12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
விலைபெறா வணிகரிடமிருந்து கிடைக்கும் சரக்கின் மீதான உரிமையை விளக்குக.
2.
நிபந்தனை மற்றும் நம்புறுதிகளை வேறுபடுத்துக.
3.
சரக்கு விற்பனைச் சட்டத்தில் சரக்கினை வகைப்படுத்திக் காட்டுக.
4.
விற்பனை மற்றும் விற்பனை உடன்பாடு இடையேயுள்ள வேறுபாடுகளை தருக.
5.
விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக.
1.
1. பற்றுரிமை"
1. விலை முழுவதையும் பெறும் வரை சரக்கை தன் வசம் வைத்துக் கொள்ளும் உரிமை விலை செலுத்தப்படா வணிகருக்கு உண்டு.
2. இவ்வுரிமையை பெற கீழ்க்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
i) சரக்கின் உடைமையை விற்றவர் பெற்றிருக்க வேண்டும்.
ii) கடனுக்கு சரக்கை விற்றிருக்கக் கூடாது.
iii) வாங்குனர் நொடிப்பு நிலை அடைந்திருக்க வேண்டும்.
பற்றுரிமை இழப்பு:
i) விற்ற பொருளுக்கான விலையை தராத நிலையில் சரக்கை தான் நினைத்தபடி நிறுத்தி வைக்கவும். உரிமையை ஒப்பந்தம் போடும் பொழுதே எடுத்துக்கொள்ள தவறும் பொழுது.
ii) வாங்குநரோ அல்லது அவரின் முகவரோ பொருளின் உடமையை பெற்றுவிட்டால்.
iii) பற்றுரிமை செய்ய உரிமையை விற்பவர் விட்டுக் கொடுத்திருந்தால் மேற்கண்ட காரணங்களால் பற்றுரிமை இழக்கப்படுகிறது.
2. வழி இடைநிறுத்த உரிமை:
சரக்கு விற்பவரிடமிருந்து வாங்குபவரிடம் செல்லும் பொழுது அதை வழிமறித்து தன்வசம் கையகப்படுத்தும் உரிமை விலைபெறாத வணிகருக்கு உண்டு.
நிபந்தனைகள்:
அ) i) சரக்கு விற்பவரிடமோ அல்லது வாங்குபவரிடமோ இருக்க கூடாது.
ii) பொது சரக்கேற்றியிடம் பொருளை சேர்க்கும் நோக்குடன் ஒப்படைக்கப்பட்டு வழியில் சென்று கொண்டிருக்க வேண்டும்.
வழி இடைநிறுத்த உரிமை இழப்பு:
அ) சரக்கின் உடமையை வாங்குனருக்கோ அல்லது அவரின் முகவருக்கோ சரக்கேற்றி கொடுத்து விடும்பொழுது.
ஆ) பொருள் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்த பிறகு பொது சரக்கேற்றி நிறுவனம் வாங்குனருக்கோ அல்லது அவரின் முகவருக்கோ பொருள் வந்து சேர்ந்து விட்டது என்றும் அதனை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தகவல் தெரிவித்த பொழுது.
3. மறு விற்பனை உரிமை:
அ) விற்கப்பட்ட சரக்கு அழியும் தருவாயில் உள்ள போது
ஆ) பற்றுரிமை அல்லது வழிமறித்து பெறப்பட்ட சரக்கை வேறுநபருக்கு விற்கும் தனது எண்ணத்தை கூறிய பிறகும் வாங்குனர் அதற்கான விலையை செலுத்தாத பொழுது.
இ) மறு விற்பனை செய்யும் உரிமையை சரக்கு விற்பனை ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தால் வாங்குநருக்கு விற்பவர் அறிவிப்பு தர தேவையில்லை.
2.
| வ.எண் | வேறுபடுத்தும் கூறுகள் | நிபந்தனைகள் | நம்புறுதிகள் |
| 1. | பொருள் | ஒப்பந்தத்தின் கருப் பொருளாகத் திகழ்வது. | நம்புறுதி ஒப்பந்தத்திற்குத் துணையாக இருக்கிறது. |
| 2. | முக்கியத்துவம் | ஒப்பந்தத்தில் நிபந்தனையை மீறுவது ஒப்பந்தத்தை மீறுவதாகக் கொள்ளப்படுகிறது. | நம்புறுதியை மீறுவது ஒப்பந்தத்தினை மீறுவதற்கு ஒப்பாகாது. |
| 3. | உரிமை மாற்றம் | நிபந்தனை நிறைவேற்றாமல் உரிமை மாற்றம் நிகழ முடியாது. | நம்புறுதியை நிறைவேற்றாமல் உரிமை மாற்றம் நிகழ முடியும். |
| 4. | பரிகாரம் / தீர்வு | நிபந்தனை மீறுவதனால் ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தை நீக்கிக் கொள்வதுடன் நட்ட ஈடு கோரும் உரிமையைப் பெறுகிறார். | நம்புறுதியை மீறுவதனால் ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் நட்ட ஈடு கேட்கும் உரிமையை மட்டுமே பெற்றுள்ளார். |
3.
1. இருக்கின்ற சரக்கு:
1. ஒப்பந்தம் செய்யும்போது விற்பனையாளரின் கைவசம் உள்ள சரக்கு.
2. விற்பனை செய்ய முகவரின் வசம் ஒப்படைக்கப்பட்ட சரக்கு.
3. அடமானம் பெற்றவர் விற்கும் அடமானம் பெற்றவர் விற்கும் அடமான சொத்து.
அ) ஒப்பிய சரக்கு:
பல சரக்குகளில் இந்த சரக்குதான் வாங்க தேர்வு செய்கிறேன் என அடையாளம் காட்டப்பட்ட சரக்கு.
(எ.கா) பல சேலைகளை பார்த்து பச்சை வண்ணமுள்ள இந்த சேலைதான் வேண்டும் என அடையாளம் காட்டுவது.
ஆ) உறுதி செய்யப்பட்ட சரக்கு:
விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பு இன்னதுதான் என்று உணரப்பட்ட சரக்கு.
(எ.கா) திரு. மதன் என்பவர் ராஜ் என்பவரிடம் பைக் வாங்க செல்கிறார். அங்கு Show room இல் பைக் காண்பிக்கப்படுகிறது. என்ன பைக் வாங்க வேண்டும் என முடிவெடுக்காத நிலையில் அங்கு காட்டப்பட்ட அனைத்து பைக்குகளும் உறுதியிடா சரக்கு.
2. எதிர்கால சரக்கு:
ஒப்பந்தம் செய்யும் போது தன் கைவசம் இல்லாத ஆனால் எதிர்காலத்தில் உற்பத்தி செய்வதோ அல்லது பிறரிடமிருந்து வாங்கியோ தரப்படும் சரக்கு.
(எ.கா) 1. இராஜன் என்பவர் கோபால் என்பவரிடம் 100 மூட்டை அரிசி அடுத்தமாதம் நடைபெறும் திருமண விழாவிற்கு தருவதாக உடன்படுகிறார்.
2. இந்நிலையில் அரிசி என்ற பொருள் எதிர்கால சரக்கைக் குறிக்கும்.
3. வருநிகழ்வு சார் சரக்கு:
1. இது ஒரு வகை எதிர்கால சரக்கு ஆகும்.
2. இந்த சரக்கு விற்பவர் கைவசம் வந்து சேர்வது எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியை பொறுத்தது.
எ.கா. 1. A என்பவர் B என்பவரோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறார். கோதுமை C என்பவரிடமிருந்து கிடைத்தால் விற்கிறேன் என்பதாகும்.
2. கோதுமை என்பது கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்.
4.
| வேறுபாட்டு அடிப்படை | விற்பனை | விற்பனை ஒப்பந்தம் | |
| 1 | உரிமை மாற்றம் | பொருளின் உரிமை உடனடியாக மாறிவிடுகிறது. | பொருளின் உரிமை எதிர்காலத்தில் மாறும் தன்மை உடையது. |
| 2 | நட்ட இடர்பாடு | விற்கப்பட்ட பொருள் சேதமுற்றால் அதனால் ஏற்பட்ட நட்டம் வாங்குபவரை சாரும். | விற்கப்பட்ட சரக்கு வாங்குபவர் கைவசம் இருந்தால் கூட பொருள் சேதமுற்றால் அல்லது அழிவுற்றால் நட்டத்தை விற்பனையாளர்தான் ஏற்க வேண்டும். |
| 3 | ஒப்பந்த மீறுகையின் விளைவுகள் | விலையை செலுத்த வாங்குநர் மறுத்தால் சரக்கு விற்குனரிடமே இருந்தாலும் கூட வாங்குபவர் மீது விலைதரக் கோரி வழக்கு தொடர முடியும். | வாங்குனர் ஒப்பந்தத்தை மீறி செயல்படும் பொழுது விற்பவர் பொருளை வாங்குனரிடமிருந்து கைப்பற்றிக்கொள்ள முடியும். மேலும் வாங்குனர் மீது வழக்கு தொடர முடியும். |
| 4 | ஒப்பந்தத்தின் தன்மை | இது நிறைவேறிய ஒப்பந்தம் ஆகும். எனவே சரக்குரிமை உடனடியாக மாற்றப்படுகிறது. | இது நிறைவேற வேண்டிய ஒப்பந்தம் ஆகும். உரிமை மாற்றம் எதிர்காலத்தில் நிகழ உள்ளது. |
| 5 | வாங்குநரின் நொடிப்பு | வாங்குனர் விலையை செலுத்தும் முன்னரே நொடிப்பு நிலையை அடைந்துவிடின் விற்பனை செய்த சரக்கு விற்றவரின் கைவசம் இருந்தாலும், இருப்பவர் அச்சரக்கினை கலைப்பு அதிகாரி வசம் கொடுத்து அந்த விலைக்கான விகிதப்படி தொகையை மட்டுமே பெற உரிமை உண்டு. | விற்பனை உடன்பாட்டில் விற்குநர் வாங்குனர் கைவசம் உள்ள சொத்தை கலைப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க தேவையில்லை. காரணம் உரிமை இன்னமும் வாங்குனர்க்கு மாற்றப்படவில்லை. |
| 6 | விற்பனையாளரின் நொடிப்பு | விற்றசரக்கை வாங்குபவரிடம் ஒப்படைக்கும் முன் விற்குநர் நொடிப்பு நிலை அடைந்துவிட்டால் வாங்குனர் கலைப்பு அதிகாரியிடம் அச்சொத்தை பெற்றுக் கொள்ளலாம். | விற்பனை உடன்பாட்டில் அவ்வாறு செய்ய இயலாது. வாங்கியவர் பணம் செலுத்தியிருந்தால் கூட விகிதப்படி தொகையை பெறும் உரிமை மட்டுமே உண்டு. |
5.
விற்பனைச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகள்: ஒரு விற்பனை ஒப்பந்தச் சட்டத்திற்கு பின்வரும் கூறுகள் இன்றியமையாததாக கருதப்படுகிறது.
(i) இருதரப்பினர்: சரக்கு விற்பனைச் சட்டத்தில் இருதரப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வாங்குனர் இன்னொருவர் விற்பனையாளர். ஒரு தனி நபர் தனக்கே பொருளை எடுத்துக் கொள்வதை விற்பனை என்ற சொல் குறிக்காது.
(ii) பொருளின் மீதான உரிமை மாற்றம்: விற்பனை என்று அழைக்க, விற்பவர் பொருளின் மீதான உரிமையை வாங்குபவர்க்கு மறுபயன் பெற்றுக் கொண்டு மாற்றித்தர வேண்டும். பொருளின் உடைமை மாற்றுவது என்ற செயல் விற்பனை ஆகாது.
(iii) சரக்கு/பொருள்: சரக்கு என்ற சொல் பணம், அசையாச் சொத்து மற்றும் உரிமைகோர் சரக்கில் அடங்காது. சரக்கு என்ற சொல்லில் பணம், அசையா சொத்துக்கள் மற்றும் உரிமைக்கோர் போன்றவை அடங்காது.
(iv) விலை: பொருளின் விற்பனைக்கு மறுபயனே விலை ஆகும். பொருளைப் பொருளுக்கு மாற்றாக பரிமாற்றம் செய்துக் கொள்வது விலையாகாது. பொருளைப் பகுதியாக பொருளுக்கும் மீதப் பகுதியாக விலைக்குமே மாற்றிக் கொள்ளும்போது, விலைக்கு மாற்றிய பகுதி மட்டும் விற்பனை நடவடிக்கை ஆகும்.
(v) விற்பனை மற்றும் விற்பனை உடன்பாடு:
பொருளின் உரிமையை உடனே மாற்றிவிடக் கூடிய நடவடிக்கைகள் விற்பனை என்றும், உரிமையை எதிர்காலத்தில் மாற்றும் நடவடிக்கைகளுக்கு விற்பனை உடன்பாட்டு நடவடிக்கைகள் எனவும் பொருள்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards