12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Economics subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test1.
அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.
2.
ஜேக்கப் வைனரால் வடிவமைக்கப்பட்ட வாணிக வீத வகைகளை விவரி.
3.
4.
ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டினை விவரி.
5.
உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வாணிகத்துக்குமிடையிலான வேறுபாடுகளை விவாதிக்கவும்.
1.
அயல் நாட்டுச் செலுத்துநிலை சமனற்ற நிலையின் மூன்று வகைகள்.
1. சுழற்சிச் சமனற்ற நிலை
2. நீண்ட காலச் சமனற்ற நிலை
3. கட்டமைப்புச் சமனற்ற நிலை
சுழற்சிச் சமனற்ற நிலை:
1. வாணிகச் சுழற்சியின் விளைவாக எழும் அயல் நாட்டு செலுத்து சமனற்ற நிலையைச் சுழற்சி சமனற்ற நிலை என்கிறோம்.
2. கீழ்க்காணும் இரண்டு காரணங்களால் இது நிகழ்கிறது. முதலாவது, நாடுகள் வாணிகச் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களிலிருப்பது.
3. இரண்டாவது, நாடுகளுக்கிடையே தேவை நெகிழ்வு அளவு மாறுபடுவது.
நீண்டகாலச் சமனற்ற நிலை:
1. நாடுகள் பொருளாதார வளர்ச்சிப் படி நிலைகளில் முன்னேறும்பொழுது நீண்டகாலத் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்வதால் உண்டாகும்.
2. வளர்ச்சியின் துவக்க நிலையில் ஒரு நாட்டின் உள்நாட்டு முதலீடு உள்நாட்டு சேமிப்பைவிடக் கூடுதலாக இருக்கும்.
3. இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருக்கும்.
4. இந்தியாவில் 1951 ஆம் ஆண்டிலிருந்தே இந்தச் சூழ்நிலை நிலவுகிறது.
கட்டமைப்புச் சமனற்ற நிலை:
1. நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களினால் நிகழும் அயல்நாட்டு செலுத்துச் சமனற்ற நிலையே கட்டமைப்பு சமனற்ற நிலையாகும்.
2. மாற்று வழங்கல் ஆதாரங்களை கண்டுபிடித்தல், செயற்கையான பதிலீட்டுப் பண்டங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்து வழிகளும் செலவும் மாற்றமடைதல் ஆகியவற்றை பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் என்கிறோம்.
2.
உற்பத்திக் காரணிகள் பரிமாற்றத்தின் அடிப்படையில் இரண்டு வகையான வாணிக வீதங்கள் உள்ளன:
ஒற்றைக் காரணி வாணிக வீதம் :
ஜேக்கப் வைனர் ஒற்றைக்காரணி வாணிக வீதத்தை வடிவமைத்தார்.
பண்ட பரிமாற்ற வாணிக வீதத்தை விரிவுபடுத்தி இந்த வணிக வீத வாய்ப்பாட்டை உருவாக்கினார்.
ஏற்றுமதி விலை குறியீட்டெண்ணிற்கும் இறக்குமதி விலைக் குறியீட்டெண்ணுக்கும் இடையான விகிதத்தில் ஏற்றுமதிக்கான உற்பத்தித் தொழில் துறையின் உற்பத்தித்திறன் குறியீட்டெண்ணின் மதிப்பினால் மாற்றம் செய்யப்பட்ட வீதமே ஒற்றைக்காரணி வாணிக வீதமாகும்.
TF=(Px/Pm)Fx
Tf = ஒற்றைக்காரணி வாணிக வீதம்
Px = ஏற்றுமதி விலைக் குறியீட்டெண்
Pm = இறக்குமதி விலைக் குறியீட்டெண்
Fx = ஏற்றுமதி பொருள் உற்பத்தி செய்யும் தொழில் உற்பத்தித்திறன் குறியீட்டெண்
ii) இரட்டைக் காரணி வணிக வீதம் : இந்த வீதத்தையும் வைனரே வடிவமைத்தார். இதன் வாய்ப்பாட்டு வடிவம் கீழ்வருமாறு.
Tff = (Px/Pm)(Fx/Fm)
Tff = இரட்டைக் காரணி வாணிக வீதம்
Px = ஏற்றுமதி விலைக் குறியீட்டெண்
Pm = இறக்குமதி விலைக் குறியீட்டெண்
Fx = ஏற்றுமதி பொருள் உற்பத்தி செய்யும் தொழில் உற்பத்தித்திறன் குறியீட்டெண்
Fm = இறக்குமதி பொருள் உற்பத்தி செய்யும் நாட்டில் அத்துறையின் உற்பத்தித்திறன் குறியீட்டெண்.
3.
4.
டேவிட் ரிக்கார்டோ இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொருளியல் அறிஞர். தன் “அரசியல் பொருளாதாரமும், வரி விதித்தலின் கோட்பாடுகளும்" எனும் புத்தகத்தை 1817ல் வெளியிட்டார்.
இதில் ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டை விளக்கி எழுதியுள்ளார்.
ஒரு நாடு உற்பத்தி செய்யும் பண்டங்களுக்கிடையே தனி அடக்க செலவில் வேறுபாடில்லை என்றாலும் ஒப்புமை செலவு வேறுபட்டிருக்கும்.
ஒரு நாடு குறைந்த ஒப்புமை செலவில் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்யுமானால் அந்த நாடு பன்னாட்டு வாணிகத்தின் மூலம் பலனடைய முடியும் என்கிறார்.
எடுகோள்கள்:
இரண்டு நாடுகள் இரண்டு பண்டங்களை உற்பத்தி செய்கின்றன.
கூலிச் செலவு மட்டுமே உற்பத்தி செலவாகும்.
உழைப்பாளர்கள் அனைவரும் சமமான திறன் பெற்றவர்கள்.
உழைப்பு ஒரு நாட்டுக்குள் இடம்பெயரத்தக்கது. நாடுகளுக்கிடையே இடம் பெயர இயலாதது
உற்பத்தியளவு மாறா விளைவு விதிக்குட்பட்டது.
நாடுகள் பன்னாட்டு வாணிகத்தின் மீது தடைகளை விதிப்பதில்லை.
உற்பத்தி தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் நிகழ்வதில்லை.
எடுத்துக்காட்டு:
ரிக்கார்டோவின் ஒப்புமைச் செலவு கோட்பாட்டினை அமெரிக்காவும் இந்தியாவும் துணி உற்பத்தி கோதுமை உற்பத்தி செலவுகளைக் கற்பனை உதாரணங்களாக கொண்டு புரிந்து கொள்ளலாம்.
ஒரு அலகு உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பின் அளவு:
| நாடு | துணி | கோதுமை | உள்நாட்டு பரிமாற்ற விகிதம் |
| அமெரிக்கா | 100 | 120 | 1 மூட்டை கோதுமை = 1.2 மீட்டர் துணி |
| இந்தியா | 90 | 80 | 1 மூட்டை கோதுமை = 0.88 மீட்டர் துணி |
அமெரிக்காவுக்கு துணி, கோதுமை ஆகிய இரு பண்ட உற்பத்தியிலும் முழுப் பயன்பாட்டுத் தேர்ச்சி இருப்பது மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து தெளிவாகிறது.
அமெரிக்காவிற்கு கோதுமை உற்பத்தியில் ஒப்பீட்டுச் செலவு சாதகமாக உள்ளது.
(80/120 < 90/100) இந்தியாவிற்கு துணி உற்பத்தியில் ஒப்புமைச் செலவு பாதகம் குறைவாக உள்ளது.
கோதுமை, துணி உற்பத்தியில் இந்தியாவிற்குப் பாதகம் குறைவாக இருப்பதால் இந்தியா துணி உற்பத்தியில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து கோதுமையை இறக்குமதி செய்து கொள்ளலாம்.
பன்னாட்டு வாணிகத்தில் பண்ட பரிமாற்ற விகிதம் 0.88 லிருந்து 1.2 அலகு வரை துணி ஒரு அலகு கோதுமையாக இருந்தால் இரு நாடுகளும் நன்மை பெறும்.
பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடாமல் இந்தியாவும் அமெரிக்காவும் துணியும், கோதுமையையும் அவரவர்களே உற்பத்தி செய்ய இந்தியா 170 அலகு உழைப்பையும், அமெரிக்கா 220 அலகு உழைப்பையும் பயன்படுத்த வேண்டிவரும்.
மாறாக, பன்னாட்டு வாணிகத்தை அனுமதித்தால் 80 அலகு உழைப்பளவைக் கொண்டு உற்பத்தி செய்த ஒரு மூட்டை கோதுமையை அமெரிக்காவிடம் கொடுத்து 90 அலகு உழைப்பு தேவைப்படுகிற ஒரு மீட்டர் துணியை வாங்கிவிட முடியும்.
ஆக இந்தியா 160 அலகு மட்டுமே உழைப்பைப் பயன்படுத்தி இரண்டு மூட்டை கோதுமையை உற்பத்தி செய்து, அதில் ஒரு மூட்டை கோதுமையை அமெரிக்காவிடம் ஒரு மீட்டர் துணியை பரிமாறிக் கொள்ளலாம். இதுவே பன்னாட்டு வாணிகத்தால் இந்தியாவுக்குக் கிடைக்கும் பலனாகும்.
திறனாய்வு:
உழைப்புச் செலவு உற்பத்தி செலவில் ஒரு பகுதிதான். எனவே, உழைப்புச் செலவு அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ள கோட்பாடு உண்மையை பிரதிபலிக்கவில்லை
பல்வேறு நாட்டுத் தொழிலாளிகள் ஒரே அளவு திறன் பெற்றவர்களல்லர்.
5.
| உள்நாட்டு வாணிகம் | பன்னாட்டு வாணிகம் | |
| 1 | ஒரு நாட்டிற்குள் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெறும் வாணிகம் | பல நாட்டின் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான வாணிகம் |
| 2 | உழைப்பு, மூலதனமும் ஒரு நாட்டின் பகுதிகளுக்கிடையே தடையில்லாமல் இடம் பெயர்தல் | உழைப்பும் மூலதனமும் நாடுகளுக்கிடையே இடம் பெயர்தல் தடைகளுக்குட்பட்டது. |
| 3 | பண்டங்கள், பணிகள் இடம் பெயர்தலில் தடை ஏதுமில்லை. | பண்டங்கள், பணிகள் இடம் பெயர்தலை சுங்க வரி, பங்களவு முதலான தடைகள் கடினமாக்குகின்றன. |
| 4 | விற்றல் வாங்கலில் ஒரே ஒரு பணம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. | பலநாட்டுப் பணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. |
| 5 | புவி அமைப்பும் கால நிலைச் சூழலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் | புவி அமைப்பும் கால நிலையும் வேறுபடும் இயல்பு கொண்டவை. |
| 6 | வாணிகமும், நிதி நடைமுறைகளும் ஒரே மாதிரியானவை. | வாணிகமும், நிதி நடைமுறைகளும் வேறுபடும் போக்குக் கொண்டவை. |
| 7 | அரசமைப்பு முறை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசின் கொள்கைகளில் வேறுபாடில்லை | அரசமைப்புமுறை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசின் கொள்கைகளில் வேறுபாடுகளிருக்கும். |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards