12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/02/2020
12 ஆம் வகுப்பு கணிதவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 12th Standard Tamil Medium Mathematics Model Questions All Chapter 2020 )
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
குவியங்கள் x -அச்சில் உடைய செவ்வகம் நெட்டச்சின் ஒரு பாதியாக கொண்ட நீள்வட்டத்தின் மையத் தொலைத் தகவு காண்க.
2.
\(4\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } -2\overset { \wedge }{ k } \) என்ற நிலை வெக்டரை உடைய P யின் மீது செயல்படுகிற விசைகள் \( 2\overset { \wedge }{ i } +7\overset { \wedge }{ j } ,2\overset { \wedge }{ i } -5\overset { \wedge }{ j } +6\overset { \wedge }{ k } ,-\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \)ஆகும். \(6\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } -3\overset { \wedge }{ k } \) வை நிலை வெக்டராக உடைய புள்ளி Q வை பொறுத்து விசைகளின் விளைவின் வெக்டர் திருப்பு திறன் காண்க.
3.
நம்மிடம் எனில் x-ன் மதிப்பு காண்க.
4.
மதிப்பீடுக. sin \(\left( \frac { 1 }{ 2 } { cos }^{ -1 }\frac { 4 }{ 5 } \right) \)
5.
(cos θ + i sin θ)2 = x + iy எனில், x2 + y2 = 1 எனக் காட்டுக.
6.
சமன்பாடுகள் தொகுப்பு ஒருங்கிமைவற்றது என நிறுவுக. 2x+5y=7, 6x+15y=13.
7.
மதிப்பு காண்க
\({ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \sin }^{ -1 }(-1)\)
8.
முனை (-1, -2), அச்சு y-அச்சுக்கு இணை மற்றும் (3, 6) வழிச்செல்லும் பரவளையத்தின் சமன்பாடு காண்க.
9.
x2 + y2 − 6x −8y +12 = 0 என்ற வட்டத்தைப் பொறுத்து (2,3) என்ற புள்ளியின் நிலையை ஆராய்க.
10.
6x2 < 1 எனில், tan-1 2x + tan-13x = \(\frac{\pi}{4}\), ஐ தீர்க்க
11.
மதிப்பு காண்க.
(i) cos-1 \((-\frac{1}{\sqrt2})\)
ii) cos-1\((\cos(-\frac{\pi}{3}))\)
iii) cos-1\((\cos(\frac{7\pi}{6}))\)
12.
x2 = -36y என்ற பரவளையத்தின் முனையை செவ்வகலத்தின் முனைகளோடு கோடுகளாக இணைக்க கிடைக்கும் முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
13.
\(\overset { \rightarrow }{ a } =\overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } ,\overset { \rightarrow }{ b } =\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } ,\overset { \rightarrow }{ c } =\overset { \wedge }{ k } -\overset { \wedge }{ i } \) எனில் \(\left[ \overset { \rightarrow }{ a } -\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ b } -\overset { \rightarrow }{ c } ,\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } \right] \) காண்க.
14.
sin(ex) = 5x+5-x க்கான மெய் மூலங்களின் எண்ணிக்கை
15.
x + iy லிருந்து கலப்பெண்கள் 2 + i மற்றும் 1 - 2i சமதூரத்தில் உள்ளன எனில் x + 3y = 0 எனக் காட்டுக.
16.
நிரூபிக்க. tan-1 \(\left( \frac { m }{ n } \right) \) - tan-1 \(\left( \frac { m-n }{ m+n } \right) =\frac { \pi }{ 4 } \)
17.
தீர்க்க: 2x-3y=7, 4x-6y=14, காஸ் -ஜோர்டன் முறை மூலம்.
18.
பின்வரும் சமப்படித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பைத் தீர்க்கவும்.
2x+3y-z=0, x-y-2z=0, 3x+y+3z=0
19.
ஒரு கனச் சதுரப் பெட்டியின் பக்கங்களை 1, 2, 3 அலகுகள் அதிகரிப்பதால் கனச்சதுரப் பெட்டியின் கொள்ளளவைவிட 52 கன அலகுகள் அதிகமுள்ள கனச் செவ்வகம் கிடைக்கிறது எனில், கன செவ்வகத்தின் கொள்ளளவைக் காண்க.
20.
z = (cos θ + i sin θ) எனில், \({ z }^{ n }+\frac { 1 }{ { z }^{ n } } \)= 2 cos nθ மற்றும் \({ z }^{ n }-\frac { 1 }{ { z }^{ n } } \)= 2i sin nθ என நிறுவுக.
21.
z =x + iy மற்றும் arg\(\left( \frac { z-1 }{ z+1 } \right) =\frac { \pi }{ 2 } \) எனில், x2 + y2 = 1 எனக்காட்டுக
22.
α,β,\(\gamma \) என்பவை x3+px2+qx+r=0 எனும் சமன்பாட்டின் மூலங்களாக இருந்தால் கெழுக்களின் அடிப்படையில் \(\Sigma \frac { 1 }{ \beta \gamma } \) -ன் மதிப்பைக் காண்க.
23.
\(\left| 3z-5+i \right| =4\) என்ற சமன்பாடு வட்டத்தைக் குறிக்கிறது எனக்காட்டுக. மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
24.
A = \(\left[ \begin{matrix} 2 & 1 & 1 \\ 3 & 2 & 1 \\ 2 & 1 & 2 \end{matrix} \right] \) என்ற அணிக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறையை பயன்படுத்தி நேர்மாறு காண்க.
25.
A =\(\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] \) எனில், A-1 =AT என நிறுவுக.
26.
ஒரு அலங்கார வளைவு பரவளைய வடிவத்துடன் குத்தச்சை கொண்டுள்ளது.அந்த வளைவு 10 மீ உயரம் மற்றும் 5 மீ அகலத்தை அடிபகுதியில் உடையது பரவளையத்தின் முனையிலிருந்து 2 மீ உயரத்தில் அதனுடைய அகலம் காண்க.
27.
பின்வரும் ஜோடி கோடுகளுக்கு \(\frac { x-3 }{ 3 } =\frac { y-8 }{ -1 } =\frac { z-3 }{ 1 } \) மற்றும் \(\frac { x+3 }{ -3 } =\frac { y+7 }{ 2 } =\frac { z-6 }{ 4 } \) இடையேயான குறைந்தபட்ச தூரம் காண்க.
28.
இங்கு a,b,c,d மற்றும் p வெவ்வேறான பூச்சியமற்ற மெய்யெண்கள் எனில் (a2+b2+c2)P2-2(ab+bc+cd)p+(b2+c2+d2)≤0. நிரூபிக்க a,b,c,d பெருக்கத் தொடரில் உள்ளன மற்றும் ad=bc.
29.
\({ tan }^{ -1 }\left( \frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } }{ \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } } \right) =\alpha \) எனில் x2 = sin 2α என நிரூபிக்க.
30.
1, ω, ω2 ஒன்றின் முப்படி மூலங்கள் எனில் (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5) = 64 எனக் காட்டுக
31.
\(\frac { x-1 }{ 2 } =\frac { y-2 }{ 3 } =\frac { z-3 }{ 4 } \) மற்றும் \(\frac { x-4 }{ 5 } =\frac { y-1 }{ 2 } =z\) என்ற கோடுகள் வெட்டும் புள்ளியைக் காண்க.
32.
2+i மற்றும் 3-\(\sqrt { 2 } \) ஆகியவை x6-13x5+62x4-126x3+65x2+127x-140=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் எனில் அனைத்து மூலங்களையும் காண்க.
33.
மையத்தொலைத்தகவு \(\frac{1}{2}\), குவியங்களில் ஒன்று (2, 3) மற்றும் ஒரு இயக்குவரை x = 7 உடைய நீள் வட்டத்தின் சமன்பாடு காண்க. மேலும் நெட்டச்சு, குற்றச்சு நீளங்களைக் காண்க.
34.
\(\vec { r } =(6\hat { i } +\hat { j } +2\hat { k } )+s(\hat { i } +2\hat { j } -3\hat { k } )\) மற்றும் \(\vec { r } =(3\hat { i } +2\hat { j } -2\hat { k } )+t(2\hat { i } +4\hat { j } -5\hat { k } )\) என்பன ஒரு தளம் அமையாக் கோடுகள் எனக்காட்டுக. மேலும், அக்கோடுகளுக்கு இடைப்பட்ட மீச்சிறு தூரத்தைக் காண்க.
35.
\(\vec { a }\)= 2\(\hat { i }\) + 3\(\hat { j }\) - \(\hat { k }\), \(\vec { b }\)= 3\(\hat { i }\) + 5\(\hat { j }\) + 2\(\hat { k }\), \(\vec { c }\)= -\(\hat { i }\) - 2\(\hat { j }\) + 3\(\hat { k }\), எனில்
(i) \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } =\left( \vec { a } .\vec { c } \right) \vec { b } -\left( \vec { b } .\vec { c } \right) \vec { a }\)
(ii) \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) =\left( \vec { a } .\vec { c } \right) \vec { b } -\left( \vec { a } .\vec { b } \right) \vec { c }\) என்பவற்றைச் சரிபார்க்க.
36.
(-4, 4) ல் x2 = -4yன் தொடுகோட்டு சமன்பாடு
2x - 4y + 4 = 0
2x + y - 4 = 0
2x - y - 12 = 0
2x + y + 4 = 0
37.
\(\overset { \rightarrow }{ a } ,\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ c } \) ஒன்றுக்கொன்று செங்குத்து அலகு வெக்டர்கள் எனில் \(\left| \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } \right| \) என்பது _________________
3
9
3\(\sqrt { 3 } \)
\(\sqrt { 3 } \)
38.
x மெய் மற்றும் \(k=\frac { { x }^{ 1 }-x+1 }{ { x }^{ 1 }+x+1 } \)எனில்
\(\frac{1}{3}\) ≤k≤3
k≥ 5
k ≤ 0
ஏதுமில்லை
39.
\(\sqrt { 1+cos2x } \) = 2sin-1 (sin x), -π < x < π என்ற சமன்பாட்டின் மெய் தீர்வுகளின் எண்ணிக்கை
0
1
2
எண்ணிக்கையற்ற
40.
z = \(\frac { 1 }{ 1-cos\theta -isin\theta } \) எனில் Re (z) =
0
\(\frac 1 2\)
cot \(\frac { \theta }{ 2 } \)
\(\frac {1 }{ 2 } \) cot \(\frac { \theta }{ 2 } \)
41.
A ஒரு 3*3 அணி மற்றும் B ஒரு சேமிப்பு அணி |B|=64 எனில் |A|=
\(\neq \)2
\(\neq \)4
\(\neq \)8
\(\neq \)12
42.
\(\vec { r } =(6\hat { i } -\hat { j } -3\hat { k } )+t(-\hat { i } +4\hat { j } )\) என்ற கோடு \(\vec { r } .(\hat { i } +\hat { j } -\hat { k } )\) = 3 என்ற தளத்தை சந்திக்கும் புள்ளியின் அச்சுத்தூரங்கள்_______.
(2, 1, 0)
(7, -1, -7)
(1, 2, -6)
(5, -1, 1)
43.
ω ≠ 1 என்பது ஒன்றின் முப்படி மூலம் மற்றும் (1 + ω)7 = A + B ω எனில் (A, B) என்பது _______.
(1, 0)
(-1, 1)
(0, 1)
(1, 1)
44.
x-ல் n படியுள்ள ஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு பெற்றுள்ள மூலங்கள் _______.
n வெவ்வேறு மூலங்கள்
n மெய்யெண் மூலங்கள்
n கலப்பெண் மூலங்கள்
அதிகபட்சம் ஒரு மூலம்
45.
2x − y = 1 என்ற கோட்டிற்கு இணையாக \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) என்ற நீள்வட்டத்திற்கு தொடுகோடுகள் வரையப்பட்டால் தொடுபுள்ளிகளில் ஒன்று _______.
(\(\frac { 9 }{ 2\sqrt { 2 } } ,\frac { -1 }{ \sqrt { 2 } } \))
(\(\frac { -9 }{ 2\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 2 } } \))
(\(\frac { 9 }{ 2\sqrt { 2 } } ,\frac { 1 }{ \sqrt { 2 } } \))
\(\left( 3\sqrt { 3 } ,-2\sqrt { 2 } \right) \)
46.
A=\( \left[ \begin{matrix} 1 & \tan\frac { \theta }{ 2 } \\ -\tan\frac { \theta }{ 2 } & 1 \end{matrix} \right] \)மற்றும் AB = I2 எனில், B= ______.
\(\left( \cot^{ 2 }\frac { \theta }{ 2 } \right) \)A
\(\left( \cos^{ 2 }\frac { \theta }{ 2 } \right) \)AT
(cos2θ)I
\(\left( \sin^{ 2 }\frac { \theta }{ 2 } \right) \)A
47.
சார்பு f(x) = sin-1(x2-3) எனில், x இருக்கும் இடைவெளி _______.
[-1, 1]
[\(\sqrt2\), 2]
\(\\ \\ \\ \left[ -2,-\sqrt { 2 } \right] \cup \left[ \sqrt { 2 } ,2 \right] \)
\(\left[ -2,-\sqrt { 2 } \right]\)
48.
\(\overset { \rightarrow }{ r } =\overset { \rightarrow }{ a } +s\overset { \rightarrow }{ b } +t\overset { \rightarrow }{ c } \)
49.
மூலங்கள்
50.
|z1 - z2|
51.
sin-1 (3x - 4x3)
52.
adj (adj A)
53.
(1) \(x=acos\theta ,y=asin\theta \)
(2) \(\theta \)
(3) \(0\le \theta \le 2\pi \)
(4) \((acos\theta ,bsin\theta )\)
54.
ஒரு கோடானது x மற்றும் y மிகை அச்சுடன் α = 45o, β = 60o ஐ ஏற்படுத்தினால் z - அச்சுடன் (⋎) ஏற்படுத்தும் கோணம் என்பது
(1) 60o
(2) sin2α + sin2β + sin2⋎ =1
(3) cos2α + cos2β+ cos2⋎ = 1
(4) sin2α + sin2β + sin2⋎ = 2
55.
1) \({ \left( \frac { 3 }{ 5 } \right) }^{ x }=x-{ x }^{ 2 }-9\)
2) sin x=4
3) tan x=1
4) cos x=7
56.
3x4 அணியின் தரம் ________.
1) 1 ஆக இருக்கலாம்
2) 2 ஆக இருக்கலாம்
3) 3 ஆக இருக்கலாம்
4) 4 ஆக இருக்கலாம்
57.
(1) tan (tan-1 x) = x, x ∈ R எனில்
(2) sin-1 \(\left( \frac { 1 }{ x } \right) \) = cosec x, x ∈ R / (-4,1) எனில்
(3) cos-1 \(\left( \frac { 1 }{ x } \right) \) = sec x , x ∈ R / (-1,1) எனில்
(4) \({ tan }^{ -1 }\left( \frac { 1 }{ x } \right) =\begin{cases} { cot }^{ -1 }x,x>0 \\ -A+{ cot }^{ -1 },x<0 \end{cases}\)
58.
பின்வருவனவற்றுள் தவறானவை எது?
(1) வெவ்வேறான மூலங்களின் எண்ணிக்கை n
(2) மூலங்கள் பெருக்குத் தொடர் முறையில் உள்ளன மற்றும் பொது விகிதம் \(\left( \frac { 2\pi }{ n } \right) \)
(3) வீச்சு கூட்டுத் தொடர் முறையில் உள்ளன மற்றும் பொது வித்தியாசம் \(\left( \frac { 2\pi }{ n } \right) \)
(4) மூலங்களின் பெருகற்பலன் 0 மற்றும் கூடுதல் 土 1
1.
கொடுக்கப்பட்ட நீள்வட்டத்தின் சமன்பாடு
\(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) என்க
கொடுக்கப்பட்ட செவ்வகத்தின் நீளம்
= \(\cfrac { 1 }{ 2 } \) (நெட்டச்சின் நீளம்)
\(\Rightarrow \cfrac { { 2b }^{ 2 } }{ a } =\cfrac { 1 }{ 2 } \left( 2a \right) \Rightarrow \cfrac { { 2b }^{ 2 } }{ a } \Rightarrow { 2b }^{ 2 }={ a }^{ 2 }\)
\(\therefore e=\sqrt { 1-\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { { b }^{ 2 } }{ { 2b }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { 1 }{ 2 } } =\sqrt { \cfrac { 1 }{ 2 } } =\cfrac { 1 }{ \sqrt { 2 } } \)
2.
கொடுக்கப்பட்ட விசைகளின் விளைவு \(\overset { \rightarrow }{ F } \) என்க.
\(\overset { \rightarrow }{ F } =\left( 2\overset { \wedge }{ i } +7\overset { \wedge }{ j } \right) +\left( 2\overset { \wedge }{ i } -5\overset { \wedge }{ j } +6\overset { \wedge }{ k } \right) +\left( -\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \right) \)
\(=3\overset { \wedge }{ i } +4\overset { \wedge }{ j } +5\overset { \wedge }{ k } \)
\(\overset { \rightarrow }{ r } \) = P-ன் நி.வெ - Q-ன் நி.வெ
\(\left( 4\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +2\overset { \wedge }{ k } \right) -\left( 6\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } -3\overset { \wedge }{ k } \right) =-2\overset { \wedge }{ i } -4\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \)
\(\therefore \tau =\overset { \rightarrow }{ r } \times \overset { \rightarrow }{ F } =\left| \begin{matrix} \overset { \wedge }{ i } \\ 3 \\ -2 \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ j } \\ 4 \\ -4 \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ k } \\ 5 \\ 1 \end{matrix} \right| \)
\(=\overset { \wedge }{ i } (-20-4)-\overset { \wedge }{ j } (-10-3)+\overset { \wedge }{ k } (-8+12)\)
\(=-24\overset { \wedge }{ i } +13\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \)
3.
நம்மிடம் x = \(\sqrt{2+x}\)
⇒ x2 = 2+x ⇒ x2-x-2 = 0
\(\Rightarrow x=\frac { 1\pm \sqrt { 1+8 } }{ 2 } \Rightarrow x=\frac { 1\pm 3 }{ 2 } \)
\(\Rightarrow x=\frac { 1+3 }{ 2 } ,\frac { 1-3 }{ 2 } \Rightarrow x=2,-1\)
மேலும் x > 0, நமக்கு கிடைப்பது x = 2
4.
\({ cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) =\theta \Rightarrow cos\theta =\frac { 4 }{ 5 } \) என்க.
\(\therefore sin\left( \frac { 1 }{ 2 } { cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) =sin\left( \frac { 1 }{ 2 } \theta \right) \)
\(=sin\frac { \theta }{ 2 } =\sqrt { \frac { 1-cos\theta }{ 2 } } \)
\(=\sqrt { \frac { 1-\frac { 4 }{ 5 } }{ 2 } } =\sqrt { \frac { 5-4 }{ 5(2) } } =\sqrt { \frac { 1 }{ 10 } } \)
5.
(cos θ + i sin θ)2 = cos 2θ + isin 2θ [டி மாய்வரின் தேற்றப்படி]
⇒ cos 2θ + isin 2θ = x + iy
மெய் மற்றும் கற்பனை பகுதிகளை சமப்படுத்த கிடைப்பது
x = cos 2θ, y = isin 2θ
∴ x2 + y2 = cos2θ + sin22θ = 1
எனவே நிரூபிக்கப்பட்டது.
6.
விரிவுபடுத்தப்பட்ட அணி
\([A|B]\left[ \begin{matrix} 2 & 5 \\ 6 & 15 \end{matrix}|\begin{matrix} 7 \\ 13 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }{ \rightarrow R }_{ 2 }-{ 3R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 & 5 \\ 0 & 0 \end{matrix}|\begin{matrix} 7 \\ -5 \end{matrix} \right] \)
இங்கு ρ(A)=2 மற்றும் ρ([A|B])=3
∴ ρ(a) ≠ρ([A|B])
எனவே தொகுப்பு ஒருங்கிமைவற்றது.
7.
cos-1\(\left( \frac { 1 }{ 2 } \right) \) = x மற்றும் sin-1(-1) = y என்க.
⇒ \(\frac { 1 }{ 2 } \) = cos x மற்றும் -1 = sin y
⇒ cos x = \(\frac { 1 }{ 2 } \) = cos \(\frac { \pi }{ 3 } \)
x = \(\frac { \pi }{ 3 } \)
sin y = -1 = -sin \(\left( \frac { -\pi }{ 2 } \right) \)
= sin \(\left( \frac { -\pi }{ 2 } \right) \)
[∵ sin (-θ) = -sin θ மற்றும் \(\frac { \pi }{ 2 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
⇒ y = \(\frac { -\pi }{ 2 } \)
∴ cos-1\(\left( \frac { 1 }{ 2 } \right) \) + sin-1(-1) = x + y
= \(\frac { \pi }{ 3 } \) - \(\frac { \pi }{ 2 } \) = \(\frac { 2\pi -3\pi }{ 6 } =\frac { -\pi }{ 6 } \)
∴ cos-1\(\left( \frac { 1 }{ 2 } \right) \) + sin-1(-1) = \(\frac { -\pi }{ 6 } \)
8.

அச்சு y-அச்சுக்கு இணை என்பதால் தேவையான பரவளையத்தின் சமன்பாடு
(x+1)2 = 4a(y+2)
இது (3, 6) வழிச்செல்வதால்
(3 + 1)2 = 4a(6 + 2)
\(\Rightarrow\) a = \(\frac{1}{2}\)
எனவே பரவளையத்தின் சமன்பாடு (x + 1)2 = 2(y + 2)
இதைச் சுருக்க x2 + 2x - 2y - 3 = 0 எனக் கிடைக்கும்.
9.
x12 + y12 + 2gx1 + 2fy1 + c = 22 + 32 − 6 × 2 − 8 × 3 + 12
= 4 + 9 −12 − 24 +12 = −11< 0.
எனவே புள்ளி (2, 3) தேற்றம் 5.3-ன் படி வட்டத்திற்கு உள்ளே அமையும்.
10.
6x2<1 எனில், tan-1 2x + tan-13x = tan-1\(\\ \left( \frac { 2x+3x }{ 1-{ 6x }^{ 2 } } \right) \)
\({ \tan }^{ -1 }\left( \frac { 5x }{ 1-{ 6x }^{ 2 } } \right) =\frac { \pi }{ 4 } \) என்பதால் \(\frac { 5x }{ 1-6{ x }^{ 2 } } =\tan\frac { \pi }{ 4 } =1\)
ஆகையால், 1 - 6x2 = 5x, என்பதிலிருந்து 6x2 + 5x -1 = 0
ஆகவே, \(x=\frac { 1 }{ 6 } ,-1\)
x = -1 என்பது சமன்பாட்டின் இடப்புறம் குறையெண் மதிப்பையும் மற்றும் வலப்புறம் மிகையெண் மதிப்பையும் தருகிறது என்பதை கவனிக்கவும். ஆகையால், x = -1 என்பது தீர்வாகாது. எனவே, \(x=\frac{1}{6}\) மட்டுமே சமன்பாட்டிற்குத் தீர்வாக அமையும்.
11.
cos-1 x : [-1, 1] \(\rightarrow\) [0, \(\pi\)] எனும் நேர்மாறு கொசைன் சார்பு வரையறையின்படி, cos−1x = y எனில், எனில் மட்டுமே cos y = x. இங்கு \(-1\le x\le1 \) மற்றும் \(0\le y \le\pi\) ஆகையால்,
i) cos-1 \((-\frac{1}{\sqrt2})\) = \(\frac{3\pi}{4}\), ஏனெனில் \(\frac{3\pi}{4}\)\(\in[0,\pi]\) மற்றும் cos\(\frac{3\pi}{4}\) = cos\((\pi-\frac{\pi}{4})=-cos \frac{\pi}{4}=-\frac{1}{\sqrt2}\)
ii) cos-1\((\cos(-\frac{\pi}{3}))\) = cos-1\((cos(\frac{\pi}{3}))\) = \(\frac{\pi}{3}\), ஏனெனில் -\(\frac{\pi}{3}\)\(\notin \)[0,\(\pi\)], ஆனால் \(\frac{\pi}{3}\in[0, \pi]\)
iii) cos-1\((\cos(\frac{7\pi}{6}))\) = \(\frac{5\pi}{6}\), ஏனெனில் cos\((\frac{7x}{6})=\cos(\pi+\frac{\pi}{6})=-\frac{\sqrt3}{2}=\cos(\frac{5\pi}{6})\) மற்றும் \( (\frac{5\pi}{6})\in[0, \pi].\)
12.
கொடுக்கப்பட்ட சமன்பாடு என்பது x2 = -36y ...(1)
குவியம் (0, -9) = (0, -9)மற்றும் செவ்வகலம் என்பது (1)ல் y = -9

நமக்கு கிடைப்பது
\({ x }^{ 2 }=-36(-9)\Rightarrow \sqrt { 36(9) } =6(3)=18\)
\(\Delta AOB\) ன் பரப்பு 2(\(\Delta OSB\) ன் பரப்பு )
= \(2\left( \cfrac { 1 }{ 2 } \times b\times h \right) =2\left( \cfrac { 1 }{ 2 } \times 18\times 9 \right) \)
[\(\therefore\) b = SB = 18, h = OS = 9]
13.
\(\overset { \rightarrow }{ a } -\overset { \rightarrow }{ b } =\left( \overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } \right) -\left( \overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \right) =\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ k } \right) \)
\(\overset { \rightarrow }{ b } -\overset { \rightarrow }{ c } =\left( \overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \right) -\left( \overset { \wedge }{ k } -\overset { \wedge }{ i } \right) =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } -2\overset { \wedge }{ k } \)
\(\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } =\left( \overset { \wedge }{ k } -\overset { \wedge }{ i } \right) -\left( \overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } \right) =-2\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \)
\(\therefore \left[ \overset { \rightarrow }{ a } -\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ b } -\overset { \rightarrow }{ c } ,\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } \right] =\left| \begin{matrix} 1 \\ 1 \\ -2 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ -2 \\ 1 \end{matrix} \right| \)
= 1(1 + 2) + 0 + 1 (1 + 2)
= 3 + 3 = 6
14.
கொடுக்கப்பட்ட sin(ex) = 5x + 5-x
நம்மிடம் \({ 5 }^{ x }+5={ 5 }^{ -x }={ \left( { 5 }^{ \frac { x }{ 2 } }-{ 5 }^{ \frac { -x }{ 2 } } \right) }^{ 2 }+2\ge 2\)
sin(ex) = 5x+5-x க்கு தீர்வு இருக்குமெனில் நாம் பெறுவது sin (ex) ≥ 2 இது எந்த மெய் மதிப்புடைய x க்கும் சாத்தியமில்லை, sin 0 ≤ 1 எல்லா θ ∈ R க்கும்
∴ sin (ex) = 5x + 5-x க்கு தீர்வு இல்லை.
15.
P (x, y), A(2, 1), மற்றும் B(1, -2) என்பன கொடுக்கப்பட்ட கலப்பெண்கள் என்க.
∴ கொடுக்கப்பட்ட PA = PB ⇒ PA2 = PB2
⇒(x - 2)2 + (y - 1)2 = (x - 1)2 + (y + 2)2
=
⇒ -4x - 2y + 5 = -2x + 4y + 5
⇒ -2x - 6y = 0
⇒ x + 3y = 0
16.
L.H.S = tan-1 \(\left( \frac { m }{ n } \right) \) - tan-1 \(\left( \frac { m-n }{ m+n } \right) =\frac { \pi }{ 4 } \)
\(={ tan }^{ -1 }\left( \frac { \frac { m }{ n } -\frac { m-n }{ m+n } }{ 1+\frac { m }{ n } .\left( \frac { m-n }{ m+n } \right) } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { \frac { m(m+n)-n(m-n) }{ m(m+n) } }{ \frac { n(m+n)+m(m-n) }{ n(m+n) } } \right) \)
\(={ tan }^{ -1 }\left( \frac { { m }^{ 2 }+{ n }^{ 2 } }{ { m }^{ 2 }+{ n }^{ 2 } } \right) ={ tan }^{ -1 }(1)=\frac { \pi }{ 4 } =RHS\)
எனவே நிரூபிக்கப்பட்டது.
17.
சமன்பாடு தொகுப்பின் அணி வடிவம்
\(\left[ \begin{matrix} 2 & -3 \\ 4 & -6 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] =\left[ \begin{matrix} 7 \\ 14 \end{matrix} \right] \Rightarrow AX=B\)
\(A=\left[ \begin{matrix} 2 & -3 \\ 4 & -6 \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \end{matrix} \right] \) மற்றும் \(B=\left[ \begin{matrix} 7 \\ 14 \end{matrix} \right] \)
விரிவுபடுத்தப்பட் அணியை ஏறுபடி வடிவில் உருமாற்ற கிடைப்பது.
\([A|B]=\left[ \begin{matrix} 2 & -3 \\ 4 & -6 \end{matrix}|\begin{matrix} 7 \\ 14 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ 2 }R_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 & -3 \\ 0 & 0 \end{matrix}|\begin{matrix} 7 \\ 14 \end{matrix} \right] \)
இங்கு ρ(A)=1, ρ[A|B]=1
∴ ρ(A)=ρ[A|B]=1< மாறிலிகளின் எண்ணிக்கை தொகுப்பு ஒருங்கமைவுடையது மற்றும் ஒரு சாராமாறிக் குடும்பமாக தீர்வுகள் இருக்கும்.
∴ y=t, என பிரதியிட, இங்கு t ∈ R
ஏறுபடி வடிவத்தை சமன்பாடுகளாக எழுத கிடைப்பது
2x-3y=7
∴ 2x-3t=7
⇒ 2x=7+3t
⇒ x=\(\frac{1}{2}(7+3t)\)
∴ தீர்வு கணம்{\(\frac{1}{2}(7+3t)\),t} இங்கு t ∈ R
18.
விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரை செயலிகள் பயன்படுத்தக் கிடைப்பது.
\([A|B]=\left[ \begin{matrix} 2 & 3 & -1 \\ 1 & -1 & -2 \\ 3 & 1 & 3 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 1 }\leftrightarrow { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & -2 \\ 2 & 3 & -1 \\ 3 & 1 & 3 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ 2R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ 3R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & -2 \\ 0 & 5 & 3 \\ 0 & 4 & 9 \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-\frac { 4 }{ 5 } { R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & -1 & -2 \\ 0 & 5 & 3 \\ 0 & 0 & \frac { 33 }{ 5 } \end{matrix}|\begin{matrix} 0 \\ 0 \\ 0 \end{matrix} \right] \)
இங்குρ(A)=3 மற்றும் ρ([A|0])=3
∴ ρ(A)=ρ([A|0])=3= மதிப்பிட வேண்டிய மாறிகளின் எண்ணிக்கை
ஆகையால் தொகுப்பு ஒருங்கமைவுடன் ஒரே ஒரு தீர்வை கொண்டிருக்கும்.
ஆகையால் தொகுப்பு வெளிப்படை தீர்வை மட்டும் கொண்டிருக்கும்.
19.
கனச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம்
x+1, x+2, மற்றும் x+3
[∴ 1,2,3 அலகுகள் அதிகரிப்பதால்]
மேலும் கொள்ளளவு =V+52
[V என்பது அதிகரிப்பதால் 52]
∴ V+52 =(x+1)(x+2)(x+3) .....(1)
⇒ V=(x+1)(x+2)(x+3)-52
இங்கு α=-1, β=-2, \(\gamma \)=-3
⇒ V=x3-x2(α+β+\(\gamma \))+x(αβ+β\(\gamma \)+\(\gamma \)α)-αβ\(\gamma \)-52
⇒ V=x3-x2(-1-2-3)+x(2+6+3)-(-1)(-2)(-3)-52
⇒ V=x3-x2(-6)+x(11)+6-52
⇒ x3=x3+6x2+11x+6-52
⇒ 6x2+11x-46=0
⇒ (6x+23)(x-2)=0
⇒ x=2
∴ கனச்சதுரத்தின் கொள்ளளவு =x3=23=8 கன அலகுகள்
கனசெவ்வகத்தின் கன அளவு = 52 + 8 = 60 கன அலகுகள்
[∵ x=\(\frac{-23}{6}\) என்பது சாத்தியமில்லை x ஆனது கனத்தின் பக்கத்தை குறிக்கிறது.
20.
z = (cos θ + i sin θ) என்க.
டி மாய்வரின் தேற்றப்படி
zn = (cos θ + i sin θ)n = cos nθ + i sin nθ
\(\frac { 1 }{ { z }^{ n } } \) = z-n = cos nθ + i sin nθ
ஆகவே, \({ z }^{ n }+\frac { 1 }{ { z }^{ n } } \) = (cos nθ + i sin nθ) + (cos nθ - i sin nθ)
\({ z }^{ n }+\frac { 1 }{ { z }^{ n } } \) = 2 cos nθ.
இதுபோலவே,
\({ z }^{ n }-\frac { 1 }{ { z }^{ n } } \) = (cos nθ + i sin nθ) - (cos nθ - i sin nθ)
\({ z }^{ n }-\frac { 1 }{ { z }^{ n } } \) = 2i sin nθ.
21.
இப்பொழுது, \(\frac { z-1 }{ z+1 } =\frac { x+iy-1 }{ x+iy+1 } =\frac { [(x-1)+iy][(x+1)-iy] }{ [(x+1)iy][(x+1)-iy] } \)
⇒ \(\frac { z-1 }{ z+1 } =\frac { ({ x }^{ 2 }+{ y }^{ 2 }-1)+i(2y) }{ ({ x+1) }^{ 2 }+{ y }^{ 2 } } \)
கொள்கை arg\(\left( \frac { z-1 }{ z+1 } \right) =\frac { \pi }{ 2 } \Rightarrow { \tan }^{ -1 }\left( \frac { 2y }{ { x }^{ 2 }+{ y }^{ 2 }-1 } \right) =\frac { \pi }{ 2 } \)
⇒ \(\frac { 2y }{ { x }^{ 2 }+{ y }^{ 2 }+1 } =\tan\frac { \pi }{ 2 } \)
⇒ x2 + y2 = 1.
22.
x3+px2+qx+r=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் α, β, மற்றும் γ என்பதால்
Σ1 α+β+γ=-p மற்றும் Σ3 αβγ =-r
எனவே,
\(\Sigma \frac { 1 }{ \beta \gamma } =\frac { 1 }{ \beta \gamma } +\frac { 1 }{ \gamma \alpha } +\frac { 1 }{ \alpha \beta } =\frac { \alpha +\beta +\gamma }{ \alpha \beta \gamma } =\frac { -p }{ -r } =\frac { p }{ r } \).
23.
\(\left| 3z-5+i \right| =4\) என்ற சமன்பாட்டை \(3\left| z-\frac { 5-i }{ 3 } \right| \) = 4 ⇒ \(\left| z-\left( \frac { 5 }{ 3 } -\frac { i }{ 3 } \right) \right| =\frac { 4 }{ 3 } \) என எழுதலாம்.
இது \(\left| z-{ z }_{ \circ } \right| \) = r என்ற வடிவில் உள்ளது. ஆகவே இது வட்டத்தைக் குறிக்கின்றது. இதன் மையம் மற்றும் ஆரம் ஆகியவை முறையே \(\left( \frac { 5 }{ 3 } ,-\frac { 1 }{ 3 } \right) \) மற்றும் \(\frac { 4 }{ 3 } \) ஆகும்.
24.
விரிவுபடுத்தப்பட்ட அணியின் மீது காஸ்-ஜோர்டான் முறையைப் பயன்படுத்த, நமக்குக் கிடைப்பது,
[A|I3] = \(\left[ \begin{matrix} 2 & 1 & 1 \\ 3 & 2 & 1 \\ 2 & 1 & 2 \end{matrix}|\begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow \frac { 1 }{ 2 } { R }_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & (1/2) & (1/2) \\ 3 & 2 & 1 \\ 2 & 1 & 2 \end{matrix}|\begin{matrix} (1/2) & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-3{ R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-2R_{ 1 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & (1/2) & (1/2) \\ 0 & (1/2) & -(1/2) \\ 0 & 0 & 1 \end{matrix}|\begin{matrix} (1/2) & 0 & 0 \\ -(3/2) & 1 & 0 \\ -1 & 0 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 2 }\rightarrow 2{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & (1/2) & (1/2) \\ 0 & 1 & -1 \\ 0 & 0 & 1 \end{matrix}|\begin{matrix} (1/2) & 0 & 0 \\ -3 & 2 & 0 \\ -1 & 0 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }\frac { 1 }{ 2 } { R }_{ 2 } }{ \longrightarrow } \\ \left[ \begin{matrix} 1 & 0 & 1 \\ 0 & 1 & -1 \\ 0 & 0 & 1 \end{matrix}|\begin{matrix} 2 & -1 & 0 \\ - & 2 & 0 \\ -1 & 0 & 1 \end{matrix} \right] \overset { { R }_{ 1 }\rightarrow { R }_{ 1 }-{ R }_{ 3 }\\ { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }+{ R }_{ 3 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & 1 & 0 \\ 0 & 0 & 1 \end{matrix}|\begin{matrix} 3 & -1 & -1 \\ -4 & 2 & 1 \\ -1 & 0 & 1 \end{matrix} \right] \)
எனவே, A-1 =\(\left[ \begin{matrix} 3 & -1 & -1 \\ -4 & 2 & 1 \\ -1 & 0 & 1 \end{matrix} \right] \)
25.
RHS : AT =\(\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] \)
LHS : A என்பது வரிசை 3 உடைய அணி என்பதால்
AT=\(\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 4 & 1 \\ 1 & 4 & -8 \\ 4 & 7 & 4 \end{matrix} \right] \) ....(1)
\({ (\lambda A) }^{ -1 }=\frac { 1 }{ \lambda } .{ A }^{ -1 }\)எனவே அறிவோம்.
\({ A }^{ -1 }={ \left\{ \frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] \right\} }^{ -1 }=\frac { 1 }{ \frac { 1 }{ 9 } } { \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] }^{ T }\)
இங்கு \(\lambda =\frac { 1 }{ 9 } \)
\({ A }^{ -1 }=9{ B }^{ -1 }\) இங்கு \(\\ B={ \left[ \begin{matrix} -8 \\ 4 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 4 \\ -8 \end{matrix}\begin{matrix} 4 \\ 7 \\ 4 \end{matrix} \right] }^{ T }\) ...(2)
இங்கு, |B|=-8\(\left| \begin{matrix} 4 & 7 \\ -8 & 4 \end{matrix} \right| -1\left| \begin{matrix} 4 & 7 \\ 1 & 4 \end{matrix} \right| +4\left| \begin{matrix} 4 & 4 \\ 1 & -8 \end{matrix} \right| \)
= -8(16 + 56) -1(16 - 7) + 4 (-32 - 4)
=-8(72) -1(9) + 4(-36) = 576 - 9 - 144
= -729
\(adj\ B={ \left[ \begin{matrix} +\begin{vmatrix} 4 & 7 \\ -8 & 4 \end{vmatrix} \\ -\begin{vmatrix} 1 & 4 \\ -8 & 4 \end{vmatrix} \\ +\begin{vmatrix} 1 & 4 \\ 4 & 7 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} -\begin{vmatrix} 4 & 7 \\ 1 & 4 \end{vmatrix} \\ +\begin{vmatrix} -8 & 4 \\ 1 & 4 \end{vmatrix} \\ -\begin{vmatrix} -8 & 4 \\ 4 & 7 \end{vmatrix} \end{matrix}\begin{matrix} +\begin{vmatrix} 4 & 4 \\ 1 & -8 \end{vmatrix} \\ -\begin{vmatrix} -8 & 1 \\ 1 & -8 \end{vmatrix} \\ +\begin{vmatrix} -8 & 1 \\ 4 & 1 \end{vmatrix} \end{matrix} \right] }^{ T }\)
\(=\left[ \begin{matrix} +(16+56) \\ -(4+32) \\ +(7-16) \end{matrix}\begin{matrix} -(16-7) \\ +(-32-4) \\ -(-56-16) \end{matrix}\begin{matrix} +(-32-4) \\ +(64-1) \\ +(-32-4) \end{matrix} \right] ^T\)
\(={ \left[ \begin{matrix} 72 \\ -36 \\ -9 \end{matrix}\begin{matrix} -9 \\ -36 \\ 72 \end{matrix}\begin{matrix} -36 \\ -63 \\ -36 \end{matrix} \right] }^{ T }=\left[ \begin{matrix} 72 \\ -9 \\ -36 \end{matrix}\begin{matrix} -36 \\ -36 \\ -63 \end{matrix}\begin{matrix} -9 \\ 72 \\ -36 \end{matrix} \right] \)
\(=\frac {1}{81} \times 9\left[ \begin{matrix} 8 \\ -1 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ -7 \end{matrix}\begin{matrix} -1 \\ +8 \\ -4 \end{matrix} \right] \)
\(\therefore { B }^{ -1 }=\frac { 1 }{ |B| } adj\quad B=\frac { -9 }{ 729 } \left[ \begin{matrix} 8 \\ -1 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ -7 \end{matrix}\begin{matrix} -1 \\ +8 \\ -4 \end{matrix} \right] \)
\(=\frac { 1 }{ 82 } \left[ \begin{matrix} -8 \\ 1 \\ 4 \end{matrix}\begin{matrix} 4 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 1 \\ -8 \\ 4 \end{matrix} \right] \)
(2) பிரதியிட கிடைப்பது,
\({ A }^{ -1 }=9.\frac { 1 }{ 81 } \left[ \begin{matrix} -8 \\ 1 \\ 4 \end{matrix}\begin{matrix} 4 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 1 \\ -8 \\ 4 \end{matrix} \right] =\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 \\ 1 \\ 4 \end{matrix}\begin{matrix} 4 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 1 \\ -8 \\ 4 \end{matrix} \right] \quad ...(3)\)
(1) மற்றும் (3) லிருந்து கிடைப்பது, AT = A-1
26.
பரவளையம் குத்தச்சை உடையதால் மேல் நோக்கி திறப்புடையது

அதனுடைய சமன்பாடு x2 = 4ay
பரவளையத்தின் அடிபகுதி 5 மீ அகலமுடையது
VA = 2.5மீ மற்றும் வளைவின் உயரம் 10மீ
A(2, 5, 10) ஆனது பரவளையத்தின் மீதுள்ளது
(2.5)2 = 4a(10)
\(\Rightarrow 6.25=40a\Rightarrow a=\cfrac { 625 }{ 4000 } =\cfrac { 5 }{ 32 } \)
\(a=\cfrac { 5 }{ 32 } \)
என (1) ல் பிரதியிட கிடைப்பது
\({ x }^{ 2 }=4\left( \cfrac { 5 }{ 32 } \right) y={ x }^{ 2 }=\cfrac { 5 }{ 8 } y\)
உயரம் 2மீ எனில் வளைவின் அகலம் x என்க
\(\therefore\) (x, 2) பரவளையத்தின் மீதுள்ள புள்ளி
\({ x }^{ 2 }=\cfrac { 5 }{ 8 } \left( 2 \right) =\cfrac { 5 }{ 4 } \)
\(\therefore x=\cfrac { \sqrt { 5 } }{ 2 } \)
மற்றும் \(2x=\cfrac { 2\left( \sqrt { 5 } \right) }{ 2 } =\sqrt { 5 } \)
27.
\(\frac { x-3 }{ 3 } =\frac { y-8 }{ -1 } =\frac { z-3 }{ 1 } \) என்ற கோட்டிலிருந்து கிடைப்பது
\(\overset { \rightarrow }{ a } =3\overset { \wedge }{ i } +8\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } ,\overset { \rightarrow }{ b } =3\overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \)
\(\frac { x+3 }{ -3 } =\frac { y+7 }{ 2 } =\frac { z-6 }{ 4 } \) என்ற கோட்டிலிருந்து கிடைப்பது
\(\overset { \rightarrow }{ c } =-3\overset { \wedge }{ i } -7\overset { \wedge }{ j } +6\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ d } =-3\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \)
கொடுக்கப்பட்ட கோடுகள் இணையில்லாததால் கோடுகளுக்கு இடைப்பட்ட குறைந்தபட்ச தூரம்
\(d=\left| \frac { \left( \overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } \right) .\left( \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ d } \right) }{ \left| \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ d } \right| } \right| \)
\(\overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } =-6\overset { \wedge }{ i } -15\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \)
\(\overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ d } =\left| \begin{matrix} \overset { \wedge }{ i } \\ 3 \\ -3 \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ j } \\ -1 \\ 2 \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ k } \\ 1 \\ 4 \end{matrix} \right| \)
\(=\overset { \wedge }{ i } (-4-2)-\overset { \wedge }{ j } (12+3)+\overset { \wedge }{ k } (6-3)\)
\(=-6\overset { \wedge }{ i } -15\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \)
\(\therefore \left| \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ d } \right| =\sqrt { 36+225+9 } =\sqrt { 270 } \)
\(\therefore \left( \overset { \rightarrow }{ c } -\overset { \rightarrow }{ a } \right) .\left( \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ d } \right) =\left( -6\overset { \wedge }{ i } -15\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \right) .\left( -6\overset { \wedge }{ i } -15\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \right) \)
= -6 (-6) + 15 (15) + 3 (3)
= 270 ≠ 0
கொடுக்கப்பட்ட கோடுகள் வெட்டுவதுமில்லை இணையுமில்லை ஆதலால் அவைகள் ஒரு தளம் அமைய கோடுகள் எனப்படும்.
\(\therefore d=\frac { 270 }{ \sqrt { 270 } } =\sqrt { 270 } \) அலகுகள்.
28.
கொடுக்கப்பட்ட சமன்பாடு (a2+b2+c2)P2-2(ab+bc+cd)p+(b2+c2+d2)≤0 ...(1)
(1) ஐ மாற்றி எழுதலாம்
(a2p2-2abp+b2)+(b2p2-2cp+c2)+(c2p2-2cdp+d2)≤0
(ap-b)2+(bp-c)2+(cp-d)2≤0 .....(2)
a,b,c,d, p∈ R எனில்
(ap-b)2≥0, (bp-c)2≥0 மற்றும் (cp-d)2≥0
∴ (2) நிறைவு செய்யப்பட வேண்டுமெனில்
ap-b=0, bp-c=0, cp-d=0
\(\frac { b }{ a } =\frac { c }{ b } =\frac { d }{ c } =p\)
⇒ a,b, c,d பெருக்குத் தொடரில் உள்ளன. மற்றும் ad=bc
29.
கொடுக்கப்பட்ட \(\frac { \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } }{ \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } } \) = α
\(\Rightarrow \frac { \left( \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } \right) +\left( \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }{ \left( \sqrt { 1+{ x }^{ 2 } } -\sqrt { 1-{ x }^{ 2 } } \right) -\left( \sqrt { 1+{ x }^{ 2 } } +\sqrt { 1-{ x }^{ 2 } } \right) } \)
\(=\frac { tan\alpha +1 }{ tan\alpha -1 } \)
\(\Rightarrow \frac { 2\sqrt { 1+{ x }^{ 2 } } }{ -2\sqrt { 1-{ x }^{ 2 } } } =\frac { tan\alpha +1 }{ tan\alpha -1 } \)
\(\Rightarrow \sqrt { \frac { 1-{ x }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } } =\frac { 1-tan\alpha }{ 1+tan\alpha } \)
\(\Rightarrow \sqrt { \frac { 1-{ x }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } } =\frac { cos\alpha -sin\alpha }{ cos\alpha +sin\alpha } \)
\(\Rightarrow \frac { 1-{ x }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } ={ \left( \frac { cos\alpha -sin\alpha }{ cos\alpha +sin\alpha } \right) }^{ 2 }\)
\(\Rightarrow \frac { 1-{ x }^{ 2 } }{ 1+{ x }^{ 2 } } =\frac { 1-sin2\alpha }{ 1+sin2\alpha } \Rightarrow { x }^{ 2 }=sin2\alpha \)
30.
LHS = (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5)
= (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5) [∵ ω4 = ω3 . ω1 = ω]
= (1 + ω + 5ω2) (1 + ω2 + 5ω) (5 + ω + ω2)
= (-ω2 + 5ω2) (-ω + 5ω) (5 - 1)
= (4ω2) (4ω)(4) = 64(1) = 64 [∵ ω3 = 1]
= RHS எனவே நிரூபிக்கப்பட்டது
31.
\(\frac { x-1 }{ 2 } =\frac { y-2 }{ 3 } =\frac { z-3 }{ 4 } \) = s (என்க). இக்கோட்டில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியின் வடிவம் (2s + 1, 3s + 2, 4s + 3) ஆகும். \(\frac { x-4 }{ 5 } =\frac { y-1 }{ 2 } =z\) = t (என்க). இக்கோட்டில் உள்ள ஏதேனும் புள்ளியின் வடிவம் (5t + 4, 2t + 1, t) ஆகும்.
கொடுக்கப்பட்ட கோடுகள் வெட்டிக் கொள்ளுமானால், வெட்டும் புள்ளியில், ஒரு சில s, t -ன் மதிப்புகளுக்கு, (2s + 1, 3s + 2, 4s + 3) = (5t + 4, 2t + 1, t)
எனவே, 2s - 5t = 3, 3s - 2t = -1 மற்றும் 4s - t = -3. இம்மூன்று சமன்பாடுகளில், முதல் இரண்டு சமன்பாடுகளின்தீர்வு காண t = −1, s = −1 எனக் கிடைக்கிறது. s மற்றும் t-ன்இம்மதிப்புகள் மூன்றாவது சமன்பாட்டை நிறைவு செய்கின்றன. எனவே, கொடுக்கப்பட்ட கோடுகள் வெட்டும் கோடுகளாகும். t அல்லது s -ன் மதிப்பினை உரிய புள்ளிகளில் பிரதியிட, கோடுகள் வெட்டும் புள்ளி (-1, -1, -1) எனக் கிடைக்கிறது
32.
சமன்பாட்டின் கெழுக்கள் அனைத்தும் விகிதமுறு எண்கள் என்பதாலும் 2+i மற்றும் 3-\(\sqrt { 2 } \) ஆகியவை மூலங்கள் என்பதாலும் கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டிற்கு 2-i மற்றும் 3+\(\sqrt { 2 } \) ஆகியவையும் மூலங்களாக அமையும். எனவே (x − (2 + i)) (x − (2 − i)) (x − (3− \(\sqrt { 2 } \))) மற்றும் (x − (3 + \(\sqrt { 2 } \))) ஆகியவையும் காரணிகளாகும். ஆகையால் இவற்றின் பெருக்கல்
((x − (2 + i)) (x − (2 − i)) (x − (3− \(\sqrt { 2 } \))) (x − (3 + \(\sqrt { 2 } \))) என்பதும் கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டிற்கு ஒரு காரணியாகும். அதாவது (x2-4x+5)(x2-6x+7)
என்பது ஒரு காரணி. கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டை இக்காரணியால் வகுக்க, மற்றொரு காரணியாக (x2-3x-4) பெறப்படுகிறது. இதிலிருந்து 4 மற்றும் −1ஆகியவை மற்ற இரு மூலங்களாகும். எனவே 2+i, 2-i, 3+\(\sqrt { 2 } \), 3-\(\sqrt { 2 } \), -1, மற்றும் 4 ஆகியவை கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் மூலங்களாகும்.
33.
கூம்பு வளைவின் வரையறைப்படி \(\frac{SP}{PM}=e \) அல்லது SP2 = e2PM2.
இதனால், (x-2)2 + (y-3)2 = \(\frac {1}{4}\)(x-7)2
\(\Rightarrow \) 3x2 + 4y2 − 2x − 24y + 3 = 0, இதை பின்வருமாறு எழுதலாம்
\(\Rightarrow 3{ \left( x-\frac { 1 }{ 3 } \right) }^{ 2 }+4{ (y-3) }^{ 2 }=3\left( \frac { 1 }{ 9 } \right) +4\times 9-3=\frac { 100 }{ 3 } \)
\(\Rightarrow \frac { { \left( x-\frac { 1 }{ 3 } \right) }^{ 2 } }{ \frac { 100 }{ 9 } } +\frac { { (y-3) }^{ 2 } }{ \frac { 100 }{ 12 } } =1\) இது திட்ட வடிவம் ஆகும்.
எனவே நெட்டச்சின் நீளம் = 2a = 2\(\\ \sqrt { \frac { 100 }{ 9 } } =\frac { 20 }{ 3 } \) மற்றும்
குற்றச்சின் நீளம் = 2b = 2\(\\ \sqrt { \frac { 100 }{ 12 } } =\frac { 10 }{ \sqrt { 3 } } \)
34.
\(\vec { r } =(6\hat { i } +\hat { j } +2\hat { k } )+s(\hat { i } +2\hat { j } -3\hat { k } )\)
\(\vec { a } =(6\hat { i } +\hat { j } +2\hat { k } )\)மற்றும் \(\vec {b}=s(\hat { i } +2\hat { j } -3\hat { k } )\)
\(\vec { r } =(3\hat { i } +2\hat { j } -2\hat { k } )+t(2\hat { i } +4\hat { j } -5\hat { k } )\)
\(\vec { c } =3\hat { i } +2\hat { j } -2\hat { k } \) மற்றும் \(\vec { d } =2\hat { i } +4\hat { j } -5\hat { k } \)
ஆதலால் \(\vec { b } \neq \vec { d } \) இணை இல்லை மற்றும் வெட்டுவதில்லை.
எனவே இரு கோடுகளும் ஒரு தளம் அமையா கோடுகள்
ஒரு தளம் அமையா கோடுகளுக்கு இடைப்பட்ட குறைந்தபட்ச தூரம்
\(\delta =\cfrac { \left| \left( \vec { a } -\vec { c } \right) \left( \vec { b } \times \vec { d } \right) \right| }{ \left| \vec { b } \times \vec { d } \right| } \)
= \(\hat { i } \left( -10+12 \right) -\hat { j } \left( -5+6 \right) +\hat { k } \left( 4-4 \right) \)
= \(2\hat { i } -\hat { j } \Rightarrow \left| \vec { b } \times \vec { d } \right| =\sqrt { { 2 }^{ 2 }+\left( -1 \right) ^{ 2 } } =\sqrt { 5 } \)
\(\vec { c } =\vec { a } =\left( 3\hat { i } +2\hat { j } -2\hat { k } \right) -\left( 6\hat { i } +\hat { j } +2\hat { k } \right) \)
= \(-3\hat { i } +\hat { j } -4\hat { k } \)
\(\therefore \left( \vec { c } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { d } \right) =\left( -3\hat { i } +\hat { j } -4\hat { k } \right) .\left( 2\hat { i } -\hat { j } \right) \)
= -6-1=-7
\(\therefore \delta =\cfrac { \left| -7 \right| }{ 5 } =\cfrac { 7 }{ \sqrt { 5 } } \) அலகுகள்
35.
\(\vec { a } =2\hat { i } +3\hat { j } -\hat { k } ,\vec { b } =3\hat { i } +5\hat { j } +2\hat { k } \) மற்றும் \(\vec { c } =-\hat { i } -2\hat { j } +3\hat { k } \)
\((\vec { a } \times \vec { b } )=\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & -1 \\ 3 & 5 & 2 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left| \begin{matrix} 3 & -1 \\ 5 & 2 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 2 & 3 \\ 3 & 5 \end{matrix} \right| \)
= \(\\ \hat { i } (6+5)-\hat { j } (4+3)+\hat { k } (10-9)=11\hat { i } -7\hat { j } +\hat { k } \)
∴ LHS = \((\vec { a } \times \vec { b } )\times \vec { c } \)
= \(\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & -1 \\ 3 & 5 & 2 \end{matrix} \right| =\hat { i } \left| \begin{matrix} -7 & 1 \\ -2 & 3 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 11 & 1 \\ -1 & 3 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 11 & -7 \\ -1 & -2 \end{matrix} \right| \)
= \(\hat { i } (-21+2)+\hat { j } (33+1)+\hat { k } (-22-7)\)
= \(-19\hat { i } -34\hat { j } -29\hat { k } \) ..............(1)
RHS :
\(\vec { a } .\vec { i } =(2\hat { i } +3\hat { j } -\hat { k } ).(-\hat { i } -2\hat { j } +3\hat { k } )\)
= -2-6-3 = -11
\(\vec { b } .\vec { c } =(3\hat { i } +5\hat { j } +2\hat { k } ).(-\hat { i } -2\hat { j } +3\hat { k } )\)
= -3-10+6 = -7
∴ RHS = \((\vec { a } .\vec { c } )\vec { b } -(\vec { b } .\vec { c } )\vec { a } \)
= \(-11(3\hat { i } +5\hat { j } +2\hat { k } )+7(2\hat { i } +3\hat { j } -\hat { k } )\)
= \(-33\hat { i } -55\hat { j } -22\hat { k } +14\hat { i } +21\hat { j } -7\hat { k } \)
= \(-19\hat { i } -34\hat { j } -29\hat { k } \) .......... (2)
(1) மற்றும் (2) லிருந்து LHS = RHS
எனவே \((\vec { a } \times \vec { b } )\times \vec { c } =(\vec { a } .\vec { c } )\vec { b } -(\vec { b } .\vec { c } )\vec { a } \)
(ii) \(\vec { b } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 3 & 5 & 2 \\ -1 & -2 & 3 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left| \begin{matrix} 5 & 2 \\ -2 & 3 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 3 & 2 \\ -1 & 3 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 3 & 5 \\ -1 & -2 \end{matrix} \right| \)
= \(\hat { i } (15+4)-\hat { j } (9+2)+\hat { k } (-6+5)\)
= \(19\hat { i } -11\hat { j } -\hat { k } \)
∴ \(\vec { a } (\vec { b } \times \vec { c } )=\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & -1 \\ 19 & -11 & -1 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left| \begin{matrix} 3 & -1 \\ -11 & -1 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 2 & -1 \\ 19 & -1 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 2 & 3 \\ 19 & -11 \end{matrix} \right| \)
= \(\hat { i } (-3-11)-\hat { j } (-2+19)+\hat { k } (-22-57)\)
= \(-14\hat { i } -17\hat { j } -79\hat { k } \) ......(1)
RHS :
\(\vec { a } .\vec { c } =-11\Rightarrow (\vec { a } .\vec { c } )\vec { b } =-11(3\hat { i } +5\hat { j } +2\hat { k } )\)
= -\(33\hat { i } -55\hat { j } -22\hat { k } \)
\(\vec { a } .\vec { b } =(2\hat { i } +3\hat { j } -\hat { k } ).(3\hat { i } +5\hat { j } +2\hat { k } )\)
= 6+15-2 = 19
\((\vec { a } .\vec { b } )\vec { c } =19(-\hat { i } -2\hat { j } +3\hat { k } )=-19\hat { i } -38\hat { j } +57\hat { k } \)
RHS = \((\vec { a } .\vec { c } )\vec { b } -(\vec { a } .\vec { b } )\vec { c } \)
= \(-33\hat { i } -55\hat { j } -22\hat { k } -(-19\hat { i } -38\hat { j } +57\hat { k } )\)
= \(-14\hat { i } -17\hat { j } -79\hat { k } \) .......(2)
(1) மற்றும் (2) லிருந்து LHS = RHS
∴ \(\vec { a } \times (\vec { b } \times \vec { c } )=(\vec { a } .\vec { c } )\vec { b } -(\vec { a } .\vec { b } )\vec { c } \)
36.
(a)
2x - 4y + 4 = 0
37.
(a)
3
38.
(a)
\(\frac{1}{3}\) ≤k≤3
39.
(c)
2
40.
(b)
\(\frac 1 2\)
41.
(c)
\(\neq \)8
42.
கொடுக்கப்பட்டது \(\vec{r}=(6 \hat{i}-\hat{j}-3 \hat{k})+t(-\hat{i}+4 \hat{k})\)
\(\frac{x-6}{-1}=\frac{y+1}{0}=\frac{z+3}{4}=t \Rightarrow(-t+6,-1,4 t-3)\)
என்பது \(x+y-z=3\) ஐச் சந்திக்கிறது.
\(-t+6-1-4 t+3 =3 \Rightarrow-5 t+5=0 \\
5 t =5 \Rightarrow t=1\)
\(\therefore (5,-1,1)\)
43.
\((1+\omega)^7 =A+B \omega \Rightarrow\left(-\omega^2\right)^7=A+B \omega \)
\(-\omega^{14} =A+B \omega \Rightarrow-\omega^2=A+B \omega \)
\(1+\omega =A+B \omega\)
ஒப்பிடக் கிடைப்பது \(\mathrm{A}=1, \mathrm{~B}=1\).
44.
(c)
n கலப்பெண் மூலங்கள்
45.
\(a^2=9, \quad b^2=4 \\ 2 x-y=1 \Rightarrow y=2 x-1 \\ m=2 \\ c=\sqrt{a^2 m^2-b^2}=\sqrt{9(4)-4} \\ =\sqrt{36-4}=\sqrt{32} \\ c= \pm 4 \sqrt{2} \\ =\left(\frac{-a^2 m}{c}, \frac{-b^2}{c}\right) \\ =\left(\frac{-9 \times 2}{-4 \sqrt{2}}, \frac{-4}{-4 \sqrt{2}}\right) \text { (or) }\left(\frac{-9 \times 2}{4 \sqrt{2}}, \frac{-4}{4 \sqrt{2}}\right) \\ =\left(\frac{9}{2 \sqrt{2}}, \frac{1}{\sqrt{2}}\right) \text { (or) }\left(\frac{-9}{2 \sqrt{2}}, \frac{-1}{\sqrt{2}}\right) \\ \)
46.
\(A B=I \Rightarrow B=A^{-1}=\frac{1}{1+\tan ^2 \frac{\theta}{2}}\left[\begin{array}{cr} 1 & -\tan \frac{\theta}{2} \\ \tan \frac{\theta}{2} & 1 \end{array}\right] \)
\(=\frac{1}{\sec ^2 \frac{\theta}{2}}\left[\begin{array}{cc} 1 & -\tan \frac{\theta}{2} \\ \tan \frac{\theta}{2} & 1 \end{array}\right]=\cos ^2 \frac{\theta}{2} A^{\top}\)
47.
\( -1 \leq x^2-3 \leq 1 \\ -1+3 \leq x^2 \leq 1+3 \\ \Rightarrow 2 \leq x^2 \leq 4 \\ \pm \sqrt{2} \leq x \leq \pm 2 \\ \therefore \quad[-2,-\sqrt{2}] \cup[\sqrt{2}, 2] \)
48.
வெக்டர் சமன்பாட்டின் துணையலகு வடிவம்
49.
3
50.
≥|z1| - |z2|
51.
3sin-1 x
52.
|A|n-2A
53.
\((acos\theta ,bsin\theta )\) ;1,2,3 வட்டத்தின் துணையலகு வடிவம்
54.
(2) sin2α + sin2β + sin2⋎ =1
55.
3) tan x=1
குறிப்பு: 1,2,4 க்கு தீர்வு இல்லை
56.
3 ஆக இருக்கலாம்
குறிப்பு: ρ(A)≤(3,4)-ன் மீச்சிறு
⇒ ρ(A)≤3 மேலும் 4 ஆக இருக்க முடியாது
57.
(1) tan (tan-1 x) = x, x ∈ R எனில்
குறிப்பு: 2, 3 மற்றும் தலைகீழ் முற்றொருமை ஆனால் 1 அல்ல.
58.
(4) மூலங்களின் பெருகற்பலன் 0 மற்றும் கூடுதல் 土 1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards