12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
பல்வேறுபட்ட நிதிச்சார் சந்தையின் வகைகளை கூறி விளக்குக.
2.
நிதிச் சந்தையின் பணிகள் யாவை?
3.
நிதிச் சந்தையின் பங்கினை விவாதிக்கவும்.
4.
பல்வேறு வகையான நிதிச் சந்தைகளை விவரிக்க. (ஏதேனும் 5)
5.
முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. (ஏதேனும் 5)
1.
அ) நிதி கோருதல் வகையின் அடிப்படையில்:
i) கடன் சந்தை:
கடன் கருவிகளை வர்த்தகம் செய்வதற்கான நிதிச் சந்தை கடன் சந்தை ஆகும்.
ii) சமநிலை பங்குச் சந்தை:
நிறுவனம் சமநிலை பங்குகளின் வர்த்தகத்திற்கான நிதிச் சந்தை சமநிலை பங்குச் சந்தை ஆகும்.
ஆ) நிதி கோருதலின் முதிர்வு அடிப்படையில்:
i) பணச் சந்தை:
குறுகிய கால ஓராண்டு அல்லது அதற்கு குறைவாக நிதி கோருதலுக்கான நிதிச் சந்தை பணச் சந்தை ஆகும்.
எ.கா. கருவூலச் சீட்டுகள், வணிகத் தாட்கள், வைப்புச் சான்றிதழ்கள்
ii) மூலதனச் சந்தை:
நீண்ட கால, ஓராண்டுக்கு மேல் நிதி கோருதலுக்கான சந்தை மூலதனச் சந்தை ஆகும்.
இ) நிதி கோருதலின் வெளியீட்டுக் கால அடிப்படையில்:
i) முதல் நிலைச் சந்தை:
(1) நிறுவனங்கள் முதன் முதலில் பத்திரங்களை விற்பனை செய்வது அல்லது வெளியிடுவது முதல் நிலைச் சந்தை ஆகும்.
(2) இதில் பணம் முதலீட்டாளர்களிடமிருந்து நேரடியாக நிறுவனங்களுக்குச் செல்கிறது.
ii) இரண்டாம் நிலைச் சந்தை:
ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை ஆகும்.
ஈ) நிதி கோருதலின் வழங்கலின் கால அடிப்படையில்:
i) ரொக்கம் (அ) உடனடிச் சந்தை:
(1) ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடிச் சந்தை ஆகும்.
(2) தீர்வு உடனடியாக நடைபெறுகிறது.
ii) முன்னோக்கிய (அ) எதிர்காலச் சந்தை:
(1) சொத்து வழங்கலும், ரொக்கம் செலுத்தலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு எதிர்காலத்தில் நடைபெறும் சந்தை எதிர்கால சந்தை ஆகும்.
(2) பின்னொரு நாட்களில் பொருட்களை மாற்றிக் கொள்வதற்காக இன்றே விலை முடிவு செய்து கொள்ளும் சந்தையாகும்.
உ) நிதிச் சந்தை அமைப்பின் அடிப்படையில்:
i) பரிமாற்ற வர்த்தகச் சந்தை:
ஒரே ஒழுங்கு நடைமுறைகளைக் கொண்ட மைய அமைப்பு (பங்கு மாற்றகம்) ஆகும்.
ii) உடனடி சந்தை:
வழக்கமான நடைமுறைகளைக் கொண்ட பரவலாக்கப்பட்ட சந்தை ஆகும்.
2.
இடைநிலையர் பணிகள்:
அ) வள ஆதாரங்களின் பரிமாற்றம்:
நிதிச் சந்தைகள் பொருளாதார மூல வளங்களை கடன் தருபவர்களிடமிருந்து கடன் பெறுபவர்களுக்கு மாற்ற உதவி புரிகின்றது.
ஆ) வருவாயை அதிகரித்தல்:
நிதிச் சந்தைகள் கடன் வழங்குபவர்கள். அவர்களின் உபரி நிதிநிலை முதலீடு செய்வதன் மூலம் வட்டி / பங்காதாயம் ஈட்ட அனுமதிக்கிறது. இது தேசிய வருமானத்தை அதிகரிக்க பங்களிப்பை வழங்குகிறது.
இ) ஆக்கப்பூர்வ பயன்பாடு:
நிதிச் சந்தை பெற்ற கடன் நிதியை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது தேசிய மொத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஈ) மூலதன உருவாக்கம்:
நிதிச் சந்தைகள் புதிய சேமிப்பு ஓட்டம் மூலம் ஒரு நாட்டின் மூலதன உருவாக்கத்திற்கு உதவி புரிய வழிவகை செய்கிறது.
உ) விலை தீர்மானம்:
வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கலந்துரையாடல் மூலம் நிதி சார்ந்த சொத்துக்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தேவை மற்றும் அளிப்பு அடிப்படையில் பொருளாதாரத்தில் நிதிகளை பங்கீடு செய்வதற்கு நிதிச் சந்தை வழி வகுக்கிறது.
ஊ) விற்பனை வழிமுறைகள்:
நிதிச் சந்தைகள், முதலீட்டாளர்கள் நிதிச் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு வழிமுறைகளை வழங்குகிறது.
எ) தகவல்கள்:
நிதிச் சந்தையில் பங்கேற்பாளர்களின் நடவடிக்கைகள் சந்தையின் பல்வேறு பகுதிகளில் தகவல்களை உற்பத்தி செய்ய மற்றும் பரவலாக்க வழி வகுக்கிறது.
நிதிச் சார்ந்த பணிகள்:
அ) கடன் வாங்குபவர்களுக்கு நிதியை வழங்குகிறது. இதன் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.
ஆ) கடன் வழங்குபவர்கள் சொத்துக்களை ஈட்ட வழிவகை செய்கிறது. இதன் மூலம் சொத்துக்களை உற்பத்தி சார்ந்த துணிகர முயற்சியை பயன்படுத்தி செல்வம் ஈட்ட முடிகிறது.
இ) சந்தையில் நீர்மைத் தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் நிதியை வணிகம் செய்ய உதவுகிறது.
3.
நிதிச் சந்தையின் பங்கு:
நிதிச் சந்தையின் பங்கு பொருளாதாரத்தின் துரித வளர்ச்சியின் முக்கிய தேவைகளில் ஒன்று சுறுசுறுப்பான மற்றும் செழிப்பான நிதிச்சந்தை ஆகும். ஒரு நிதிச் சந்தை பின்வரும் வழிகளில் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவி செய்வதால் அது மிகப்பெரும் பயனாக திகழ்கிறது.
(அ) சேமிப்பை பெருக்குதல் (Savings Mobilization):
சேமிப்பாளர்கள் (அ) தனிநபர்கள், வணிக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு போன்ற உபரி அலகுகளிடமிருந்து நிதிகளை பெறுவதன் மூலம் நிதிச் சந்தை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
(ஆ) முதலீடுகள் (Investment):
நிதி முதலீடுகளை வசூலிப்பதிலும் அவற்றை தேவை உள்ளவர்களுக்கு வழங்குவதிலும் நிதிச் சந்தை' முக்கியப் பங்கு வகிக்கிறது.
(இ) தேசிய வளர்ச்சி (National Growth):
நிதிப் பற்றாக்குறை உள்ள நிறுவனங்களுக்கு உபரி நிதிகள் தடங்கலின்றி நடமாட்டம் செய்ய உறுதி செய்வதன் மூலம் ஒரு தேசத்தின் வளர்ச்சியில் நிதிச் சந்தை பங்களிப்பை வழங்குகிறது. நிதி ஆக்க பூர்வமான நோக்கில் பயன்படுத்த வழிவகை செய்கிறது. இது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
(ஈ) தொழில்முனைவோர் வளர்ச்சி (Entrepreneurship Growth):
தேவையான நிதி வளங்களை தொழில் முனைவோர்களுக்கு கிடைக்க பெறுவதன் மூலம் அதன் மேம்பாட்டிற்கு நிதிச் சந்தை பங்களிக்கிறது.
(உ) தொழிற்துறை மேம்பாடு (Industrial Development):
நிதிச் சந்தையின் பல்வேறு கூறுகள் ஒரு நாட்டின் தொழிற்துறையின் துரித வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி புரிகிறது. இதன் மூலம் சமுதாயத்தின் வாழ்க்கை தரம் மற்றும் நல்வாழ்வை உயர்த்துகிறது.
4.
(அ) நிதி கோருதல் வகையின் அடிப்படையில் (On the Basis of Type of Financial Claim):
(i) கடன் சந்தை:
கடன் கருவிகளை வர்த்தகம் செய்வதற்கான நிதிச் சந்தை கடன் சந்தை ஆகும். அரசு பத்திரங்கள் (அ) பிணையங்கள், நிறுவன கடனீட்டு பத்திரங்கள் போன்றன.
(ii) நேர்மை பங்குச் சந்தை:
நிறுவன நேர்மை பங்குகளின் வணிகத்திற்கான நிதிச் சந்தை நேர்மை பங்குச் சந்தை ஆகும்.
(ஆ) நிதி கோருதலின் முதிர்வு அடிப்படையில் (On the Basis of Maturity of Financial Claim):
(i) பணச் சந்தை (Money Market):
குறுகிய கால, (ஓராண்டு அல்லது அதற்கு குறைவாக) நிதி கோருதலுக்கான நிதிச் சந்தை பணச் சந்தை ஆகும். எ.கா. கருவூலச் சீட்டுகள், வணிகத் தாட்கள், வைப்புச் சான்றிதழ்கள் ஆகியன.
(ii) மூலதனச் சந்தை (Capital Market):
நீண்ட கால (ஓராண்டுக்குமேல்) நிதி கோருதலுக்கான சந்தை மூலதன சந்தை ஆகும்.
எ.கா. பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள் போன்றவை.
(இ) நிதி கோருதலின் வெளியீட்டுக் கால அடிப்படையில் (On the Basis of Time of Issue of Financial Claim):
(i) முதல் நிலைச் சந்தை (Primary Market):
முதன்முதலில் புதியதாக பத்திரங்களை வெளியிடும் சந்தை முதல் நிலைச்சந்தை எனப்படுகிறது. இதில் பணம் முதலீட்டாளர்களிடமிருந்து நேரடியாக நிறுவனங்களுக்குச் செல்கிறது.
(ii) இரண்டாம் நிலைச் சந்தை (Secondary Market):
ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை ஆகும்.
இரண்டாம் நிலைச் சந்தையில் பங்கு மாற்றகம் ஒரு முக்கியமான நிறுவனம் ஆகும்.
(ஈ) நிதி கோருதலின் வழங்கலின் கால அடிப்படையில் (On the Basis of Timing of Delivery of Financial Claim):
(i) ரொக்கம் (அ) உடனடிச் சந்தை (Cash / Spot Market):
ஆவணங்களை வழங்கலும் ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடிச் சந்தை ஆகும்.
(ii) முன்னோக்கிய (அ) எதிர்கால சந்தை (Forward or Futures Market):
சொத்து வழங்கலும் ரொக்கம் செலுத்தலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு எதிர்காலத்தில் நடைபெறும் சந்தை எதிர்கால சந்தை ஆகும்.
(உ) நிதிச் சந்தை அமைப்பின் அடிப்படையில் (On the Basis of the Organizational Structure of this Financial Market):
(i) பரிமாற்றக வர்த்தகச் சந்தை (Exchange Traded Market):
ஒரே மாதிரியான ஒழுங்கு நடைமுறைகளை கொண்ட பங்கு மாற்றகம் பரிமாற்றக வர்த்தக சந்தை எனப்படுகிறது. இது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு.
(ii) எதிர்ச் சந்தை (Over the Counter Market):
வழக்கமான கொண்டு பங்கு மாற்றகத்தில் வெளியில் நடைபெறும் சந்தை எதிர்ச் சந்தை எனப்படுகிறது. இது ஒரு மையப்படுத்தப்படாத அமைப்பு
5.
| வ.எண் | ஒப்பீட்டு அடிப்படை (Basis for Comparison) |
புதிய வெளியீடுகள் சந்தை (New Issue Market) |
இரண்டாம் நிலை சந்தை (Secondary Market) |
|---|---|---|---|
| 1 | பொருள் | புதிய பங்குகளுக்கான சந்தை முதல் நிலை சந்தை எனப்படும். | முன்னர் வெளியிட்ட ஈடுகளை வணிகம் செய்யும் இடம் இரண்டாம் நிலை சந்தை எனப்படும். |
| 2 | கொள்முதலின் வகைகள் |
நேரடி | மறைமுகம் |
| 3 | நிதி | புதிய நிறுவனங்கள் மற்றும் இயங்கி கொண்டு இருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் பல்வகைபடுத்துதல் போன்றவற்றிற்கு நிதி வழங்குகிறது. | நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில்லை. |
| 4 | ஒரு பத்திரம் எத்தனை முறை விற்க முடியும்? | ஒரே ஒருமுறை | பலமுறை |
| 5 | வாங்குதல் மற்றும் விற்றல் | நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே | முதலீட்டாளர்களுக்கு இடையே |
| 6 | பங்குகளை விற்பதன் மீதான ஆதாயம் பெறும் நபர் | நிறுவனம் | முதலீட்டாளர்கள் |
| 7 | இடைநிலையர் | ஒப்புறுதியாளர்கள் | தரகர்கள் |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards