12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Computer Applications subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
முழு தரவுதளத்தையும் கட்டுப்படுத்த தரவுத்தள நிர்வகிப்பவர் (DBA) ஆல் பயன்படுத்தப்படும் சில கட்டளைகளை எழுதுக.
2.
MYSQL –ல் பயனருக்கு பயன்படும் ஏதேனும் 5 சிறப்பியல்புகளைப் பட்டியலிடு.
3.
தரவுதள மேலாண்மை அமைப்பில் உள்ள கார்டினாலிட்டி பற்றி விவரி.
4.
தரவுதளங்களுக்கு இடையே நிலவும் உறவுகள் என்ன? அவற்றை பட்டியலிடுக.
5.
தரவுதள மேலாண்மை அமைப்பின் (DBMS) பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குக.
1.
MySQL நிர்வாகக் கட்டளைகள் :
1. Use Database -இந்த கட்டளை MySQLல் பணி செய்வதற்கான தரவுத்தளத்தைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.
2. Show Database - தரவுத்தள சேவையகத்தில் இருக்கும் அனைத்து தரவுத் தளங்களையும் பட்டியிலிடுகிறது.
3. Show Tables - பயன்பாட்டில் உள்ள தரவுத்தளத்தில் இருக்கும் அனைத்து அட்டவணைகளையும் பட்டியிலிடுகிறது.
4. SHOW COLUMNS FROM table_name -கொடுக்கப்பட்ட அட்டவணையின் அனைத்து பண்புக்கூறுகள், பண்புக் கூறுவகை மற்றும் பிற தகவல்களைப் பட்டியிலிடுகிறது.
5. SHOW INDEX FROM table_name - கொடுக்கப்பட்ட அட்டவணையின் அனைத்து குறியீடுகளையும் காண்பிக்கிறது.
6. SHOW TABLE STATUS LIKE tablename/G :
அட்டவணையின் செயல் திறனை விரிவான அறிக்கையுடன் வழங்குகிறது.
2.
MYSQLல் உள்ள சிறப்புரிமைகள் :
| சிறப்பியல்புகள் | பயன்பாடு/செயல் (வழங்கப்பட்டால்) |
| Select _ priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளில் இருந்து வரிசைகளைத் தேர்வு செய்யலாம். |
| insert_ priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளில் வரிசைகளை செருகலாம் |
| Update_priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளின் வரிசைகளைப் புதுப்பிக்கலாம். |
| Delete_Priv | பயனர் தரவுத்தள அட்டவணைகளின் வரிசைகளை நீக்கலாம் |
| Create_priv | பயனர் தரவுத்தளங்களில் புதிய அட்டவணையை உருவாக்கலாம். |
| Alter_ priv | பயனர் தரவுத்தள அமைப்பில் மாற்றங்களைச் செய்யலாம். |
3.
எண் அளவை (Cardinality):
(i) இது உறவுநிலையில் சேர்க்கப்பட வேண்டிய உருப்பொருள்களின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகிறது.
(ii) அதாவது, உறவு நிலை வழியாக மற்றொரு தொகுப்பில் உள்ள உருப்பொருள்களின் எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பில் உள்ள உருப்பொருள்களின் எண்ணிக்கை, ஒன்றுடன் ஒன்று, ஒன்றுடன் பல, பலவற்றுடன் பல என்பன எண் அளவையின் மூன்று வகைப்பாடுகள் ஆகும்.

iii) மேலே உள்ள படம் எண் அளவை எடுத்துக்காட்டில், person மற்றும் Vehicle என்ற இரண்டு உருப்பொருள்கள் உள்ளன.
(iv) இயங்கிக் கொண்டிருக்கும் வாகனம் (Vehicle), இயங்குகின்ற ஓட்டுநர் (person) என எடுத்துக்கொண்டால் வாகனம் மற்றும் ஓட்டுநருக்கு இடையே ஒன்றுடன் ஒன்று உறவுநிலை உருவாக்கப்படும்.

(v) எண் அளவை உறவுநிலை 1 to n மேலே உள்ள எடுத்துக்காட்டில், வாடிக்கையாளர் (Customer) தன் தேவைகளை (Orders) முன்வைப்பது. ஒன்றுடன் பல உறவுநிலையாகும்.
(vi) இங்கு வாடிக்கையாளர், பல தேவைகளை முன்வைக்கலாம் மற்றும் தேவைகள் ஒரே ஒரு வாடிக்கையாளரை மட்டுமே சார்ந்து இருக்கும்.

(vii) எண் அளவை உறவுநிலை n to n மாணவர்கள் (Students), பாடப்பிரிவுகளில் (Courses) பதிவு செய்வது பலவற்றுடன் பல உறவுநிலைக்கான எடுத்துக்காட்டாகும்.
(viii) ஒரு மாணவன், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் பதிவு செய்ய முடியும். மற்றும் ஒரு பாடப்பிரிவு. பல மாணவர்களால் பதிவு செய்யப்படமுடியும். எனவே இது பலவற்றுடன் பல வகையாகும்.
4.
ER மாதிரியில், இரண்டு உருப்பொருளுக்கு இடையே உறவுநிலை உள்ளது. மூன்று வகையான உறவுநிலைகள் உள்ளன. மேலும் ER மாதிரியானது கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகைகளைச் சார்ந்துள்ளது.
(i) ஒன்றுடன் ஒன்று உறவுநிலை (One to-one relationship) :
A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-இன் (அ) 1 நிலை, உருப்பொருள் B-இன் 0 (அ) 1 நிலையுடன் தொடர்பு படுத்தப்படும் பொழுதோ மற்றும் உருப்பொருள் B-இன் 0 (அ) 1 நிலை, உருப்பொருள் A-இன் 0 (அ) 1 நிலையுடன் தொடர்புபடுத்தப்படும் பொழுதோ, உறவுநிலை தரவுதள வடிவமைப்பில், ஒன்றுடன் ஒன்று (1:1) உறவுநிலை உருவாகிறது.
(ii) ஒன்றுடன் பல உறவுநிலை (one-to-many relationship) :
A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-இன் 1 நிலை, உருப்பொருள் B-இன் 0 (அ) 1 (அ) பல நிலைகளுடனும், மற்றும் உருப்பொருள் B-இன் 1 நிலை, உருப்பொருள் A-இன்) (அ) 1 நிலைகளுடனும் தொடர்புபடுத்தப்படும் பொழுது, உறவுநிலை தரவுதள வடிவமைப்பில், ஒன்றுடன் பல (1:N) உறவுநிலை உருவாகிறது.
(iii) பலவற்றுடன் பல உறவுநிலை (Many-to many relationship) :
A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-இன் 1 நிலை, உருப்பொருள் B-இன் 1 நிலை, உருப்பொருள் A-இன் 0 (அ) 1 (அ) பல நிலைகளுடனும் தொடர்புபடுத்தப்படும் பொழுது, உறவுநிலை தரவுதள வடிவமைப்பில், பலவற்றுடன் பல (M:N) உறவுநிலை உருவாகிறது.
5.
(i) தரவுகளை சேமித்தல் என்ற கருத்துரு பல்வேறு வடிவமைப்பில் 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
(ii) முந்தைய நாட்களில், தரவுகளை சேமிக்க துளை அட்டை (Punched Card) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பிறகு கோப்புகள் (Files) பயன்படுத்தப்பட்டன.
(iii) கோப்பு அமைப்புகளே தரவுதள அமைப்பின் முன்னோடி என்றழைக்கப்படுகின்றன.
(iv) கோப்பு அமைப்பில், குறியீட்டு, சீரற்ற மற்றும் தொடர் அணுகல் போன்ற பல்வேறு அணுகல் முறைகள் உள்ளன. கோப்பு அமைப்பில் பின்வரும் பல வரம்புகள் இருந்தன.
தரவு நகல்கள் : ஒரே தரவானது, செயலாக்கதிற்கான பல வளங்களால் பயன்படுத்தப்பட்டது.
அதிக பராமரிப்பு: அணுகல் கட்டுப்பாடு மற்றும் தரவு நிலைத்தன்மையை சரிபார்க்க அதிக பராமரிப்பு தொகை தேவைப்பட்டது.
பாதுகாப்பு : தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கப்பட்டது. எனவே, கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுதள அமைப்புகள் பிரபலமானது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards