில் ஒட்டிக்கொள்ளும் சுரப்புத்தூவிகள் காணப்பட்டு அவற்றின் உதவியால் மேயும் விலங்குகளின் ரோமங்கள் மீது ஒட்டிக்கொண்டு எளிதில் பரவுகின்றன. (எ.கா) போயர்ஹாவியா மற்றும் கிளியோம்
ஆ) கனிகளின் மீது காணப்படும் பிசுபிசுப்பான அடுக்கு பறவைகள் கனிகளை உண்ணும் போது அவற்றின் அலகுகளில் ஒட்டிக்கொண்டு, பறவைகள் அலகினை மரக்கிளைகளின் மீது தேய்க்கும் போது விதைகள் பரவிப் புதிய இடங்களை அடைகிறது. (எ.கா) கார்டியா மற்றும் அலாஞ்சியம்
iii. சதைப்பற்றுள்ள கனிகள் (Fleshy fruits):
சில பகட்டான நிறமுடைய சதைப்பற்றுள்ள கனிகள் மனிதர்களால் உண்ணப்பட்டுப் பின்னர் அவற்றின் விதைகள் வெகு தொலைவில் வீசப்பட்டுப் பரவுதலடைகின்றன.
2.
புறஅமைப்பில் தக அமைவுகள்:
(i) மித வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத்தாவரங்கள் சிறுசெடிகளாகவும், வெப்ப மண்டலப்பகுதிகளில் காணப்படும் உவர் சதுப்பு நிலத்தாவரங்கள் பெரும்பாலும் புதர் செடிகளாகவும் காணப்படுகின்றன.
(ii) இயல்பான வேர்களுடன் கூடுதலாக முட்டு வேர்கள் (still roots) இவற்றில் தோன்றுகின்றன.
(iii) சிறப்பு வகை வேர்கள் நிமட்டோஃபோர்கள் (pneumatophores) எனப்படுகின்றன. அதில் அமைந்துள்ள நிமத்தோடுகள் (pneumathodes) கொண்டு தாவரம் அதற்குத் தேவையான அளவு காற்றோட்டத்தைப் பெறுகிறது. இவை சுவாசிக்கும் வேர்கள் (breathing roots) எனவும் அழைக்கப்படுகின்றன. (எ.கா) அவிசென்னியா
(iv) தாவர உடலத்தின் தரைமேல் பகுதிகள் தடித்த கியூட்டிக்கிளை பெற்றுள்ளது.
(v) இலைகள் தடித்தவை, முழுமையானவை, சதைப்பற்றுள்ளவை, பளபளப்பானவை. சில சிற்றினங்களில் இலைகள் காணப்படுவதில்லை. (Aphyllous)
(vi) கனிக்குள் விதை முளைத்தல் காணப்படுகிறது.
3.
நீர் அல்லது ஈரமான சூழலில் வாழ்கின்ற தாவரங்கள் நீர்வாழ் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நீர் மற்றும் காற்றின் தொடர்பினைப் பொறுத்து அவை கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
i. மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Free floating hydrophytes):
இவ்வகை தாவரங்கள் நீரின் மேற்பரப்பில் சுதந்திரமாக மிதக்கின்றன. மண்ணுடன் தொடர்பு கொள்ளாமல் நீர் மற்றும் காற்றுடன் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளன. (எ.கா) ஆகயாத்தாமரை
ii. வேரூன்றி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Rooted floating hydrophytes):
இத்தாவரங்களின் வேர்கள் மண்ணில் பதிந்துள்ளன. ஆனால் அவற்றின் இலைகள் மற்றும் மலர்கள் நீரின் மேற்பரப்பில் மிதக்கின்றன. இத்தாவரங்களின் மண், நீர், காற்று ஆகிய மூன்றுடன் தொடர்பு கொண்டுள்ளன. (எ.கா ) நிலம்போ (தாமரை), நிம்ப்ஃபெயா.
iii. நீருள் மூழ்கி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள்(Submerged floating hydrophytes):
இத்தாவரங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இவைகள் மண் மற்றும் காற்றோடு தொடர்பு பெற்றிருப்பதில்லை. (எ.கா) செரட்டோஃபில்லம்
iv. நீருள் மூழ்கி வேரூன்றிய நீர்வாழ் தாவரங்கள் (Rooted - submerged hydrophytes):
இத்தாவரங்கள் நீருள் மூழ்கி மண்ணில் வேரூன்றி காற்றுடன் தொடர்பு கொள்ளாதவை. (எ.கா) ஹைட்ரில்லா, வாலிஸ்நேரியா
v. நீர் நில வாழ்பவை அல்லது வேர் ஊன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்கள் (Amphibious hydrophytes (Rooted emergent hydrophytes)):
இத்தாவரங்கள் நீர் மற்றும் நிலப்பரப்பு தகவமைவு முறைகளுக்கு ஏற்றவாறு வாழ்கின்றன. இலைகள், ஆழமற்ற நீரில் வளர்கின்றன.(எ.கா) ரெனன்குலஸ், டைஃபா மற்றும் சாஜிடேரியா
ஹைக்ரோபைட்கள் (Hydrophytes):
ஈரத்தன்மையுடைய சூழல் மற்றும் நிழல் உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள் ஹைக்ரோஃபைட்கள் என்று அழைக்கப்படுகின்றன. (எ.கா) ஹேபினேரியா (ஆர்கிட்கள்) மாஸ்கள் (பிரையோஃபைட்கள்) முதலியன.
4.
(i) மண் பொதுவாக வெவ்வேறு அடுக்கு மண்டலங்களாக பல்வேறு ஆழத்தில் பரவியுள்ளது. இவை அவற்றின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் பண்புகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
(ii) தொடர்ச்சியான ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மண்ணின் பகுதியே மண்ணின் நெடுக்க வெட்டு விவரம் எனப்படும்.
| மண்வகை | அளவு | ஒப்பீட்டளவு | |
|---|---|---|---|
| 1 | களிமண் | 0.002 nm க்கு குறைவாக | 50% களிமண் மற்றும் 50% வண்டல் மண் |
| 2 | வண்டல் மண் | 0.002 முதல் 0.02 nm வரை | 90% வண்டல் மற்றும் 10 மணல் |
| 3 | பசலை மண் | 0.002 முதல் 2 nm வரை | 70% மணல் மற்றும் 30% களிமண் (அ) வண்டல் (அ) இரண்டும் |
| 4 | மணல் | 0.2 முதல் 2 nm வரை | 85% மணல் மற்றும் 15% களிமண் |
5.
(i) ஒரு பகுதியில் நிலவும் வெப்பநிலையின் அடிப்படையில் ராங்கியர் உலகின் தாவரங்களைப் பின்வரும் நான்கு வகைகளில் வகைப்படுத்தியுள்ளார்.
1. மெகாதெர்ம்கள்
2. மீசோதெர்ம்கள்
3. மைக்ரோதெர்ம்கள்
4. ஹெக்கிஸ்ட்டோதெர்ம்கள்.
(ii) வெப்பநீர் ஊற்றுகளிலும் ஆழமான கடல் நீரோட்டங்களிலும் சராசரி வெப்பநிலை 100o C க்கு அதிகமாக இருக்கும்.
(iii) சகிப்புத் தன்மைக்கான சூழல் காரணி வெப்பநிலையை பொருத்து இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. யூரிதெர்மல்: இவை அதிக வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்துக் கொள்ளும் உயிரினங்கள் (எ.கா) ஜோஸ்ட்டிரா (கடல் ஆஞ்சியோஸ்பெர்ம்) ஆர்ட்டிமீசியா ட்ரைடென்டேட்டா
2. ஸ்டெனோதெர்மல்: இவை குறைந்த வெப்பநிலை மாறுபாடுகளை மட்டும் பொறுத்துக் கொள்ளக்கூடிய உயிரினங்கள். (எ.கா) மா மற்றும் பனை (நிலவாழ் ஆஞ்சியோஸ்பெர்ம்)
6.
| காற்று மூலம் விதை பரவுதல் | விலங்கு மூலம் விதை பரவுதல் | |
|---|---|---|
| 1 | தனிவிதைகள் (அ) முழுக்கனிகளில் தோன்றும் மாற்றுருக்கள் காற்றின் மூலம் பரவ உதவி செய்கின்றன. | பறவைகள் மற்றும் பாலூட்டிகள் மனிதன் மூலம் விதைகள் கனிகள் பரவுதலுக்கு தகவமைப்புகளை பெற்றுள்ளன. |
| 2 | உயரமான மரங்களில் கனிகள் மற்றும் விதைகள் காற்றின் மூலம் பரவுகிறது. | கனிகள் மற்றும் விதைகளில் காணப்படும் கொக்கிகள் (சாந்தியம்) நுண்ணிழை செதில்கள் (அன்ட் ரொபோகன்) முள் போன்ற அமைப்புகள் (அரிஸ்டிபா) விலங்குகளின் உடல்கள் மனிதனின் உடைகளின் மீது ஒட்டி பரப்புகின்றன. |
| 3 | மிகச்சிறிய விதைகள் மேலும் சிறிய தட்டையான வெளிஉறை காற்று மூலம் விதை பரவ காரணம் (எ.கா) ஆர்கிட்கள். தட்டையான இறக்கைகள் கொண்ட விதை மற்றும் முழுக்கனிகள் காணப்படுகிறது. (எ.கா) மேப்பிள், கைரோகார்ப்பஸ் | சில கனிகளில் ஒட்டிக்கொள்ளும் சுரப்புத்துவிகள் உதவியால் மேயும் விலங்குகளின் ரோமங்கள் மீது ஒட்டி எளிதில் பரவுகின்றன. (எ.கா) போயர் ஹாவியா மற்றும் கிளியோம் |
| 4 | இறகு வடிவ இணை அமைப்புகள் கனிகள் மற்றும் விதைகளில் காணப்படுகின்றன. இவை விதைகள் மிதக்கும் திறனை அதிகரித்து உயர்ந்த இடங்களை அடைய உதவுகின்றன. (எ.கா) வெர்னோனியா, அஸ்கிலிபியாஸ் | கனிகளின் மீது காணப்படும் பிசிபிசுப்பான அடுக்கு பறவைகள் கனிகளை உண்ணும் போது அவற்றின் அலகுகளில் விதையுடன் ஒட்டிக் கொள்கிறது. பின்னர் பறவைகள் அலகை மரக்கிளைகளில் தேய்க்கும் போது விதை பரவுகிறது. (எ.கா) கார்டியா, அலாஞ்சியம் |
| 5 | வலுவான காற்று மூலம் கனிகள் அதிர்வடையச் செய்யும் போது அவை பிளக்கப்பட்டு அதன் மூலம் விதைகள் வெளியேறுகின்றன. | பகட்டான நிறமுடைய சதைப்பற்றுள்ள கனிகள் மனிதர்களால் உண்ணப்பட்டு பின்னர் அவற்றின் விதைகள் வெகு தொலைவில் வீசப்பட்டு பரவுகின்றன. (எ.கா) பப்பாளி |
7.
வரையறை:
பயிர் பெருக்க நோக்கத்திற்காக, உயிருள்ள நிலையில் உள்ள உயர்ந்த மேம்பட்ட தாவரங்களிலிருந்து பெறப்பட்ட தாவரப் பொருட்களான மகரந்தம், விதைகள் (அ) திசுக்கள் போன்றவற்றை மகரந்த விதை வங்கிகளில் அவற்றின் உயிர்ப்புத் தன்மை கெடாமல் பாதுகாத்தல் மரபணுக்கூறு பாதுகாப்பு ஆகும்.
எ.கா: விதை வங்கி, DNA வங்கி
பயன்கள்:
(i) உயிர்ப்புத் தன்மை மற்றும் வளத்தன்மை பாதுகாக்கப்பட்டு பிறகு கலப்பினமாக்கம் மற்றும் பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
(ii) DNA வங்கி, விதை வங்கி மூலம் சிறந்த ரக தாவரங்களின் உயர்ந்த மேம்பட்ட பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
(iii) உயிர் பன்ம பேணலுக்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
8.
நறுமணப் பொருட்களின் அரசி - ஏலக்காய்:
தாவரவியல் பெயர் : எலிட்டரியா கார்டோமோமம்
தோற்றம், விளையுமிடம்:
தென்னிந்தியா, ஸ்ரீலங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை, வடகிழக்கு இந்தியா.
பயன்கள்:
(i) நறுமணம், வெதுவெதுப்பான பண்பு, காரச்சுவை கொண்டவை.
(ii) மிட்டாய்த் தொழிற்சாலை, நறுமணத் தயாரிப்பு, புத்துணர்வான நறுமணப் பொருள்
(iii) குழம்புப் பொடி, ஊறுகாய், கேக் தயாரிப்பு
(iv) மருத்துவத்தில் தூண்டி, அபான வாயு நீக்கி, வாயு நறுமண மூட்டி.
நறுமணப் பொருட்களின் அரசன் - (இந்தியாவின் கருத்தங்கம்):
கருமிளகு (பைப்பர் நைக்ரம்)
தோற்றம், விளையுமிடம்:
மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்தது. காரத்தன்மைக்கு அல்கலாய்டு பைப்பரின் காரணம்.
பயன்கள்:
(i) சாஸ், சூப், குழம்புப்பொடி, ஊறுகாய் தயாரிக்க. மணமூட்ட பயன்படும்.
(ii) மருத்துவத்தில் உமிழ்நீர், வயிற்றுச் சுரப்பு, செரிப்பு மருந்து, மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சலை அதிகரிக்கும்.
9.
சித்த மருத்துவம்:
(i) பிரபலமாக, நடைமுறை கலாச்சாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
(ii) 18 சித்தர்கள் எழுதிய நூல்களை அடிப்படையாகக் கொண்டது.
(iii) கவிதை வடிவில் ஆவணப்படுத்தப்பட்டது.
(iv) பஞ்சபூதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
(v) வாதம், பித்தம், கபம், போன்ற 3 நீர்மங்களில் ஏற்படும் உடல்நலத்தைப் பாதிக்கும்.
(vi) தாவரங்கள், விலங்குகள், பாசிகள், கடற்பொருள்கள், தாதுக்கள் ஆகியவை சித்த மருந்தின் மூலங்கள்.
(vii) தனிமங்களிலிருந்து, நீண்ட நாள் இருக்கும் மருந்துப் பொருள்கள் தயாரிக்கப்படும்.
(viii) 800 மூலிகைகள் இதன் ஆதாரம்.
(x) நோய்த் தடுப்பு, உடல் நல மேம்பாடு, புதுப்பொலிவு, குணப்படுத்தும் சிகிச்சையில் கவனம் செலுத்தப்படும்.
10.
I) கீழாநெல்லி (பில்லாந்தஸ் அமாரஸ்)
(செயலாக்க மூல மருந்து)
ஃபிலாந்தின் மருத்துவ முக்கியத்துவம்
(i) மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதுகாப்பு மருந்து
(ii) டாக்டர் நியாகராஜன், ஃபிலாந்தஸ் அமாரஸ் ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்குதலை எதிர்க்கிறது என நிரூபித்தார்.
II) நில வேம்பு (ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா)
(செயலாக்க மூல மருந்து)
ஆண்ட்ரோகிராபைடுகள் மருத்துவ முக்கியத்துவம்
(i) கல்லீரல் நோய்களுக்கு மருந்து
(ii) எட்டு மூலிகைகளுடன் சேர்ந்து தயாரிக்கப்படும். நிலவேம்புக் குடிநீர், மலேரியா, டெங்கு சிகிச்சைக்குப் பயன்படும்.
11.
புதிய பயிர்பெருக்க தொழில் நுட்ப முறைகள் தேர்வு செய்தல், அறிமுகப்படுத்துதல், கலப்புறுத்தம், பன்மயம், சடுதிமாற்றம், திசு உற்பத்தி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப முறைகள்.
1. மரபணு தொகையத்தை வெட்டுதல் மற்றும் மாற்றியமைத்தலை CRISPR / Cas போன்ற முறைகள் செய்கின்றன.
2. மரபணு தொகைய திருத்தம் – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் திடீர் மாற்றக் காரணி (ODM) என்ற நுட்பத்தின் மூலம் சில இணை காரங்களில் மாற்றங்களைச் செய்தல்.
3. ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது. (cisgenesis)
4. DNA வை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை (epigenetic methods)
12.
1. ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் காற்றின் தரத்தை உயர்த்துதல்.
2. கார்பன் நிலைநிறுத்தலை அதிகரித்தல் மற்றும் வளிமண்டல கார்பன்டை ஆக்ஸைடை குறைத்தல்.
3. சிறிய வளவப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மருத்துவத் தாவரங்கள் அதிகரித்தல்.
4.உயிர்ப்பன்மம், வன உயிரிகள் மற்றும் மரபணு மூலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
5. வேளாண் காடுவளர்ப்பில் மரங்கள், பயிர்கள், கால்நடைகள் ஒருங்கிணைக்கப்படுவதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதோடு இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் உயிர்ப்பன்மம் பாதுகாக்கப்படுகிறது.
13.

14.

1. ஒரு சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிமப்பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்ட வரைபடம் உயிரித்திரள் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
2. புல்வெளி மற்றும் வனச்சூழல் மண்டலத்தில் உயிரித்திரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் (மூன்றாம் நிலை நுகர்வோர்) வரை படிப்படியாகக் குறைகிறது.
3. எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது.
15.

16.
17.
18.
நன்மைகள்
1. விளைச்சல் அதிகரிக்கிறது. ஏனெனில் காய்ப்புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைகிறது.
3. பயிர் வளர்ப்பில் உண்டாகும் செலவு குறைகிறது.
தீமைகள்
1. இதன் விதையின் விலை அதிகம்.
2. முதல் 120 நாட்கள் மட்டுமே வீரியமுள்ளதாக இருக்கிறது. பின்னர் இதன் வீரியம் வர வர குறைகிறது.
3. சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள், அசுவினிப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்றவற்றிற்கு எதிராகச் செயல்படுவதில்லை.
4. மகரந்தச்சேர்க்கையில் துணைபுரியும் பூச்சிகளை பாதிக்கிறது. அதனால் விளைச்சல் குறைகிறது.
19.
(i) இரு வேறுபட்ட நிறமுடைய இலைகள் காணப்படுகின்றன.
(ii) இவற்றில் அடர்பச்சை நிறமுடைய (இலை) தாவரங்களை (ஆண்) வெளிறிய பச்சை நிற இலையுடைய தாவரங்களுடன் (பெண்) கலப்பு செய்த போதும் - (அ) அடர்பச்சை நிற இலையையுடைய தாவரங்கள் (பெண்) வெளிறிய நிற பச்சை நிற இலைகளையுடைய தாவரங்கள் (ஆண்) கலப்பு செய்தபோதும் மெண்டலின் மரபியல் தத்துவத்தின் படி ஒரே விதமான F1 தாவரங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் இப்பாரம்பரியத்தில் முதல் மகவுச் சந்ததி F1 வேறுபட்ட பண்புகளை வெளிப்படுத்தின.
(iii) இரு வகை கலப்பிலும் பெண் தாவரத்தின் பண்புகள் வெளிப்படக் காரணம், பெண் தாவரத்தின் பசுங்கணிக மரபணு சார்ந்து இப்பாரம்பரியம் நிகழ்வதே இவ்வேறுபாட்டிற்கு காரணம்.
20.
21.
| இரு விதையிலைத் தாவர விதை | ஒரு விதையிலைத் தாவர விதை | |
| 1. | இரண்டு விதையிலைகள் ஒட்டிக் காணப்படும். | ஒரு விதையிலையைக் கொண்டது. |
| 2. | விதை உறை தடித்த வெளியுறை (testa) மற்றும் மெல்லிய உள்ளுறை (tegmen) கொண்டது. | விதை பழுப்பு நிற உமியால் மூடப்பட்டிருக்கும். விதையுறை பழுப்பு நிறத்தில், சவ்வு போல விதையை நெருக்கமாக ஒட்டி இருக்கும். |
| 3. | பட்டாணியில் விதையிலைகள் உணவைச் சேமித்து வைக்கும். ஆமணக்கில் கருவூண் திசு உள்ளது. இது சேமிப்புப் பொருள் கொண்டது. | ஸ்கூட்டெல்லம், கருவூண் திசுவிலிருந்து உணவை கருவுக்கு வழங்கும். |
| 4. | முளைக்கருத்து உறை, (coleoptile) முளை வேர் உறை (coleorrhizae) இருக்காது. | முளைக்கருத்து உறை, முளை வேர் உறை உள்ளது. |
22.
மகரந்தத்துகள் சூலகமுடி மீது படிந்து மகரந்தக்குழாய் சூலினுள் நுழையும் வரையுள்ள நிகழ்வுகள் மகரந்தத்துகள் சூலக அலகு இடைவினை (Pollen Pistil Interaction) எனப்படும்.
அ. சூலக முடியில் மகரந்தக் குழல் உருவாதல்
1. சூலக முடியுடன் இணக்கமான மகரந்தத்துகள், முளைத்து மகரந்தக்குழாயை உருவாக்கும்.
2. இதற்கு ஈர சூலக முடியில், சூலக முடி பாய்மமும், வறண்ட சூலக முடியின் மெல்லிய உறையும் காரணமாக உள்ளன.
3. இவை சூலக முடிக்கும், மகரந்தத்துகள்களுக்கு இடையே உள்ள புரத வினைகளைக் கொண்டு இதை முடிவு செய்யும்.
4. சூலக முடியில் மகரந்தத்துகள் நீரேற்றமடையும், மகரந்தச்சுவரப் புரதங்கள் வெளியேறும்.
5. மகரந்தக்குழாயின் சைட்டோபிளாசப் பொருட்கள் நுனி நோக்கி நகர்கின்றன.
6. மகரந்தக்குழாயின் இதர பகுதி நுண் குமிழ்ப்பையால் ஆக்ரமிக்கப்படும்.
7. நுண்குமிழ்ப்பை, குழாய் நுனியிலிருந்து, கேலோஸ் அடைப்பால் பிரிக்கப்படும்.
8. மகரந்தக்குழாயின் நுனிப்பகுதி அரைவட்ட வடிவில், ஒளி ஊடுருவும் பகுதியாக உள்ளது. இது கேப் பிளாக் எனப்படும். இது மறைந்தவுடன் மகரந்தக்குழாயின் வளர்ச்சி நின்று விடும்.
ஆ. சூலக தண்டில் மகரந்தக்குழல்
மகரந்தத் துகளின் வளர்ச்சி, சூலகத்தண்டின் வகையைப் பொறுத்து
i) உள்ளீடற்ற சூலகத்தண்டு
சூலகத்தண்டின் உள்ளீடற்ற கால்வாயில் சுரப்பு செல்கள் உள்ளன. இவை மியூசிலேஜ் பொருட்களைச் சுரக்கின்றன. இவை வளரும் மகரந்தக்குழாய்க்கு உணவு மற்றும் சூலகத்தண்டுக்கும், மகரந்தக் குழாய்க்கு உணவாக பயன்படுகின்றன சூலகத்தண்டுக்கும், மகரந்தக்குழாய்க்கும் இடையே ஒவ்வாமை வினைகளைக் கட்டுப்படுத்தும்.
ii) திட அல்லது மூடிய திட சூலகத் தண்டுகளில், ஊடு கடத்தும் திசு (Transmitting Tissue) செல்களின் இடைவெளி வழியே வளர்கிறது.
இ. மகரந்தக் குழாய் சூலினுள் நுழைதல் 3 வழிகளில் நுழைகிறது
i) சூல் துளை வழியாக
ii) சலாசா வழியாக
iii) சூலுறை வழியாக
ஈ. மகரந்தக்குழாய் கருப்பையினுள் நுழைதல்
சூலுறை வழியாக நுழைய அமைப்பு வழி நடத்தி (obturator) வழிக்காட்டுகிறது. சினர்ஜிட் வழியாக மகரந்தக்குழாயில் நுழைந்து, அதன் உள்ளடக்கப் பொருட்கள் வெளியேற்றப்படும்.
உ. இரட்டைக் கருவுறுதல், மூவினைதல்
2 ஆண் கேமிட்டுகள் கருவுறுதலில் ஈடுபடுவதால் இரட்டைக் கருவுறுதல் எனப்படும். ஒரு ஆண் கேமீட் முட்டை உட்கருவுடன் இணைந்து கருமுட்டையை உருவாக்கும். மற்றொரு ஆண் கேமீட், இரண்டாம் நிலை உட்கருவுடன் இணைந்து முதல் நிலை கருவூண் உட்கருவாகும். இது மூவினைதல் ஆகும்.
23.
1. முதல் நிலை வித்து செல்கள் பகுப்புக்கு உட்பட்டு வித்துருவாக்கத் திசுவைத் தோற்றுவிக்கின்றன.
2. வித்துருவாக்க திசுவின் கடைசி செல்கள் நுண் வித்து தாய் செல்களாகச் செயல்படும்.
3. நுண் வித்து தாய் செல்கள், குன்றல் பகுப்பால் நான்கு இருமடிய நுண்வித்துக்களைத் தோற்றுவிக்கும்.
4. நுண் வித்துக்கள் விரைவில், ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து, தனித்தனியாக மகரந்தப்பை அறையில் காணப்படும்.
5. சில தாவரங்களில் நுண் வித்துக்கள் இணைந்து பாலினியம் (Pollinium) என்ற அமைப்பாகும்.
24.
i) சில தாவரங்கள், 2 அல்லது 3 வெவ்வேறு வகையான மலர்களைத் தோற்றுவிக்கும்
ii) இவற்றின் மகரந்தத்தாள்களும், சூலகத்தண்டும் வேறுபட்ட நீளத்தைப் பெற்றுள்ளன.
iii) மகரந்தச் சேர்க்கை சமநீளத்தை உடைய இன உறுப்புகளுக்கு இடையே நடைபெறும்.
அ) இரு சூலகத்தண்டுத்தன்மை (Heterostyly)
2 வகை மலர்கள் உள்ளன. ஊசி மலர் நீண்ட சூலகத்தண்டு, குட்டையான மகரந்தத் தாள்கள் கொண்டவை. ஊசிக்கண் மலர்களில் குட்டை சூலகத்தண்டு, நீண்ட மகரந்தத் தாள்கள் உள்ளன. ஊசிக்கண் மலரின் சூலக முடியும், ஊசி மலரின் மகரந்தப்பையும் ஒரே மட்டத்தில் உள்ளதால், மகரந்தச் சேர்க்கை நடைபெறும்.
ஆ) மூன்று சூலகத்தண்டுத்தன்மை (Tristyly)
சூலகத்தண்டு. மகரந்தத்தாள்களின் நீளத்தைப் பொறுத்து இத்தாவரம், 3 வகை மலர்களைத் தோற்றுவிக்கிறது. ஒரு வகை மலரின் மகரந்தத்துகள், மற்ற இரண்டு வகை மலர்களில் மட்டுமே மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தும். அதே வகை மலர்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தாது.
(எ.டு) லைத்ரம்
25.
| மென் சூல் திசு | தடி சூல் திசு | |
| 1 | வித்துருவாக்க செல்கள் புறத்தோலடியின் கீழ் உள்ளது. | வித்துருவாக்க செல்கள், புறத்தோலடியின் கீழ்ப்பகுதியிலிருந்து தோன்றும் |
| 2 | ஒரு அடுக்கு சூல் திசுவால் சூழப்பட்டுள்ளது | அதிக சூல் திசு கொண்டவை. |
| 3. | மிகச் சிறிய சூல்திசுவைக் கொண்டிருக்கும். | பல அடுக்கு செல்கள் சூல்திசுவில் உள்ளது. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards