12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
பலவகையான நிறும கூட்டங்களை விளக்குக.
2.
ஒரு நிறுமத்தின் இயக்குனரை அவரது அலுவலகத்தில் இருந்து எவ்வாறு நீக்கலாம் என்பது பற்றி விளக்குக.
3.
நிறுமம் உருவாக்கத்தின் பல்வேறு படிநிலைகளை விவரி?
4.
புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக படிநிலைகளை விளக்குக.
5.
வியாபார அடிப்படையிலான தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக. (ஏதேனும் 5)
6.
தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
7.
காசோலையின் இயல்புகள் கூறி விளக்குக. (ஏதேனும் 5)
8.
விற்பனை மற்றும் விற்பனை உடன்பாடு இடையேயுள்ள வேறுபாடுகளை தருக.
9.
தாராளமயமாக்கல் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்குக. (ஏதேனும் 5)
10.
வணிகத்தின் பொருளாதார மற்றும் சமூக கலாச்சார சூழலை விளக்குக.
1.
பங்குநர்கள் கூட்டங்கள்: நிறும பங்குநர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் பங்குனர்கள் கூட்டம் என அழைக்கப்படுகிறது. நிறும பங்குநர் கூட்டங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(i) சட்டமுறை கூட்டம்: நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது.
(ii) ஆண்டுப் பொதுக்கூட்டம் : ஒவ்வொரு ஆண்டும் நிறுமத்தில் இயல்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டப்படும் கூட்டம் ஆண்டு பொதுக்கூட்டம் ஆகும்.
(iii) சிறப்புக் கூட்டம்: சட்டமுறைக் கூட்டம் மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ஆகியவை நிறுமத்தின் இயல்பான சாதாரண கூட்டங்கள் ஆகும்.
(iv) இயக்குநர் அவைக் கூட்டம் : நிறுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநரவையிடம் உள்ளதால் இயக்குநர்கள் அடிக்கடி கூடி பல வியாபார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்காக இயக்குநரவையால் கூட்டப்படும் கூட்டங்கள் இயக்குநரவை கூட்டங்கள் ஆகும்.
(v) வாரியக் குழுக் கூட்டம்: பட்டியலிடப்பட்ட நிறுமமும், ₹10 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலுடைய ஒவ்வொரு பொது நிறுமம் தணிக்கை குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். இக்கூட்டம் ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை கூட்ட வேண்டும்.
சிறப்புக் கூட்டங்கள்:
(i) வகுப்பு கூட்டம்(Class Meeting) Meetings of Particular Share or Debenture Holders
ஒரு குறிப்பிட்ட வகையான பங்குகள் அல்லது கூட்டங்கள் குறிப்பிட்ட வகையான கடனீட்டுப்பத்திரங்களும், கூட்டப்படும் கூட்டம் வகுப்பு கூட்டம் ஆகும். சாதாரண பங்குகள் (எ) முன்னுரிமை பங்குகள் கூட்டப்படும் கூட்டத்தை கூறலாம்.
(ii) கடனீந்தோர் கூட்டம் : நிறுமக் கூட்டங்களை போல இது ஒரு நிறும கூட்டம் அல்ல இருப்பினும், இது ஒரு புதிய கடன் கொள்கையை அறிமுகம் செய்யும் போது அல்லது கடனீந்தோர்கள் தொடர்பான சில வழக்குகளை பேசி முடிவு எடுக்கவும், கடனீந்தோர்களுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் இவ்வகை கூட்டங்கள் கூட்டப்படுகிறது.
2.
(i) பங்குதாரர்களால் நீக்கம் -பிரிவு (169)
1. இயக்குனர்கள் பின்பற்றிய கொள்கைகள் பொருத்தமானதல்ல என பங்குதாரர்கள் கருதினால்.
2. சிறப்பு அறிவிப்பை வழங்குவதன் மூலமும், சாதாரண தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமும் இயக்குனரின் பதவிக்காலம் முடியும் முன் இயக்குனரை பதவியிலிருந்தும் நீக்கலாம்.
(ii) மத்திய அரசால் நீக்கப்படுதல் :
1. பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோசடி
2. விவேகமான வர்த்தக நடைமுறையின்மை
3. கடுமையான வியாபார பாதிப்பு
4. பொது நலனுக்கு சேதமளிக்கும் வகையில் நிர்வாகம் நடத்தப்படுவது.
போன்ற காரணங்களால் மத்திய அரசு இயக்குனரை நீக்கலாம்.
(iii) நிறும/கம்பெனி சட்ட வாரியத்தால் நீக்கப்படுதல்:
ஒரு இயக்குனர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று கம்பெனி சட்ட வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்தால் இயக்குனர் நீக்கப்படலாம்.
3.
1. கம்பெனி சட்டம் பிரிவு 3 (1)ன் படி ஒரு நிறுமமானது கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.
i) பொது நிறுமம் - 7 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
ii) தனி நிறுமம் - 2 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
iii) தனிநபர் நிறுமம் - ஒரு நபர்
2. தனி நிறுமம் தனது பெயர் (அ) எந்த நபரின் பெயர் வைக்க வேண்டுமோ அதை அமைப்பு முறை சாசனத்தில் எழுதி சட்டப்படி தேவையான ஆவணங்களை கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
3. நிறுமத்தை உருவாக்க பல நடைமுறைகளை பல்வேறு வகையில் கையாள வேண்டும். தனிநபரின் கருத்துக்கள் மூலம் ஆரம்பம் முடிவு வரை தேவையான ஆவணங்களை கொண்டு நிறுமம் உருவாக்கப்படுகிறது.
4. உருவாக்குதல் நான்கு நிலைகளைக் கொண்டது.
(i) உருவாக்கம்
(ii) பதிவு செய்தல்
(iii) முதலிடுதல்
(iv) வியாபாரம் தொடங்குதல்
5. முதல் இரண்டு நிலைகளான உருவாக்கம்,பதிவு செய்தல் என்பவை பொது தனியார் நிறுவனத்திற்கு அவசியமானதாகும்.
6. தனியார் நிறுமம் தனது வியாபார செயல்பாடுகளை பதிவு செய்தபின் தொழிலை உடனடியாக மேற்கொள்ளும் ஆனால் பொதுநிறுமம் நான்கு நிலைகளை கடந்து தொழிலை மேற்கொள்ளும்.
7. பொது நிறுமம் தன்னுடைய நிதியை உயர்த்த பொது வெளியீடு தொடர்பான சட்ட தேவைகளை பூர்த்தி செய்து நிறுமச்சட்டம் மூலம் தனது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
4.
(i) பொருள் தேர்வு எதிர்பார்ப்பு : திறன், உள்நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அவர்/அவள் ஒரு அடையாளக்குறியீடு, புதிய தயாரிப்பு ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஏற்கனவே உற்பத்தி செய்து கொண்டு இருக்கும் பொருட்களின் தன்மையை அதாவது கூடுதல் வசதிகள், இட வசதிகள், எளிதான செயல்திறன், விலையை குறைக்க போன்றவற்றிற்கும் இருக்கும். திட்டத்தின் பொருளாதார நம்பகத்தன்மையை தொழில் முனைவோர் ஏற்படுத்த வேண்டும்.
(ii) உரிமையின் வடிவத்தை தேர்வு செய்தல் Selection of form of Ownership:
குடும்பம் உரிமை, கூட்டாண்மை, தனியார் வரம்புக்குட்பட்ட நிறுவனம் ஆகியவற்றிற்கான தொழில்முறை அமைப்பு நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். குடும்பத்தின் உரிமைகள் மற்றும் கூட்டாண்மை வடிவங்கள் ஆகியவை நிறுவன நிதியுதவி, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வணிக அனுபவங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
(iii) இடத் தேர்வு Selection of Site : தொழில் முனைவோர் தனது முயற்சியைத் தக்க வைப்பதற்கு பொருத்தமான தொழில் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அவருக்கு இடத்தை தேர்வு செய்ய நான்கு வாய்ப்புகள் உள்ளன.
(iv) மூலதன கட்டமைப்பை தீர்மானித்தல் : தொழில் முனைவோர் தனது தொழிலுக்கு தேவையான முதலை எங்கிருந்து எவ்வாறு திரட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
(v) உற்பத்தியை கையகப்படுத்துதல் என்பதை அறிதல் : தொழில்துறை ஆய்வுக்கூடங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை மேம்பாட்டு பிரிவுகள் மற்றும் தனிப்பட்ட ஆலோசகரிடமிருந்து உற்பத்தி செய்வது பற்றிய ஆலோசனைகளை கேட்டறிதல்.
(vi) திட்ட அறிக்கை தயாரித்தல் : நிதியியல், தொழில்நுட்ப அறிவு, உழைப்பு மற்றும் மூலப்பொருட்களின் ஆதாரங்கள் சந்தைதிறன் மற்றும் இலாபத்தன்மை போன்ற அம்சங்களை உள்ளடக்கிய திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
(vii) தற்காலிகமான பதிவு சான்றிதழ் பெறுதல்: தற்காலிகமான பதிவு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தொழில் முனைவோர் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் ஒரு வருட காலத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் வண்ணம் தரப்படும்.
5.
(i) உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்:
இவ்வகையான தொழில் முனைவோர் ஒரு பொருள் (அ) சேவை பொருளை உருவாக்க எண்ணி தொழில் முனைவை மேற்கொள்பவர். இவர் பெரிய அல்லது சிறிய அளவில் தொழிலை ஏற்படுத்தி தன் எண்ணத்தில் உதித்த பொருளை (அ) சேவைப் பொருளை தயாரித்து சந்தை இடுபவர்.
(ii) வணிகத் தொழில் முனைவோர்:
வியாபார தொழில் முனைவோர் பொருளை வாங்கி விற்கும் செயலில் மட்டும் தன்னை உட்படுத்தி கொள்பவர். இவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ பொருளை வணிகம் செய்பவர். இவர்கள் பொருளை பகிர்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். குறிப்பாக தங்களது தொழில் முனைவில் கழிவு முறையில் இலாபம் ஈட்டுகின்றனர். பொருளை வெற்றிகரமாக சந்தை இடுவது இவர்களின் பலம்.
(iii) தொழிற்சாலை தொழில் முனைவோர்:
இவர்கள் வாடிக்கையாளரின் தேவைகளை துல்லியமாக கண்டுணர்ந்து அவர்களின் தேவைக்கேற்ப பொருளை உற்பத்தி செய்யும் தொழிலை முனைகின்றனர். இவர்கள் குறுந்தொழில் முனைவோராகவோ, நடுத்தர தொழில் முனைவோராகவோ அல்லது பெருந்தொழில் முனைவோராகவோ இருக்கலாம்.
(iv) கூட்டுப்பங்கு தொழில்முனைவோர்:
கூட்டுப்பங்கு தொழில்முனைவோர் என்பவர் நிறுவனத்தை கூட்டுப்பங்கு வடிவில் தொழிலை துவங்க முனைபவர் ஆவர். தொழிலை கூட்டுறு அடிப்படையில் துவங்க தோற்றப் பணிகளை மேற்கொள்கிறார்.
கூட்டுப்பங்கு நிறும வடிவத்தில் நிர்வாகமும் நிறும உரிமையும் வெவ்வேறு நபர்களிடம் உள்ளது. இயக்குநர்கள் அவையை பல்வேறு சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற வல்லுநர்களை பல பணிகளுக்கு அமர்த்தி அன்றாட நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.
(v) வேளாண் தொழில் முனைவோர்:
வேளாண் தொழில் முனைவோர் வேளாண் பொருட்களை விளைவித்து சந்தையிடும் தொழிலை முனைகின்றனர். இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழைப்பு போன்ற இடு பொருட்களை கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அவ்வாறு உற்பத்தி செய்த தானியங்களை நேரடியாகவோ அல்லது கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ சந்தை இடுகின்றனர்.
(vi) சில்லறை தொழில் முனைவோர்:
இவர்கள் சிறு அளவில் பொருட்களை பல்வேறு மொத்த வணிகர்களிடமிருந்து பெற்று பலதரப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து ஒரு கூரையின் கீழ் இறுதி நுகர்வோருக்கு பொருளைத் தருவிக்கும் தொழிலை நடத்துபவர்கள்.
6.
| வ.எண் | அடிப்படை | தொழில் முனைவோர் | அகத்தொழில் முனைவோர் |
| (i) | சிந்தனை | தொழில் முனைபவர் ஒரு தடையற்ற சிந்தனைவாதி | அகத்தொழில் முனைபவர் தன்னிச்சையான சிந்தனைவாதி, ஆனால் ஒரு தொழில் நிறுமத்தின் உள் செயல்படுபவர். |
| (ii) | சார்புநிலை | தன்னிச்சையான நபர் | தொழில் முனைவோரை சார்ந்து இருப்பவர். |
| (iii) | நிதி திரட்டல் | தொழில் முனைவோர் தன் சொந்த முயற்சியில் தொழிலுக்கான நிதியை திரட்ட வேண்டும். | இவருக்கு நிதி திரட்டும் பொறுப்பு இல்லை. ஆனால் திரட்டிய நிதியை கையாளும் பொறுப்பு உள்ளது. |
| (iv) | வெகுமதி | தொழில் முனைவோர் தங்களின் இடர் ஏற்பு பணிக்காக இலாபம் என்ற வெகுமதியை பெறுகின்றனர். | அகத்தொழில் முனைவோர்க்கு இலாபத்தில் பங்கு இல்லை. ஆனால் ஊதியம், ஊக்க ஊதியம் மற்றும் மேம்படிகள் பெற வாய்ப்பு உண்டு. |
| (v) | இடர் ஏற்றல் | தான் ஆரம்பித்த தொழிலின் இடரை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. | இவர் தொழில் தொடர்பாக எழும் இடர்பாட்டில் பங்கு பெறுவதில்லை. தான் மேற்கொண்ட செயல் திட்டம் தோல்வி நிலைக்கு பொறுப்பு ஏற்பதில்லை. |
| (vi) | தகுநிலை | தொழில் முனைபவர் உரிமையாளர் என்ற தகுநிலை படைத்தவர். | அகத்தொழில் முனைவோர் உரிமையாளர் அல்ல; ஆனால் ஊழியர் தான் மேற்கொண்ட செயலுக்கு தன்னுடைய மேல் அதிகாரிக்கு பதில் சொல்ல கடமையுடையவர். |
| (vii) | செயல்பாடு | தான் தொடங்கிய தொழிலின் புறத்தின் நின்று பெரும்பாலும் செயல்படும் நபர். | முழு நிறுமத்திற்கு உட்பட்டு இயங்கும் நபர். |
7.
காசோலையின் இயல்புகள்:
1. காசோலை எழுத்து வடிவில் இருக்க வேண்டும்: காசோலை எழுத்து வடிவில் வரையப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் சட்டமோ அது பென்சிலால் கூட எழுத தடை விதிக்கவில்லை என்றாலும் மோசடி செய்யும் வாய்ப்பைக் கருதி வங்கியாளர்கள் தாங்களே காசோலையை அச்சிட்டு தருகிறார்கள்.
2. நிபந்தனையற்ற ஆணை: காசோலையில் வாடிக்கையாளர் பணம் கொடுக்க என கட்டளை பிறப்பிக்க வேண்டும். தயவு செய்து என்ற வார்த்தை இருந்தாலும் காசோலை செல்லும். ஆனால் கட்டளை நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும்.
3. குறிப்பிட்ட வங்கியர் மீது வரையப்படுதல்: காசோலையை ஒரு குறிப்பிட்ட வங்கியர் மீது மட்டுமே எழுத முடியும். அதுவும் ஒரு வங்கியின் எந்தக் கிளையில் வாடிக்கையாளர் பணம் வைத்துள்ளாரோ சம்பந்தப்பட்ட கிளையில் பணம் கொடுக்குமாறு எழுதவேண்டும். மின்னணு மற்றும் ஒருங்கிணைந்த வங்கி முறை நடைமுறையில் இருக்கும் இந்நாளிலும் எந்த கிளையில் வேண்டுமென்றாலும் பணம் பெறமுடியும்.
4. நிச்சயமான ஒரு தொகை: வங்கியரை ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கும் படி ஆணை இடவேண்டும். குறிப்பிட்ட அளவு பிணையம் வெளியிட ஆணை பிறப்பிக்க முடியாது.
5. பணம் பெறுபவரைத் திட்டவட்டமாக குறிப்பிட வேண்டும்: காசோலையை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது அவரது ஆணைபெற்றவருக்கு தரும்படி எழுத வேண்டும் அல்லது கொணர்பவர் காசோலை எனின் கொணர்பவருக்கு பணம் தருமாறு ஆணையிடலாம்.
6. கேட்டவுடன் தருமாறு எழுதப்படுவது: காசோலையை கேட்டவுடன் தருமாறு எழுதப்பட வேண்டும். எப்போது தர வேண்டும் என்ற நாள் குறிப்பிடப்பட்டிருப்பின் கேட்டவுடன் கொடுக்க என்ற கட்டளை தேவையற்றது.
8.
| வேறுபாட்டு அடிப்படை | விற்பனை | விற்பனை ஒப்பந்தம் | |
| 1 | உரிமை மாற்றம் | பொருளின் உரிமை உடனடியாக மாறிவிடுகிறது. | பொருளின் உரிமை எதிர்காலத்தில் மாறும் தன்மை உடையது. |
| 2 | நட்ட இடர்பாடு | விற்கப்பட்ட பொருள் சேதமுற்றால் அதனால் ஏற்பட்ட நட்டம் வாங்குபவரை சாரும். | விற்கப்பட்ட சரக்கு வாங்குபவர் கைவசம் இருந்தால் கூட பொருள் சேதமுற்றால் அல்லது அழிவுற்றால் நட்டத்தை விற்பனையாளர்தான் ஏற்க வேண்டும். |
| 3 | ஒப்பந்த மீறுகையின் விளைவுகள் | விலையை செலுத்த வாங்குநர் மறுத்தால் சரக்கு விற்குனரிடமே இருந்தாலும் கூட வாங்குபவர் மீது விலைதரக் கோரி வழக்கு தொடர முடியும். | வாங்குனர் ஒப்பந்தத்தை மீறி செயல்படும் பொழுது விற்பவர் பொருளை வாங்குனரிடமிருந்து கைப்பற்றிக்கொள்ள முடியும். மேலும் வாங்குனர் மீது வழக்கு தொடர முடியும். |
| 4 | ஒப்பந்தத்தின் தன்மை | இது நிறைவேறிய ஒப்பந்தம் ஆகும். எனவே சரக்குரிமை உடனடியாக மாற்றப்படுகிறது. | இது நிறைவேற வேண்டிய ஒப்பந்தம் ஆகும். உரிமை மாற்றம் எதிர்காலத்தில் நிகழ உள்ளது. |
| 5 | வாங்குநரின் நொடிப்பு | வாங்குனர் விலையை செலுத்தும் முன்னரே நொடிப்பு நிலையை அடைந்துவிடின் விற்பனை செய்த சரக்கு விற்றவரின் கைவசம் இருந்தாலும், இருப்பவர் அச்சரக்கினை கலைப்பு அதிகாரி வசம் கொடுத்து அந்த விலைக்கான விகிதப்படி தொகையை மட்டுமே பெற உரிமை உண்டு. | விற்பனை உடன்பாட்டில் விற்குநர் வாங்குனர் கைவசம் உள்ள சொத்தை கலைப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க தேவையில்லை. காரணம் உரிமை இன்னமும் வாங்குனர்க்கு மாற்றப்படவில்லை. |
| 6 | விற்பனையாளரின் நொடிப்பு | விற்றசரக்கை வாங்குபவரிடம் ஒப்படைக்கும் முன் விற்குநர் நொடிப்பு நிலை அடைந்துவிட்டால் வாங்குனர் கலைப்பு அதிகாரியிடம் அச்சொத்தை பெற்றுக் கொள்ளலாம். | விற்பனை உடன்பாட்டில் அவ்வாறு செய்ய இயலாது. வாங்கியவர் பணம் செலுத்தியிருந்தால் கூட விகிதப்படி தொகையை பெறும் உரிமை மட்டுமே உண்டு. |
9.
நன்மைகள்
(அ) வெளி நாட்டு முதலீடுகள் அதிகரிப்பு: (Increase in Foreign Investment)
ஒரு நாடு வணிகத்தை தாராளமயமாக்குதலின் மூலமாக அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து கவர்ச்சிகரமான முதலீடுகளை பெற முடிகின்றது. அம்முதலீடுகள் மூலமாக உள்நாட்டில் மூலதனத்தை பெருக்குவதோடு அதன் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்குவதற்கு உதவுகிறது.
(ஆ) அந்நிய செலாவணி இருப்பு அதிகரிப்பு (Increase the Foreign Exchange Reserve)
வெளி நாட்டு முதலீட்டிற்கும் அந்நிய செலாவணிக்குமான கட்டுப்பாடுகளை தளர்த்தி மூலதனத்தை எளிதில் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது.
(இ) நுகர்வு அதிகரிப்பு : (Increase in Consumption)
தாராளமயமாக்களினால் ஒரு நாட்டில் பயன்பாட்டிற்கு அதிக அளவிலான பொருட்கள் கிடைக்கவும் அதிக உற்பத்திக்கும் வழிவகை செய்கிறது.
(ஈ) விலைக்கட்டுப்பாடு : (Control Over Price)
ஏற்றுமதி இறக்குமதி தீர்வைகளை நீக்குவதால் நுகர்வோருக்கு குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாராளமயமாக்கலினால் இறக்குமதி நாடுகளுக்கு நன்மை விளைவிக்கிறது.
(உ) வெளிநாட்டில் பெறும் கடன்களை குறைக்கிறது (Reduction in external borrowings)
தாராளமயமாக்கலின் மூலம் வெளி நாட்டுக் கடன்களை ஈர்ப்பதன் மூலம் வெளிநாட்டு வர்த்தகக் கடன்களை வாங்கும் வாய்ப்பு குறைகிறது.
குறைபாடுகள்:
(அ) வேலையின்மையை அதிகரித்தல் (Increase in Unemployment)
வர்த்தக தாராளமயமாக்கல் பெரும்பாலும் பொருளாதாரத்தின் சமநிலைக்கு வழிவகுப்பதால் சிறு தொழில்களில் சில வளர்ந்தும் சில சிறு தொழில்களில் சரிவும் ஏற்படுகிறது. இதனால் சில தொழிற்சாலைகள் மூடுகின்ற நிலையால் வேலையில்லா நிலை உருவாகிறது.
(ஆ) உள்நாட்டு தொழில் அலகுகளின் இழப்பு (Loss to Domestic Units)
தாராளமயமாக்கல் கோட்பாட்டில் குறைந்த நுழைவுக் கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு தொழில்கள் பல நாடுகளில் ஊடுருவ சாத்தியம் அதிகம் உள்ளது. இது உள்நாட்டு தொழில்களை அச்சுறுத்துவதுடன் மற்றும் போட்டியை தோற்றுவித்து உள்நாட்டு தொழிலை அடியோடு ஒழிக்கும் சதியாகவும் கருதப்படுகிறது.
(இ) அயல்நாடுகளை சார்ந்திருத்தலை பெருக்கும்:(Increased Dependence of Foreign Nation)
வர்த்தக தாராளமயமாக்கல் என்பது பலம் பொருந்திய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக போட்டிகளை எதிர்கொள்ளும். அது சந்தையை தன் கட்டுபாட்டிற்கு கீழ் கொண்டுவரும் நிலையை உருவாக்க நேரிடலாம்.
10.
1. வளர்ச்சி கட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் இயல்பு:
i. நாடுகளை வளர்ந்த, வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் என வகைப்படுத்தலாம்.
ii. வளர்ந்த நாடுகள் - அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா. இவை பல கணினி சார்ந்த தொழில் நுட்பங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளன.
iii. வளரும் நாடுகள் -இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, ஏற்றத்தாழ்வு, அதிக மக்கள் தொகை மெதுவாக தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை இவற்றின் தன்மைகள்.
iv) பின்தங்கிய நாடுகள் -மிக குறைந்த அளவிலான தொழில்நுட்ப தத்தெடுப்பு, குறைவான வாழ்க்கை தரம்.
2. பொருளாதார அமைப்பு முறையின் இயல்புகள்:
முதலாளித்துவம் - நாட்டின் அனைத்து வளங்களையும் தனிநபர் அல்லது தனியார் நிறுவனங்கள் சொந்தமாக்கி கொள்ள அரசு கொள்ள அரசு அனுமதி அளித்தல்.
சமதர்மம் (அ) சோசலிசம் - தனியார் துறை மீது அதிக கட்டுப்பாடு.
3. தேசத்தின் பொருளாதாரக் கொள்கை:
நாணயக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை, தொழில்துறைக் கொள்கை, வர்த்தகக் கொள்கை, நிதிக்கொள்கை ஆகியவை பொருளாதார சூழலின் பகுதியாக உள்ளது.
4. பொருளாதாரக் குறியீடுகள்:
மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, தேசிய வருமானம், தனிநபர் வருமானம், செலுத்துகை சமநிலை, சேமிப்பு விகிதம் மற்றும் முதலீடுகள் போன்ற பொருளாதார குறியீடு முக்கியமான பகுதியை உருவாக்குகிறது.
5. நிதிசந்தை அபிவிருத்தி:
தொழில்துறை வளர்ச்சி, பணச்சந்தை, மூலதனச்சந்தை, பங்குச்சந்தை, பத்திர சந்தை மற்றும் சிறந்த வங்கியில் அமைப்பு முறை போன்றவற்றின் வெளிப்பாடு.
6. பொருளாதாரக் கட்டமைப்பு:
மூலதன உருவாக்கம், முதலீட்டு முறை, வர்த்தக சமநிலை, தொழிலாளர் உழைப்பின் அழிப்பு மற்றும் தேசிய உற்பத்தியின் கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கியது.
சமூக கலாச்சார சூழல்:
1. சமூக நிறுவனங்கள் மற்றும் குழுக்கள்.
2. சமுதாயத்தில் பரவலான குடும்ப அமைப்பு.
3. வணிகத்தில் திருமணத்தின் பங்கு.
4. சமூகத்தின் சாதி அமைப்பு முறை.
5. மக்களின் பழக்க வழக்கம், நம்பிக்கை (மற்றும்) சுயமரியாதை.
6. மக்கள் தொகை காரணிகள்.
7. மக்கள் வாழ்க்கைமுறை, சுவை, விருப்பம் மற்றும் முன்னுரிமைகள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards