12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 History subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
முசோலினியும்,ஹிட்லரும் பாசிச அரசுகளை முறையே இத்தாலியிலும் ஜெர்மனியிலும் நிறுவ சாதகமான சூழல் எழுந்தமையை விளக்குக.
2.
"மார்க்ஸ் தீப்பொறியை வழங்கவும்,அதை லெனின் தீபமாக ஏற்றினார்"-தெளிவுபடுத்துக.
3.
சீனாவில் பொதுவுடைமை அரசு உருவாக மாசே-துங்கின் பங்களிப்பை விவரித்து எழுதுக.
4.
இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை தகுந்த காரணத்தோடு விளக்குக.
5.
6.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist Thinkers) அடையாளப்படுத்தி அவர்கள் சோஷலிச சிந்தனையை செழுமையாக்க ஆற்றிய பங்கைக் கூறுக.
7.
"அமெரிக்க புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன". இக்கூற்றை உறுதிப்படுத்தவும்.
8.
அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்.
9.
கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?
10.
11.
முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
12.
நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.
13.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.
14.
சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக
15.
இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
16.
ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.
17.
இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
18.
19.
20.
21.
பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.
22.
23.
24.
இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.
25.
1.
1.மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சிமுறைக்கு எதிராகத் திரும்பிய முதல் நாடு இத்தாலியே ஆகும்.
2.போர் பணவீக்கத்தையும் அது விளைவித்த விலையேற்றம்,ஊகத்தொழில் பாதிப்புகள் லாபமீட்டும் நோக்கத்தின் பெருக்கம் போன்றவற்றையும் ஒருங்கே கொண்டுவந்து சேர்ந்தது.
3.துயரங்கள் கூடியபோது,அங்கே சோஷலிச சிந்தனை பரவத் தொடங்கியது.
4.பெனிட்டோ முசோலினி (1883-1945) ஒரு இரும்புக்கொல்லரின் மகனாகப் பிறந்தார்.ஆரம்பக்கல்வி ஆசிரியராகத் தேர்ச்சிபெற்ற அவர் மேற்கொண்டு படிப்பதற்காக சுவிட்சர்லாந்திற்கு சென்று சோஷலிசப் பார்வைகொண்ட பத்திரிகையாளரானார்.
5.1919இல் பாசிசக் கட்சி உருவாக்கப்பட்டவுடன்,அதில் உடனடியாக முசோலினி இணைந்தார்.
6.போரின் முடிவில் எழுந்த ஒழுங்குமுறைக் குலைவுகளை சரிசெய்ய பாராளுமன்ற முறையிலான அரசு திணறியதால் அதன் வீழ்ச்சியிலிருந்தே பாசிச சர்வாதிகாரம் தோன்றியது.
7.ஜனநாயக கட்சியின் தலைவர்கள் தீர்க்கமான பார்வையோடும் உறுதியோடும் செயலாற்ற தவறியமையை முசோலினியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
8.பொதுவுடைமைவாதிகளுக்கும்,அவர்களின் எதிர்தரப்பினருக்கிடையே எழுந்த பிணக்குகள் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த நிலையில் கருப்புச்சட்டை அணிந்த பாசிசவாதிகள் (கருஞ்சட்டையின்) ரோமில் நடத்திய பேரணியே (அக்டோபர் 1922)அதைத் தவிர்க்கக் காரணமாக விளைந்தது.
9.அவர்களின் பலத்தால் ஈர்க்கப்பட்ட மன்னர் மூன்றாம் இம்மானுவேல் முசோலினியை ஆட்சியமைக்க அழைத்தார்.
10.முதல் உலகப்போரின்போது ஹிட்லர் பவேரிய இராணுவத்தில் பணியாற்றினார்.
11.யூதர்கள் மீதும்,மார்க்சியவாதிகள் மீதும் அவர் உள்ளார்ந்த வெறுப்பைக் கொண்டிருந்தார்.
12.தேர்ந்த பேச்சாளரான அவர்,தனது உரையை கேட்போரின் உணர்வுகளைக் தொடும் திறன் கொண்டிருந்தார்.
13.ஹிட்லர் 1923 இல் பல ஆபத்துகளுக்கிடையே பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தார்.
14.சரியாகத் திட்டமிடப்படாமல் மூனிச்சின் புறநகர் பகுதிகளில் அவர் நடத்த முயன்ற தேசிய புரட்சி அவரை சிறைக்குள் கொண்டு சேர்த்தது.சிறையில் இருக்கும் காலத்தில் அவர் தனது அரசியல் சிந்தனைகளை மையமாகக் கொண்டு"எனது போராட்டம்"(மெய்ன் காம்ப Mein-Kampf என்ற சுயசரிதை நூலை எழுதினார்.
15.ஜெர்மனிய அரசின் பலவீனத்தை வெளிப்படுத்தும் இரு சம்பவங்கள் 1926 இல் நடந்தேறின.
16.பொதுவுடைமைக் கட்சி 1932 இல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் 6,000,000 வாக்குகளைப் பெற்றது.
17.இதனால் சுதாரித்துக்கொண்ட,முதலாளிகளும் நிலவுடமையாளர்களும் பாசிசவாதத்தின் பக்கம் சரிந்தனர்.
18.அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஹிட்லர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார்.
2.
1.சோஷலிசப் புரட்சிக்கு,உழைக்கும் மக்கள் (Proletariat) எவ்வாறு அவசியமோ போலவே நடுத்தர மக்களின் (Bourgeoisie) இருப்பும் கட்டாய முன்தேவை என மார்க்சம்,ஏங்கல்சும் கருதினர்.
2.அதனால் மார்க்சிய கூட்டமே வலுப்பெற்ற முன்னேற பெரும் நிறுவன ஆற்றல் கொண்டிருந்த லெனின் அதன் கவர்ந்திழுக்கும் திறன் பெற்ற தலைவரானார்.
3.ரோமோனாவ் வம்சத்தை சேர்ந்த சார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் அரசாட்சி அனுபவம் சிறிதும் இல்லாதிருந்தனர்.
4.அருட்தந்தை கேப்பன் 1905 ஜனவரி 23 அன்று பெண்கள்,குழந்தைகள் மற்றும் பிற மக்கள் கலந்து கொண்ட ஒரு பேரணியை நடத்தினார்.
5.இவற்றால் திருப்தியடையாத இடதுசாரி கட்சியினர் செயின்ட் பீட்டர்ஸ்பார்க் நகரில் சோவியத் (Council)என்னும் தொழிலாளர் பிரதிநிதி அவையை உருவாக்கினர்.
6.பிரான்சோடும் பிரிட்டனோடும் இணைந்து ரஷ்யா செயலாற்றிக் கொண்டிருந்தால் முதல் உலகப்போரின் துவக்கத்தில் மன்னராட்சி தற்காலிகமாய் பலம் பெற்றிருந்தது.
7.சோஷலியஸ்டுகள் 1917 பிப்ரவரி 23 அன்று சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை அனுசரித்துக் கொண்டிருந்தபோது சார் மன்னர் யாராலும் அசைக்கமுடியாதவண்ணம் தம் நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தார்.
8.வேலைநிறுத்தப் போராட்டமும்,பேரணிகளும் நான்காம் நாளை எட்டியபோது இராணுவப் பணிமனைகளிலும் கலகம் வெடித்தது,சார் மன்னர் இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
9.அரசின் செயல்பாடுகளை எடுத்த இரு இணை அமைப்புகள் இருந்தன.முதலாவாதானது சொத்துடைமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பழைய அரசின் டூமாவில் அங்கம் வகித்த நடுத்தர வர்க்க அரசியல்வாதிகளைக் கொண்டது.மற்றொன்றானது தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் குழு அல்லது சோவியத் அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டது.
10.புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.தொடர்ந்து போராடுதலையே லெனின் விரும்பினார் "அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே"என்ற அவரின் தாரகமந்திரம் தொழிலாளர் தலைவர்கள் யாவரையும் அவர் பக்கம் திருப்பியது.போர்காலப் பற்றாக்குறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை ரொட்டி அமைதி நிலம் என்ற முழக்கம் ஈர்த்தது.
11.அக்டோபர் மாதத்தில் லெனின் போல்ஷ்விக் மதியக்குழுவிடம் உடனடியாக ஒரு புரட்சியை நடத்துமாறு அறிவுறுத்தினார்.
12.ட்ராஸ்கி முழுமையான செயல்திட்டமொன்றைத் தயாரித்தார்.குளிர்கால அரண்மனை,பிரதம அமைச்சரின் தலமைச் செயலகம் உள்ளிட்ட அரசின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டங்கள் யாவும் நவம்பர் 7 அன்று ஆயுதமேந்திய ஆலை ஊழியர்களாலும்,புரட்சிப்படைகளாலும் கைப்பற்றப்பட்டன.
13.பொதுவுடைமை அரசு 1917 நவம்பர் 8 அன்று பதவியேற்றது.அதன் தலைவராக லெனின் வீற்றிருந்தார்.போல்ஷ்விக் கட்சியின் பெயர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்றப்பட்டது.
3.
1.தென்-கிழக்கு சீனாவில் அமைந்த ஹீனான் பகுதியில் மாவோ பிறந்தார்.
2.மாவோ புரட்சி நடந்த ஆண்டில் (1911) சாங்ஷாவில் இருந்த இளையோர் கல்லூரியில் சேர்ந்தார்.
3.பீகிங் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பொறுப்புவகித்தார்.
4.அதற்கு அடுத்த ஆண்டு முழுமையான அரசியல் செயல்பாட்டாளராக மாறிய மாவோ ஹீனானின் அமைப்பாளராக பொறுப்பேற்றதோடு தீவிர பொதுவுடைமைவாதியாகவும் உருப்பெற்றார்.
5.கோமின்டாங்கின் தலைவராக சியாங் கே-ஷேக் இருந்தபோது பொதுவுடைமை கட்சி-மாசே-துங் மற்றும் சூ-யென் லாயின் கட்டுப்பாட்டில் இருந்தது.
6. கோமின்டாங்கின் பிடி நகர்ப்புறங்களில் இறுக்கமாக இருப்பதை உணர்ந்த மாவோ,விவசாயிக்குடிகளை ஒன்று திரட்டுவதில் தனது கவனத்தைச் செலுத்தினார்.
7.கியாங்ஸிக்கும் ஹீனானுக்குமிடைப்பட்ட காடுகளால் சூழப்பெற்ற மலைப்பகுதிகளில் அவர் தஞ்சமடைந்தார்.
8.இப்பகுதியில் மாவோவும்,அவரது தோழர்களும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இருந்தனர்.
9.அடியோடு அழித்தொழிக்கும் நோக்கோடு ஐந்து படையெடுப்புகளை கோமின்டாங் நடத்தி இருந்தாலும் அவர்களால் அம்மலைப் பகுதியில் ஊடுருவ முடியவில்லை என்பதோடு மாவோவின் படைபலம் நாளுக்கு நாள் விரிவடைந்தது.
10.பொதுவுடைமைவாதிகளுக்கு இப்புதுத்தளத்தில் சியாங் கே-ஷேக்கின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு கிடைத்ததோடு ஜப்பானியர்களிடமிருந்து தொடர்ச்சியாக எழுந்து கொண்டிருந்த அச்சுறுத்தல்களில் இருந்தும்,போரையே தொழிலாக கொண்டிருந்த கிள்ளார்களிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பாக இருந்தது.
11.பொதுவுடைமைவாதிகளின் நிலைகளைச் சுற்றி வளைத்து சியாங் கே-ஷேக் அரண் எழுப்பியிருந்தால் மாவோ பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹீனானை விட்டு அகல முடிவு செய்தார்.
12.இதையெடுத்து 1934 இல் பொதுவுடைமை இராணுவம் மேற்கொண்டதே நீண்ட பயணம் என்றழைக்கப்பட்டது.
13.ஷேன்ஸி மற்றும் கன்ஸூவில் அமைந்த கிராமங்களில் மாவோ தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குழுக்களை அமைத்து பொதுவுடைமைவாதிகள் சீனாவில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தினார்.
4.
1.முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மனியின் மீது பல கடுமையான விதிமுறைகள் சுமத்தப்பட்டன.
2.அதன் கட்டுப்பாட்டில் இருந்த காலனிய நாடுகள் பிரித்தெடுக்கப்பட்டால் அதன் படையளவு மோசமாக சுருங்கியது.
3.அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் விட்டுக் கொடுக்கவும்,சார் பள்ளத்தாக்கில் இந்நாடு தாற்காலிகமாகப் படைகளை நிறுத்திக் கொள்ளவும் ஜெர்மனி ஒப்புதல் வழங்க நிர்பந்திக்கப்பட்டது.
4.தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான சைலேசியாவை போலந்திடம் ஒப்படைக்கவும் ஜெர்மனி கட்டாயப்படுத்தப்பட்டது.
5.மேலும் செலுத்தவே இயலாத ஒரு தொகையை (6,600 மில்லியன் பவுண்டுகள்)போர் இழப்பீடாகவும் ஜெர்மனியிடம் கோரப்பட்டது.
6.இத்தகைய கூறுகள் தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக ஜெர்மனிக்குள் எண்ண அலை ஏற்படவும் அதன் பின்தொடர்ச்சியாக நாஜி கட்சியின் அரசியல் வெற்றிக்கும் வழிவகுத்தது.
7.இத்தாலியும் இத்தாலிய மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட பகுதியாக கருதப்பட்ட டால்மேஷியாவை அதனிடமிருந்து பிரித்தெடுத்து புதிதாக உருவான யுகோஸ்லோவியாவிடம் ஒப்படைத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
8.சிறு குடியரசாக மாற்றப்பட்ட ஆஸ்திரியா,ஜெர்மனியோடு இணைந்தால் பிரான்சு நாட்டிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் அது ஜெர்மனியிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டது.
5.
6.
1. நவீன கால அடிப்படையில் சோஷலிச சிந்தனை இயலாட்சி ஆதரவாளர்கள் (Physiocrats) அல்லது பொருளாதார நிபுணர்களால் உணவு மற்றும் சரக்கு ஆகியவற்றின் உற்பத்தியையும்,விநியோகத்தையும் குறித்த விசாரணை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2. எட்டியன் கேப்ரியல் மோராலி (Etienne -Gabriel Morelly) 1755 இல் தான் இயற்றிய நூலான கோட் டி நேச்சர் (code de la nature) என்பதில் தனியுடைமையைக் கண்டனத்திற்கும் உட்படுத்தியதோடு சமூகத்தைப் பொதுவுடைமை அமைப்பாக மாற்ற வேண்டி ஒரு முன்மொழிவை வெளிப்படுத்தினார்.
3. செயின்ட் சைமன் பிரிட்டிஷாருக்கு எதிராக அமெரிக்க சுதந்திரப் போரில் பங்கேற்ற ஒரு பிரெஞ்சு உயர்குடிமகனாவார். விஞ்ஞானத்திலும் முன்னேற்றத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த அவர் தன் சமகால பிரெஞ்சு சமூகம் நிலப்பிரபுத்துவத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக விமர்சித்தார்.
4. சார்லஸ் ஃபூரியர் ஆரம்பகால கற்பனைவாத சோஷலிஸ்டுகளில் ஒருவராவார். அவர் சமூக சூழலே மனித இனத்தின் கவலைகளுக்கு முதல் காரணம் என்று நம்பினார்.
5. மான்செஸ்டர் நகரின் தொழிற்சாலை ஊழியர்களின் கொடுமையான வாழ்க்கைச் சூழலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவரது தொழிற்சாலையில் அவர்களின் மேம்பாட்டிற்காகப் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
6. பிரெஞ்சு அரசின்மைவாத சிந்தனையாளராகக் (anarchist) கருதப்படும் புரூதன் சோஷலிச சிந்தனை செழுமை பெற முக்கியப் பங்காற்றியுள்ளார்.
7. தேசிய அரசுகளின் இடத்தில் தன்னாட்சி கொண்ட கூட்டு சமூகங்களின் கூட்டமைப்பு தோன்றவேண்டுமென வலியுறுத்தினார்.
8. அரசு அதிகாரத்தின் துணை இல்லாமல் சோஷலிச சமூகத்தை எட்ட முடியாது என்றும் லூயி பிளாங்க் வாதிட்டார்.பிரான்ஸ் நாட்டில் 1848 இல் உருவான தற்காலிக அரசின் உறுப்பினராகப் பங்குவகித்த அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பற்றோருக்கான பணிமனைகளை உருவாக்கி தேவைப்பட்டோருக்கு பணி கிடைக்க வழிவகை செய்தார்.
9. கார்ல் மார்க்சும் (1818 - 1883) பிரெட்ரிக் ஏங்கல்சும் ( 1820 - 1895 ) சோஷலிச சிந்தனைக்கு அரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
10. மார்க்சும் ஏங்கல்சும் 1848 ஆம் ஆண்டின் புரட்சி நடந்த சமகாலத்தில் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டா என்ற நூலை வெளியிட்டார்கள்.அதிகவும் புகழ்பெற்ற தொழிலாளர்களைத் திரட்டும் கூக்குரலான "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை,அணிந்திருக்கும் விலங்குகளைத் தவிர" என்பது இடம் பெற்றிருந்தது.
7.
1.முன்னாளில் செயின்ட்-டோமிங்கோ (பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனிகளை அவ்வாறு அழைத்தனர்) என்றறியப்பட்ட ஹைட்டி,கரீபியன் கடலில் இருந்த மிக வளமான பிரெஞ்சு காலனி.
2.அது ஐரோப்பாவின்,ஏனைய கரீபியன் அமெரிக்கக் காலனிகளின் மொத்த சர்க்கரை உற்பத்தியைக் காட்டிலும் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்யும் பண்ணைகளைக் கொண்டிருந்தது.
3.பாஸ்டில் சிறை வீழ்த்தப்பட்டது எனும் செய்தியைத் தொடர்ந்து முடியாட்சியரசின் ஆளுநருக்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்பு ஒன்று நடைபெற்றது.
4.முலாட்டோ பிரிவைச் சேர்ந்த வின்சென்ட் ஓஜ் என்பவர் காலனிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காகப் பாரிஸின் நகரச் சட்டமன்றத்தின் ஆதரவைத் திரட்டிக் கொண்டிருந்தார்.
5.1790 இன் இறுதியில் அவர் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது.ஆனால் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
6.1791 மே மாதத்தில் பிரான்சின் புரட்சி அரசாங்கம் வசதி படைத்த முலாட்டோக்களுக்குக் குடியுரிமை வழங்கியது.
7.இரண்டு மாதங்களுக்குள்ளாக ஐரோப்பிய வெள்ளை இனத்தாருக்கும் முலாட்டோக்களுக்குமிடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.
8.
காரணம்:
1.காலனிகளைத் தனது நாட்டின் பகுதிகளாக கருதிய இங்கிலாந்து காலனி மக்களின் நலன்களை புறக்கணித்து தனது நலன்களுக்காக பல சட்டங்களை இயற்றியது.
2.நாவாய் சட்டம் சர்க்கரை மீது வரி விதிப்பு,முத்திரைச் சட்டம்,டவுண்ஷெண்ட் சட்டம் ,தேயிலை மீதான வரிவிதிப்பு போன்றவை அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள் ஆகும்.
3.பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்களின் விளைவாக குடியேற்ற நாடுகள்,பிலடெல்பியாவில் முதன் முதலாக பொது மாநாட்டைக் கூட்டின.
போக்கு:
1775-ல் மாசசூசெட்ஸில் உள்ள லெக்சிங்டன் என்ற இடத்தில் விவசாயிகள் ஆங்கிலேயரோடு போரிட்டு ஆங்கிலப் படைகளை முற்றுகையிட விரைந்தனர்.
2.ஆங்கிலப் படைகளுக்கு வில்லியம் ஹோவ் என்பவரும்,அமெரிக்க படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டனும் தலைமையேற்றனர்.
3.ஆரம்ப கால போர்களில் ஆங்கிலப் படை வெற்றி வாகை சூடியது.பின்னர் வாஷிங்டன் தனது திட்டமிடப்பட்ட போர் தந்திரங்களின் வாயிலாக ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார். 1777-ல் சரடோகா போரும் 1781-ல் யார்க்டவுன் போரும் முக்கிய போராகும்.
4.குடியேற்ற நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவின.
விளைவுகள்:
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை (Avenues) ஏற்படுத்தியது.
2.மக்களாட்சி, குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும்.தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
9.
1.துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டினோபிளின் வீழ்ச்சியும் ஐரோப்பிய கடல்சார் கண்டுபிடிப்பு நாடுகளை கிழக்கத்திய நாடுகளுக்கு புதிய கடல்வழிகளைக் கண்டுபிடிக்க உத்வேகத்தை அளித்தது.
2.சிலுவைப்போர்களின் போது போர்வீரர்கள் கிழக்கத்திய நாடுகளிலிருந்து பெரும் அளவில் பொருட்களை எடுத்து வந்தனர்.
3.மேற்கத்திய நாடுகளில் உணவைப் பதப்படுத்த உதவும் நறுமணப் பொருட்களை கிழக்கத்திய நாடுகளில் இருந்து எடுத்துச் செல்ல ஐரோப்பியர்கள் விரும்பினார்கள்.
4.குறிப்பாக போர்த்துகல்,ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய விரும்பின.
5.அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவை புதிய கடல்வழித்தடங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஊக்கம் தந்தன.இந்த முடிவான பொருளாதாரக் காரணம் தான் புதிய வர்த்தக வழித்தடங்களை கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது.
6.கிழக்கிந்திய நாடுகளில் இருந்து பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் அதிக இலாபம் ஈட்டவும் கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் விரும்பின.
7.எனவே அவர்கள் கடல் வழி ஆய்வில் முதலீடுகளைச் செய்ய விருப்பம் காட்டினர்.
10.
11.
1.1951-56 வரையிலான காலப்பகுதி முதலாவது ஐந்தாண்டு திட்டத்திற்கானது.
2.முதலாவது ஐந்தாண்டு திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட மொத்த முதலீடு ரூ.3870கோடிகளாகும்.
3.முதலாவது ஐந்தாண்டு திட்டம் (1951-56)வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது.
4.மொத்த முதலீட்டில் வேளாண்மைக்கான வளர்ப்பதிலும் குறிப்பாக உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது.
5.முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு மிதமான 4 விழுக்காடு வளர்ச்சியை இலக்காகச் கொண்டிருந்தன.இதைப் பொருளாதார நிபுணர்கள் "இந்து வளர்ச்சி விகிதம்"என அழைத்தனர்.
12.
1.இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
2.அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக நிலச்சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியாக வேண்டும்.
3.இவ்வாறு நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படை வடிவம் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்தாலும்,சில குறிப்பிட்ட வகைகள் சார்ந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்படுவதில் மாநிலங்களுக்கிடையே ஒரே சீரான தன்மையில்லை.
4.அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவின் பல மாகாணங்கள் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டங்களை இயற்றின.
5.நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த ஜமீன்தார்கள் ஜமீன் ஒழிப்பு சட்டங்களின் அரசியலமைப்பு சட்டபூர்வத் தன்மையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர்.
6.இதன்படி ஜமீன்தார்கள் தங்களின் நிலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது குறித்தோ இழப்பீடு குறித்தோ கேள்வி கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
7.முடிவில் ஜமீன்தாரிமுறை ஒழிப்பு 1956-இல் நிறைவு பெற்றது.இது மிகவும் வெற்றிகரமான நிலச்சீர்திருத்தமாகும்.
8.இருந்தபோதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறு பகுதியை மட்டுமே எட்ட முடிந்தது.
9.இந்நிலங்கள் தங்களது "தனிப்பட்ட விவசாயத்தின்" கீழிருந்தன என உரிமைகொண்டாடி ஜமீன்தார்களால் குடியானவர்களை வெளியேற்றவிட்டு நிலங்களை எடுத்துக்கொள்ள முடிந்தது.
10.இவ்வாறு ஜமீன்தாரி என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டாலும் பல நிலவுடையாளர்கள் தொடர்ந்து பெருமளவிலான நிலங்களைத் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
13.
(i) சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படைக்கு கோட்பாடுகள் இந்தியா விடுதலை அடைவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன.
(ii) காலனியம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிநாதமாகும்.
(iii) ஜவஹர்லால் நேருவே இந்திய வெளியுறவுக் கொள்கையை முதன்மையான சிற்பி அவர்.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் பின்வருமாறு:
1. காலனிய எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு
2. இன ஒதுக்கலை எதிர்த்தல், இனவெறியை எதிர்த்தல்
3. வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை,
4. ஆப்பிரிக்க - ஆசிய ஒற்றுமை
5. பிற நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல்,
6. பிற நாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.
7. ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல்.
8. உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்
9. நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலைநிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படா வண்ணம் இரு நாடுகளும் சமநீதியைப் பாதுகாத்தல் ஆகும்.
10. மார்ச் 1947 இல் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன.
11. ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலைமை உறுதி செய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும்.
12. 1955 இல் இந்தோனேசியா நாட்டின் பாண்டுங் நகரில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது.
13. சில ஆண்டுகளுக்குப் பின் பெல்கிரேட் நகரில் இந்த நாடுகள் கூடி அணிசேரா இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை பாண்டுங் மாநாடு ஏற்படுத்திக் கொடுத்தது.
14.
(i) இந்தியாவிற்கான அரசமைப்பு வரைவுப்பணி தொடங்கியபோதே இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது.
(ii) காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகியவற்றைத் தவிர மற்ற சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டன.
(iii) இதனால் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன.
(iv) ஹைதராபாத் நிஜாம் இந்திய ஆளுமைக்கு கீழ்ப்படிய மறுத்து, அவர் ஹைதராபாத் அரசை சுதந்திர அரசு என்று அறிவித்தார்.
(v) ஜுனாகத் அரசர் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார்.
(vi) இதே போல், காஷ்மீரின் இந்து அரசான மகாராஜா ஹரிசிங் காஷ்மீர் சுதந்திர அரசாக இருக்குமென்று அறிவித்தார்.
(vii) இதனால் அந்நாட்டு மக்கள் தேசிய மாநாட்டுத் தலைமையில் "காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்" என்று போராட்டத்தை அரசருக்கு எதிராக தொடங்கினார்.
(viii) ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
(ix) 1946 முதலே படேல் காஷ்மீர் மஹாராஜாவோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
(x) இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப் பின் பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரை சூறையாடினர்.
(xi) இந்த நடவடிக்கையை ஹரிஷிங்கால் தடுக்க முடியவில்லை.
(xii) காஷ்மீர் அரசுக்கு உதவுவதற்காக இந்திய இராணுவம் அனுப்பப்படுவதற்கு முன் காஷ்மீர் அரசர் ஹரிசிங் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
(xiii) இதன் விளைவாக காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.
(xiv) சுதேச அரசுகளை இந்தியாவோடு நிறைவாக இணைக்கும் பணியை அப்போதைய இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகிய சர்தார் வல்லபாய் படேல், மற்றும் நேரு போன்றோர் திறம்பட செய்து முடித்தனர்.
15.
1. 1917- இல் சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியை காந்தியடிகள் மேற்கொண்டார்.
2. கேதா போராட்டம் : 1918 நில வருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர்.
3. ரௌலட் சட்டத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை ஆகஸ்ட் 31. 1920 ல் தொடங்கினர்.
4. சௌரி சௌரா சம்பவம் (1922) காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப் பெற்றார்.
5. 1930 ஆம் ஆண்டு தொடங்கிய சட்டமறுப்பு இயக்கம்.
6. 1930 தண்டி பயணம் தொடங்குதல் உப்பு மீது வரியைக் குறைக்க செய்தல்.
7. 1931 காந்தி இர்வின் உடன்படிக்கை மேற்கொள்ளுதல்.
8. 1942, வெள்ளையனே வெளியேறு இயக்கம். போன்ற பல போராட்டங்கள் மூலம் காந்தி இந்திய விடுதலைக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.
16.
1. கிலாபத் மாநாட்டில் காந்தியடிகள் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்ட் 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
2. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களை புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்தது.
3. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைப்பிடித்தது.
4. காந்தியடிகள் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
6. 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
7. காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கிய தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
8. இதனால் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.
17.
இராஜாஜி 14 ஏப்ரல் 1944 இல் ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை வழங்கினார், அதன் அம்சங்களாவன:
(i) போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்க்கு முழுப் பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயதுத்தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றி முடிவை எடுத்தல் வேண்டும்
(ii) ஒரு வேலை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதிசெய்யப்பட்டால், அதிமுக்கியப் பணிகளான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துதல் வேண்டும்.
(iii) எல்லையில் அமையப்பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
(iv) இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்டபின் செயல்முறைக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும்.
(v) சிறையிலிருந்து காந்தியடிகள் ஜூலை,1944 இல் விடுவிக்கப்பட்ட பின் இராஜாஜி திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த முயன்றார் ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
18.
19.
20.
21.
(i) இந்திய தேசிய காங்கிரஸ் புரட்சியாளர்களின் வன்முறைச் செயல்களுக்கு மாறாக வன்முறையற்ற போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டியது.
(ii) உலக அளவிலான பொருளாதார பெருமந்த நிலையால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு விவசாயிகள் துயரத்தில் இருந்தார்கள்.
(iii) விவசாயிகள் கிசான் - சபா எனப்படும் விவசாயிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
(iv) 1930 களில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு பெரும் மக்கள் கட்சியாக உருவெடுத்தது.
(v) 1931 மார்ச்சில் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
(vi) இதுவே சுதந்திர இந்தியாவிற்கான தேசிய காங்கிரசின் கொள்கை அறிவிப்பு விளக்கமானது.
(vii) இந்த உரிமைகளும் சமூக மற்றும் பொருளாதாரத் திட்டங்களும் உறுதி செய்வது யாதெனில், அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார சுதந்திரம் என்பது பிரித்துப்பார்க்க முடியாத ஒன்றாகும்.
22.
23.
24.
1. 1875 க்கும் 1885 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.
2. 1877 இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது.
3. இந்திய தேசிய காங்கிரஸ் "இந்தியா ஒரே நாடு" எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது.
4. இந்திய தேசியக் காங்கிரஸ் 1885 டிசம்பர் 28-இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது.
5. W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
6. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது.
7. இந்தியரை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
8. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நன்குணர்ந்தனர்.
9. பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற ஆரம்பகால தேசியவாதிகள் மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக்கொள்வது போன்றவற்றிற்கு மாறாக தீவிரமான அணுகுமுறைகளை பரிந்துரைத்தனர்.
25.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards