12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய வினா விடைகள் I 2019 - 2020 ( 12th Standard Tamil Medium Biology Important Question I 2019-2020 )
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கருப்பையின் பெரும்பாலான பகுதி
கருப்பை வாய்
உடல்
குவிமுகடு
கலவிக் கால்வாய்
2.
ஹீமோபீலியா அறிவித்தவர்
ஜாண் கோட்டோ
டிஜோ மற்றும் லீவான்
பார் பெர்ட்ராம்
மேரிலியான்
3.
பொருந்தாத ஒற்றைச் சொல் எது?
பாக்டீரியா, வைரஸினால் மறு உருவாகுபவை
கிளாமிடியாசிஸ்
பிறப்புறுப்பு அக்கி
பிறப்புறுப்பு மரு
டிரைகோமோனியாசிஸ்
4.
| பகுதி -I | பகுதி -II | ||
|---|---|---|---|
| அ . | எளிய ஒழுங்கற்ற இரு சமபிளவு | i. | யூக்ளினா |
| ஆ. | கிடைமட்ட இருசமபிளவு | ii. | Dinoflagellates |
| இ) | நீள்மட்ட இருசமபிளவு | iii | அமீபா |
| ஈ) | சாய்வுமட்ட இருசமபிளவு | iv | பாரமீசியம் |
அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i
அ-ii,ஆ-i,இ-iv,ஈ-iii
அ-iv,ஆ-ii,இ-iii,ஈ-i
அ-iii,ஆ-iv,இ-i,ஈ-i
5.
RNA பாலிமெரேஸ் படியெடுப்பது
ஊக்குவிக்கும் மற்றும் அமைப்பு மரபணு
ஊக்குவிக்கும் மற்றும் முடிவுறுப்பகுதி
அமைப்பு மரபணு மற்றும் முடிவுறும் பகுதி
அமைப்பு மரபணு மட்டும்
6.
புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
டி.என்.ஏ இரட்டிப்பாதல் ஒற்றை மூலத்திலிருந்து துவங்கும்.
டி.என்.ஏ இரட்டிப்பாதல் அதன் மூலத்திலிருந்து இரு திசைகளில் நிகழும்
ஒரு நிமிடத்திற்கு 1 மில்லியன் கார இணைகள் என்ற வீதத்தில் இரட்டிப்பாதல் நிகழ்கிறது.
ஏராளமான பாக்டீரியா குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.
7.
கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?
கிளாமிடியாஸிஸ் ஒரு வைரஸ் நோய்
டிரிப்பனோசோமா பாலிடம் எனும் ஸ்பைரோகீட் பாக்டீரியத்தால் வெட்டைநோய் தோன்றுகிறது.
கிரந்தி நோயின் நோய் வெளிப்படு காலம் ஆண்களில் 2 முதல் 14 நாட்கள், பெண்களில் 7 முதல் 21 நாட்கள்.
எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.
8.
கூற்று மற்றும் காரண வினாக்கள்:
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
A – விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
R – அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.
‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.
9.
ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.
மீன்கள்
ஊர்வன
பறவைகள்
மேற்கண்ட அனைத்தும்
10.
இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் _______.
முட்டையிடுபவை
தாயுள் முட்டை பொரித்து குட்டி ஈனுபவை
குட்டி ஈனுபவை
'அ' மற்றும் 'ஆ' இரண்டும்
11.
ஆண் இனப்பெருக்க மண்டல துணைச்சுரப்பிகள் எவை?
12.
Zw - Zz வகை பால்நிர்ணய உயிரிகளில் பெண்கள் வேறுபட்ட இனச்செல் பண்பினை உடையவர்கள் உதாரணம் தருக.
13.
வேதிப்பொருள் கருத்தடை முறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எவை?
14.
பாலினப் பெருக்கம் என்றால் என்ன?
15.
TATA பெட்டி & பிரிப்னோ பெட்டி வேறுபடுத்துக.
16.
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை
17.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
18.
ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் – வேறுபடுத்துக
19.
ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?
20.
பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.
21.
மார்பக அளவுக்கும், பால் சுரப்புத் திறமைக்கும் தொடர்பில்லை, விளக்குக.
22.
மெண்டலின் மரபுக்குறைபாடுகளை பட்டியலிடுக.
23.
கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் (IUI), கருப்பை உள்இடமாற்றம் (IUT) வேறுபடுத்துக.
24.
நாடாப்புழுக்கள் இனப்பெருக்கம் பற்றி சிறுகுறிப்பு வரைக.
25.
ஊஞ்சலாட்டக் கோட்பாடு யாது?
26.
கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
AAU, CGA, UAU மற்றும் GCA
27.
முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக
28.
விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?
29.
டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?
30.
பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?
31.
மகப்பேற்றின் நிகழ்வுகளை விவரி.
32.
ஆண் வளர்ச்சியில் 'Y' குரோமோசோமின் பங்கினை விவரி ?
33.
கருவின் குறைபாடுகளைக் கர்ப்பகாலத் துவக்கத்தில் எவ்வாறு கண்டறியலாம்?
34.
இழப்பு மீட்டல் மற்றும் அதன் வகைகள் பற்றி விவரி.
35.
DNA - வின் சிறப்பியல்புகளை எழுதுக.
36.
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா?
37.
பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.
38.
கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

39.
தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி
40.
கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும் இழப்பு மீட்டல்
41.
விந்தக மேல்சுருள் நாள அழற்சியை உருவாக்குவது ________
42.
44AA +XO _______
43.
பிளாஸ்மோடியத்தின்________ மனிதனின் இரத்த சிவப்பணுக்களில் உருவாகிறது.
44.
பாலிமரேஸ் III ஐ நியூக்ளியோபிளாசத்திலிருந்து நீக்குவது _______ உருவாக்கத்தைப் பாதிக்கும்
45.
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன
46.
அ) கொனோரியாவில் பிறப்புப்பாதையில் சீழ்வடியும்
ஆ) பரவும் தன்மையற்ற கட்டி மேகப்புண்ணில் தோன்றும்
இ) கிளாமிடியாஸிஸ் கண் இமை அரிப்பு தோன்றும்
ஈ) பிறப்புறுப்பு அக்கி உள்கருப்பை வாய் அழற்சியை உண்டாக்கும்.
47.
1.ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
2. ZW - ZZ வகை பால் நிர்ணயம் பழப்பூச்சியில் நடைபெறுகிறது.
3. லைகேயஸ் வகை ஊர்வனவற்றில் நடைபெறுகிறது.
4. XX -Xo வகை ஜிப்சி அந்தி பூச்சியில் நடைபெறுகிறது.
48.
அ.ஹைட்ராவானது உணவு பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில் புறமுகிழ்த்தல் மூலம் இனப்பெருக்கம் செய்யும்.
ஆ.நன்னீர் பஞ்சுகளில் உருவாகும் முகிழ்த்தல் ஜெம்யூல் எனப்படும்
இ .நாடாப் புழுவில் பழுத்த கண்டங்கள் தற்சிதைவு என்ற முறையில் தானாக பிரியும்.
ஈ. முழு உருவ மீட்பில் உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலும் மீண்டும் வளர்கிறது.
49.
1. முதல் மரபணுப் பொருள் RNA ஆக இருக்கக்கூடும்.
2. DNA மற்றும் ஹிஸ்டோன் புரதங்களின் ஒட்டு மொத்த மின் ஆற்றல் - ஜீரோ
3. படியெடுத்தலின் துவக்கத்திற்கு வினையூக்கியாக இருப்பது பாலிமரேஸ்
4 ரிபோசோம் தூது RNA வினால் தூண்டப்பட குறிப்பிட்ட அடர்வு Mg ++ தேவை.
50.
a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின்
b. பினைல் கீட்டோனூரியா - டைரோசின்
c.அல்பீனிசம் - மெலனின்
d.ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
51.
அ. முட்டையிடுபவை
ஆ. கன்னி இனப்பெருக்கம்
இ.குட்டி ஈனுபவை
ஈ.தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும்
52.
கிரிஃபித்தின் சோதனையை செய்து பார்த்து அதில் மேற்கொண்டு ஆய்வுகளைத் தொடர்ந்தவர்கள்
அ) கோலின் மெக்லியாய்டு
ஆ) மெக்கார்டி மெக்கார்டி
இ) ஆஸ்வால்ட் ஓவரி
ஈ) பிரிடெரிக் கிரிஃபித்
53.
அ) கேன்டிடியாசிஸ் - பூஞ்சை
ஆ) டிரைகோமோனியாசிஸ் - வைரஸ்
இ) பிறப்புறுப்பு மருக்கள் - வைரஸ்
ஈ) கிளாமிடியாசிஸ் - பாக்டீரியா
54.
| பகுதி I | பகுதி II | ||
|---|---|---|---|
| அ | பாலிலி இனப்பெருக்கம் | a. | மரபணு ஒத்த |
| ஆ. | பாலினப்பெருக்கம் | b. | மரபணு ஒத்த |
| இ. | அமீபா | c . | ஒபலினா |
| ஈ. | நாடாப்புழு | d | டீனியா சோலியம் |
55.
அ) உயிர்களின் வேதியியலில் செயல்மிகு உட்பொருளாக RNA இருக்கிறது - ஆண்ட்ரூ பையர் மற்றும் கிரேக் மெல்லோ
ஆ) புரதம் மரபணுப் பொருள் எனக் கருதியவர் - அவெரி - மெக்ளியாய்டு
இ) X - கதிரியக்க சிதறல் வழி பெறப்பட்ட படங்களின் ஆய்வை மேற்கொண்டவர்கள் - வாட்சன் மற்றும் கிரிக்
ஈ) DNA மரபணுப் பொருள் என்பதற்காக ஏற்றுக்கொள்ளக் கூடிய சான்றினைத் தந்தவர் - ஹெர்ஷே மற்றும் சேஸ்
56.
1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண்
2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண்
3. டவுண் சிண்ட்ரோம் - டிரைசோமி 23
4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
அ) RNA தயாரிக்கும் இடம் - நியுக்ளியஸ்
ஆ) படியெடுத்தலில் இன்ட்ரான்களை நீக்கி எக்ஸான்கள் இணைவது - இழைத்தல்
இ) ரிபோசோம்கள் வரிசையாக இணைந்து காணப்படுவது - பாலிசோம்கள்
ஈ) RNA பாலிமரேஸ் நிகழ்வு நிறுத்தப்படக் காரணமான காரணி - சிக்மா
58.
DNA-ஏஸ்
59.
உறுதிக்கூற்று : செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் தூண்டுதல் மூலம் நடைபெறுகிறது.
காரணம் :அவை உயிரி மூலம் தூண்டப்படுகிறது.
அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு
ஈ.' 'உ' தவறு ஆனால் 'கா' சரி
60.
உறுதிப்படுத்துதல் A: கடத்து RNA, RNA க்களில் மிகச் சிறிய மூலக்கூறாகும்.
காரணம் R: கடத்து RNA க்கள் அமினோ அமிலங்களை சைட்டோபிளாசத்திலிருந்து புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்கிறது.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
இ) 'A' சரியானது 'R' தவறானது
ஈ) 'A' மற்றும் 'R' தவறானது
61.
அ.கன்னி இனப்பெருக்கம் மூலம் இளம் சேய் செல்கள் புதிய உயிரியை தோற்றுவிப்பது தான் இளம் செல்சேர்க்கை எனப்படும்.
ஆ. குட்டி ஈனும் உயிரிகளின் முட்டை கடினமான முட்டை ஓடுகள் உடையதாக இருக்கும்.
இ.ஹைட்ரா ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.
ஈ. முழுவளர்ச்சி பெற்ற ஜெம்மியூல் உறுதியான பந்து போன்ற அமைப்புடையதாகும். இதன் வெளிப்பகுதியில் உணவுப் பொருள் தாங்கிய ஆர்க்யோசைட்டுகள் உள்ளன
62.
பின்வருவனவற்றுள் எது AUG ஐப் பொருத்த வரையில் சரியான கூற்று?
அ) இது மெத்தியோனின் குறியீடாகும்.
ஆ) இது துவக்கக் குறியீடாகும்
இ) இது புரோகேரியாட்டில் மெத்தியோனின் குறியீடாகும்.
ஈ) இவையனைத்தும்
63.
பொருளற்ற குறியீடுகள் எனப்படும் UAA, UAG மற்றும் UGA ஆகியவை நிறைவுக் குறியீடுகளாகவும் செயல்படுகின்றன.
1.
(b)
உடல்
2.
(a)
ஜாண் கோட்டோ
3.
(d)
டிரைகோமோனியாசிஸ்
4.
(a)
அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i
5.
(d)
அமைப்பு மரபணு மட்டும்
6.
(d)
ஏராளமான பாக்டீரியா குரோமோசோம்களில், ஒவ்வொன்றிலும் இரட்டிப்பாதல் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.
7.
(d)
எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.
8.
(d)
‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.
9.
(d)
மேற்கண்ட அனைத்தும்
10.
(c)
குட்டி ஈனுபவை
11.
1. ஓரினை விந்துப் பைகள்
2. கௌபரின் சுரப்பி
3. பல்போயூரித்ரல் சுரப்பி
4. புரோஸ்டேட் சுரப்பி
12.
ஜிப்சி அந்திப் பூச்சி, மீன்கள், ஊர்வன, பறவைகள்
13.
1. நுரைக்கும் மாத்திரைகள்
2. உட்கரையும் மாத்திரைகள்
3. ஜெல்லிகள்
4. களிம்புகள்
இவை கலவிக் காலத்தில் விந்தணுக்களைச் செயல் இழக்கச் செய்யும்.
14.
இனப்பெருக்க செயலில் இரு பெற்றோர் ஈடுபட்டு இரண்டுவகை இனச்செல்கள் இணைந்து நடைபெறும் இனப்பெருக்கம் பாலினப் பெருக்கமாகும்.
15.
| TATA பெட்டி | பிரிப்னோ பெட்டி |
| யுகேரியாட்டுகளில் ஊக்குவிப்பான் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான (A) அடினைன் மற்றும் (T) தைமின் ஆகியவை உள்ள பகுதி TATA பெட்டி எனப்படுகிறது | புரோகேரியாட்டுகளில் (A) அடினைன் மற்றும் (T) தைமின் அதிக எண்ணிக்கையில் உள்ள ஊக்குவிப்பான் பகுதி பிரிப்னோ - பெட்டி என அழைக்கப்படுகிறது. |
| இது கோல்ட்பெர்க் - ஹோக்னெஸ் பெட்டி எனவும் அழைக்கப்படுகிறது |
16.
| வார்ப்புரு இழை | குறியீட்டு இழை | |
| 1 | இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது. | இது வார்ப்புரு பணியைச் செய்வதில்லை |
| 2 | இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது. | இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே mRNA இழையில் காணப்படுவதேயாகும். |
| 3 | இது 3' ⟶ 5' திசையில் கொண்டது | இது 5' ⟶ 3' திசையில் கொண்டது |
17.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
18.
| ஸ்பெர்மியோஜெனிசிஸ் | ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் |
|---|---|
| விந்து செல் உருவாக்கத்தில்,ஸ்பெர்மாடிட்கள் முதிர்ந்த, முழுமையான விந்து செல்லாக மாறும் செயல் ஸ்பெர்மியோஜெனிசிஸ் எனப்படும். | விந்தகங்களில், விந்து நுண் சூழல்களில் வரிசையாக நடைபெறும் செயல்களினால் ஆண் இனச் செல்கள் அல்லது விந்துக்கள் உற்பத்தி செய்யப்படுதல் விந்துசெல் உருவாக்கம் எனப்படும். |
19.
(i) Y குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் Y சார்ந்த மரபணுக்கள் அல்லது ஹோலண்டிரிக் ஜீன்கள் எனப்படும்.
(ii) 'Y' சார்ந்த மரபணுக்களுக்கு இணையான அல்லீகள் X குரோமோசோமில் இல்லை.
(iii) 'Y' சார்ந்த மரபணுக்கள் Y குரோமோசோமுடன் சேர்ந்தே கடத்தப்படுகிறது.
(iv) ஆண் பாலினத்தின் மட்டுமே அல்லீல்கள் பண்புகளை புறத்தோற்றத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.
20.
(i) கன்னி இனப்பெருக்கம் என்பது அந்நிகழ்வின் பெயர்
(ii) வான்கோழியில் கன்னி இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
21.
1. மார்பக வளர்ச்சி பூப்பெய்தலில் தொடங்குகிறது.
2. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும் முன்னேற்றமடைகிறது.
3. கருவுறாத பெண்களில் பால் சுரப்பிகள், சரியாக வளர்ச்சியடைவதில்லை.
4. மார்பக அளவு, படிந்துள்ள கொழுப்பைப் பொறுத்துள்ளது. மார்பக அளவுக்கும், பால் சுரப்புத் திறனுக்கும் தொடர்பில்லை.
22.
1. தலாசீமியா
2. அல்பினிசம்
3. பினைல்கீட்டோநியூரியா
4. அரிவாள் இரத்த சோகை
5. பினைல் கீட்டோநியூரியா
23.
| கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் (IUI) | கருப்பை உள்இடமாற்றம்(IUT) | ||
|---|---|---|---|
| 1. | குறைந்த எண்ணிக்கையில் விந்துசெல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு | 1. | இது ஒரு இனப்பெருக்கத் துணை தொழில் நுட்பம் |
| 2. | விந்துக் கொடையாளரின் விந்து நுண்குழல் மூலம், கலவிக்கால்வாய் வழியாக கருப்பையினுள் செலுத்தப்படும். | 2. | 8 பிளாஸ்டோமியர்களை விட அதிக செல்களைக் கொண்ட கரு, கருப்பையினுள் செலுத்தப்பட்டு, முழுவளர்ச்சியடையும். |
24.
1. இது ஒரு பாலினப்பெருக்க முறையாகும்.
2. பழுத்த கண்டங்கள் பிரிந்து ஒவ்வொரு தனி உயிராக வளர்கின்றது.
3. இந்நிலையில் முதல்நிலை விருந்தோம்பியிடமிருந்து இரண்டாம் நிலை விருந்தோம்பியை அடைய உதவுகிறது.
25.
உருவாக்கியவர் கிரிக் - 1966
(i) தனது 5' முனையில் கடத்து RNA வின் எதிர்க்குறியீடு தூது RNA வின் குறியீடுகளுடன் இணையும் போது சில நேரம் மூன்றாவது காரம் இணையற்றதாகக் காணப்படுவதை ஊஞ்சலாட்ட நிலை (Wobble Position) எனப்படுகிறது.
முக்கியத்துவம்
(i) இரண்டு இடங்களில் காரங்கள் இருக்க ஒரு பாலிபெப்டைடு உருவாக்க கடத்து RNAக்களின் தேவை குறைக்கப்படுகிறது.
(ii) மேலும் சிதைத்தல் குறியீடுகளின் விளைவில் இருந்து விரைவில் வெளியே வருகிறது.
(iii) குறியீடும் எதிர் குறியீடும் சரியாகப் பொருந்தாத போதும் தேவையான அமினோ அமிலம் கொணரப்படுகிறது
எ.கா. - வேலைன் எனும் அமினோ அமிலம் (GUA, GUC, GUU, GUG)
26.
27.
அ) கொனோரியா அல்லது வெட்டை நோய்:
நோய்க்காரணி: நீஸ்ஸெரியா கொனோரியே
அறிகுறிகள்: சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு.
பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு
நோய் வெளிப்படும் காலம்: 2 - 5 நாட்கள்
ஆ) கிரந்தி அல்லது மேகப்புண்:
நோய்க்காரணி: டிரிபோனிமா பாலிடம்
அறிகுறிகள்:
முதல்நிலை: பாலுறுப்புகள் புறப்பகுதியில் வலியற்ற புண்கள்
இரண்டாம் நிலை: தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம், காய்ச்சல் மற்றும் முடிஉதிர்வு.
மூன்றாம் நிலை: மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப் பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை, மனநலபாதிப்பு, பார்வைக் கோளாறு, இதயப் பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன.
நோய் வெளிப்படும் காலம்: 10 - 90 நாட்கள்
இ) கல்லீரல் அழற்சி:
நோய்க்காரணி: ஹிபாடிடிஸ்
அறிகுறிகள்: சோர்வு, மஞ்சள்காமாலை, காய்ச்சல், தோல் தடிப்பு, வயிற்று வலி.
கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு.
நோய் வெளிப்படும் காலம்: 30 - 80 நாட்கள்
ஈ) எய்ட்ஸ் (AIDS):
நோய்க்காரணி: மனித தடைகாப்பு குறைப்பு வைரஸ்.
அறிகுறிகள்: நிணநீர் முடிச்சுகள் பெரிதாதல், நீண்ட நாள் காய்ச்சல், நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல்.
நோய் வெளிப்படும் காலம்: 2 - 6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்.
28.
(i) விந்துப்பைகள் செமினல் பிளாஸ்மா என்ற காரத்தன்மை கொண்ட திரவத்தைச் சுரக்கின்றன.
(ii) புரோஸ்டேட் சுரப்பி, பல்போயுரித்ரல் சுரப்பி போன்றவற்றின் சுரப்புகள் மற்றும் செமினல் பிளாஸ்மா சேர்ந்த பால் போன்ற வெண்மை நிறத் திரவமே 'விந்துத் திரவம்' எனப்படும்.
(iii) இது விந்து செல்களைக் கடத்தும் ஊடகமாகவும், உணவூட்டமளிக்கவும் பயன்படும். விந்து செல்களின் பாதுகாப்பு, இயக்கத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டுள்ளது.
(iv) செமினல் பிளாஸ்மா திரவத்தில் பிரக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், புரோஸ்டகிளாண்டின்கள் உள்ளன. விந்து திரவத்தை உறைய வைக்கும் நொதியான வெஸிகுலேஸ் உள்ளது. இந்நொதி விந்து செல் இயக்கத்தைத் துரிதப்படுத்தும்.
29.
(i) தீவிர மூளை வளர்ச்சி குறைபாடு
(ii) மைய நரம்பு மண்டல வளர்ச்சி பாதிக்கப்படுதல்
(iii) தட்டையான மூக்கு
(iv) செவி குறைபாடு
(v) வாய் எப்போதும் திறந்திருத்தல்
(vi) நாக்கு வெளியே நீட்டியவாறு இருத்தல்
30.
(i) பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பெற்றோர்களின் பண்புகளையே கொண்டிருக்கும்.
(ii) இதையே பிரதி எனவும் சொல்லலாம்.
(iii) பிரதி என்பது பெற்றோரின் சாயலை கொண்ட சேய்களாகும்.
31.
1. மகப்பேறு என்பது கர்ப்பகாலம் நிறைவடைந்து, குழந்தை பிறத்தலைக் குறிக்கும்.
2. உடலில் வலி ஏற்படும் வரிசை சிரமமான நிகழ்வுகள் மகப்பேறு வலி எனப்படும்.
3. கர்ப்பகாலம் முழுவதும், கருப்பை சுருக்கங்களை ஏற்படுத்தும். இவை பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் ஆகும்.
4. இந்த இடப்பெயர்ச்சி மற்றும் கருப்பை வாய், கலவிக்கால்வாய் ஆகியவை விரிவதால்.'கரு வெளித்தள்ளல்' அனிச்சைச் செயல் அல்லது பெர்குஸன் அனிச்சைச் செயல் நடைபெறும்.
5. ஈஸ்ட்ரோன், கருப்பை சுருக்கங்களை அதிகப்படுத்தும், இது கரு உருப்பெறவும், கீழ்நோக்கி இடம்பெயர உதவுகிறது.
6. ஆக்ஸிடோஸின்,, கருப்பையில் ஆற்றல் மிகுந்த சுருக்கங்களை உருவாக்கி, குழந்தை வெளியேறுவதை நிறைவு செய்கிறது. இது குழந்தை பிறப்பு அல்லது மகப்பேறு எனப்படும்.
32.
1. Y குரோமோசோமின் இரு முனைகளிலும் போலி உடல் குரோமோசோம் பகுதிகள் உள்ளன.
2. இதற்கு இணையான பகுதிகள் X குரோமோசோமிலும் உள்ளன.இப்பகுதியில் குன்றல் பகுப்பின் குறுக்கெதிர் மாற்றமும் மறு இணைவு நடைபெறுகின்றன.
3. மீதம் உள்ள 95% 'Y' குரோசோமினுடைய பகுதிகள் இணையா 'Y' பகுதியாகும் (NRY)
4. 'NRY" செயல்படும் மரபணுக்கள் பகுதி மற்றும் செயல்படா மரபணுக்கள் பகுதி என இரண்டு சமமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
5. செயல்படும் மரபணு பகுதியில் பால் நிர்ணயப்பகுதி 'Y' மரபணு உள்ளன.
6. மனிதனில் Y குரோமோசோம் இல்லாநிலையில் பெண் உயிரியாக வளர்ச்சி அடைய வழி வகுக்கிறது.
7. பால் நிர்ணய மரபுப்பகுதி X குரோமோசோமில் இல்லை.
8. இந்த பால் நிர்ணய பகுதி Y யின் மரபணு விளைபொருள் முதிர்ந்த ஆணின் விந்தகத்தில் காணப்படும் விந்தகம் நிர்ணய காரணி ஆகும்.
33.
(i). மீயொலி வரியோட்டம் (Ultra Sound)
1. முதல் மும்மாதக் கருவளர்ச்சியின் போது செய்யப்படும்.
2. கருவின் எண்ணிக்கை, பிறப்பு தேதி அறியலாம்.
3. தொடக்க கர்ப்பகாலக் பிரச்சனைகள் அறியலாம்.
4. 2D,3D,4D வகைகள் உள்ளன.
(ii) பனிக்குடத்துடைப்பு (Amniocentesis)
1.15 முதல் 20 வாரக் கருவளர்ச்சியில் செய்யலாம்.
2. ஊசியினால் கருவின் உதிர்ந்த செல்கள் கொண்ட, பனிக்குடத்திரவம் சேகரிக்கப்படும்.
3. குரோமோசோம் பிறழ்ச்சிகளை அறியலாம்.
(iii) கோரியான் நுண்நீட்சி ஆய்வு (CVS)
தாய் சேய் இணைப்புத்திசுவை ஆய்வு செய்து, குரோமோசோம் பிறழ்ச்சியை அறியலாம்.
(iv) கருகண்காணிப்புக் கருவி (Foetoscope)
1. வளர்கரு இதயத்துடிப்பு, கர்ப்பகால இறுதிச் செயல்கள், பிரசவ வலி அறியலாம்..
2. கருவின் சராசரி இதயத்துடிப்பு 120 முதல் 150 நிமிடம்
3. இயல்புக்கு மாறான இதயத்துடிப்பு O2 பற்றாக்குறை அறியலாம்.
(v) டாப்ளர் கருவி :
இந்த கையடக்க கண்காணிப்புக் கருவி வளர்கருவின் இதயத்துடிப்பு வீதத்தைக் காட்டும்.
34.
1. இழப்பு மீட்டல் பற்றிய ஆய்வை ஹைட்ராவில் முதன் முதலில் மேற்கொண்டவர் ஆபிரகாம் டிரம்பிளி (1740)
2. இழப்பு மீட்டல் இரண்டு வகைப்படும். அவை முழு உருவ மீட்பு மற்றும் உறுப்பு மீட்டலாகும்.
3. முழு உருவ மீட்பில் உயிரியின் சிறுபகுதி முழு உயிரியை உருவாக்கும்.(எ.கா) ஹைட்ரா
4. உறுப்பு மீட்பு இரு வகைப்படும். அவை சீராக்கல் மற்றும் மீண்டும் உருவாக்குதல்.
5. உடலில் ேதமுற்ற சில செல்கள் மட்டும் சரிசெய்யப்படுவது சீராக்கல் என்பதாகும்.
6. வெட்டுண்ட பகுதியை முழுமையாக உருவாக்குவது மீண்டும் உருவாக்குதல் என்பதாகும்.

35.
DNA சிறப்பியல்புகள்
1. ஒரு இழை 5'-3' மற்றொன்று 3'-5'
2. இரு இழைகளும் எதிர் இணையானவை.
3. 5' முனையில் பாஸ்பேட் தொகுதியும், 3' முனையில் OH தொகுதியும் காணப்படும்.
4. DNA சுருள் விட்டம் 20A° குறைந்தபட்ச வளைவு 34A° ஆகும்.
5. சிறு பள்ளம், முதன்மை பள்ளம் காணப்படும்.
6. 3.4 nm நீளம் கொண்ட ஒரு முழுமையான திருப்பத்தில் 10 கார
இணைகள் உள்ளன.
7. திருகுச்சுருள் காரங்களுக்கிடைய ஹைட்ரஜன் இணைப்பு காணப்படும்.
8. பாஸ்போடைஎஸ்டர் பிணைப்பு, பாலி நியூக்ளியோடைடு சங்கிலிக்கு வலிமையும், நிலைப்புத் தன்மையும் அளிக்கின்றன.
9. பிளீக்டோனிமிக் சுருள் மற்றும் பாரானிமிக் சுருள்கள் காணப்படுகின்றன.
10. DNA வானது DNA-A, DNA-B, Z DNA ஆகிய வடிவங்களாகக் காணப்படும்.
36.
I. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பன்:
ஹெர்ஷே மற்றும் சேஸ் - கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பனை பயன்படுத்தியிருந்தால், - அது பாக்டீரியாவின் எல்லா செல்களிலும் காணப்பட்டிருக்கும்.(கார்பன் எல்லா கரிம மூலக்கூறுகளிலும் உள்ளது)
II. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜன்:
1. அவர்கள் கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜனை பயன்படுத்தியிருந்தால், நியூக்ளியோலஸ், செல்சவ்வு மற்றும் முழுவதும், கூடவே பாக்டீரியோபேஜின் பிரிதலுற்ற பொருட்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. நைட்ரஜன் - புரதத்தில், DNA விலும் அமைப்புக் கூறாக உள்ளது.
3. எனவே கதிரியக்க ஐசோடோப்புகள் பாஸ்பரஸ் நியூக்ளிக் அமிலங்களில், கதிரியக்க கந்தகம் புரதங்களில் மட்டும் காணப்பட்டது.
4. இவர்கள் மரபுப்பொருள் DNA - RNA யா (அ) புரதமா உறுதிசெய்யவே இவ்வாறு பயன்படுத்தினர்.
37.
(i) இது கருவின் குறைபாடுகளை, கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
(ii) கருவின் குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
(iii) வளர்கருவின் பால் தன்மை அறியலாம்.
(iv) பால் தெரிந்தால் பெண்கருக்கொலை செய்ய வாய்ப்புள்ளது.
(v) எனவே இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
38.
அ) விட்டலின் சவ்வு
ஆ) உட்கரு
இ) சோனா பெலூசிடா
ஈ) கொரோனா ரேடியேட்டா
39.
ஒற்றைமயம் - இரட்டைமயம் நிலை [உ.ம்] தேனீ,எறும்பு, குளவி.
(i) இம் முறையில் சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(ii) கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளாக வளர்ச்சியடைகின்றன.
(iii) கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் வளர்ச்சியடைகின்றன.
(iv) ஆண் தேனீக்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியளவே உள்ளன. (ஒற்றைமயம்)
(v) பெண் தேனீக்களில் குரோமோசோம் இரு மடங்காக உள்ளன. (இரட்டை மயம்) இதனால் இம்முறை ஒற்றைமய-இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது.
40.
ஆ)
| இரு சமப்பிளவு முறை அமீபாவில் | பல பிளவுமுறை பிளாஸ்மோடியத்தில் |
|---|---|
| இது ஒரு எளிய முறை | பிளாஸ்மோடியத்தில் சைசான்ட் மற்றும் ஊசைட் நிலையில் பல பிளவுமுறை நடைபெறுகிறது. |
| சுருங்கும் நுண்குமிழ் செயலிழந்து மறைந்து விடும். | சைசான்ட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுதலுக்கு சைசோகனி என்று பெயர். |
| உட்கரு மணி மறைந்துவிடும். | இதன் சேய் உயிரிகள் மெரோசோயிட்டுகள் ஆகும். |
| உட்கருவானது மறைமுகப் பிரிவு முறையில் பிளவுபடும். | ஊசைட் நிலையில் நடைபெறும் பல பிளவு முறை ஸ்போரோகனி என்றும் சேய் உயிரிகள் ஸ்போரோசோயிட்டுகள் ஆகும். |
| செல்லின் நடுவில் சுருக்கம் ஏற்பட்டு சைட்டோபிளாசம் பிரியும். |
ஆ)
| பல்லி இழப்பு மீட்டல் | பிளனேரியாவில் இழப்பு மீட்டல் | ||
|---|---|---|---|
| 1. | இது மீண்டும் உருவாக்குதல் முறையாகும் | 1. | இது சீராக்கல் முறையாகும். |
| 2. | வெட்டுண்ட வாலை மீண்டும் பெறுதல். | 2. | உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன. |
41.
( )
டிரைகோமோனோஸ் வாஜிநாலிஸ்
42.
( )
டர்னர் சிண்ட்ரோம்
43.
( )
மீரோசோயிட்டுகள்
44.
( )
கடத்து RNA
45.
( )
mRNA, tRNA
46.
பிறப்புறுப்பு அக்கி உள்கருப்பை வாய் அழற்சியை உண்டாக்கும்.
47.
ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
48.
ஹைட்ராவானது உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில் புறமுகிழ்த்தல் மூலம் இனப்பெருக்கம் செய்யும்.
49.
3. படியெடுத்தலின் துவக்கத்திற்கு வினையூக்கியாக இருப்பது பாலிமரேஸ்
50.
ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
51.
கன்னி இனப்பெருக்கம் -இது இனப்பெருக்கத்தின் வகை
52.
ஈ) பிரிடெரிக் கிரிஃபித்
53.
டிரைகோமோனியாசிஸ் - வைரஸ்
54.
இராட்சச அமீபா - ஒபலினா
55.
இ) X - கதிரியக்க சிதறல் வழி பெறப்பட்ட படங்களின் ஆய்வை மேற்கொண்டவர்கள் - வாட்சன் மற்றும் கிரிக்
56.
பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
இ) ரிபோசோம்கள் வரிசையாக இணைந்து காணப்படுவது - பாலிசோம்கள்
58.
DNA - வின் ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைக்கிறது.
59.
'உ' சரி ஆனால் 'கா' தவறு
60.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
61.
( )
ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.
62.
( )
ஈ) இவையனைத்தும்
63.
(a)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards