12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
விளம்பரத்திற்கும் கோரப்படாத விண்ணப்பங்களுக்கும் இடையே உள்ள இரண்டு வேறுபாடுகள் தருக.
2.
மனித வளங்களின் இயல்புகள் யாவை? (ஏதேனும் 3)
3.
பத்திர ஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.
4.
காளை மற்றும் கரடி - விளக்குக.
5.
கருவூல இரசீதின் வகைகளை விவரி. (ஏதேனும் 3)
6.
தேசிய தீர்வக மற்றும் களஆசிய அமைப்பு - சிறு குறிப்பு வரைக.
7.
இரண்டாம் நிலைச் சந்தை- சிறு குறிப்பு வரைக.
8.
குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?
9.
இயக்குதலின் முக்கியத்துவம் என்ன?
10.
மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக. (ஏதேனும் 3)
1.
| வ.எண் | அடிப்படை | விளம்பரம் | கோரப்படாத விண்ணப்பம் |
| 1. | பொருள் | பணியாளர்களை தேடும் பொருட்டு விளம்பரம் செய்யப்படுகின்றது. | வேலை தேடுவோர், தன்னிச்சையாக வேலை வேண்டி விண்ணப்பம் செய்யப்படுகின்றது. |
| 2. | தெரிந்து கொள்ளல் | இதன் மூலம் வேலைக்கு தேவைப்படும் தகுதி, வழங்கப்படும் சம்பளம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். | வேலை தேடுவோர் தன்னுடைய தகுதி, எதிர்பார்க்கும் சம்பளம் போன்ற விவரங்களைத் தருகின்றனர். |
| 3. | உறுதிநிலை | விளம்பரம் தரும் நிறுவனத்தில் பணியிடம் காலியாக உள்ளது.என்பதை உறுதியாக நம்பலாம். | விண்ணப்பிக்கும் நிறுவனத்தில் பணியிடம் காலியாக உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியாது, |
2.
(i) மனித வளங்கள் உணர்ச்சி பூர்வமானவை.
(ii) நிதியுடன் அல்லது நிதியில்லாமலும் மனித வளங்கள் ஊக்குவிக்கப்படலாம்.
(iii) மனித வளங்களின் நடத்தைகளை ஊகிக்க முடியாது.
(iv) மனித வளங்களால் உண்டாகும் மதிப்பு மற்றும் பாராட்டுகள் நீண்ட காலத்திற்கு கிடைக்கிறது
(v) மனித வளங்கள் நகரும் தன்மை கொண்டது.
3.
(i) பங்குச் சந்தை திறம்பட ஒழுங்குபடுத்த நிதி அமைச்சகம் செப்டம்பர் 13, 1994 ஆம் ஆண்டு பத்திரங்கள் ஒப்பந்தங்கள் சட்டத்தின் கீழ் செபிக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியுள்ளது.
(ii) ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆளும் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சகம் செபிக்கு அதிகாரம் அளிக்கிறது.
4.
காளை - தெஜிவாலா:
(i) பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது தெஜிவாலா (Tejiwala) என்றழைக்கப்படுகிறார்.
(ii) ஒரு காளை தன்னுடைய கொம்புகளால் எதிரிகளை உயரே அல்லது மேல் நோக்கி தூக்கி ஏறிவது போன்று, இந்த வகை வணிக ஊக வணிகர் பிணையப் பத்திரங்களின் விலையை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவதால் காளை எனப் பெயரை பெற்றுள்ளார்.
(iii) இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும் (Optimism) என்ற மனப்பாங்கு கொண்டவர்.
கரடி - மண்டிவாலா:
(i) கரடி அல்லது மண்டிவாலா (Mandiwala) என்றழைக்கப்படும் ஊகவணிகர், எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர்.
(ii) ஒரு கரடி வணிகர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு(pessimism) கொண்டவர்.
(iii) ஒரு கரடி பொதுவாகத் தன்னுடைய எதிரியைத் தரையில் தள்ளி அழுத்துகிறது. அதேபோல் ஒரு கரடி ஊகவணிகரும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலையை கீழே தள்ளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்
5.
கருவூல இரசீதின் வகைகள் :
கால வரையறை அடிப்படையில் இந்த இரசீதுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
அவை பின்வருமாறு.
(a) 91 நாட்கள் கருவூல இரசீதுகள்;
(b) 182 நாட்கள் கருவூல இரசீதுகள்;
(c) 364 நாட்கள் கருவூல இரசீதுகள்
(i) 91 நாட்கள் கருவூல இரசீதுகள் ஒரு நிலையான 4 சதவீத தள்ளுபடி விகிதத்தில் ஏலத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன.
(ii) இந்திய ரிசர்வ் வங்கி 91 நாட்கள் மற்றும் 182 நாட்கள் கருவூல இரசீதுகளை ஒரு வாரம் முழுவதும் வடிகட்டும் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.
(iii) 364 நாட்கள் கருவூல இரசீதுகள் எவ்வித நிலையான விகிதமும் கொண்டு செயல்படுவதில்லை. இந்த தள்ளுபடி விகிதம் அதிகார அமைப்பின் இசைவினை பெற்று பங்கேற்பாளர்களுக்கு ஏலத்தில் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய விகிதத்தையே தள்ளுபடி விகிதம் என்று குறிப்பிடப்படுகிறது.
6.
(i) பங்கில்லா வணிக முறையின் கீழ் பத்திரங்கள் தீர்வுகள் அனைத்தும் பதிவேட்டின் மூலமே நடைபெறுகிறது.
(ii) பங்கில்லா வணிக முறையின் மூன்று பகுதிகள்:
அ) தேசிய வணிக ஒப்பீடு மற்றும் அறிக்கை முறையானது பத்திரச் சந்தையின் வரையறை மற்றும் கட்டளைகளை விளக்குகிறது.
ஆ) தீர்வு தேதியன்று தரகர்களின் நிகர ரொக்கம் மற்றும் பங்கு பொறுப்புகளை தேசிய அகற்றீட்டு முறை முடிவு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இ) எந்த ஒரு பத்திரமும் மாற்றப்படாமல் மின்னணு மூலம் பதிவுகள் செய்யப்பட்டு பங்கு உரிமையை மாற்றுவதையே தேசிய வாய்ப்பு அமைப்பு செய்கிறது.
7.
(i) இரண்டாம் நிலைச் சந்தை ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை ஆகும்.
(ii) இரண்டாம் நிலைச் சந்தையில் பங்கு மாற்றகம் ஒரு முக்கியமான நிறுவனம் ஆகும்.
8.
1. அமைப்பின் குறிக்கோள்களை வரையறுத்தல்
2. ஒவ்வொரு பிரிவின் இலக்குகள்
3. முக்கிய முடிவுப் பகுதிகள்
4. கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள்களை நிர்ணயித்தல்
5. குறிக்கோள்களுடன் வளங்களை ஒப்புநோக்குதல்
6. காலவாரியான மறு ஆய்வுக் கூட்டம் கூட்டுதல்
7. செயல்பாடுகளை மறு ஆய்வுக் கூட்டம் கூட்டுதல்
9.
1. இலக்குகளை சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னையிலிருத்தல், வழிகாட்டுதல் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுடன் தொடர்புபடுத்துதல் போன்றவற்றிற்கு இயக்குதல் பயன்படுகிறது.
2. அமைப்பின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பணியாளர்களை இயக்கும் பொருட்டு சுற்றறிக்கைகள், செய்தி மடல்கள், கூட்டம் ஆகியவற்றின் மூலமாக அனைத்து விபரங்களும், உரிய தகவல்களும் தெரிவிக்கப்படுகின்றன.
10.
| கோட்பாட்டின் அடிப்படை | மேலாண்மை | நிர்வாகம் |
|---|---|---|
| பொருள் | மேலாண்மை என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும். | ஒரு குழுவால் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான செயல் முறையே நிர்வாகம் என்று அழைக்கப்படுகின்றது. |
| அதிகாரம் | மத்திய மற்றும் கீழ்மட்ட அளவில் | உயர் மட்ட அளவில் |
| பங்கு | நிறைவேற்றம் | முடிவெடுத்தல் |
| தொடர்பு தன்மை | கொள்கைகளை செயல்படுத்தல் | கொள்கைகளை உருவாக்குதல் |
| செயல்பாட்டு பரப்பு | நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது | நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது முழுக்கட்டுப்பாடு |
| செயல் | திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்தல் | திட்டங்கள் தீட்டுதல், கொள்கைகளைக் கட்டமைத்தல் மற்றும் இலக்குகளை நிர்ணயித்தல். |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards