12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன் சிறப்பியல்புகள் யாவை?
2.
ஏதேனும் ஐந்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை எழுதுக.
3.
நுகர்வோர் பாதுகாப்பின் தேவைகள் யாவை?
4.
நுகர்வோர் பாதுகாப்பில் வணிகத்தின் பங்கினை விளக்குக. (ஏதேனும் 5)
5.
நுகர்வோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்?(ஏதேனும் 5)
1.
1. நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எதிராக நுகர்வோரை பாதுகாத்தல்.
2. உற்பத்தியாளர்கள்/விற்பனையாளர்களின் ஒப்பந்த மீறுகையிலிருந்து நுகர்வோரை பாதுகாத்தல்.
3. சிறந்த தரத்தில் நுகர்வோருக்கு பொருட்கள் கிடைத்தலை உறுதி செய்தல்.
4. பொய்யான மற்றும் தவறான வழிகாட்டும் செய்திகளை வெளியிடும் விளம்பரங்களிலிருந்து நுகர்வோரை பாதுகாத்தல்.
5. நுகர்வோர் வாங்கும் பொருளுக்கு சரியான விலை நிர்ணயம் செய்வதை உறுதி செய்தல்.
6. தங்கு தடையற்ற பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்தல்.
7. பொருட்கள் சரியான தரத்தில் சரியான அளவைகளில் கிடைப்பதை உறுதி செய்தல்.
8. நேர்மையற்ற வணிகர்களின் நியாயமற்ற வணிக நடைமுறையிலிருந்து நுகர்வோரை பாதுகாத்தல்.
9. பல்வேறு வகையான மாசுக்களிலிருந்து நுகர்வோரை பாதுகாத்தல்.
10. வணிகப் போட்டிகளினால் விளையும் தீய விளைவுகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல்.
2.
1. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 :
அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் செயற்கையாக விலையேற்றம் செய்யும் நோக்குடன் பொருட்களை பதுக்கி வைத்தல், செயற்கை பற்றாக்குறையை உருவாக்குதல், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்றவற்றை தடைசெய்ய உருவாக்கப்பட்டது.
2. வேளாண் பொருட்கள் தரப்படுத்தல் மற்றும் விற்பனை சட்டம் 1937:
வேளாண்மை உற்பத்தி பொருட்களை நல்ல தரத்துடன் வழங்குவதாக உறுதி செய்கிறது.
3. உணவுப் பொருட்கள் கலப்பட தடைச்சட்டம் 1954 :
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை பரிசோதித்து தரமான உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம் நுகர்வோர் உடல்நலத்தை பாதுகாக்கிறது.
4. எடை மற்றும் அளவுகள் சட்டம் 1958:
(i) எடை குறைவு மற்றும் அளவு குறைபாடுகளை போக்கி நுகர்வோரை பாதுகாக்கிறது.
(ii) இச்சட்டம் அளவியல் சட்டம் 2009 ஆக திருத்தியமைக்கப்பட்டது.
5. இந்திய தர நிறுவனச் சட்டம் 1952:
உற்பத்தி பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்து நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
3.
1. நுகர்வோரை வணிகத்தின் மன்னராக கருதப்பட்டாலும் அவர்களுடைய நலன்கள் ஏறத்தாழ புறக்கணிக்கப்படுகின்றன.
2. பொருட்களின் பற்றாக்குறை, கிடைத்ததை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு நுகர்வோரை தள்ளி விடுகின்றது.
3. பொருட்களின் தரம் விட்டுக்கொடுக்கப்படுகிறது. உத்திரவாதம் அர்த்தமற்றதாகிறது. நுகர்வோருக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பு கண்டுகொள்ளப்படுவதில்லை.
4. வணிக நிறுவனங்களுக்கு கொள்ளை இலாபம் ஈட்டுதல் எனும் ஒற்றை நோக்கம் மட்டுமே மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது.
5. எனவே இத்தகைய சூழலில் நுகர்வோர் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
4.
விலை உயர்வைத் தவிர்த்தல்:
வணிக நிறுவனங்கள் தங்கள் வணிகத்தில் பொருட்களில் கடுமையான பற்றாக் குறை ஏற்படும் சூழலில் கூட பொருளுக்கான விலைகளை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பதுக்கலைத் தவிர்த்தல்:
வணிக நிறுவனங்கள் தங்கள் வணிகத்தில் இயல்பான போக்கினை அனுமதிக்க வேண்டும். நுகர்வோர் பாதிக்கப்படும் வகையில் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை நடவடிக்கைகள் மூலம் அதிக இலாபம் ஈட்டும் நடவடிக்கைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
உயர் தரத்திற்கு உத்தரவாதம் அளித்தல்:
வணிக நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு பொய்யான உத்தரவாதங்களை அளிக்கக் கூடாது. அவைகள் தங்களது பொருட்களின் உயர் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.
பொருட்கள் குறித்த தகவல்கள் அளித்தல்:
வணிக நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களின் தரம், அளவு மூலப்பொருட்கள் பயன்பாடு, பின் விளைவுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எடை, மாற்றிக் கொள்ளும் வசதி, பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்த மிகச்சரியான மற்றும் போதுமான தகவல்களை நுகர்வோருக்கு கட்டாயம் தரவேண்டும்.
விளம்பரங்களில் உண்மை (நேர்மை):
வணிக நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கு விளம்பரம் செய்யும்போது அவ்விளம்பரங்களில் பொய்யான, உண்மைக்குப் புறம்பான, மோசடியான தகவல்களை அளித்து நுகர்வோருக்கு தவறான வழிகாட்டக் கூடாது.
தீங்குகளிலிருந்து பாதுகாத்தல்:
வணிக நிறுவனங்கள் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்தக்கூடாது. சந்தைப்படுத்தும் முன் தனது உற்பத்தி மற்றும் விற்பனைப் பொருட்களை முறையாகவும், முழுமையாகவும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
5.
(i) அதிக விலைக்கு விற்றல் :
விற்பனையாளர்கள் மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் தாங்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதன் தரத்திற்கு ஈடான விலையைக் காட்டிலும் கூடுதலான விலையை அளிப்பதற்கு பல்வேறு தருணங்களில் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
(ii) கலப்படம் :
கலப்படம் என்பது உணவுப் பொருட்களில் விரும்பத்தகாத பதிலிப் பொருட்களைச் சேர்ப்பதாகும். கலப்படப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு உடல்ரீதியாகவும், பணரீதியிலும் கடுமையான இழப்புகள் ஏற்படுகிறது. கலப்படம் நுகர்வோரது உடல்நலத்தை பெரிதும் பாதிப்பதால், அது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.
(iii) போலியான பொருட்கள் :
மக்கள் மத்தியில் பிரபலமடைந்த வணிகக் குறியுடைய பொருட்களுக்கு அதே போன்ற போலியான பொருட்கள் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டு மோசடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தானியங்கி (ஆட்டோமொபைல்) வாகன உதிரிபாகங்கள், பிளேடுகள், கைக்கடிகாரங்கள், பேனாக்கள், வானொலிப்பெட்டிகள், மருத்துவ மருந்துப் பொருட்கள், நகைகள், துணிகள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் கூட கள்ளத்தனமாக, போலியாகத் தயாரிக்கப்பட்டு இமயம் முதல் குமரி வரை எங்கும் நீக்கமற தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
(iv) செயற்கையான பற்றாக்குறை:
சில சூழ்நிலைகளில் வணிகர்கள் தங்களின் வணிக நிறுவனங்களின் சரக்குகளை இருப்பு வைக்கும் இடங்களில் போதுமான அல்லது தேவைக்கு அதிகமான அளவு சரக்குகளை இருப்பு வைத்திருந்தாலும் கூட தங்கள் கடைகளின் முகப்பில் இருப்பு இல்லை எனும் பெயர்ப்பலகையை வைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் நுகர்வோர் தங்களின் தவிர்க்க இயலாத தேவையின் அடிப்படையில் அப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
(v) தரக்குறைவு :
கட்டுமானம் செய்து முத்திரையிடப்பட்ட கொள்கலன்களை திறந்தால் அதில் அடைக்கப்பட்டுள்ள பொருட்கள் தரம் குறைந்ததாகவும், கெட்டுப்போனதாகவும், நிகர எடை கொள்கலனில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பதையும் காணமுடிகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards