12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் I - 2020 ( 12th Standard Tamil Medium Biology Important Question All Chapter I 2020 )
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தவறான கூற்றைக் கண்டறி
சீம்பாலில் ________
அதிக அளவு லாக்டோஸ்
கொழுப்பு இல்லை
அதிக புரதங்கள்
விட்டமின் A
2.
குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எப்பொழுது தயாரிக்கப்பட்டது.
1960
1690
1969
1996
3.
குழந்தையின் செயல்களை______ மீயொலி நிழலுரு தொழில்நுட்பத்தால் அறியலாம்.
2-D
3-D
4-D
எவையுமில்லை
4.
| பகுதி I | பகுதி II | ||
|---|---|---|---|
| அ. | பிளாஸ்மோடியம் | ii. | ஸ்ட்ரோபிலா ஆக்கம் |
| ஆ. | அமீபா | ii. | ஸ்போரோசோயிட்டுகள் |
| இ. | பிளாஸ்மோடியம் | iii. | போலிக்காலிஸ்போர்கள் |
| ஈ. | எளிய கட்டமைப்பு கொண்ட பல செல் உயிரிகள் | iv. | மீரோசோயிட்டுகள் |
அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii
அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i
அ-i,ஆ-iv,இ-iii,ஈ-ii
அ-iv,ஆ-i,இ-ii,ஈ-iii
5.
மனித குரோமோசோம்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கை உடைய ஜீன்கள் காணப்படுபவை முறையே
குரோமோசோம் 1 & X
குரோமோசோம் 1 & Y
குரோமோசோம் 21 & Y
குரோமோசோம் X & Y
6.
7.
8.
வலிமிகுந்த மாதவிடாய் இவ்விதம் அழைக்கப்படும்
டிஸ்மெனோரியா
மெனோரேஜியா
அமெனோரியா
ஆலிகோமெனோரியா
9.
ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
25%
50%
100%
75%
10.
எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
அர்ரீனோடோக்கி
தெலிடோக்கி
ஆம்ஃபிடோக்கி
'அ' மற்றும் 'இ' இரண்டும்
11.
பெண்களின் எச்சுரப்பி, ஆண்களின் பல்போயூரித்ரல் சுரப்பிக்கு ஒப்பானவை? விளக்குக.
12.
ஹோலேன்ட்ரிக் ஜீன்கள் என்றால் என்ன?
13.
இந்திய அரசால் தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் இனப்பெருக்க நலனுக்குரிய திட்டங்கள் எவை?
14.
பிளவு மட்டத்தைப் பொறுத்து இரு சமபிளவின் வகைகள் யாவை?
15.
DNA பாலிமரேஸின் இரட்டைப் பணிகள் யாவை?
16.
முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை – வேறுபடுத்துக.
17.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
18.
மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?
19.
வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
20.
ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?
21.
பாலிலா இனப்பெருக்கம் அல்லது பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?
22.
இயற்கையான கரு எங்கு பதிகிறது? பிற இடங்களில் அந்நிய பதிவைப் பற்றிக் கூறு.
23.
குடும்ப மரம் என்றால் என்ன?
24.
மருத்துவ ரீதியான கருக்கலைப்பின் நன்மைகள்,தீமைகள் கூறு.
25.
கிடைமட்ட இருசமபிளவு முறையைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
26.
பின்வரும் படத்தை வரைந்து பாகங்களைக் குறி.
27.
மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது.
28.
முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக
29.
வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி எழுதுக.
30.
கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
31.
பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?
32.
கருவுறுதலின் நிகழ்வுகளை விவரி.
33.
ஒருவருக்கு பிறவியிலேயே பினைல் வளர்சிதை மாற்ற குறைபாட்டு நோய் ஏற்பட்டால் என்ன ஏற்படும்?
34.
விருப்பதுடனோ, வேண்டுமென்றோ, கருவளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மருத்துவமுறை எது? விளக்குக?
35.
இழப்பு மீட்டல் மற்றும் அதன் வகைகள் பற்றி விவரி.
36.
DNA இரட்டிப்படைதலோடு தொடர்புடைய நொதிகள் யாவை?
37.
இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?
38.
GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.
39.
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.
40.
இனமேம்பாட்டியலின் முறைகளை பற்றி எழுதுக.
41.
கலவிக்கால்வாய் திரவவெளிப்பாட்டை உருவாக்குவது _______
42.
44AA +XO _______
43.
ஆக்டினோஸ்பேரியம் கருவுறுதலில் _______ வகை தானா.
44.
பாலிமரேஸ் III ஐ நியூக்ளியோபிளாசத்திலிருந்து நீக்குவது _______ உருவாக்கத்தைப் பாதிக்கும்
45.
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன
46.
அ) கருத்தடை மாத்திரை நீண்டநாள் பயன்படுத்தினால் கருப்பைவாய் புற்று ஏற்படும்.
ஆ) PET ஸ்கேன் கருப்பை வாய்ப்புற்றைக் காண பயன்படும்.
இ) முதனிலைத் தடுப்பு 14 முதல் 18 வயது வரை காண HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
ஈ) ஓரினை இனப்பெருக்க முறை மூலம் கருப்பைவாய் புற்றுநோய் குறையும்.
47.
1.ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
2. ZW - ZZ வகை பால் நிர்ணயம் பழப்பூச்சியில் நடைபெறுகிறது.
3. லைகேயஸ் வகை ஊர்வனவற்றில் நடைபெறுகிறது.
4. XX -Xo வகை ஜிப்சி அந்தி பூச்சியில் நடைபெறுகிறது.
48.
அ.ஹைட்ராவானது உணவு பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில் புறமுகிழ்த்தல் மூலம் இனப்பெருக்கம் செய்யும்.
ஆ.நன்னீர் பஞ்சுகளில் உருவாகும் முகிழ்த்தல் ஜெம்யூல் எனப்படும்
இ .நாடாப் புழுவில் பழுத்த கண்டங்கள் தற்சிதைவு என்ற முறையில் தானாக பிரியும்.
ஈ. முழு உருவ மீட்பில் உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலும் மீண்டும் வளர்கிறது.
49.
பின்வருவனவற்றில் எது வாட்சன் - கிரீக் - மாதிரி DNA அமைப்பிற்கு பொருந்தாது
1. DNA இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளாலானது.
2. இவ்விரு இழைகளும் நேர் இணைபோக்காக அமைந்துள்ளன
3. பியுரின்கள் பிரிமிடின்களோடு பிணைகின்றன
4. புரோகேரியோட்டுகளின் DNA க்கள் வட்ட வடிவமானதாயும் குரோமேட்டின் அமைப்பற்று காணப்படும் - இதற்கு ஜீனோஃபோர் என்று பெயர்.
50.
a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின்
b. பினைல் கீட்டோனூரியா - டைரோசின்
c.அல்பீனிசம் - மெலனின்
d.ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
51.
அ.இளம் உயிரிநிலை
ஆ.இனப்பெருக்க நிலை
இ. முதுமை நிலை
ஈ. இணைவு முறை இனப்பெருக்கம்
52.
ஈ. கோலையில் லாக்டோஸ் வளர்சிதை மாற்றம் __________ நடைபெற நொதி தேவைப்படவில்லை.
அ) நியுக்ளியோஸ்
ஆ) பெர்மியேஸ்
இ) β கேலக்டோஸிடேஸ்
ஈ) டிரான்ஸ் அசிட்டலேஸ்
53.
அ) கருக்குழல் தடை - அண்ட நாள வெட்டு
ஆ) விந்துக்குழல் தடை - விந்து நாள வெட்டு
இ) ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனம் - LNG 20
ஈ) தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனம் - Multiload 475
54.
| பகுதி-I | பகுதி-II | ||
|---|---|---|---|
| அ | பாலிலி இனப்பெருக்கம் | a . | மரபணு ஒத்த |
| ஆ | பாலினப்பெருக்கம் | b. | மரபணு ஒத்த |
| இ | அமீபா | c | எளிய இரு சமபிளவு |
| ஈ | பாரமீசியம் | d | நேரடி செல்பகுப்பு |
55.
அ) RNA பாலிநியுக்ளியோடைட் நீட்சி நடைபெறுகிறது - 5 - 3' திசை
ஆ) இரட்டிப்பதால் பகுதி குறிப்பது - 'ori'
இ) குரோமேடின் சில தொடர் மீள் தொன்று அலகுகளானது - குரோமோனீமா
ஈ) இறுகப் பிணைந்தும் அடர் நிறமேற்கும் பகுதி - ஹெட்டிரோ குரோமாடின்
56.
1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண்
2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண்
3. டவுண் சிண்ட்ரோம் - டிரைசோமி 23
4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
| நிகழ்வு | நடைபெறும் இடம் | |
|---|---|---|
| அ | படியெடுத்தல் | நியுக்ளியோலஸில் |
| ஆ | நகலெடுத்தல் | சைட்டோபிளாசம் |
| இ | மொழிபெயர்த்தல் | ரிபோசோம்கள் |
| ஈ | தோற்ற மாற்றமடைதல் | புரதம் |
58.
லிகேஸ்
59.
உறுதிக்கூற்று : அயல் கருவுறுதல் என்பது இணைவு முறை இனப்பெருக்கம் ஆகும்.
காரணம்: ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கச் செல் வெவ்வேறு பெற்றோர் மூலம் உருவாக்கப்படுகிறது.
அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு
ஈ.' 'உ' தவறு ஆனால் 'கா' சரி
60.
உறுதிப்படுத்துதல் A: எ.கோலையில் மொழிபெயர்த்தலின் தொடக்கமாக தொடக்கி கூட்டமைப்பு உருவாகிறது.
காரணம் R: N ஃபார்மைல் மெத்தியோனைன் கடத்து தூது இன் துவக்க முக்குறியத்தில் இணைகிறது.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
இ) 'A' சரியானது 'R' தவறானது
ஈ) 'A' மற்றும் 'R' தவறானது
61.
அ. நாடாப்புழுவில் வயதான பழுத்த கண்டங்கள் ஸ்ட்ரோபிலாவின் முன்முனையில் உள்ளது
ஆ. சீராக்கல் வகையான இழப்பு மீட்டலின்(எ .கா) சுவர்ப்பல்லி இழந்த வால்
இ . சாதகமான சூழ்நிலையில் அமீபா சிஸ்ட் எனும் பாதுகாப்பு உறையைச் சுரந்து செயலற்று உறைகிறது.
ஈ. வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.
62.
பின்வருவனவற்றுள் எது AUG ஐப் பொருத்த வரையில் சரியான கூற்று?
அ) இது மெத்தியோனின் குறியீடாகும்.
ஆ) இது துவக்கக் குறியீடாகும்
இ) இது புரோகேரியாட்டில் மெத்தியோனின் குறியீடாகும்.
ஈ) இவையனைத்தும்
63.
பாக்டீரியாவில் படியாக்கம் மற்றும் மொழியாக்கம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நடைபெறுகிறது.
1.
(a)
அதிக அளவு லாக்டோஸ்
2.
(b)
1690
3.
(c)
4-D
4.
(b)
அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i
5.
(b)
குரோமோசோம் 1 & Y
6.
(c)
7.
(c)
8.
(a)
டிஸ்மெனோரியா
9.
(b)
50%
10.
(a)
அர்ரீனோடோக்கி
11.
பர்த்தோலின் (அல்லது) பெரிய வெஸ்டிபுலார் சுரப்பிகள் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிக்கு ஒப்பானவை இவை வழவழப்பான கோழைத் திரவத்தைச் சுரக்கின்றன.
12.
1. Y சார்ந்த ஜீன்கள் ஹோலேன்ட்ரிக் ஜீன்கள் எனப்படும்.
2. இவைகளுக்கு இணையான அல்லீல்கள் X குரோமோசோமில் இல்லை.
3. Y சார்ந்த ஜீன்கள் Y குரோமோசோமுடன் சேர்ந்த கடத்தப்படுகிறது.
4. ஆண் பாலினத்தில் மட்டுமே தன் பண்புகள் புறத்தோற்றத்தில் வெளிப்படுத்துகின்றன.
13.
1. மாபெரும் குழந்தைகள் தடுப்பூசித் திட்டம்.
2. பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் உணவு வழங்கல்.
3. ஜனனி சுரக்ஷா யோஜனா
4. ஜனனி சிசு சுரக்ஷா கார்யகரம்.
5. ஒருங்கிணைந்த இனப்பெருக்க, தாய், சேய் வளர்குழந்தை, பதின்பருவத்தினர்க்கான ஆரோக்கிய அணுகுமுறை.
6. சுரக்ஷித் மாத்ரித்வா அபியான்.
14.
1. எளிய ஒழுங்கற்ற இரு சம பிளவு முறை
2. கிடைமட்ட இரு சம பிளவு முறை
3. நீள்மட்ட இரு சம பிளவு முறை
4. சாய்வு மட்ட இரு சம பிளவு முறை
15.
1. DNA பாலிமரேஸ் மூலக்கூறு DNA இரட்டிப்படைதலில் உதவுகிறது.
2. இது இரட்டிப்படைதலின் போது திடீர் மாற்றம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா எனக் கண்டறியும் (Proof Reading) சரிபார்த்தல் வேலையையும் செய்கிறது.
16.
| முதன்மை இழை | பின்தங்கும் இழை | |
| 1 | இது தொடர் இழை (அ) வழிகாட்டு இழை எனப்படும். இது 3' ⟶ 5' திசை கொண்ட வார்ப்புரு இழையில் இரட்டிப்பதால் - தொடர்ச்சியாக நடைபெறும். | மற்றொரு 5' ⟶ 3' திசை கொண்ட இழையின் இரட்டிப்பதால் தொடர்ச்சியற்றதாகும். இது பின்தங்கும் இழை எனப்படும். |
| 2 | DNA லிகேஸ் நொதி தேவைப்படுவதில்லை | தொடர்ச்சியற்ற புதிய துண்டங்களை DNA - லிகேஸ் நொதி ஒன்றிணைக்கின்றது. |
| 3 | உருவாக்கம் 5' ⟶ 3' திசையில் நடைபெறுகிறது. வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும் | இதன் திசை 5' ⟶ 3' ஆயினும் ஒட்டு மொத்த வார்ப்புரு இழையின் திசை 3' ⟶ 5' ஆகும். |
17.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
18.
(i) கருவுறுதல் நிகழ்ந்தவுடன், அண்டத்தின் சைட்டோபிளாசத்தில் காணப்படும். கார்டிகல் துகள்கள் அண்டத்தைச் சுற்றி, கருவுறுதல் சவ்வு(Fertilization) என்ற தடையை ஏற்படுத்தும்.
(ii) இதனால் மேலும் விந்து செல்கள் உள் நுழைவது தடுக்கப்படும். இதனால் பல விந்து செல்களால் கருவுறுதல் (polyspermy) தடுக்கப்படும்.
19.
| ஒத்தயினச்செல் பால் நிர்ணயம் | வேறுபட்ட இனச்செல் பால் நிர்ணயம் | ||
|---|---|---|---|
| 1. | ஒத்த இனச்செல்களை கொண்ட பெண் உயிரிகள் ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றன. | 1. | வேறுபட்ட இனச்செல்களை கொண்ட ஆண் உயிரிகள் இரண்டு வகையான விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன. |
| 2. | (உ.ம்) மனிதர்களில் பெண் ஒத்த இனச்செல்களை உருவாக்குபவை X குரோமோசோம் மட்டும் | 2. | மனிதர்களில் ஆண் இரண்டு விதமான இனச் செல்களை உற்பத்தி செய்கின்றன.X மற்றும் Y குரோமோசோம் கொண்ட இனச்செல்கள் |
20.
| ஒருங்கிணைப்பு | கருவுறுதல் | ||
|---|---|---|---|
| 1. | ஆண் மற்றும் பெண் முந்தைய மூல அணு உட்கரு, கருவுறுதலுக்குப் பின் இணைதல் | 1. | ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவதை கருவுறுதல் |
| 2. | கருவின் ஈரிணை நிலையை உறுதி செய்கிறது. | 2. | இது கருவுறுதலை உறுதிப்படுத்துகிறது. |
21.
(i) பாலிலா இனப்பெருக்கத்தை விட பாலினப் பெருக்கமே மேம்பட்டது.
(ii) பாலிலா இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் இருக்காது.
(iii) பாலினப் பெருக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
22.
1. இயற்கையாக கருப்பையின் உட்சுவரில் கரு பதித்தல் நடைபெறும்.
2. கருவுற்ற அண்டம், கருப்பைக்கு வெளியே பதிந்து வளரும் நிகழ்வு ;'இடம் மாறிய கர்ப்பம் ' எனப்படும்.
3. இது 95% அண்ட நாளங்களுக்குள் நடைபெறும்.
4. அண்ட நாளங்களுக்குள் கரு வளர்ந்தால்,உட்புற இரத்தக் கசிவு, நோய்த்தொற்று ஏற்படும் அண்ட நாளம் வெடித்து இறப்பும் ஏற்படலாம்.
23.
பொருத்தமான மரபு குறியீடுகளைக் கொண்டு வரையப்பட்ட படமே குடும்ப மரமாகும். இதன் மூலம் குறிப்பிட்ட பிறப்பண்புகளின் மரபுக்கடத்தல் வழிகளை கண்டறியலாம்.
24.
1. முதல் மும்மாதத்திற்குள் செய்வது பெண்ணின் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்காது.
2. இரண்டாம் மும்மாதத்தில் கருக்கலைப்பு அதிக ஆபத்து, ஏனெனில், வளர்கரு தாயின் உடற்திசுவில் நன்கு இணைந்து இருக்கும்.
3. பாலினப்பாகுபாட்டால், பெண்சிசுக்கொலைக்குப் பயன்படும்.
4. போலி மருத்துவர்கள் செய்வது பாதுகாப்பற்றது.
5. முதல் கர்ப்பக் கலைப்பு கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தும்.
25.
1. இதில் பிளவுமட்டம் உயிரியின் கிடைமட்ட அச்சில் ஏற்படுகின்றது.
2.பாரமீசியத்தில் பெரிய உட்கரு நேர்முகப் பிரிவு மூலம் சிறிய உட்கரு மறைமுகப்பிரிவு முறையிலும் பிரிவடைகின்றன.
26.
8 ஹிஸ்டோன் எண்மர்களை உடைய நியூக்ளியோசோமின் வரைபடம்.
A-DNA
B- H1 - ஹிஸ்டோன் (இணைப்பு DNA)
C - ஹிஸ்டோன் எண்மர் புரதம்
D - நியூக்ளியோசோம்
27.
காலம்:
மனித மரபணு திட்டம் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது நிறைவுற 13 ஆண்டுகளானது.
அளவு:
1. இது வரை வரிசைப்படுத்தப்பட்ட உயிரினங்களை விட மனித ஜீனோம் 25 மடங்கு பெரியது.
2. முதன் முதலில் நிறைவு செய்யப்பட்ட முதுகெலும்பி மரபணு மனிதனுடையதாகும்
3. இதில் 3 X 109 கார இணைவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தரவு சேமிப்பு மற்றும் பயன்பாடு:
1. மனித ஒரு செல்லின் மரபணு தரவுகள் சேமிக்க ஏறத்தாழ 3300 புத்தகங்கள் தேவை (1000 எழுத்துகள் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம்)
2. இவைகளை சேமிக்க, பெற, ஆய்வு செய்ய, அதிநவீன கணினி அமைப்புகள் தேவை.
பயோ - இன்ஃபர்மேடிக்ஸ்:
உயிரியலில் இந்த புதிய பிரிவு, கணினி அறிவையும், தொழில்நுட்பத்தையும், மனித மரபணு சார்ந்த தரவுகளை நிர்வகிக்க, ஆய்வுகளை செய்ய பயன்படுத்துகிறது.
இது போன்ற பல்வேறு தன்மைகளாலே மனித மரபணு திட்டம் (Human Genome Project) ஒரு மகா திட்டமாக கருதப்படுகிறது.
28.
அ) கொனோரியா அல்லது வெட்டை நோய்:
நோய்க்காரணி: நீஸ்ஸெரியா கொனோரியே
அறிகுறிகள்: சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு.
பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு
நோய் வெளிப்படும் காலம்: 2 - 5 நாட்கள்
ஆ) கிரந்தி அல்லது மேகப்புண்:
நோய்க்காரணி: டிரிபோனிமா பாலிடம்
அறிகுறிகள்:
முதல்நிலை: பாலுறுப்புகள் புறப்பகுதியில் வலியற்ற புண்கள்
இரண்டாம் நிலை: தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம், காய்ச்சல் மற்றும் முடிஉதிர்வு.
மூன்றாம் நிலை: மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப் பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை, மனநலபாதிப்பு, பார்வைக் கோளாறு, இதயப் பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன.
நோய் வெளிப்படும் காலம்: 10 - 90 நாட்கள்
இ) கல்லீரல் அழற்சி:
நோய்க்காரணி: ஹிபாடிடிஸ்
அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள்காமாலை, காய்ச்சல், தோல் தடிப்பு, வயிற்று வலி.
கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு.
நோய் வெளிப்படும் காலம்: 30 - 80 நாட்கள்
ஈ) எய்ட்ஸ் (AIDS):
நோய்க்காரணி: மனித தடைகாப்பு குறைப்பு வைரஸ்.
அறிகுறிகள்: நிணநீர் முடிச்சுகள் பெரிதாதல், நீண்ட நாள் காய்ச்சல், நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல்.
நோய் வெளிப்படும் காலம்: 2 - 6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்.
29.
வேறுபட்ட இனச்செல் பெண்கள் :
மீன்கள் ஊர்வன பறவைகளில் பெண் உயிரிகள் வேறுபட்ட இனச்செல்களை உற்பத்தி செய்கின்றன.
ZO-ZZ வகை
(i) இவ்வகை பால் நிர்ணயம் அந்திப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி வீட்டுக் கோழிகளில் காணப்படுகிறது.
(ii) இவைகளில் பெண்கள் வேறுபட்ட இனச்செல் வகை ZO சார்ந்தன.
(iii) இவைகளில் இரண்டு வகையான முட்டைகளை உற்பத்தி செய்கின்றன.
(iv) சில முட்டைகள் Z குரோமோசோம் அற்றும் O காணப்படுகின்றன.
(v) ஆண் அமைப்புகள் ஒத்த இனச்செல் வகை ஆகும்.
ZW-ZZ வகை
(i) இவ்வகை பால் நிர்ணயம் ஜிப்சி அந்திப்பூச்சி முதுகுநாண் உயிரிகளான மீன்கள் ஊர்வன மற்றும் பறவைகளில் காணப்படுகின்றன.
(ii) பெண் உயிரிகள் இருவகையான அண்டத்தை வெளியிடுகின்றன.
(iii) ஒரு Z குரோமோசோமையும் ஒரு W குரோமோசோமையும் பெற்றுள்ளன.
(iv) ஆண் உயிரிகள் ஒரே வகையான விந்து செல்களை ஒத்த இனச்செல் ZZ முறையில் உற்பத்தியாகின்றன.
30.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hCS - மனித கோரியானிக் சோமட்டோமாம்மோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின்
31.
(i) பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பெற்றோர்களின் பண்புகளையே கொண்டிருக்கும்.
(ii) இதையே பிரதி எனவும் சொல்லலாம்.
(iii) பிரதி என்பது பெற்றோரின் சாயலை கொண்ட சேய்களாகும்.
32.
1. விந்து செல்கள் திறனேற்றம் என்ற உயிர்வேதியச் செயலால் அண்ட செல்லைத் துளைக்கிறது.
2. நுண்பை செல்களின் உறைவழி சென்று, அண்டக சோனா பெலூசிடாவில் உள்ள ஏற்பி மூலக்கூறுகளுடன் இணைகிறது.
3. இந்த இணைவில் அக்ரோசம் வினை தூண்டப்படும்.
4. விந்தணு சோனா பெலூசிடா சிதைக்கப்பட்டு, விந்து பிளாஸ்மா சவ்வை அடையும்.
5. இந்த நொதியால், சோனா பெலூசிடா சிதைக்கப்பட்டு, விந்து பிளாஸ்மா சவ்வை அடையும்.
6. விந்து செல்லின் உட்கரு மற்றும் இதர பொருட்கள் அண்டத்தினுள் நுழைகிறது.
7. கார்டிகல் துகள்கள் சேர்ந்து கருவுறுதல் சவ்வை உருவாக்கும், இது பல விந்தணுக்கள் உள் நுழைவதைத் (Polypermy) தடுக்கிறது.
33.
பினைல் கீட்டோ நியூரியா :
1. இது பினைல் அலனைன் வளர்சிதை மாற்ற பிறவிக் குறைபாட்டு நோயாகும்.
2.உடல் குரோமோசோம்களில் உள்ள ஓர் இணை ஒடுங்கு மரபணுக்களால் இந்நோய் ஏற்படுகிறது.
3. குரோமோசோம் 12ல் அமைந்துள்ள பினைல் அலனைன் ஹைட்ராக்சிலேஸ் என்ற நொதிக்கு காரணமான PHA ஜீன் அமைந்துள்ளது.
4. பினைல் அலனைனை டைரோசினாக மாற்ற இந்நொதி அவசியமாகும்.
5. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்நொதி சுரக்காது.
6. இதனால் தேங்கிய பினைல் அலனைன்கள் பைருவிக் அமிலமாகவும் அதன்வழிப் பொருளாகவும் மாறுகின்றன.
7. பினைல் பைருவிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது.
8. இதன் விளைவால் அதி தீவிர மூளை குறைபாட்டு நோய் தோல் மற்றும் முடிகளில் குறைவான நிறமிகள் உண்டாகின்றன.
34.
மருத்துவ ரீதியான கருக்கலைப்பு (Medical Termination of Pregnancy)
1. அறுவைச் சிகிச்சையோ, கருவிகள் உள்நுழைத்தாலோ இன்றி செய்யப்படும்.
2. முதல் மும்மாதம் (12 வாரத்திற்குள்) செய்தால் பாதுகாப்பானது.
3. இரண்டாம் மும்மாதம் செய்தால் ஆபத்தானது, வளர்கரு தாயின் உடற்திசுவில் இணைத்துள்ளதால் அதிக ஆபத்தானது.
4. 1971 ல் இம்முறை இந்தியாவில் சட்டபூர்வமானது.
5. கட்டுப்பாடுகளுடன் இச்சட்டம் இயற்றப்பட்டதால், பாலினப்பாகுபாடு, பெண் சிசுக்கொலை தடுக்கப்படும்.
6. போலி மருத்துவரால் செய்யப்பட்டால் பாதுகாப்பற்றது.
7. முதல் கர்ப்பக் கருக்கலைப்பு கடும் உளவியல் விளைவுகளை உண்டாக்கும்.
35.
1. இழப்பு மீட்டல் பற்றிய ஆய்வை ஹைட்ராவில் முதன் முதலில் மேற்கொண்டவர் ஆபிரகாம் டிரம்பிளி (1740)
2. இழப்பு மீட்டல் இரண்டு வகைப்படும். அவை முழு உருவ மீட்பு மற்றும் உறுப்பு மீட்டலாகும்.
3. முழு உருவ மீட்பில் உயிரியின் சிறுபகுதி முழு உயிரியை உருவாக்கும்.(எ.கா) ஹைட்ரா
4. உறுப்பு மீட்பு இரு வகைப்படும். அவை சீராக்கல் மற்றும் மீண்டும் உருவாக்குதல்.
5. உடலில் ேதமுற்ற சில செல்கள் மட்டும் சரிசெய்யப்படுவது சீராக்கல் என்பதாகும்.
6. வெட்டுண்ட பகுதியை முழுமையாக உருவாக்குவது மீண்டும் உருவாக்குதல் என்பதாகும்.

36.
I. புரோகேரியாட்டுகள் - 3 விதமான பாலிமெரேஸ்கள் பங்காற்றுகிறது DNA பாலிமெரேஸ்
DNA வை வார்ப்புருவாகக் கொண்டு டி - ஆக்ஸி நியூக்ளியோடைடுகளை இணைக்கும் முக்கிய நொதி.
DNA பாலிமரேஸ் I & II - DNA பழுது நீக்கத்தில் பங்காற்றுகின்றன.
DNA பாலிமரேஸ் III - DNA இரட்டிப்படைதலின் முக்கிய நொதி
II யூகேரியோட்டுகள் - 5 வகையான பாலிமெரேஸ்கள் பங்காற்றுகின்றன.
இவை 3' - OH பகுதியில் நியூக்ளியோடைடுகளை இணைகின்றன.
நியூக்ளியேஸ்கள் - இரட்டிப்படைத்தலில் ஏற்படும் பிழைகளைச் சீர்படுத்த உதவுகின்றன.
ஹெலிகேஸ்கள் - இது DNA வின் சுருள் நீக்கி - தொடர்ந்து திருகுச்சுழலில் சிறு திறப்பின் வழி இரட்டிப்பாதல் பிளவு தோன்றுகிறது.
டோபோஐசோமரேஸ் - இது சுருள் பிரிந்து ஏற்படும் இரட்டிப்பாதல் பிளவுக்கு மேல் உள்ள அதிகச் சுருளை நீக்குகிறது.
DNA லிகேஸ்- பின் தங்கு இழையில் உருவாகியுள்ள சிறு துண்டங்களை (ஓகசாகி துண்டங்கள்) லிகேஸ் நொதி இணைக்கிறது.
37.
I - படியெடுத்தல்:
டி.என்.ஏவில் காணப்படும் செய்திகள் நகலெடுக்கப்படும் செயல்முறை:
DNA வின் ஒரு இழையில் காணப்படும் புரதத்திற்கான தகவல்களை குறியீடாக செல்லுக்கு கொண்டுசெல்வது தூது RNA (அ) mRNA
II - மொழிபெயர்த்தல்:
1. தூதுவிலுள்ள தகவல் குறியீடுகள் செல்லின் உட்கருவிலிருந்து சைட்டோபிளாசத்தை அடைகிறது.
2. இங்கு ரிபோசோம் RNA, கடத்தி RNA மற்றும் தூது RNA இவற்றுடன் பல்வேறு நொதிகளும் ஒரு அமைப்பாக சேர்ந்து மொழி பெயர்த்தல் படி நிலை நடைபெறும்.
3. இவ்வாறு ஒரு படிநிலைகளும் செல்லில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் நடைபெறுகிறது.
4. எனவே புரதச் சேர்க்கை இரண்டு படிநிலைகளில் நடைபெறுவதன் அனுகூலமாகும்.
38.
கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் :
(i) குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு உகந்தது.
(ii) கணவர், உடல் நலமிக்க கொடையாளிடம் இருந்து விந்து சேகரித்தல்.
(iii) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், கலவிக் கால்வாய் வழி கருப்பையினுள் செலுத்தல்.
(iv) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
39.
மாதவிடாய் சுழற்சி :
பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை கர்ப்ப காலம் தவிர, சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி(அண்டகச் சுழற்சி) நிகழும்.
1. மாதவிடாய் நிலை (3-5 நாட்கள்) (Menstrual Phase) :
(i) புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறைகிறது.
(ii) கருப்பைச் சுவர் எண்டோமெட்ரியம், அதன் இரத்தக் குழல்கள் சிதைந்து,மாதவிடாய் ஒழுக்கு வெளியாகும்.
(iii) அண்டம் கருவுறாவிட்டால் மாதவிடாய் ஏற்படும்.
(iv) மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது,கருவுற்று இருப்பதன் அறிகுறி.
(v) மன அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள், இரத்த சோகை போன்றவற்றால் மாதவிடாய் ஏற்படாது.
2. நுண்பை நிலை(பெருகு நிலை): (Follicular Phase,Proliferative Phase)
(i) மாதவிடாயின் 5 ஆம் நாளிலிருந்து, அண்டம் விடுபடும் வரை உள்ள காலகட்டம்.
(ii) FSH,LH ஹார்மோன்களின் சுரப்பு சீராக அதிகரிக்கிறது.
(iii) முதல்நிலை நுண்பை செல்கள், முதிர்ந்த கிராபியன் நுண்பை செல்களாக மாறுகின்றன.
(iv) எண்டோமெட்ரியம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.
(v) நுண்பை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அவற்றினிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கின்றது.
3. அண்ட செல் விடுபடும் நிலை (Ovulatory Phase)
(i) LH,FSH ஹார்மோன்கள் உச்ச நிலையை அடைகின்றன.
(ii) LH எழுச்சியினால் முதிர்ந்த கிராபியன் நுண்பை உடைகிறது.
(iii) இரண்டாம் நிலை அண்ட செல், அண்டகச் சுவர் வழியாக வயிற்றுக்குழியை அடைகிறது. இது அண்டம் விடுபடுதல் எனப்படும்.
4. லூட்டியல் அல்லது சுரப்பு நிலை(Luteal (or) Secretory Phase)
(i) எஞ்சியுள்ள கிராபியன் ஃபாலிக்கிள்,கார்ப்பஸ் லூட்டியம் எனும் இடைக்கால நாளமில்லா சுரப்பியாகும்.
(ii) கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. இது கருமுட்டை புதிய ஏற்ற சூழலை உருவாக்கும்.
(iii) கருப்பை உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த, திரவத்தை கருவிற்கு உற்பத்தி செய்கிறது. இது சுரப்பு நிலை.
(iv) கருவுறுதல் நிகழாவிடில், கார்பஸ் லூட்டியம் சிதைந்து, கார்பஸ் அல்பிகன்ஸ் எனும் வடுவாகிறது.
40.
இனமேம்பாட்டியலின் முறைகள்
இன மேம்பாட்டியல் என்பது மனித இனத்தை மேம்படுத்துவதற்காக மரபியல் விதிகளை பயன்படுத்துவது ஆகும். 1885 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கால்டன் அவர்கள் யூஜெனிக்ஸ் என்ற சொல்லினை உருவாக்கினார். யூஜெனிக்ஸ் என்பதன் பொருள் நல்ல பிறப்பு ஆகும். நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் பிரான்சிஸ் கால்டன் ஆவார்.
நேர்மறை இனமேம்பாட்டியல்
சிறந்த அல்லது விரும்பத்தக்க வளர்கரு பிளாசத்தினை தொடர்ந்து நிலையாக அதிகரிக்கவும், சமூகத்தின் சிறந்த வளர்கரு பிளாசத்தினை பாதுகாக்கவும் முயல்வது நேர்மறை இனமேம்பாட்டியல் ஆகும்.
எதிர்மறை இனமேம்பாட்டியல்
எதிர்மறை இனமேம்பாட்டியல் என்பது சமூகத்தில் குறைபாடு உடைய வளர்கரு பிளாசத்தினை வெளியேற்றுவது ஆகும்.
41.
( )
கேன்டிடா அல்பிகன்ஸ்
42.
( )
டர்னர் சிண்ட்ரோம்
43.
( )
தன் கருவுறுதல்
44.
( )
கடத்து RNA
45.
( )
mRNA, tRNA
46.
முதனிலைத் தடுப்பு 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
47.
ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
48.
ஹைட்ராவானது உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில் புறமுகிழ்த்தல் மூலம் இனப்பெருக்கம் செய்யும்.
49.
2. இவ்விரு இழைகளும் நேர் இணைபோக்காக அமைந்துள்ளன
50.
ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
51.
இணைவு முறை இனப்பெருக்கம்
52.
அ) நியுக்ளியோஸ்
53.
தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனம் - Multiload 375
54.
ஆ.பாலினப்பெருக்கம் -மரபணு ஒத்த
55.
இ) குரோமேடின் சில தொடர் மீள் தொன்று அலகுகளானது - குரோமோனீமா
56.
பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
இ) மொழி பெயர்த்தல் - ரிபோசோம்கள்
58.
DNA துண்டுகளை ஒட்டுகிறது
59.
'உ' சரி ஆனால் 'கா' தவறு
60.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
61.
( )
வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.
62.
( )
ஈ) இவையனைத்தும்
63.
(a)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards