12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய வினா விடைகள் II 2019 - 2020 ( 12th Standard Tamil Medium Biology Important Question II 2019-2020 )
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பெரிவிட்டலின் இடைவெளி ______ ல் உள்ளது
விந்து
அண்டம்
கருவுற்ற அண்டம்
டிரோபோபிளாஸ்ட்
2.
உறவினர் தேர்வு எவ்வுயிரிகளில் காணப்படுகிறது.
தேனீக்கள்
கரப்பான் பூச்சி
வெட்டுக்கிளி
அந்துப்பூச்சி
3.
சீரியக்க கால இடைவெளி முறை_______ கருத்தடை முறை
இயற்கை
வேதிப்பொருள்
தடுப்பு
இயக்கத் தடுப்பு
4.
| பகுதி I | பகுதி II | ||
|---|---|---|---|
| அ. | பிளாஸ்மோடியம் | ii. | ஸ்ட்ரோபிலா ஆக்கம் |
| ஆ. | அமீபா | ii. | ஸ்போரோசோயிட்டுகள் |
| இ. | பிளாஸ்மோடியம் | iii. | போலிக்காலிஸ்போர்கள் |
| ஈ. | எளிய கட்டமைப்பு கொண்ட பல செல் உயிரிகள் | iv. | மீரோசோயிட்டுகள் |
அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii
அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i
அ-i,ஆ-iv,இ-iii,ஈ-ii
அ-iv,ஆ-i,இ-ii,ஈ-iii
5.
ஹர்ஷே மற்றும் சேஸ் ஆய்வுகளின் கண்டுபிடிப்பானது
சில வைரஸ்களில் RNA மரபுப்பொருள் என்பது
DNA சில வைரஸ்களில் மரபுப்பொருள் என்பது
32P - குறியிடப்பட்ட DNA பாக்டீரிய செல்லினுள் வைரஸினால் செலுத்தப்பட்டது.
DNA தோற்ற மாற்றம் செய்வது பாலிசர்க்கரை உறை அல்ல என்பது
6.
டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?
ஹைட்ரஜன் பிணைப்பு உடைவதால் டி.என்.ஏ மூலக்கூறு பிரிவடைகிறது
ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதேபோல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது.
பாதி பழையன காத்தல் முறை இரட்டிப்பாதலால் புதிய டி.என்.ஏ இழையில் ஒரு பழைய இழை பாதுகாக்கப்படுகிறது.
நிரப்புக் கூறு கார இணைகள் ஹைட்ரஜன் பிணைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன.
7.
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தூண்டுவதன் மூலம்
அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்
8.
கீழ்க்கண்ட எந்த மாதவிடாய்க்கோளாறு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
மெனோரேஜியா – ஒழுங்கற்ற மாதவிடாய்
ஏமெனோரியா – மாதவிடாய் இல்லாதிருத்தல்
டிஸ்மெனோரியா – அதிகப்படியான மாதவிடாய்
ஆலிகோமெனோரியா – வலி மிகுந்த மாதவிடாய்
9.
பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே_______ மற்றும் _______ ஆகும்.
AB, O
O, AB
A, B
B, A
10.
11.
அண்டகத்தின் முதன்மைப் பணிகள் எப்போது நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது?
12.
சுரப்பாளர்கள் என்பவர்கள் யார்?
13.
கடற்பஞ்சுகளில் அதிக இழப்பு மீட்டல் திறன் உள்ளது. காரணம் கூறுக.
14.
ETS, YAC விரிவாக்கம் தருக.
15.
இயற்கை கருத்தடை முறைகள் யாவை?
16.
மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.
17.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
18.
தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து
19.
வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
20.
ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?
21.
எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?
22.
இனப்பெருக்க மண்டலத்தின் 4 முக்கிய செயல்பாடுகள் எவை?
23.
மெண்டலின் மரபுக்குறைபாடுகளை பட்டியலிடுக.
24.
சீரியக்க கால இடைவெளி குடும்பக்கட்டுப்பாட்டு முறையில், கலவி எப்போது தவிர்க்கப்படும்?
25.
பிளாஸ்மோ டோமி என்றால் என்ன?
26.
மனித மரபணு முக்கிய இலக்குகள் யாவை?
27.
கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?
28.
வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி எழுதுக.
29.
30.
முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டி ஈனும் விலங்குகளின் சேய்களை விட பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.
31.
ஆண் ,பெண் இருபாலாரிலும் காணப்படும் மாறுபாடடைந்த உமிழ்நீர்ச் சுரப்பி எது? விளக்குக.
32.
ஆண் வளர்ச்சியில் 'Y' குரோமோசோமின் பங்கினை விவரி ?
33.
இயற்கையான ஆனால் நம்பகத்தன்மையற்ற கருத்தடை முறை எது? விளக்கு?
34.
இருசமப்பிளவு முறைகளை பற்றி விரிவாக விடையளி.
35.
DNA - வின் சிறப்பியல்புகளை எழுதுக.
36.
இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?
37.
“ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.
38.
நமது இந்திய நாட்டில் முழுமையான இனப்பெருக்க ஆரோக்கியத்தை அடைய மேற்கொள்ள வேண்டிய உத்திகள் யாவை?
39.
கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல் உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
40.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?
41.
விந்தக மேல்சுருள் நாள அழற்சியை உருவாக்குவது ________
42.
13 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை ________
43.
______ செயற்கை முறை கடற்பஞ்சு வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது.
44.
ஊக்குவிப்பான் முதல் நிறைவி வரையுள்ள DNA இன் பகுதி _______ எனப்படும்
45.
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன
46.
அ) கருத்தடை மாத்திரை நீண்டநாள் பயன்படுத்தினால் கருப்பைவாய் புற்று ஏற்படும்.
ஆ) PET ஸ்கேன் கருப்பை வாய்ப்புற்றைக் காண பயன்படும்.
இ) முதனிலைத் தடுப்பு 14 முதல் 18 வயது வரை காண HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
ஈ) ஓரினை இனப்பெருக்க முறை மூலம் கருப்பைவாய் புற்றுநோய் குறையும்.
47.
1. 'A' வகை எதிர்பொருள் தூண்டிகள் சிம்பான்சி மற்றும் கிப்பன் குரங்குகளில் உள்ளன.
2. A,B மற்றும் AB வகை எதிர்ப்பொருள் தூண்டிகள் உராங்குட்டான் குரங்குகளில் காணப்படுகின்றன.
3. மனித மரப்பொத்த அமைப்புகள் நாய்களில் காணப்படுகின்றன.
4. நவீன உலக குரங்குகள் ஒரே மாதிரியான பொருளை கொண்டுள்ளன. ஆனால் எதிர்பொருள் தூண்டி 'B' யோடு ஒத்து காணப்படுவதில்லை.
48.
அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல்
ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபிஸ்
49.
பின்வருவனவற்றில் எது வாட்சன் - கிரீக் - மாதிரி DNA அமைப்பிற்கு பொருந்தாது
1. DNA இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளாலானது.
2. இவ்விரு இழைகளும் நேர் இணைபோக்காக அமைந்துள்ளன
3. பியுரின்கள் பிரிமிடின்களோடு பிணைகின்றன
4. புரோகேரியோட்டுகளின் DNA க்கள் வட்ட வடிவமானதாயும் குரோமேட்டின் அமைப்பற்று காணப்படும் - இதற்கு ஜீனோஃபோர் என்று பெயர்.
50.
a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின்
b. பினைல் கீட்டோனூரியா - டைரோசின்
c.அல்பீனிசம் - மெலனின்
d.ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
51.
அ.முகிழ்த்தல்
ஆ.ஸ்போர்கள் உருவாக்கம்
இ.வேறுபட்ட செல் சேர்க்கை
ஈ.அபோலைசிஸ்
52.
ஈ. கோலையில் லாக்டோஸ் வளர்சிதை மாற்றம் __________ நடைபெற நொதி தேவைப்படவில்லை.
அ) நியுக்ளியோஸ்
ஆ) பெர்மியேஸ்
இ) β கேலக்டோஸிடேஸ்
ஈ) டிரான்ஸ் அசிட்டலேஸ்
53.
அ) மலட்டு தன்மை - கருப்பை தசைநார்க் கட்டிகள்
ஆ) கருப்பை வாய்ப்புற்று - கலவிக்கால்வாய்
இ) AIDS - நிணநீர் முடிச்சு பெரிதாதல்
ஈ) மேகப்புண் - பரவும் தன்மையற்ற கட்டி
54.
| பகுதி I | பகுதி II | ||
| அ. | அர்ரீனோடோகி | a | ஆண் உயிரிகள் மட்டும் |
| ஆ. | தெலிடோகி | b. | பெண் உயிரிகள் மட்டும் |
| இ . | ஆம்ஃபிடோகி | C . | ஆண் அல்லது பெண் உயிரி |
| ஈ. | பிளாஸ்மோடோமி | d. | ஆண் மற்றும் பெண் உயிரி |
55.
அ) RNA பாலிநியுக்ளியோடைட் நீட்சி நடைபெறுகிறது - 5 - 3' திசை
ஆ) இரட்டிப்பதால் பகுதி குறிப்பது - 'ori'
இ) குரோமேடின் சில தொடர் மீள் தொன்று அலகுகளானது - குரோமோனீமா
ஈ) இறுகப் பிணைந்தும் அடர் நிறமேற்கும் பகுதி - ஹெட்டிரோ குரோமாடின்
56.
1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண்
2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண்
3. டவுண் சிண்ட்ரோம் - டிரைசோமி 23
4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
| நிகழ்வு | நடைபெறும் இடம் | |
|---|---|---|
| அ | படியெடுத்தல் | நியுக்ளியோலஸில் |
| ஆ | நகலெடுத்தல் | சைட்டோபிளாசம் |
| இ | மொழிபெயர்த்தல் | ரிபோசோம்கள் |
| ஈ | தோற்ற மாற்றமடைதல் | புரதம் |
58.
ஹெலிகேஸ்
59.
உறுதிக்கூற்று : செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் தூண்டுதல் மூலம் நடைபெறுகிறது.
காரணம் :அவை உயிரி மூலம் தூண்டப்படுகிறது.
அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு
ஈ.' 'உ' தவறு ஆனால் 'கா' சரி
60.
உறுதிப்படுத்துதல் A: கடத்து RNA, RNA க்களில் மிகச் சிறிய மூலக்கூறாகும்.
காரணம் R: கடத்து RNA க்கள் அமினோ அமிலங்களை சைட்டோபிளாசத்திலிருந்து புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்கிறது.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
இ) 'A' சரியானது 'R' தவறானது
ஈ) 'A' மற்றும் 'R' தவறானது
61.
அ. நாடாப்புழுவில் வயதான பழுத்த கண்டங்கள் ஸ்ட்ரோபிலாவின் முன்முனையில் உள்ளது
ஆ. சீராக்கல் வகையான இழப்பு மீட்டலின்(எ .கா) சுவர்ப்பல்லி இழந்த வால்
இ . சாதகமான சூழ்நிலையில் அமீபா சிஸ்ட் எனும் பாதுகாப்பு உறையைச் சுரந்து செயலற்று உறைகிறது.
ஈ. வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.
62.
அ) யூகேரியாட்களின், ஊக்குவிப்பான் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான அடினைன் (A) மற்றும் தைமின் (T) ஆகியவை உள்ளன - இதற்கு டாடா பெட்டி (அ) (கோல்ட்பெர்க் - ஹோக்னெஸ் பெட்டி) என்று அழைக்கப்படுகிறது.
ஆ) யூகேரியாட்டில் அமைப்பு ஜீன்கள் 'பாலிசிஸ்ட்ரானிக்' ஆகும்.
இ) கிடைமட்ட மரபணு மாற்றம் HGT உயிரிகளின் பரிணாமத்திற்கு எந்த பங்கும் ஆற்றவில்லை.
ஈ) ஒரு செல் புரதம் தயாரிக்க அனைத்து RNA க்களும் தேவைப்படவில்லை
63.
ஹிஸ்டோன்கள் பொதுவாக அமிலப் புரதங்களால் ஆனது.
1.
(b)
அண்டம்
2.
(a)
தேனீக்கள்
3.
(a)
இயற்கை
4.
(b)
அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i
5.
(d)
DNA தோற்ற மாற்றம் செய்வது பாலிசர்க்கரை உறை அல்ல என்பது
6.
(b)
ஒவ்வொரு நைட்ரஜன் காரமும் அதேபோல் உள்ள மற்றொரு காரத்துடன் இணைவதால் இரட்டிப்பாதல் நடைபெறுகிறது.
7.
(b)
FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலை தடுப்பதன் மூலம்
8.
(b)
ஏமெனோரியா – மாதவிடாய் இல்லாதிருத்தல்
9.
(b)
O, AB
10.
(c)
11.
மாதவிடாய் நிறைவில் இது நிகழ்கிறது. பெண்களின் வாழ்வில் அண்டம் விடுபடுதல், மாதவிடாய் போன்றவை முற்றிலும் நிற்கின்றன. சராசரியாக 45 முதல் 50 வயதிற்குள் இது நிகழ்கிறது.
12.
சிலரின் கண்ணீர் மற்றும் உமிழ்நீர் போன்ற உடல் திரவத்தில் எதிர்ப்பொருள் தூண்டிகள் காணப்படும் அவர்கள் சுரப்பாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
13.
1. சிதைக்கப்பட்ட கடற்பஞ்சினை ஒரு மெல்லிய பட்டுத்துணியின் வழியாக பிழிந்தால்,
2. அதன்மூலம் கிடைக்கும் செல்தொகுப்பு மீண்டும் புதிய முழுமையான கடற்பஞ்சுகளாக உருவாக இயலும்.
14.
15.
16.
1. மரபணுக்குறியீடுகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
2. இது பொதுவான எல்லா உயிரின மண்டலங்களுக்கு உட்கரு அமிலங்களையும் அதே முக்குரியங்களையும் பயன்படுத்தியே அமினோ அமிலங்களிலிருந்து புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
3. தூது ஆர்.என்.ஏவில் உள்ள UUU எல்லா உயிரினங்களிலும் பினைல் அலனைன் என்னும் அமினோ அமிலத்திற்கானது.
4. விதிவிலக்குகள் (மிகச் சில)
i. எ.கா. புரோகேரியோட்டுகள், மைட்டோகாண்டிரியா, குளோரோபிளாஸ்ட் ஆகியவற்றின் மரபுத் தொகுதி
ii. பொதுவாக வேறுபாடுகள் மிகக் குறைவு ஒற்றுமைகளே அதிகம் உள்ளன.
iii. இது போன்ற மரபணுக்குறியீடுகளின் எல்லா சிறப்புப் பண்புகள் பொதுவாக எல்லா உயிரினங்களிலும் பொதுவானது.
5. எனவே மரபணு குறியீடு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
17.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
18.
கர்ப்ப காலத்தில், தாய்சேய் இணைப்புத்திசு, தற்காலிக நாளமில்லாச் சுரப்பியாக செயல்பட்டு கீழ்கண்ட ஹார்மோன்களைச் சுரக்கிறது.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hcL - மனித கோரியானிக் சோமட்டோமாமோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின் ஹார்மோன் இடுப்பு எலும்பிணைப்பு நார்களைத் தளர்வடையச் செய்து, குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது.
hCG , hPL ,ரிலாக்ஸின் போன்றவற்றை கர்ப்ப காலத்தில் மட்டுமே உற்பத்தியாகின்றன.
19.
| ஒத்தயினச்செல் பால் நிர்ணயம் | வேறுபட்ட இனச்செல் பால் நிர்ணயம் | ||
|---|---|---|---|
| 1. | ஒத்த இனச்செல்களை கொண்ட பெண் உயிரிகள் ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றன. | 1. | வேறுபட்ட இனச்செல்களை கொண்ட ஆண் உயிரிகள் இரண்டு வகையான விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன. |
| 2. | (உ.ம்) மனிதர்களில் பெண் ஒத்த இனச்செல்களை உருவாக்குபவை X குரோமோசோம் மட்டும் | 2. | மனிதர்களில் ஆண் இரண்டு விதமான இனச் செல்களை உற்பத்தி செய்கின்றன.X மற்றும் Y குரோமோசோம் கொண்ட இனச்செல்கள் |
20.
| ஒருங்கிணைப்பு | கருவுறுதல் | ||
|---|---|---|---|
| 1. | ஆண் மற்றும் பெண் முந்தைய மூல அணு உட்கரு, கருவுறுதலுக்குப் பின் இணைதல் | 1. | ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவதை கருவுறுதல் |
| 2. | கருவின் ஈரிணை நிலையை உறுதி செய்கிறது. | 2. | இது கருவுறுதலை உறுதிப்படுத்துகிறது. |
21.
(i) அமீபா பிளவுறுத்தல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
(ii) பிளவுறுதல் என்பது செல் பிரிதல்.
22.
1.விந்து, அண்ட செல் உருவாக்கம்
2. இச்செல்களைக் கடத்துதல், தக்க வைத்தல்
3. கருவிற்கு ஊட்டமளித்துப் பேணல்
4. ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்
23.
1. தலாசீமியா
2. அல்பினிசம்
3. பினைல்கீட்டோநியூரியா
4. அரிவாள் இரத்த சோகை
5. பினைல் கீட்டோநியூரியா
24.
1. மாதவிடாயின் 14 ஆம் நாளில் அண்ட செல் வெளியேறும்.
2. வெளியேறிய அண்டசெல் 2 நாட்கள் உயிருடன் இருக்கும்.
3. விந்தணு, பெண் இனப்பாதையில் 72 மணிநேரம் உயிருடன் இருக்கும். இந்தக் காலத்தில் கலவியைத் தவிர்க்க வேண்டும்.
25.
1. பல உட்கருக்களைக்கொண்ட சேய் உயிரிகளை உருவாக்கும்.
2. பின்னர் உட்கருக்கள் பிளந்து இயல்பான எண்ணிக்கையை நிலைப்படுத்துகின்றன.
3. (எ.கா) பிலோமிக்ஸா, ஒபாலினா
26.
(i) கண்டறிதல் - மனித DNA விலுள்ள அனைத்து மரபணுக்களையும் (ஏறத்தாழ 30,000) கண்டறிதல்.
(ii) தீர்மானித்தல் - கூடவே அதிலுள்ள 3 பில்லியன் வேதி கார இணைகளின் வரிசையைத் தீர்மானித்தல்.
(iii) தகவல்களைச் சேமித்தல் - தகவல்களை தரவுத்தளங்களில் சேமித்தல்
(iv) கருவிகளை மேம்படுத்துதல் - தரவுகளை ஆய்வு செய்வதற்கான கருவிகளை மேம்படுத்துதல்
(v) தொடர்புடைய தொழில்நுட்பங்கள் தொழிற்சாலை போன்ற பிற இடங்களுக்கும் இடம் மாறுதல்
(vi) ELSI - அறம் சார்ந்த சட்ட, சமூக இடர்பாடுகளை (ELSI) தெரிவித்தல்.
27.
1. இணைப்பு மூலக்கூறு - என்ற சொற்களை உருவாக்கியவர் ஃபிரான்சிஸ் கிரிக்.
2. கிராம்பு இலை வடிவத்தை ஒத்திருக்கும் இரண்டாம் நிலை கட்டமைப்புடைய கடத்து RNA(tRNA) அமைப்பானது அதன் பணிகளுக்கு ஏற்றதாக உள்ளது.
3. தூது RNA மூலக்கூறிலுள்ள அமினோ அமிலங்களுக்கான குறிப்பிட்ட குறியீடுகளை படிப்பதும் கூடவே செல்லின் சைட்டோபிளாசத்தில் சிதறிக் கிடைக்கும் அமினோ அமிலங்களை புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்து வரும் கடத்தியதாக செயல்படுதலும் ஆகிய இரு பணிகளை செய்வதால் கடத்து RNA இணைப்பு மூலக்கூறுகள் என வழங்கப்படுகின்றன.
28.
வேறுபட்ட இனச்செல் பெண்கள் :
மீன்கள் ஊர்வன பறவைகளில் பெண் உயிரிகள் வேறுபட்ட இனச்செல்களை உற்பத்தி செய்கின்றன.
ZO-ZZ வகை
(i) இவ்வகை பால் நிர்ணயம் அந்திப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி வீட்டுக் கோழிகளில் காணப்படுகிறது.
(ii) இவைகளில் பெண்கள் வேறுபட்ட இனச்செல் வகை ZO சார்ந்தன.
(iii) இவைகளில் இரண்டு வகையான முட்டைகளை உற்பத்தி செய்கின்றன.
(iv) சில முட்டைகள் Z குரோமோசோம் அற்றும் O காணப்படுகின்றன.
(v) ஆண் அமைப்புகள் ஒத்த இனச்செல் வகை ஆகும்.
ZW-ZZ வகை
(i) இவ்வகை பால் நிர்ணயம் ஜிப்சி அந்திப்பூச்சி முதுகுநாண் உயிரிகளான மீன்கள் ஊர்வன மற்றும் பறவைகளில் காணப்படுகின்றன.
(ii) பெண் உயிரிகள் இருவகையான அண்டத்தை வெளியிடுகின்றன.
(iii) ஒரு Z குரோமோசோமையும் ஒரு W குரோமோசோமையும் பெற்றுள்ளன.
(iv) ஆண் உயிரிகள் ஒரே வகையான விந்து செல்களை ஒத்த இனச்செல் ZZ முறையில் உற்பத்தியாகின்றன.
29.
30.
(i) குட்டி ஈனும் உயிரிகளின் இளம் உயிர் தாயின் கருப்பையில் வளர்கிறது.
(ii) முட்டையிடும் உயிரிகள் முட்டையை வெளியே இடுகிறது.
(iii) அந்த முட்டையின் வளர்ச்சியை, வெளிப்புறச் சுற்று சூழலை கட்டுப்படுத்துகிறது.
(iv) எனவே முட்டையிடும் விலங்குகளின் சேய்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
31.
1. ஆண்களில் பால் சுரப்பி, செயலற்ற எச்ச உறுப்பாக உள்ளது.
2. மார்புப் பகுதியில் ஒரு இணை உள்ளது.
3. சுரப்பித் திசு, கொழுப்புத் திசு உள்ளது.
4. பால் காம்பைச் சுற்றி வட்ட காம்பில் தோல் வெடிப்பைத் தடுக்கும்.
5. உட்புறம் இணைப்புத் திசுக்களால் பிரிக்கப்பட்ட 2-25 கதுப்புக்கள் உள்ளன. இவற்றில் நுண் கதுப்புக்கள் உள்ளன.
6. நுண் கதுப்புக்களில் மீச்சிறு கதுப்புக்கள் உள்ளன. இவை பால் சுரக்கின்றன.
7. மீச்சிறு கதுப்புக்களில் மீச்சிறு கதுப்புகள் உள்ளன.
8. பால் நாளங்கள் ஒன்று கூடி பால் விரிமுனைகளை (mammary ampulla) உருவாக்கும்.
9. இவை பால் காம்பின், பால் உந்து நாளத்துடன் (லாக்டிஃபெரஸ் duct)
10. பால் உந்து நாளம், பால் குழியாக விரிகிறது. (lactiferous sinus)
11. பால் உந்து நாளம், பால் காம்பின் நுனித்துளைகள் வழி வெளித் திறக்கிறது.
32.
1. Y குரோமோசோமின் இரு முனைகளிலும் போலி உடல் குரோமோசோம் பகுதிகள் உள்ளன.
2. இதற்கு இணையான பகுதிகள் X குரோமோசோமிலும் உள்ளன.இப்பகுதியில் குன்றல் பகுப்பின் குறுக்கெதிர் மாற்றமும் மறு இணைவு நடைபெறுகின்றன.
3. மீதம் உள்ள 95% 'Y' குரோசோமினுடைய பகுதிகள் இணையா 'Y' பகுதியாகும் (NRY)
4. 'NRY" செயல்படும் மரபணுக்கள் பகுதி மற்றும் செயல்படா மரபணுக்கள் பகுதி என இரண்டு சமமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
5. செயல்படும் மரபணு பகுதியில் பால் நிர்ணயப்பகுதி 'Y' மரபணு உள்ளன.
6. மனிதனில் Y குரோமோசோம் இல்லாநிலையில் பெண் உயிரியாக வளர்ச்சி அடைய வழி வகுக்கிறது.
7. பால் நிர்ணய மரபுப்பகுதி X குரோமோசோமில் இல்லை.
8. இந்த பால் நிர்ணய பகுதி Y யின் மரபணு விளைபொருள் முதிர்ந்த ஆணின் விந்தகத்தில் காணப்படும் விந்தகம் நிர்ணய காரணி ஆகும்.
33.
பாலூட்டும் கால மாதவிடாயின்மை (Lactational Amenorrhoea)
1. தாய் பாலூட்டும் போது இயல்பான அண்ட செல்லாக்கச் சுழற்சி தொடங்க 6 மாதங்கள் தாமதமாகும்.
2. குழந்தை பாலை உறிஞ்சுவதால், பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்பட்டு, புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் பால் உற்பத்தி உயரும்.
3. தாய் இரத்தத்தில் புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்.
4. இதனால் ஹைபோதலாமஸ் சுரக்கும் GnRH கொனடோடிராபின் விடுவிக்கும் காரணி உற்பத்தி தடுக்கப்படும்.
5. பிட்யூட்டரி சுரக்கும், கொனாடோட்ரோபின் ஹார்மோன் உற்பத்தி தடுக்கப்படும். இதனால் மாதவிடாய்ச் சுழற்சி தடுக்கப்படும்.
34.
1. பெற்றோர் உயிரி இரு சமப்பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது.
2. எளிய ஒழுங்கற்ற இருசமப் பிளவு முறை அமீபா போன்ற ஒழுங்கற்ற வடிவமுடைய உயிரிகளில் நடைபெறுகின்றது.
3. கிடைமட்ட இருசமப் பிளவு முறையில் பிளவுமட்டம் உயிரியின் கிடைமட்ட அச்சில் ஏற்படுகின்றது.
(எ.கா) பாரமீசியம்
4. உயிரியின் நீள் அச்சில் பிரிவடைவது, நீள்மட்ட இருசமப் பிளவு முறை எனப்படும்.
(எ.கா) யூக்ளினா
5. சில உயிரிகளில் பிளவுமட்டம் சாய்வாக இருக்கும் அவை சாய்வுமட்ட இருசமப் பிளவு முறையாகும்.
(எ.கா) செராட்டியம்

35.
DNA சிறப்பியல்புகள்
1. ஒரு இழை 5'-3' மற்றொன்று 3'-5'
2. இரு இழைகளும் எதிர் இணையானவை.
3. 5' முனையில் பாஸ்பேட் தொகுதியும், 3' முனையில் OH தொகுதியும் காணப்படும்.
4. DNA சுருள் விட்டம் 20A° குறைந்தபட்ச வளைவு 34A° ஆகும்.
5. சிறு பள்ளம், முதன்மை பள்ளம் காணப்படும்.
6. 3.4 nm நீளம் கொண்ட ஒரு முழுமையான திருப்பத்தில் 10 கார
இணைகள் உள்ளன.
7. திருகுச்சுருள் காரங்களுக்கிடைய ஹைட்ரஜன் இணைப்பு காணப்படும்.
8. பாஸ்போடைஎஸ்டர் பிணைப்பு, பாலி நியூக்ளியோடைடு சங்கிலிக்கு வலிமையும், நிலைப்புத் தன்மையும் அளிக்கின்றன.
9. பிளீக்டோனிமிக் சுருள் மற்றும் பாரானிமிக் சுருள்கள் காணப்படுகின்றன.
10. DNA வானது DNA-A, DNA-B, Z DNA ஆகிய வடிவங்களாகக் காணப்படும்.
36.
I - படியெடுத்தல்:
டி.என்.ஏவில் காணப்படும் செய்திகள் நகலெடுக்கப்படும் செயல்முறை:
DNA வின் ஒரு இழையில் காணப்படும் புரதத்திற்கான தகவல்களை குறியீடாக செல்லுக்கு கொண்டுசெல்வது தூது RNA (அ) mRNA
II - மொழிபெயர்த்தல்:
1. தூதுவிலுள்ள தகவல் குறியீடுகள் செல்லின் உட்கருவிலிருந்து சைட்டோபிளாசத்தை அடைகிறது.
2. இங்கு ரிபோசோம் RNA, கடத்தி RNA மற்றும் தூது RNA இவற்றுடன் பல்வேறு நொதிகளும் ஒரு அமைப்பாக சேர்ந்து மொழி பெயர்த்தல் படி நிலை நடைபெறும்.
3. இவ்வாறு ஒரு படிநிலைகளும் செல்லில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் நடைபெறுகிறது.
4. எனவே புரதச் சேர்க்கை இரண்டு படிநிலைகளில் நடைபெறுவதன் அனுகூலமாகும்.
37.
ஆரோக்கியமான மக்கள், உடல்நலம் மிக்க குழந்தைகளைப் பெற்று சமுதாயத்திற்கு பங்களிக்கின்றனர்.
i) பாலியல் கல்வி:
விடலைப் பருவம் சார்ந்த மாற்றங்கள் பற்றிய தகவல்களை பாலியல் கல்வி மூலம் பள்ளிகளில் கொண்டு வருதல்.
ii) கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வு:
மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த கருத்தடை முறைகள் பயன்படும். எனவே எளிதில் கிடைக்கும், பயனர் நட்பு கருவிகள், பக்க விளைவு இன்றி, பாலுணர்வைத் தடை செய்யாமல் பயன்படுத்தலாம்.இதில் தற்காலிக,நிரந்தர முறைகள் உள்ளன.
(எ.கா).1) இயற்கைக் கருத்தடை முறை - பாலூட்டும் கால மாதவிடாயின்மை
2) தடுப்பு முறைகள் - வேதிப்பொருட்கள், இயக்கத் தடுப்பு முறை
3) ஹார்மோன் வழித்தடுப்பு
4) உள்கருப்பைச் சாதனங்கள் (Ex,CuT)
38.
1).குடும்ப நலத்திட்டம்(1951)
2) இனப்பெருக்க, குழந்தை நலம் பாதுகாப்பு (RCH) இதன் பெரும்பணிகள்
(i) உடல்நலம், மிக்க சமுதாயம் அமைக்க விழிப்புணர்வு
(ii) விடலைப் பருவ பாலியல் கல்வி
(iii) தம்பதியருக்கான,குடும்ப கட்டுப்பாட்டு விதிகள், பிறப்புக் கட்டுப்பாட்டு முறை
(iv) கர்ப்பமடைந்த பெண்கள் பாதுகாப்பு, தாய் சேய் பாதுகாப்பு
(v) அரசு,அரசு சாரா அமைப்புகளால் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஊக்கமளித்தல்.
2)-1994 - பாலினத்தை முன்கூட்டியே அறியும் தொழில் நுட்பத்தைத் தடைசெய்யும் சட்டம் (PCPNDT).
3) பணிபுரியும் இடத்தில், பாலியல் தாக்குதல் விதி
4) நீதியரசர் வெர்மா குழு (2013) ஆண்,பெண் இரு பாலருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும்.
39.
அ) அண்ட செல் விடுபடுநிலை - புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன்
ஆ) அண்டக ஹார்மோன்கள் - FSH நுண்பை செல்களை தூண்டும் ஹார்மோன்கள்
பிட்யூட்டரி ஹார்மோன்கள் - LH -லூட்டினைசிங் ஹார்மோன்
இ) i) எண்டோ மெட்ரியம் புதுப்பிக்கப்படுதல்
ii) கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழலை கருவுறுதல் உண்டாக்கும்.
iii) கருப்பையின் உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தை உற்பத்தி செய்கிறது.இது 'சுரப்பு நிலையில்' நடக்கிறது.
ஈ) C -இரண்டாம் நிலை நுண்பை செல்கள்
H - கார்பஸ் லூட்டியம்
| இரண்டாம் நிலை நுண்பை செல்கள் | கார்பஸ் லூட்டியம் | |
|---|---|---|
| 1. | நுண்பை நிலையில் காணப்படும். | இவை லூட்டியல் நிலையில் உருவாகும். |
| 2. | இவற்றைச் சுற்றி கிரானுலேசா செல்களும் தீகா அடுக்கும் காணப்படும். | இந்த இடைக்கால நாளமில்லாச் சுரப்பி, புரோஜெஸ்டிரானைச் சுரக்கின்றது. |
| 3. | இவை மூன்றாம் நிலை நுண்பை செல்களாகி பின்னர் முதிர்ந்த கிராபியன் ஃபாலிகிளாகின்றன. | கருவுறுதல் நிகழாவிடில், இது கார்பஸ் அல்பிகன்ஸ் என்ற வடுத்திசுவடு உருவாக்கும். |
40.
(i) பாலினங்களை அடையாளம் காண உதவுகின்றது.
(ii) நீக்கம் இரட்டித்தல் இடம் பெயர்தல் குரோமோசோம்கள் பிரியாநிலை போன்ற குரோமோசோம் பிறழ்ச்சிகளை கண்டறிய பயன்படுகிறது.
(iii) ஒழுங்கற்ற பன்மயம் கண்டறிய பயன்படுகிறது.
(iv) சிற்றினங்களுக்கிடையேயான பரிணாம உறவுகளை கணிக்க உதவுகின்றது.
(v) மனிதனில் காணப்படும் மரபியல் நோய்களை கண்டறியலாம்.
41.
( )
டிரைகோமோனோஸ் வாஜிநாலிஸ்
42.
( )
பட்டாவ் சிண்ட்ரோம்
43.
( )
இழப்புமீட்டல் திறன்
44.
( )
படியாக்க அலகு
45.
( )
mRNA, tRNA
46.
முதனிலைத் தடுப்பு 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
47.
மனித மரப்பொத்த அமைப்புகள் நாய்களில் காணப்படுகின்றன
48.
நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
49.
2. இவ்விரு இழைகளும் நேர் இணைபோக்காக அமைந்துள்ளன
50.
ஹன்டிங்டன் கோரியா - கூலிஸ் இரத்த சோகை
51.
வேறுபட்ட செல் சேர்க்கை
52.
அ) நியுக்ளியோஸ்
53.
கருப்பை வாய்ப்புற்று - கலவிக்கால்வாய்
54.
பிளாஸ்மோடோமி - ஆண் மற்றும் பெண் உயிரி
55.
இ) குரோமேடின் சில தொடர் மீள் தொன்று அலகுகளானது - குரோமோனீமா
56.
பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
57.
இ) மொழி பெயர்த்தல் - ரிபோசோம்கள்
58.
DNA வின் சுருள் நீக்குகிறது
59.
'உ' சரி ஆனால் 'கா' தவறு
60.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
61.
( )
வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.
62.
( )
அ) யூகேரியாட்களின், ஊக்குவிப்பான் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான அடினைன் (A) மற்றும் தைமின் (T) ஆகியவை உள்ளன - இதற்கு டாடா பெட்டி (அ) (கோல்ட்பெர்க் - ஹோக்னெஸ் பெட்டி) என்று அழைக்கப்படுகிறது.
63.
(b)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards