12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 12th Standard Tamil Medium Biology Model Questions All Chapter 2020 )
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தவறான கூற்றைக் கண்டறி
விந்துத் திரவம் _______
விந்து செல்களைக் கடத்தும் ஊடகம்
விந்துக்கு உணவூட்டமளிக்கும்
விந்து இயக்கத்தைத் தடுக்கும் வேதிப்பொருள் கொண்டது.
விந்து செல் இயக்கத்தைத் துரிதப்படுத்தும்
2.
இரத்த வகுப்புகளின் பாரம்பரியத்தை விளக்கியவர்?
பெர்னஸ்டின்
பிஷர்
வீனர்
பெர்ட்ரம்
3.
குடும்ப நலத்திட்டம் இந்தியாவில் தொடங்கிய ஆண்டு
1951
1915
1905
1961
4.
| பகுதி I | பகுதி II | ||
|---|---|---|---|
| அ. | பிளாஸ்மோடியம் | ii. | ஸ்ட்ரோபிலா ஆக்கம் |
| ஆ. | அமீபா | ii. | ஸ்போரோசோயிட்டுகள் |
| இ. | பிளாஸ்மோடியம் | iii. | போலிக்காலிஸ்போர்கள் |
| ஈ. | எளிய கட்டமைப்பு கொண்ட பல செல் உயிரிகள் | iv. | மீரோசோயிட்டுகள் |
அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii
அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i
அ-i,ஆ-iv,இ-iii,ஈ-ii
அ-iv,ஆ-i,இ-ii,ஈ-iii
5.
கிரிஃபித்தின் முக்கிய கண்டுபிடிப்பானது
மெல்லிய புறப்பரப்புடைய பாக்டீரியா நோயை உண்டாக்கியது
சொரசொரப்பான புறப்பரப்பு உடைய பாக்டீரியா எலியைக் கொல்லவில்லை
DNA மரபணுப்பொருள் என்பதற்கான சான்று
மரபணுப்பொருள் இறந்த பாக்டீரியாவில் இருந்து உயிருள்ள பாக்டீரியாவில் தோற்ற மாற்றம் (transformation) உண்டாக்கியது
6.
7.
தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?
டி.என்.ஏ மூலக்கூறின் 5 முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.
டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.
8.
சீம்பாலில் அதிகம் காணப்படுவது _____.
IgE
IgA
IgD
IgM
9.
டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது ______.
சிறிய கருப்பை
வளர்ச்சியடையாத அண்டகங்கள்
வளர்ச்சியடையாத மார்பகம்
மேற்கண்ட அனைத்தும்
10.
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
உறுதிக் கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.
'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.
‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.
'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது
'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை
11.
சுரப்பாளர்களின் எவ்வுடல் திரவங்களில் இரத்த எதிர்பொருள் தூண்டி காணப்படுகின்றது?
12.
வைரஸ் பால்வினை நோய்கள் யாவை?
13.
இழப்பு மீட்டலின் இரு வகைகள் யாவை?
14.
காப்புறையாக்கம் மற்றும் வாலாக்கம் வேறுபடுத்துக
15.
விந்து நுண்குழலில் காணும் அடுக்கு எபிதீலியத்தில் உள்ள செல்களை பற்றி குறிப்பிடுக.
16.
வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை
17.
குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?
18.
விரிவாக்கம் தருக.
அ) FSH
ஆ) LH
இ) hCG
ஈ) hPL
19.
20.
எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?
21.
மறை விந்தகம் (Cryptorchidism) பற்றி குறிப்பு வரைக.
22.
சிண்ட்ரோம் பற்றி குறிப்பு வரைக.
23.
கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் துவக்கத்தில் கண்டறியும் தொழில்நுட்பங்கள் எவை?
24.
கிடைமட்ட இருசமபிளவு முறையைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
25.
ஒரு மரபணு - ஒரு நொதிக் கோட்பாட்டை எழுது.
26.
மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது.
27.
28.
இனச்செல் உருவாக்கம் – வரையறு?
29.
வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.
30.
இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை. நியாயப்படுத்து.
31.
கருவுறுதலின் நிகழ்வுகளை விவரி.
32.
மனிதரில் பால் சார்ந்த பாரம்பரியம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
33.
கருப்பை வாய்ப் புற்றுநோய் - விளக்குக.
34.
கடல் சாமந்தி மற்றும் நாடாப்புழுவில் நடைபெறும் பாலிலி இனப்பெருக்க முறையான துண்டாதல் பற்றி விரிவாக விடையளி.
35.
கடத்து RNA எனப்படும் இணைப்பு மூலக்கூற்றின் அமைப்பை விவரி.
36.
நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.
37.
GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.
38.
கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல் உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
39.
தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி
40.
கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும் இழப்பு மீட்டல்
41.
குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்கள்
42.
44AA +XO _______
43.
சாதகமற்ற சூழல் அமீபா _____ என்னும் நிகழ்வு மூலம் பல பிளவு அடைகிறது
44.
பாலிமரேஸ் நொதியின் செயல்பாட்டை நிறுத்துவது ______ ஆகும்
45.
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன
46.
அ. நாடாப்புழுவில் வயதான பழுத்த கண்டங்கள் ஸ்ட்ரோபிலாவின் முன்முனையில் உள்ளது
ஆ. சீராக்கல் வகையான இழப்பு மீட்டலின்(எ .கா) சுவர்ப்பல்லி இழந்த வால்
இ . சாதகமான சூழ்நிலையில் அமீபா சிஸ்ட் எனும் பாதுகாப்பு உறையைச் சுரந்து செயலற்று உறைகிறது.
ஈ. வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.
47.
நெறிப்படுத்தும் புரதத்தைப் பொறுத்தவரையில் பின்வருவனவற்றில் இந்தக் கூற்று சரியானது?
வெளிப்பாட்டை அதிகரிக்கிறது
வெளிப்பாட்டைக் குறைக்கிறது
RNA பாலிமரேஸ் உடன் இடைபட்டு ஆனால் வெளிப்பாட்டை பாதிப்பதில்லை
அது ஊக்குவிப்பானாகவும் அடக்கியாகவும் செயல்படுகிறது.
48.
1. தலாசீமியா ஒரு உடல் குரோசோம்களின் ஒடுங்கு ஜீன்களினால் ஏற்படும் குறைபாடு
2. பீனைல் கீட்டோன் யூரியா ஒரு உடல் குரோமோசோம்களில் உள்ள ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
3. அல்பீனிசம் என்பது மெலானின் இல்லாமையால் வருவது.
4. ஹண்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
49.
a) ஆண்டி D எதிர்ப்பொருள் இயல்பான மனிதர்களின் பிளாஸ்மாவில் இருப்பதில்லை.
b) Rh -காரணி முதன் முதலில் ரீசஸ் குரங்கில் இருந்து கண்டறியப்பட்டது.
c) Rh -நேர்மறையாளர்கள் Rh-எதிர்மறையாளர்கள் இரத்தத்தினை பெறும்பொழுது எதிர்ப்பொருள் உருவாகிறது.
d) Rh -எதிர்பொருள் தூண்டி RBC யின் மேற்பரப்பில் காணப்படுகிறது.
50.
அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல்
ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபிஸ்
51.
மரபணு குறியீடு அகராதியைப் பொருத்தவரையில் எது உண்மையானதல்ல.
1. இது எல்லா உயிரின மண்டலங்களுக்கும் பொதுவானது
2. அது சிதைவுக் குறியீடுகள் எனப்படும்
3. இக்குறியீடுகள் குழப்பமற்றவை
4. தூது RNA வின் ஒரு முக்குறியும் ஒரு தொடர்ச்சியற்ற முறையில் படிக்கப்படுகிறது.
52.
2 டிரைசோமி நிலையின் அறிகுறியானது
a ) துருத்திய நாக்கு
b) எப்பொழுதும் திறந்துள்ள வாய்
c) மனநலக் குறைபாடு
d) பிளவுபட்ட உதடு
53.
அ.துண்டாதல்
ஆ.முகிழ்த்தல்
இ.ஸ்ட்ரோபிலா ஆக்கம்
ஈ.உறுப்பு மீட்பு
54.
மரபுக்குறியீடுடன் தொடர்பற்றது
அ) சிதைவு குறியீடுகள்
ஆ) குழப்பமானவை
இ) எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது
ஈ) தனித்துவம் வாய்ந்தது
55.
அ) கருக்குழல் தடை - அண்ட நாள வெட்டு
ஆ) விந்துக்குழல் தடை - விந்து நாள வெட்டு
இ) ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனம் - LNG 20
ஈ) தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனம் - Multiload 475
56.
| பகுதி I | பகுதி II | ||
|---|---|---|---|
| அ | பாலிலி இனப்பெருக்கம் | a. | மரபணு ஒத்த |
| ஆ. | பாலினப்பெருக்கம் | b. | மரபணு ஒத்த |
| இ. | அமீபா | c . | ஒபலினா |
| ஈ. | நாடாப்புழு | d | டீனியா சோலியம் |
57.
அ) மரபுக்குறியீடு முக்குறியன்களானது - வில்கின்ஸ்
ஆ) DNA இரட்டிப்படைதல் - மெசல்சன் மற்றும் ஸ்டால்
இ) TMV வின் மரபணு RNA - பிராங்கெல் கான்ராட்
ஈ) நொதிகள் பாலிநியுக்ளியோடைட் பாஸ்பாரிலேஸ் - மார்ஷல் நிரன்பெர்க் மற்றும் செவேரோ ஒசோவா
58.
1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண்
2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண்
3. டவுண் சிண்ட்ரோம் - டிரைசோமி 23
4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
59.
| நிகழ்வு | நடைபெறும் இடம் | |
|---|---|---|
| அ | படியெடுத்தல் | நியுக்ளியோலஸில் |
| ஆ | நகலெடுத்தல் | சைட்டோபிளாசம் |
| இ | மொழிபெயர்த்தல் | ரிபோசோம்கள் |
| ஈ | தோற்ற மாற்றமடைதல் | புரதம் |
60.
பாலிமரேஸ்
61.
உறுதிக்கூற்று : மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
காரணம்: சுறாவின் குட்டிகள் தாய் சேய் இணைப்பு திசுக்கள் அற்று காணப்படும்.
அ. 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் அல்ல.
இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு
ஈ .' 'உ' தவறு ஆனால் 'கா' சரி
62.
உறுதிப்படுத்துதல் A: கடத்து RNA, RNA க்களில் மிகச் சிறிய மூலக்கூறாகும்.
காரணம் R: கடத்து RNA க்கள் அமினோ அமிலங்களை சைட்டோபிளாசத்திலிருந்து புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்கிறது.
அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
இ) 'A' சரியானது 'R' தவறானது
ஈ) 'A' மற்றும் 'R' தவறானது
63.
DNA பாலிமெரேஸ் II - DNA ரிப்பேர் நுட்பத்தில் செயல்படுகிறது.
1.
(a)
விந்து செல்களைக் கடத்தும் ஊடகம்
2.
(a)
பெர்னஸ்டின்
3.
(a)
1951
4.
(b)
அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i
5.
(c)
DNA மரபணுப்பொருள் என்பதற்கான சான்று
6.
(c)
7.
(c)
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இழையின் 3' முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோடைடுகளை இணைக்கும்.
8.
(b)
IgA
9.
(d)
மேற்கண்ட அனைத்தும்
10.
(d)
'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை
11.
1. கண்ணீர்
2. உமிழ்நீர்
3. சிறுநீர்
4. விந்து
5. இரைப்பைச் சாறு
6. விலங்குகளின் பால்
12.
1. பிறப்புறுப்பு அக்கி
2. பிறப்புறுப்பு மருக்கள்
3. ஹெபடைடிஸ் B வைரஸ்
4. AIDS
13.
1. முழு உருவ மீட்பு
2. உறுப்பு மீட்பு
14.
| காப்புறையாக்கம் | வாலாக்கம் |
| 7-மெத்தில் குவானோசின் ட்ரைபாஸ்பேட் - தூது RNA வின் முன்னோடியான hnRNA இந்த 5' முனையில் இணைக்கப்படுகிறது. | hnRNA வின் 3' முனையில் அடினைலைட் எச்சங்கள் (300 - 200 Poly-A) இணைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு வாலாக்கம் எனப்படும். |
| இச்செயல்முறை காப்புறையாக்கம் எனப்படும். இதனால் hnRNA முதிர்ந்த தூது RNA வாகிறது. | இச்செயல்முறைகளால் hnRNA முதிர்ந்து தூது RNA வாக தயாராகிறது. |
15.
16.
| வார்ப்புரு இழை | குறியீட்டு இழை | |
| 1 | இவ்விழை mRNA உருவாக்கத்திற்கு வார்ப்பாக செயல்படுகிறது. | இது வார்ப்புரு பணியைச் செய்வதில்லை |
| 2 | இதன் நைட்ரஜன் காரங்கள் mRNA இழைக்கு ஈடான இழைகளை உருவாக்குகிறது. | இதன் நைட்ரஜன் காரங்கள் அப்படியே mRNA இழையில் காணப்படுவதேயாகும். |
| 3 | இது 3' ⟶ 5' திசையில் கொண்டது | இது 5' ⟶ 3' திசையில் கொண்டது |
17.
(i) கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்தும் முறை (IUI) பயன்படுத்தப்படும்.
(ii) கணவர், உடல்நலம் மிக்க விந்து கொடையாளிடம் இருந்து விந்துத்திரவம் சேகரிக்கப்படுகிறது.
(iii) அண்டகத்தைத் தூண்டி, அதிக அண்ட செல்கள் உற்பத்தி செய்யப்படும்.
(iv) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், நுண்குழல் மூலம் கல்விக் கலவிக்கால்வாய் வழியாகக் கருப்பையினுள் செலுத்தப்படும்.
(v) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
18.
அ) FSH - நுண்பை செல் தூண்டும் ஹார்மோன்
ஆ) LH - லூட்டிமுனைசிங் ஹார்மோன்
இ) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
ஈ) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
19.

20.
(i) அமீபா பிளவுறுத்தல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
(ii) பிளவுறுதல் என்பது செல் பிரிதல்.
21.
1. விந்தகங்கள் விதைப்பையினுள் இறங்காமல், உடலுக்குள் தங்கி விடுவது மறை விந்தகம் எனப்படும்.
2.பிறந்த ஆண் குழந்தைகளில் 1 முதல் 3% வரை உள்ளது.
3. பிறந்த காலத்தில் விந்து உற்பத்தி செய்யாமல் மலடாகலாம், இளம் வயதில் அறுவை சிகிச்சையினால் சரி செய்யலாம்.
22.
1. குரோமோசோமின் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறைபாட்டு நோய்களை உண்டாக்குகிறது.
2. குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகரித்தோ அல்லது குறைந்தோ வெளிப்படுகின்ற பல்வேறு அடையாளங்களும் அறிகுறிகளும் சிண்ட்ரோம் எனப்படும்.
23.
1. மீயொலி வரியோட்டம்
2. பனிக்குடத் துளைப்பு
3. கோரியான் நுண்நீட்சி ஆய்வு
4. கருகண்காணிப்புக் கருவி
5. டாப்ளர் கருவி
24.
1. இதில் பிளவுமட்டம் உயிரியின் கிடைமட்ட அச்சில் ஏற்படுகின்றது.
2.பாரமீசியத்தில் பெரிய உட்கரு நேர்முகப் பிரிவு மூலம் சிறிய உட்கரு மறைமுகப்பிரிவு முறையிலும் பிரிவடைகின்றன.
25.
26.
காலம்:
மனித மரபணு திட்டம் 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது நிறைவுற 13 ஆண்டுகளானது.
அளவு:
1. இது வரை வரிசைப்படுத்தப்பட்ட உயிரினங்களை விட மனித ஜீனோம் 25 மடங்கு பெரியது.
2. முதன் முதலில் நிறைவு செய்யப்பட்ட முதுகெலும்பி மரபணு மனிதனுடையதாகும்
3. இதில் 3 X 109 கார இணைவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தரவு சேமிப்பு மற்றும் பயன்பாடு:
1. மனித ஒரு செல்லின் மரபணு தரவுகள் சேமிக்க ஏறத்தாழ 3300 புத்தகங்கள் தேவை (1000 எழுத்துகள் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம்)
2. இவைகளை சேமிக்க, பெற, ஆய்வு செய்ய, அதிநவீன கணினி அமைப்புகள் தேவை.
பயோ - இன்ஃபர்மேடிக்ஸ்:
உயிரியலில் இந்த புதிய பிரிவு, கணினி அறிவையும், தொழில்நுட்பத்தையும், மனித மரபணு சார்ந்த தரவுகளை நிர்வகிக்க, ஆய்வுகளை செய்ய பயன்படுத்துகிறது.
இது போன்ற பல்வேறு தன்மைகளாலே மனித மரபணு திட்டம் (Human Genome Project) ஒரு மகா திட்டமாக கருதப்படுகிறது.
27.
28.
பாலினப்பெருக்க உயிரிகளில் முதல்நிலை பாலுறுப்புகளிலிருந்து விந்துக்களும் அண்ட செல்களும் உருவாகும் நிகழ்ச்சி இனச்செல் உருவாக்கம் எனப்படும். இச்செயல்பாட்டில் குன்றல் பகுப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது.
29.

இவ்வகையான பால் நிர்ணயித்தலில் ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்புகளை (ஹெடிரோகேமிட்டிக்) உடையவர்.
XX -XO வகை
(i) எ.கா.பூச்சிகள்,கரப்பான்பூச்சி,வெட்டுக்கிளி.
(ii) ஆண்கள் ஹெட்டிரோகேமிட்டிக் வகையினர் ஒரு X குரோமோசோம் உடையவர்.
(iii) இரண்டு வகையான விந்துகளை உற்பத்தி செய்கின்றன.
(iv)ஒன்று X குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இல்லை.
(v) சேய்களின் பால் அவைகளின் விந்துகள் எந்த அண்டத்துடன் இணைகிறதோ அதைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. X விந்து அல்லது Y விந்து.
XX-XY வகை(லைகஸ் வகை )
(i) உ.ம். மனிதன் மற்றும் பழப்பூச்சி
(ii) ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்பினை உடையவர்.
(iii) அவர்கள் இரண்டு விதமான விந்துக்களை சில 'X' குரோமோசோம் கொண்டும் உள்ளன.
(iv) கருவின் பாலானது அது எவ்வகை விந்துவால் கருவுறுதல் அடைகிறது என்பதை பொறுத்தது.
(v) 'X' குரோமோசோம் உடைய விந்துக்கள் பெண் உயிரியையும் 'Y' குரோமோசோம் உடைய விந்துக்கள் ஆண் உயிரியையும் உருவாக்கும்.
30.
(i) அமீபா ஒரு செல் உயிரியாகும். இவை அழிவற்றவை எனப்படும்.
(ii) ஒரு முதிர்ந்த அமீபா மைட்டாசிஸ் மூலம் இரண்டு இளம் அமீபாகவே உருவாகிறது.
31.
1. விந்து செல்கள் திறனேற்றம் என்ற உயிர்வேதியச் செயலால் அண்ட செல்லைத் துளைக்கிறது.
2. நுண்பை செல்களின் உறைவழி சென்று, அண்டக சோனா பெலூசிடாவில் உள்ள ஏற்பி மூலக்கூறுகளுடன் இணைகிறது.
3. இந்த இணைவில் அக்ரோசம் வினை தூண்டப்படும்.
4. விந்தணு சோனா பெலூசிடா சிதைக்கப்பட்டு, விந்து பிளாஸ்மா சவ்வை அடையும்.
5. இந்த நொதியால், சோனா பெலூசிடா சிதைக்கப்பட்டு, விந்து பிளாஸ்மா சவ்வை அடையும்.
6. விந்து செல்லின் உட்கரு மற்றும் இதர பொருட்கள் அண்டத்தினுள் நுழைகிறது.
7. கார்டிகல் துகள்கள் சேர்ந்து கருவுறுதல் சவ்வை உருவாக்கும், இது பல விந்தணுக்கள் உள் நுழைவதைத் (Polypermy) தடுக்கிறது.
32.
மனிதரில் பால் சார்ந்த பாரம்பரியம் :
1. பால் குரோமோசோமில் அமைந்துள்ள மரபணு சில பண்புகளின் மரபுக்கடத்தலை நிர்ணயிக்கிறது.
2. X குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் X சார்ந்த மரபணுக்கள் ஆகும்.
3. Y குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் Y சார்ந்த மரபணுக்கள் அல்லது ஹோலன்டிரிக் ஜீன்கள் ஆகும்.
X சார்ந்த பாரம்பரியம்
1. சிவப்பு-பச்சை நிறக்குருடு அல்லது டால்டோனிசம் இரத்தக்கசிவு நோய் டச்சென்ஸின் தசை நலிவு நோய் டால்டோனிசம் X சார்ந்த மரபணு மரபுக்கடத்தலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
ஒரு உதாரணத்தை விரிவாக பார்ப்போம்.
ஹீமோபிலியா அல்லது இரத்தக் கசிவுநோய் :
1. இந்நோய் ஒடுங்கிய X சார்ந்த மரபணுவால் ஏற்படுகிறது.
2. இரத்தக்கசிவு நோய்க்கான ஒடுங்கு மரபணுவைக் கொண்ட நபரின் இரத்தத்தின் இயல்பான இரத்த உறைவு பொருள் (திராம்போபிளாஸ்டின்) காணப்படுவதில்லை.
3. சிறுகாயங்கள் ஏற்பட்டாலும் இரத்தம் தொடர்ச்சியாக வெளியேறி இறப்புக்கு வழிவகுக்கிறது.
4. பெண்கள் இந்நோய்க்கு கடத்திகளாகச் செயல்படுகின்றனர்.
5. 50% மகன்களுக்கு இந்நோயை கடத்துகின்றனர்.
6. குறுக்குமறுக்கு மரபுக்கடத்தலை இப்பாரம்பரியம் பின்பற்றுகிறது.
தகப்பன் \(\rightarrow \)மகள் \(\rightarrow \) பேரன்
நிறக்குருடு
1. மனிதனில் ஓங்கு தன்மை கொண்ட X சார்ந்த மரபணுக்களே நிறங்களை பார்ப்பதற்கு உதவும் கூம்பு செல்களின் உற்பத்திக்கு காரணமாக இருக்கின்றன.
2. ஒடுங்கு நிலையில் இவற்றால் கூம்பு செல்களை உருவாக்க முடிவதில்லை.
3. ஒத்த தன்மை கொண்ட ஒடுங்கு அல்லீல்களை (XCXC) பெற்றுள்ள பெண்கள் மற்றும் பாதியளவு ஒடுங்கு அல்லீல்களை(XCy) பெற்றுள்ள ஆண்கள் நிறக்குருடு ஆகும். அவர்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை வேறுபடுத்தியறிய முடிவதில்லை.

33.
1. காரணி - மனித பாபில்லோமா வைரஸ்
2. அறிகுறிகள் : இடுப்பு வலி, கலவிக்கால்வாய் திரவமிகைப்போக்கு, இரத்தப்போக்கு
3. காரணிகள் - 1) பலருடன் பாலியல் தொடர்பு ,2) நீண்ட நாள் கருத்தடை மாத்திரைப் பயன்பாடு
4. கண்டறிதல் : HPV ஆய்வு, பாப் பூச்சு சோதனை, எக்ஸ்ரே, CT, MRI,PET ஸ்கேன்
5. சிகிச்சை : கதிர்வீச்சு சிகிச்சை, அறுவைச் சிகிச்சை
6. தடுப்பு முறைகள்
- 30 வயதிற்கு மேல் பெண்கள் பரிசோதனை
- வாழ்க்கை முறை மாற்றம்
- சத்தான உணவு
- புகையிலைப் பயன்பாடு தவிர்ப்பு
- இளவயதுத் திருமணம் தவிர்த்தல்
- ஓரிணை இனப்பெருக்கம்
- சீரான உடற்பயிற்சி
34.
1. இதில் பெற்றோர் உடலானது பல துண்டுகளாகப் பிரிந்து ஒவ்வொரு துண்டும் புதிய உயிரியாக வளரும்.
2. கடல் சாமந்தியில் பாதத்தட்டுகளின் அடிப்பகுதியில் ஏற்படும் சுருக்கங்களால் பிரிந்து கதுப்புகள் உருவாகும்.
3. ஒவ்வொரு கதுப்பும் ஒரு புதிய கடற்சாமந்தியாக வளரும்.
4. நாடாப்புழுவில் வயதான பழுத்த கண்டங்கள் பின்பகுதியில் உள்ளன.
5. இவை பகுதியாகவோ அல்லது தனியாகவோ பிரியும் செயலுக்கு அபோலைசிஸ் என்று பெயர்.
6. பிரிந்த கண்டங்கள் இரண்டாம் நிலை விருந்தோம்பியை அடைந்து அதன் வாழ்க்கைச் சுழற்சியை முழுமையாக்குகிறது.

35.
வரையறை:
சைட்டோபிளாசத்தில் சிதறிக் காணப்படும் அமினோ அமிலங்களை எடுத்து வரும் கடத்தியாகவும் தூது குறியீடுகளை படிப்பதுமாக இரு பணிகளைச் செய்வதால் இது இணைப்பு மூலக்கூறு என்ற சொல்லை ஃபிரான்சிஸ் கிரிக் உருவாக்கினார்.
கடத்தி RNA அமைப்பு
ராபர்ட் ஹோலே கிராம்பு இலை மாதிரி
1. இரண்டாம் நிலை கட்டமைப்பு இவ்வாறு காணப்படுகிறது.
2. இறுக்கமான மூலக்கூறு தலைகீழ் L-வடிவத்தை ஒத்துள்ளது.
கிராம்பு இலை மாதிரி அமைப்பு

3. அமினோ அமில ஏற்பு முனையில் ➝ அமினோ அமிலம் உள்ளது.
4. எதிர்முனையில் ➝ எதிர் குறியீட்டிற்கான மூன்று கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் தூது RNA இன் காரங்களின் நிரப்பு கூறுகளாயுள்ளன. சரியான அமினோ அமிலம் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது (அமினோ அசைலேஷன்)
5. T-வளையம் - ரிபோசோம் இணையும் பகுதி
6. D-வளையம் - அமினோ அசைல் சிந்தடேஸ் இணையும் வளையம்.
7. மாதிரி வளையம் - இதில் நியுக்ளியோடைடுகளின் கூறுகளும் நீளமும் வேறுபட்டுள்ளது.
36.
1. குரோமோசோம் - குரோமேட்டினால் ஆனவை
2. குரோமேட்டின் ⟶ தொடர்ச்சியான மீள் தோன்று அலகுகளான நியூக்ளியோசோம்களால் உருவானது. கோர்ன்பெர்க் - நியூக்ளியோசோம் மாதிரி
3. இதில் H2A, H2B, H3 & H4 எனும் நான்கு ஹிஸ்டோன் புரதங்களின் இரண்டு மூலக்கூறுகள் வரிசையாக அமைந்து எட்டு மூலக்கூறுகளை உடைய அலகை உருவாக்குகின்றன. இதற்கு ஹிஸ்டோன் எண்மம் என்று பெயர்.
4. நேர்மின்தன்மை கொண்ட ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி, எதிர்மறை தன்மை கொண்ட DNA உறையாக அமைந்து நியூக்ளியோசோமை உருவாக்குகிறது.
5. மாதிரி நியூக்ளியோசோம் ஒன்றில் - 200 கார இணைகள் உள்ளன
6. அடுத்தடுத்துள்ள நியூக்ளியோசோம்களை, நொதிகளின் உதவியுடன் இணைப்பு DNA க்கள் இணைக்கின்றன.
7. ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி DNA இரு முழுமையான திருகுகளை உருவாக்கியுள்ளன.
8. இந்த திருகுகளை மூலக்கூறு H1 (இணைப்பு மூலக்கூறு) மூடுகிறது.
9. H1 இல்லாத நிலையில் குரோமேட்டின் மணிகோர்த்த மாலை போல் தெரிகிறது.
10. இவ்வமைப்பின் எந்த இடத்திலும் DNA உட்செல்லவும் நியூக்ளியோசோமை விட்டு வெளியேறவும் முடியும்.
11. நியூக்ளியோசோமின் மடிப்பிலிருந்து தோன்றும் நீளமுள்ள இழை - ஒரு சுற்றுக்கு ஆறு நியூக்ளியோசோமை கொண்ட வரிச்சுருளமைப்பை (Solenoid) உருவாக்குகிறது.
12. இது மேலும் மடிப்புற்று - குரோமேடின் இழைகளையும், குரோமேடின் இழை மேலும் மடிப்புற்று குரோமேடிடுகளையும், குரோமேடிடுகள் ⟶ குரோமோசோம்களாகின்றன.
13. உயர்நிலை குரோமேடின் பொதிவுக்கு ஹிஸ்டோனல்லாத குரோமோசோம் புரதங்கள் தேவைப்படுகின்றன.
| யூகுரோமேட்டின் | ஹெட்ரோகுரோமேட்டின் | |
| 1. | தளர்வாக பொதியப்பட்டுள்ளது | நெருக்கமாக பொதியப்பட்டுள்ளது |
| 2. | சாயமேற்காது | சாயமேற்கும் |
| 3. | படியெடுத்தலில் தீவிரமாக பங்கேற்கும் | படியெடுத்தலில் பங்கேற்காது |
37.
கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் :
(i) குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு உகந்தது.
(ii) கணவர், உடல் நலமிக்க கொடையாளிடம் இருந்து விந்து சேகரித்தல்.
(iii) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், கலவிக் கால்வாய் வழி கருப்பையினுள் செலுத்தல்.
(iv) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
38.
அ) அண்ட செல் விடுபடுநிலை - புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன்
ஆ) அண்டக ஹார்மோன்கள் - FSH நுண்பை செல்களை தூண்டும் ஹார்மோன்கள்
பிட்யூட்டரி ஹார்மோன்கள் - LH -லூட்டினைசிங் ஹார்மோன்
இ) i) எண்டோ மெட்ரியம் புதுப்பிக்கப்படுதல்
ii) கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழலை கருவுறுதல் உண்டாக்கும்.
iii) கருப்பையின் உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தை உற்பத்தி செய்கிறது.இது 'சுரப்பு நிலையில்' நடக்கிறது.
ஈ) C -இரண்டாம் நிலை நுண்பை செல்கள்
H - கார்பஸ் லூட்டியம்
| இரண்டாம் நிலை நுண்பை செல்கள் | கார்பஸ் லூட்டியம் | |
|---|---|---|
| 1. | நுண்பை நிலையில் காணப்படும். | இவை லூட்டியல் நிலையில் உருவாகும். |
| 2. | இவற்றைச் சுற்றி கிரானுலேசா செல்களும் தீகா அடுக்கும் காணப்படும். | இந்த இடைக்கால நாளமில்லாச் சுரப்பி, புரோஜெஸ்டிரானைச் சுரக்கின்றது. |
| 3. | இவை மூன்றாம் நிலை நுண்பை செல்களாகி பின்னர் முதிர்ந்த கிராபியன் ஃபாலிகிளாகின்றன. | கருவுறுதல் நிகழாவிடில், இது கார்பஸ் அல்பிகன்ஸ் என்ற வடுத்திசுவடு உருவாக்கும். |
39.
ஒற்றைமயம் - இரட்டைமயம் நிலை [உ.ம்] தேனீ,எறும்பு, குளவி.
(i) இம் முறையில் சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(ii) கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளாக வளர்ச்சியடைகின்றன.
(iii) கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் வளர்ச்சியடைகின்றன.
(iv) ஆண் தேனீக்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியளவே உள்ளன. (ஒற்றைமயம்)
(v) பெண் தேனீக்களில் குரோமோசோம் இரு மடங்காக உள்ளன. (இரட்டை மயம்) இதனால் இம்முறை ஒற்றைமய-இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது.
40.
ஆ)
| இரு சமப்பிளவு முறை அமீபாவில் | பல பிளவுமுறை பிளாஸ்மோடியத்தில் |
|---|---|
| இது ஒரு எளிய முறை | பிளாஸ்மோடியத்தில் சைசான்ட் மற்றும் ஊசைட் நிலையில் பல பிளவுமுறை நடைபெறுகிறது. |
| சுருங்கும் நுண்குமிழ் செயலிழந்து மறைந்து விடும். | சைசான்ட் நிலையில் பலபிளவு முறை நடைபெறுதலுக்கு சைசோகனி என்று பெயர். |
| உட்கரு மணி மறைந்துவிடும். | இதன் சேய் உயிரிகள் மெரோசோயிட்டுகள் ஆகும். |
| உட்கருவானது மறைமுகப் பிரிவு முறையில் பிளவுபடும். | ஊசைட் நிலையில் நடைபெறும் பல பிளவு முறை ஸ்போரோகனி என்றும் சேய் உயிரிகள் ஸ்போரோசோயிட்டுகள் ஆகும். |
| செல்லின் நடுவில் சுருக்கம் ஏற்பட்டு சைட்டோபிளாசம் பிரியும். |
ஆ)
| பல்லி இழப்பு மீட்டல் | பிளனேரியாவில் இழப்பு மீட்டல் | ||
|---|---|---|---|
| 1. | இது மீண்டும் உருவாக்குதல் முறையாகும் | 1. | இது சீராக்கல் முறையாகும். |
| 2. | வெட்டுண்ட வாலை மீண்டும் பெறுதல். | 2. | உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன. |
41.
( )
கருப்பையினுள் குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உட்செலுத்துதல்
42.
( )
டர்னர் சிண்ட்ரோம்
43.
( )
உறையாக்கம்
44.
( )
'ரோ' காரணி
45.
( )
mRNA, tRNA
46.
( )
வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.
47.
(d)
அது ஊக்குவிப்பானாகவும் அடக்கியாகவும் செயல்படுகிறது.
48.
அன்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
49.
Rh -நேர்மறையாளர்கள் Rh-எதிர்மறையாளர்கள் இரத்தத்தினை பெறும்பொழுது எதிர்ப்பொருள் உருவாகிறது
50.
நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
51.
4. தூது RNA வின் ஒரு முக்குறியும் ஒரு தொடர்ச்சியற்ற முறையில் படிக்கப்படுகிறது.
52.
பிளவுபட்ட உதடு
53.
உறுப்பு மீட்பு
54.
ஈ) தனித்துவம் வாய்ந்தது
55.
தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனம் - Multiload 375
56.
இராட்சச அமீபா - ஒபலினா
57.
அ) மரபுக்குறியீடு முக்குறியன்களானது - வில்கின்ஸ்
58.
பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13
59.
இ) மொழி பெயர்த்தல் - ரிபோசோம்கள்
60.
நியுக்ளியோடைடுகளை சேர்க்கிறது
61.
'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்
62.
ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
63.
(a)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards