12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Economics subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test1.
நில மாசு என்றால் என்ன? அதற்கான காரணங்களை குறிப்பிடுக.
2.
இ-கழிவுகள் என்பதன் பொருள் தருக.
3.
நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?
4.
பல்வகையான காற்று மாசுகளை விளக்குக
5.
பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.
1.
நில மாசு: "கழிவுகளைக் கொட்டுவதால் நிலம் தரக்குறைவானதாக மாறும். சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பல திட, திரவ, வாயுப் பண்டங்கள் நிலத்தின் தன்மையைக் கெடுத்துவிடுதல் நிலமாசு ஆகும்”.
நிலமாசுவிற்கான காரணங்கள் :
காடுகளை அழித்தல் : காடுகளை அழித்து நிலமாக மாற்றுவது சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கியமான காரணியாக விளங்குகின்றது.
வேளாண்மை நடவடிக்கைகள்: உழவர்கள் அதிக நச்சுத் தன்மை கொண்ட உரம், பூச்சி மருந்து ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் நிலம் நச்சுத் தன்மை அடைகின்றது.
சுரங்கத் தொழில்கள்: கனிமங்களை வெட்டி எடுக்கும் போதும், சுரங்கங்கள் அமைக்கப்படும் போதும் நிலம் மாசு அடைகின்றது.
மண்ணில் புதைத்தல் : ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு ஆண்டிலும் டன் கணக்கில் குப்பையை உற்பத்தி செய்கின்றது. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் நிலத்தில் புதைக்கப்பட்டு நிலமாசு அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
கட்டுமானப் பணிகள் : மக்கள் தொகை வளர்ச்சி, நகர்ப்புறமாதல் ஆகியன காரணமாக கட்டடங்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதனால், மணல், மரம், கம்பி, சிமெண்ட், செங்கல், நெகிழிப் பண்டங்கள் ஆகியவற்றின் கழிவுகள் குப்பைகளாகப் புறநகர்ப் பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக நிலம் மாசடைகின்றது.
அணுமின் கழிவுகள்: அணுமின் நிலையங்களிலுள்ள கழிவுகளான கதிர்வீச்சுப் பண்டங்கள், நச்சுத் தன்மை கொண்ட தீமை விளைவிக்கும் வேதிப்பண்டங்கள் மனித நலத்தைப் பாதிக்கின்றது. இதன் மூலமும் நிலம் மாசுபடக் கூடும்.
2.
செய்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் E-கழிவுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ஏற்படுகின்றன.
இவை குளிர்சாதனப் பெட்டிகள், காற்றுச் சீரமைப்பிகள், (Air conditioners), கைபேசிகள், கணினிகள் முதலான பெருமளவில் வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தும் மின்னணுச் சாதனங்களை உள்ளடக்கியவையாகும்.
தொலைக்காட்சி, கணினிகள், கேட்கும் கருவிகள், தொலைபேசி, VCR, DVD, தொலைநகல், நகலெடுக்கும் இயந்திரங்கள், கம்பியில்லா கருவிகள் முதலான வீட்டு பயன்பாட்டு பொருட்களை கழிக்கும் போதோ அல்லது மறுசுழற்சி செய்யும் போதோ E-கழிவுகள் தோன்றும்.
3.
கழிவு நீரும் தேவையற்ற நீரும் வெளியேற்றப்படுதல்:
பல இடங்களில் இருந்து வருகின்ற சாக்கடைத் தண்ணீர், கழிவு நீர் குப்பைகள், வேளாண்மைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றன.
இத்தகைய கழிவுகளில் உள்ள நச்சுப் பண்டங்கள் தண்ணீரை மாசுபடுத்தி நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றன.
திடக் கழிவுகள் குவித்தல் : திடப்பொருள் கழிவுகளை நீர் நிலையில் கொட்டுதல், நீர் நிலையுடன் கலந்துவிடுமாறு விட்டுவிடுதல்.
எண்ணெய் சிந்துதல் : கப்பல்களில் குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களின் எண்ணெய் கடல்நீரை மாசுபடுத்துகின்றது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
அமில மழை : காற்று மாசுவால் அமில மழை ஏற்பட்டு நீர் மாசு ஏற்படுத்துகின்றது. காற்று மாசுவில் உள்ள அமிலத் துகள்கள் தண்ணீர் ஆவியுடன் கலந்து அமில மழையை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
புவி வெப்பமடைதல் : புவி வெப்பமடைதல் காரணமாக நீரின் வெப்பநிலை அதிகரித்து நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றது.
4.
உட்புறக் காற்று மாசு : மனிதர்களின் வாழிடத்திற்குள் தீங்கு விளைவிக்கக்கூடிய மாசுகள், காற்றில் கலந்திருப்பதை உட்புற காற்று மாசு என்கிறோம். எ.கா. திட எரிபொருட்களைக் கொண்டு சமையல் செய்கின்றபோது உட்புறக் காற்று மாசு அடைகின்றது.
வெளிப்புறக் காற்று மாசு : காற்று மண்டலத்தில் திட, திரவ, அல்லது காற்று வடிவ மாசுகள் கலந்திருப்பதே வெளிப்புற காற்று மாசு எனப்படுகிறது. தொழிற்சாலைகளாலும், மோட்டார் ஊர்திகளாலும் வெளிப்புறக் காற்று மாசு அடைகின்றது.
5.
பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பினை விளக்க ஆலன் நீஸ் மற்றும் R.V. அய்யர்ஸ் "பொருள்சார் சமநிலை அணுகுமுறை” வகுத்துள்ளனர்.
"உற்பத்தி முறைக்குள் உள்நுழையும் எந்தவொன்றும் பிறகு வெளியேறித்தான் ஆக வேண்டும். என்பதை வலியுறுத்துகிறது.
இயற்பியலின் பொருள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான வெப்ப இயக்கவியல் முதல் விதி.
இவ்விதியை ஆதாரமாகக் கொண்டு சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்குமான தொடர்பினை விளக்குவதுதான் மேற்சொன்ன பொருள்சார் சமநிலை அணுகுமுறையாகும்.
M = G - (RC - RP) + (RrP + Rrc) = RdP + Rdc
| இயற்கை உலகிலிருந்து பெறப்படும் மூலப் பொருட்களும் சக்தியும் (M) | = | பொருளாதார நடவடிக்கைகள் உற்பத்தியில் பணிகளும் (G) - நுகர்ச்சிலும் உற்பத்தியிலும் ஏற்படும் கழிவுகள் (Rc + Rp) + மறுசுழற்சி செய்யப்பட்ட உற்பத்தியும் நுகர்ச்சிக் கழிவுகளும் (Rpr + Rcr) | = | இயற்கை உலகில் இறுதியாக விடப்படும் உற்பத்தியும் நுகர்ச்சிக் கழிவுகளும் = (Rpd + Rcd) |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards