12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Computer Applications subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
திறன் அட்டையையும் அதன் வகைகளையும் பற்றி எழுதுக.
2.
மறையீட்டு நாணயம் என்றால் என்ன? அதை விளக்கவும்
3.
4.
மின்னணு கணக்கு பரிமாற்றம் மற்றும் அதன் வகைகளை சுருக்கமாக விளக்குக.
5.
கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையின் முக்கிய பங்களிப்பாளர்களை விளக்குக.
1.
திறன் அட்டையின் வகைகள்:
1. தொடர்புகொள்ள திறன் அட்டை
2. தொடர்பில்லா திறன் அட்டை
1. தொடர்புகொள்ள திறன் அட்டை:
(i) இதில் சுமார் 1 சதுர சென்டிமீட்டர் அளவுள்ள ஒரு தொடர்பு பகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட பல தொடர்பு திண்டுகள் உள்ளன.
(ii) இந்த அட்டைகள் ஒரு படிப்பானில் (reader) செருகும் போது மட்டுமே மின் இணைப்பு பெறுகின்றன.
(iii) இந்த படிப்பான் திறன் அட்டை மற்றும் ஒரு சேவையகம் இடையே தகவல் தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
எ.கா: விற்பனை முனையம்.
2. தொடர்பில்லா திறன் அட்டை:
(i) இது தூண்டல் தொழில்நுட்பத்தின் மூல ஆற்றல் பெறுகிறது.
(ii) இந்த அட்டைகளைத் தொடர்பு கொள்ள ஒரு அலைவங்கியின் நெருக்கம் மட்டுமே தேவைப்படுகிறது.
(iii) திறன் அட்டைகளில் உள் மின்கலம் இல்லை அவை ஒரு மின் துண்டியை பயன்படுத்தி ரேடியோ அதிர்வெண் சமிக்ஞையைத் திருத்தி அட்டையின் செயல்பாடுகளுக்கு ஆற்றல் பெறுகிறது.
2.
(i) முறையீட்டு நாணயம் என்பது குறிப்பாக நெறிமுறையை பயன்படுத்தி பணமதிப்பு மாற்றத்தின் ஊடகமாக வேலைசெய்ய வடிவமைக்கப்பட்ட தனித்துவமான மின்னணு சொத்து
(ii) இவை மின் ரொக்கம், மாற்று நாணயங்கள் (அ) மெய்நிகர் நாணயங்கள் என்றும் அழைக்கப்படுகிறது
(iii) எண்ணியல் நாணயங்களின் உப தொகுப்பு
(iv) இதன் உரிமை என்பது "Portfolios" என்ற தனித்துவ அமைப்பு தொகுதிகளுடன் தொடர்புடையது
(v) இதன் செயல்பாடு அகழ்தல், தொடரேடு மற்றும் பகிர்வுபதிவேடு போன்ற பல தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்டது.
(vi) பிட்நாணயம்: இது மிகவும் புகழ் பெற்ற முதல் பரவலாக்கப்ட்ட மறையீட்டு நாணயம் ஆகும்
(vii) பிட் நாணயம் செலுத்தல் முறை "சத்தோசி நகமோட்டோ" (Satosi Nakamoto) என்ற புனைபெயர் கொண்ட ஒரு அறியப்படாத நபர் (அ) குழுவால் 2009 உருவாக்கப்பட்டது
(viii) Bitcoin க்கு பின்னர் Namecoin, Litecoin, Bitcoin - gold மற்றும் பல கிளை நாணயங்கள் தோன்றின
3.
4.
கணிப்பொறிகள் இணையத் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு தகவல்தொடர்பு ஆகியவற்றின் வருகையால் பல மற்றும் மின்னணு பணம் செலுத்துதல் முறைகளும் உருவாகியுள்ளன
1. மின்னணு தீர்வைச் சேவைகள் (ECS)
2. மின்னணு நிதிப் பரிமாற்றம் (EFT)
3. நிகழ் நேர மொத்த தீர்வை (RTGS)
1. மின்னணு தீர்வைச் சேவைகள்
(i) மின்னணு தீர்வை சேவை (Electronic Clearing Services - ECS) என்பது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பல வங்கிக் கணக்கிலிருந்து பல வங்கிக் கணக்குகளுக்கோ அல்லது பல வங்கிக்கணக்கிலிருந்து ஒன்றிற்கோ, கணினி மற்றும் இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றும் செய்வது ஆகும்
(ii) இந்த அமைப்பு காகிதமற்ற பணம் செலுத்தும் வசதியை வழங்குகிறது
(iii) இந்த முறையின் நன்மைகள் திரள் பணம் செலுத்துதல், உத்தரவாதமான பணம் செலுத்துதல் மற்றும் பணம் செலுதும் தேதிகளை நினைவில் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
(iv) வரவு மற்றும் பற்று இரண்டு நோக்கங்களுக்காகவும் ECS ஐப் பயன்படுத்த முடியும். அதாவது மொத்தமாகப் பணத்தை செலுத்துவதற்கும் (அ) மொத்தமாகப் பணத்தைச் சேகரிக்கவும் பயன்படுத்தலாம்
2. மின்னணு நிதிப் பரிமாற்றம்:
(i) மின்னணு திதிப் பரிமாற்றம் (Electronic funds transfer - EFT) என்பது நிகழ்நிலையில் 'மின்னணு' மூலம் பண மதிப்பை பரிமாற்றம் செய்வதாகும்
(ii) இதில் அனுப்புநரின் வங்கிக் கிளையிலிருந்து அனுப்பப்பட்ட தொகை, அதே நாளில் தொகுதியாகப் பெருநரின் வங்கிக் கிளைக்கு வரவு வைக்கப்படுகிறது
(iii) EFT முறை B2B வணிக மாதிரிகளில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதிகளை மாற்றுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையாகும்.
3. நிகழ் நேர மொத்த வணிகத் தீர்வு:
(i) நிகழ் நேர மொத்த வணிகத் தீர்வு (Real Time Gross Settlement - RTGS) நிதி நிறுவனங்களுக்கு குறிப்பாக வங்கிகளுக்கு இடையிலான பரிவார்த்தனைகளில் தீர்வுக்காக பயன்படுத்தப்படும் ஒரு நிகழ் நேர செலுத்தல் முறையாகும்
(ii) RTGS பரிமாற்றங்கள் பொதுவாகப் பெரிய மதிப்பு செலுத்துதல்கள், அதாவது அதிக மதிப்பு பரிவத்தனைகள் ஆகும்
5.
கடன் அட்டை பரிவர்த்தனையின் முக்கிய பங்களிப்பாளர்கள்:
1. வாடிக்கையாளர் : கடன் அட்டை கணக்கை வைத்திருப்பவர், கடனை முழுமையாக (transactor) அல்லது அதில் ஒரு பகுதியை (revolver) மட்டும் (மீதமுள்ள தொகை மற்றும் வட்டி கணக்கில் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும்) செலுத்த வேண்டியவர்.
2. வியாபாரி : கடை உரிமையாளர் அல்லது விற்பனையாளர் அல்லது சேவை வழங்குபவர், கடன் அட்டை மூலம் தனது வாடிக்கையாளர்களால் செய்யப்படும் பணம் செலுத்தல்களைப் பெறுகின்றவர்.
3. பெறுபவர்: வியாபாரியின் சார்பாக பணம் பெற்றுக் கொள்வதற்கு உதவும் வங்கி. இது உரிய வழியில் கடன் அட்டை வழங்குபவருக்கு அங்கீகார கோரிக்கைகளை அனுப்பும்.
4. கடன் அட்டை அமைப்பு: இது வங்கிகளுக்கு இடையேயான இடைநிலை அமைப்பு, இந்த நிறுவனம் பெறுபவர் மற்றும் வழங்குபவர் இடையே பரிவர்த்தனை தகவல் பரிமாற்றங்களுக்கு பொறுப்புடையது. எடுத்துக்காட்டு: விசா, மாஸ்டர்கார்டு, RUPAY.
5. வழங்குபவர்: கடன் அட்டையை வழங்கும் வங்கி, கொள்முதலுக்கான வரம்பை அமைக்கிறது. பரிவர்த்தனைகளின் அங்கீகாரத்தைத் தீர்மானிக்கிறது. பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது, காப்பீடு, கூடுதல் அட்டைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards