12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
பொதுமக்கள் பற்றி நுகர்வோர் விழிப்புணர்வு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
2.
தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை விளக்குக.
3.
மாவட்ட மன்றம் என்ற பதத்தை விளக்கவும்.
4.
மாநில ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை விளக்குக.
5.
தேசிய ஆணையத்தின் ஒட்டு மொத்த பணிகளை விரிவாக விளக்குக.
1.
(i) நுகர்வோர் தங்கள் உரிமையை அறிந்து கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் நுகர்வோரின் தலையாய கடமையாகும்.
(ii) இந்த நோக்கத்தை அடைவதற்கு கீழ்க்கண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1. நுகர்வோர் குறித்த இதழ்கள், ஆராய்ச்சி நூல்கள், பிரசுரங்கள், கையேடுகள், துண்டுச் சீட்டுகள், ஆய்வுக் கட்டுரைகள் இவைகளை அச்சிட்டு வெளியிடுதல்.
2. நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம், மாநாடு மற்றும் பட்டறைகள் நடத்துதல்.
3. நுகர்வோருக்கு அவருடைய உரிமை குறித்து அறிவை புகட்டுதல்.
4. பெண்களுக்கு நுகரீயம் (Consumerism) கல்வியை வழங்குதல்.
குறைதீர்ப்பு செயல்திறனை மேம்படுத்துதல் :
1. பல்வேறு பொருட்கள் தரத்தை அறிய தேவைப்படும் செய்திகளை அறிவது.
2. பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை மாதிரிக்கு எடுத்துச் சென்று அவைகளை தரசோதனைக்கு உட்படுத்தி தரநிலைபாடுகளை பொதுமக்களுக்கு அறிவிப்பது.
3. இதன்மூலம் பொருட்களை வாங்குபவர்கள் தாங்கள் வாங்க விரும்பும் பொருட்களின் உண்மையான தரத்தை அறிந்து வாங்க முடிகிறது.
4. நுகர்வோர்கள் பொருட்கள் குறித்து புகார் அளிக்காத பொழுது தன்னார்வ அமைப்புகள் புகார் அளித்து பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
5. பதுக்கல், கலப்படம், கள்ளச்சந்தை மற்றும் குறைவான எடையில் பொருட்களை தருதல் போன்றவற்றிற்கு எதிராக நுகர்வோரை ஒன்றுதிரட்டி போராடச் செய்தல்.
6. பல்வேறு நுகர்வோர் நல அமைப்புகளை ஒன்றுதிரட்டி தன்னார்வ நிறுவனங்கள் நுகர்வோருக்கு நற்பணியாற்றி வருகின்றன.
7. நுகர்வோருக்கு எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் மற்றும் அரசுக்கு ஆதரவு நல்குதல்.
2.
(i) பொருட்களை வாங்கி பயன்படுத்தும் ஒரு தனிநபரோ அல்லது ஒரு குடும்பமோ நுகர்வோராக இருக்கலாம்.
(ii) தன்னார்வ நுகர்வோர் அமைப்பு என்பது நுகர்வோரின் உரிமை மற்றும் நலனை பாதுகாத்திட ஏற்படுத்தப்பட்ட அமைப்பை குறிக்கும்.
பணிகள்:
(i) இந்த துறையினுடைய தலையாய நோக்கம் இந்தியாவில் உள்ள நுகர்வோரைப் பாதுகாக்க இந்த துறை நுகர்வோர் குறித்த விழிப்புணர்வை அகில இந்திய அளவில் பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் பெருக்கி வருகிறது.
(ii) நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்கு வழிகாட்டுவது மற்றும் ஆலோசனை வழங்குவது மற்றும் குறைகளை தலையீடு செய்து தீர்ப்பது.
(iii) தன்னார்வ நுகர்வோர் அமைப்பு நுகர்வோர் நல நிதியிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை ஆய்வு செய்யும் செயல் திட்டங்களுக்கு நிதி உதவி செய்கிறது மற்றும் பொருட்களின் தர சோதனைக் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகளை பொது மக்களுக்கு வெளியிட்டு, நுகர்வோருக்கு பலதரப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
(iv) தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் தங்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். அரசு குடிமக்களிடம் கொண்டுள்ள தொடர்பினை இணையதளம் மூலமாக வெளிப்படையாக அறிவித்தல்.
3.
1. 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதன் பிரிவு 9ன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மன்றம் ஏற்படுத்தப்பட்டது.
2. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட நுகர்வோரின் நலனை பாதுகாப்பது இதன் நோக்கம்.
உறுப்பினர்கள் :
1. தலைவர் \(\rightarrow \) மாவட்ட நீதிபதியாவதற்கு தகுதியடைய நபர்.
2. உறுப்பினர்கள் \(\rightarrow \) 2 பேர் \(\rightarrow \) கணக்கியல், தொழில்துறை, பொது விவகாரங்கள் அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி போதுமான அறிவு உடையவர்கள்.
இரு நபர்களில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.
அதிகார எல்லை :
1. சரக்குகள் அல்லது சேவைகளில் மதிப்பு மற்றும் இழப்பீட்டு தொகை 20 இலட்சத்திற்கு குறையாக உள்ள நட்ட ஈடு கோரும் கோரிக்கைகளை மட்டுமே கையாள வேண்டும்.
அதிகாரம் :
1. மாவட்ட மன்றத்திற்கு வரும் ஒவ்வொரு வழக்குகளும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 193 மற்றும் 228 ஆகியவற்றின் உட்பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற நடவடிக்கையாக கருதப்படும்.
2. மாவட்ட மன்றங்கள் உரிமையியல் நீதிமன்றங்களாக கருதப்படும்.
மேல் முறையீட்டு மன்றம் :
மாவட்ட கருத்துக்களம் மாநில ஆணையத்திற்கு அனுப்பிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு செய்ய முடியும்.
4.
(i) நோக்கத்திற்காக வணிக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஆணையம் என்ற பெயரில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
(ii) இந்த அமைப்பு நுகர்வோர் குறைபாட்டு தீர்ப்பாணையம் என அழைக்கப்படுகிறது.
அதிகாரம்
(i) மாநில மன்றம் விசாரித்த புகார்கள் அல்லது தன்வசம் விசாரணையில் உள்ள புகார்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பெற்று ஆழ்ந்த விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
(ii) கணக்கு ஏடுகள் ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநில நுகர்வோர் தன்வசம் வைத்துக்கொள்ளவும் அல்லது மேற்கூறிய இந்த ஆவணங்களை குறைதீர்ப்பு முகமத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பார்வைக்கோ அல்லது ஆய்வுக்கோ வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.
(iii) மேற்கூறிய முகமையின் அதிகாரிகளுக்கு சட்டத்தின் நோக்கத்திற்காக தேவைப்படும் தகவல்களை வழங்கும் அதிகாரம்.
5.
தேசிய ஆணையம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ன் கீழ் ஒரு பகுதி நீதிமன்றமாக 1988ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையலுவலகம் புதுடெல்லியில் இயங்கி வருகிறது. இத்தீர்ப்பாணையம் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவராக கொண்டு இயங்கி வருகிறது. இவ்வமைப்பு தேசிய தீர்ப்பாணையம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
உறுப்பினர் (Members):
தேசிய குறை தீர்ப்பு ஆணையம் அறிவிப்பின் மூலம் நிறுவப்பட்ட இவ்வமைப்பின்
1. 5 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2. அவர்களில் ஒருவர் நீதி துறையை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
3. ஏனைய நபர்கள் பிற துறைகளில், அறிவு, ஆற்றல், அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
4. இவ்வமைப்பில் பெண் உறுப்பினர் இருக்க வேண்டும்.
அதிகார எல்லை (Jurisdiction):
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 21 ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரம் பெற்றுள்ளது.
1. ரூபாய் 1 கோடிக்கு எஞ்சிய புகார் மனுக்களை விசாரித்தல்.
2. மேல்முறையீட்டின் மனுவினை விசாரித்தல் மற்றும் மாநில தீர்ப்பாணையம் அறிவித்த தீர்ப்பாணையை மாற்றுதல்.
3.மாவட்ட மன்றம் மற்றும் மாநில தீர்ப்பாணையத்திடமிருந்து தேவையான ஆவணங்களை கேட்டு பெற்று, அதனடிப்படையில் உரிய ஆணைகள் பிறப்பித்தல்.
அதிகாரங்கள்:
(i) தேசிய தீர்ப்பாணையம் புகார் மனுக்களை விசாரிக்கும் முறைகளில் ஒருமித்த செயல்முறைகளை பின்பற்ற தனது அதிகாரத்தை செலுத்துதல்.
(ii) எதிர்கட்சிகளுக்கு ஒரு கட்சியால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் படிகளை வழங்குவதில் முன்னுரிமை.
(iii) தேசிய ஆணையத்தால் விரைவாக ஆவணப் படிகளை வழங்கப்பட ஆணை பிறப்பித்தல்.
(iv) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட தனது அதிகாரங்களை பயன்படுத்துதல், ஆணையம் மற்றும் மாவட்ட மன்றங்களின் செயல்பாட்டை அவர்களின் தன்னிச்சையாக செயல்பட அவைகளின் அதிகாரத்தில் தலையிடாது இருத்தல்.
மேல்முறையீட்டு மன்றம்:
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 பிரிவு 23ன் கீழ் தேசிய தீர்ப்பாணையம் கொடுத்த தீர்ப்பினை எதிர்த்து பாதிக்கப்பட்ட நபர் தீர்ப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards