12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Biology subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
விதைபரவுதலின் நன்மைகள் யாவை?
2.
வறண்ட நில தாவரங்களின் உள்ளமைப்பு தகவமைப்புகளை எழுதுக.
3.
பல்வேறு வகையான ஒட்டுண்ணிகளைப் பற்றி தொகுத்து எழுதுக.
4.
தீயினால் ஏற்படும் ஏதேனும் ஐந்து விளைவுகளைப் பட்டியலிடுக.
5.
கூட்டுப் பரிணாமம் என்றால் என்ன?
6.
செயற்கை விதை தயாரிப்பிற்கான நெறிமுறையை எழுதுக.
7.
உறைகுளிர் பாதுகாப்பு பற்றி விளக்குக.
8.
9.
புலனுணர்வுமாற்ற மருந்துகள் என்றால் என்ன? அபின் மற்றும் கஞ்சாச்செடி பற்றிய குறிப்பு வரைக.
10.
11.
கலப்பின வீரியம் - குறிப்பு வரைக
12.
புதிய காடுகள் தோற்றுவித்தலில் தனி ஆய்வுகள் குறித்து விளக்குக.
13.
வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.
14.
பொதுவாக கோடைக்காலங்களில் இயற்கையில் ஏற்படும் தீயினால் காடுகள் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி வழிமுறை வளர்ச்சி என்ற நிகழ்வின் மூலம் ஒரு காலத்தில் படிப்படியாக தானே புதுப்பித்துக் கொள்கிறது. அந்த வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
15.
மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது.
16.
மரபணு வரைபடம் என்றால் என்ன? இதன் பயன்களை எழுதுக.
17.
உயிரிவழித் திருத்தம் என்றால் என்ன? உயிரிவழித் திருத்தத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
18.
களைக்கொல்லியைத் தாங்கிக்கூடிய பயிர்களின் நன்மைகள் யாவை?
19.
தனியொரு மரபணுவானது பலபண்புகளைக் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்ற பண்புகளை எவ்வாறு மாற்றி அமைக்கிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக
20.
பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
21.
கருவுறாக்கனி பற்றி விரிவான தொகுப்பு தருக. அதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பு சேர்க்க.
22.
கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
23.
தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரி.
24.
பூச்சி மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
25.
திறந்த விதைத்தாவரங்களிலும், மூடுவிதைத் தாவரங்களிலும் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை வேறுபட்டது காரணங்களைக் கூறுக.
1.
(i) தாய் தாவரத்தின் அருகில் விதைகள் முளைப்பதைத் தவிர்ப்பதால் விலங்குகளினால் உண்ணப்படுவது அல்லது நோயுறுவது அல்லது சக போட்டிகளைத் தவிர்ப்பது போன்ற செயல்களிலிருந்து தாவரங்கள் தப்பிக்கின்றன.
(ii) விதை பரவுதல் விதை முளைத்தலுக்கு உகந்த இடத்தினைப் பெரும் வாய்ப்பை அளிக்க விதை பரவுதல் உதவுகிறது.
(iii) தன் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் தாவரங்களில் அவற்றின் மரபணுக்களின் இடம் பெயர்வதற்கு உதவும் முக்கிய செயலாக இது உள்ளது.
(iv) அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் தாவரங்களில் மரபணு பரிமாற்றத்திற்கு விதை பரவுதல் உதவி செய்கிறது.
(v) மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்ட சூழல் மண்டலத்திலும் கூட சிற்றினங்களின் பாதுகாப்பிற்கு விதை பரவும் செயல் உதவுகிறது.
(vi) பாலைவனம் முதல் பசுமை மாறக் காடுகள் வரையிலான பல்வேறு சூழல் மண்டலங்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் உயிரி பன்மத்தை தக்க வைத்துப் பாதுகாக்கவும் கனிகள் மற்றும் விதைகள் பரவுதலடைதல் அதிகம் உதவுகிறது.
2.
உள்ளமைப்பில் தக அமைவுகள்:
(i) நீராவிப் போக்கின் நீர் இழப்பினைத் தடுப்பதற்காகப் பல்லடுக்கு புறத்தோலுடன் தடித்த கியூட்டிகளும் காணப்படுகின்றன.
(ii) ஸ்கிலிரங்கைமாவினாலான புறத்தோலடித்தோல் (Hypodermis) நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
(iii) உட்குழிந்த குமிழிகளில், தூவிகளுடன் கூடிய உட்குழிந்தமைந்த இலைத்துளைகள் (Sunken stomata) கீழ்புறத் தோலில் மட்டுமே காணப்படுகின்றன.
(iv) இரவில் திறக்கும் (Scotoactive stomata) வகையான இலைத்துளைகள் சதைப்பற்றுள்ள தாவரங்களில் காணப்படுகின்றன.
(v) பல்லடுக்கு கற்றைஉறை கொண்ட வாஸ்குலத் தொகுப்புகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
(vi) இலையிடைத் திசுவானது பாலிசேடு மற்றும் பஞ்சு திசுவாக நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
(vii) சதைப்பற்றுள்ளவற்றில் தண்டுப்பகுதியில் நீர்சேமிக்கும் திசுக்களைப் பெற்ற பகுதியாக விளங்குகிறது.
3.
ஒட்டுண்ணி வாழ்க்கை(Parasitism):
இவை இரண்டும் வெவ்வேறான சிற்றினங்களுக்கு இடையிலான இடைச்செயல்களாகும். இதில் சிறிய கூட்டாளியானது (ஒட்டுண்ணி) பெரிய கூட்டாளியிடமிருந்து (ஓம்புயிரி அல்லது தாவரம்) உணவினைப் பெறுகின்றது. ஒட்டுண்ணி சிற்றினமானது பயன்பெறும் போது ஓம்புயிரிகளானது பாதிப்படைகிறது. இவை இரண்டும் வகைகளான வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை முழு ஒட்டுண்ணி மற்றும் பாதி ஒட்டுண்ணி
முழு ஒட்டுண்ணிகள் (Holoparasites):
ஒரு உயிரினமானது தனது உணவிற்காக ஓம்புயிரி தாவரத்தினை முழுவதுமாக சார்ந்திருந்தால் அது முழு ஒட்டுண்ணி என அழைக்கப்படுகிறது. மொத்த ஒட்டுண்ணிகள்.
எடுத்துக்காட்டு:
ஓம்புயிரிகளான அக்கேசியா, டுராண்டா மற்றும் பல்வேறு தாவரங்களின் மீது கஸ்குட்டா என்ற தாவரம் முழுதண்டு ஒட்டுண்ணியாகக் காணப்படுகின்றன.
பாதி ஒட்டுண்ணிகள் (Hemiparasites):
ஓர் உயிரினமானது ஓம்புயிரியிலிருந்து நீர் மற்றும் கனிமங்களை மட்டும் பெற்று, தானே ஒளிச்சேர்க்கையின் மூலமாகத் தனக்குத் தேவையான உணவினைத் தயாரித்துக் கொள்பவை பாதி ஒட்டுண்ணி எனப்படும். இது பகுதி ஒட்டுண்ணி (partial parasites) எனவும் அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
(i) விஸ்கம் மற்றும் லோரான்தஸ் தண்டுவாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
(ii) சேண்டலம் (சந்தனக்கட்டை) வேர்வாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
4.
(i) தீயானது தாவரங்களுக்கு நேரடியான அழிவுக்காரணியாக விளங்குகிறது.
(ii) எரிகாயம் அல்லது எரிதலால் ஏற்படும் வடுக்கள் ஒட்டுண்ணி பூஞ்சைகள் மற்றும் பூச்சிகள் நுழைவதற்கான இடமாக உள்ளது.
(iii) ஒளி, மழை, ஊட்டச்சத்து சுழற்சி, மண்ணின் வளம் ஹைட்ரஜன் அயனிச் செறிவு (அ) pH, மண், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றில் மாறுபாடுகளை உண்டாக்குகிறது.
(iv) எரிந்த பகுதியிலுள்ள மண்ணில் வளரும் சில வகையான பூஞ்சைகள் எரிந்த மண்ணில் வளரும் பைரோஃபில்லஸ் (pyrophilous) எனப்படும். (எ.கா) பைரோனிமா கன்ஃப்புளுயென்ஸ்
5.
(i) உயிரினங்களுக்கு இடையிலான இடைச்செயல்களில் இரு உயிரிகளின் மரபியல் மற்றும் புறஅமைப்பியல் பண்புகளில் ஏற்படும் பரிமாற்ற மாறுபாடுகள் பல தலைமுறையை தொடர்கிறது.
(ii) (எ.கா) பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் (ஹாபினேரியா மற்றும் மோத்) ஆகியவற்றின் உறிஞ்சும் குழலின் நீளமும் மலரின் அல்லிவட்டக் குழல் நீளமும் சமமானவை.
6.
செயற்கை விதைகள்: தாவரத்தின் எந்த ஒரு செல் பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர்தொழில்நுட்ப முறையில் செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்ற செயற்கை விதைகள்.
7.
இதன் பகுதிகளாவன
(i) புரோட்டோபிளாஸ்ட்கள், செல்கள் & திசுக்கள்
(ii) செல் நுண்ணுறுப்புகள் & உறுப்புகள்
(iii) செல்லுக்கு வெளியே உள்ள பொருட்கள் & நொதிகள் போன்றவை. தீவிர குறைந்த வெப்பநிலையில் குளிர வைத்துப் பதப்படுத்துதல் ஆகும்.
(iv) இது -196o C திரவ நைட்ரஜனை பயன்படுத்தி குளிர வைத்து பதப்படுத்துதலால் உறை குளிர் பாதுகாப்பு என்று அழைக்கப்படுகிறது.
(v) உறை குளிர் பாதுகாப்பு செயல்முறைக்கு முன்பாக உறை குளிர் பாதுகாப்பு செயல் பாதுகாப்பான்கள் டை மெத்தில் சல்ஃபாக்ஸைடு. கிளிசரால் (அ) சுக்ரோஸ் ஆகியன சேர்க்கப்படுகின்றன.
(vi) இவை தீவிர குளிர் விளைவுகளிலிருந்து செல்கள் (அ) திசுக்களைப் பாதுகாக்கின்றன.
(vii) தீவிர குறைந்த வெப்பநிலையில் - ஏதேனும் ஒரு நொதியின் செயல்பாடு (அ) வேதிய செயல்பாடுகள் முழுவதும் நின்று பொருட்கள் உறக்க நிலையில் பதப்படுத்துகின்றன.
(viii) பரிசோதனைப் பணிக்காக தேவைப்படும் போது, மீண்டும் மெதுவாக அறை வெப்பநிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
8.
9.
சில தாவர வேதிப்பொருள்கள், ஒருவருடைய புலனுணர்வுக் காட்சிகளில் (Perception) மருட்சியை ஏற்படுத்தும். இவை புலனுணர்வு மாற்ற மருந்துகள்.
1. அபின் / கசகசா (Opium Poppy)
தாவரவியல் பெயர் : பப்பாவர் சாம்னிபெரம்
குடும்பம் : பப்பாவரேசி
தோற்றம், விளையுமிடம்
(i) தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கத்திய ஆசியா பிறப்பிடம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், வளர்க்க உரிமம் பெற்றவை.
(ii) தூக்கத்தை தூண்டும், மார்பின் ஒரு வலி நிவாரணி, அறுவைச் சிகிச்சையில் பயன்படும், அடிமைப்படுத்தும் மருந்து.
2. கஞ்சா செடி (Cannabis)
தாவரவியல் பெயர் : கன்னாபிஸ் சட்டைவா
குடும்பம் : கன்னா பியேசி
தோற்றம், விளையுமிடம்
(i) சீனாதான் பிறப்பிடம், குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், உத்திரபிரதேசம் மத்தியப் பிரதேசம் வளர்க்க சட்டப்பூர்வ அனுமதி பெற்றவை
(ii) மூல மருந்து - டிரான்ஸ் - டெட்ராஹைட்ரோ கெனாபினால் (THC)
(iii) வலி நிவாரணி
(iv) இரத்த அழுத்தம் குறைக்கும்
(v) கிளாக்கோமா எனும் கண் அழுத்தத்துக்கு சிகிச்சை
(vi) புற்று நோய்களுக்கு கீமோ தெரபி, கதிவீச்சுக் சிகிச்சைக்கு குமட்டலைக் குறைக்கும்
(vii) சுவாசக் குழாய் விரிவடையச் செய்யும்
(viii) நீண்ட காலப் பயன்பாடு போதை தரும், தனிநபர், சமுதாய பயன்பாடு ஆரோக்கியக் கேடு. எனவே பல நாடுகள் பயிரிட தடை விதித்துள்ளன.
10.
11.
(i) பெற்றோரை விடக் கலப்புயிரி முதல் மகவுசந்ததியில் செயல்திறன் மேம்பட்டிருப்பதால் ஈர்ப்பு கலப்புயிரி வீரியம் என்றழைக்கப்படுகிறது.
(ii) G.H ஷல் என்பவர் தான் முதன்முதலில் ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
(iii) கலப்பின வீரியத்தின் வகைகள் மெய்கலப்பின வீரியம், சடுதிமாற்ற வீரியம், சமநிலை மெய்கலப்பின வீரியம் மற்றும் பொய்கலப்பின வீரியம்.
1) மெய்கலப்பினவீரியம் (Euheterosis): மெய்கலப்பினவீரியம் என்பது மரபு வழியாகப் பெறப்படும் கலப்பு வீரியமாகும். மேலும் இது கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
அ. சடுதிமாற்ற மெய்கலப்பின வீரியம் (Mutational Euheterosis) - இது மெய்கலப்பினவீரிய வகைகளில் மிக எளிமையானது. அயல்-மகரந்தச்சேர்க்கை நடைபெறக்கூடிய பயிர்களில் மேம்பட்ட ஓங்கிய அல்லீல்கள் மூலம் தேவையற்ற, கேடுவிளைவிக்கக்கூடிய, கொல்லும் ஒடுங்குப்பண்புடைய அல்லது சடுதிமாற்றம் பெற்ற மரபணுக்களை நீக்குவதன் மூலம் ஏற்படுகிறது.
ஆ. சமநிலை மெய்கலப்பினவீரியம் (Balanced Euheterosis) : இவை வேளாண்மைக்கு உதவும் வகையில் பல சூழ்நிலைக் காரணிகளுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் சமநிலை பெற்ற மரபணு இணைப்பு, சமநிலை மெய்கலப்பினவீரியமாகும்.
ii) பொய்கலப்பினவீரியம் (Pseudoheterosis): சந்ததி தாவரமானது உடல் வளர்ச்சியில் பெற்றோர் தாவரங்களை விட மேம்பட்டும் ஆனால் விளைச்சலிலும், தகவமைப்பிலும், மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது. இது உடலவளவீரியம் என்றும் அழைக்கப்படும்.
12.
1. தாவரத்தொகுப்பை மீட்டெடுக்கச் சரியான தாவரங்களை ஏற்கனவே தாவரங்கள் இல்லாத பகுதியிலும் காடு இல்லாத நிலங்களிலும் தாவரங்கள் நடவு செய்தலே காடு வளர்ப்பு ஆகும்.
2. எ.கா: அணைகளின் சரிவுகளில் உருவாக்கப்படும் இக்காடுகளால் நீர் வழிந்தோடுதல் மண் அரிப்பு மண் படிதல் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும் கார்பன், நீர் சேமிப்பையும் அளிக்கிறது.
3. ஒரு தனி மனிதன் அடர்ந்த காட்டை உருவாக்கினார். ஜாதவ் "மோலாய்" பயேங் (1963 ஆம் ஆண்டு பிறந்தவர்) என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் தனி மனிதனாக ஒரு வெற்று பயன்படாத நிலத்தின் மத்தியில் தாவரங்களை நடவு செய்து காட்டை உருவாக்குகின்றனர்.
4. இந்தியாவின் வன மனிதன் என்றழைக்கப்படும் இவர் இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திராவில் அமைந்துள்ள உலகத்தின் பெரிய ஆற்றுத் தீவான ஜுலியை அடர்ந்த காடுகளாக மாற்றியதன் விளைவாகக் காண்டாமிருகங்கள், மான்கள், யானைகள், புலிகள் மற்றும் பறவைகளின் புகலிடமாக இது விளங்குகிறது. இன்று இது மத்தியத் தோட்டத்தை விடப் பெரியது.
5. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதிர்குமார் சோபோரி என்பவரால் ஜாதவ் "மோலாய்ப் பாயேங்" அக்டோபர் 2013 ஆண்டு இந்திய வன மனிதன் என்று அழைக்கப்பட்டார்.
6. வன இந்திய மேலாண்மை நிறுவனத்தின் ஆண்டு நிகழ்வில் இவையே கௌரவிக்கப்பட்டார்.
7. 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
13.
1. தாவர மிதவை உயிரிநிலை (Phytoplankton state) -நீலப்பசும்பாலிகள், பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள், பசும்பாசிகள், டயட்டம் போன்ற முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை இதுவாகும்.
2. இந்த உயிரினங்களின் குடிபெயர்பு, வாழ்க்கை செயல்முறைகள், இறப்பின் மூலமாக குளத்தின் கரிம பொருளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து செறிவடைகிறது. இது வளர்ச்சியின் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. நீருள் மூழ்கிய தாவர நிலை (Submerged plant stage)- மிதவை உயிரிகளின் இறப்பு மற்றும் மட்குதலின் விளைவாலும், மழைநீர் மூலம் நிலத்திலிருந்து மண் துகள்கள் அடித்து வரப்படுவதாலும், குளத்தின் அடிப்பகுதியில் ஒரு தளர்வான மண் உருவாக்க வழி வகுக்கிறது. எனவே வேரூன்றி நீருள் மூழ்கி வாழும் நிர்வாழ்த்தாவரங்கள் புதிய வாழ்தளத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. எ.காட்டுகள்: கேரா, யூட்ரிகுலேரியா,
4. தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைவு குளத்தின் அடித்தளத்தை உயர்த்துவதால் குளம் ஆழற்றதாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம் நீருள் மூழ்கி மிதக்கும் நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள் குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது.
5. நீருள் மூழ்கி மிதக்கும் நிலை (Submerged free floating stage)- இந்த நிலையில் குளத்தின் ஆழம் கிட்டத்தட்ட 2-5 அடியாக இருக்கும். எனவே, வேரூன்றிய நிர்வாழ்த் தாவரங்கள் மாற்றும் பெரிய இலைகளுடன் கூடிய மிதக்கும் தாவரங்கள் குளத்தில் குடியேற ஆரம்பிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, வேரூன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை, அல்லி மற்றும் ட்ராபா.
6. இந்த தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைத்தல் மூலம் குளத்தின் ஆழம் மேலும் குறைகிறது. இதன் காரணமாக மிதக்கும் தாவரங்கள் படிப்படியாக பிற இனங்களால் மாற்றி அமைக்கப்படுவதால் புதிய நிலை ஒன்று உருவாகிறது.
7. நாணற் சதுப்பு நிலை (Reed -swamp stage) - இது நீர்-நில வாழ்நிலை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் வேரூன்றிய மிதக்கும் தாவரங்கள் பிற தாவரங்களால் மாற்றியமைக்கப்படுகிறது. இது நீர் சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும் வெற்றிகரமாக வாழக்கூடியது. எடுத்துக்காட்டு: பைஃபா.
8. சதுப்பு புல்வெளி நிலை (Marsh meadow stage)-நீரின் அளவு குறைவதால், குளத்தின் ஆழம் குறையும்பொழுது சைப்பரேசி மற்றும் போயேசி இவற்றின் அதிகம் கிளைத்த வேர்களின் உதவியால் பாய் விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு ஒன்று உருவாகிறது.
9. இது அதிக அளவு நீர் உறிஞ்சுவதற்கும், நீர் இழப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த நிலையின் முடிவில் மண் வறண்டு சதுப்புநிலத் தாவரங்கள் படிப்படியாக மறைந்து புதர்ச்செடிகள் குடிபுக வழிவகுக்கிறது.
10. புதர்ச்செடி நிலை (shrub stage)-சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்ந்து மறைவதாக, மண் வறண்டு போகிறது. எனவே இந்த பகுதிகளில் நிலவாழ்த் தாவரங்களான புதர்ச்செடிகள் (சாலிக்ஸ் மற்றும் கர்னஸ்) ஆகியவை படையெடுக்கின்றன. இந்த தாவரங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சி வறண்ட வாழிடத்தை உருவாக்குகின்றன. அத்துடன் செழுமையான நுண்ணுயிரிகளுடன் கூடிய கரிம மட்கு சேகரமடைவதால் மண்ணில் கனிமவளம் அதிகரிக்கிறது. இறுதியில் அப்பகுதி புதிய மர இனங்களின் வருகைக்கு சாதகமாகிறது.
11. காடுநிலை (Forest stage)-நீர் வழிமுறை வளர்ச்சியின் உச்சநிலை குழுமம் இதுவாகும். இந்த நிலையின்போது பல்வேறு வகையான மரங்கள் படையெடுப்பதோடு ஏதாவது ஒருவகையான தாவரத்தொகுப்பு உருவாகிறது.
14.
ஒரு இடத்திலுள்ள ஏற்கனவே வளர்ந்த குழுமம் சில இயற்கை இடையூறுகளால் (தீ, வெள்ளம், மனித செயல்கள்) அழிக்கப்பட்டு அதே இடத்தில் ஒரு தாவர குழுமம் வளர்ச்சி அடைவதற்கு இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சி என்று பெயர்.
(எ.கா) அழிக்கப்பட்ட காடுகள் காலப்போக்கில் சிறு செடிகளால் ஆக்கிரமிக்கப்படலாம்.
1. பாதிக்கப்பட்ட நிலங்களில் ஆக்கடைதல்.
2. புறக்காரணிகளால் மட்டுமே தொடங்கி வைக்கப்படுகிறது.
3. ஏற்கனவே மண் உள்ள இடங்களில் மட்டுமே இது நிகழும்.
4. முன்னோடி தாவரங்களின் உட்சூழலிருந்து உருவாக்கப்படுகின்றன.
5. இது முடிவடைய குறைந்த காலத்தையே (முதல்நிலை வழிமுறை வளர்ச்சியை விட) எடுத்துக்கொள்ளும்.

15.
மனிதனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தானியம் ட்ரிட்டிகேல். அறிமுக ட்ரிட்டிகேல் மக்ரோனி கோதுமை மற்றும் ரை -தாவரப் பண்புகளைக் கொண்டிருக்கும் (கோதுமையின் புரதத்தன்மையும் + ரை தாவரத்தின் அதிக அமினோ அமில லைசினையும் பெற்றுள்ளது.

16.
1. குரோமோசோம்களில் மரபணுக்கள் ஒரே சீரான நேர்கோட்டில் அமைந்துள்ளன - இது அமைவிடம் எனப்படும்
2. மரபணு அமைவிடம். அருகே உள்ள மரபணுக்களை இடையேயுள்ள தொலைவு-ஆகியவற்றைக் குறிப்பது.
3. மரபணு வரைபடம் (பிணைப்பு வரைபடம்)
4. இந்தக் கருத்தாக்கம் ஆல்பிரட் H.ஸ்டர்டிவண்ட் 1913 இல் உருவாக்கப்பட்டது பயன்கள்
5. மரபணுக்களின் வரிசை அமைவிடம் அடையாளம் காணவும் அவற்றிற்கிடையேயான தூரம் ஆகியவற்றை அறிய முடிகிறது
6. இரு இப்பண்பு மற்றும் மூன்று பண்பு கலப்புகளின் முடிவுகளை கணிக்க பயன்படுகிறது
7. ஒரு உயிரினத்தின் சிக்கலான மரபணு தன்மையினை அறிய முடிகிறது.
17.
நுண்ணுயிரிகள் (அ) தாவரங்களைக் கொண்டு சூழல் மாசுறுதலை சுத்திகரிக்கும் அணுகுமுறைக்கு உயிரிவழித் திருத்தம் என்று பெயர்.
அணுகுமுறை:
1. கழிவுநீர் சுத்திகரிப்பு
2. தொழிற்சாலை கழிவு
3. திடக்கழிவுகள் போன்றவை
சுத்திகரிப்பது:
1. மண் மற்றும் நிலத்தடி நீர், கடலில் எண்ணெய் கசிவு ஆகியவற்றில் இருக்கும் எண்ணெய் கசிவு
2. பெட்ரோலிய வேதிய எச்சங்கள்
3. வன் உலோகங்கள்
4. பூச்சிக்கொல்லிகள் போன்றவை
சாதகமான பண்புகள்:
1. மலிவானது -அதிக நன்மையுடையது.
2. சூழல் மாசுறாத ஒரு அணுகுமுறை (eco friendly)
3. தொடர் பயன்தருவது (sustainable)
4. குறைந்த செறிவில் காணப்படும் மாசுறுத்திகளை அதிக திறனுடன் இது நீக்கிவிடும்.
5. (எ.கா) சூடோமோனாஸ் பியுடிடா எனும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாவை கொண்டு கடலிலுள்ள (அ) நீரிலுள்ள கச்சா எண்ணெய் கசிவுகளை நீக்குதல்.
18.
| பண்பு | விளைவு | |
| 1 | களைகள் குறைக்கப்படுகிறது; | விளைச்சல் அதிகரிக்கிறது. |
| 2 | களைக்கொல்லி தெளிப்பு (அ) பயன்பாடு குறைகிறது. | செலவு குறைகிறது. சூழலுக்குகந்தது. |
| 3 | தாவரங்கள் களைகளின் போட்டி இன்றி வளர்கிறது. | ஆரோக்கியமான வளர்ச்சியடைய தாவரங்கள் |
| 4 | நச்சுப்பொருட்களின் பயன்பாடு குறைகிறது. | பாதிப்பு மண்ணில் குறைவாகவோ, செயல்திறன் குறைவாகவோ உள்ளது. மண்ணின் தன்மையையும் நுண்ணுயிரிகளையும் இதன் மூலம் பாதுகாக்கலாம். |
19.
(i) தனியொரு மரபணுவானது, பல பண்புகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்றப் பண்புகளைத் தீர்மானிக்கிறது. இது பல்பண்புக் கூறுகள் கொண்ட மரபணு அல்லது Pleiotropy என அழைக்கப்படுகிறது.
(ii) பட்டாணியில் ஊதாமலர்கள், பழுப்பு விதைகள், மற்றும் இலை அச்சுக்களில் அடர் புள்ளிகள் கொண்ட பண்புகளுடைய தாவரத்தை வெள்ளை மலர்கள், வெளிறிய நிறமுடைய விதைகள், புள்ளிகளற்ற இலை அச்சு ஆகியவற்றைக் கொண்ட பல பட்டாணித் தாவரங்களோடு கலப்புறச் செய்தபோது மூன்று பண்புகள் ஒன்றை மரபணுவால் பாரம்பரியமாவதைக் கண்டறிந்தார்.
(iii) எ.கா: கதிர் அரிவாள் இரத்த சோகை பினைல் கீட்டோனூரியா நோய்.
20.
வரையறை:
(i) ஒரு உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்கு பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(ii) ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஒரு பாரம்பரியத்தை தீர்மானிக்கும் போது பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
(iii) H - நில்சன் ஹீல் (1909) கோதுமையின் விதையுறைகளில் இவ்வாய்வை நிகழ்த்தி இப்பாரம்பரியத்தை விளக்கினார்.
(iv) சிவப்பு விதையுறை நிறம் (ஓங்கு பண்பு) தாவரத்தை வெள்ளை விதையுறை (ஒடுங்கு பண்பு) தாவரத்துடன் கலப்பு செய்தார்.
(v) அடர் சிவப்பு R1R2R2R2 x வெள்ளை நிறம் r1r1r2r2 இக்கலப்பில்
(vi) 4 - R மரபணுக்கள் மிகுந்த அடர்சிவப்பு நிறம் - 1
(vii) 3 - R மரபணுக்கள் மிதமான அடர் சிவப்பு நிறம் - 1
(viii) 2 - R மரபணுக்கள் சிவப்பு நிறம் - 6
(ix) 1 - R மரபணுக்கள் வெளிர் சிவப்பு நிறம் - 4
(x) R ஓங்கு மரபணு இல்லாமை வெள்ளை நிறம் - 1
(xi) இந்த சிவப்பு நிற செறிவை வரைபடமாக்கினால் ஒரு மணி வடிவ வரைபடம் - கிடைத்தது
(xii) பிற எடுத்துக்காட்டுகள் - மனிதனில் உயரம் & தோல் நிறம்
முடிவுகள்:
நில்சன் ஹீல் ஆய்வு முடிவுகள்:
(i) பிணைதல் இல்லை.
(ii) விதையுறை நிறத்தை மூன்றாவது மரபணுவும் தீர்மானிக்கிறது என்பர் பின்னர் கண்டறியப்படுகிறது.
(iii) மூன்று தனித்த இணை அல்லீல்கள் - இந்த விதையுறை நிறத்தில் பங்கு கொள்கின்றன.
(iv) நிலசன் - ஷீல் F2 சந்ததி விகிதம் 63 : 1
புறத்தோல் விகிதம்
| சிவப்பு | வெள்ளை |
| 63 | 1 |
மரபணு வகையும்
| 1 : 6 : 15 : 20 : 15 : 6 : 1 |
(i) இதன்படி கோதுமை விதையுரையில் கலப்புப் பாரம்பரியம் தென்படவில்லை.
(ii) F2 சந்ததியில் அதிக அளவில் நிற வேறுபாடுகள் காணப்பட்டது.(மரபணுக்களில் தனிதொங்குதல்)
(iii) இதில் பெற்றோர் புறத் தோற்றங்களான அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் இல்லாமல் போனது.
(iv) மரபணுக்களில் கலப்பு இல்லை.
(v) பல மரபணு இலைகளின் ஒட்டு மொத்த விளைவால் - பல்வேறு நிறச் சாயல்கள் தோன்றியது.
(vi) நிலசன் - ஷீல் கருதுகோளின் படி இரு அமைவிடங்களும் கூட்டாக இணைந்து கோதுமை விதையுறை நிறத்தைத் தோற்றுவித்தன.
21.
கருவுறாக் கனியாதல் :
சூலகத்திலிருந்து, கனி போன்ற அமைப்புகள் தோன்றலாம். இவை கருவுறாக்கனிகள் எனப்படும். இவற்றில் உண்மையான வித்தைகளில்லை. வணிக முக்கியத்துவம் வாய்ந்த விதைகளற்ற கனிகள் இவ்வாறு உருவாக்கப்படும் (எ.டு) திராட்சை.
i) மரபணு சார் கருவுறாக் கனியாதல்
இனக்கலப்பு, சடுதி மாற்றத்தால் உருவாகிறது. (எ.டு) சிட்ரஸ்.
ii) சூழ்நிலை சார் கருவுறாக் கனியாதல்
மூடுபனி, குறை வெப்பநிலை, அதிக வெப்பநிலை போன்றவை கருவுறாக்கனி உருவாவதைத் தூண்டும் (எ.டு) பேரிக்காய் 3-19 மணி நேரம் குறைவெப்பத்தில் வைக்கப்படும்.
iii) வேதிப்பொருள் தூண்டிய கருவுறாக் கனியாதல்
ஆக்சின், ஜிப்ரலின், கருவுறாக் கனி உருவாக்கத்தை தூண்டும்.
முக்கியத்துவம் :
1) தோட்டக்கலையில் இவை முக்கியம்
2) வணிக ரீதியில் முக்கியம்
3) ஜாம், ஜெல்லி, சாஸ், பழபானம் தயாரிக்க
4) பெரும்பகுதி உண்ணக் கிடைக்கும்.
22.
கருவுறுதலுக்கு பின், கரு பகுப்படைவதற்கு முன் முதல் நிலை கருவூண் உட்கரு பகுப்படைந்து உருவாக்கும் திசு கருவூண் திசு.
1. உட்கருசார் கருவூண் திசு
முதல் நிலை கருவூண் உட்கரு (PEN) குன்றலில்லா பகுப்படையும். சுவர் உருவாகாமல் தனித்த உட்கருக்களைக் கொண்டுள்ளன. (எ.க) அராக்கிஸ்
2. செல்சார் கருவூண் திசு
முதல்நிலை கருவூண் உட்கரு பகுப்படையும். இரண்டு உட்கருக்கள் உருவாகும். சுவர் உருவாக்கம் நடைபெறும். (எ.டு) ஹீலியான்தஸ்
3. ஹெலோபிய கருவூண் உட்கரு பகுப்படையும், இரண்டு உட்கருக்கள் உருவாகும். உட்கருக்களுக்கிடையே சுவர் உருவாகும். பெரிய சூல்துளை அறை, சிறிய சலாசா அறை உருவாகும். (எ.டு) ஹைட்ரில்லா.
23.
1. இரண்டு சூலுறைகளால் சூழப்பட்டுள்ளது.
2. முதிர்ந்த சூலில், ஒரு காம்பும், உடலும் உள்ளது.
3. சூலகக்காம்பு, சூல்களை சூலொட்டுத்திசுவுடன் இணைக்கிறது.
4. சூலகக்காம்பு, சூலின் உடலோடு இணையும் பகுதி சூல் தழும்பு (Hilum) எனப்படும்.
5. சூலகக்காம்பு ஒட்டிய இடத்தில் உருவாகும் விளிம்பு பகுதி சூல்காம்புவடு (raphe) எனப்படும்.
6. சூலின் மையத்தில் உள்ள, பாரன்கைமா திசு சூல் திசு ஆகும்.
7. சூல்திசுவைச் சூழ்ந்து, சூலுறை என்ற பாதுகாப்பு உறை உள்ளது.
8. சூலுறையால் சூழப்படாத, சூல்திசுப்பகுதி சூல்துளை (micropyle) எனப்படும்.
9. சூல்திசு, சூலுறை, சூல் காம்பு இணையும் பகுதி சலாசா எனப்படும்.
10. சூல்திசுவில் உள்ள முட்டை வடிவப் பை போன்ற அமைப்பு கருப்பை.
11. சூலுறையின் உள்ளடுக்கு எண்டோதீலியம், டபீட்டம் எனப்படும்.
12. சலாசாவுக்கும், கருப்பைக்கும் இடையேயுள்ள செல் தொகுப்பு ஹைப்போஸ்டேஸ்.
13. சூல்துளைக்கும், கருப்பைக்கு இடையே எபிஸ்டேஸ் என்ற செல்தொகுப்பு உள்ளது.
24.
1. பெரிதான மலர்கள், சிறிய மலர்கள் நெருக்கமான மஞ்சரியாகும். (எ.டு. ஆஸ்ட்ரேசி)
2. பிரகாசமான வண்ணம் (எ.டு பாய்ன்செட்டியா)
3. மணம், பூந்தேனும் மலரை நாடி வரும் விருந்தாளிகளுக்கு வெகுமதி.
4. ஈக்கள், வண்டுகளால் மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் ஈர்க்க, துர்நாற்றம் பரப்பும்
5. சாறு செல்களைக் கொண்ட மலர்களின் சாற்றை பூச்சிகள் ஓட்டையிட்டு உறிஞ்சும்.
25.
திறந்த விதைத் தாவரங்களில், மகரந்தச்சேர்க்கை நேரடியானது. மகரந்தங்கள் திறந்த சூலில் நேரடியாக போடப்படும்.
மூடுவிதைத் தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை மறைமுகமானது. மகரந்தங்கள் சூலக முடியில் இடப்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards