12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 History subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஸ்பெயினில் சமயவிசாரணை நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?
2.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.
3.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை?
4.
ஜே.வி.பி குழு பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன?
5.
அரசமைப்பின் ஷரத்து 370 ன் முக்கியத்துவம் என்ன?
6.
7.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?
8.
ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?
9.
பி.ஆர். அம்பேத்கரால் வழிநடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம் பற்றி அறிவது என்ன?
10.
11.
காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?
12.
1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு எழுதுக.
13.
இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?
14.
1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் பற்றி விவரி?
15.
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது?
16.
இந்தியாவின் நவீன தொழிற்சாலையின் தந்தை என ஜே.என். டாடா அழைக்கப்படக் காரணம் என்ன?
17.
புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?
18.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களை குறிப்பிடுக?
19.
தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?
20.
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.
21.
மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Mendicant Policy) என்றால் என்ன?
22.
இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலைத் தயார் செய்க.
23.
நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக.
24.
அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.
25.
தேசியம் என்றால் என்ன?
1.
1.ஸ்பெயினில் அரசர் பெர்டினான்ட் நீதி விசாரணை அமைப்பை அமைத்தார்.
2.மதம் மாறிய யூதர்களும் மூர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
3.சமய நம்பிக்கைகள் இல்லாதவர்கள் துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டனர்.
2.
1.பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவதை இரு முக்கிய அம்சங்கள் தீர்மானித்தன.
2.ஒன்று கருத்தியல் மற்றொன்று நடைமுறை சார்ந்தது.
3.கருத்தியல் நிலையில் அரசாங்கம் சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது.
4.நடைமுறையில் கனரகத் தொழில்களை ஏற்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது.
3.
முக்கிய கடமைகள் :
1.புதிய இந்திய அரசு பொருளாதாரத்தை வளர்த்தல்.
2.வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல்.
3.உற்பத்தி துறையை விரிவாக்கம் செய்தல்.
4.வேலை வாய்ப்புகளை பெருக்குதல் .
5.வறுமையைக் குறைத்தல் போன்றவை முக்கிய கடமைகளாக இருந்தன.
4.
(i) ஜே. வி. பி குழு மொழிவாரி மாகாணங்கள் "குறுகிய பிராந்தியவாதத்தை" வலியுறுத்துகின்றன என்று கூறியது.
(ii) மேலும் அது நாட்டின் மேம்பாட்டிற்கு "அச்சுறுத்தலாக" உருவாகக்கூடும் என்று தெரிவித்தது.
(iii) ஜே.வி.பி குழு "மொழியானது பிணைக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதோடு பிரிக்கும் ஆற்றலும் உடையது" என்று குறிப்பிட்டது.
(iv) மேலும் "நாட்டின் சாதகமான சூழ்நிலை உருவாகும் போது மக்களின் சிந்தனைகள் அமைதிப்படும்போது எல்லைகளை மாற்றி அமைத்து புதிய மாகாணங்களை உருவாக்கலாம் என்றும் ஜே. வி. பி குழு கூறியது.
5.
(i) ஜம்மு காஷ்மீருக்காக சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது உறுப்பு அளிக்கிறது.
(ii) இதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசமைப்புச் சட்டம் உள்ளது.
(iii) இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ள பகுதி IV, IVA (அடிப்படை கடமைகள்) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.
(iv) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் அந்த மாநில எல்லையை மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது.
6.
7.
(i) வேவல் பிரபு ஜூன் 1945 இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
(ii) அரசப் பிரதிநிதியின் குழுவிற்கு முஸ்லீம் லீக் தனக்கு மட்டுமே இஸ்லாமியப் பிரதிநிதிகளை நியமிக்க உரிமை உள்ளது என்றது.
(iii) காங்கிரஸ், ஜாதி இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று வலியுறுத்தியது. இது மேலும் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் முயற்சி என்று வேவல் பிரபு கருதி சிம்லா பேச்சுவார்த்தையைக் கைவிட்டார்.
8.
(i) தனிநபர் சத்தியாகிரகம் என்பது அரசுப் பிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடியாகும்.
(ii) லின்லித்கோ பிரபு 8 ஆகஸ்ட் 1940 அன்று அளிக்க முன்வந்ததாவது 'வரையறுக்கப்படாத தேதியில் டொமினியன் அந்தஸ்து, செயற்குழு விரிவாக்கம் செய்தல் ஆகும்.
(iii) மேலும் ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்க மேலும் உறுதியளித்தல் ஆகியவையாகும்.
9.
1. ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்புத் தொடங்கினார்.
2. ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்து அம்பேத்கர் பெரிதும் கவலை அடைந்தார்.
3. அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
10.
11.
1. இராஜேந்திர பிரசாத், மஜாருள் ஹக், ஆச்சார்ய கிருபாளினி மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.
2. ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக "சம்பரானை" விட்டே வெளியேற்றிவிட்டனர்.
12.
(i) 1923 ஆம் ஆண்டு ஆகஸ்டில் வாராணாசியில் நடைபெற்ற இந்து மகாசபையின் ஆறாவது மாநாட்டில் 968 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களின் 56.7 விழுக்காட்டினர் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்தவர்.
(ii) ஐக்கிய மாகாணம், பஞ்சாப், டெல்லி, பீகார் ஆகியவை 86.8 விழுக்காட்டு பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தனர். சென்னை, பம்பாய், வங்காளம் 6.6 விழுக்காட்டுப் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தனர்.
13.
(i) ஆரிய சமாஜியத்தின் சுத்தி இயக்கம் மூலம் பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்டது.
(ii) மேலும் ஆரிய சமாஜியத்தின் சங்கதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை மேலும் பிளவுப்படுத்தியது.
14.
1. முதல் உலகப்போரின்போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கிரிமினல் சட்டமாக இயற்றப்பட்ட இந்தச் சட்டமே, இந்தியப் பாதுகாப்புச் சட்டம் எனப்படும்.
2. சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத்தொடர இந்தச் சட்டம் அனுமதித்தது.
3. இந்த உத்தரவுகளை மீறும் பட்சத்தில் மரண தண்டனை விதிப்பது, நாடுகடத்துவது, பத்தாண்டு சிறைத் தண்டனை ஆகியவற்றை விதிக்க தீர்ப்பாயத்திற்கு இச்சட்டம் அதிகாரமளித்தது.
15.
1. கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இஸ்லாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது.
2. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கலீபா மீது பற்றும் அனுதாபமும் கொண்டவர்கள் அதனால் கிலாஃபத் இயக்கம் தொடங்கப்பட்டது.
3. மெளலானா முகமது அலி மெளலானா செளஹத் அலி என்ற முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
4. 1920 இல் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்.
16.
(i) J. N. டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட ஜாம்ஷெட்ஜீ நுஸர்வஞ்சி டாடா (1839 - 1904) பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி (ஜொராஸ்ட்ரியன்) வணிகக் குடும்பத்திலிருந்து வந்தார்.
(ii) இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் இவர் என்பதால் "இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை" என அழைக்கப்படுகிறார்.
17.
மாட்சிமை பொருந்திய அமர்வு நீதிபதி ஹோம்ஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இவர் கோரக்பூர் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றியபோது சௌரி சௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துப் பிரசித்தி பெற்றவர்.
18.
பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட பிலிப் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகிய பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.
19.
1. ஆங்கில அரசு அறிவித்த 1908 டிசம்பரின் மிண்டோ-மார்லி நடவடிக்கைகள் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது.
2. 1908 செய்தித்தாள் சட்டம் (குற்றம் செய்யத் தூண்டுதல்) ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது. இதனால் ஆங்கிலேய ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை.
3. வெடிமருந்துச் சட்டம் (1908), இந்திய பத்திரிகைச் சட்டம் (1910) என பல அடக்குமுறைச் சட்டங்களை தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனி அரசு வரிசையாக இயற்றியது.
20.
1. பாலகங்காதர திலகர், பிபின்சந்திரபால், லாலா லஜபதிராய் (Lal-Bal-Pal), அரவிந்த் கோஷ் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் தலைவர்களாக விளங்கினர்.
2. மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்று மாகாணங்களில் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
21.
1. மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் ஆகும்.
2. மனு சமர்ப்பித்தல் போன்றவை அவர்களின் "இறைஞ்சுதல் கொள்கை" ஆகும். இக்கொள்கையைக் கடுமையாக தீவிரவாத காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
22.
| அமைப்பு | வருடம் / இடம் | தோற்றுவித்தவர் |
| 1. நிலக்கிழார்கள் அமைப்பு ஜமீன்தார் அமைப்பு. |
1838 / கல்கத்தா | துவாரகாநாத் தாகூர். |
| 2. பிரிட்டிஷ் இந்திய சமூகம் | 1839 / லண்டன் | வில்லியம் ஆடம்ஸ் |
| 3. மெட்ராஸ் பூர்விக அமைப்பு | 1852 / சென்னை | லஷ்மண சரசு செட்டி |
| 4. பம்பாய் கழகம் | 1852 / பம்பாய் | தாதாபாய் நௌரோஜி, தீன்ஷா வாச்சா |
| 5. இந்திய லீக் | 1875 / கல்கத்தா | சி. சிர்குமார் கோஷ் |
| 6. மெட்ராஸ் மகாஜன சபா | 1884 / மெட்ராஸ் | வீரராகவாச்சார்யா, ஜி. சுப்பிரமணிய ஐயர், பி. அனந்த்தாச்சார்லு |
23.
1. இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக் கற்றுக்கொடுக்க மேற்கொள்ளப்பட்ட தொடக்ககால முயற்சிகளிலொன்று கிறித்துவ சமயப்பரப்பு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டதாகும்.
2. மரபு சார்ந்த கல்வி முறையில், கல்வி கற்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை சமயப்பரப்புக் குழுக்கள் வழங்கின.
24.
1. 1859-60 இல் நடைபெற்ற "இண்டிகோ" புரட்சி கம்பெனியின் அடக்குமுறைக் கொள்கைக்கு எதிரான இந்திய விவசாயிகளின் ஒரு எதிர் வினையாகும்.
2. ஐரோப்பியர்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங்களில் இந்தியக் குத்தகை விவசாயிகள் அவுரியைப் பயிரிடக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
3. சாயம் தயாரிக்க இச்செடிகள் அதிகம் தேவைப்பட்டது.
25.
தேசியம்: விரிவான தளத்தில் தேசியமென்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது ஏனைய நாடுகளுக்குப் போட்டியாக தனது நாட்டின் பண்பாடும் மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு அல்லது மனப்போக்காகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards