12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Tamil Medium Chemistry Important Question 2020 )
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
C3 H8 O என்ற மூலக்கூறு வாய்பாடுடைய ஒரு மோல் சேர்மமானது, இரு மோல்கள் HI உடன் முழுவதுமாக வினைபுரிந்து X மற்றும் Y ஐத் தருகிறது. Y ஐ நீர்த்த காரத்துடன் கொதிக்க வைக்கும் போது Z உருவாகிறது. Z ஆனது அயோடோபார்ம் வினைக்கு உட்படுகிறது எனில் A என்ற சேர்மம் யாது?
புரப்பன் – 2 – ஆல்
புரப்பன் – 1- ஆல்
ஈத்தாக்ஸி ஈத்தேன்
மீத்தாக்ஸி ஈத்தேன்
2.
3.
குளுக்கோஸ் ஒரு ஆல்டோஸ் ஆகும். பின்வரும் எந்த ஒரு வினைக்கு குளுக்கோஸ் உட்படுவதில்லை ?
இது ஆக்சைம்களை உருவாக்குவதில்லை
இது கிரிக்னார்டு வினைக்காரணியுடன் வினைபுரிவதில்லை
இது ஓசசோன்களை உருவாக்குவதில்லை
இது டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குவதில்லை
4.
5.
கலவினை : \(A+2B^{-} \rightarrow A^{2+}+2B\);
\(A^{2+}+2e^{-} \rightarrow A \) E0 = + 0.34V மற்றும் 300K வெப்பநிலையில் இந்த கலவினைக்கு log10 K = 15.6 at 300K எனில், \(B^{+}+e^{-} \rightarrow B\) எனும் கலவினைக்கு E0 மதிப்பை காண்க
0.80
1.26
-0.54
-10.94
6.
பென்சோயிக் அமிலத்தின் அம்மோனியம் உப்பை P2O5 உடன் நன்கு வெப்பப்படுத்தி கிடைக்கும் விளை பொருளை ஒடுக்கமடையச் செய்து அதனை NaNO2 / HCl உடன் குறைந்த வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது இறுதியில் கிடைக்கும் விளைபொருள் _______.
பென்சீன்டையசோனியம் குளோரைடு
பென்சைல் ஆல்கஹால்
பீனால்
நைட்ரசோ பென்சீன்
7.
இன் IUPAC பெயர் _______.
பியூட் – 3-ஈனாயிக் அமிலம்
பியூட் – 1- ஈன்-4-ஆயிக் அமிலம்
பியூட்– 2- ஈன்-1-ஆயிக் அமிலம்
பியூட்-3-ஈன்-1-ஆயிக் அமிலம்
8.
இடைநிலைத் தனிமங்களின் மாறுபட்ட ஆக்சிஜனேற்ற நிலைக்கு காரணம் ______________
(n - 1) d எலக்ட்ரான்களின் வேறுபட்ட ஆற்றல்கள்
ns எலக்ட்ரான்களின் வேறுபட்ட ஆற்றல்கள்
(n - 1) d எலக்ட்ரான்களின் ஒத்த ஆற்றல்கள்
(n - 1) d மற்றும் ns எலக்ட்ரான்களின் ஒத்த ஆற்றல்கள்
9.
நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்கப் பயன்படும் சிலிக்கேட் ________.
ஃபெல்ஸ்பார்
குவார்ட்ஸ்
ஜியோலைட்டுகள்
டால்க்
10.
வினைபடு பொருட்களின் செறிவை அதிகரிக்கும் போது வினையின் வேகம் ________.
குறைகிறது
அதிகரிக்கிறது
மாறாது
தடைபடுகிறது
11.
நிக்கல் குளோரைடில் காணப்படும் Ni2+ அயனியை துல்லியமாக அளந்தறியப் பயன்படும் ஈனி எது?
DMG
EDTA
en
CO
12.
நுரை மிதப்பு முறையில் பைன் எண்ணெய் ________ ஆக பயன்படுகிறது.
சேகரிப்பான்
குறைக்கும் காரணி
நுரை உருவாக்கும் காரணி
இளக்கி
13.
ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8 x 10-2s-1 அவ்வினையின் வினைவகை _____________
முதல் வகை
பூஜ்ய வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
14.
NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் ______________
F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்
புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.
Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.
மேற்கண்ட அனைத்தும்.
15.
[Fe(H2O)5NO]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே __________
முறையே +2 மற்றும் 0
முறையே +3 மற்றும் 0
முறையே +3 மற்றும் -1
முறையே +1 மற்றும் +1
16.
கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது ____________
BrO3- MnO2
Br2,MnO42-
Br2,MnO2
BrO-MnO42-
17.
பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?
XeOF4
XeO3
XeF2
NeF2
18.
டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _______.
ஆறு
இரண்டு
நான்கு
மூன்று
19.
பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல.
Cr2O3 + 2Al \(\rightarrow \) Al2O3 + 2Cr
Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al
3TiO2 + 4Al \(\rightarrow \) 2Al2O3 + 3Ti
இவை எதுவுமல்ல
20.

ஃபார்மால்டிஹைடையும் கீட்டோன்களை இம்முறையில் தயாரிக்க ?
21.
வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.
22.
படிகாரங்கள் சேர்ப்பதால் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஏன்?
23.
எவ்வகையான பிணைப்புகள் DNA விலுள்ள ஒற்றை அலகுகளை ஒன்றாக இருத்தி வைத்துள்ளன ?
24.
பின்வருவனவற்றுள் என்ன நிகழும்
i. 2 – நைட்ரோ புரப்பேனை HCl உடன் கொதிக்க வைக்கும் போது
ii. நைட்ரோ பென்சீன் வலிமையான அமில ஊடகத்தில் மின்னாற் ஒடுக்குதல்
iii. மூவிணைய பியூட்டைலமீனை KMnO4 உடன் ஆக்சிஜனேற்றம் செய்தல்
iv. அசிட்டோன் ஆக்சைமை ட்ரைபுளூரோ பெராக்சி அசிட்டிக் அமிலம் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தல்
25.
pH வரையறு.
26.
நீரின் அயனிப் பெருக்கம் வரையறு. அறை வெப்ப நிலையில் அதன் மதிப்பை தருக.
27.
C5H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பைட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை . சேர்மம் (A) வை கண்டறிக.
28.
இடைநிலைத் தனிமங்கள் உலோகக் கலவைகளை உருவாக்குவதன் காரணம் யாது?
29.
செனான் டிரை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
30.
அலுமினியம் (III) குளோரைடு நிலைப்புத் தன்மையுடையது. ஆனால் தாலியம் (III) குளோரைடு நிலைப்புத் தன்மையற்றது. ஏன்?
31.
இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?
32.
வினை வேகத்தினைக் குறிப்பிடும் சமன்பாட்டில் எதிர்க்குறி ஏன் பயன்படுத்தப்படுகிறது.
33.
உலோகத்தைப் பயன்படுத்தி ஒடுக்குதல் மூலம் ஒரு உலோகம் பிரித்தெடுத்தல் பற்றி எழுது.
34.
வினைவேகத்தை தீர்மானிக்கும் படி என்பதனை உதாரணத்துடன் விளக்குக.
35.
[Co(NH3)5Cl]SO4 மற்றும் [Co(NH3)5SO4]Cl ஆகிய அணைவுச் சேர்மங்களை வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு சோதனையைக் கூறுக.
36.
37.
PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?
38.
ஆர்கானின் பயன்களைத் தருக.
39.
போரான் ஹைட்ரஜனுடன் நேரடியாக வினை புரிவதில்லை. BF3 யிலிருந்து டைபோரேனைத் தயாரிக்கும் ஏதேனும் ஒரு முறையினைத் தருக.
40.
கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்?
41.
H2 - O2 எரிபொருள் மின்கலத்தின் செயல்பாடுகளை விளக்குக.
42.
43.
இயற்புறப்பரப்பு கவர்தல், வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக.
44.
எவ்வாறு தயாரிப்பாய்?
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
v. அசிட்டைல் குளோரைடிலிருந்து அசிட்டோபீனோன்
vi. சோடியம் அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
vii. டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு
45.
எளிய கனசதுர அமைப்பின் பொதிவு பின்னத்தை கணக்கிடுக.
46.
அணைவுச் சேர்மங்களில் காணப்படும் கட்டமைப்பு மாற்றியங்களை விளக்குக.
47.
காப்பர் அதன் தாதுவிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?
48.
ஒரு வினையின் வினைவேக மாறிலி k ஆனது வெப்பநிலையினைப் பொருத்து பின்வருமாறு அர்ஹீனியஸ் சமன்பாட்டின் படி மாற்றமடைகிறது.
\(log\quad K=log\quad A-\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
இங்கு Ea என்பது கிளர்வு ஆற்றல் log K Vs \(\frac{1}{T}\) வரைபடம் வரையும் போது -4000K சாய்வு உடைய நேர்கோடு பெறப்படுகிறது. கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக.
49.
எண்முகி மற்றும் நான்முகி வெற்றிடங்களை வேறுபடுத்துக.
50.
பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
i) Na2[Ni(EDTA)]
II) [Ag(CN)2]
iii) [Co(en)3]2(SO4)3
iv) [Co(ONO)(NH3)5]2+
v) [Pt(NH3)2Cl(NO2)]
51.
உலோகவியலில் மின்வேதி தத்துவத்தினைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
52.
அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக.
53.
பின்வரும் வினை வரிசையில் A,B, X மற்றும் Y ஆகிய விளைபொருட்களைக் கண்டறிக.

54.
இணைமாற்றியம் (மெட்டாமெரிசம்) என்றால் என்ன? 2 – மீத்தாக்ஸிபுரப்பேனின் இணைமாற்றியங்களுக்கான IUPAC வடிவமைப்புகளைத் தருக.
55.
பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக.
56.
Cd|Cd2+||Cu2+|Cu எனும் மின்கலத்தின் திட்ட emf ஐ கணக்கிடுக. Cu2+|Cu மற்றும் Cd2+|Cd ஆகியவற்றின் திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்புகள் முறையே 0.34V மற்றும் -0.40 V. கலவினையின் நிகழும் தன்மையினை கண்டறிக
57.
மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.
58.
‘A’ என்ற சேர்மத்தின் டைபுரோமோ பெறுதியை KCN உடன் வினைப்படுத்தி அமில நீராற்பகுப்பிற்கு உட்படுத்தி வெப்பப்படுத்தும் போது CO2 ஐ வெளியிட்டு ஒரு காரத்துவ அமிலம் ‘B’ ஐ தருகிறது. “B” ஐ திரவ NH3 மற்றும் உடன் வெப்பப்படுத்தி பிறகு Br2 /KOH உடன் வினைப்படுத்த சேர்மம் “C” ஐ கொடுக்கிறது. “C” ஐ NaNO2/HCl உடன் மிக குறைந்த வெப்பநிலையில் வினைப்படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்யும் போது ஒரு காரத்துவ அமிலம் “D” ஐ தருகிறது. D –ன் மூலக்கூறு நிறை 74 எனில் A, B, C மற்றும் D ஐ கண்டுபிடி.
59.
முகப்பு மைய கனச்சதுர அலகுக்கூட்டினை பெற்றுள்ள ஒரு தனிமத்தின் அலகுக் கூட்டின் விளிம்பு நீளம் 352.4 pm அதன் அடர்த்தி 8.9gcm-3. எனில் 100 g நிறையுடைய அத்தனிமத்தில் எத்தனை அணுக்கள் உள்ளன எனக் கண்டறிக.?
60.
டையா காந்தத் தன்மை உள்ள பொருள்கள் பற்றி எழுதுக?
61.
ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 2.3x10-4 s-1. வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவு 0.1 m எனில் 1 மணி நேரத்திற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் வினைபடு பொருளின் செறிவு யாது?
62.
போரிக் அமிலத்தின் பயன்களை எழுதுக.
63.
தள சதுர அணைவுச் சேர்மங்களில் காணப்படும் வடிவ மாற்றியம் பற்றி எழுதுக.
64.
பொருள் மைய கனச்சதுர அமைப்பில் பொதிவுத்திறன் சதவீதத்தினைக் கணக்கிடுக.
65.
பின்வரும் வினைகளைப் பூர்த்தி செய்க.
அ) MnO42-+H+\(\rightarrow\)?
ஆ) C6H5CH3 \(\overset { actdified }{ \underset { KMn{ O }_{ 4 } }{ \longrightarrow } } \)?
இ) MnO4-+Fe2+\(\rightarrow\)?
ஈ) KMnO4 \(\overset { \Delta }{ \underset { Red\quad hot }{ \longrightarrow } } \)?
உ) Cr2O72-+I-+H+\(\rightarrow\)?
ஊ) Na2Cr2O7+KCl \(\rightarrow\)?
66.
ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.
67.
+2 ஆக்சிஜனேற்ற நிலையுடைய லாந்தனைடு
68.
உலோகம் அதிகமுள்ள குறைபாடு
69.
XeOF4
70.
16
71.
முதல் வகை வினையின் அரைவாழ் காலம்
72.
அலுமினியம்
73.
ஸ்காண்டியத்தின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை ______
74.
தாதுக்களிலிருந்து கனிமக் கழிவுகளை நீக்குதல் _________ எனப்படும்.
75.
அ) Cu +, Zn2+ - டையாகாந்தத் தன்மை
ஆ) Sc3+, Ti4+, V5+ - பாராகாந்தத் தன்மை
இ) Co3+, Fe2+ - பாராகாந்தத் தன்மை
ஈ) Cu2+ - பாராகாந்தத் தன்மை
76.
அ. மாலகைட், அசுரைட்
ஆ. ரூபிசில்வர், குளோரார்ஜிரைட்
இ. ஜிங்கைட், குப்ரைட்
ஈ. ஆங்லசைட், செருசைட்
77.
கூற்று A: உலோகம் குறைவுபடும் குறைபாட்டில் எதிர் அயனிகளின் எண்ணிக்கை நேர் அயனிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவு.
காரணம் R: உலோகம் குறைவுபடும் குறைபாடு மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைக் கொண்ட நேர் அயனிகள் உள்ள படிகங்களில் காணப்படுகிறது.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது Aயினை விளக்குகிறது.
ii) A சரி ஆனால் R தவறு
iii) A தவறு ஆனால் R சரி
iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை
78.
கூற்று (A): போரான் ஒரு அலோகம்
காரணம் (R): போரானின் உருவளவு சிறியது மற்றும் அயனியாக்கும் ஆற்றல் அதிகம். எனவே சகப் பிணைப்புகளை உருவாக்குகின்றன.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது
ii) A சரி ஆனால் R தவறு
iii) A தவறு ஆனால் R சரி
iv) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை
79.
கூற்று (A) : பெரும்பாலான இடைநிலை உலோக அணைவுகள் நிறமுடையவைகளாக உள்ளன.
காரணம் (R): இவ்வுலோக அணைவுகளில் d - d எலக்ட்ரான் பரிமாற்றம் நடைபெறுகிறது.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
ii) A சரி ஆனால் R தவறு
iii) A தவறு ஆனால் R சரி
iv) A மற்றும் R இரண்டுமே சரி, ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.
80.
கூற்று (A): Cr2O3 ஆனது அலுமினோ வெப்ப ஒடுக்க முறை மூலம் குரோமியாக ஒடுக்கப்படுகிறது.
காரணம் (R): இம்முறையில் அலுமினியம் ஒடுக்கியாக செயல்படுகிறது.
i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
ii. A சரி, ஆனால் R தவறு
iii. A தவறு, ஆனால் R சரி
iv. A மற்றும் R சரி ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.
81.
i) ஒரே ஒரு வகை அணிக்கோவை புள்ளியை மட்டும் கொண்டுள்ள அலகுக்கூடு முதல்நிலை அலகுக்கூடு எனப்படும்.
ii) முதல்நிலை எளிய அலகுக்கூட்டில் ஏழு படிக அமைப்புகள் காணப்படுகின்றன.
iii) ஏழு முதல்நிலை அலகுக்கூடுகளுக்கு இணையாக 41 படிக அமைப்புகள் உருவாக்க வாய்ப்புள்ளன என பிராவே வரையறுத்தார்.
iv) கன சதுர மற்றும் சாய் சதுர படிக அமைப்புகளுக்கு a≠b≠c
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
82.
i) Cu+ உப்புகள் Cu2+ உப்புக்களை விட நிலைப்புத் தன்மை குறைந்தது.
ii) இரும்பு இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்காது
iii) Ag+ மற்றும் Cd2+ அயனிகள் ஒத்த எலக்ட்ரான் அமைப்புடையவை
அ) (i) & (iii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (ii)
ஈ) (ii)
83.
i) H2SO4 அமிலமும் இருகாரத்துவ அமிலமாகும்
ii) H3PO3 அமிலம் முக்காரத்துவ அமிலமாகும்
iii) H3PO4 அமிலம் இருகாரத்துவ அமிலமாகும்
iv) H3PO2 அமிலம் ஒருகாரத்துவ அமிலமாகும்
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (iii) & (iv)
ஈ) (i) & (iv)
84.
i) அணைவு உட்பொருள் மைய உலோக அயனியையும், ஈனிகளையும் உள்ளடக்கியது.
ii) K4 [Fe(CN)6] என்ற சேர்மத்தின் அணைவு உட்பொருள் [Fe(CN)6]4-
iii) அணைவு உட்பொருளினுள் அடங்கியுள்ள தொகுதிகள் அயனியுறும்.
iv) அணைவு உட்பொருள் சேர்மத்தின் வடிவத்திற்கு காரணமல்ல.
அ) (i) & (ii)
ஆ) (i) & (iii)
இ) (ii) & (iii)
ஈ) (iii) & (iv)
85.
i) வினைவேக மாறிலி என்பது விகித மாறிலியாகும்.
ii) வேதி வினையின் வேகம், வினைபடு பொருளின் ஆரம்பச் செறிவை சார்ந்தது.
iii) வினைவேக மாறிலி, வினைபடு பொருட்களின் ஆரம்பச் செறிவை சார்ந்ததல்ல
அ) (i) & (ii)
ஆ) (i) & (iii)
இ) (ii) & (iii)
ஈ) (i), (ii) & (iii)
86.
அ. வினைத்திறன் அதிகம் உள்ள உலோகங்கள் தனிம நிலையிலேயே இயற்கையில் கிடைக்கின்றன.
ஆ. தாதுக்களிலிருந்து கனிம கசடுகளை நீக்குவது தூய்மையாக்கல் எனப்படும்.
இ. வெள்ளீயக்கல் தாது புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
ஈ. சில்வர் கிளான்ஸ் ஒரு கார்பனேட் வகை தாது
87.
i) மூலக்கூறு படிகங்களில் காணப்படும் உட்கூறுகள் நடுநிலை மூலக்கூறுகள் ஆகும்.
ii) மூலக்கூறு படிகங்களில் உட்கூறுகள் வலிமையான நிலை மின்னியல் விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
iii) மூலக்கூறு படிகங்கள் மென்மையானவை
iv) மூலக்கூறு படிகங்கள் மின்கடத்தும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை
அ) (i) & (ii)
ஆ) (i), (ii) & (iii)
இ) (ii) & (iv)
ஈ) (ii) மட்டும்
88.
i) பொட்டாசியம் பெர்மாங்கனேட் குரோமேட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
ii) பொட்டாசியம் டைகுரோமேட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
iii) பொட்டாசியம் பெர்மாங்கனேட் தோல் பதனிடுதல் பயன்படுகிறது
அ) (iii)
ஆ) (iii)
இ) (i), (ii) & (iii)
ஈ) (i), (iii)
89.
i) தொகுதி 2 உலோகங்களுடன் நைட்ரஜன் வினைபுரிந்து அயனி நைட்ரைடுகளை உருவாக்குகிறது
ii) அம்மோனியா நீரில் சிறிதளவே கரைகிறது
iii) உயிரியல் பதப்படுத்தியாக திரவ நைட்ரஜன் பயன்படுகிறது
iv) உலோக ஆக்சைடுகளை, உலோகங்களாக மாற்றும் வினையில் அம்மோனியா ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது
அ) (i) & (ii)
ஆ) (ii) & (iii)
இ) (i) & (iii)
ஈ) (ii) & (iv)
90.
i) தனித்த [SiO4]4- நான்முகி அலகுகளைக் கொண்ட எளிய வகை சிலிகேட்டுகள் நீசா சிலிகேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.
ii) பெரைல் ஆனது ஆம்ஃபிபோலின் எடுத்துக்காட்டு
iii) ஸ்பொடுமின் ஆனது பைலோ சிலிகேட்டின் எடுத்துக்காட்டு.
iv) [Si2O7]6- அயனிகளைக் கொண்டுள்ள சிலிகேட்டுகள் சோரோசிலிக்கேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன
அ) (i) & (ii)
ஆ) (i) & (iv)
இ) (ii) & (iii)
ஈ) (i) & (iv)
91.
i) வினையின் வேகமானது ஒரு வினாடியில் மூலக்கூறுகளுக்கு இடையே நடைபெறும் மோதல்களின் எண்ணிக்கைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.
ii) வாயுக்களில் மோதல் வீதத்தினை வாயுக்களின் இயக்கவியற் கொள்கையின் அடிப்படையில் கணக்கிட இயலும்.
iii) மூலக்கூறுகளுக்கு இடையே மோதல்களின் எண்ணிக்கை வினைபடு பொருட்களின் செறிவு எதிர் விகிதத்தில் இருக்கும்.
அ) (i) & (ii)
ஆ) (i) & (iii)
இ) (ii) & (iii)
ஈ) (i), (ii) & (iii)
92.
i. தூய்மையற்ற உலோகத்தை உருக்கி பின் திண்மமாக்கும் போது மாசுக்கள் திண்மப்பகுதியிலேயே தங்கி விடுகின்றன.
ii. உலோகம் ஆக்சிஜன் ஒடுக்கமடைவதைத் தடுக்க புலத்தூய்மையாக்கல் மந்த வாயுச் சூழலில் நிகழ்த்தப்படுகிறது.
iii. ஜெர்மானியம், சிலிக்கன் மற்றும் காலியம் போன்ற தனிமங்கள் புலத்தூய்மையாக்கல் மூலம் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
அ) i & ii
ஆ) i & iii
இ) ii & iii
ஈ) i, ii, & iii
93.
ஸ்கேண்டியம், டைட்டானியம், வனேடியம், காட்மியம்
94.
படிகத்தின் தன்மையைப் பொறுத்து வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக
அ) நாஃப்தலீன்
ஆ) சிலிக்கன் கார்பைடு
இ) திட CO2
ஈ) யூரியா
95.
ஆக்சிஜனேற்ற எண்ணைப் பொறுத்து வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடு.
அ) HPO3
ஆ) H3PO3
இ) H3PO4
ஈ) H4P2O7
96.
பிரித்தெடுக்கப்படும் தனிமத்தைப் பொறுத்து வேறுபட்ட ஒன்று எது?
அ) போராக்ஸ்
ஆ) கெர்னைட்
இ) கோல்மனைட்
ஈ) பாக்சைட்
97.
ஈனியின் தன்மையை பொறுத்து வேறுபட்ட ஒன்றைக் கண்டறிக.
அ) அக்வா
ஆ) கார்பனைல்
இ) நைட்ரோசைல்
ஈ) நைட்ரேட்டோ
98.
அ) TiCl4 - பலபடியாக்கல் வினைவேக மாற்றி
ஆ) Ni - ஹைட்ரஜனேற்ற வினைவேக மாற்றி
இ) Fe - ஹேபர் முறை வினைவேக மாற்றி
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியான இணைகள்
1.

2.
(d)
3.
(b)
இது கிரிக்னார்டு வினைக்காரணியுடன் வினைபுரிவதில்லை
4.
(b)
5.
(a)
0.80
6.
(b)
பென்சைல் ஆல்கஹால்
7.
(a)
பியூட் – 3-ஈனாயிக் அமிலம்
8.
(d)
(n - 1) d மற்றும் ns எலக்ட்ரான்களின் ஒத்த ஆற்றல்கள்
9.
(c)
ஜியோலைட்டுகள்
10.
(b)
அதிகரிக்கிறது
11.
(a)
DMG
12.
(c)
நுரை உருவாக்கும் காரணி
13.
முதல் வகை வினைவேக மாறிலியின் அலகு S-1 மேலும் வினையானது முதல் வகை வினையாகும்.
14.
(a)
F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்
15.
\(\left[\mathrm{Fe}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_5^{+} \mathrm{NO}\right]^{2+} \mathrm{SO}_4{ }^{2-}\)
முறையே +1 மற்றும் +1
16.
(a)
BrO3- MnO2
17.
(d)
NeF2
18.
இரண்டு 3c-2e பிணைப்புகள் காணப்படுகின்றன. அதாவது இப்பிணைப்பு நான்கு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
19.
(b)
Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al
20.
இவ்வினையில் பல்லேடியம் வினைவேக மாற்றிக்கு நச்சாக பேரியம் சல்பேட் செயல்படுகிறது. எனவே உருவாகும் ஆல்டிஹைடுடானது மேலும் ஒடுக்கமடைந்து ஆல்கஹாலாக மாற்றப்படுவது தடுக்கப்படுகிறது. ஃபார்மால்டிஹைடையும் கீட்டோன்களை இம்முறையினைப் பயன்படுத்தி தயாரிக்க இயலாது.
21.
ஆஸ்பிரின்
22.
Al3+ உள்ள படிகாரங்களை [K2SO4.Al2SO3.24H2O] சேர்ப்பதால், நீரில் தங்கியிருக்கும் மாசுக்கள் வீழ்படிவதால், நீர் சுத்திகரிக்கப்படுதல் செயலாக்கம் பெறுகிறது. படிகாரம் எதிர் மின்சுமையை பெற்றிருப்பதால் நீரில் எளிதில் விரவுகிறது.
துகளின் உருவளவு பெரிதாவதாலும் விலக்குதலுக்கு காரணமான மின்னூட்டங்கள் இல்லாததாலும் படிகாரத் துகள்கள் அடியில் தங்குகின்றன அல்லது நீரில் மேலெழுந்து மிதக்கின்றன. துகள்கள் நடுநிலையாக்கப்பட்டபின் அவை ஒருங்கிணைகின்றன, இதற்கு காரணமான வாண்டர்வால்ஸ் விசைகளின் அங்கமான லண்டன்பிரிகை விசைகளாகும். குவாண்டத்தால் மூலக்கூறுகளில் தூண்டப்படும் உடனடி முனைவுறுதல் காரணமாக, வலிமை குறை மூலக்கூறுவிசைகள் தோன்றுகின்றன, இவை முனைவற்ற மூலக்கூறுகளையும் ஒன்றை ஒன்று ஈர்க்கச் செய்கின்றன. இதற்கு வினை இடைச்செயல் புரியும் மூலக்கூறுகளிடையே உள்ள எலக்ட்ரான்களின் இயக்கம் காரணமாகும். இறுதியில் துகள்கள் படிகின்றன.
23.
வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோரால் வரையறுக்கப்பட்ட DNA அமைப்பானது, மூலக்கூறின் முப்பரிமாண அமைப்பு மாதிரியை முன்மொழிந்தனர்.
ஒற்றைப் பிணைப்புகள் கொண்ட DNA மூலக்கூறுகள் பாஸ்போடைஎஸ்டர் பிணைப்புகளைக் கொண்டு இணைந்துள்ளன. இந்த நியூக்ளிக் அமிலங்களில் (5' மற்றும் 3' கார்பன்) என்ற இரண்டு வகையான பென்டோஸ் சர்க்கரைகள் காணப்படுகின்றன.
24.
i. 2 – நைட்ரோ புரப்பேனை HCl உடன் கொதிக்க வைக்கும் போது
ii. நைட்ரோ பென்சீன் வலிமையான அமில ஊடகத்தில் மின்னாற் ஒடுக்குதல்
இது அனிலீன், பினைல் ஹைட்ராக்ஸைலமீன் மற்றும் p - அமினோ பீனால் ஆகியவற்றை தருகிறது.
iii. மூவிணைய பியூட்டைலமீனை KMnO4 உடன் ஆக்சிஜனேற்றம் செய்தல்
2- மெத்தில் -2-நைட்ரோ புரப்பேன் கிடைக்கிறது.
iv. அசிட்டோன் ஆக்சைமை ட்ரைபுளூரோ பெராக்சி அசிட்டிக் அமிலம் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்தல்
2-நைட்ரோ புரப்பேன் கிடைக்கிறது.
25.
pH = - log10[H3O +]
ஒரு கரைசலின் pH என்பது அக்கரைசலில் உள்ள ஹைட்ரோனியம் அயனிகளின் மோலார் செறிவின், 10ஐ அடிப்படையாக கொண்ட எதிர்குறி மடக்கை மதிப்புகள் என வரையறுக்கப்படுகிறது.
26.
Kw = [H3O+][OH-1] = 1 \(\times\) 10-14 (25°C)
தூய நீரின் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராஸில் அயனிகளின் செறிவுகளின் பெருக்கற்பலன் நீரின் அயனிப்பெருக்கம் எனப்படும். 25°Cல் அதன் மதிப்பு 1 \(\times\) 10-14 mol2 L-2 ஆகும்.
27.
C5H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய சேர்மம் (A) அயோடோஃபார்ம் சோதனைக்கு உட்படுகிறது. இது
ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை. எனவே இது 2 பென்டனோன் ஆகும்.
28.
(i) இடைநிலைத் தனிமங்கள் அனைத்தும் ஏறத்தாழ ஒரே அணு அமைப்பை பெற்றுள்ளன
(ii) இவை ஒரே மாதிரியான படிக அமைப்பை பெற்றிருப்பதால் ஒன்றின் இடத்தை மற்றொன்று எடுத்துக் கொள்ள முடியும்
29.
2XeF6 + SiO2 \(\underrightarrow { { 50 }^{ o }C } \) 2XeOF4 + SiF4
2XeOF4 + SiO2 ⟶ 2XeO2F2 + SiF4
2XeO2F2 + SiO2 ⟶ 2XeO3 + SiF4 (அல்லது) XeF6 + 3H2O ⟶ XeO3 + 6HF
30.
(i) மந்த இணை விளைவின் காரணமாக 13 ஆம் தொகுதியில் மேலிருந்து கீழாக நகரும் போது ns2 எலக்ட்ரான்கள் மந்தத் தன்மை அடைந்து, np1 எலக்ட்ரான் மட்டும் வினைகளில் ஈடுபடுகிறது.
(ii) எனவே Tl3+ அயனி நிலைப்புத் தன்மையற்றது. Tl+1 அயனி நிலைப்புத்தன்மை உடையது.
(iii) எனவே AlCl3 நிலைப்புத் தன்மையுடையது. ஆனால் TlCl3 நிலைப்புத் தன்மையற்றது. அது சிதைவடைந்து TlCl ஆக மாறுகிறது.
31.
மைய உலோக அயனியின் அணைவு எண் அதன் இரண்டாம் நிலை இணைதிறன் எனப்படும்.
32.
வினை வேகம்
வினை வேகம் = \(\frac { -([{ A }_{ 2 }]-[{ A }_{ 1 }]) }{ { t }_{ 2 }-{ t }_{ 1 } } =-\left( \frac { \Delta A }{ \Delta t } \right) \)
வினை நிகழும் போது, வினைபடு பொருட்களின் செறிவு குறையும். அதாவது [A2] < [A1]. எனவே செறிவில் ஏற்படும் மாற்றம் [A2] < [A1] ஆனது எதிர்குறி மதிப்பினைப் பெறும்.
வினை வேகமானது நேர்குறி மதிப்பினை உடையது என மரபு வழி கருதப்படுவதால், வினை வேகத்தைக் குறிப்பிடும் சமன்பாட்டில் எதிர்குறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
33.
1. சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்கள், உலோக ஆக்சைடுகளை உலோகமாக ஒடுக்க பயன்படுகின்றன.
Rb2O3 + 3Mg ⟶ 2Rb + 3MgO
TiO2 + 2Mg ⟶ Ti + 2MgO
ThO2 + 2Ca \(\underrightarrow { 1250K }\) Th + 2CaO
2. இம்முறைக்கு அலுமினோ வெப்ப ஒடுக்க முறையும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
34.
ஒரு வினையின் பல படிகளினுள், குறைந்த வேக மதிப்பை கொண்ட படி வினையின் வேகத்தை தீர்மானிக்கும் படி அல்லது வேகத்தை குறைக்கும் படி எனப்படும். (அல்லது) ஒரு வினையின் ஒட்டுமொத்த வினைவேகத்தை கட்டுப்படுத்தும் மெதுவான படி வினையின் வேகத்தை தீர்மானிக்கும் படி எனப்படும்.

வினையின் வேகத்தை தீர்மானிக்கும் படியாகும்.
படி 1 :
\(\mathrm{H}_2 \mathrm{O}_{2(\mathrm{aq})}+\mathrm{I}_{(\mathrm{qq})}^{-1} \longrightarrow \mathrm{H}_2 \mathrm{O}_{(t)}+\mathrm{OI}_{(x q)}^{-1}\)
படி 2 :
\(\mathrm{H}_2 \mathrm{O}_{2(\mathrm{aq})}+\mathrm{OI}^{-1}(\mathrm{aq}) \longrightarrow \mathrm{H}_2 \mathrm{O}+\mathrm{I}_{(\mathrm{aq})}^{-}+\mathrm{O}_{(\mathrm{g})}\)
\(2 \mathrm{H}_2 \mathrm{O}_{2(x q)} \longrightarrow 2 \mathrm{H}_2 \mathrm{O}_{(t)}+\mathrm{O}_{2(g)}\)
மேற்கண்டுள்ள இரு வினைகளும் அடிப்படை வினைகளாகும். படிநிலை (1) மற்றும் படிநிலை (2) ல் உள்ள வினைகளுக்கான சமன்பாட்டினை ஒன்று சேர்ப்பதன் மூலம் ஒட்டு மொத்த வினைக்கான சமன்பாட்டினைப் பெறலாம். படிநிலை 1 ல் H₂O₂ மற்றும் I ஆகிய இரண்டு வினைபடு பொருட்களும் இடம் பெறுவதால் அப்படிநிலையே வினைவேகத்தினை தீர்மானிக்கும் படிநிலையாகும். மேலும் ஒட்டு மொத்த வினை, ஒரு இருமூலக்கூறு வினையாகும்.
35.
இவை இரண்டும் அயனியாதல் மாற்றுகளாகும்.
(i) Co(NH3)5Cl]SO4 ஆனது BaCl2 கரைசலுடன் வெண்ணிற வீழ்படிவை தருகிறது. ஆனால் AgNO3 உடன் இல்லை.
(ii) [Co (NH3)5 SO4] Cl ஆனது AgNO3 கரைசலுடன் தயிர் போன்ற வெண்ணிற வீழ்படிவை தருகிறது, ஆனால் BaCl2 உடன் அல்ல.
36.
37.
PCl5 (g) \(\underrightarrow { \Delta } \) PCl3 (g) + Cl(2)(g)
PCl5 சிதைவடைந்து PCl3 மற்றும் Cl2 ஐ கொடுக்கிறது.
38.
சூடான மின்னிழைகளில் ஆக்சிஜனேற்றம் ஏற்படுவதை ஆர்கான் தடுக்கிறது. இதனால் பல்புகளில் காணப்படும் மின்னிழைகளில் ஆயுள் நீடிக்கப்படுகிறது.
39.
(i) போரான் ட்ரை புளுரைடு வாயுவை 450 K வெப்பநிலையில் சோடியம் ஹைட்ரஜனுடன் வினைப்படுத்தும் போது டைபோரேன் உருவாகிறது.
(ii) வெப்பச் சிதைவைத் தடுக்க டைபோரேன் உடனடியாக நீக்கப்படுகிறது.
2BF3 + 6NaH \(\underrightarrow { 450K } \) B2H6 + 6 NaF
40.
1. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க சிறந்த ஒடுக்கும் காரணி கரி (கார்பன்) ஆகும்.
2. ஒடுக்க வெப்பநிலையில் ஜிங்க், கார்பனுடன் சேர்ந்து உலோக கார்பைடினை உருவாக்காது. எனவே கார்பன் ஒடுக்கும் காரணியாக பயன்படுகிறது.
ZnO(S) + C ➝ Zn(S) + CO(g) ↑
3. எலிங்கம் வரைபடத்தில், ஜிங்க் ஆக்சைடு உருவாதலுக்கான வரைகோடு கார்பனுக்கு மேல் இடம் பெற்றுள்ளது. எனவே CO ஆனது ZnO ஐ விட அதிக நிலைப்புத் தன்மை உடையது. எனவே ZnO வை ஒடுக்கமடையச் செய்வதற்கு கார்பனை ஒடுக்கும் காரணியாக பயன்படுத்த இயலும். ஒடுக்க வினையின்போது ZnO விலிருந்து ஆக்ஸிஜன் ஒடுக்கும் காரணி கார்பனுடன் இணைந்து CO வை உருவாக்குகிறது.
41.
எரிபொருள் மின்கலத்தில் ஹைட்ரஜன், எரிபொருளாகவும், ஆக்ஸிஜன், ஆக்ஸிஜனேற்றியாகவும், 200°C வெப்பநிலை மற்றும் 20-40 atm அழுத்தத்தில் பராமரிக்கப்படும் நீர்த்த KOH கரைசல் மின்பகுளியாகவும் செயல்படுகின்றன. Ni மற்றும் NiO ஆகியவற்றைக் கொண்டுள்ள நுண்துளைகளையுடைய கிராஃபைட் மின்முனையானது வினையுறா மின்முனையாக செயல்படுகிறது.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்கள் முறையே நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளில் குமிழிகளாக செலுத்தப்படுகின்றன. நேர்மின்முனையில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது.
\(2 \mathrm{H}_2(\mathrm{~g})+4 \mathrm{OH}^{-}(\mathrm{aq}) \rightarrow 4 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+4 e^{-}\)
எதிர்மின்முனையில் ஒடுக்கம் நிகழ்கிறது
\(\mathrm{O}_2(g)+2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})+4 e^{-} \rightarrow 4 \mathrm{OH}^{-}(a q)\)
ஒட்டுமொத்த வினை
\(2 \mathrm{H}_2(g)+\mathrm{O}_2(g) \rightarrow 2 \mathrm{H}_2 \mathrm{O}(\mathrm{l})\)
மேற்கண்ட வினையானது ஹைட்ரஜனின் எரிதல் வினையை ஒத்துள்ளது. எனினும், அவை நேரடியாக வினைபுரிவதில்லை. அதாவது ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் வினைகள் முறையே நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளில் தனித்தனியாக நிகழ்கின்றன. H2 - O2 எரிபொருள் மின்கலத்தைப் போலவே புரப்பேன் -O2 மற்றும் மீத்தேன் -O2, போன்ற எரிபொருள் கலன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
42.
43.
| வ.எண் | வேதிப்புறப்பரப்பு கவர்தல் அல்லது கிளர்வுறுத்தப்பட்ட பரப்பு கவர்தல் | இயற்புறப்பரப்பு கவர்தல் அல்லது வாண்டர்வால்ஸ் பரப்பு கவர்தல் |
| 1. | இது மிக மெதுவாக நிகழ்கிறது. | இது கணப்பொழுதில் நிகழ்கிறது. |
| 2. | இது அதிக தேர்ந்த செயல்முறையாகும். பரப்புப் பொருள் மற்றும் பரப்புகவர் பொருள் ஆகியவற்றின் தன்மையை பொருத்தமைகிறது. | இது தேர்ந்த செயல்முறை அல்ல |
| 3. | அழுத்தம் அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேகமாக நிகழ்கிறது. ஆனால், இது பரப்பு கவர்தலின் அளவை மாற்றுவதில்லை. | இயற்புறப்பரப்புக் கவர்ச்சியில் அழுத்தம் அதிகரிக்கும்போது, பரப்பு கவர்தலின் அளவும் அதிகரிக்கிறது. |
| 4. | வெப்பநிலையை அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தல் முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது. | வெப்பநிலை அதிகரிக்கும்போது இயற்பரப்புக் கவர்ச்சி குறைகிறது. |
| 5. | வேதிப்புறப்பரப்பு கவர்தலில் பரப்பு பொருளுக்கும் பரப்புகவர் பொருளுக்கும் இடையே எலக்ட்ரான் இடமாற்றம் நிகழ்கிறது. | எலக்ட்ரான்கள் இடமாற்றம் நிகழ்வதில்லை. |
| 6. | பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம். அதாவது 40 முதல் 400 kJ / மோல் வரை. | பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு. 40 kJ/மோல் என்ற அளவிலேயே உள்ளது. |
| 7. | பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் ஒற்றை அடுக்கு உருவாகிறது. | பரப்பின் மீது பரப்புகவர் பொருளின் பல அடுக்குகள் உருவாகின்றன. |
| 8. | கிளர்வு மையங்கள் என்றழைக்கப்படும் சில குறிப்பிட்ட அமைவிடங்களில் மட்டும் பரப்பு கவர்தல் நிகழ்கிறது. இது புறப்பரப்பின் பரப்பளவைப் பொருத்து அமைகிறது. | இது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது. |
| 9. | வேதிப்புறப்பரப்பு கவர்தலில், குறிப்பிடத்தகுந்த கிளர்வுகொள் ஆற்றல் கொண்ட கிளர்வு அணைவு உருவாதல் நிகழ்கிறது. |
கிளர்வுகொள் ஆற்றல் முக்கியமற்றது.
|
44.
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி.
P₂O5 போன்ற வலிமை மிகுந்த நீர்நீக்கும் காரணிகளுடன் சேர்த்து வெப்பப்படுத்தும் கார்பாக்சிலிக் அமிலங்கள் அவற்றின் அமில நீரிலிகளை உருவாக்குகின்றன.
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
குறைந்த கார்பன் எண்ணிக்கை கொண்ட ஆல்கஹாலை எஸ்டரிலிருந்து P₂O5 உயர் ஆல்கஹால் எஸ்டர்களை தயாரிக்க இந்த வினை பயன்படுகின்றன.
iii. மெத்தில் சயனைடிலிருந்து அசிட்டமைடு
ஆல்கைல் சயனைடுகளை குளிர்ந்த கார்பன் அடர் HCl கொண்டு பகுதியளவு நீராற்பகுக்கும் போது அமைடுகள் உருவாக்குகின்றன.
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
டொலுயீன் அமிலம் கலந்த KMnO4 முன்னிலையில் ஆக்ஸிஜனேற்றமடைகிறது.
பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
பென்சால்டிஹைடானது N, N டைமெத்தில் அனிலீன் போன்ற அரோமேடிக் அமீன்களுடன் குறுக்க வினைக்கு உட்பட்டு ட்ரைபீனைல் மீத்தேன் சாயத்தை உருவாக்குகின்றன.
45.
விளிம்பு நீளம் 'a' கொண்ட கனசதுரத்தினைக் கருதுக.
கனசதுரத்தின் கன அளவு = a x a x a = a3.
கோளத்தின் ஆரம் 'r' என்க
படத்திலிருந்து a = 2r; r = \(\frac {a }{2}\)
ஆரம் r கொண்ட கோளத்தின் (அணு) கனஅளவு = \(\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
\(=\frac { 4 }{ 3 } { \left( \frac { a }{ 2 } \right) }^{ 3 }\)
\(=\left( \frac { 4 }{ 3 } \right) \pi { \left( \frac { a }{ 2 } \right) }^{ 3 }\)
\(=\frac { 4 }{ 3 } \pi \frac { { a }^{ 3 } }{ 8 } \)
\(=\frac { { \pi a }^{ 3 } }{ 6 } \)
ஒரு எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை = 1
ஃ எளிய கனசதுர அலகுக்கூட்டில் உள்ள அணுக்களின் மொத்த கனஅளவு \(=1\times \frac { { \pi a }^{ 3 } }{ 6 } \)
பொதிவு பின்னம்
\(=\frac { \frac { { \pi a }^{ 3 } }{ 6 } }{ { a }^{ 3 } } \times 100\)
\(=\frac { 100\pi }{ 6 } =52.31%\)%
அதாவது எளிய கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில் கிடைக்கும் கன அளவில் 52.31% மட்டும் கோலங்களால் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடம் காலியாக உள்ளது. இந்த அமைப்பில் வெற்றிடம் அதிகமாக உள்ளதால் அணுக்களுக்கு இடையே வலுவான கவர்ச்சி ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
46.
(i) ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், அணைவில் இடம் பெற்றுள்ள அணுக்களுக்கிடையேயான பிணைப்புகளில் மாறுபடுவதால் வெவ்வேறு அமைப்பு வாய்ப்பாடுகளையும் பெற்றுள்ள அணைவுச் சேர்மங்கள் கட்டமைப்பு மாற்றியங்கள் எனப்படுகின்றன.
(ii) அவை நான்காக வகைப்படுத்தப்படுகின்றன.
1. இணைப்பு மாற்றியங்கள்:
(i) இரு வழி பிணைப்புறும் ஈனி தன்னிடம் உள்ள வெவ்வேறு வழங்கி அணுக்கள் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைப்பை ஏற்படுத்தும் போது இணைப்பு மாற்றியங்கள் ஏற்படுகின்றன.
(எ.கா). [Co (NH3)5 NO2]2+ - நைட்ரிட்டோ ஈனி N - பிணைப்பு.
[CO (NH3)5 ONO]2+ - நைட்ரிட்டோ ஈனி - O - பிணைப்பு
2. அணைவு மாற்றியங்கள்:
(i) அணைவுச் சேர்மங்களில் உள்ள நேர் மற்றும் எதிர் அயனிகள் இரண்டும் அணைவு அயனிகளாக காணப்பட்டால் அணைவு மாற்றியங்கள் ஏற்படுகிறது.
(ii) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகள் நேர் மற்றும் எதிர் அணைவு உட்பொருள்களுக்கிடையே பரிமாற்றம் அடைவதால் வெவ்வேறு அணைவு மாற்றியங்கள் உருவாகின்றன.
(எ.கா) [Co (NH3)6] [Cr (CN)6] & [Cr(NH3)6] [Co (CN)6]
3. அயனியாதல் மாற்றியங்கள்:
(i) அயனியுறும் எதிர்மாறு அயனி ஈனிகளாக செயல்பட்டால் அத்தகைய அணைவுகளில் அயனியாதல் மாற்றியங்கள் ஏற்படுகிறது.
(ii) இத்தகைய எதிர்மாறு அயனிகள், அணைவு உட்பொருளில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஈனிகளுடன் பரிமாற்றம் அடையும் போது அயனியாதல் மாற்றியங்கள் உருவாகின்றன.
(எ.கா) [Co (NH3)4 Br2] Cl & [Co (NH3)4 Cl Br] Br
4. கரைப்பானேற்ற மாற்றியங்கள்:
(i) படிக அணுக்கோவைத் தளத்தில் தனித்த நிலையில் காணப்படும் நீர், ஆல்கஹால், அம்மோனியா போன்ற கரைப்பான் மூலக்கூறுகள், அணைவு உட்பொருளில் உள்ள ஈனிகளுடன் பரிமாற்றம் அடைவதால் கரைப்பானேற்ற மாற்றியங்கள் உருவாகின்றன.
(ii) கரைப்பானானது நீர் மூலக்கூறுகளாக இருந்தால், இவை நீரேற்ற மாற்றியங்கள் எனப்படும்.
(எ.கா) [Cr (H2O)6] Cl3 ; [Cr (H2O)5 Cl] Cl2 H2O ; [Cr (H2O)4Cl2] Cl 2H2O
47.
1. முக்கிய தாது: காப்பர் பைரைட்
2. அடர்ப்பித்தல்: நுரை மிதப்பு முறை
3. அடர்ப்பிக்கப்பட்ட தாது எதிர் அனல் உலையில் அமிலத்தன்மையுடைய இளக்கியான சிலிக்காவுடன் வெப்பப்படுத்தப்படுகிறது.
4. உருவாகும் காரத்தன்மையுடைய பெரஸ் ஆக்சைடு, சிலிக்காவுடன் இணைந்து பெரஸ் சிலிக்கேட் எனும் கனிமக் கசடினைத் தருகிறது.
5. எஞ்சியுள்ள உலோக சல்பைடுகள் Cu2S மற்றும் FeS ஒன்றுடன் ஒன்று கரைந்து காப்பர் மட்டி உருவாகிறது.
2CuFeS2(s) + O2(g) ➝ 2FeS(l) + Cu2S(l) + 2SO2(g)
2FeS(l) + 3O2(g) ➝ 2FeO(l) + 2SO2(g)
FeO(s) + SiO2(s) ➝ FeSiO3(s)
கனிமக்கழிவு இளக்கி கனிமக் கசடு
6. கனிமக் கழிவுகளிலிருந்து காப்பர் மட்டி பிரிக்கப்பட்டு மாற்று உலையில் இடப்படுகிறது.
7. மட்டியில் உள்ள FeS முதலில் FeO ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது.
8. FeO சிலிக்காவுடன் கனிமக் கசடாக நீக்கப்படுகிறது.
9. எஞ்சியுள்ள காப்பர் சல்பைடு மேலும் ஆக்சிஜனேற்றத்திற்கு உட்பட்டு காப்பர் ஆக்சைடாக மாற்றப்படுகிறது.
10. காப்பர் ஆக்சைடு, மற்றும் காப்பர் சல்பைடு வினைபுரிந்து காப்பரைத் தருகின்றன.
2Cu2S(l,s) + 3O2(g) ➝ 2Cu2S(l,s) + 2SO2(g)
2Cu2O(l) + Cu2S(l) ➝ 6Cu(l) + SO2(g)
11. உருகிய காப்பர் திண்மமாக்கும்போது SO2 வாயு வெளியேறுவதால் அதன் தோற்ற அமைப்பில் கொப்புளங்கள் போல் காணப்படுகிறது. இந்தக் காப்பர் கொப்புளக்காப்பர் எனப்படுகிறது.
மின்னாற் தூய்மையாக்கல்:
எதிர்மின்வாய்: தூய காப்பர் தகடு
நேர்மின்வாய்: தூய்மையற்ற காப்பர் தண்டு
மின்பகுளி: CuSO4 கரைசல் + நீர்த்த H2SO4
மின்சாரத்தை செலுத்தும்போது தூய காப்பர் எதிர்மின்வாயில் படிகிறது.
48.
logK = logA-\(\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
y = c+mx
\(m=-\frac { { E }_{ a } }{ 2.303R } \)
Ea = - 2.303 R m
Ea = - 2.303 x 8.314JK-1 mol-1x (-4000K)
Ea = 76,589J mol-1
Ea = 76.589 KJ mol-1
49.
| நான்முகி வெற்றிடம் | எண்முகி வெற்றிடம் | |
| 1 | அறுங்கோணங்களின் மையங்களையும் இணைத்து எண்முகி அமைப்பு உருவாகும் போது அவற்றிற்கு இடையே தோன்றும் வெற்றிடம். | நான்கு கோளங்களின் மையங்களையும் இணைத்து நான்முகி அமைப்பு உருவாகும்போது அவற்றிற்கு இடையே தோன்றும் வெற்றிடம். |
| 2 | முதல் அடுக்கில் உள்ள வெற்றிடத்தில் மீது கோளங்கள் அமையும் போது வெற்றிடம் உருவாகும். | முதல் அடுக்கில் உள்ள வெற்றிடம் இரண்டாவது அடுக்கில் உள்ள கோளங்களால் பகுதியளவு மறைக்கும் போது வெற்றிடம் உருவாகும். |
| 3 | அணைவு எண்: 4 | அணைவு எண்: 6 |
| 4 | நான்முகி வெற்றிடங்களின் எண்ணிக்கை (n) | எண்முகி வெற்றிடங்களின் எண்ணிக்கை (2n) |
50.
1. சோடியம் 2, 21, 211, 2111 (ஈத்தேன் 1, 2 டைஐல்டைநைட்ரிலோ) டெட்ரா அசிட்டேட்டோ நிக்கலேட் II
2. அயோடேட் டை சயனிடோ K-C- அர்ஜென்டேட் (I) அயனி
3. ட்ரிஸ் ஈத்தேன் (1, 2 - டைஅமீன்) கோபால்ட் (III) சல்பேட்
4. பென்டா அம்மைன்நைட்ரிட்டோ K-O- கோபால்ட் (III) அயனி
5. டைஅம்மைன்குளோரிடோநைட்ரோ -k-N பிளாட்டினம் (II)
51.
1. வெப்ப இயக்கவியல் தத்துவங்களைப் போலவே உலோகவியலில் மின்வேதித் தத்துவங்களும் பயன்படுகின்றன. சோடியம், பொட்டாசியம் போன்ற வினைதிறன் மிக்க உலோகங்களின் ஆக்சைடுகளை கார்பனைக் கொண்டு ஒடுக்குவது வெப்ப இயக்கவியல் படி சாத்தியமற்றதாகும்.
2. இத்தகைய தனிமங்கள் அவைகளின் தாதுக்களிலிருந்து மின்வேதி முறைகளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கப்படுகின்றன
3. அதிக வினைத்திறன் கொண்ட உலோகமானது, ஒப்பீட்டு அளவில் குறைவான வினைத்திறன் கொண்ட உலோக அயனிகளைக் கொண்டுள்ள கரைசலில் சேர்க்கப்படும் போது, அதிக வினைத்திறன் கொண்ட உலோகம் கரைசலுக்குள் செல்கிறது.
4. ∆Go = nFEo
5. இங்கு 'n' என்பது, ஒடுக்கம் செயல்முறையின் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை F என்பது பாரடே மற்றும் Eo = ஆக்சிஜனேற்ற ஒடுக்க இணையின் மின்முனை மின்னழுத்தம்
6. Eo நேர்க்குறி எனில் ∆G எதிர்க்குறி, எனவே ஒடுக்க வினை தன்னிச்சையாக நிகழும்.
7. எனவே ஒட்டு மொத்த வினையின் நிகர மின்னழுத்தம் நேரக்குறி மதிப்பை பெறுமாறு ஒடுக்க வினை திட்டமிடப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
Cu(s) + 2Ag+(S) ➝ Cu2+(aq) + 2Ag+(S)
eg: Cu2+(aq) + Zn(S) ➝ Cu(S) + Zn2+(aq)
52.
அலுமினியத்தின் மின்வேதிபிரிப்புமுறை ஹால் ஹெரால்டு முறை எனப்படும்.
எதிர்மின்வாய்
இம்முறையில் கார்பன் மேல் பூச்சு பூசப்பட்ட ஒரு இரும்புத் தொட்டியில் மின்னாற் பகுத்தல் நிகழ்த்தப்படுகிறது. இது எதிர்மின் வாயிலாக செயல்படுகிறது.
நேர்மின்வாய்
மின்பகுளியில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ள கார்பன் தண்டுகள் நேர்மின்வாயாகச் செயல்படுகின்றன.
மின்பகுளி
1. பாக்சைட்டிலிருந்து பெறப்பட்ட 20% அலுமினாக் கரைசல் உருகிய நிலையில் உள்ள கிரையோலைட்டுடன் கலக்கப்பட்டு மின்பகு கலனில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
2. 10% கால்சியம் குளோரைடு கரைசல் மின்பகுகரைசலுடன் சேர்க்கப்படுகிறது. இங்கு கால்சியம் குளோரைடானது கலவையின் உருகுநிலையை குறைக்கப் பயன்படுகிறது.
வெப்பநிலை
1. உருகிய கலவையான 1270 K வெப்பநிலைக்கு மேல் இருக்குமாறு பராமரிக்கப்படுகிறது.
2. இச்செயல்முறையில் நிகழும் வேதிவினைகள் பின்வருமாறு
3. அலுமினாவின் அயனியாக்கம்
Al2O3 ➝ 2Al3+ + 3O2-
4. எதிர்மின்வாயில் நிகழும் வினை
2Al3+ (உருகிய நிலை) + 6e- ➝ 2Al(1)
5. நேர்மின்வாயில் நிகழும் வினை
6O2- (உருகிய நிலை) ➝ 3O2 + 12e-
5. கார்பன் நேர்மின்வாயாக செயல்படுவதால் அதில் பின்வரும் வினைகளும் நிகழ்கிறது.
C(S) + O2- (melt) ➝ CO + 2e-
C(S) + 2O2- (melt) ➝ CO2 + 4e-
6. மேற்கண்ட இரு வினைகளின் காரணமாக மின்னாற் பகுத்தலின்போது நேர்மின்வாய் மெதுவாக கரைகிறது.
7. எதிர்மின்வாய் தூய அலுமினியம் வீழ்படிவாகி மின்பகு கலனின் அடிப்பகுதியில் தங்குகிறது.
8. மின்னாற்பகுத்தலின் நிகர வினை:
4Al3+ (உருகிய நிலை) + 6O2- (உருகிய நிலை) + 3C(S) ➝ 4Al(1) + 3CO2(g)
53.

| சேர்மம் | பெயர் |
| A | 2-குளோரோ பியூட்டேன் |
| B | இரண்டாம் நிலை பியூட்டைல் மெக்னீசியம் குளோரைடு |
| X | 2-பியூட்டனோன் |
| Y | 3,4-டைமெத்தில்-3-ஹெக்சனால் |
54.
ஈதர்கள் ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டைப் பெற்றிருக்கும். ஆனால், ஆக்ஸிஜன் அணுவோடு பொருந்தி இருக்கும் ஆல்கைல் தொகுதி வேறுபட்டு இருக்கும். இதனையே மெட்டாமெரிஸம் என்கிறோம்.
2 - மீத்தாக்சி புரப்பேனின் மெட்டாமெர்கள்:
C2H5 - O - C2H5 - டை எத்தில் ஈதர்
CH3 - O - CH2 - CH3 மெத்தில்-n-புரோப்பைல் ஈதர்
55.
அ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வகை ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டுள்ள பலபடியானது, பல்லின பலபடி என்றழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, SBR இரப்பர் (Buna-S) எனும் பலபடியானது ஸ்டைரீன் மற்றும் பியூட்டாடையீன் ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது பல்லின பலபடிகள், ஒற்றைப்பலபடிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன.
ஆ) பியூனா-S இது ஒரு பல்லின பலபடியாகும். இது, சோடியம் முன்னிலையில் பியூட்டா 1,3 டையீன் மற்றும் ஸ்டைரீன் ஆகியவற்றை 3:1 என்ற விகிதத்தில் சேர்ப்பு பலபடியாக்கலுக்கு உட்படுத்துவதன் மூலம் பெறப்படுகிறது.
56.
கலவினைகள் :
ஆக்ஸிஜனேற்றம் (நேர்மின்முனை):
\(\begin{aligned}
Cd(s) \rightarrow C d^{2+}(a q)+2 e^{-} ; E^o{ }_{c d^{2+} / c d}=-0.40 \mathrm{~V}
\end{aligned}\)
\(\left(\mathrm{E}_{\mathrm{Ox}}^0\right)_{\mathrm{Cd|Cd}^{2+}}=+0.4 \mathrm{~V}
\)
ஒடுக்கம் (எதிர்மின்முனை):
\(\mathrm{Cu}^{2+}(a q)+2 e^{-} \rightarrow C u(s) ;\left(\mathrm{E}_{\text {red }}^0\right)_{\mathrm{Cu}^{2+} \mid \mathrm{Cu}}=+0.34 \mathrm{~V}
\)
இவற்றை கூட்ட, \(C d(s)+C u^{2+}(a q) \rightarrow C d^{2+}(a q)+C u(s);\)
\(\begin{aligned}
\mathrm{E}_{\text {Cell }}^0=\left(\mathrm{E}_{\mathrm{ox}}^0\right)+\left(\mathrm{E}_{\text {red }}^0\right) \\
\end{aligned}\)
= 0.4 + 0.34
= + 0.74 V
Emf ஆனது +ve ஆதலால்; \(\Delta\)G = -ve; எனவே மின்கல வினையானது நிகழும் (சாத்தியமானது)
57.
முதல் விதி:
மின்னாற்பகுத்தலின்போது மின்முனைகளில் விடுவிக்கப்படும் பொருளின் நிறையானது (m) மின்கலத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவிற்கு (Q) நேர் விகிதத்திலிருக்கும்.
m \(\alpha\) Q
m \(\alpha\) It
m = z It
Z = பொருளின் மின்வேதிச் சமானம்
I = மின்னோட்டம்
t = மின்னோட்டம் பாயும் காலம்
இரண்டாம் விதி :
ஒரே அளவு மின்னோட்டத்தை வெவ்வேறு மின்பகுளி வெவ்வேறு மின்பகுளிக் கரைசல்களின் வழியே செலுத்தும்போது, மின்முனைகளில் விடுவிக்கப்படும் பொருளின் அளவானது அவற்றின் மின்வேதிச் சமானங்களுக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
m \(\alpha\) Z
\(\frac{\mathrm{m}_1}{\mathrm{Z}_1}=\frac{\mathrm{m}_2}{\mathrm{Z}_2}\)
m = விடுவிக்கப்படும் உலோகத்தின் நிறை
Z = மின்வேதிச் சமானம்
58.
மூலக்கூறுநிறை 74 உடைய ஒரு கார்பாக்சிலிக் அமிலம், CH3CH₂COOH ஆகும். எனவே (D) புரப்பனாயிக் அமிலம்
D-ன் வாய்பாடு CnH2+nCOOH
மூலக்கூறுநிறை CnH2n+ 1 COOH எனில் மூலக்கூறுநிறை=74
12n + 2n + 1 + 12 + 32 + 1 = 74
14n + 46 = 74
14n = 74 - 46 = 28, n = 2
எனவே (C) n - புரப்பைலமீன் ஆகும்.
(B) யை திரவ NH3 உடன் வெப்பப்படுத்தி பிறகு Br₂/KOH உடன் வினைப்படுத்தி (C) பெறப்படுகிறது. இது ஹாஃப்மன் இறக்கவினை நடைபெறுவதை குறிப்பிடுகிறது.
எனவே வினையானது,
எனவே (B) பியூட்டனாயிக் அமிலம் ஆகும்.
கீழ்கண்டவாறு (A)ஐ KCN உடன் வினைப்படுத்தி, தொடர்ந்து நீராற்பகுத்து, வெப்பப்படுத்தி (B) பெறப்படுகிறது.
59.
a = 352.4 pm = 352.4 x 10-12m
= 352.4 x 10-12 x 102cm
= 352.4 x 10-10 cm
= 3.524 x 10-8 cm
ρ = 8.9gcm-8; NA = 6.023 x 1023
fccஅலகுக்கூட்டிற்கு n = 4; w = 100g
M = ?
\(\rho =\frac { nM }{ { a }^{ 3 }{ N }_{ A } } \therefore M=\frac { { \rho }a^{ 3 }{ N }_{ A } }{ n } \)
\(=\frac { 8.9{ (3.524\times { 10 }^{ -8 }) }^{ 3 }\times 6.023\times { 10 }^{ 23 } }{ 4 } \)
\(=\frac { 8.9{ (3.524) }^{ 3 }\times 6.023\times { 10 }^{ -24 }\times { 10 }^{ 23 } }{ 4 } \)
= 58.6476 x 10-2
மோலார் நிறை M = 58.65 g mol-1
மோல்களின் எண்ணிக்கை \(\\ \\ n=\frac { w }{ m } =\frac { 100 }{ 58.65 } =1.705\) மோல்கள்
n மோல்களில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை = n.NA
1.705 மோல்களில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை =1.705 x 6.023 x 1023
= 10.269 x 1023 = 1.027 x 1024 அணுக்கள்
60.
(i) டையா காந்தப்பொருள்கள், முதன்மை காந்த இரு முனைகள் எதனையும் பெற்றிருப்பதில்லை
(ii) ஒரு பொருளில் உள்ள அனைத்து எலக்ட்ரான்களும் இரட்டைகளாகக் காணப்பட்டால் அது டையா காந்தப்பண்பினை பெற்றுள்ளது
(iii) புற காந்தப் புலத்தால் இவை விலக்கப்படுகின்றன.
(iv) அப்பொருளின் ஒரு காந்தத் தூண்டல் உருவாகி, செயல்படுத்தப்படும் காந்த புலத்திற்கு எதிரான திசையில் ஒரு வலிமை குறைந்த காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.
61.
K = 2.3 x 10-4s-1; [A] = 0.01M; [A] = ?
t = 1 மணி = 60 x 60 = 3600 விநாடிகள்
\(K=\frac { 2.303 }{ t } log\frac { \left[ { A }_{ o } \right] }{ [A] } \)
\(2.3\times { 10 }^{ -4 }=\frac { 2.303 }{ 3600 } log\frac { 0.01 }{ [A] } \)
\(log\frac { 0.01 }{ [A] } =\frac { 2.3\times { 10 }^{ -4 }\times 3600 }{ 2.303 } \)
\(log\frac { 0.01 }{ [A] } =0.3595\)
\(\frac { 0.01 }{ [A] } =0.3595\)
\(\frac { 0.01 }{ [A] } =2.288\) ன் எதிர்மடக்கை
\([A]=\frac { 0.01 }{ 2.288 } \)
\(\\ [A]=0.00437M\)
62.
போரிக் அமிலம் :
1. பளபளப்பான மண் பாண்டங்கள், எனாமல் மற்றும் நிறமிகள் தயாரிக்க பயன்படுகிறது
2. புரை தடுப்பானாக பயன்படுகிறது
3. கண் மருந்தாக பயன்படுகிறது
4. உணவு பாதுகாப்பான பயன்படுகிறது
63.
(i) பல் இன ஈனி அணைவுகளில், மாறுபட்ட ஈனிகள் மைய உலோக அணுவைச் சுற்றி முப்பரிமாண புறவெளியில் வெவ்வேறு வகைகளில் அமைவதால் வடிவ மாற்றியம் ஏற்படுகிறது.
(ii) [MA2B2]n+ மற்றும் [MA2BC]n+ ஆகிய சதுரதள அணைவுச் சேர்மங்களில் ஒத்தத் தொகுதிகள் ஒரே பக்கத்தில் காணப்பட்டால் சிஸ் மாற்றியம் எனவும், எதிர் எதிர் பக்கங்களில் காணப்பட்டால் டிரான்ஸ் மாற்றியம் எனவும் அழைக்கப்படுகிறது.
(iii) X மற்றும் Y ஆகிய இருவேறு வழங்கி அணுக்களை உடைய XY என்ற இரு முனை ஈனி கொண்ட [M(xy)2]n+ என்ற தள சதுர அணைவுச் சேர்மமும், சிஸ், டிரான்ஸ் மாற்றியங்களைப் பெற்றுள்ளது.
(iv) A, B, C & D என்ற நான்கு வேறுவகை ஈனிகளைக் கொண்ட [MABCD]n+ என்ற தள சதுர அணைவுச் சேர்மமும், ஏதேனும் ஒரு ஈனியைக் குறிப்பாகக் கொண்டு, மற்ற மூன்று ஈனிகளை வெவ்வேறு முறைகளில் அமைப்பதன் மூலம், சிஸ், டிரான்ஸ் மாற்றியங்களை பெற்றுள்ளது.
64.
பொதிவுத் திறன்:
இவ்வமைப்பில் படத்தில் காட்டியுள்ளவாறு கோளங்கள் கனசதுரத்தின் முதன்மை மூலைவிட்டத்தின் வழியே தொட்டுக்கொண்டுள்ளன.
In ∆ ABC
AC2 = AB2 + BC2
\(AC=\sqrt { { AB }^{ 2 }+{ BC }^{ 2 } } \)
\(AC=\sqrt { { a }^{ 2 }+{ a }^{ 2 } } =\sqrt { { 2a }^{ 2 } } =\sqrt { 2 } a\)
In ∆ ACG
AG2 = AC2 + CG2
\(AG=\sqrt { { AC }^{ 2 }+{ CG }^{ 2 } } \)
\(AG=\sqrt { { \left( \sqrt { 2 } a \right) }^{ 2 }+{ a }^{ 2 } } \)
\(AG=\sqrt { { 2a }^{ 2 }+{ a }^{ 2 } } =\sqrt { { 3a }^{ 2 } } \)
\(AG=\sqrt { 3 } a\)
i.e; = \(\sqrt { 3 } a\) = 4r
r = \(\frac { \sqrt { 3 } }{ 4 } a\)
'r' ஆரமுடைய கோளத்தின் கனஅளவு
= \(\frac { 4 }{ 3 } \pi { r }^{ 3 }\)
= \(\frac { 4 }{ 3 } \pi { \left( \frac { \sqrt { 3 } }{ 4 } a \right) }^{ 3 }\)
= \(\frac { \sqrt { 3 } }{ 16 } \pi { a }^{ 3 }\) .............(1)
bcc வடிவமைப்பில் ஒரு அலகுக் கூட்டில் காணப்படும் கோளங்களின் எண்ணிக்கை இரண்டு என நாம் அறிவோம். எனவே அனைத்துக் கோளங்களின் கனஅளவு
= \(2\times \left( \frac { \sqrt { 3 } \pi { a }^{ 3 } }{ 16 } \right) =\frac { \sqrt { 3 } \pi { a }^{ 3 } }{ 8 } ........(3)\)
சமன்பாடு (3) ஐ (1) ஆல் வகுக்க
∴ பொதிவு பின்னம் = \(\frac { \left( \frac { \sqrt { 3 } \pi { a }^{ 3 } }{ 8 } \right) }{ { a }^{ 3 } } \times 100\)
= \(\frac { \sqrt { 3 } \pi }{ 8 } \times 100\)
= \(\sqrt { 3 } \pi \times 12.5\)
= 1.732 x 3.14 x 12.5
= 68 %
65.
66.
(i) ஜியோலைட்டுகள் என்பவை அலுமினியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை ஒழுங்கான முப்பரிமாண கட்டுமான அமைப்பில் கொண்டுள்ள முப்பரிமாண படிகத் திண்மங்களாகும்.
(ii) இவை நீரேறிய சோடியம் அலுமினோ சிலிகேட்டுகளாகும்.
(iii) பொதுவான வாய்ப்பாடு Na2O.(AI2O3).x(SiO2).y(H2O) (x = 2 முதல் 10; y = 2 முதல் 6 வரை)
(iv) ஜியோலைட்டுகள் நுண்துளை அமைப்பைக் கொண்டுள்ளன. இத்துளைகளில் ஒன்றை நேர்மின் சுமை கொண்ட சோடியம் அயனிகளும், நீர் மூலக்கூறுகளும் தளர்வாக இருத்தி வைக்கப்பட்டுள்ளன. பங்கிடப்பட்ட ஆக்சிஜன் அணுக்களின் மூலம் Si மற்றும் Al அணுக்கள் நான்முகி அமைப்பில் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
(v) ஜியோலைட்டுகள், களிமண் கனிமத்தை ஒத்துள்ளன. ஆனால் அவற்றின் படிகச் அமைப்பில் வேறுபடுகின்றன.
(vi) ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தடங்கள் மற்றும் கூடுகளைக் கொண்ட, தேன்கூட்டு அமைப்பை ஒத்த முப்பரிமாண படிக அமைப்பை ஜியோலைட்டுகள் பெற்றுள்ளன. ஜியோலைட்டு கட்டமைப்பு நகராமல் இறுக்கமாக உள்ள போதும், நுண் துளைகளின் வழியாக நீர் மூலக்கூறுகள் உள்ளேயும், வெளியேயும் மிக எளிதாக நகர்கின்றன.
(vii) ஏறத்தாழ ஒரே சீராக அமைந்திருக்கும் நுண்துளைகளின் உருவளவு இக்கட்டமைப்பின் மற்றொரு ஜியோலைட்டுகள் நீரின் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்க பயன்படுகிறது.
67.
Eu
68.
சோடியம் ஆவியில் NaCl
69.
சதுர பிரமிடு
70.
சால்கோஜன்கள்
71.
துவக்க செறிவை சார்ந்ததல்ல
72.
டையாஸ்போர்
73.
( )
+3
74.
( )
தாதுக்களை அடர்ப்பித்தல்
75.
ஆ) Sc3+, Ti4+, V5+ - பாராகாந்தத் தன்மை
சரியான கூற்று: Sc3+, Ti4+, V5+ - டையாகாந்தத் தன்மை
76.
இ. ஜிங்கைட், குப்ரைட் இவை முறையே ஜிங்க் மற்றும் காப்பரின் தாதுக்கள்
77.
iii) A தவறு ஆனால் R சரி
சரியான கூற்று A: உலோகம் குறைவுபடும் குறைபாட்டில் நேர் அயனிகளின் எண்ணிக்கை எதிர் அயனிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவு.
78.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது
79.
i) A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
80.
i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
81.
( )
அ) (i) & (ii)
சரியான கூற்று:
iii) ஏழு முதல்நிலை அலகுக்கூடுகளுக்கு இணையாக 41 படிக அமைப்புகள் உருவாக்க வாய்ப்புள்ளன என பிராவே வரையறுத்தார்.
iv) கன சதுர மற்றும் சாய் சதுர படிக அமைப்புகளுக்கு a ≠ b ≠ c
82.
( )
அ) (i) & (iii)
சரியான கூற்று : (ii) இரும்பு இடைச்செருகல் சேர்மங்களை உருவாக்கும்
83.
( )
ஈ) (i) & (iv)
சரியான கூற்று: ii) H3PO3 அமிலம் இருகாரத்துவ அமிலமாகும்
iii) H3PO4 அமிலம் முக்காரத்துவ அமிலமாகும்
84.
( )
ஈ) (iii) & (iv)
சரியான கூற்று:
iii) அணைவு உட்பொருளினுள் அடங்கியுள்ள தொகுதிகள் அயனியுறாது.
iv) அணைவு உட்பொருள் சேர்மத்தின் வடிவத்திற்கு காரணமாகிறது.
85.
( )
ஈ) (i), (ii) & (iii)
86.
( )
இ. வெள்ளீயக்கல் தாது புவி ஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
87.
ஈ) (ii) மட்டும்
சரியான கூற்று:
ii) மூலக்கூறு படிகங்களில் உட்கூறுகள் வலிமையான நிலை மின்னியல் விசையால் பிணைக்கப்பட்டுள்ளன.
88.
இ) (i), (ii) & (iii)
சரியான கூற்று: i) பொட்டாசியம் பெர்மாங்கனேட் குரோமேட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது
ii) பொட்டாசியம் பெர்மாங்கனேட் பைரோலுசைட் தாதுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது
iii) பொட்டாசியம் டைகுரோமேட் தோல் பதனிடுதல் பயன்படுகிறது
89.
ஈ) (ii) & (iv)
சரியான கூற்று: ii) அம்மோனியா நீரில் நன்கு கரைகிறது
iv) உலோக ஆக்சைடுகளை, உலோகங்களாக மாற்றும் வினையில் அம்மோனியா ஆக்சிஜன் ஒடுக்கியாக செயல்படுகிறது
90.
இ) (ii) & (iii)
சரியான கூற்று:
ii) பெரைல் ஆனது வளைய சிலிக்கேட்டின் எடுத்துக்காட்டு
iii) ஸ்பொடுமின் ஆனது சங்கிலி சிலிக்கேட்டின் எடுத்துக்காட்டு.
91.
ஆ) (i) & (iii)
சரியான கூற்று :
i) வினையின் வேகமானது ஒரு வினாடியில் மூலக்கூறுகளுக்கு இடையே நடைபெறும் மோதல்களின் எண்ணிக்கைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.
iii) மூலக்கூறுகளுக்கு இடையே மோதல்களின் எண்ணிக்கை வினைபடு பொருட்களின் செறிவு எதிர் விகிதத்தில் இருக்கும்.
92.
அ) i & ii
93.
காட்மியம்
காட்மியம் -4d வரிசை 3d வரிசை
94.
ஆ) சிலிக்கன் கார்பைடு
சிலிக்கன் கார்பைடு சகப்பிணைப்பு படிகம், மற்றவை மூலக்கூறு படிகங்கள்
95.
ஆ) H3PO3 - P ன் ஆக்சிஜனேற்ற எண் +3 மற்றவற்றில் +5
96.
ஈ) பாக்சைட் - பாக்சைட் அலுமினியத் தாது, மற்றவை போரானின் தாதுக்கள்.
97.
ஈ) நைட்ரேட்டோ - இது ஒரு எதிர் மின் ஈனி, மற்றவை நடுநிலை ஈனி
98.
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியான இணைகள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards