12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
தொழில் முனைவோரின் பல்வேறு பணிகளை கூறி விளக்குக.
2.
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி. (ஏதேனும் 5)
3.
தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
4.
தொழில் முனைவோரின் சிறப்பு இயல்புகள் யாவை? (ஏதேனும் 5)
5.
தொழில் முனைவோரை வகைப்படுத்துக.
1.
I. தோற்றுவிப்பு பணிகள்:
i) வாய்ப்புகளைக் கண்டறிதல்:
(i) எந்தெந்த தொழிலில் நுழைந்தால் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும் என எப்பொழுதும் சிந்திக்க வேண்டும்.
(ii) எந்த செயல்வினை (தொழில்) பலனளிக்கும் என ஆராய்ந்து அதை தேர்வு செய்வது முதல் பணி.
ii) தொழிலின் நோக்கத்தை தீர்மானித்தல்:
தான் நுழைந்த தொழிலின் நன்மை மற்றும் உற்பத்தி தொழிலா, வணிகத் தொழிலா என்பதை முடிவு செய்து நோக்கத்தை தீர்மானிக்க வேண்டும்.
iii) ஆழ்ந்த பகுப்பாய்வு:
தொழில் முனைவோர் உற்பத்தி செய்ய நினைத்துள்ள பொருளை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் என்ன? அதை எவ்வாறு பெறுவது? எனவும் ஆய்வு நடத்திட வேண்டும்.
iv) தொழில் நிறுமத்தின் அமைப்பு முறையினை தேர்வு செய்வது:
தொழில் முனைவோர் தான் துவங்க விரும்பும் தொழில் தனியாள் வணிகமா, கூட்டாண்மையா அல்லது கூட்டுறவு அமைப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
v) தொழில் துவங்கும் சடங்கு முறைகள்:
பொருத்தமான தொழில் அமைப்பு தேர்ந்தெடுத்த பின்னர், அவற்றை ஏற்படுத்த பல சடங்கு முறைகள் உள்ளன.
எ.கா: தனியாள் வணிகம் - சட்ட சடங்குகள் பெரியதாக இல்லை
கூட்டாண்மை - பத்திரம் தயாரித்து பதிவு செய்தல்
நிறுமம், கூட்டுறவு - ஏராளமான சட்ட சடங்குகள்
vi) தொழில் திட்டம் தயாரித்தல்:
(i) தொழில் திட்டம் ஒரு செயல் ஆவணமாகும். தொழில் முனைவோர் இதனை தயாரிக்க வேண்டும்.
(ii) இத்திட்டத்தின் மூலமே தான் மேற்கொள்ள இருக்கும் தொழிலின் நோக்கங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அடைய முடியும்.
vii) நிதி திரட்டுவது:
(i) தொழிலை தொடங்க தேவைப்படும் நிதியை தீர்மானிக்க வேண்டும்.
(ii) நிதியை சொந்த சேமிப்பு, நண்பர்கள், உறவினர்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து பெறலாம்.
(iii) எனவே நிலைமுதல் மற்றும் நடைமுறை முதலை பெறும் மூல ஆதாரங்களை அடையாளம் காண வேண்டும்.
viii) கருவிகள் மற்றும் கச்சாப்பொருட்களை பெறுதல்:
பொருட்களை தயாரிக்க உதவும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் எங்கு கிடைக்கும் என ஆராய வேண்டும்.
II. மேலாண்மை பணிகள்:
i) திட்டம் தீட்டுதல்:
மேற்கொண்ட தொழிலானது தனது இலக்கினை நோக்கி செம்மையாக சென்றிட திட்டமிடுதல் வேண்டும்.
ii) அமைப்புப் பணி:
தொழில் திட்டத்தினை அரங்கேற்ற தேவைப்படும் தொழில் அமைப்பினை தேர்வு செய்தல், அகக் கட்டமைப்பு முறையை வடிவமைத்தல், துறைகளை உருவாக்குதல், அதிகார ஒப்படைப்பு செய்தல் போன்ற அலுவலக நடைமுறை செயல்படுத்த வேண்டும்.
iii) கட்டளை இடுதல்:
i) தொழில் முனைவோர் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களை செம்மையாக வழிநடத்திச் செல்ல வேண்டும் மற்றும் ஊடகப்படுத்த வேண்டும்.
ii) அனைத்து பணியாளர்களுக்கு தங்களது ஒதுக்கப்பட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்ற நல்ல தலைமையை நல்க வேண்டும்.
iv) கட்டுப்பாடு காத்தல்:
ஊழியர்கள் நல்ல முறையில் வேலை செய்கிறார்களோ, அனைத்து பணிகளும் நல்ல முறையில் நடக்கிறதா என உறுதி செய்ய நல்ல தலைமையை நல்க வேண்டும்.
v) ஒருங்கிணைப்பு:
தொழில் முனைவோர் பலதரப்பட்ட துறைகளின் தனிப்பட்ட செயல்பாடுகளை ஒன்றுபடுத்தி அவற்றை தொழிலின் இலக்கை நோக்கி திருப்ப வேண்டும்.
III. வணிகப் பணிகள்:
i) உற்பத்தி அல்லது தயாரிப்பு பணி:
எந்த இடத்தில் தொழிலை நிறுவுவது, தொழிலை நிறுவிய இடத்தின் உள் அமைப்பு, எவ்வளவு பொருள், எவ்வளவு அளவு, பொருளின் வடிவம் போன்ற உற்பத்தி தொடர்பான பணிகளை முடிவு செய்து செயலில் இறங்க வேண்டும்.
ii) சந்தையிடுகை:
பொருள் உற்பத்தி செய்வதற்கு முன் தொடங்கி வாடிக்கையாளர் வசம் கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொழில் முனைவோர் எடுக்க வேண்டும்.
iii) கணக்கியல் பணி:
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தொழில் நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டம் மற்றும் நிதி நிலையும் கணக்கிட வேண்டும்.
iv) நிதி சார் பணி:
நிதி சார் பணியைப் பொறுத்தவரை தொழில் முனைவோர் நிதியூட்டும் முறையினை முடிவு செய்ய வேண்டும்.
v) மனிதவள பணிகள்:
தொழில் முனைவோர் தான் மேற்கொண்டுள்ள தொழிலை செயல்படுத்த எவ்வளவு மனித சக்தி தேவைப்படும் என திட்டம் தயாரிக்க வேண்டும்.
2.
மகளிர் தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : மகளிர் தொழில் முனைவோர்கட்கு மேற்குறிப்பிட்டவாறு ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் என பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அவைகளில் சிலவற்றை கீழே விவாதிப்போம்.
(i) நிதிப்பிரச்சினை: மகளிர் தொழில் முனைவோர்களுக்கு தங்களின் தொழில் வினையில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. தங்களின் பெயரில் சொத்துக்கள் இல்லாத மகளிர் உரிமையாளர்கள் பிணைக்கடன் பெறுவதில் பெரும் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
(ii) இயக்கத்தடை : மகளிர் தொழில் முனைவோர்கள்
நமது நாட்டு கலாச்சாரப்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய சூழலில் வீட்டுப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டியுள்ளது. என்னதான் தொழில் உரிமையாளராக மகளிர் உயர்ந்தாலும் தாயாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, மாமியாராக, பாட்டியாக தன்னுடைய கடமைகளை தட்டிக்கழிக்க முடிவதில்லை. தொழிலை துவங்கிய பின் பல்வேறு காரணங்களுக்காக மகளிர் வெளியில் செல்ல முடிவதில்லை.
(iii) கல்வியறிவு இன்மை : ஏட்டறிவு இல்லா அல்லது குறைவாக படித்துள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் வியாபாரம் அல்லது தொழில் தொடர்பான கருத்துக்களை முழுவதாக புரிந்து கொள்ள முடியாதவராக உள்ளனர். உதாரணமாக கணக்கை பராமரித்தல், பணம் கொடுக்கல் வாங்கலை கணக்கு வைத்துக் கொள்ளுதல், பொருளை சந்தையிடத் தொழில்நுட்ப கருத்துக்களை உள்வாங்குதல் போன்ற பல தரப்பட்ட செய்திகளை தெளிவாக விளங்கிக் கொள்ள குறைவான படிப்பு அல்லது படிப்பறிவு இன்மை மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.
(iv) ஆதரவு இன்மை : மகளிர் தொழில் முனைவோர் செம்மையாக தன் வினையை செயல்படுத்த பலதரப்பட்ட மக்களின் கனிவு, பரிவு மற்றும் ஆதரவு இவைகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக கணவன், பிள்ளைகள், பெற்றோர்கள், வாழ்க்கைப்பட்ட இடம், நண்பர்கள், அயல் அண்டையில் வசிப்பவர்கள் என பலரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
v) கடும்போட்டி : தாராளமயமான போட்டி உலகில் மகளிர் தொழில் முனைவோர்கள் பெரிய நடுத்தர தொழில்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றனர். போட்டியை வலுவாக எதிர்கொள்ள விளம்பரம் மற்றும் விற்பனைப் பெருக்க யுக்திகளை கையாள வேண்டியுள்ள சூழ்நிலையில் மகளிர் தொழில் முனைவோர்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
3.
| வ.எண் | அடிப்படை | தொழில் முனைவோர் | அகத்தொழில் முனைவோர் |
| (i) | சிந்தனை | தொழில் முனைபவர் ஒரு தடையற்ற சிந்தனைவாதி | அகத்தொழில் முனைபவர் தன்னிச்சையான சிந்தனைவாதி, ஆனால் ஒரு தொழில் நிறுமத்தின் உள் செயல்படுபவர். |
| (ii) | சார்புநிலை | தன்னிச்சையான நபர் | தொழில் முனைவோரை சார்ந்து இருப்பவர். |
| (iii) | நிதி திரட்டல் | தொழில் முனைவோர் தன் சொந்த முயற்சியில் தொழிலுக்கான நிதியை திரட்ட வேண்டும். | இவருக்கு நிதி திரட்டும் பொறுப்பு இல்லை. ஆனால் திரட்டிய நிதியை கையாளும் பொறுப்பு உள்ளது. |
| (iv) | வெகுமதி | தொழில் முனைவோர் தங்களின் இடர் ஏற்பு பணிக்காக இலாபம் என்ற வெகுமதியை பெறுகின்றனர். | அகத்தொழில் முனைவோர்க்கு இலாபத்தில் பங்கு இல்லை. ஆனால் ஊதியம், ஊக்க ஊதியம் மற்றும் மேம்படிகள் பெற வாய்ப்பு உண்டு. |
| (v) | இடர் ஏற்றல் | தான் ஆரம்பித்த தொழிலின் இடரை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. | இவர் தொழில் தொடர்பாக எழும் இடர்பாட்டில் பங்கு பெறுவதில்லை. தான் மேற்கொண்ட செயல் திட்டம் தோல்வி நிலைக்கு பொறுப்பு ஏற்பதில்லை. |
| (vi) | தகுநிலை | தொழில் முனைபவர் உரிமையாளர் என்ற தகுநிலை படைத்தவர். | அகத்தொழில் முனைவோர் உரிமையாளர் அல்ல; ஆனால் ஊழியர் தான் மேற்கொண்ட செயலுக்கு தன்னுடைய மேல் அதிகாரிக்கு பதில் சொல்ல கடமையுடையவர். |
| (vii) | செயல்பாடு | தான் தொடங்கிய தொழிலின் புறத்தின் நின்று பெரும்பாலும் செயல்படும் நபர். | முழு நிறுமத்திற்கு உட்பட்டு இயங்கும் நபர். |
4.
தொழில் முனைபவரின் சிறப்பியல்புகள்:
(i) தொழில் துணிகர உணர்வு : தொழில் முனைபவர் தான் மேற்கொண்ட தொழிலில் ஏற்படும் இடர்களை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். வினையை நடத்தி வரும்போது ஏற்படும் இயற்கையான ஏமாற்றங்கள் அல்லது தோல்விகள் அவரின் ஆர்வத்தை சிதைக்கா வண்ணம் துணிவுடன் செயல்படுவோர் ஆவார்.
(ii) தன்னம்பிக்கை : தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு அழகு ஏற்படுத்துகிறது. எதிர்மறை உணர்வுகளான அசௌகரியங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் தொல்லைகள் தொழில் முனைபவரது மன உறுதியை குலைக்கக் கூடாது.
(iii) நெகிழ்வு தன்மை : மாறும் சூழ்நிலைகட்கு ஏற்ப தொழில் முனைபவன் தன் முடிவை அல்லது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வு தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். நெகிழ்வுத் தன்மையற்றவர்கள் தொழில் முனைவில் வெற்றி காண்பது இயலாத ஒன்றாகும்.
(iv) புதுமை புகுத்தல் : தொழில் முனைபவர் புதுமை படைப்பாளராக இருந்திட வேண்டும். ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்தி சந்தையில் நிரந்தரமான இடத்தை பிடிக்க வேண்டும். புதுமை என்பது புத்தம் புதிய பொருளாகவோ, புதுமைப் பண்புகளை பொருளில் நுழைப்பதோ, புதிய சந்தையை உருவாக்குவதோ, புதிய கச்சாப் பொருளைக் கொண்டு பொருளை உற்பத்தி செய்வதோ, புதிய உற்பத்தி முறையை கையாள்வதோ மற்றும் புதிய நுட்பத்தை மேற்கொள்வது.
(v) வளத்தை திரட்டுபவர் :
1. தான் மேற்கொண்ட செயலை செயலாக்கிட தொழில் முனைபவர் புலனாகக்கூடிய மற்றும் புலனாகாத உட்பொருட்களையும் ஒன்றிணைப்பவர் ஆவார்.
2. தொழிலை துவக்கிட இடு பொருளை வாங்குதல், மனித வளத்தை திரட்டுதல், நிதியை புரட்டுதல், போன்ற நடவடிக்கைகளை நாட்டின் மூலை முடுக்குகளுக்கு சென்று சேரும் வகையில் பொருளை உற்பத்தி சந்தையிடுகைக்கு கொண்டு சேர்க்கும் செயலை செய்பவர் ஆவார்.
(vi) கடின உழைப்பு: தொழில் முனைபவர் தான் மேற்கொண்ட செயலின் நோக்கத்தை அடைய அரும்பாடு படவேண்டும். தொல்லைகள், இடர்கள், அசௌகரியங்கள், இன்னல்கள் மற்றும் ஏமாற்றங்கள் என அவ்வப்போது ஏற்படும் இடர்களை தளராமல் மேற்கொள்ளுதல். தலைவிதியின் மீது பழிபோடுவதோ அல்லது பிறவற்றின் மீது பழி சுமத்தி சுகம் காண்பவராகவோ இருக்கக் கூடாது.
5.
கிளாரன்ஸ் டான்ஹாப் என்பவர் தனது அமெரிக்க விவசாயம் மீதான ஆய்வின் அடிப்படையில் தொழில் முனைவோரை வகைப்படுத்தியுள்ளார். அவை
1. புத்தாக்க தொழில் முனைவோர்:
(i) உற்பத்தி நடைமுறையில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்துபவர்கள்.
(ii) தீவிர பரிசோதனை குணாதிசயங்களைக் கொண்டவர்.
(iii) போட்டித் தன்மையும், புதியவற்றை கண்டுபிடிக்கும் ஆற்றலும் பெற்றவர்கள்.
2. பிறரை பின்பற்றும் தொழில் முனைவோர்:
(i) புத்தாக்க தொழில் முனைவோர் அறிமுகப்படுத்தும் புத்தாக்கங்களை வெற்றிகரமாக கையாள்பவர்.
(ii) இவர் மாதிரிகளை பின்பற்றும் என்றும் அழைக்கப்படுகிறார்.
3. காலம் கடத்துகின்ற தொழில் முனைவோர்:
(i) எந்த ஒரு மாற்றத்தையும் நடைமுறைப்படுத்தும் பொழுது அதிக எச்சரிக்கையுடனும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருப்பார்கள்.
(ii) இவர் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த விரும்பமாட்டார்.
(iii) இவர்கள் இயல்பிலே தங்கள் முன்னோர்களின் பாதச் சுவடுகளை பின்பற்றுபவர்களாக உள்ளவர்.
4. சோம்பேறி (அ) சுறுசுறுப்பற்ற தொழில் முனைவோர்:
(i) உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தவும், பின்பற்றவும் மாட்டார்.
(ii) தொழிலில் நட்டம் ஏற்பட்டாலும் உற்பத்தி முறைகளில் மாற்றம் கொண்டு வருவதில்லை.
(iii) இவர்கள் பழமை முறையில் உற்பத்தியை மேற்கொள்ளும் சோம்பேறிகள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards