12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Economics subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test1.
பின்வரும் விவரங்களிலிருந்து Y மீது X, X மீது Y ஆகியவற்றினைக் கண்டறிக:
| Y: | 45 | 48 | 50 | 55 | 65 | 70 | 75 | 72 | 80 | 85 |
| X : | 25 | 30 | 35 | 30 | 40 | 50 | 45 | 55 | 60 | 65 |
2.
புள்ளியியலின் இயல்பு, எல்லைகளை விளக்குக.
3.
4.
நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.
5.
மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.
6.
7.
கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.
8.
மறைமுக வரிகளின் நன்மைகள் யாவை?
9.
10.
உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க
11.
வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிடுக.
12.
அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.
13.
ஜேக்கப் வைனரால் வடிவமைக்கப்பட்ட வாணிக வீத வகைகளை விவரி.
14.
ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டினை விவரி.
15.
16.
வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக
17.
வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களை விவரிக்க.
18.
பணத்தின் பணிகளை விளக்குக.
19.
பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி.
20.
கீன்சின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.
21.
ADF, ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.
22.
23.
நாட்டு வருமானத்தின் முக்கியத்துவத்தை விவரி.
24.
முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக.
25.
பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.
1.
| X | Y | dx = X - 45 | dy = Y - 65 | dx2 | dy2 | dxdy |
| 25 | 45 | -20 | -20 | 400 | 400 | 400 |
| 30 | 48 | -15 | -17 | 225 | 289 | 255 |
| 35 | 50 | -10 | -15 | 100 | 225 | 150 |
| 30 | 55 | -15 | -10 | 225 | 100 | 150 |
| 40 | 65 | -5 | 0 | 25 | 0 | 0 |
| 50 | 70 | 5 | 5 | 25 | 25 | 25 |
| 45 | 75 | 0 | 10 | 0 | 100 | 0 |
| 55 | 72 | 10 | 7 | 100 | 49 | 70 |
| 60 | 80 | 15 | 15 | 225 | 225 | 225 |
| 65 | 85 | 20 | 20 | 400 | 400 | 400 |
| \(\sum\)X = 435 | \(\sum\)Y = 645 | \(\sum\)dx = (X - A) =-15 |
\(\sum\)dy = (Y - B) = -5 |
\(\sum\)dx2 = 1725 | \(\sum\)dy2 = 1813 | \(\sum\)dx dy = 1675 |

\(\sum\)dx = -15, \(\sum\)dy = -5, \(\sum\)dx2 = 1725, \(\sum\)dy2 = 1813, \(\sum\)dx dy = 1675
\(\begin{aligned}
b_{x y}=\frac{\mathrm{N} \sum \mathrm{d}_x \mathrm{~d}_y-\left(\sum \mathrm{d}_x\right)\left(\sum \mathrm{d}_y\right)}{\mathrm{N} \sum d_y{ }^2-\left(\sum d_y\right)^2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{(10)(1675)-(-15)(-5)}{(10)(1813)-(-5)^2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{16750-75}{18130-25}
\end{aligned}\)

\(\begin{aligned}
=\frac{3335}{3621}=0.92
\end{aligned}\)
\(\begin{aligned}
b_{y x}=\frac{\mathrm{N} \sum \mathrm{d}_x \mathrm{~d}_y-\left(\sum \mathrm{d}_x\right)\left(\sum \mathrm{d}_y\right)}{\mathrm{N} \sum d_x^2-\left(\sum d_x\right)^2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{(10)(1675)-(-15)(-5)}{(10)(1725)-(-15)^2}=
\end{aligned}\)\(\frac{16675}{17250-225}\)\(=\frac{16675}{17025}=0.98\)
X on Y
X - \(\overline{X}\) = bxy(Y - \(\overline{Y}\))
X - 43.5 = 0.92 (Y - 64.5)
X - 43.5 = 0.92Y - 59.34
X = 0.92Y - 59.34 + 43.5
X = 0.92Y - 15.84
Y on X
Y - \(\overline{Y}\) = byx(X - \(\overline{X}\))
Y - \(\overline{Y}\)= byx(X - \(\overline{X}\))
Y - 64.5 = 0.98 (X - 43.5)
Y - 64.5 = 0.98 (X - 43.5)
Y = 0.98 X - 42.63 + 64.5
Y = 0.98X + 21.87
2.
புள்ளியியலின் இயல்புகள்:
1. புள்ளியியலில் அறிவியல், கலையியல் ஆகிய இரண்டின் தன்மைகளும் கலந்திருக்கின்றன.
2. முறைப்படுத்தப்பட்ட அறிவின் தொகுப்பினை அறிவியலாக காண்கின்றோம்.
3. புள்ளியியல் என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும்.
4. இது விவரங்களைப் பகுத்தாய்ந்து, அதன் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்கவும், உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை சோதனை செய்து துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.
5. புள்ளி விவரங்களை திரட்டுவது, அட்டவணையிடுவது. முடிவுகளை எடுப்பது. தீர்மானங்களைச் செய்வது என பல புள்ளிவிவர நடவடிக்கைகளில் கலையியலின் உட்கூறுகள் கலந்துள்ளன.
புள்ளியியலின் பரப்பு:
1. புள்ளியியல் பரப்பு மிகவும் விரிந்ததாகும்.
2. புள்ளியியல் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதனை காண்போம்.
பொருளியலில் புள்ளியியல் :
1. பொருளியியலில் பல சிக்கல்கள் உள்ளன.
2. எடுத்துக்காட்டாக, உற்பத்தி, வருமானம், செலவு, பகிர்வு, சேமிப்பு போன்றவையாகும்.
3. விவரங்களைத் திரட்டுவது, வகைப்படுத்துவது, பகுப்பாய்வு செய்வது, முடிவுகளை எடுப்பது, கொள்கைகளை வகுப்பது என புள்ளியியல் பொருளியலில் இரண்டறக் கலந்துள்ளது.
தொழிலில் புள்ளியியல் : தொழிற்சாலைகளில் புள்ளியலின் பயன்கள் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளன. மிக முக்கியமாக தரக்கட்டுப்பாட்டு நுட்பம் (Quality Control) இங்குப் பயன்படுத்தப்படுகிறது.
புள்ளியிலும் வாணிகமும் :
1. வாணிகத்திற்கு புள்ளியியல் முக்கியமானதாகும்.
2. நடப்பு நிலைகளைப் புரிந்து கொள்ளவும், எதிர்காலப் போக்கினை உணர்ந்து கொள்ளவும் சந்தை ஆய்வுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
புள்ளியியலும், கல்வியியலும் :
மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய கல்விக்கான தேவையைக் கண்டறிவதில் புள்ளியியல் மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது.
புள்ளியியலும் திட்டமிடலும் :
1. அனைத்து அரசுத் துறைகளும் சிறப்பாக இயங்கும் பொருட்டு திட்டமிடலின் அடிப்படையிலே செயல்படுகின்றன.
2. திட்டமிடுதலில் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், அதை செயல்படுத்துவதிலும் புள்ளிவிவரங்கள் துணை செய்கின்றன.
புள்ளியியலும், மருத்துவமும் :
1. மருத்துவத்தில் புள்ளியியல் பெருமளவுக்குப் பயன்படுகின்றது.
உடல் சோதனைகள் அனைத்தும் புள்ளி விவரங்களாகத் தொகுக்கப்படுகின்றன.
2. மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அனைத்திலும் புள்ளியியலின் பல்வேறு பகுதிகள் பயன்படுகிறது.
புள்ளியியலும் நவீன பயன்பாடுகளும்:
புள்ளியியல், நிறுவனங்களின் முடிவெடுத்தலில் புதிய மாதிரிகளை உருவாக்கி துல்லியமான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
இப்பணியினைச் செய்வதற்குப் பல புதிய மென் பொருட்களை உருவாக்கியுள்ளனர்.
3.
4.
இப்போதுள்ள சந்ததியினருக்கு மட்டுமின்றி எதிர்காலச் சந்ததியினருடன் வாழ்வதற்குத் தேவையான வளத்தை வைத்து விட்டு அடைகின்ற மேம்பாடே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும்.
மேல்தட்டு மக்களின் ஆடம்பர விருப்பங்கள் மட்டுமல்லாது ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளான, உணவு, துப்புரவு, உடல்நலம், கல்வி முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.
நீடித்த நிலையான மேம்பாட்டின் நோக்கங்கள்
1. எல்லா வடிவங்களிலும் எல்லா இடத்திலும் வறுமையை ஒழித்தல்.
2. அனைத்து வயதினரின் நலமான வாழ்வை உறுதிப்படுத்துதல்.
3. எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை வழங்கி வாழ்நாள் முழுக்கக் கற்றுக்கொள்ள வசதி செய்தல்.
4. பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் பாலின சமன்பாட்டை சாதித்தல்.
5. குடிநீரும், துப்புரவும் அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
6. தூய்மையான, நீடித்த, நிலையான, எளிதில் பெறக்கூடிய, சக்தியினை அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
7. தேவையான கட்டமைப்புகளை வழங்குதல், தொழில்மயமாக்கல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல்.
8. நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் உள்ள சமமின்மையை அகற்றுதல்.
9. பாதுகாப்பான, அமைதியான யாவரையும் உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குதல்
10. நீடித்த நிலையான உற்பத்தியையும் நுகர்வினையும் உறுதிப்படுத்துதல்.
5.
சுற்றுச்சூழல் தரம் என்பது சுற்றுச்சூழல் பண்புகளின் தொகுப்பாகும்.
இன்னும் தெளிவாகக் கூறுவது என்றால் அப்பண்புகள் ஒவ்வொன்றின் அளவும் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற தொகுப்பின் குறியீட்டு எண் ஆகும்.
இத்தரம் பொதுவாகவும் நிர்ணயிக்கப்படலாம் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கான சூழ்நிலையின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படலாம்.
மனிதன் மீதும் இதர உயிரினங்களின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துவதால் சுற்றுசூழல் தரம் (நிர்ணயம்) என்பது மிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டிய ஒன்றாகிறது.

முதலாளித்துவ செயல்முறைகளினால் சுற்றுச்சூழல் தரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றது.
சுற்றுச்சூழல் என்பது ஒரு பொதுப் பொருளாகும். இப்பொருள் அனைவராலும் நுகரப்படும்.
எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அதைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது. ஒருவர் அப்பொருளைப் பயன்படுத்துவதால், மற்றவர்களுக்குக் கிடைக்கும் அளவு குறைந்து போகாது.
மேலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான இறுதி நிலைச் செலவு கிட்டத்தட்ட சுழியம் ஆகும். இத்தகைய வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன.
இயற்கை வளங்களின் குறைவும் தேசிய வருமானத்தில் இயற்கை வளங்களின் பங்களிப்பும் தற்பொழுதுள்ள தேசிய வருவாய் கணக்கீட்டில் அளவிடப்படுவதில்லை.
6.
7.
கூட்டாட்சியின் கொள்கைகள் :
சுதந்திரம் :
கூட்டரசு நிதி முறையின் கீழ், ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்கள், வரி விதிப்பதற்கான அதிகாரம், பணத்தைக் கடன் வாங்குவது, செலவினை சமாளிப்பது முதலானவை பற்றி தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.
சமத்துவம்:
சமத்துவ நீதியின் அடிப்படையில், மாநிலங்கள் நியாயமான வருவாய்ப் பங்கினைப் பெறும் வண்ணம் வளங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
ஒரே மாதிரியான தன்மை:
கூட்டரசு முறையில், ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சம வரி செலுத்துதல்களை செய்ய வேண்டும்.
நிதி வசதி:
கூட்டரசு நிதி முறையில், மத்திய மாநில அரசுகளும் புதிய வரி ஆதாரங்களை தங்களது நிதி தேவைக்கேற்றவாறு பெருக்கிக் கொள்ள முடியும்.
ஒருங்கிணைப்பும் ஒன்றுபடுதலும்:
அனைத்து நிதிமுறைகளும் முழுவதும் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
நாட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள நிதி முறைகளில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.
செயல் திறன் :
நிதிமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து, திறமையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஏய்ப்பு, மோசடி ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் இருக்கக் கூடாது.
நிர்வாகச் சிக்கனம் : வசூலிக்கும் செலவு குறைவாக இருப்பதோடு அதிக வருவாய் பெற்று அரசின் பிற துறைகளுக்குச் செலவிடுவதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.
8.
மறைமுக வரிகளின் நன்மைகள்:
பரந்து காணப்படுதல் :
எல்லா நுகர்வோர்களும் அவர்கள் ஏழை அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் மறைமுக வரிகளைச் செலுத்த வேண்டும்.
இதனால்தான் நேர்முக வரிகளை விட மறைமுக வரிகள் அதிகமானவர்களை உள்ளடக்கியுள்ளது.
சமத்துவம்:
பணக்காரர்களால் பயன்படுத்தப்படக்கூடிய ஆடம்பரப் பண்டங்கள் மீது அதிக வரி சுமத்தப்படுவதால் மறைமுக வரி சமத்துவ விதியின் அடிப்படையில் அமைகிறது.
சிக்கனத் தன்மை:
உற்பத்தியாளர்களும், சில்லறை விற்பனையாளர்களும் வரியை வசூலித்து அரசுக்கு செலுத்துவதால் வசூலிப்பதற்கான செலவு குறைவாகிறது.
உடலுக்கு தீங்கான பண்டங்களின் நுகர்வைக் குறைக்கிறது:
அரசானது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பண்டங்கள் மீது மறைமுக வரியை விதிக்கிறது.
எ.கா. புகையிலை, மது போன்றவை மீதான் வரி ஆகும்.
வசதியானது:
மறைமுக வரியானது பண்டங்கள், பணிகள் மீது விதிக்கப்படுகிறது.
நுகர்வோர் இதனை வாங்கும்போது விலையுடன் சேர்த்து செலுத்திவிடுவதால், வரி செலுத்துவதை உணர்வதில்லை.
9.
10.
உலக வங்கியின் பணிகள் : உறுப்பு நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் பணியை உலக வங்கி செய்கிறது. இதற்காக நீண்ட கால கடன்களை வழங்குகிறது.
உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் முதலீட்டுக்கான கடன் உதவி:
உற்பத்திக்குக் கடன் முதலீடு வழங்கும் திட்டத்தின் மூலம் உறுப்பு நாடுகளின் நில எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்புக்கும் மேம்பாட்டுக்கும் உதவி செய்யும் பணியை உலக வங்கி செய்கிறது.
பன்னாட்டு வாணிகத்தின் சரிவிகித வளர்ச்சி:
1. பன்னாட்டு கடன் மூலதனம் வழங்கி உறுப்பு நாடுகள் அனைத்தும் சரிவிகித பன்னாட்டு வணிக நீண்டகால வளர்ச்சியடைய உதவும் பணியை வங்கி செய்கிறது.
2. இதன் விளைவாக உறுப்பு நாடுகளின் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையை அடையும்.
கடன் மற்றும் ஈட்டுறுதி வழங்குதல் :
முக்கியமான திட்டங்களுக்கு கடன் வழங்குவது, பிற வழிகளில் கடன் பெற ஈட்டுறுதி வழங்குவது ஆகிய பணிகளையும் வங்கி செய்கிறது.
வெளிநாட்டுத் தனியார் முதலீட்டிற்கு ஊக்கமளித்தல்:
1. தனியார் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் உலக வங்கியின் உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்க ஈட்டுறுதிகள் வழங்கும் பணியைச் செய்து வெளிநாட்டு மூலதனத்துக்கு ஊக்கமளிக்கிறது.
2. இந்தப் பணியின் மூலம் தனியார் மூலதனத்துடன் ஒன்று சேர்ந்து சொந்த நிதியிலிருந்து மட்டும் கடன் வழங்காமல் கடன் நிதியிலிருந்தும் கடன் வழங்க முடிகிறது.
தொழில்நுட்ப பணிகள் :
உலக வங்கி வாஷிங்டனில் அமைந்துள்ள பணியாளர் கல்லூரி நிபுணர்களைக் கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உறுப்பு நாடுகளுக்கு வழங்குகிறது.
11.
வெளிநாட்டு முதலீடு பெரும்பாலும் நேரடி முதலீடாகவே நாடுகளுக்குள் நுழைகிறது. வெளிநாட்டு நேரடி முதலீட்டின் நன்மைகளை பட்டியலிடுவோம்..
1. வெளிநாட்டு நேரடி மூலதனம் அது சென்றடையும் நாட்டின் மூலதன அளவை உயர்த்தி வேலைவாய்ப்பு வருமான அளவையும் அதிகரிக்கும்.
2. நேரடி வெளிநாட்டு மூலதனம் சென்றடையும் நாட்டிற்கு புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டு வருகிறது.
3. வெளிநாட்டு நேரடி முதலீடு நுழையும் நாட்டின் அரசுக்கு நிறுவன இலாப வரி செலுத்துவதன் மூலம் வருவாயை கொண்டு வருகிறது.
4. இலாபத்தின் ஒரு பகுதியை மறுமுதலீடு செய்வதன் மூலம் தொழில்வளம் பெருகும்.
5. புதிய தொழில் மேலாண்மை முறைகளை அறிமுகப்படுத்தும்.
6. ஏற்றுமதியை அதிகப்படுத்தி இறக்குமதிக்கான அவசியத்தை குறைத்து அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையை நீக்கும்.
7. போட்டியை உருவாக்கி உள்நாட்டு முற்றுரிமையைத் தகர்க்கும்.
8. வெளிநாட்டு நேரடி மூலதனம் முதலீட்டையும் அயல்நாட்டுச் செலாவணியையும் கொண்டு வருவதன் மூலம் சேமிப்பு முதலீடு இடைவெளியையும் நிரப்ப உதவுகிறது.
9. உள்நாட்டு துணைத் தொழில் நிறுவனங்கள் வளரவும், வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து உள்நாட்டு சிறுதொழில்கள் வளரவும் உதவும்.
10. உள்நாட்டு தொழில் முனைவோர்களை வெளிநாட்டு மூலதனம் மற்ற நாடுகளில் முதலீடு செய்ய தூண்டுகிறது.
12.
அயல் நாட்டுச் செலுத்துநிலை சமனற்ற நிலையின் மூன்று வகைகள்.
1. சுழற்சிச் சமனற்ற நிலை
2. நீண்ட காலச் சமனற்ற நிலை
3. கட்டமைப்புச் சமனற்ற நிலை
சுழற்சிச் சமனற்ற நிலை:
1. வாணிகச் சுழற்சியின் விளைவாக எழும் அயல் நாட்டு செலுத்து சமனற்ற நிலையைச் சுழற்சி சமனற்ற நிலை என்கிறோம்.
2. கீழ்க்காணும் இரண்டு காரணங்களால் இது நிகழ்கிறது. முதலாவது, நாடுகள் வாணிகச் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களிலிருப்பது.
3. இரண்டாவது, நாடுகளுக்கிடையே தேவை நெகிழ்வு அளவு மாறுபடுவது.
நீண்டகாலச் சமனற்ற நிலை:
1. நாடுகள் பொருளாதார வளர்ச்சிப் படி நிலைகளில் முன்னேறும்பொழுது நீண்டகாலத் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்வதால் உண்டாகும்.
2. வளர்ச்சியின் துவக்க நிலையில் ஒரு நாட்டின் உள்நாட்டு முதலீடு உள்நாட்டு சேமிப்பைவிடக் கூடுதலாக இருக்கும்.
3. இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருக்கும்.
4. இந்தியாவில் 1951 ஆம் ஆண்டிலிருந்தே இந்தச் சூழ்நிலை நிலவுகிறது.
கட்டமைப்புச் சமனற்ற நிலை:
1. நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களினால் நிகழும் அயல்நாட்டு செலுத்துச் சமனற்ற நிலையே கட்டமைப்பு சமனற்ற நிலையாகும்.
2. மாற்று வழங்கல் ஆதாரங்களை கண்டுபிடித்தல், செயற்கையான பதிலீட்டுப் பண்டங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்து வழிகளும் செலவும் மாற்றமடைதல் ஆகியவற்றை பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் என்கிறோம்.
13.
உற்பத்திக் காரணிகள் பரிமாற்றத்தின் அடிப்படையில் இரண்டு வகையான வாணிக வீதங்கள் உள்ளன:
ஒற்றைக் காரணி வாணிக வீதம் :
ஜேக்கப் வைனர் ஒற்றைக்காரணி வாணிக வீதத்தை வடிவமைத்தார்.
பண்ட பரிமாற்ற வாணிக வீதத்தை விரிவுபடுத்தி இந்த வணிக வீத வாய்ப்பாட்டை உருவாக்கினார்.
ஏற்றுமதி விலை குறியீட்டெண்ணிற்கும் இறக்குமதி விலைக் குறியீட்டெண்ணுக்கும் இடையான விகிதத்தில் ஏற்றுமதிக்கான உற்பத்தித் தொழில் துறையின் உற்பத்தித்திறன் குறியீட்டெண்ணின் மதிப்பினால் மாற்றம் செய்யப்பட்ட வீதமே ஒற்றைக்காரணி வாணிக வீதமாகும்.
TF=(Px/Pm)Fx
Tf = ஒற்றைக்காரணி வாணிக வீதம்
Px = ஏற்றுமதி விலைக் குறியீட்டெண்
Pm = இறக்குமதி விலைக் குறியீட்டெண்
Fx = ஏற்றுமதி பொருள் உற்பத்தி செய்யும் தொழில் உற்பத்தித்திறன் குறியீட்டெண்
ii) இரட்டைக் காரணி வணிக வீதம் : இந்த வீதத்தையும் வைனரே வடிவமைத்தார். இதன் வாய்ப்பாட்டு வடிவம் கீழ்வருமாறு.
Tff = (Px/Pm)(Fx/Fm)
Tff = இரட்டைக் காரணி வாணிக வீதம்
Px = ஏற்றுமதி விலைக் குறியீட்டெண்
Pm = இறக்குமதி விலைக் குறியீட்டெண்
Fx = ஏற்றுமதி பொருள் உற்பத்தி செய்யும் தொழில் உற்பத்தித்திறன் குறியீட்டெண்
Fm = இறக்குமதி பொருள் உற்பத்தி செய்யும் நாட்டில் அத்துறையின் உற்பத்தித்திறன் குறியீட்டெண்.
14.
டேவிட் ரிக்கார்டோ இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொருளியல் அறிஞர். தன் “அரசியல் பொருளாதாரமும், வரி விதித்தலின் கோட்பாடுகளும்" எனும் புத்தகத்தை 1817ல் வெளியிட்டார்.
இதில் ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டை விளக்கி எழுதியுள்ளார்.
ஒரு நாடு உற்பத்தி செய்யும் பண்டங்களுக்கிடையே தனி அடக்க செலவில் வேறுபாடில்லை என்றாலும் ஒப்புமை செலவு வேறுபட்டிருக்கும்.
ஒரு நாடு குறைந்த ஒப்புமை செலவில் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்யுமானால் அந்த நாடு பன்னாட்டு வாணிகத்தின் மூலம் பலனடைய முடியும் என்கிறார்.
எடுகோள்கள்:
இரண்டு நாடுகள் இரண்டு பண்டங்களை உற்பத்தி செய்கின்றன.
கூலிச் செலவு மட்டுமே உற்பத்தி செலவாகும்.
உழைப்பாளர்கள் அனைவரும் சமமான திறன் பெற்றவர்கள்.
உழைப்பு ஒரு நாட்டுக்குள் இடம்பெயரத்தக்கது. நாடுகளுக்கிடையே இடம் பெயர இயலாதது
உற்பத்தியளவு மாறா விளைவு விதிக்குட்பட்டது.
நாடுகள் பன்னாட்டு வாணிகத்தின் மீது தடைகளை விதிப்பதில்லை.
உற்பத்தி தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் நிகழ்வதில்லை.
எடுத்துக்காட்டு:
ரிக்கார்டோவின் ஒப்புமைச் செலவு கோட்பாட்டினை அமெரிக்காவும் இந்தியாவும் துணி உற்பத்தி கோதுமை உற்பத்தி செலவுகளைக் கற்பனை உதாரணங்களாக கொண்டு புரிந்து கொள்ளலாம்.
ஒரு அலகு உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பின் அளவு:
| நாடு | துணி | கோதுமை | உள்நாட்டு பரிமாற்ற விகிதம் |
| அமெரிக்கா | 100 | 120 | 1 மூட்டை கோதுமை = 1.2 மீட்டர் துணி |
| இந்தியா | 90 | 80 | 1 மூட்டை கோதுமை = 0.88 மீட்டர் துணி |
அமெரிக்காவுக்கு துணி, கோதுமை ஆகிய இரு பண்ட உற்பத்தியிலும் முழுப் பயன்பாட்டுத் தேர்ச்சி இருப்பது மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து தெளிவாகிறது.
அமெரிக்காவிற்கு கோதுமை உற்பத்தியில் ஒப்பீட்டுச் செலவு சாதகமாக உள்ளது.
(80/120 < 90/100) இந்தியாவிற்கு துணி உற்பத்தியில் ஒப்புமைச் செலவு பாதகம் குறைவாக உள்ளது.
கோதுமை, துணி உற்பத்தியில் இந்தியாவிற்குப் பாதகம் குறைவாக இருப்பதால் இந்தியா துணி உற்பத்தியில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து கோதுமையை இறக்குமதி செய்து கொள்ளலாம்.
பன்னாட்டு வாணிகத்தில் பண்ட பரிமாற்ற விகிதம் 0.88 லிருந்து 1.2 அலகு வரை துணி ஒரு அலகு கோதுமையாக இருந்தால் இரு நாடுகளும் நன்மை பெறும்.
பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடாமல் இந்தியாவும் அமெரிக்காவும் துணியும், கோதுமையையும் அவரவர்களே உற்பத்தி செய்ய இந்தியா 170 அலகு உழைப்பையும், அமெரிக்கா 220 அலகு உழைப்பையும் பயன்படுத்த வேண்டிவரும்.
மாறாக, பன்னாட்டு வாணிகத்தை அனுமதித்தால் 80 அலகு உழைப்பளவைக் கொண்டு உற்பத்தி செய்த ஒரு மூட்டை கோதுமையை அமெரிக்காவிடம் கொடுத்து 90 அலகு உழைப்பு தேவைப்படுகிற ஒரு மீட்டர் துணியை வாங்கிவிட முடியும்.
ஆக இந்தியா 160 அலகு மட்டுமே உழைப்பைப் பயன்படுத்தி இரண்டு மூட்டை கோதுமையை உற்பத்தி செய்து, அதில் ஒரு மூட்டை கோதுமையை அமெரிக்காவிடம் ஒரு மீட்டர் துணியை பரிமாறிக் கொள்ளலாம். இதுவே பன்னாட்டு வாணிகத்தால் இந்தியாவுக்குக் கிடைக்கும் பலனாகும்.
திறனாய்வு:
உழைப்புச் செலவு உற்பத்தி செலவில் ஒரு பகுதிதான். எனவே, உழைப்புச் செலவு அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடு உண்மையை பிரதிபலிக்கவில்லை
பல்வேறு நாட்டுத் தொழிலாளிகள் ஒரே அளவு திறன் பெற்றவர்களல்லர்.
15.
16.
வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை. அவைகள் வைப்புகளைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன.
வணிக வங்கியின் பணிகள்
முதன்மைப் பணிகள்:
வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்: பொதுமக்களால் செலுத்தப்படும் வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். இது வங்கி வணிகத்திற்கான முக்கிய நிதியாதாரம் ஆகும். பொது வைப்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
கேட்பு வைப்புகள் : இவை வங்கிகளில் வைப்புகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர் முன்னறிவிப்பின்றி எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தைத் தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் ஒரு வைப்பாகும்.
கால வைப்புகள் : இவை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை வங்கிகளிடமிருந்து மீளப் பெறப்படாமல் இருக்கும் வைப்புகளாகும். (எ.கா.) நிலை வைப்பு (Fixed Deposit), தொடர் (Recurring Deposit).
கடன் வழங்குதல் :
வணிக வங்கிகள் ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டு தள்ளுபடி, மிகைப்பற்று ஆகிய முறைகளில் கடன்களை வழங்குகின்றன.
இரண்டாம் நிலைப் பணிகள் :
முகமைப் பணிகள்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முகவராக இருந்து செய்யும் பணிகள் முகமைப்பணிகள் எனப்படுகின்றன.
காசோலைகளைப் பணமாக்குதல்: தன் வாடிக்கையாளர்களுக்காக அவர்களுக்கு வரும் காசோலைகள், மாற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வங்கிகள் தீர்வகத்தின் மூலம் வசூல் செய்து கொடுக்கின்றன.
வருமானத்தைப் பெறுதல் : வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய இலாப ஈவு, ஓய்வூதியம், சம்பளம், வாடகை, வட்டி ஆகியவற்றினை வசூலித்துத் தருகின்றன.
செலவுகளைச் செலுத்துகிறது: தொலைபேசிக் கட்டணம், காப்பீட்டு பிரிமியம், கல்விக் கட்டணம், வாடகை செலுத்துதல் முதலானவற்றை வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக செய்கிறது.
பொதுப் பயன்பாட்டுப் பணிகள் :
இது வங்கிகள் தன் வாடிக்கையாளர்களுக்காக சில கூடுதல் பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் செய்யும் பணிகளைப் பொதுப் பயன்பாட்டு பணிகள் என்கிறோம்.
பாதுகாப்புப் பெட்டக வசதி : நகைகள், பங்குகள், கடன் பத்திரங்கள் முதலான மதிப்புமிக்க பண்டங்களை பாதுகாக்க, பெட்டக வசதியை வணிக வங்கிகள் தருகின்றன.
பயணக் காசோலைகளை வழங்குதல்: பயணக் காசோலைகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டுப் பயணத்தின் போது பணப்பாதுகாப்பினை வழங்குகிறது.
அயல்நாட்டுச் செலாவணியைக் கையாளுதல்: ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்களுக்கு வணிக வங்கிகள் அயல்நாட்டுச் செலாவணி வசதியைச் செய்து தருகின்றன.
நிதிமாற்றுதல்: ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு நிதியை மாற்றுவதாகும். வரைவு காசோலைகள், தொலைபேசி மற்றும் மின்னணு பரிமாற்றங்கள் மூலம் நிதி மாற்றப்படுகிறது.
கடன் உறுதியளிப்புக் கடிதம்: வாடிக்கையாளரின் கடன் நம்பகத்தன்மையைச் சான்றளிக்கும் விதமாக வணிக வங்கிகள் கடன் உறுதியளிப்பு கடிதங்களை வழங்குகின்றன.
இதர பணிகள் :
பண அளிப்பு : வணிக வங்கியின் முக்கியமான பணிகளில் ஒன்று பணப்புழக்க வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பண அளிப்பை அதிகரித்தல் ஆகும்.
கடன் உருவாக்கம் : கடன் உருவாக்கம் என்பது கடன்களையும், முன்பண அளிப்பினையும் அதிகரிக்கும் ஒரு செயல்.
புள்ளி விவரங்களை திரட்டுதல் : இந்திய ரிசர்வ் வங்கியை முதலான வணிக வங்கிகளும் வணிகம், தொழில், வேளாண்மை, நிதி முதலான அடிப்படைத் துறைகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன.
17.
இலக்கணம் :"உயர்கின்ற விலைகளையும், குறைந்த வேலையற்றோர் விழுக்காட்டையும் கொண்ட நல்ல வணிகக் காலங்களையும்; குறைகின்ற விலைகளையும், மிகுகின்ற வேலையில்லாத் திண்டாட்ட விழுக்காட்டையும் கொண்ட கெட்ட வணிகக் காலங்களையும் உள்ளடக்கியது வணிகச் சூழல் ஆகும்." -J.M. கீன்ஸ்
பூரிப்பு கட்டம் (Boom):
1. நீண்டகால இயல்பான வளர்ச்சி நிலைக்கு மேல் பொருளாதார நடவடிக்கைகள் உயர்ந்து முழு வேலைவாய்ப்பு நிலையைத் தாண்டுவது வணிகச் சூழலின் வளர்ச்சிக் கட்டம் எனப்படுகிறது.
2. பூரிப்பு நிலையில் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் உச்சநிலையில் இருக்கும்.
பின்னிறக்கம் (Recession) :
1. வளர்ச்சியின் உச்சத்தில் பூரிப்பை எய்திய பொருளியல் நடவடிக்கைகள் அடுத்ததாக கீழ்நோக்கித் திரும்புகின்றன. பூரிப்பில் வெடிப்பு நிலை ஏற்பட்டு நடவடிக்கைகள் பின்னோக்கி திரும்புவதைப் பின்னிறக்கம் என்கிறோம்.
2. நம்பிக்கைகள் இருந்த இடத்தில் அவநம்பிக்கைகள் தோன்ற ஆரம்பிக்கும். இதன் காரணமாக முதலீட்டை பெருமளவுக்குக் குறைக்க ஆரம்பிப்பார்கள்.
3. பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சியின் காரணமாக பெரும் அச்சம் உருவாகும்.
மந்தம் (Depression):
1. மந்த காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு கீழ் மிகத் தீவிரமாக குறைந்து வரும். நிறுவனங்கள் நட்டமடைவதும், மூடப்படுவதும் பொது இயல்புகளாக இருப்பதுடன் வேலைவாய்ப்பின்மையையும் ஏற்படுத்தும்.
2. வணிகச் சுழற்சியின் மிகமோசமான கட்டம் மந்தம் ஆகும்.
மீட்சி (Recovery or Revival) :
1. மந்த நிலைக்குப் பின் மீட்சி இடம் பெறுகிறது. இது மந்தத்திலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வாகும்.
2. பொருளாதார நடவடிக்கைகளை மேல்நோக்கி திரும்ப ஊக்கமளிக்கின்றன.
3. இதனால், தனியார் முதலீடுகள் மெதுவாக அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளான வேலைவாய்ப்பு, உற்பத்தி, வருமானம், கூலி, இலாபம் ஆகியன மீட்சி பெறுகின்றன.
18.
அ. முதல்நிலைப் பணிகள் :
i) பணம் ஓர் பரிமாற்றக் கருவியாக: இது பணத்தின் அடிப்படை பணியாகும். பணம் பொது ஏற்புத் தன்மையைக் கொண்டது. மேலும், இது அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் தவறாது இடம்பெறுகிறது.
ii) பணம் ஓர் மதிப்பின் அளவுகோலாக : பொருட்கள் மற்றும் பணிகளை மதிப்பளவை செய்வது பணத்தின் இரண்டாவது முக்கிய பணியாகும். ஆகவே, பணம் ஒரு பொது அளவுகோலாக பார்க்கப்படுகிறது.
ஆ. இரண்டாம் நிலைப் பணிகள்
i) பணம் ஒரு மதிப்பின் நிலைக்கலனாக: பண்டங்களைச் சேமிப்பாக வைத்திருந்தால் அது நிலைத்திருக்காது. ஆனால் பணம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பண்டங்களையும் பணிகளையும் சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள் மறைந்துவிட்டன.
ii) பணம் வருங்காலச் செலுத்துதல்களுக்கான ஓர் அடிப்படை: பண்டமாற்று முறையில் கடன் வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் நிறைந்திருந்தது. பணம் வருங்கால செலுத்துதல்களுக்கு இடையீட்டுக் கருவியாகச் செயல்படுகின்றது.
iii) பணம் வாங்கும்திறனை மாற்றிக் கொள்ளும் ஒரு கருவியாக : பொருளாதார வளர்ச்சியினை ஒட்டி பரிமாற்றம் விரிவடைந்து செல்கிறது.
இ. துணைப்பணிகள் :
i) கடனுக்கான அடிப்படை : கடன் முறைக்கு அடிப்படையாக பணம் அமைந்துள்ளது. வணிக வங்கிகள் வாடிக்கையாளர் கணக்குகளில் உள்ள ரொக்க இருப்பின் அளவை பொருத்தே கடன்களை உருவாக்குகின்றன.
ii) பணம் நாட்டு வருமானப் பங்கீட்டிற்கு உதவுகிறது: பண்டமாற்று முறையில் நாட்டு வருமானப் பங்கீடானது மிகச்சிக்கலான ஒன்றாகும். ஆனால், பணம் என்ற கருவி கண்டறியப்பட்ட பின் வாரம், கூலி, வட்டி, இலாபம் என காரணிகளுக்கான வருமானத்தை, அதாவது நாட்டு வருமானத்தை எளிதாகப் பகிர்ந்தளிக்க முடிகிறது.
iii) இறுதிநிலைப் பயன்பாடுகளையும், இறுதி நிலை உற்பத்தித் திறன்களையும் சமன் செய்திட பணம் பயன்படுகிறது: நுகர்வோர் தனது மொத்தப் பயன்பாட்டினை உச்சநிலைப்படுத்தும் நோக்கில் தாம் நுகரும் பல்வேறு பண்டங்களின் இறுதிநிலைப் பயன்பாடுகளை பணத்தின் துணையுடன் சமப்படுத்த வேண்டியதாகிறது.
iv) பணம் மூலதனத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துகிறது : மூலதனம் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறது. பணம் நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும்.
ஈ. இதர பணிகள் :
i) திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைக்க பணம் உதவுகிறது: பணம் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு சாதனமாகும். நிறுவனங்கள் தங்களின் செலுத்துதல்களை மேற்கொள்ள எப்பொழுதும் குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணத்தை தயார் நிலையில் வைத்திருக்கும்.
ii) பணம் பொதுமைப்படுத்தப்பட்ட வாங்கு திறனைக் குறிக்கிறது : எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக அந்த பணம் எனும் வாங்குதிறன் சேமித்து வைக்கப்பட்டதோ, அதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
iii) பணம் மூலதனத்திற்கு நீர்மைத் தன்மையைத் தருகிறது : பணம் என்பது நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும். இதன் துணையுடன் அனைத்து இடு பொருட்களையும் வாங்குவதன் மூலம் எந்த ஒரு செய்பொருளையும் உற்பத்தி செய்ய இயலும்.
19.
1. அரசு ₹100 கோடி பொதுப்பணிக்காக கூலியும், இதர பண்டங்கள் வாங்குவதற்காகச் செலவிடுகிறது எனக் கொள்வோம். இந்த ₹100 கோடியனாது உழைப்பாளர்களுக்கும் பொருட்களை அளித்தவர்களுக்கும் வருமானமாக அமையும்.
2. அவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 (80%) எனக் கொண்டால் ₹80 கோடியை நுகர்வுச் செலவுக்கும், மீதம் ₹20 கோடியைச் சேமிக்கவும் செய்வர்.
இதில் மேற்காண் வருமானம் பெற்றவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 எனில் ₹80 கோடியில் ₹64 கோடி நுகர்வுச் செலவுக்கும் மீதம் ₹16 கோடியை சேமிக்கவும் செய்வர். இந்த வழியில்
3. நுகர்வுச் செலவானது ஒரு சங்கிலித் தொடர் போன்று சென்று கொண்டே செல்லும்.
எனவே இறுதி முடிவுகள்
ΔΥ = 100 + 100 × 4/5 + 100x [4/5]2 + 100 x [4/5]3
அல்லது,
ΔΥ = 100 + 100 × 0.8+100x (0.8)2 + 100 x (0.8) = 100+80+64 +51.2...
= 500
அதாவது 100 × 1/1-4/5
100 x 1/1/5
100 × 5 = ₹500
உதாரணமாக C
100+ 0.8Y, I = 100,
என்றால் Y 1Y-0.8Y 0.2Y Y 100+0.8Y + 100 200 = 200/0.2 = 1000 → B
I இன் மதிப்பு 110, ஆக அதிகரிக்கப்பட்டால் 0.2Y = 210 Y = 210/0.2 = 1050 → D
1, ₹10 அதிகரித்தால், Y ₹50 அதிகரிக்கும்.
இது பெருக்கியின் விளைவு.
புள்ளி Aயில், Y = C = 500
C = 100+0.8 (500) = 500; S = 0
புள்ளி Bயில், Y = 1000
C = 100 + 0.8 (1000) = 900; S = 100 = I
புள்ளி Dயில், Y = 1050
C = 100 + 0.8 (1050) = 940; S = 110 = I
I மதிப்பு 10 அதிகரிக்கும் போது Y மதிப்பு 50 அதிகரிக்கும். இதுவே பெருக்கி விளைவாகும்.
K = \(\frac{1}{0.2}=5\)
20.
.
1. "உளவியல் விதியின் அடிப்படையாக மனிதன் தன் முன்னறிவு, அனுபவம், விரிவான உண்மை ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் நம்பிக்கையுடன் வருவாய் உயரும்போது நுகர்வை அதிகமாக்குவார்கள்; ஆனால் வருவாய் கூடிய அளவுக்கு நுகர்வு அதிகரிக்காது".
2. இந்த விதி மனிதர்கள் வருமானம் உயர்ந்த முழு அளவிற்கும் செலவு செய்யமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது.
ஊகங்கள்
1. மற்றவை மாறாது.
2. சுமூகமான சூழல் நிலவுகிறது.
3. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தலையிடாக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
விதியின் கருத்துகள்
இவ்விதி மூன்று கருத்துகளைக் கொண்டது.
1. வருமானம் உயரும்போது, நுகர்வுச் செலவும் அதிகரிக்கும்.
2. அதிகரித்த வருமானம் நுகர்வுச் செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகிறது.
3. அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வையும், சேமிப்பையும் அதிகரிக்கச் செய்யும். இவ்விதியின் மூன்று கருத்துகளும் அட்டவணை உதவியுடன் விளக்கப்படுகிறது.
கருத்துரை (1) : வருமானம் ₹60 கோடிகளாக அதிகரிக்கின்றது மற்றும் நுகர்வு ₹50 கோடிகளாக அதிகரிக்கிறது.
கருத்துரை (2) : அதிகரித்த ₹60 கோடி வருமானம்
இரண்டாக, நுகர்விற்கும், சேமிப்பிற்கும் இடையே முறையே பிரிக்கின்றது (அதாவது ₹50 கோடி நுகர்வும், ₹10 கோடி சேமிப்புமாக)
கருத்துரை (3) : வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வு மற்றும் சேமிப்பு அதிகரிக்கின்றது. நுகர்வோ சேமிப்போ குறையவில்லை.
அட்டவணை: விதியின் மூன்று கருத்துரைகள்
| வருமானம் y | நுகர்வு C | சேமிப்பு S = Y - C |
| 120 | 120 | 0 |
| 180 | 170 | 10 |
| 240 | 220 | 20 |
இங்கே வருமானம் படுகிடை (x)- அச்சிலும், நுகர்வுச் சேமிப்பு செங்குத்து (y)- அச்சிலும் அளவிடப்படுகிறது. C - என்பது நுகர்வுச் சார்பு வளைகோடு 45 - டிகிரி கோடு வருமானமும், நுகர்வும் சம அளவாக இருப்பதைக் காட்டுகிறது.
21.
கீன்ஸின் வேலைவாய்ப்புக்கோட்பாட்டில் ADF & ASF சமநிலையை விளக்க, குடும்பங்கள் மற்றும் வியாபாரம் ஆகிய இரு துறைகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
1. நுகர்வு செலவு தொடர்பான முடிவுகளை குடும்பங்களும், முதலீடு தொடர்பான முடிவுகளை வியாபார நிறுவனங்களும் எடுக்கின்றன.
2. மேலும் நுகர்வுச் சார்பு நேர்கோடாகவும், முதலீடு தன்னிச்சையானது எனவும் கீன்சின் கோட்பாடு ஊகிக்கிறது.
கீன்சின் கோட்பாட்டில் வருமான சமநிலையை நிர்ணயிக்க இரு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
i. தொகு தேவை, தொகு அளிப்பு அணுகுமுறை.
ii. சேமிப்பு, முதலீடு அணுகுமுறை. மொத்த தேவை, மொத்த அளிப்பு அணுகுமுறை இவ்வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது.
3. தொகு தேவையும், தொகு அளிப்பு 'E' எனும் புள்ளியில் சமநிலை அடைகின்றன.
4. இப்புள்ளியில் வேலைவாய்ப்பு No ஆக இருக்கும். ON1 அளவு வேலைவாய்ப்பில், தொகு அளிப்பு N1 R1 ஆக இருக்கும் ஆனால் M1N2 அளவு உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களால் முடியும்.
5. எதிர்பார்க்கும் இலாபத்தை அடைய வேண்டிய உற்பத்தியின் அளவு M1R1 ஆகும்.
6. இந்த இலாப நிலையில் முதலாளி அதிக உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவார்.
7. சமநிலை 'E' என்ற புள்ளியை அடைந்த பிறகு உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவார். ஏனெனில் No நிலைக்குப் பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்தால் தொகு தேவை, தொகு அளிப்பை விடக் குறைவாக இருக்கும்.
9. ஆகவே வேலைச் சமநிலையை விளக்குவதில் விளைவுத்தேவைக் கருத்து முக்கியப் பங்கு வகுக்கிறது.
22.
23.
நாட்டு வருமானத்தின் முக்கியத்துவம் :
1. நாட்டு வருமானம் கணக்கீட்டின் மூலம், பொருளாதாரத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் பற்றியும் நாட்டு வருமானத்தில் அத்துறைகளின் பங்களிப்பு பற்றியும் அறிய முடிகின்றது.
2. நாட்டளவிலான பணவியல் கொள்கைகள், பொது நிதிக் கொள்கைகள் ஆகியவற்றை உருவாக்கவும், பொருளாதாரத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்லவும் கடைப்பிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளைக் கையாளவும் நாட்டு வருமானம் ஆய்வு உதவுகிறது.
3. திட்டமிடுதலுக்கும், திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கும் நாட்டின் மொத்த வருமானம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் நுகர்ச்சியின் அளவு ஆகிய புள்ளி விவரங்களை நாட்டு வருமானம் கணக்கீடு அளிக்கின்றது.
4. குறுகிய கால, நீண்ட கால பொருளாதார மாதிரிகளை உருவாக்க நாட்டு வருமானம் கணக்கீடு பயன்படுகிறது.
5. துறைவாரியான பொருளாதார விவரங்களையும், ஒரு நாட்டில் வட்டாரங்களின் வருமானத்தை ஒப்பிடவும், மற்ற நாடுகளின் வருமானத்தோடு ஒப்பிடவும், நாட்டு வருமானம் விவரங்கள் பயன்படுகின்றன.
6. நாட்டு வருமானம் மூலம் தலா வருமானம் கணக்கிடப்படுகிறது.
7. ஒரு நாட்டில் இருக்கும் பல்வேறு உற்பத்தி காரணிகளுக்கான வருமானப் பகிர்வை தெரிந்துகொள்ள நாட்டு வருமானம் பயன்படுகிறது.
8. பேரியல் பொருளாதாரக் காரணிகளான வரி - GDP விகிதம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை GDP விகிதம், நிதிப்பற்றாக்குறை - GDP விகிதம், கடன் - GDP விகிதம் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது.
24.
| வ.எண் | தன்மைகள் | முதலாளித்துவம் | சமத்துவம் | |
| 1 | உற்பத்தி மூலங்களின் உரிமை | தனியார் உரிமை | பொது (அரசு) உரிமை | |
| 2 | பொருளாதார நோக்கம் | இலாபம் | சமூக நலன் | |
| 3 | மைய பிரச்சனைகளின் தீர்வு | தடையில்லா சந்தை முறை | ஒன்றிய அரசின் திட்டமுறை | |
| 4 | அரசின் பங்கு | மூலப் பொருள்கள் கட்டுப்பாடு மட்டும் | முழு ஈடுபாடு | |
| 5 | வருமானப் பங்கீடு | சமனற்ற நிலை | சமநிலை | |
| 6 | நிறுவன தன்மை | தனியார் நிறுவனம் | அரசு நிறுவனம் | |
| 7 | பொருளாதார சுதந்திரம் | முழுமையான சுதந்திரம் | சுதந்திரமின்மை | |
| 8 | முக்கியமான சிக்கல் | சமமின்மை | திறனின்மை | |
25.
நாட்டு வருமானம் :
நாட்டு வருமானம் கணக்கிடுதல், நாட்டு வருமானத்தில் பல துறைகளின் பங்கு முதலானவை பேரியல் பொருளாதாரப் பகுத்தாய்வின் அடிப்படை கூறுகளாகும்.
பண வீக்கம்:
பண வீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதைக் குறிப்பதாகும். மொத்த விலைக் குறியீட்டெண். நுகர்வோர் விலைக் குறியீட்டெண், ஆகியவற்றைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.
வணிகச் சுழற்சி :
பொதுவாக எல்லா நாடுகளும் வணிக ஏற்றத்தாழ்வாலும், வணிக சுழற்சியாலும் ஏற்படும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. மொத்த பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வணிகச் சுழற்சி மாற்றங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
வறுமையும் வேலையின்மையும்:
வளங்கள் நிறைந்த நாடுகளிலும் வறுமையும். வேலையின்மையும் மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. இது ஒரு பொருளாதார முரண்பாடுகளில் ஒன்றாகும்.
பொருளாதார வளர்ச்சி :
பேரியல் பகுத்தாய்வின் மூலம் தான் ஒரு பொருளாதார அமைப்பின் வளர்ச்சி, முன்னேற்றம், அவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
பொருளாதாரக் கொள்கைகள்:
பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதற்குப் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது. அடிப்படை சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், தடைகளைத் தகர்த்தெறியவும், வளர்ச்சியை அடைவதற்கும் பொருளாதாரக் கொள்கைகள் தேவைப்படுகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards