12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Computer Applications subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விரிவாக எழுதவும்.
2.
GET மற்றும் POST வழிமுறையினை வேறுபடுத்துக.
3.
mysqli_affected_rows() மற்றும் mysqli_fetch_assoc() செயற்கூறு இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை எழுதுக
4.
MySQLi வினவல்களின் கட்டளை அமைப்பை எழுதவும்.
5.
சமூக வலையமைப்புகளின் சில பயன்களை பட்டியலிடுங்கள்
6.
இணையத்தின் குறைபாடுகள் யாவை?
7.
8.
RFID செயல்படுத்தப்பட்ட கணினியின் கூறுகளை பட்டியலிடுக?
9.
களப்பெயர்ப் பற்றி குறிப்பு வரைக.
10.
களப்பெயர் மற்றும் URL ஐ வேறுபடுத்து
11.
'Do while' மடக்கினை பற்றி சிறுகுறிப்பு வரைக
12.
மடக்கு அமைப்பின் பயன்களை எழுதுக.
13.
ஈத்தர்நெட் கேபிளிங்கில் தொடர்புடைய கூறுகள் என்ன?
14.
சீரியல் மற்றும் இணையான துறைமுகங்கள் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன ?
15.
Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக
16.
நிபந்தனை கூற்றின் சிறப்பியல்புகளை விவரி
17.
அணிகளை பற்றி சிறுகுறிப்பு வரைக
18.
அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளின் பயன்களை எழுதுக.
19.
PHP இயக்கிகளை பற்றி சிறு குறிப்பு எழுதுக
20.
வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை வேறுபடுத்துக
21.
சேவையக பக்க ஸ்கிரிப்டிங் மொழிகளின் (Server scripting languages) சிறப்பியல்புகளை எழுதுக.
22.
மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய் ?
23.
உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?
24.
பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.
25.
பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு?
1.
(i) தயாரிப்பு மேலாளர் :
பல்லூடக உருவாக்குதலில், குறித்த நேரத்தில் முழு தரத்துடன் பல்லூடக திட்ட உருவாக்கத்தை வரையறுப்பது மற்றும் ஒருங்கிணைப்பது தயாரிப்பு மேலாளரின் பங்கு ஆகும். தயாரிப்பு மேலாளர் என்பவர் தொழில்நுட்ப திறன்கள், நன்கு திட்டம் வரைதல், கலந்துரையாடல் திறன்கள் மற்றும் வரவு - செலவு மேலாண்மை திறன்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
(ii) பொருளடக்க வல்லுநர் :
பொருளடக்க வல்லுநர் என்பவர் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயன்பாட்டின் பொருளடக்கத்தைப் பற்றிய அனைத்து ஆராய்ச்சி செயல்பாடுகளையும் செய்வதற்கு பொறுப்பானவர் ஆவார்.
(iii) ஸ்கிரிப்ட் எழுத்தாளர் :
ஸ்கிரிப்ட் எழுத்தாளர் கருத்துருக்களை முப்பரிமாண சூழல்களில் காட்சிப்படுத்துகிறார். தேவை ஏற்படின், நிரல் மீது மெய்நிகர் உண்மை ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தலாம்.
(iv) உரை பதிப்பாளர் (Text Editor):
பல்லூடக உருவாக்குதலின் பொருளடக்கம் எப்பொழுதும் தருக்கரீதியான ஓட்டமாக இருத்தல் வேண்டும். உரை எப்பொழுதும் கட்டமைப்பாகவும் சரியான இலக்கணத்தோடும் இருக்க வேண்டும். உரை மற்றும் விவரித்தல் பயன்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
(v) பல்லூடக வடிவமைப்பாளர் :
பல்லூடக வடிவமைப்பாளர் பல்லூடகத்தின் அனைத்து அடிப்படைத் தொகுதிகளான வரைகலை, உரை, ஒலி, இசை, ஒளிக்காட்சி, புகைப்படம் மற்றும் படைப்பாக்க மென்பொருளைப் பயன்படுத்தி அசைவூட்டல் போன்றவற்றை ஒருங்கிணைப்பார்.
(vi) கணினி வரைகலைக் கலைஞர் :
நிரலின் வரைகலை கூறுகளான பின்னணி, புல்லட்கள், பொத்தான்கள், பாடப்பதிப்பாய்வு, 3-D பொருள்கள், அசைவூட்டல் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் கையாளும் பங்கினை கணினி வரைகலை கலைஞர் வகிக்கிறார்.
(vii) ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர்:
எடுத்துரைத்தல் மற்றும் சேமிக்கப்பட்ட ஒளிக்காட்சிகளைப் பல்லூடக நிகழ்த்துதலில் கையாளத் தேவைப்படுபவரே ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர் ஆவார். பதிவு செய்தல், ஒலி விளைவுகளை பதிப்பாய்வு செய்தல் மற்றும் இலக்கமாக்கல் ஆகியவற்றுக்கு இவரே பொறுப்பானவர் ஆவர்.
2.
| GET வழிமுறை | POST வழிமுறை | |
| 1 | உள்ளீடு செய்யப்படும் தரவானது URL முகவரி வழியாக சேவையகத்திற்கு அனுப்பப்படுகிறது. | உள்ளீடு செய்யப்படும் தரவானது கிளைக் கணிப்பொறியின் HTTP request னுடைய கோரிக்கை உடற்பகுதியில் சேமிக்கப்படுகிறது. |
| 2 | உள்ளீடு செய்யப்பட்ட அனைத்துத் தரவினையும் எல்லோரும் பார்க்க முடியும். | உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை மற்றவர் பார்க்க முடியாது. |
| 3 | பாதுகாப்பற்றது | பாதுகாப்பானது. |
3.
| mysqli_affected_rows () | mysqli_fetch_assoc () | |
| 1 | முந்தைய MySQL செயல்பாட்டின் பாதிக்கப்பட்ட வரிசைகளின் எண்ணிக்கையைத் திருப்பித் தரும். | வினவல் வெளியீட்டின் வரிசையைத் தொடர்புறுத்த அணியாகப் பெறப் பயன்படுகிறது. |
| 2 | ஒரு முழு எண் மதிப்பைத் திருப்பித் தரும். | சரங்களைக் கொண்ட தொடர்புறுத்த அணியைத் திருப்பித் தரும். |
4.
mysqli_query ( ) என்பது PHP மொழியிலுள்ள வினவல் கூற்றுகளை இயக்குவதற்கு உதவுகின்றது.
கட்டளை அமைப்பு:
mysqli_query ("Connection Object","SQL query")
5.
நீண்டதூர குழு தகவல் பகிர்வு: நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மொபைல் ஃபோன் அழைப்புகளிலோ (அ) உரை செய்திகளிலோ தொடர்பு கொள்ளலாம் என்றாலும் சமூக வலைகள் தொடர்பில் இருப்பதற்கு மேலும் சிறந்த சூழலைத் தருகின்றன. குழு கலந்துரையாடல்கள் மிகவும் வசதியானவை.
ஒளிபரப்பு அறிவிப்புகள்:
1. இதன் மூலம் சமூக வலையமைப்பில் வரவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் விளம்பரம் பற்றி உள்ளூர் கடைகள் விளம்பரம் செய்யலாம்.
2. மேலும் நகரங்களில் அவசரகாலச் செய்திகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றைப் பரப்புவது எளிதாகிறது. வணிகங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனது பொருட்களை சந்தைப்படுத்த முடியும்.
பன்முக சிந்தனையை வளர்த்தல்:
1. சமூக வலைகள் ஒத்த பின்னணி மற்றும் ஆர்வம் கொண்ட மக்களை ஈர்ப்பதாக சிலரால் விமர்சிக்கப்படுகிறது. நிகழ்நிலை விவாதங்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமானவை.
2. தனிநபர்கள் அதிக தீவிர கருத்துக்களைத் தொடங்கவிட்டாலும், காலப்போக்கில் அவர்களது சிந்தனை, மற்றவர்களின் கருத்துகள் சிலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
6.
1. இணையத்தில் தேவையற்ற தகவல்களை தேடுவதன் (Surfing) மூலம் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்கும்.
2. இணையப்பக்கங்கள், வலைப்பதிவுகள் போன்றவற்றில் ஏராளமான தேவையற்ற தகவல்களை சில நேரங்களில் சிலர் பதிவிடுகின்றனர்.
3. பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன் தொடர்புடைய பல்வேறு வகையான களவுகள் ஹேக்கர்கள் மற்றும் நச்சுநிரல்கள் மூலம் இணையத்தில் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
7.
8.
1. ஒரு RFID குறிச்சொல்: இது ஒரு சிறிய ஆண்டெனாவுடன் இணைக்கப்பட்ட மற்றும் மூலக்கூறு மீது வைக்கப்பட்டுள்ள சிலிக்கன் மைக்ரோசிப்-ஐ கொண்டுள்ளது.
2. ஒரு படிப்பான் : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் சிக்னல்களை பரிமாறவும் பெறுவதற்குமான ஆண்டெனாவுடன் கூடிய வருடியைக் கொண்டுள்ளது.
3. ஒரு கட்டுப்பாட்டாளர்: இது நுண்செயலியுடன் கூடிய புரவலன் கணினியாகும். இது படிப்பானின் உள்ளீட்டைப் பெற்று தரவுகளைச் செயலாக்குகிறது.
9.
1. களப்பெயர் என்பது சிட்டைகளின் வரிசையாகும்.
2. களப்பெயரில் சிட்டைகள் புள்ளி (.) மூலம் பிரிக்கப்படுகிறது.
3. களப்பெயர் எப்போதுமே கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை படிக்கப்படுகிறது.
4. வேர்முனை எப்போதும் வெற்று சரத்தை குறிப்பதால் எல்லா பெயர்களும் புள்ளியில் முடிவடைகின்றன.
10.
| களப்பெயர் (Domain Name) | URL | |
| 1 | நினைவில் கொள்வதற்கு எளிதான வலைதளங்களின் IP முகவரியின் வடிவம் | இணையத்தில் உள்ள ஆவணத்தின் முகவரியாகும். |
| 2 | URL ன் ஒரு பகுதி ஆகும். எ.கா: tnresults.nic.in |
களப் பெயரைப் பகுதியாகக் கொண்டது. எ.கா: http://tnresults.nic.in/rgnfs.htm |
11.
do while மடக்கு எப்பொழுதும் மடக்கினை முதல் முறை செயல்படுத்தும் போதே மடக்கின் உடற்பகுதியில் உள்ள கூற்றுகளை ஒரு முறை செயல்படுத்தும். ஆனால், கொடுக்கப்பட்ட நிரல் தொகுதியை நிபந்தனை சோதிப்பதற்கு முன்னர் ஒரே ஒரு முறையேனும் செயல்படுத்தும். அதாவது, இங்கே நிபந்தனை , மடக்கின் இறுதியில் மட்டுமே சோதிக்கப்படுகிறது.
கட்டளை அமைப்பு:
do {
code to be executed;
} while (condition is true);
12.
1. நாம் நிரல் எழுதும் போது ஒரே குறிமுறைத் தொகுதியை நிரலின் பல இடங்களில் அடிக்கடி பயன்படுத்த வேண்டுமெனில் மடக்கினை பயன்படுத்தலாம்.
2. பன்முறைச் செயல்பாடுகளை எழுதுவதற்குப் பயன்படுகிறது.
13.
ஈத்தர்நெட் வடமிடலில் நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன
(i) இணைப்பு வடம்
(ii) RJ - 45 இணைப்பி
(iii) ஈத்தர் நெட் தொடர்பி
(iv) கிரிம்பிங் கருவி
14.
| தொடர் தொடர்பி (serial port) | இணையான தொடர்பி (parallel port) |
| 1. ஒரு நேரத்தில் 1 பிட் மட்டுமே அனுப்பும் | ஒரு நேரத்தில் 8 பிட்டுகள் அனுப்பும் |
| 2. தரவுப் பரிமாற்றம் மெதுவாக இருக்கும் | தரவுப் பரிமாற்றம் வேகமாக இருக்கும் |
| 3. இரு வழிகளிலும் தரவுத் தொடர்பு இருக்கும் | ஒரு வழியில் மட்டுமே தரவுத் தொடர்பு இருக்கும் |
15.
| switch கூற்று | if else கூற்று |
| 1. பல்வேறு தொகுதிகளில் ஒன்றை செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. | இரு மாற்று வழிகளில் ஒரு தொகுதியைச் செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. |
| 2. சமம் என்ற ஒப்பீட்டை மட்டுமே சோதிக்கிறது. | சமம் என்ற ஒப்பீடுடன் மற்றும் தருக்கக் கோவைகளைச் சோதிக்கிறது. |
| 3. ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும். | ஒரு கோவையை மட்டுமே சரி பார்க்கிறது. |
| 4. எந்த ஒரு case தொகுதியுடன் கோவையின் மதிப்பு பொருந்தவில்லை என்றால் 'default' என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். | நிபந்தனை தவறு எனில், else என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். |
16.
1. நிபந்தனைக் கூற்றுகள் தீர்மானிப்புக் கூற்றுகளை எழுதுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2. நிரலாக்க மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளைச் செய்கிறது.
3. PHP உட்பட பல நிரலாக்க மொழிகளின் மிக முக்கிய அம்சமாகும்.
17.
அணி என்பது ஒரே தரவு வகையைச் சார்ந்த (ஒரே மாதிரியான) ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
PHP-ல் அணிகளின் பயன்கள் :
1. PHP -ல் அணிகளைப் பயன்படுத்தி foreach கூற்றுடன் இணைப்பது மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
2. மிகச்சிறிய குறிமுறையைக் கொண்டு கூட மடக்கினுள் விரைவாக அணியை செலுத்தலாம்.
PHP-ல் அணிகளின் வகைகள் :
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள்
2. தொடர்புருத்த அணிகள்
3. பல பரிமாண அணிகள்
18.
மதிப்புக்களை அளபுருக்களின் மூலம் ஒரு அளபுருவிலிருந்து அளபுருவுக்கு அனுப்ப முடியும்.
அளபுருக்களை செயலுருபுகள் என்றும் அழைக்கலாம். இது மாறிகளை போன்று இருக்கும். செயலுருபுகள் செயற்கூறின் பெயருக்கு பின்னால் அடைப்பு குறிகளுக்குள் குறிப்பிட வேண்டும். செயலுருபுகளை அனுப்புவதற்கு எந்த விதமான வரம்பும் இல்லை. அவற்றை காற்புள்ளிகளால் பிரிக்க வேண்டும்.
Return கூற்றினை பயன்படுத்தி ஒரு செயற்கூறு ஒரு மதிப்பினை திருப்பி அனுப்புகிறது.
function sum($x, $y) {
$z = $x + $y;
return $z;
}
echo “5 + 10 = “ . sum(5, 10) . “
”;
echo “7 + 13 = “ . sum(7, 13) . “
”;
echo “2 + 4 = “ . sum(2, 4);
?>
19.
(i) செயற்குறி என்பது நிரலாக்க மொழிகளில் கணித மற்றும் தருக்க செயற்பாடுகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு ஆகும்.
(ii) PHP -யில் உள்ள பல்வேறு செயற்குறிகள் :
1. கணித செயற்குறிகள்
2. மதிப்பிலிருந்து செயற்குறிகள்
3. ஒப்பீட்டு செயற்குறிகள்
4. மிகுப்பு/குறைப்பு செயற்குறிகள்
5. தருக்க செயற்குறிகள்
6. உரை செயற்குறிகள்
20.
| வலை சேவையக பக்க ஸ்கிரிப்டிங் | கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் |
|---|---|
| 1. ஸ்கிரிப்ட் குறிமுறை முழுவதும் வலை சேவையைக் கணிப்பொறியில் இயங்குகிறது | ஸ்கிரிப்ட் குறிமுறை முழுவதும் வலை உலாவியில் இயங்குகிறது. |
| 2. கிளைன்ட் பக்கம் மூலக்கூறி முறையை பார்க்க முடியாதபடி மறைத்து வைத்து பயன்படுத்தப்படும். | வலை உலாவியில் முன்னின்று செயல்படுத்தப்படும். பயனர் மூலக்கூறி முறையைப் பார்க்க முடியும். |
| 3. சேவையகக் கணிப்பொறி உடனான ஊடுதல் தேவை. | சேவையகக் கணிப்பொறியுடனான ஊடாடுதல் தேவையில்லை. |
| 4. பாதுகாப்பானது | பாதுகாப்பற்றது. |
21.
(i) குறிமுறைகள் முழுவதுமாக தொலைதூர கணிப்பொறியில் நிறுவப்பட்டுள்ள வலைசேவையகத்தில் இயக்கப்படுகின்றது.
(ii) நிகழ்நேர வலை உருவாக்கத்திட்டங்களில் இயங்கு மற்றும் ஊடாடு வலைப் பக்கங்களை உருவாக்குகின்றது.
(iii) பயனர் குறிமுறையைப் பெறுகிறார் மற்றும் வலைதள உள்ளடக்கத்தை இணைய உலவி மூலம் கணிப்பொறியில் பார்க்கிறார்.
(iv) மிகவும் பாதுகாப்பானது.
22.
1. Master Pages பணிக்குறியில் கிளிக் செய்ய வேண்டும்.
2. இப்பொழுது டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்தால் செருகும் புள்ளி I-beam ஆக மாறும்.
3. பக்க எண் இட வேண்டிய இடது மாஸ்டர் பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
4. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
5. இடது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'LM' எனத் தோன்றும்.
6. இதே போன்று பக்க எண் இட வேண்டிய வலது மாஸ்டர் பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
8. வலது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'RM' எனத் தோன்றும் மற்ற பக்கங்களில் சரியான பக்க எண்கள் தெரியும்.
23.
உரை உள்ள சட்டங்களை இணைக்க
1. சட்டத்திற்கான கருவியைப் பயன்படுத்தி இரண்டாவது சட்டம் வரைய வேண்டும்.
2. முதல் சட்டத்தை கிளிக் செய்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. கீழ்பக்கக் கைப்பிடியிலுள்ள உள்ள சிவப்பு முக்கோணத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. பின்னர் இரண்டாவது சட்டத்தைக் கிளிக் செய்ய வேண்டும். உரை இரண்டாவது சட்டத்தில் விரியும்.
24.
| கருவியின் பெயர் | கருவிப் பெட்டியிலுள்ள பணிக்குறி | சுட்டுக் குறி | பயன் |
|---|---|---|---|
| க்ராப்பிங் டூல் | ![]() |
![]() |
வரைகலைகளை ஒழுங்கமைக்க பயன்படுகிறது. |
| லைன் டூல் | ![]() |
![]() |
நேர்கோடு வரைய பயன்படுகிறது. |
| கன்ஸ்ட்ரெய்ன்டு லைன் டூல் | ![]() |
![]() |
கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் கோடுகள் வரைய உதவுகிறது. |
25.
அடோப் பேஜ்மேக்கர் என்பது ஒரு பக்க வடிவமைப்பு மென்பொருளாகும்.
பயன்கள்:
(i) இது அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் ஆவணங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது.
(ii) இதைப் பயன்படுத்தி சிறிய வணிக அட்டை முதல் பெரிய புத்தகம் வரை அனைத்தையும் வடிவமைக்கலாம்.
(iii) பக்க வடிவமைப்பு, மென்பொருளில் உள்ள கருவிகள், ஆவணத்தில் எளிதாக உரை மற்றும் வரைகலை வடிவங்களை சேர்க்க உதவுகின்றன.
(iv) உதாரணமாக, பேஜ்மேக்கரைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பக்கத்திலும் கட்டுரைகள் மற்றும் படங்களை வைத்து ஒரு செய்தி மடலை உருவாக்க முடியும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards