12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 History subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் கடுமையானதாகவும் அவமானப்படுத்தக்கூடியதாகவும் தெரிந்தது-இக்கூற்றினுக்கான ஆதாரப்பின்புலத்தை உறுதிப்படுத்துக.
2.
இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பொதுவான மற்றும் வேறுபட்ட கூறுகளை ஒப்பிட்டாய்ந்து எழுதுக.
3.
இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிற்கு காரணமாவார்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.
4.
ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?
5.
1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அரசியல் தோல்விகளை ஏற்படுத்தியமை குறித்து விவாதித்து எழுதுக.
6.
தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
7.
பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கினை வரைக.
8.
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
9.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
10.
இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .
11.
12.
ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
13.
14.
டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
15.
ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
16.
இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படைகலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?
17.
சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?
18.
இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்தியப் பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?
19.
பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.
20.
மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.
21.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக?
22.
1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.
23.
இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.
24.
இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?
25.
இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச் சமூகத்தைச் சீர்த்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.
1.
1.அல்சேசையும்,லொரனையும் ஜெர்மனி பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்.
2.சார் பள்ளத்தாக்கின் நிலக்கரி சுரங்கங்கள் பிரான்சிடம் வழங்கப்பட வேண்டும்.
ரஷ்யா,ஆஸ்திரியா,ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குள் பிரிந்து கிடந்த போலந்து மாகாணங்களை ஒன்றிணைத்து பால்டிக் கடல்வெளிக்கு ஜெர்மானிய துறைமுகமான டான்சிக்கை (Danzig)உள்ளடக்கிப் பாதையமைத்தது,அதனை பன்னாட்டு சபையின் அரசியல் கட்டுப்பாட்டில் விடுவிக்க வேண்டும்.
3.உரிமைகள்,பட்டங்கள்,கடல்வெளியில் ஜெர்மனி வைத்திருந்த பகுதிகள் யாவையும் தோழமை நாடுகளுக்கு விட்டுக்கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது.
4.ஜெர்மானிய காலனிகள் யாவும் பன்னாட்டு சபையின் கட்டாயத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
5.பிரான்ஸ்மீதும்,பெல்ஜியம் மீதும் புதிய தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு ரைன் பள்ளத்தாக்கில் அதன் அமைக்கவோ,படைகளைக் குவிக்கவோ ஜெர்மனிக்கு தடை விதிக்கப்பட்டது.
6.ரைன் நதியின் கிழக்குக்கரைப்பகுதிகள் இராணுவக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுவதொன்றானது.
7.கிழக்கு ஐரோப்பாவில் பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையின் கீழ் ரஷ்யா ஜெர்மனிக்கு விட்டுக்கொடுத்த மாகாணங்களான பின்லாந்து,எஸ்டோனியா லாட்வியா,லிதுவேனியா ஆகியவற்றை சுதந்திர குடியரசுகளாக மாற்றலாம் உத்தேசிக்கப்பட்டது.
8.ஜெர்மனி நிராயுதபாணியாக்கப்பட்டு அதன் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இழக்கச் செய்யப்பட்டது.
9.ஜெர்மனியும்,ஆஸ்திரியாகவும் ஐக்கியமாதல் தவிர்க்கப்பட்டு ஜெர்மனி ஆஸ்திரியாவின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வற்புறுத்தப்பட்டது.
10. ஜெர்மனியும் அதன் கூட்டு நாடுகளுமே போரில் விளைந்த இழப்புகளுக்கும்,சேதங்களுக்கும் பொறுப்பெனக் கொள்ளப்பட்டது.
11.போர் சேதங்கள் 1921 இல் கணக்கிடப்பட்டு 33 மில்லியன் டாலர்கள் என மதிக்கப்பட்டது.
12.ஜெர்மானியப் பேரரசர் இரண்டாம் வில்லியம் மீது நன்னடத்தையை மீறியமை ஒப்பந்தங்களின் புனிதத்தன்மையை மதிக்கத் தவறியமை போன்ற உச்ச பட்ச குற்றங்கள் சுமத்தப்பட்டது.
2.
பொதுவான கருத்துக்கள்:
1.இவை இரண்டும் ஐரோப்பிய ஏகாதிபத்திய காலனி நாடுகள் ஆகும்.
2.இரண்டாம் உலகப் போருக்குப் பின் விடுதலை அடைந்தன.
3.இரு நாடுகளிலும் தேசியவாத பொதுவுடைமை கட்சிகள் தோன்றின.
4.இரண்டு நாடுகளிலும் ஆங்கில மொழியும் ஐரோப்பிய கலாச்சாரமும் திணிக்கப்பட்டது.
வேறுபட்ட கருத்துக்கள்:
1.இந்தோனேஷிய டச்சு காலனி ஆகும்.பிலிப்பைன்ஸ் ஸ்பானிய காலனியாகும்.
2.இவை இரண்டும் ஐரோப்பிய ஏகாதிபத்திய காலனி நாடுகள் ஆகும்.
3.இரண்டாம் உலகப்போரின் போது இந்தோனேஷியா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும் பிலிப்பைன்ஸ் அமெரிக்கா கட்டுப்பாட்டிலும் இருந்தது.
4.இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐ.நா.சபையின் அழுத்தம் காரணமாக இந்தோனேஷியா 1948ல் விடுதலை அடைந்தது.அமெரிக்கா அளித்த வாக்குறுதியின்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு பிலிப்பைன்ஸ் விடுதலை அடைந்தது.
3.
ஸார் பகுதியை ஜெர்மனியோடு இணைக்கப்படல்:
1.வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின்படி ஜனவரி 1935இல் ஸார் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2.வாக்களித்தவர்களில் தொன்னூறு சதவீத நபர்கள் ஜெர்மனியோடு இணைவதேயே விரும்பினார்கள்.
3.அதனால் மார்ச் 1935 இல் ஸார் பகுதி ஜெர்மனியோடு இணைக்கப்பட்டது.
4.இது ஹிட்லருக்கு பெரும் மனவலிமையை ஊட்டியது.
ரைன்லாந்து இணைக்கப்படல்:
1வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஜெர்மனி தனது இராணுவத்தை ரைன்லாந்தில் இருந்து விலகிக்கொள்ள ஒப்புக்கொண்டதையும் மீறி 1936 இல் ஹிட்லர் மீண்டும் அப்பகுதியில் இராணுவத்தை குவிக்கலானார்.
ஆஸ்திரியா-ஜெர்மனியுடன் இணைப்பு:
1.ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்ததால் அது ஜெர்மனியின் ஒருபகுதியாக இருப்பதையே அவர் விரும்பினார்.
2.ஹிட்லர் ஆஸ்திரிய பிரதம அமைச்சரான ஸ்கூனிக்கை பிப்ரவரி 1938 ல் பவேரிய ஆல்ப்ஸ் மலையில் இருந்த நகரான பெர்க்டஸ்காடனுக்கு கலந்துரையாடும் நிமித்தமாக அழைத்தார்.
2.இந்நிகழ்வில் ஆஸ்திரிய பிரதம அமைச்சர் நாஜி கட்சியை அவர் நாட்டில் அங்கீகாரமளிக்கவும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை ஜெர்மனியோடு இணைக்கவும் தவறினால் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒற்றை தெரிவு வழங்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டார்.
சூடட்டன்லாந்து ஆக்கிரமிப்பு:
1.ஐரோப்பாவின் முக்கிய சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத ஹிட்லர் தனது பார்வையை செகோஸ்லோவாக்கியா மீது திரும்பினார்.
2.ஹிட்லர் ஆஸ்திரிய பிரதம அமைச்சரான ஸ்கூனிக்கை பிப்ரவரி 1938 இல் பவேரிய ஆல்ப்ஸ் மலையில் இருந்த நகரான பெர்க்டஸ்காடனுக்கு கலந்துரையாடும். நிமித்தமாக அழைத்தார்.
3.இந்நிகழ்வில் ஆஸ்திரிய பிரதம அமைச்சர் நாஜி கட்சியை அவர் நாட்டில் அங்கீகாரமளிக்கவும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை ஜெர்மனியோடு இணைக்கவும் தவறினால் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒற்றை தெரிவு வழங்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டார்.
சூடட்டன்லாந்து ஆக்கிரமிப்பு:
1.ஐரோப்பாவின் முக்கிய சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத ஹிட்லர் தனது பார்வையை செகோஸ்லோவாக்கியா மீது திரும்பினார்.
2.சூட்டன்லாந்தில் வாழும் ஜெர்மானியர்கள் மிக மோசமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது போன்றதொருப் பிரச்சாரத்தை தெளிந்த முறைமையுடன் நாஜி கட்சிப் பரப்பியது.
3.பிரான்சையும்,செக்கோஸ்லோவாக்கியாவையும் கலந்து பேசிய பிரிட்டிஷ் பிரதம அமைச்சர் நெவில் சாம்பர்லின் பாதிக்கு மேல் ஜெர்மனிய தொகையை உள்ளடக்கிய மூனிச் ஒப்பந்தம்.
4.மூனிச் மாநாட்டில் பிரிட்டன்,பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதம அமைச்சர்கள் கூடிப்பேசி ஹிட்லர் அக்டோபர் 1 இல் நிர்ப்பந்தித்தது போல சூட்டன்லாந்தை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்றும் செக்கோஸ்லோவாக்கியாவின் பகுதிகளை போலாந்திற்கும் ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
போலந்து மீது படையெடுப்பும்,போரின் துவக்கமும்:
ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருந்த ஹிட்லர் முதலில் 1939 செப்டம்பர் 1 இல் "போலந்து நாடு தனது நட்பு நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து தன் நாட்டை சுற்றி வளைத்து தரைமட்டமாக்கத் திட்டம் தீட்டுவதாகவும் போலந்தில் வாழும் ஜெர்மானிய இனத்தை அந்நாடு ஒடுக்குவதாகவும் குற்றம் சுமத்தி அந்நாட்டின் மீது படையெடுத்தார்.
4.
1.பிரஷ்யாவின் பிரதம அமைச்சர் பதவி வகித்த ஆட்டோ வான் பிஸ்மார்க் (Otto von Bismarck ) பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மனியப் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அதனை வலுப்படுத்தினார்.
2.ஒருங்கிணைவை அடைவதற்கு அவர் "இரத்தமும் இரும்பும்" என்ற வலுவான கொள்கையைக் கைக்கொண்டார்.
3.ஜெர்மனிய ஒருங்கிணைவை ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் மோதாமல் அடைவது சாத்தியமில்லை என்று அவர் புரிந்துகொண்டிருந்தார்.
4.இராஜதந்திர நகர்வுகளின் வாயிலாக ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் முரண்போக்கைக் கைக்கொள்ளலானார்.
5.ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளைத் துவங்கிய அவர் பிரஷ்யாவிற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே போர் ஏற்பட்டால் அந்நாடு தலையிடாது என்பதை உறுதி செய்து கொண்டார்.
6.அதன்பின் ஜெர்மனிய ஒருங்கிணைவை அடைய மூன்று போர்களை நடத்தும்படி ஆயிற்று.
ஸ்லெஸ்விக் -ஹால்ஸ்டின் சிக்கல்:
1.ஸ்லெஸ்விக்கும் ஹால்ஸ்டினும் டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்த இரு ஜெர்மானிய மாநிலங்களாகும்.
2.இவ்விரு பகுதிகளையும் (Duchies) 1863 இல் டென்மார்க் மன்னர் தனது அரசுடன் இணைத்தார்.
3.பிஸ்மார்க் ஆஸ்திரியாவுடன் சேர்ந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு டென்மார்க்கை எதிர்க்க முன்மொழிந்தார்.
4.அதன்படி 1864இல் ஆஸ்திரியா ,பிரஷ்யாவின் கூட்டுப்படைகள் டென்மார்க்கைப் போரில் தோற்கடித்தன.
ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் 1866 :
1.தனது ராஜதந்திர செயல்பாடுகளின் வாயிலாக பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் நடுநிலையை பிஸ்மார்க் உறுதி செய்துகொண்டார்.
2.பின்னர் ஆஸ்திரியாவை வெனிஷியப் பகுதியை விட்டு அப்புறப்படுத்த விரும்பிய அவர் பியட்மாண்ட் - சார்டினியாவின் ஆதரவைப் பெற்றார்.
3.பெரும் சக்திகள் எதுவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவளிக்காது என்பதனை உறுதி செய்து கொண்ட பிஸ்மார்க் பிரஷ்யாவை தாக்க ஆஸ்திரியாவைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டார்.
4.இவ்வாறு நடந்த ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் ஏழு வாரப் போர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிராங்கோ-பிரஷ்யப்போர்,1870-71 :
1.பிஸ்மார்க் தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒன்றிணைக்கும் பொருட்டு பிரஷ்யாவிற்கும்,பிரான்சிற்குமிடையே பிளவை ஏற்படுத்த தனது கவனத்தைச் செலுத்தினார்.
2.அதற்கான வாய்ப்பு ஸ்பானிய அரசுரிமை வாரிசுப் பிரச்சனை தோன்றியபோது ஏற்பட்டது.
3.ஸ்பெயினில் ஏற்பட்ட ஒரு புரட்சிக்குப்பின் இராணி இஸபெல்லா வெளியேற்றப்பட்டு பிரஷ்ய மன்னரின் உறவினரான இளவரசர் லியோபால்டிற்கு அரியணை வழங்கப்பட்டது.
4.பிரஷ்யர்கள் தங்கள் மன்னர் மதிக்கப்படவில்லை என்று நினைக்கவும் தக்கபடி பிஸ்மார்க் மாற்றியமைத்தார். இதனால் எம்ஸ் தந்தி பிராங்கோ-பிரஷ்யப் போர் தோன்ற வழிவகுத்தது.
5.பிஸ்மார்க் கடுமையான பல சரத்துகளை பிரான்சின் மீது திணித்தார்.அல்சேஸ் - லொரைன் பகுதிகளை விட்டுக்கொடுக்க நேர்ந்த பிரான்ஸ் பெருந்தொகையைப் போர் இழப்பீடாகவும் கொடுக்கும்படி ஆயிற்று.
6.வெர்செய்ல்ஸ் அரண்மனையில் பிரஷ்ய மன்னர் முதலாம் வில்லியம் வடக்கு ஜெர்மானிய கூட்டமைப்பிற்கும்,தெற்கத்திய ஜெர்மானிய மாகாணங்களுக்கும் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
7.இவ்வாறு இராஜதந்திர உத்திகளையும், போர் நடவடிக்கைகளையும் கொண்டு ஜெர்மானிய ஒருங்கிணைவு சாத்தியப்படுத்தப்பட்டது.
5.
1. 1848 இல் பிரான்சின் பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து இத்தாலியின் மாநிலங்களான பியட்மாண்ட் - சார்டினியா, சிசிலி,போப்பாண்டவரின் பகுதிகள்,மிலான்,லம்பார்டி வெனிஷியா ஆகிய பகுதிகளில் மக்களின் கிளர்ச்சி மீண்டும் வெடித்தது.
2. அதன் விளைவாக சிசிலி,பியட்மாண்ட்-சார்டினியா மற்றும் போப்பாண்டவரின் பகுதிகளில் தாராளக் கூறுகளைக் கொண்ட அரசியல்சாசனம் வழங்கப்பட்டது.
3. புரட்சியால் உந்தப்பட்ட பியட்மாண்ட்- சார்டினியப் பகுதிகளின் மன்னரான சார்லஸ் ஆல்பர்ட் லம்பார்டி மற்றும் வெனிஷியா மீது படையெடுத்தார்.
4. எனினும்,ரஷ்யப் படைகளின் உதவியைப் பெற்ற ஆஸ்திரியா அவரைத் தோற்கடித்தது.ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து பியட்மாண்ட் - சார்டினியாவைத் காத்த சார்லஸ் ஆல்பர்ட் வீழ்ச்சிக்குரிய பழியைத் தான் ஏற்றுக்கொண்டு பட்டம் துறந்ததோடு தனது மகனான இரண்டாம் விக்டர் இம்மானுவேலை அரசராக்கினார்.
5. பியட்மாண்ட்- சார்டினியா தோல்வியை அடைந்தது போலப் பல குறு இராஜ்ஜியங்களின் எழுந்த கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டாலும்,தாராளவாத கருத்துக்களும்,தேசியவாதமும் தாக்குப்பிடித்து நின்றன.
6.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்கள்:
1.வியாபார,வணிகத் துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள்,முதலாளிகள் எனும் புதிய வர்க்கத்தை உருவாக்கியது.
2.கடல் கடந்து காலனிகளை உருவாக்கும் போட்டியில், இங்கிலாந்து தாமதமாக இணைந்தாலும்,காலப்போக்கில் இங்கிலாந்து மேலாதிக்கம் பெற்றது.
3.இங்கிலாந்தில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சந்தைகளும் விரிவடைந்தன.
4.பல்வேறு காலனிகளின் குறிப்பாக இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
5.ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் தாராளத்தன்மை கொண்ட நாடாக இருந்தது.
6.நிலக்கரி, இரும்பு போன்ற மூல வளங்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் கிடைத்ததென்பது தொழில் வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
7. தொழிற்புரட்சிக்கு முன்பு வேளாண்மையிலும் இங்கிலாந்து விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்தது. இயந்திரமயமாக்கலின் மூலமாக அதிக அளவிலான நிலங்கள் வேளாண்மையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
8. தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
6.நிலப்பகுதியிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்த இங்கிலாந்தின் புவியியல் அமைவிடமும் அந்நியர் படையெடுப்புகளிலிருந்து சற்றே பாதுகாப்பாக அமைந்திருந்தமையும் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது.
தொழிற்புரட்சியின் தாக்கம்:
1.இங்கிலாந்துத் தீவுகளில் நிலவிய மிதமான தட்பவெப்பநிலை பருத்தி இழைத் துணி உற்பத்திக்கு உகந்ததாக இருந்தது.
2.மறுமலர்ச்சி மக்களின் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையை மாற்றியமைத்தது எனில், தொழிற்புரட்சி விவசாய காலம் தொட்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பாதையையே மாற்றியது.
3. தொழிற்புரட்சி உற்பத்தியில் இருந்த பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது.
4.இயந்திரங்களைப் பயன்படுத்தி பொருள் உற்பத்தி செய்வோர்கள் கைவினைத் தொழில்களைப் பாழ்படுத்தினர்.ஆயிரக்கணக்காக கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலையற்றவர்களாயினர்.
5.தொழிற்புரட்சியின் முதற்கட்டத்தில் இயந்திரங்கள் அறிமுகமானபோது பெண்கள் குழந்தைகள் ஆகியோரிடமிருந்து மலிவான விலையில் உழைப்பு பெறப்பட்டதால் உடல் வலுமிக்க ஆண்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
6.தொழிற்புரட்சியின் மிக முக்கியமான விளைவு ஆலை முதலாளிகள்,ஆலை தொழிலாளர்கள் என இரண்டு வர்க்கங்கள் உருவாக்கப்பட்டதுவே தங்கள் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்கக் காப்புவரி விதிப்பது,தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவது ஆகிய இவ்விரு விஷயங்களைக் கடந்து ஏனையவற்றில் அரசு தலையிடுவது முதலாளிகளுக்கு ஒவ்வாமையாக இருந்தது.
7.இயந்திரங்களை உடைப்பது பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது தொழிலாளர் சங்கங்கள் உருவாக்குவது என பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
7.
பாஸ்டில் சிறை தகர்ப்பு :
1.அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் அல்லல்பட்ட பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.அரசர் பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார்.இதனால் கோபம் கொண்ட மக்கள் 1789 ஜூலை 14-ல் பாஸ்டில் சிறையை தகர்த்து கைதிகளை விடுவித்தனர்.
தேசிய மன்றம்:
1.பாஸ்டில் சிறை தகர்ப்பால் ஊக்கம் பெற்ற தேசிய சட்டமன்றம் 1791ல் அரசியலமைப்பை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பு மூன்று வெவ்வேறு அங்கங்களை பரிந்துரைத்தது.
குழுக்களின் தோற்றம்:
1.தேசிய சட்டமன்றம் உருவாக்கப்பட்ட பின்னரும் கூட சாதாரண மக்களின் துயரங்கள் தொடர்கதையாக இருந்தன. மனநிறைவு பெறாத மக்கள் தங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்ய அரசியல் குழுக்களை உருவாக்கத் தொடங்கினர்.
2.முக்கியமான குழு ஜேக்கோபியன் குழு ஆகும்.இதன் தலைவர் மாக்ஸ்மிலியன் ரோபஸ்பியர் ஆவார்.கார்டிலியர் கிளப்பில் செல்வாக்கு பெற்றவர் டாண்டன் ஆவார்.
3.ஜேக்கோபியன் குழுவிற்குள் இருந்த கிராண்டியர்கள் அரசரின் ஆதரவாளராக இருந்தனர்.
ஜேக்கோபியன்களின் ஆட்சி:
1.1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர சீர்திருத்தங்களுக்கான காலமாகும்.1794 பிப்ரவரி 4ல் ஜேக்கோபியர்கள் அதிகம் இருந்த சட்டமன்றம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை ஒழித்து ஆணை பிறப்பித்தது.அரசாங்கமும்,சமூகத்தின் அடித்தளமும் அளவுக்கு மேலாக தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியரை 1794ல் தூக்கிலிட்டனர்.
8.
சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள்:
1.பாவ மன்னிப்பு வழங்கும் முறைக்கு பணம் பெற்றது (ஒருவரின் பாவத்தை மன்னித்து அவருக்கு புனிதத்தை வழங்கும் போப்பாண்டவரின் பாவமன்னிப்புக்கு மன்னித்து பெற்றது).வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது தேவாலயப் பணிகளை பணத்துக்கு விற்பது ஆகியன தாக்குதலுக்கு உள்ளானது.
2.ஆறாம் அலெக்ஸாண்டர்,இரண்டாம் ஜூலியஸ்,பத்தாம் லியோ ஆகிய சில போப்பாண்டவர்கள் இது போன்ற நடைமுறைகளால் ஆட்சியாளர்களிடம் சண்டையிட்டனர்.
3.போப் பத்தாம் லியோவுக்கு பணம் கொடுத்து மெயின்ஸின் ஆல்பர்ட் என்பவர் ஆர்ச்பிஷபாக பதவியேற்ற சம்பவமும் நடந்தது.
4.மெடிசி குடும்பம் போன்ற மிகப்பெரிய வர்த்தகக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்கள் சொத்தைப் பெருக்கவும் தங்களுக்கு முறைதவறிப் பிறந்த மகன்களுக்கு அந்தச் சொத்தைப் வழங்கவும் போப்பாண்டவர்களாக மாறினார்கள்.
மார்ட்டின் லூதர்:
1.கிறித்துவப் பாதிரியரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு எதிராக ஜெர்மனியில் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.ரோமுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு அவர் தேவாலயத்தின் ரோமானிய தேவாலயத்திற்கு எதிராக அவர் 95 புகார்களை எழுதினார்.
2.தேவாலய சீர்திருத்தத்துக்காக அவர் சில ஆலோசனைகளை வழங்கினார்.
3.பைபிள் மட்டுமே உன்னதமானது'போப்பாண்டவரே அல்லது பிஷப்புகளோ இல்லை என்று அவர் வாதிட்டார்.
4.லூதர் பைபிளை ஜெர்மனிய மொழியில் மொழிபெயர்த்தார்.
5.லூதரன் புராட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.அவர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தை ஏற்கவில்லை.
6.அவர்கள் தங்களுக்கு என்று தேவாலயங்களை நிறுவினார்கள்.நிர்வாக அமைப்புகளை உருவாக்கினார்கள்.பைபிளின் உன்னதம் பற்றி மட்டுமே நம்பினார்கள்.
7.பாதிரியர்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
9.
ஸ்பெயின் தேசிய அரசு:
1.அராபிய அரசர்களின் வழித்தோன்றல்களாகிய முஸ்லிம் மன்னர்களாகிய மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
2.அராகன்,காஸ்டைல் என இரண்டு முக்கிய அரசுகள் அங்கிருந்தன.
3.ஸ்பெயின் நாட்டின் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அராகன் அரசர் பெர்டினான்ட் காஸ்டைல் இளவரசி இசபெல்லாவை திருமணம் செய்தார்.
4.1479 இல் அரசரும் அரசியும் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்தனர்.
5.மன்னர் சபையில் இருந்து பிரபுக்களை நீக்கியதன் மூலம் அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.ஸ்பெயின் ஒரு தனி நாடாக உருவெடுத்தது.
இங்கிலாந்து அரசு:
1.அரச சிம்மாசனத்தை அடைய யார்க் குடும்பம் மற்றும் லாங்காஸ்டர் குடும்பம் என இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2.இதன் விளைவாக ரோஜாப்பூக்கள் போர் நடந்தது.அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக்குறிகளை அணிந்தனர்.அதனால் இப்பெயர் பெற்றது.
3.இந்த உள்நாட்டுப்போரில் ஹென்றி டியூடர் வெற்றி வாகை சூடி,இங்கிலாந்தில் புதிய அரசாட்சி அமைய வழிவகுத்தார்.
4.ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்ட அவர் யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.இதனால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசராக உருவெடுத்தது.
5.பிரான்சின் கிழக்கே உள்ள பர்கண்டி என்பது ஒரு சக்திவாய்ந்த நாடாகும்.பெயரளவிற்கே பிரான்ஸ் அரசரின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கிளர்ச்சிமிகுந்த பகுதியான பர்கண்டியை ஆங்கிலேயர்கள் பிரான்சுக்கு எதிராக ஆக்கிரமித்தனர்.
6.பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்குக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.ஆர்லியன்ஸின் பணிப்பெண் (Maid of Orleans) என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
7.ஜோன் ஆஃப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூறாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு அதில் வெற்றி பெற்றது.
8.கிளர்ச்சி மிகுந்த இந்தப்பகுதி இறுதியாக 1483 ஆம் ஆண்டு பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
9.பிரான்ஸ் ஒரு வலுவான மத்திய மன்னராட்சி நடைபெறும் அரசாக பதினோராம் லூயி உருவெடுத்தது.
10.
1.இந்தியா,அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்தெடுப்பில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது.
2.விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909-இல் J.R.D டாட்டா மற்றும் மைசூர் மஹாராஜா ஆகியோரின் நிதியுதவில் பெங்களூரில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம்(Indian Institute of Science-IISc)மட்டுமேயாகும்.
3.1945-இல் முனைவர் ஹோமி J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of fundamental Research-TIFR) நிறுவப்பெற்றது.
4.புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory),புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் (National Physics Laboratory)ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை ஆகும்.
5.அது முதலாக அறிவியல் துறையின் வானியியற்பியல் (geo-physics) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் (Cellular and molecular biology) கணித அறிவியல்கள் (mathematical sciences) மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.
6.அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research)எனும் குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
7.இவ்வமைப்பு (CSIR)பயன்பாட்டு அறிவியல் (Applied of Scientific and Industrial Research) எனும் ஒரு குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
8.அணுசக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு முகாமையாகத் (nodal agency)திகழ்கிறது.அணுசக்தி உற்பத்தி அணு ஆயுத உற்பத்தி ஆசிய முன்னெடுக்கிறது.
9.இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.முதல் IIT கரக்பூரில் நிறுவப்பட்டது.தொடர்ந்து டெல்லி,பம்பாய்,கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
10.தற்சமயம் நமது நாட்டில் 23 IITகள் செயல்படுகின்றது.இவையல்லாமல் 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Technology-NIT)23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Information Technology - NIT) செயல்பட்டு வருகின்றன.
11.
12.
1.1960 களில் தொழில் துறையிலும் வேளாண்மையிலும் வளர்ச்சி ஏற்பட்ட பின்னரும் வறுமை குறையவில்லை.
2.கிராமப்பகுதிகள்,நகர்ப்பகுதிகள் ஆகிய இரண்டிலும் வறுமை நிலவுகிறது.
3.கிராமப்புற வறுமையைப் போக்குவதற்காக அரசாங்கத்தால் முழுவீச்சில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
4.சமூக வளர்ச்சித் திட்டங்கள்,பஞ்சாயத்துராஜ் போன்ற உள்ளாட்சி நிறுவனங்களைப் புதுப்பிப்பது,சிறு குறு விவசாயிகளைப் போன்ற குறிப்பிட்ட குழுக்களை இலக்காகப் கொண்ட திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
5.1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
6.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
7.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
8.நாட்டிலிருந்த 5011 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
9.உதவியைப் பெறும் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு மானியங்களும் மாறுபட்டன.
10.இத்திட்டத்தால் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க வெற்றியைக் கருத்தில் கொண்டு கிராமப்புற ஏழைகளின் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக 1999 இல் இது மறுசீரமைக்கப்பட்டது.
11.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமானது (பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
12.ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயதுவந்த உறுப்பினர்களுக்கு தனித்திறனற்ற உடல் உழைப்பு,வேலையைத் செய்ய விருப்பம் உடையவர்களுக்கு,ஒவ்வொரு ஆண்டும் 100நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலையைக் கொடுப்பதன் மூலமே இதை வெற்றிகரமாகச் செய்தது.
13.இம்முயற்சியின் கீழ்க்கொள்ளப்படும் பணிகள் கிராமப்புறங்களில் சாலைகள்,கால்வாய்கள்,சிறிய நீர்ப்பாசன வேலைகள்,மரபு சார்ந்த நீர் நிலைகளை மீட்டெடுத்தல் போன்ற நீண்ட காலம் பயன்தரும் செல்வங்களை உருவாக்கும்.
13.
14.
1. 1920 களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக அம்பேத்கர் விளங்கினார்.
2. மஹர் சாதியின் ராணுவவீரரின் மகனாகப் பிறந்தார் டாக்டர். அம்பேத்கர்.
3. எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912 -ல் பட்டதாரி ஆனார்.
4. பரோடா அரசின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்பு பட்டத்தையும்.
5. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
6. சட்டம் மற்றும் பொருளாதார படிப்புகளுக்காக லண்டன் சென்றார்.
7. 1916- இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்தார்.
8. தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்களின் ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிட்டார்.
9. அம்பேத்கர் புதிய பத்திரிகைகள் மற்றும் அமைப்புகளைக் தோற்றுவித்தார்.
15.
1. 1929 - டிசம்பர் -31 இல் லாகூரின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -26 ஆம் நாள் விடுதலை நாள் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
2. சட்ட மறுப்பு இயக்கம் காந்தி தலைமையில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
3. லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்டவிருப்பதாக அரசு அறிவித்தது. ஆனால் சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த வட்ட மேசை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்தது.
4. காங்கிரஸ் பங்கேற்காவிட்டால் மாநாட்டை அரசு நடத்துவது பயன் இல்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர்.
5. காங்கிரஸ் பேச்சுக்கள் தொடங்கின 1931 - மார்ச் - 5 இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.
6. இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது.
16.
(i) HMIS தல்வார் என்ற போர்கப்பலில் மாலுமியாகப் பணியாற்றிய ஆங்கிலத்தில் ரேட்டிங் என்று வழங்கப்பட்ட இப்பதவிப் பெயரே பல்வேறுபட்ட போர்கப்பல்களிலும் இராயல் இந்திய கடற்படையின் போர்கப்பல்களிலும் பணியாற்றிய மாலுமிகளைக் குறிப்பதாக அமைந்தது.
(ii) B.C. தத் என்பவர் அக்கப்பலின் பக்கவாட்டில் "வெள்ளையனே வெளியேறு" என்று எழுதினார்.
(iii) தத்தின் கைது நடவடிக்கை 18 பிப்ரவரி 1946 அன்று வெடித்துக் கிளம்பிய கிளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.
(iv) HMIS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகளும் கராச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறரும் மின்னல் வேகத்தில் போராட்டத்தை துவங்கினார்கள்.
(v) போராட்டத்தில் ஈடுபட்ட மாலுமிகள் பல்வேறு துறைமுகங்களிலும் கப்பலின் முகட்டிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளின் கொடிகளை ஒருங்கே கட்டியிருந்தனர்.
(v) சர்தார் வல்லபாய் படேல் புரட்சி முடிவிற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார்
(vi) மாலுமிகளின் போராட்டம் விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் இது திகழ்கிறது.
17.
(i) டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியா காங்கிரஸ் தனது மிகச் சிறந்த சட்ட நிபுணர்களைக் கொண்டு அவர்கள் சார்பாக வாதாடியது இந்திய வரலாற்றில் சிறப்பு அம்சம் ஆகும்.
(ii) காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து ஜவஹர்லால் நேரு, நீண்ட இடைவேளைக்குப் பின் தனது கருப்பு அங்கியை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானார்.
(iii) இந்திய தேசிய காங்கிரசும் 25 ஜூன் முதல் 14 ஜூலை 1945 வரை நடைபெற்ற சிம்லா மாநாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து நேரடியாக மக்களைத் திரட்டும் பொருட்டு நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தியது.
(iv) இப்பின்புலத்தின் காலனிய ஆட்சியாளர்கள்-ஷா நவாஸ்கான், P.K. சேகல் மற்றும் G.S> தில்லான் ஆகிய இந்திய தேசிய இராணுவத்தின் மூன்று முக்கிய அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது.
(v) இந்தியா நாட்டின் பத்திரிகைகள் யாவும் இவ்விசாரணையை உணர்ச்சிகரமாக பிரசுரித்ததோடு தலையங்கங்கள் அனைத்திலும் அவர்தம் விடுதலைக்காகக் கோரிக்கை வைத்தன.
(vi) கடையடைப்புகளும், ஊர்வலங்களும், பொது வேலைநிறுத்தங்களும் இந்திய தேசிய இராணுவ வாரம் கடைபிடிக்கப்பட்டபோது நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.
(vii) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் அதுவரை தங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருந்த முஸ்லீம் லீக், சிரோமணி அகாலி தளம், இந்து மகாசபா போன்ற அமைப்புகள் எதிர்ப்புகள் கூட்டங்களில் கலந்துகொள்ளத் துவங்கினர்.
(ix) மேலும் சிறைப்பட்ட வீரர்களின் வழக்குச் செலவிற்காக நிதி திரட்டவும் செய்தன.
(x) விசாரணை நீதிமன்றம் சேகல், தில்லான், ஷா நவாஸ்கான், ஆகியோரின் குற்றத்தை ஊர்ஜிதப்படுத்தினாலும் முப்படைகளின் தளபதி, அவர்களின் தண்டனையைக் குறைத்ததோடு 6 ஜனவரி 1946 அன்று அவர்களை விடுதலை செய்தனர்.
(xi) இந்திய தேசிய இராணுவத்தின் விசாரணை பிப்ரவரி 1946 இல் இந்திய தேசிய இயக்கத்தை மற்றுமொரு முக்கியமான நிகழ்வுக்கு எடுத்துச் செல்ல மேடையமைத்தது.
18.
(i) M. S கோல்வாகர் மற்றும் V. D. சவார்கர் ஆகியோர் இந்து ராஷ்ட்ரா எனும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
(ii) இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து பண்பாட்டையும், மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறினார்.
(iii) இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாக, உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும் ஏற்று அவர்கள் கூறினர்.
(iv) "இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம்" என V. D. சாவர்கர் உறுதிப்பட கூறினர். இதை காந்தியும் விரும்பினார்.
(v) இந்த சூழலில் 1940 மார்ச் 23 இல் லாகூரில் முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்று கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
(vi) இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அமர்வின் ஒருங்கிணைந்த கருத்துக்கும்.
(vii) பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் நாட்டை இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் என பிரிவினை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் லீக் தீர்மானித்தது.
(viii) இந்திய தேசியக் காங்கிரஸின் தேசியவாதத்தை உருவாக்கப்படுத்திய காந்தி ஆரிய சமாஜம் அலிகார் இயக்கம் முன்வைத்த குறுகிய தேசியவாதத்தை மறுத்தார்.
(ix) பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்ட அவற்றைக் கடந்த ஓர் அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க விரும்பினார்.
19.
(i) ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என்று நம்பினர்.
(ii) சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல 1875 இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது.
(iii) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பசுப்பாதுகாப்பு கழகங்கள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கமளித்தன.
(iv) ஆரிய சமாஜம் போன்ற நிறுவனர் எடுத்த முயற்சிகள் 1891 முதல் அன்னி பெசண்ட் அம்மையாரால் வழிநடத்தப்பட்ட பிரம்மஞான சபையின் மூலம் தனது கருத்துக்களை பின்வருமாறு குறிப்பிட்டார்.
(v) "பண்டைய மதங்களை புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி உயர்த்துவதே, இந்தியர்களின் முதற்பணி" ஆகும்.
(vi) ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் ஒரு தவிர்க்க இயலாத விளைவாகவும், தேசப்பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும் நாட்டு புனரமைப்பதற்கான தோற்றமாகவும் உருவாக்கப்பட வேண்டும்.
20.
1. கிலாபத் விஷயம் பல பிரிவினரால் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது.
2. உத்தரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் கிலாப்(எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்துக்கு எதிரான பொதுக்கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
3. இவ்வாறே, மலபாரைச் சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுகளுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்தனர்.
4. இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம் ஈட்டுவோராகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற புதிய வர்க்கத்தினர் உருவானார்கள்.
5. இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த தொழிற்சாலை பணியாளர்கள் முதலில் மிகப் பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர்.
6. பம்பாயின் சோரப்ஜீ ஷபூர்ஜீ மற்றும் என்.எம்.லோக்காண்டே, வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் குரல்களை எழுப்பினர்.
7. பணியாளர்களுக்கான பணி நிலைமைகள் மிக மோசமாக இருந்தது.
8. மதிய உணவுக்குக் குறுகிய கால இடைவெளி தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய உதவியாளர்கள் அடிக்கடி நடத்திய தாக்குதல்கள், போதுமான ஊதியம் வழங்காதது ஆகிய இந்த கிளர்ச்சியின் துயர விளைவுகள் ஆகும்.
21.
1. நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
2. மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
3. மாகாண மற்றும் மத்திய சட்டப் பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
4. மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்க வேண்டும்.
5. மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து-முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.
6. தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்கக் கடமைப்பட்டுள்ளன. கவர்னர் ஜெனரல் அல்லது ஆளுநர் சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.
7. இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கு இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்க வேண்டும்.ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சமநிலை பெற்றிருக்க வேண்டும்.
22.
(i) 1929 - 30 களில் இந்தியாவில் -44% வெளியில் இருந்து நுகர்வு செய்யப்பட்ட பருத்திப் பொருட்கள் ஆகும்.
(ii) 1933 - 34 இல் பெருமந்த நிலைக்கு பின்னர் 20.5% ஆக குறைந்துவிட்டது.
(iii) இரண்டு தொழில்கள் சர்க்கரை உற்பத்தியும் சிமெண்ட் உற்பத்தியும் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கப்பல் தொழில் வளர்ச்சியைக் கண்டது.
(iv) "சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி லிமிடெட்" (1919) ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது.
(v) 1939-இல் அவர்கள் பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர்.
(vi) மேலும் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் காகிதம், வேதிப்பொருட்கள், சிமெண்ட், உரங்கள், தோல் பதனிடுதல் முதலியன ஆகும்.
(vii) 1923 - 24 -இல் ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு நெசவுத் தொழில் சிறப்பாக செயல்படத் தொடங்கியது.
23.
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் புத்தாண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது.
(ii) இவ்வேறுப்பு முடிவில் ஒரு புதிய போக்காகத் தோற்றம் பெற்று அது தீவிர தேசியவாதப் போக்கெனக் குறிப்பிடப்பட்டது.
(iii) இத்தீவிர தேசியவாதிகள் அல்லது முற்போக்காளர்கள் அல்லது போர்க்குணமிக்கவர்கள் ஆவார்கள்.
(iv) தீவிர தேசியவாதத் தலைவர்களாகிய லால்-பால்-பால் ஆகியோர் மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை, ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் மனு சமர்ப்பித்தல் போன்ற மிதவாதிகளின் "இறைஞ்சுதல் கொள்கைகளை" கடுமையாக விமர்சித்தனர்.
(v) மகாராஷ்டிராவில் பாலகங்காதர திலகர் வங்காளத்தில் பிபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா லஜபதிராய் ஆகியோரின் தலைமையில் இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது.
(vi) இதற்கு காரணங்கள், காங்கிரசுக்குள் உருவான உட்குழுக்கள், மிதவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு மற்றும் வங்காளத்தை பிரிப்பதற்காகக் கர்சன் மீது ஏற்பட்ட சினம் ஆகும்.
(vii) இவர்களால் சுதேசி இயக்கம் வளர்ச்சி பெற்றது. பல உத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
(viii) அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களைப் புறக்கணிப்பது ஆகியன சுதேசி இயக்கத்தின் ஆக்கபூர்வமானத் திட்டங்களாக இருந்தன.
(ix) வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி பிபின் சந்திரபால் கொடுத்த அழுத்தம் காரணமாக மிதவாத தேசியவாதிகள் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
(x) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாலகங்காதர திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கினார்.
(xi) பிபின் சந்திரபாலின் கருத்துப்படி சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.
(xii) வ.உ.சி.யின் சுதேசி இயக்க கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார்.
(xiii) பாலகங்காதர திலகர், பிபின் சந்திரபால், லாலா லஜபதிராய் (லால்-பால் -பால், Lal-bal-pal ) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்களின் இயக்க நடவடிக்கைகளின் விளைவாக மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்றும் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
24.
1. ஆங்கிலேயர்கள் இனப்பாகுபாட்டுக் கொள்கையை பின்பற்றினார்கள்.
2. அரசு உயர் பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர்.
3. இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
4. அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் - 1870 பிரிவு 124A அடக்குமுறைச் சட்டத்தை இயற்றியது.
5. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின.
6. சம்வத் கௌமுகி 1821 பாரசீக மொழியில் எழுதப்பட்டது.
25.
1. ஆங்கிலேயர்கள் தங்களின் நலனுக்காக கற்றறிந்த இந்திய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கினார்கள்.
2. அதை "பாபு வர்க்கமென" ஏளனப்படுத்தினார்கள்.
3. பின்னர் அந்த வர்க்கத்தினரே இந்தியாவின் புரட்சிகர முற்போக்கான படித்த வர்க்கமாக மாறி விடுதலைக்கு மக்களைத் திரட்டினர்.
4. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்நவீன சமூக வர்க்கம் இந்தியாவில் வணிக வர்த்தகச் சமூகங்கள், நிலப்பிரபுக்கள், லேவாதேவி செய்வோர் ஆங்கிலம் பயின்ற ஏகாதிபத்திய அரசின் துணை நிர்வாகப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாய் இருந்தது.
5. மேற்சொல்லப்பட்ட வர்க்கங்களை சேர்ந்த மக்கள் ஏனைய மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தெடுப்பதில் சிறப்பான பங்காற்றினர்.
6. நவீன இந்தியக் கற்றறிந்தோர் பிரிவைச் சேர்ந்த ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் இந்திய அரசியல், சமுதாய, மத, இயக்கங்களுக்குத் தலைமையேற்றனர்.
7. மேலை நாட்டு அறிஞர்களான ரூஸோ, கரிபால்டி, மார்க்ஸ் ஆகியோர்களால் சோசலிசம் போன்ற தத்துவக் கருத்துக்களைக் கற்றறிந்த இந்தியர்கள் அறிந்து கொண்டனர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards