12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Computer Applications subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
நுகர்வோருக்கு மின்-வணிகத்தின் நன்மைகள் யாவை ?
2.
மரபு சார்ந்த வணிகம் மற்றும் மின்- வணிகம் ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?
3.
ஏதேனும் ஐந்து மின்-வணிக வருவாய் மாதிரிகளை விளக்குக.
4.
மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.
5.
மின்-வணிகத்தின் வளர்ச்சி பற்றி எழுதுக.
1.
(i) மின் வணிக அமைப்பு வாரத்தின் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் இயக்கப்படுகிறது. மின்னணு முறையில் வணிகம் செய்ய , நுகர்வோர் அல்லது விற்பனையாளருக்கு இயல்நிலை கடை திறந்திருக்கத் தேவையில்லை . மக்கள் தங்கள் தேவைக்கேற்ற நேரங்களில் வணிகங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
(ii) வேகம், மின் வணிகத்தின் ஒரு முக்கிய நன்மை, மேம்பட்ட மின்னணு தகவல் தொடர்பு அமைப்புகள் செய்திகளை உடனடியாக உலகம் முழுவதும் சென்றடைய அனுமதிக்கிறது. இணையம் அல்லது மின் - வணிக உலகில் தகவல் தொடர்பு தாமதம் என்பதே கிடையாது
(iii) இணையத்தின் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவது, விலை குறைவானது மற்றும் எளிதானதாகும். இது நுகர்வோருக்குக் குறைந்த செலவில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நேரடியாக உற்பத்தியாளரிடமிருந்தே குறைந்த விலையில் பொருட்கள் வாங்க முடியும்.
(iv) இன்றைய நுகர்வோர்களுக்கு உலகமே ஒரு சந்தையாக மாறியுள்ளது. வாங்குவதற்கான முடிவை எடுப்பதற்கு முன்பு பல்வேறு வலைத்தளங்களில் அதே பொருட்களை ஒப்பிட்டு, மதிப்பிடுவதன் மூலம் அவர்கள் பரவலான விருப்பத்தைப் பெற முடியும்
(v) வாடிக்கையாளர்கள் வீட்டிலோ (அ) தங்கள் வசதிக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான கட்டணத்தையும் மின் - செலுத்துதல் மூலம் செய்யலாம்.
2.
| மரபு சார்ந்த வணிகம் | மின் வணிகம் |
| 1.மரபு சார்ந்த வணிகம் என்பது பொருட்கள் மற்றும் நேரடியாக மாற்றம் செய்கிறது | மின் - வணிகம் இணையம் மூலம் மின்னணு முறையில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது |
| 2. வாடிக்கையாளர்கள் வியாபாரியை எளிதில் அடையாளம் காணவும், அங்கீகரிக்கவும், பேசவும் முடியும் | வாடிக்கையாளரோ, வியாபாரியோ மற்றவரைப் பார்ப்பதில்லை |
| 3. பொதுவாகக் கடைகள் அனைத்து நேரத்திலும் நிறைந்திருக்க முடியாது | இங்கு இணையம் மூலம் வருடத்தின் நாட்களிலும் எல்லா நேரத்திலும் வணிகம் நடைபெறும் |
| 4. வாங்கும் முன் பொருட்களை நேரடியாக ஆய்வு செய்யலாம் | வாங்கும் முன் பொருள்களை நேரடியாக ஆய்வு செய்ய முடியாது |
| 5. வணிகத்தின் வரையெல்லை குறிப்பிட்ட பகுதிக்கு உட்பட்டது | வணிகத்தின் வரையில் உலகளாவியது விற்பனையாளர்கள் உலகெங்கும் தங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம் |
| 6. மரபுசார் வணிகத்தில் விநியோகம் சார்ந்த (supply side) பயன்படுத்தப்படுகிறது. | மின்-வணிகத்தில் தேவை சார்ந்த (demand side) வள முன்னிறுத்த கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. |
| 7. மரபுசார் வணிகத்தில் நேர்கோட்டு (Linear) வணிக உறவு முறை பின்பற்றப்படுகிறது. | மின் வணிகத்தில் End to End என்ற வணிக உறவுமுறை பின்பற்றப்படுகிறது. |
| 8. பெரும்பாலான பொருட்கள் உடனடியாக விநியோகம் செய்யப்படுகின்றன | பொருட்களை விநியோகம் செய்ய சில காலம் தாமதமாகும் |
3.
வழக்கமான முறையில் பொருட்களை விற்பது மட்டுமின்றி, இணையத்தளம் மூலம் பணம் ஈட்ட ஒரு நிறுவனத்திற்கு பல வழிகள் உள்ளன. மின்-வணிக செயல்பாடுகளின் பிற வடிவங்கள்:
1. துணை இணையதளம் (Affiliate website) என்பது மூன்றாம் தரப்பு சந்தைப்படுத்துதலின் ஒரு வடிவம் ஆகும். இதில் தள உரிமையாளர் செயல்திறன் அடிப்படையில் பணம் பெறலாம். இந்த துணைத் தளம் என்பது ஒரு விலை ஒப்பீடு சேவை, வணிக விவரக்குறிப்புகள், சாதாரண சில்லறை விற்பனை இணையதளத்திற்கு ஒரு மீத்தொடுப்பை கொண்ட வலைப்பக்கம் அல்லது வலைப்பதிவாகவும் இருக்கலாம்.
2. மின்-ஏல இணையதளம் (Auction website) என்பது இணையத்தில் பொருட்களை ஏலம் மூலம் விற்க உதவும் ஒரு வகை வலைத்தளம் ஆகும். மேலும் இது ஒவ்வொரு விற்பனையிலிருந்தும் விற்பனை தரகைப் (commission) பெறும். : https://www.ebay.com/
3. பதாகை விளம்பர தளம்: பிற நிறுவனங்களில் விளம்பரங்களை தனது வலைப்பக்கங்களில் காட்சிப்படுத்துகிறது. அதன் மூலம் வருவாய் ஈட்டவும் செய்கிறது
4. மொத்த கொள்முதல் இணையதளம் (Bulk-buying websites). ஒரே வகையான பொருட்களை வாங்க விரும்பும் பல நுகர்வோர்களையும் ஒன்றாகச் சேகரிக்கும். பின் தளம் உற்பத்தியாளருடன் தள்ளுபடி பேச்சுவார்த்தை செய்து அதில் ஒரு விற்பனை தரகைப் (commission) பெறுகிறது. எடுத்துக்காட்டு https://www.alibaba.com/
5. எண்முறை பதிப்பக இணையதளம் (Digital Publishing websites) இணையத்தில் மின்-புத்தகங்கள் அல்லது மின்-சஞ்சிகைகளைத் திறம்படப் பதிப்பிக்கிறார்கள். விளம்பரம், விற்பனை போன்ற பல வழிகளில் அவர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். https://wordpress.org/
4.
1. வணிகம் - வணிகம் (B2B)
2. வணிகம் - நுகர்வோர் (B2C)
3. வணிகம் - அரசாங்கம் (B2G)
4. நுகர்வோர் - வணிகம் (C2B)
5. நுகர்வோர் - நுகர்வோர் (C2C)
6. நுகர்வோர் - அரசாங்கம் (C2G)
7. அரசாங்கம் - வணிகம் (G2B)
8. அரசாங்கம் - நுகர்வோர் (G2C)
9. அரசாங்கம் - அரசாங்கம் (G2G)
1. வணிகம் - நுகர்வோர் (B2C):
(i) B2C மின் வணிகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் இறுதி - நுகர்வோருக்கு இடையே இணையகம் வழியாக நேரடி வர்த்தகம் நடைபெறுகிறது
(ii) B2C நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு நிகழ்நிலையில் பொருட்கள், தகவல் (அ) சேவைகளை அதிக தனிப்பட்ட மற்றும் சக்தி வாய்ந்த சூழலில் விற்பனை செய்கின்றன
(iii) ஒரு மரபு சார்ந்த கடைக்காரருக்கு உண்மையான போட்டியாளராக கருதப்படுகிறது
(iv) இவ்வகை மின் - வணிக மாதிரி நுகர்வோருக்குப் பயனளிக்கக் கூடியது. மின் வணிகம் இணையத்தின் சில்லறை விற்பனையாக செயல்படுகிறது என்றும் கூறலாம்
எ.கா: வாடிக்கையாளர்களுக்குப் புத்தகங்களை நேரடியாக விற்பனை செய்யும் ஒரு புத்தக நிறுவனம்
2. வணிகம் - அரசாங்கம் (B2G):
(i) B2G என்பது பொருட்கள், சேவைகள் (அ) தகவல்களை அரசாங்கத்திற்கோ (அ) அதன் நிர்வாகத்திற்கோ விற்பனை செய்யும் வியாபார அமைப்புகளைக் குறிப்பிடும் ஒரு வணிக மாதிரியாகும்
(ii) ஒரு நிறுவனம் தனது பொருட்கள் அல்லது சேவைகளுக்கு இணையம் மூலம் அரசாங்கத்திடம் பணம் பெறும் போது அது B2G மின் வணிக மாதிரி என்று அழைக்கப்படுகிறது.
எ.கா: ஒரு அரசு (அ) அதன் நிர்வாகம் ஒரு வணிக நிறுவனத்திடமிருந்து மாணவர்களுக்கான மடிக்கணினிகளை வாங்குதல்
3. நுகர்வோர் - வணிகம் (C2B)
(i) இந்த மின் - வணிக மாதிரியில் வாடிக்கையாளர்களால் பரிவர்த்தனை துவக்கப்படுகிறது
(ii) குறிப்பிட்ட விலை (அ) தேவைகளில் தொகுப்பை நிர்ணயித்து நுகர்வோர்கள் ஒரு சேவை (அ) பொருளைக் கோருவோர்கள்
(iii) C2B மாதிரி தலைகீழ் ஏல மாதிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர் ஒரு சேவை அல்லது ஒரு தயாரிப்புக்கான விலையை நிர்ணயம் செய்கிறார்.
(iv) பின் அந்த வலைத்தளம் வாடிக்கையாளரின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் பல்வேறு வாய்ப்புகளை கண்டறியும்.
எ.கா: ஒரு பயண வலைத்தளத்தில் ஒரு வாடிக்கையாளர் அவரது பயண தேதி, புறப்படும் மற்றும் சேரும் இடம், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தங்கும் விடுதியின் தரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்
4. நுகர்வோர் - அரசாங்கம் (C2G):
(i) C2G மின் வணிகத்தில் நுகர்வோரும் அரசும் ஈடுபடுகின்றனர். இங்கு ஒரு தனி நுகர்வோர் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்கிறார்
(ii) C2G மாதிரிகள் வழக்கமாக வருமான வரி அல்லது வீட்டு வரி செலுத்துதல்கள், சான்றிதழ்கள் அல்லது பிற ஆவணங்களை வழங்குவதற்கான கட்டணங்கள் செலுத்துதல் ஆகியவை அடங்கும்
5.
(i) இணையம் கொண்டு வந்த மின்னணு வணிகமும் தகவல் புரட்சியும் தொடர் அலைகள் வழியாக விளக்கலாம்
1. மின் - வணிகத்தின் முதல் அலை: 1995 - 2003
(i) முதல் அலையின் Dotcom நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்கள் தான். அதனால் அதன் இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன
(ii) Dotcom குமிழி முதல் அலை நிறுவனங்களுக்கு பெரும் முதலீடுகளை ஈர்த்திருந்தது
(iii) இணையம் வெறுமென படிக்க மட்டும் வலையாகவும் மற்றும் வலையமைப்புத் தொழில்நுட்பம் அதன் ஆரம்பக் கட்டத்திலிருந்தால் அலைக்கற்றை மற்றும் வலையமைப்புப் பாதுகாப்பு மிக குறைவாக இருந்தது
(iv) EDI மற்றும் கட்டமைக்கப்படாத மின்னஞ்சல் மட்டுமே நிறுவனங்களுக்கு இடையிலாக இருந்து வந்தது
(v) ஆனால் முதல் அலை நிறுவனங்கள் முதல்நகர்வு அனுகூலத்தை அனுபவித்ததோடு வாடிக்கையாளர்களுக்கு எந்த விருப்பத் தேவையும் கொடுக்கவில்லை
எ.கா: Amazon.com, eBay மற்றும் Yahoo.
2. மின் - வணிகத்தின் இரண்டாவது அலை: 2004 - 2009:
(i) Dotcom வெடிப்பிற்கு பின், மின் - வணிகத்தின் மறுபிறப்பு இரண்டாவது அலை ஆகும்
(ii) உலகளாவிய அலையாகக் கருதப்படுகிறது
(iii) விற்பனையாளர்கள் பல நாடுகள் மற்றும் பல மொழிகளில் வியாபாரத்தை விரிவுபடுத்தினர்
(iv) இரண்டாவது அலை வலையத்தளங்களில் மொழிபெயர்ப்பு மற்றும் நாணய மாற்றத்தில் கவனம் செலுத்தப்பட்டன
(v) இரண்டாவது அலை நிறுவனங்கள் தங்கள் சொந்த நிதிகளைப் பயன்படுத்தி தங்கள் மின்வர்த்தக வாய்ப்புகளைப் படிப்படியாக விரிவுபடுத்தி வந்தன
(vi) இதன் விளைவாக மின் வணிகம் மெதுவாக, இருந்தாலும் இன்னும் சீராக வளர்ந்தது
(vii) வலையமைப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஊடாடும் வலையின் விரிவான வளர்ச்சி நுகர்வோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருந்தது
(viii) இரண்டாம் அலையின் போது அதிகரித்த இணையப் பயனாளர்கள் B2C மின் வணிக நிறுவனங்களுக்கு ஊட்டமளித்தனர்
3. மின் வணிகத்தின் மூன்றாம் அலை 2010 நிகழ்காலம் வரை:
1. மூன்றாவது அலை கைபேசி தொழில்நுட்பங்களால் கொண்டு வரப்பட்டது
2. நிகழ் நேரம் மற்றும் தேவை அடிப்படையில் கைபேசி சாதனங்கள் மூலம் பயனர்களை இணைக்கப்படுகிறது
3. குறிப்பிட்ட இருப்பிடம் சார்ந்த தொகுக்கப்பட்ட தகவல்கள், நேர அடிப்படையில் மட்டுமல்லாமல் புவியியல் ஆயத் தொலைவுகள் மூலம் வடிகட்டப்படுகிறது
4. வலை 3.0 என்ற பதம், செயற்கை நுண்ணறிவு, Semantic Web, Generic Database போன்றவை அடங்கிய எதிர்கால இணையத்தின் பல்வேறு பண்புகளைச் சுருக்கமாகத் தொகுத்தளிக்கிறது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards