12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Physics All Chapter Important Question )
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒளி மின்கலம் என்றால் என்ன? ஒளி மின்கலத்தின் பல்வேறு வகைகளைக் குறிப்பிடுக.
2.
ஹைட்ரஜனைப் போன்றதொரு அணு ஒன்றின் ஆற்றல் En = -\(\frac { 54.4 }{ { n }^{ 2 } } \) eV எனில் பின்வருவனவற்றைக் கணக்கிடவும். இங்கு n ∈ R
அ) அந்த அணுவின் ஆற்றல் மட்டங்களை வரையவும்; மேலும் அதன் அணு எண்ணைக் கணக்கிடவும்.
ஆ) அணு அடிநிலையில் உள்ளது எனில், அதன் முதல் கிளர்வு மின்னழுத்தம் மற்றும் அயனியாக்க மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணக்கிடுக.
இ) முறையே 42 eV மற்றும் 51 eV ஆற்றல் கொண்ட இரு ஃபோட்டான்களை அந்த அணுவின் மீது மோதச் செய்தால், அவற்றை அந்த அணு உட்கவருமா?
ஈ) முதல் போர் சுற்றுப்பாதையின் ஆரத்தைக் கண்டறிக.
உ) அடிநிலையில் அதன் இயக்க மற்றும் மின்னழுத்த ஆற்றல்களைக் கணக்கிடுக.
3.
பல்வேறு வகைப்பட்ட தகவல் தொடர்புகளில் ஒளி இழை தகவல் தொடர்பு சிறந்ததாக விளங்குகிறது. நிரூபி.
4.
சமவீச்சு கொண்ட இரண்டு ஒளி மூலங்கள் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகின்றன. பெரும மற்றும் சிறும ஒளிச்செறிவுகளுக்கு இடையேயுள்ள விகிதத்தைக் காண்க.
5.
பின்வரும் பூலியன் கூற்றை நிரூபிக்கவும் AC + ABC = AC. அதன் சுற்று விளக்கப்படம் தருக.
6.
GaAsP னால் உருவாக்கப்பட்ட LED லிருந்து வெளிப்படும் ஒளியின் அலைநீளத்தைக் கண்டுபிடி. இந்தக் குறைகடத்தியின் விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளி 1.875 eV ஆகும். வெளிப்படும் ஒளியின் நிறத்தையும் குறிப்பிடுக. [h = 6.6 × 10-34 Js எனக் கொள்க]
7.
1 m நீளமுள்ள உலோகத்தண்டு கோண அதிர்வெண் 400 rad s-1 உடன் அச்சைப்பற்றி ஒரு முனை சுழல்கிறது. மறுமுனை வட்ட வடிவ உலோக வளையத்துடன் இணைந்துள்ளது. சீரான மின்புலம் 0.5T கொடுக்கப்பட்டால் தண்டின் மையத்திற்கு வளையத்திற்குமிடையே மின்னியக்கு விசையை காண்க.
8.
TV ஏற்றத்தின் பொது செயற்கை ஒன்றினை தொலை தொடர்பிற்கு பயன்படுத்துவது ஏன்?
9.
சமஅளவு மற்றும் நிறை கொண்ட கோள வடிவ கல் மற்றும் இரும்பு குண்டை ஒரே நேரத்தில் விழச் செய்தால் எது முதலில் புவியை வந்தடையும்? காரணம் கூறு.
10.
60 cm பக்கங்கள் கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சிகளில் +1 μC, +3μC மற்றும் -5 μC மின்னூட்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. இம்மின்னூட்டங்களின் அமைப்பில் மின்னழுத்த ஆற்றலைக் கணக்கிடுக. = +1 x 10 C, qB = +3 x 10 C
11.
சம மின்னழுத்தப் பரப்பு என்றால் என்ன? அவற்றின் பண்புகளை எழுதுக.
12.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலங்கள் தொடரிணைப்பால் உள்ள மின்சுற்றில் உருவாக்கப்படும் மின்னோட்டம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
13.
கூலும் விதி மற்றும் பயோட் - சவர்ட் விதிகளுக்கிடையே வேறுபாடுகள்
14.
மின்காந்தத்தூண்டலின் பாரடே விதிகளைக் கூறுக.
15.
மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.
16.
மின்தடை எண் வரையறு.
17.
εr = 5 கொண்ட மைக்காவினால் நிரப்பப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று 10 V மின்கலனுடன் இணைக்கப்படுகிறது. இணைத் தட்டுகளின் பரப்பளவு 6 cm2 மற்றும் இடைத்தொலைவு 6 mm எனில்
(அ) மின்தேக்குத்திறன், சேமிக்கப்படும் மின்துகள்களின் மின்னூட்டம் மற்றும் ஆற்றலைக் காண்க.
(ஆ) முழுமையாக மின்னேற்றம் செய்யப்பட்ட பின், மின்கலனின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அதன் பின் மின்காப்பு கவனமாக நீக்கப்படுகிறது. புதிய மின்தேக்குத்திறன், சேமிக்கப்படும் ஆற்றல் மற்றும் மின்னூட்டத்தைக் கணக்கிடுக.
18.
ஒற்றை அயனியாக்கம் செய்யப்பட்ட இரண்டு யுரேனியம் ஐசோடோப்புகள் \(_{ 92 }^{ 235 }{ U }\) மற்றும் \(_{ 92 }^{ 238 }{ U }\) (ஒரே அணு எண்ணும், வேறுபட்ட நிறை எண்ணும் கொண்டிருப்பவை ஐசோடோப்புகளாகும்) 0.500 T வலிமை கொண்ட காந்தபுலத்தினுள் 1.00 x 105 ms-1 திசைவேகத்துடன் காந்தபுலத்திற்குச் செங்குத்தாக செலுத்தப்படுகின்றன. அரைவட்டப் பாதையை இவ்விரண்டு ஐசோடோப்புகளும் நிறைவு செய்த உடன் அவற்றிற்கு இடையே உள்ள தொலைவைக் காண்க. மேலும் இவ்விரண்டு ஐசோடோப்புகளும் அரைவட்டப் பாதையை நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தையும் கணக்கிடுக. (கொடுக்கப்பட்டவை: ஐசோடோப்புகளின் நிறைகள் m235 = 3.90 × 10-25 kg மற்றும் m238 = 3.95 × 10-25 kg)
19.
பயட் –சாவர்ட் விதியைக் கூறு
20.
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு A உயரம், B அகலம் மற்றும் C நீளம் கொண்ட ஒரு செவ்வக வடிவ உலோக பெட்டியைக் கருதுவோம்.

பெட்டியின் A மற்றும் B முகங்களுக்கிடையே V என்ற மின்னழுத்த வேறுபாடு அளிக்கப்படுகிறது எனில் (படம் (அ) ) IAB என்ற மின்னோட்டம் பாய்கிறது. பெட்டியின் B மற்றும் C முகங்களுக்கிடையே V என்ற அதே மின்னழுத்த வேறுபாட்டை அளித்தால் (படம் (ஆ)) உருவாகும் மின்னோட்டத்தை கண்டுபிடி. உனது விடையை மின்னோட்டம் IAB மதிப்பின் மடங்காக எழுதுக?
21.
150 W திறன் கொண்ட விளக்கு ஒன்று உமிழும் ஒளியின் சராசரி அலைநீளம் 5500 Å ஆகும். விளக்கின் பயனுறுதிறன் 12% எனில், ஒரு விநாடியில் விளக்கினால் உமிழப்படும் ஃபோட்டான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.
22.
மட்டைப்பந்தின் அலைப்பண்பினை ஏன் நம்மால் காண முடிவதில்லை?
23.
வைரம் ஜொலிப்பதற்கான காரணத்தை விளக்குக.
24.
துணை அணுத்துகள்கள் என்பவை யாவை?
25.
தொடக்கத்திலுள்ள கதிரியக்கக் கார்பன்–14 அணுக்களின் எண்ணிக்கை 10,000 எனில், 22,920 ஆண்டுகளுக்குப் பிறகு சிதைவடையாமல் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. கார்பன்–14ன் அரை ஆயுட்காலம் 5730 ஆண்டுகள்.
26.
நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் வேறுபடுத்துக.
27.
மீச்சிறு அணுகு தொலைவு என்றால் என்ன?
28.
RADAR என்பது எதனைக் குறிக்கிறது?
29.
NPN மற்றும் PNP டிரான்சிஸ்டர்களில் சார்புபடுத்தும் முறைகளைப்பற்றி விவாதி.
30.
ஓசோன் படலத்தின் பயன்கள் யாது?
31.
மின்தூண்டி என்றால் என்ன?
32.
உராய்வினால் மின்னூட்டம் பெற்ற பலூன் ஒன்று சுவரில் ஒட்டிக் கொள்வது. ஏன்?
33.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்பாடுகள் என்ன?
34.
நிறை நிறமாலைமானியின் பயன்களை தருக.
35.
220 V, 50 Hz மாறுதிசை மின்னோட்ட மூலத்திற்கு குறுக்கே \(\frac { { 10 }^{ 2 } }{ \pi } \mu \)F மின்தேக்குத்திறன் கொண்ட ஒரு மின்தேக்கி இணைக்கப்பட்டுள்ளது. மின்தேக்கியின் மின்மறுப்பு, மின்னோட்டத்தின் RMS மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுக. மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்தின் சமன்பாடுகளை எழுதுக.
36.
ஊடகம் ஒன்றின் ஒப்புமை உட்புகுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன்கள் முறையே 1.0 மற்றும் 2.25 எனில், அவ்ஊடகத்தின் வழியே பரவும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.
37.
மின்புலம் – வரையறு.
38.
யங் இரட்டைப் பிளவு ஆய்வு அமைப்பை விளக்கி, பாதை வேறுபாட்டிற்கான கோவையைப் பெறுக.
39.
பல்வேறு துறைகளில் நானோ பொருள்களின் பயன்பாடுகளை விவரி.
40.
இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி
41.
மின்னழுத்தமானியின் தத்துவத்தை விளக்குக.
42.
காந்தப்புலக் கோடுகளின் பண்புகள் யாவை?
43.
ஒரு சுற்றில் AC–இன் சராசரி திறனுக்கான கோவையைப்பெறுக. அதன் சிறப்பு நேர்வுகளை விவரி.
44.
மேக்ஸ்வெல் சமன்பாடுகளை தொகை நுண்கணித வடிவில் எழுதுக.
45.
டேஞ்சன்ட் விதியைக்கூறி, அதனை விரிவாக விளக்கவும்.
46.
P, Q, R, S ஆகிய நான்கு மின் விளக்குகளானது தெரியாத மின்சுற்று அமைப்பு ஒன்றில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின் விளக்கும் ஒன்றன் பின் ஒன்றாக நீக்கப்படும்போது பின்வரும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
| P Q R S | ||||
| P நீக்கப்படுதல் | * | ஒளிர்கிறது | ஒளிர்கிறது | ஒளிர்கிறது |
| Q நீக்கப்படுதல் | ஒளிர்கிறது | * | ஒளிர்கிறது | ஒளிர வில்லை |
| R நீக்கப்படுதல் | ஒளிரவில்லை | ஒளிரவில்லை | * | ஒளிரவில்லை |
| S நீக்கப்படுதல் | ஒளிர்கிறது | ஒளிரவில்லை | ஒளிர்கிறது | * |
இந்த மின்விளக்குகள் இணைக்கப்பட்ட மின்சுற்று வரைபடத்தை வரைக.
47.
மின்னூட்டம் சீராகப் பெற்ற ஒரு கோளகக் கூட்டினால் ஏற்படும் மின்புலத்திற்கான சமன்பாட்டைத் தருவிக்க
48.
கருமைநிறத் தாளின் மீது 1mm இடைவெளியில் இரண்டு வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. தோராயமாக 3 mm விட்டமுடைய விழிலென்ஸ் உள்ள விழியினால் இப்புள்ளிகள் பார்க்கப்படுகின்றன. விழியினால் இப்புள்ளிகளைத் தெளிவாகப் பகுத்துப் பார்க்கக்கூடிய பெருமத் தொலைவு என்ன? [பயன்படும் ஒளியின் அலைநீளம்= 500 nm]
1 m
5 m
3 m
6 m
49.
50.
ஒளிஉணர் பரப்பு ஒன்று அடுத்தடுத்து λ மற்றும் λ/2 அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளியினால் ஒளியூட்டப்படுகிறது. இரண்டாவது நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றல் ஆனது முதல் நேர்வில் உமிழப்படும் எலக்ட்ரானின் பெரும இயக்க ஆற்றலை விட 3 மடங்காக இருப்பின், உலோகத்தின் வெளியேற்று ஆற்றலானது _____
\(\frac{h}{λc}\)
\(\frac{2hc}{λ}\)
\(\frac{hc}{3λ}\)
\(\frac{hc}{2λ}\)
51.
ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது____
பரப்பியல்
பண்பேற்றியல்
வழித்தடத்தில்
ஏற்பியல்
52.
மின்னழுத்தம் V வோல்ட் மூலம் முடுக்கப்படும் துகள் ஒன்று அணு எண் Z கொண்ட அணுக்கருவை நோக்கி மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும் போது, அணுக்கருவிலிருந்து ஆல்பா துகளின் மீச்சிறு அணுகு தொலைவு _____.
14.4\(\frac{Z}{V}\)Å
14.4 \(\frac{V}{Z}\)Å
1.44\(\frac{Z}{V}\)Å
1.44 \(\frac{V}{Z}\)Å
53.
ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழுத்த அரண் (தோராயமாக)_____ .
0.7 V
0.3 V
2.0 V
2.2 V
54.
பெருமப்புல மதிப்பு 3\(\sqrt 2\) Vm-1 கொண்ட மின்காந்த அலையின் பெருமை காந்தப்புலம் __________
1.141 x 10-8 T
1.0 x 10-8 T
2.828 x 10-8 T
2.0 x 10-8 T
55.
பாயம் மாற்றம் 2 x 10-2Wb மற்றும் மின்னோட்டம் 0.01 A எனும் போது சுருள்களின் உருவாகும் பரிமாற்று மின்தூண்டல் எண் M = _______
2H
3H
1/2H
0
56.
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றின் இடைவெளி முழுதும் மின்காப்பு பொருளொன்றினால் நிரப்பப்பட்டு அவை மின்கலனுடன் இணைக்கப்பட்டால் அதிகரிக்கும் தன்மை_______
Q மற்றும் V
V மற்றும் E
E மற்றும் C
Q மற்றும் C
57.
ஒரு 12V மின்பல்பில் [bulb] 2A மின்னோட்டம் பாய்கிறது எனில் அதன் மின்தடையைக் கணக்கிடுக.
6 Ω
0.16 Ω
32 Ω
0.32 Ω
58.
காந்த திருப்புத்திறனின் திசை ________ லிருந்து ________ நோக்கி இருக்கும்.
தென்முனை, வடமுனை
வடமுனை, வடமுனை
வடமுனை, தென்முனை
தென்முனை, தென்முனை
59.
படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு மெல்லிய அரைவட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று (PQR) கிடைத்தள காந்தப்புலம் B - இல் அதன் தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது. அதன் வேகம் v உள்ளபோது சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாடு
சுழி
\(\frac { Bv\pi { r }^{ 2 } }{ 2 } \) மற்றும் P உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்.
πrBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்
2rBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்
60.
பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக.

1 = 4 < 2 < 3
2 = 4 < 3 < 1
2 = 3 < 1 < 4
3 < 1 < 2 < 4
61.
மின்காந்த அலை ஒன்றின் காந்தப்புலத்தின் எண்மதிப்பு 3 x 10-6 T எனில், அதன் மின்புலத்தின் மதிப்பு என்ன?
100 V m−1
300 V m-1
600 V m-1
900 V m-1
62.
N சுற்றுக்களும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியான \(\frac {R }{2}\) தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம் ______
\(\frac { 8{ N\mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)
\(\frac { 8N{ \mu }_{ 0 }I }{ { 5 }^{ 3/2 }R } \)
\(\frac { { 8N\mu }_{ 0 }I }{ 5R } \)
\(\frac { 4N{ \mu }_{ 0 }I }{ \sqrt { 5 } R } \)
63.
ஒரு மீட்டர் நீளத்திற்கு 2Ω மின்தடை கொண்ட கம்பியானது 1m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்கிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க.

π Ω
\(\frac{\pi}{2} \Omega\)
2πΩ
\(\frac { \pi }{ 4 } \)Ω
64.
a) ஒளிவிலகல் எண் - \(\mu =\sqrt { { \mu }_{ r }{ \varepsilon }_{ r } } \)
b) பாயிண்டிங் வெக்டர் - \(\vec { S } ={ C }^{ 2 }{ \varepsilon }_{ o }(\vec { B } \times \vec { E } )\)
c) உலோக வார்ப்புகளின் வெடிப்புகளை கண்டறிய - x - கதிர்கள்
d) பிரான்ஹோபர் வரிகள் - சூரிய வளி மண்டலம்
65.
| வரிசை I | வரிசை II | ||
| A | நேர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் | 1 | எதிர்க்குறி |
| B | எதிர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் | 2 | முடிவிலி |
| C | தான் இருக்கும் புள்ளியில் மின்னூட்டம் ஒன்றின் மின்னழுத்தம் | 3 | நேர்க்குறி |
| D | மின்னூட்டம் பெற்ற சீரான கோளம் ஒன்றின் மின்னழுத்தம் | 4 | அவற்றின் ஆர மதிப்பில் எதிர்த் தகவில் மாறும் |
66.
| அ | மின்னியக்கு விசை | - | செயல்படும் விசை |
| ஆ | மின் ஆற்றல் | - | வேலை |
| இ | மின் திறன் | - | மின்னழுத்த ஆற்றல் அளிக்கப்படும் வீதம் |
| ஈ | அக மின் தடை | - | கொடுக்கப்பட்ட மின் தடை |
67.
1. இடஞ்சுழி மின்னோட்டம் - வடமுனை
2. வலஞ்சுழி மின்னோட்டம் - தென்முனை
3. கோண உந்தம் - \(\frac {nh}{2\pi}\)
4. போர் மேக்னெட்டான் - \(\frac {4\pi m }{eh}\)
68.
அ) மின்தூண்டல் அடுப்பு
ஆ) சூழல் மின்னோட்ட தடுப்பி
இ) மின்காந்த தடையுறுதல்
ஈ) நீரியல் தடுப்பி
69.
a) \({ \varepsilon }_{ o }=\frac { { d\phi }_{ E } }{ dt } \)
b) இடப்பெயர்ச்சி மின்னூட்டம்
c) \({ \mu }_{ o }{ I }_{ o }\)
d) \({ \varepsilon }_{ o }\frac { d }{ dt } \int _{ S }^{ }{ \vec { E } .\vec { dA } } \)
70.
(a) மின்னல் கடத்தி
(b) வான் - டி - கிராப்
(c) ஜெராக்ஸ்
(d) AC மின்னியற்றி
71.
மின்னோட்ட விதி,
மின்னழுத்த வேறுபாட்டு விதி,
வீட்ஸ்டோன் சமனச்சுற்று,
ஜூல் விதி
72.
உயர்ந்த காந்த உட்புகுதிறன், உயர்ந்த காந்தத்தேக்குதிறன் குறைந்த காந்த நீக்குத்திறன்
73.
ஓம் விதியின் நுண் வடிவம் ____
74.
காந்தப்பாயம் ______
75.
மின்மாற்றி _____
76.
மின்மாற்றியின் பயனுறு திறன் வரம்பு _______
77.
மின்காந்த அலையின் கோண உந்தம் ____________
78.
J.C. மேக்ஸ்வெல்_____
79.
கூர்முனையில், மின்னூட்ட அடர்த்தி ________
80.
மின்னூட்டங்களின் பிரிநிலை தன்மை______
81.
சிக்கலான மின்சுற்றுகளில் _______ பயன்படுத்தப்படுகின்றன.
82.
ஒரு மின்துகளானது, சீரான காந்தப்புலத்தில் செல்லும் போது, அதன் இயக்க ஆற்றல் _________
83.
a) உயர் வெப்ப நிலை திடப்பொருள் - பட்டை உட்கவர் நிறமாலை
b) கார்பன் வில்லில் உருவாகும் நிறமாலை - வரி நிறமாலை
c) ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை - வரி உட்கவர் நிறமாலை
d) பொருளின் தன்மை - உட்கவர் நிறமாலை
84.
அ) வீட்டு உபயோகச் சாதனங்கள் - பக்க இணைப்பு
ஆ) வீட்டு உபயோகச் சாதனங்கள் - தொடரிணைப்பு
இ) \(\\ \frac { 1 }{ { R }_{ p } } \) -R1+R2
ஈ) Rp - \(\\ \frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } \)
85.
| 1 | அம்மீட்டர் | = மின்னழுத்த வேறுபாட்டை அளவிடுதல் |
| 2 | வோல்ட்மீட்டர் | = மின்னோட்டத்தை அளவிடுதல் |
| 3 | இணைதட மின்தடை | = கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் இணைத்தல் |
| 4 | நல்லியல்பு அம்மீட்டர் | = முடிவிலா மின்தடை |
86.
கூற்று: அமைப்பின் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் முறையே V = Vm sin ωt. I = Im sin (ωt - π/2)
காரணம்: மின்னோட்டம் மின்னழுத்தத்தை விட π/2 கட்டம் பின்தங்கியுள்ளது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி
87.
கூற்று (A): காற்றின் ஒளிவிலகல் எண் \(\mu =\sqrt { { \mu }_{ o } } \)
காரணம் (B): காற்றின் மின்காப்பு மாறிலியின் மதிப்பு (εr = 1). ஆனால் ஒளிவிலகல் எண் \(\mu =\sqrt { { \mu }_{ r } } \)
a) A சரி, R தவறு
b) A தவறு, R சரி
c) A மற்றும் R இரண்டும் சரி
d) A மற்றும் R இரண்டும் தவறு
88.
கூற்று: மின்காப்பு முனைவாக்கல் என்பது மின்காப்பு பொருளை நேர் மற்றும் எதிர் மின்னூட்டங்களாக அவற்றின் உள்ளேயே உருவாக்குவது.
காரணம்: கட்டுறா எலக்ட்ரான்கள் இச்செயலில் உருவாகும்.
a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
89.
கூற்று (A): மின்னோட்டம் ஒரு ஸ்கேலர் அளவாகும்.
காரணம் (R): மின்னோட்டமானது வெக்டர் கூடுதல் விதிக்கு உட்படுவதில்லை.
அ) (R) ஆனது (A) ஐ விளக்கவில்லை
ஆ) (R) ஆனது (A) ஐ விளக்குகிறது
இ) (A) மட்டுமே சரி: (R) ஆனால் தவறு
ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
90.
கூற்று :ஒரு காந்தத்தை இரும்பு ஆணிகளுக்கு இடையே கொண்டு செல்லும் போது, இயக்க ஆற்றலை மட்டும் கொண்டுள்ளது.
காரணம்: ஒரு சீரான காந்தப்புலத்தில் உள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது.
91.
அ) மின்மாற்றி DC - யில் செயல்படும்.
ஆ) மின்மாற்றி AC - யை DC - யாக மாற்றும்
இ) மின்மாற்றி AC - யில் மட்டும் செயல்படும்.
ஈ) மின்மாற்றி DC - யை AC - யாக மாற்றும்
92.
அ) என்னுடைய அலைபேசி மின்கலத்தை மின்னேற்றம் செய்கிறேன்.
ஆ) என்னுடைய மின்கலத்தில் மின்துகள்கள் இல்லை.
இ) மின்கலத்தில் மின்துகள்கள் இல்லை.
ஈ) அலைபேசி மின்னேற்றம் அடைகிறது.
93.
i) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் காந்தத்தன்மையுள்ள வட்டவடிவ சட்டத்தின் மீது தாமிரக்கம்பிச் சுருள் சுற்றப்பட்டிருக்கும்.
ii) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் வெவ்வேறு எண்ணிக்கையில் அமைந்த ஒரு கம்பிச்சுருள் பொருத்தப்பட்டிருக்கும்.
iii) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் மெல்லிய அலுமினியக் குறிமுள்ள ஒன்று காந்த ஊசியில் இணைக்கப்பட்டுள்ளது.
iv) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் சட்டம் எஃகு உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளது.
94.
அ) சீரான காந்தப்புலத்தில் ஏற்படும் பாய மாற்றம் தூண்டப்பட்ட மின்னோட்டத்தை உருவாக்கும்.
ஆ) தூண்டப்பட்ட மின்னியக்கு விசை மின்னோட்டத்தை உருவாக்கும்.
இ) இரும்பு தண்டை உட்செலுத்தினால் சுருளின் தன்மின்தூண்டல் அதிகரிக்கும்.
ஈ) தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை காந்தப்பாய மாற்றத்திற்கு எதிராக இருக்கும்.
95.
i) ஒரு மின்சுற்றில் அம்மீட்டரை ஒரு இணைத் தொடரில் இணைக்க வேண்டும்.
ii) இணைதட மின்தடை என்பது அதிக மின்தடை ஒன்றை கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் இணைத்தல் என்பதாகும்.
iii) ஒரு மின்சுற்றில் வோல்ட் மீட்டரை பக்க இணைப்பில் இணைத்தல் வேண்டும்.
iv) ஒரு நல்லியல்பு அம்மீட்டர் சுழி மின்தடையைப் பெற்றிருக்கும்.
96.
a) அகச்சிவப்பு கதிர்கள் கைபேசியில் பயன்படுகிறது
b) மூலக்கூறு நிறமாலை கூர்மையுடன் ஒரு பகுதியிலும், மறுபுறம் செல்லச் செல்ல மங்களாகவும் இருக்கும்
c) குளிர்விக்கப்பட்ட வாயுக்களின் வழியே பாயும் உயர்வெப்ப திண்ம பொருளினால் உருவாகும் நிறமாலை பட்டை நிறமாலை
d) பிரான்ஹோபர் வரி தனிமங்கள் கண்டறிய உதவுகின்றன
97.
சரியான கூற்று(களை) தேர்ந்தெடு.
I. காஸியன் பரப்பின் வெளியே உள்ள மின்துகளால் உருவாகும் மின்புலம் காஸியன் பரப்பின் மீது சுழி மின்பாயத்தை ஏற்படுத்தும்.
II. மூடிய பரப்பின் மொத்த பாயம் பரப்பின் உள்ளே மின்துகள் இல்லாத போது சுழி
III. மின்இருமுனையால் மூடப்பட்ட பரப்பின் உள்ளே பாயம் சுழி
(a) I மட்டும்
(b) II மற்றும் III
(c) I மற்றும் III
(d) I, II மற்றும் III
1.
ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் ஒளிமின்கலம் ஆகும். இது ஒளி மின் விளைவு தத்துவத்தின்படி செயல்படுகிறது
வகைகள்:
1. ஒளி உமிழ்வு மின்கலம்
2. ஒளி போல்டா மின்கலம்
3. ஒளி கடத்தும் மின்கலம்
2.
அ) En =-\(\frac { 54.4 }{ { n }^{ 2 } } \)eV எனவே ,
n = 1 எனில், அடிநிலை ஆற்றல்
n = 2 எனில், E2 = –13.6 eV; E3 = –6.04 eV, E4 = –3.4 eV அதேபோல் மற்றவை
முதன்மை குவாண்டம் எண்ணின் பெரும மதிப்பு – அதாவது n = ∞ எனில் E∞ = 0 eV.
ஆ) ஹைட்ரஜனைப் போன்றதொரு அணுவிற்கு அடிநிலை ஆற்றல்,
E1 = \(\frac { 13.6 }{ { n }^{ 2 } } { Z }^{ 2 }\) eV
Z என்பது அணு எண்; கொடுக்கப்பட்டுள்ள ஆற்றல் மதிப்பை ஒப்பிடும் போது, –13.6 Z2 = – 54.4 ⇒ Z = ±2 அணு எண் எதிர்க்குறி எண்ணாக இருக்க முடியாது. எனவே Z = 2.
முதல் கிளர்வு ஆற்றல்
E1 = E2 - E1 = -13.6 eV - (-54.4eV)
= 40.8 eV
எனவே முதல் கிளர்வு மின்னழுத்தம்
\({ V }_{ 1 }=\frac { 1 }{ e } { E }_{ 1 }=\frac { (40.8eV) }{ e } \)
= 40.8 volt
முதல் அயனியாக்க ஆற்றல்
Vஅயனியாக்கம் = E∞ - E1 = 0 - (-54.4 eV )
= 54.4 eV
முதல் அயனியாக்க மின்னழுத்தம்
Vஅயனியாக்கம் = \(\frac {1}{e}\)Eஅயனியாக்கம் \(=\frac { (54.4eV) }{ e } \) = 54.4 Volt
இ) இரு போட்டான்களை A மற்றும் B என்க. போட்டான் A-வின் ஆற்றல் 42 eV மற்றும் போட்டான் B-ன் ஆற்றல் 51 eV
போர் கொள்கையின் படி, ஆற்றல் மட்டங்களுக்கு இடையேயான வேறுபாட்டுக்குச் சமமான ஆற்றல் கொண்ட போட்டானை அணு உட்கவரும்; சமமாக இல்லையெனில், உட்கவராது
E2 - E1 = -13.6eV - (-54.4eV)
= 40.8eV ≈ 41 eV
அதேபோல்
E3 - E1 = -6.04 eV - (-54.4eV) = 48.36 eV
E4 - E1 = -3.4eV - (-54.4eV) = 51 eV
E3 - E2 = -6.04eV - (-13.6eV) = 7.56 eV
அதேபோல் அடுத்தடுத்தவை
இங்கு, E2 – E1 ≠ 42 eV, E3 – E1 ≠ 42 eV, E4 – E1 ≠ 42 eV மற்றும் E3 – E2 ≠ 42 eV
எந்தவொரு வாய்ப்பிலும் (42 eV) போட்டான் ஆற்றல் மதிப்பின் முழு மடங்குக்குச் சமமான ஆற்றல் வேறுபாடு அமையாததால், போட்டான் A இந்த அணுவால் உட்கவரப்படுவதில்லை. ஆனால், போட்டான் B யைப் பொருத்தவரை, E4 – E1 = 51 eV, ஆகையால், இவ்வணுவால், போட்டான் B உட்கவரப்படுகின்றது.
ஈ) போர் சுற்றுப்பாதையின் ஆரம் rn \(=\frac {a_0 \times n^2}{ z } \)
n = 1, z = 2
r1 \(=\frac {a_0 }{2 } \)
\(=\frac {0.529 }{2 } = 0.265 Å\)
உ) போர் அணுமாதிரியில், மொத்த ஆற்றலானது இயக்க ஆற்றலின் எதிர்க்குறி மதிப்புக்குச் சமம் ஆதலால்,
\(KE_{ n }=-{ E }_{ n }=-\left( -\frac { 54.4 }{ { n }^{ 2 } } eV \right) \)
= \( \frac{54.4}{n^2}eV\)
நிலை மின்னழுத்த ஆற்றலானது இயக்க ஆற்றலின் எதிர்க்குறி மதிப்பின் இரு மடங்காகும். எனவே,
\( U_{ n }=-2K{ E }_{ n }=-2\left( -\frac { 54.4 }{ { n }^{ 2 } } eV \right) \)
\(=-\frac { 108.8 }{ { n }^{ 2 } } eV\)
தரை நிலைக்கு n = 1
KE1 = 54.4 eV and U1 = –108.8 eV
3.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒளி இழையின் வழியாக, ஒளித்துடிப்புகளின் மூலம் தகவல்களைப் பரப்பும் முறை ஒளி இழைத் தகவல் தொடர்பு எனப்படும்.
பல காரணங்களுக்காக ஒளி இழை தகவல் தொடர்பு தேர்வு செய்யப்படுகிறது. இதில், ஒளியின் முழு அக எதிரொளிப்பு தத்துவம் பயன்படுத்தப்படுகிறது.
சிறப்புகள்:
ஒளி இழை அமைப்பு பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அவை, சர்வதேச தகவல் தொடர்பு, நகரங்கள் இடையே தகவல் தொடர்பு, தரவு இணைப்புகள், ஆலை மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் இராணுவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.
நன்மைகள்:
ஒளி இழைகள் மிகவும் மெலிதானது. தாமிர வடங்களை விட குறைவான எடை கொண்டவை.
இந்த அமைப்பு மிக அதிக பட்டை அகலத்தைக் கொண்டுள்ளது. இதன் பொருள்: தகவல் சுமந்து செல்லும் திறன் அதிகம் என்பதாகும்.
ஒளி இழை அமைப்பு மின் இடையூறுகளால் பாதிக்கப்படுவதில்லை.
தாமிர வடங்களைவிட ஒளி இழை மலிவானது.
4.
ஒளியின் வீச்சினை a என்க.
ஒளிச் செறிவு, I ∝ 4a2cos2(ø/2)
அல்லது I = 4I0 cos2(ø/2)
பின்வரும் நிபந்தனையின்படி, தொகுபயன் ஒளிச்செறிவு பெருமமாகும்.
ø = 0,cos0o = 1, Imax ∝ 4a2
பின்வரும் நிபந்தனையின்படி, தொகுபயன் வீச்சு சிறுமமாகும்.
ø = \(\pi \), cos(\(\pi \) /2) = 0, Imin = 0
Imax : Imin = 4a2 : 0
5.
படி 1: AC (1 + B) = AC.1 (OR விதி -2)
படி 2: AC. 1 = AC (AND விதி – 2 )
எனவே, AC + ABC = AC
சுற்று விளக்கம்

ஆகவே கொடுக்கப்பட்ட பூலியன் கூற்று நிரூபிக்கப்பட்டது.
6.
\({ E }_{ g }=\frac { hc }{ \lambda } \)
எனவே,
\(\lambda =\frac { hc }{ { E }_{ g } } =\frac { { 6.6\times 10 }^{ -34 }\times 3\times { 10 }^{ 8 } }{ 1.875\times 1.6\times { 10 }^{ -19 } } \)
= 660 nm
அலை நீளத்தின் மதிப்பு 660 nm என்பது, சிவப்பு நிற ஒளிக்கு உரியது ஆகும்.
7.
l = 1 m, w = 400 rad/s, B = 0.5T
தண்டின் நேர்கோட்டு திசைவேகம்
\(\\ \\ V=\frac { Iw+o }{ 2 } =\frac { Iw }{ 2 } \)
வளையத்திற்கு தண்டின் மையத்திற்குமிடையே தூண்டப்பட்ட மின்னியக்கு விசை
\(\varepsilon =B1v=B1\left( \frac { 1w }{ 2 } \right) =\frac { { B1 }^{ 2 }w }{ 2 } \)
\(\\ =\frac { 0.5\times { (1) }^{ 2 }\times 400 }{ 2 } =100V\)
8.
(i) அதிக அதிர்வெண் கொண்ட TV அலைகள்
(ii) அயனியாக்க படலத்தின் எதிரொலிப்பு அடைவதில்லை
(iii) மேலும் தரை பரவலின் நெருக்கம் மிக குறைவானது
9.
(i) உலோக குண்டை விட கல் முன்னதாக புவிப்பரப்பை வந்தடையும்.
(ii) புவிகாந்தப் புலத்தின் வழியே உலோக குண்டு விழும் போது சுழல் மின்னோட்டம் உருவாகி அதன் இயக்கத்தை எதிர்க்கும்.
(iii) கல்லில் சுழல் மின்னோட்டம் உருவாகாது. எனவே கல் முதலில் புவிப்பரப்பை அடையும்.
10.
qA = +1 x 10-6C, qB = +3 x 10-6 C
qc = -5 x 10-6 C r = 60cm = 0.6 m
\(U=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \)\(\left[ \frac { { q }_{ A }{ q }_{ B } }{ AB } +\frac { { q }_{ B }{ q }_{ C } }{ BC } +\frac { { q }_{ c }{ q }_{ A } }{ CA } \right] \)
= \(\frac { 9\times { 10 }^{ 9 } }{ 0.6 } \)[(1 x 3 x 10-12)+(-5 x 3 x 10-12)+(1 x -5 x 10-12)]
= 9 x 109 x 10-12 (3 - 15 - 5)
\(=\frac { 9\times { 10 }^{ 9 }\times { 10 }^{ 12 }\times 17 }{ 0.6 } =0.255j\)
11.
(i) பரப்பிலுள்ள அனைத்து புள்ளிகளும் ஒரே மின்னழுத்த மதிப்பை பெற்றிருந்தால் அத்தகைய பரப்பே சமமின்னழுத்த பரப்பு எனப்படும். பண்புகள்:
(i) சமமின்னழுத்தப் பரப்பில் இரு புள்ளிகளுக்கு இடையே எந்தவொரு மின்துகளை நகர்த்த செய்யப்படும் வேலை சுழியாகும்.
(ii) சமமின்னழுத்தப் பரப்பிற்கு செங்குத்தாகவே மின்புலம் எப்போதும் அமையும்.
12.
1. தொடரிணைப்பில் முதல் மின்கலத்தின் எதிர் மின்முனை இரண்டாவது மின்கலத்தின் நேர்மின்முனையுடன், இரண்டாவது மின்கலத்தின் எதிர் மின்முனை மூன்றாவது மின்கலத்தின் நேர்மின் முனையுடனும் இணைக்கப்படும்.
2. இணைக்கப்படாத முதல் மின்கலத்தின் நேர்மின்முனை மற்றும் இணைக்கப்படாத கடைசி மின்கலத்தின் எதிர் மின்முனைகளே மின்கலத்தொகுப்பின் மின்முனைகளாக அமையும்.
3. r ஆக மின் தடையும் ξ மின்னியக்குவிசையும் கொண்ட n மின்கலன்கள் R என்ற புறமின் தடையாக்கியுடன் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
4. மின்கலத் தொகுப்பின் மொத்த மின்னியக்கு விசை = nξ
மின்சுற்றின் மொத்த மின்தடை = nr + R
\(I=\frac { n\xi }{ nr+R } \)...(1)
நிலை (a)
r<
ஓரு மின்கலத்தில் ஏற்படும் மின்னோட்டம்
\(\left( { I }_{ 1 }=\frac { \xi }{ R } \right)\)
நிலை (b)
r>>R எனில்
\(I=\frac { n\xi }{ nr } \approx \frac { \xi }{ r }\) ...(3)
இது ஒரு மின்கலம் ஏற்படுத்தும் மின்னோட்டத்துக்கு சமம்.
இது ஒரு மின்கலம் ஏற்படுத்தும் மின்னோட்டத்தை போன்று n மடங்கு அமையும்.
1. எனவே சமன்பாடு (2) மற்றும் சமன்பாடு (3) லிருந்து மின்கலங்களின் தொகுபயன், அகமின்தடை புறமின் தடையை விட மிகச்சிறிய மதிப்பாக உள்ள போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் (நிலை a)
2. மின்கலங்களின் தொகுபயன், அகமின்தடை புறமின் தடையை விட மிகப்பெரிய மதிப்பாக உள்ள போது பயனற்றது ஆகும். (நிலை b)
13.
| கூலும் விதி | பயோட் - சவர்ட் விதி |
| 1. ஸ்கேலார் மூலத்தினால் உருவாக்கப்படுகிறது. அதாவது q மின்னூட்டம் கொண்ட மின்துகள்களினால் ஏற்படுகிறது. | வெக்டர் மூலத்தினால் உருவாக்கப்படுகிறது. I \(\overrightarrow { dl } \) ஆல் ஏற்படுகிறது. |
| மூலத்தையும் மின்புலத்தைக் கணக்கிடும். புள்ளியையும் இணைக்கும் நிலை வெக்டரின் வழியே மின்புலத்தின் திசை அமையும். | நிலை வெக்டர் \(\overrightarrow { r } \) மற்றும் மின்னோட்டக் கூறு I \(\overrightarrow { dl } \)இவற்றுக்கு செங்குத்தாக காந்தப்புலத்தின் திசை அமையும். |
| கோணத்தைச் சார்ந்ததல்ல | நிலை வெக்டர் \(\overrightarrow { r } \) மற்றும் மின்னோட்டக் கூறு I \(\overrightarrow { dl } \)இவற்றுக்கு இடையே உள்ள கோணத்தைச் சார்ந்துள்ளது. |
14.
முதல் விதி:
ஒரு மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் போதெல்லாம் சுற்றில் ஒரு மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. காந்தப்பாயம் மாறுகின்ற வரை மின்னியக்கு விசை சுற்றில் இருக்கும்.
இரண்டாம் விதி:
ஒரு மூடிய சுற்றில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் எண்மதிப்பு, நேரத்தைப் பொருத்து சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் வீதத்திற்கு சமமாகும்
\(ɛ = \frac{d Φ_g}{dt}\)
15.
மின்காந்த அலை பரவும் திசைக்கு செங்குத்தாக ஓரலகு நேரத்தில் ஓரலகு பரப்பு வழியே கடந்து செல்லும் ஆற்றலே மின்காந்த அலையின் செறிவு எனப்படும்.
I = ( u ) c
16.
பொருளின் மின்தடை எண் என்பது ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பும் கொண்ட கடத்தியானது, மின்னோட்டத்திற்கு அளிக்கும் மின்தடை ஆகும்.
17.
(அ) மின்காப்புடன் கூடிய மின்தேக்கியின் மின்தேக்குத்திறன்
\(C=\frac { { \varepsilon }_{ 1 }{ \varepsilon }_{ 0 }A }{ d } =\frac { 5\times 8.85\times { 10 }^{ -12 }\times 6\times { 10 }^{ -4 } }{ 6\times { 10 }^{ -3 } } \)
= 44.25 x 10-13F = 4.425pF
சேமிக்கப்படும் மின்துகள்
Q = CV = 44.25 x 10-13 x10
= 442.5 x 10-13C = 44.25pC
சேமிக்கப்படும் ஆற்றல்
\(U=\frac { 1 }{ 2 } CV^{ 2 }=\frac { 1 }{ 2 } \times 44.25\times { 10 }^{ -13 }\times 100\)
= 2.21 x10-10J
(ஆ) மின்கலனின் இணைப்பு இல்லாததால் மின்காப்பை நீக்கும்போது மின்துகள்கள் மாறாமல் இருக்கும். அதனால் மொத்த மின்னூட்டமும் மாறாமல் இருக்கும். ஆனால் தட்டுகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்கும். இதனால், மின்தேக்குத்திறன் குறையும்.
புதிய மின்தேக்குத்திறன்
\({ C }_{ 0 }=\frac { C }{ { \varepsilon }_{ r } } =\frac { 4.425\times { 10 }^{ -12 } }{ 5 } \)
= 0.885 x 10-12F = 0.885pF
சேமிக்கப்படும் மின்துகள்கள் மாறாததால் அதன் மின்னூட்டமும் மாறாது, அதாவது 44.25 pC. ஆகவே, புதிய நிலையில் ஆற்றல்.
\({ U }_{ 0 }=\cfrac { { Q }^{ 2 } }{ { 2C }_{ 0 } } =\cfrac { { Q }^{ 2 }{ \varepsilon }_{ r } }{ 2C } ={ \varepsilon }_{ r }U\)
= 5 x 2.21 x 10-10J = 11.05 x 10-10J
அதிகரிக்கப்பட்ட ஆற்றல்
\(\Delta U=(11.05\mu J-2.21\mu J) \times 10^{-10}J=8.84\times 10^{-10}J\)
மின்காப்பினை நீக்கும்போது, தட்டுகளில் உள்ள மின்துகள்களால் உள்நோக்கிய இழுவிசை அதன் மீது செயல்படும். இதற்கு எதிராக புற அமைப்பினால் செய்யப்படும் வேலையே கூடுதல் ஆற்றலாக சேமிக்கப்படுகிறது. இந்த 8.84 x 10-10J அளவுள்ள ஆற்றலுக்கான மூலம் இதுவே.
18.
இவ்விரண்டு ஐசோடோப்புகள் ஒற்றை அயனியாக்கம் செய்யப்பட்டவை. எனவே அவை இரண்டும் ஒரே மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும் அதாவது எலக்ட்ரானின் மின்னூட்டத்திற்குச் சமமான மின்னூட்டத்தைப் பெற்றிருக்கும். எலக்ட்ரானின் மின்னூட்டம் q = - 1.6 × 10-19 C \(_{ 92 }^{ 235 }{ U }\) மற்றும் \(_{ 92 }^{ 238 }{ U }\) அவற்றின் நிறைகள் முறையே 3.90 × 10-25 kg மற்றும் 3.95 × 10-25 kg ஆகும். கொடுக்கப்படும் காந்தப்புலம் B = 0.500 T. ஐசோடோப்புகளின் திசைவேகம் 1.00 × 105 m s-1, எனில்
அ) \(_{ 92 }^{ 235 }{ U }\) இன், பாதையின் ஆரம் r235 என்க
\({ r }_{ 235 }=\frac { { m }_{ 235 }v }{ \left| q \right| B } =\frac { 3.90\times { 10 }^{ -25 }{ \times 1.00\times 10 }^{ 5 } }{ 1.6\times { 10 }^{ -19 }\times 0.500 } \)
= 48.8 x 10-2m
r235 = 48.8 cm
\(_{ 92 }^{ 235 }{ U }\) ஐசோடோப்பு மேற்கொண்ட அரைவட்டப் பாதையின் விட்டம் d235 = 2r235 = 97.6 cm
ஆ) \(_{ 92 }^{ 238 }{ U }\) இன் பாதையின் ஆரம் r238 என்க.
\({ r }_{ 238 }=\frac { { m }_{ 238 }v }{ \left| q \right| B } =\frac { 3.90\times { 10 }^{ -25 }{ \times 1.00\times 10 }^{ 5 } }{ 1.6\times { 10 }^{ -19 }\times 0.500 } \)
= 49.4 x 10-2 m
r238 = 49.4 cm
\({ U }_{ 92 }^{ 238 }\) ஐசோடோப்பு மேற்கொண்ட அரைவட்டப் பாதையின் விட்டம் d238 = 2r238 = 98.8 cm
எனவே, இவ்விரண்டு ஐசோடோப்புகளுக்கு இடையே உள்ள தொலைவு Δd = d238 - d235 = 1.2 cm
(ஆ) ஒவ்வொரு ஐசோடோப்பும் அரைவட்டப் பாதையை நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட நேரங்கள் முறையே
= \(\frac { 97.6\times { 10 }^{ -2 } }{ 1.00\times { 10 }^{ 5 } } \) = 9.7 x 10-6 s = 9.76 μs
= \(\frac { 98.8\times { 10 }^{ -2 } }{ 1.00\times { 10 }^{ 5 } } \) = 9.88 x 10-6 s = 9.88 μs
19.
மின்னோட்டம் பாயும் கடத்தியின் நீளத்தின் சிறு கூறிலிருந்து r தொலைவில் உள்ள P புள்ளியில் உருவாகும் காந்தப்புலம் \(\overset { \rightarrow }{ dB } \) இன் எண்மதிப்பை பயோட் மற்றும் சாவர்ட் சோதனையின் அடிப்படையில் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் காந்தப்புலம் \(\overrightarrow{dB}\) இன் எண்மதிப்பு.
1. மின்னோட்டத்தின் (I) வலிமைக்கு நேர்த்தகவிலும்
2. நீளக் கூறின் \(\overset { \rightarrow }{ dl } \) எண்மதிப்புக்கு நேர்த்தகவிலும்
3. \(\overset { \rightarrow }{ dl } \) மற்றும் \(\hat { r } \) க்கு இடையே உள்ள கோணத்தின் θ சைன் மதிப்புக்கு நேர்த்தகவிலும்
4. புள்ளி P மற்றும் நீளக்கூறு \(\overset { \rightarrow }{ dl } \) இவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். இதனை பின்வருமாறு எழுதலாம்.
\(d B \propto \frac{I d l}{r^2} \sin \theta\)
\(\mathrm{dB}=k \frac{I d l}{r^2} \sin \theta\)
இங்கு \(\mathrm{k}=\frac{\mu_o}{4 \pi}\) (SI அலகில்) மேலும் k = 1 (CGS அலகில்)
வெக்டர் குறியீட்டின்படி,
\(d \vec{B}=\frac{\mu_o}{4 \pi} \frac{I \overrightarrow{d l} \times \hat{r}}{r^2}\)
20.
முதல் நேர்வில், பெட்டியின் மின்தடை

மின்னோட்டம் IAB = \(\frac { V }{ { R }_{ AB } } =\frac { V }{ \rho } .\frac { AB }{ C } \) .....(1)
இரண்டாம் நேர்வில், பெட்டியின் மின்தடை
RBC = \(\rho \frac { A }{ BC } \)
மின்னோட்டம் IBC = \(\frac { V }{ { R }_{ BC } } =\frac { V }{ \rho } .\frac { BC }{ A } \) ....(2)
IAB ன் வாயிலாக IBC ஐ பெற சமன்பாடு (2) ஐ AC ஆல் பெருக்கி வகுக்க நமக்கு கிடைப்பது
IBC = \(\frac { V }{ \rho } .\frac { BC }{ A } \frac { AC }{ AC } =\left( \frac { V }{ \rho } .\frac { AB }{ C } \right) .\frac { { C }^{ 2 } }{ { A }^{ 2 } } =\frac { { C }^{ 2 } }{ { A }^{ 2 } } \).IAB
C > A என்பதால் IBC > IAB
21.
\(\lambda =5500\times { 10 }^{ -10 }m;P=150W\ \) பயனுறுதிறன் = 12%
\(e=\cfrac { he }{ \lambda } =\cfrac { he }{ \lambda } \cfrac { 6.626\times { 10 }^{ -34 }\times 3\times { 10 }^{ 8 } }{ 5500\times { 10 }^{ -10 } } =3.614\times { 10 }^{ -19 }\)
\(n=\cfrac { E }{ e } =\cfrac { 150 }{ 3.614\times { 10 }^{ 19 } } =4.15\times { 10 }^{ 20 }\times \cfrac { 12 }{ 100 } \)
\(n=4.98\times { 10 }^{ 19 }\)
22.
மட்டைப் பந்தின் நிறை டி-ப்ராய் அலைநீளம் அதிகமாக இருப்பதால், (\(\lambda\) = h/mv) புறக்கணிக்கத்தக்க அளவு மிகச் சிறியதாக உள்ளது. இம்மதிப்பை எந்தவொரு சோதனை மூலமும் அளக்க முடியாது என்பதால் மட்டைப்பந்தின் அலைப்பண்பினை நம்மால் காண முடியவில்லை.
23.
வைரம் ஜொலிப்பிற்குக் காரணம் அதன் உள்ளே நடைபெறும் முழு அக எதிரொளிப்பே ஆகும். வைரத்தின் ஒளிவிலகல் எண் கிட்டத்தட்ட 2.417 ஆகும். இம்மதிப்பு சாதாரண கண்ணாடியின் ஒளிவிலகல் எண் மதிப்பான கிட்டத்தட்ட 1.5 ஐ விட மிக அதிகம். வைரத்தின் மாறுநிலைக்கோணம் ஏறத்தாழ 24.4° ஆகும். எனவே, 24.4° முதல் 90° வரை உள்ள எந்தப் படுகோணத்தில் ஒளிக்கதிர் வைரத்தின் மீது விழுந்தாலும் வைரத்தின் உள்ளே நுழைந்த ஒளி வெளியேறுவதற்கு முன்பாக வைரத்தின் உட்புறமுள்ள வெட்டு முகங்களில் பலமுறை முழு அக எதிரொளிப்பு அடைவதால் வைரம் நன்கு ஜொலிக்கிறது.
24.
பருப்பொருளின் அடிப்படை ஆதாரம் எனக்கருதப்பட்ட அணு உருவாவதற்கு காரணமான எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகியவை துணை அணுத்துகள்கள் எனப்படும். மேலும் புரோட்டான் மற்றும் நியூட்ரான்கள் குவார்க்குகளால் ஆனது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் துகள்கள் அல்லது கடவுள் துகள்கள் புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களுக்கு நிறையைத் தருகின்றன.
25.
அரை ஆயுட்காலங்களின் அடிப்படையில் கால இடைவெளியைக் கணக்கிட,
\(n=\frac { t }{ { T }_{ 1/2 } } =\frac { 22,920 \ yr }{ 5730 \ yr } =4\)
22,920 ஆண்டுகளுக்குப் பிறகு சிதைவடையாமல் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை,
\(N={ \left( \frac { 1 }{ 2 } \right) }^{ n }{ N }_{ 0 }={ \left( \frac { 1 }{ 2 } \right) }^{ 4 }\times 10,000\)
N = 625
26.
நானோ அறிவியல் என்பது 1- 100 nm (1nm = 10-9 m) அளவுகள், வரை கொண்ட பொருள்களின் அறிவியல் ஆகும். பருப்பொருளானது நானோ பொருள்களாக பிரிக்கப்பட்டால் அவற்றின் இயற்பியல் பண்புகளில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அறிவது ஆகும்.
நானோ தொழில்நுட்பம் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக்கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கியது ஆகும்.
27.
அணுக்கருவை நோக்கி நேராக ஓர் ஆல்பா துகள் செல்லும் போது, குறிப்பிட்ட ஒரு புள்ளியை அது அடைந்த பிறகு, சிறிது நேரம் நின்று பின் திரும்புகிறது. இவ்வாறு 180\(\circ\) கோணத்தில் எதிரொளிப்பு அடைவதற்கு முன், அணுக்கருவின் மையத்திற்கும் ஆல்பா துகளுக்கும் இடையேயான சிறு தொலைவு r0, மீச்சிறு தொலைவு எனப்படும்.
28.
ரேடார் (RADAR) என்பது RAdio Detection And Ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும்.
29.
செயல்படும் முன்னோக்கு சார்பு நிலை:
இந்த வகைச் சார்பில் உமிழ்ப்பான் - அடிவாய் சந்தி முன்னோக்குச் சார்பிலும், ஏற்பான் - அடிவாய் சந்தி பின்னோக்குச் சார்பிலும் இருக்கும். டிரான்சிஸ்டரானது செயல்படும் நிலையில் அமையும், இப்போது டிரான்சிஸ்டர் பெருக்கியாக செயல்படும்.
தெவிட்டிய நிலை:
இங்கு, உமிழ்ப்பான்-அடிவாய் சந்தியும், ஏற்பான்-அடிவாய் சந்தியும் முன்னோக்குச் சார்பில் அமையும். டிரான்சிஸ்டரின் சந்திகளின் குறுக்கே மிக அதிக அளவு மின்னோட்டம் பாயும், இந்நிலையில் டிரான்சிஸ்டரானது மூடிய சாவியாகச் செயல்படும்.
வெட்டுநிலை:
இந்த நிலையில் உமிழ்ப்பான் - அடிவாய் சந்தியும், ஏற்பான் - அடிவாய் சந்தியும் பின்னோக்குச் சார்பில் அமையும். இந்த நிலையில் டிரான்சிஸ்டர் திறந்த சுற்றாகச் செயல்படும்.
30.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை புவி மீது படாமல் பாதுகாக்கும் படலமாக ஓசோன் படலம் விளங்குகிறது
31.
மின்தூண்டி என்பது அதன் வழியே மின்னோட்டம் பாயும் போது காந்தப்புலத்தில் ஆற்றலை சேமிக்க உதவும் சாதனம் ஆகும்.
32.
எதிர் மின்னூட்டம் பெற்ற பலூனை சுவற்றினருகில் கொண்டு வரும்போது, அது சுவற்றில் வேறின மின்துகள்களைத் தூண்டுவதால் முனைவாக்கம் ஏற்படுகிறது. இதனாலேயே சுவற்றுடன் பலூன் ஒட்டிக் கொள்கிறது
33.
மின்னிறக்க விளக்குகள் [Discharge lamp] மின் பற்றவைத்தல் (வெல்டிங்), மின்வில் போன்றவை மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்துகின்றன.
34.
1. நிறை நிறமாலைமானி பல்வேறு பகுதிகளில் பயன்படுகிறது. அவை.
2. அறிவியலில் குறிப்பாக மருத்துவம், விண்வெளி அறிவியல், மண்ணியல் போன்றவற்றில் பயன்படுகிறது.
3. மருத்துவத்தில் கழிவாயுக்களின் அளவை அளந்தறிய பயன்படுகிறது.
4. உயிரியலில் ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சியில் ஏற்படும் எதிர்வினை இயக்கத்தைக் கண்டறிய பயன்படுகிறது.
35.
\(C=\cfrac { { 10 }^{ 2 } }{ \pi } \times { 10 }^{ -6 }F,{ V }_{ RMS }=220V;f=50Hz\)
(i) மின்தேக்கியின் மின்மறுப்பு
\({ X }_{ C }=\cfrac { 1 }{ \omega C } =\cfrac { 1 }{ 2\pi fC } \)
= \(\cfrac { 1 }{ 2\times \pi \times 50\times \frac { { 10 }^{ -4 } }{ \pi } } =100\Omega \)
(ii) மின்னோட்டத்தின் RMS மதிப்பு
\({ I }_{ RMS }=\cfrac { { V }_{ RMS } }{ { X }_{ C } } =\cfrac { 220 }{ 100 } =2.2A\)
(iii) \({ V }_{ m }=220\times \sqrt { 2 } =311V\)
\({ I }_{ m }=2.2\times \sqrt { 2 } =3.1A \)
எனவே,
v = 311 sin 314 t
i = 3.1sin (314 t + \(\frac{\pi}{2}\))
36.
ஒப்புமை விடுதிறன் εr = 2.25
ஒப்புமை உட்புகுதிறன் μr = 1.0
மின்காந்த அலையின் வேகம் C காற்று \(=\frac { 1 }{ \sqrt { { \varepsilon }_{ r }{ \mu }_{ r } } } \)
Cகாற்று \(=\frac { 1 }{ \sqrt { 1\times 2.25 } } =\frac {1}{ 1.5 } \)
ஊடகத்தின் மின்காந்த அலையின் வேகம்
\(V_{m}=\frac{c}{n}=\frac{3 \times 10^{8}}{1.5}\)
Vm = 2 x 108 m/s
37.
q என்ற புள்ளி மின்துகளிலிருந்து r தொலைவில் உள்ள புள்ளி p யில் வைக்கப்படும் ஓரலகு மின்னூட்டம் கொண்ட மின்துகளினால் உணரப்படும் விசையே அப்புள்ளி p யில் உள்ள மின்புலத்தின் மதிப்பாகும்.
\(\vec{E}=\frac{\vec{F}}{q_0}=\frac{k q}{r^2} \hat{r}=\frac{1}{4 \pi \varepsilon_0} \frac{q}{r^2} \hat{r}\)
இங்கு \( \hat{r}\) என்பது q விலிருந்து நாம் எடுத்துக்கொண்ட புள்ளி p க்கு வரையப்படும் ஓரலகு வெக்டராகும்.
38.

ஒளிபுகாத் திரையில் S1 மற்றும் S2 என்ற இரண்டு துளைகள் 0.3 மி.மீ இடைவெளியில் அமைக்கப்பட்டு S என்ற ஒளிமூலத்திலிருந்து சமதொலைவில் இருக்கும்படி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு துளையின் அகலமும் 0.03 மி.மீ. S1 மற்றும் S2 ஓரியல் மூலங்களாகும்.
பிளவுகள் S1, மற்றும் S2 விலிருந்து வரும் அலைமுகப்புகள் இரட்டைப் பிளவின் வலப்பக்கமாக 1மீ தொலைவில் XY என்ற திரை வைக்கப்பட்டபோது, அத்திரையில் சம அகலமுடைய பொலிவு மற்றும் கரும்பட்டைகள் அடுத்தடுத்து தோன்றுகின்றன.
S1, S2 விலிருந்து திரையின் மையப்புள்ளி O வை அடையும் ஒளி அலைகள், சமதொலைவைக் கடந்து வந்துள்ளதால் அவை படத்தில் காட்டியுள்ளவாறு ஒத்தகட்டத்தில் இருக்கும். இவ்விரண்டு அலைகளும் ஆக்கக்குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தி, மையப்புள்ளியில் பொலிவுப்பட்டையை உருவாக்கும். இதற்கு மையப் பொலிவுப்பட்டை என்று பெயர். ஏதேனும் ஒரு பிளவை மூடிவிட்டால் குறுக்கீட்டுப்பட்டைகள் மறைந்து திரை சீராக ஒளியூட்டப்பட்டிருக்கும். இதிலிருந்து, திரையில் தோன்றும் பொலிவு மற்றும் கரும் பட்டைகள் ஒளியின் குறுக்கீட்டு விளைவினால் ஏற்பட்டவை என்பதை அறியலாம்.
பாதை வேறுபாட்டிற்கான சமன்பாடு:

ஓரியல் மூலங்களாகச் செயல்படும் S1 மற்றும் S2. பிளவுகளுக்கிடையே உள்ள தொலைவு d என்க. இவை \(\lambda \) அலைநீளமுடைய ஒளியால் ஒளியூட்டப்படுகிறது. இரட்டைப் பிளவுகளுக்கு இணையாக D தொலைவில் திரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திரையின் மையப்புள்ளி. இது S1, மற்றும் S2 விலிருந்து சமதொலைவில் உள்ளது. எனவே ஒளிப்பாதையின் வேறுபாடு சுழி.
0 விலிருந்து y தொலைவில் உள்ள புள்ளி P ஐக் கருதுக. புள்ளி P யில் பாதை வேறுபாடு \(\delta =\frac { yd }{ D } \) ஆகும்.
.P யில் பொலிவுப்பட்டை தோன்ற நிபந்தனை பாதை வேறுபாடு \(\delta =n\lambda \) என இருக்க வேண்டும்.
n = 0, 1, 2, 3, ....
எனவே \(\cfrac { dy }{ D } =n\lambda \)
\({ y }_{ n }=n\cfrac { \lambda D }{ d } \)
இதே போன்று முதல் கருமைப்பட்டை தோன்ற நிபந்தனை, பாதைவேறுபாடு\(\delta =\left( 2n-1 \right) \lambda /2\) என இருக்க வேண்டும். n = 1, 2, 3,...
எனவே \(\cfrac { dy }{ D } =\left( 2n-1 \right) \lambda /2\)
\({ y }_{ n }=\cfrac { \left( 2n-1 \right) \lambda D }{ 2d } \)
இரண்டு அடுத்தடுத்த பொலிவுபட்டை அல்லது கரும்பட்டைகளுக்கு இடையே உள்ள தொலைவு பட்டை அகலம் எனப்படும். எனவே, மையப்புள்ளி O விலிருந்து n -வது பொலிவுப்பட்டையின் தொலைவு \({ y }_{ n }=n\cfrac { \lambda D }{ d } \)
(n+1) வது பொலிவுப்பட்டையின் தொலைவு = \({ y }_{ (n+1) }=\cfrac { \left( n+1 \right) \lambda D }{ d } \)
பட்டை அகலம் \(\beta ={ y }_{ (n+1) }-{ y }_{ n }=\left( \left( n+1 \right) \cfrac { \lambda D }{ d } \right) -\left( n\cfrac { \lambda D }{ d } \right) \)
\(\beta =\cfrac { \lambda D }{ d } \) ..(4)
இவ்வாறே மையப்புள்ளி O விலிருந்து (n+1) வது கருமைப்பட்டைக்கும் n-வது கருமைப்பட்டைக்கும் இடையே உள்ள தொலைவு பட்டை அகலத்தை கொடுக்கும்.
\(\beta ={ y }_{ \left( n+1 \right) }{ y }_{ n }=\left( \cfrac { \left( 2(n+1)-1 \right) }{ 2 } \cfrac { \lambda D }{ d } \right) -\left( \cfrac { \left( 2n-1 \right) }{ 2 } \cfrac { \lambda D }{ d } \right) \)
\(\beta =\cfrac { \lambda D }{ d } \)...(5)
39.
1-100 nm அளவுள்ள நானோ துகள்கள் பேரளவு திண்மத்திலிருந்து பல பண்புகளில் மாறுபடுவதால் அதன் பயன்பாடு பல்வேறு துறைகளில் உள்ளன.
வாகன தொழிற்சாலை
i) எடை குறைந்த தகடுகளை பயன்படுத்தி வாகனங்கள் தயாரிக்கப்படுவதால் எரிபொருள் சிக்கனம் உண்டாகும்.
ii) செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வாகனத்தின் திறனை அதிகரிக்க முடியும்.
iii) இயந்திரங்களின் பாகங்களை கடினத்தன்மையுடையதாய் மாற்றமுடியும்.
வேதித் தொழிற்சாலை
i) வர்ணத்தொழிற் சாலைகளில் புதுமை புகுத்த முடியும்.
ii) நீரை எதிர்க்கும் நானோ வண்ணங்கள் தயாரிக்க முடியும்.
iii) வண்ணங்கள் பயன்படும் காலத்தை கூட்ட முடியும்.
பொறியியல்
i) கருவிகள் மற்றும் இயந்திரங்களுக்கு தேய்மான பாதுகாப்பு அளிக்க முடியும்.
ii) உயவு எண்ணெய் இல்லா பேரிங்குகள் உருவாக்க முடியும்.
iii) நெகிழிப் பாகங்களில் தடுப்பு எதிர்ப்புப் பூச்சுகள் பூசப்பட்டு நெகிழியை பளபளப்பாக வைத்திருக்க முடியும்.
மின்னணுவியல் தொழிற்சாலை
i) தரவு நினைவகத்தை அதிகரித்து, காட்சிப்படுத்திகளின் தூரத்தை உயர்த்த முடியும்.
ii) கண்ணாடி இழைகள், ஒளியியல் சுவிட்சுகள், வடிப்பான்கள் ஆகியவற்றை உருவாக்க முடியும்.
கட்டுமானம்:
i) வெப்பக்காப்பு, தீத்தடுப்பான் ஆகியனவற்றை கட்டடங்களில் பயன்படுத்த முடியும்.
ii) கட்டிட முகப்புகள், கூரைகள், கூரை ஓடுகள் ஆகியவற்றின் மேற்பரப்பு சார்ந்த கட்டுமானப் பொருள்கள் தயாரிக்க முடியும்.
மருத்துவம்:
i) மருந்து விநியோக அமைப்புகளை மாற்றி அமைக்க முடியும்.
ii) செயற்கை உறுப்புகள் பொருத்துதல் எளிமையாக்கப்படும்.
iii) மருத்துவ சோதனைகள் விரைந்து செய்யப்பட முடியும்.
ஜவுளி:
i) ஸ்மார்ட் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.
ii) மேற்பரப்பு பதப்படுத்தப்பட்ட ஜவுளிகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆற்றல்:
i) சூரிய மின்கலன்களின் பரிமாணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
ii) வலிமையான எரிபொருள் கலன்கள் உருவாக்கப்படுகின்றன.
அழகு சாதனப் பொருட்கள்:
i) நவீன உதட்டுச்சாயங்கள், மென்மையான உடற்பூச்சுகள் மற்றும் பற்பசை தயாரிப்பில் உதவுகின்றன.
உணவு மற்றும் பானங்கள்:
i) சேமிப்பு வாழ் உணர்விகளாக பயன்படுகிறது.
ii) பழ ரசங்களை தெளிவுப்படுத்தலில் பயன்படுகிறது.
வீட்டு உபயோகம்:
i) இரும்பின் மீதான பீங்கான் பூச்சுகள்
ii) தரை, சன்னல்கள் ஆகியவற்றின் சுத்தப்படுத்தியாக பயன்படுகிறது.
விளையாட்டு/வெளிப்புறம்
i) ஸ்கி மெழுகு
ii) வலுப்படுத்தப்பட்ட டென்னிஸ் மட்டைகள் மற்றும் பந்துகள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
40.
தட்டுகளுக்கிடையே மின்புலம்
\(E=\frac { \sigma }{ { \varepsilon }_{ 0 } } =\frac { q }{ { \varepsilon }_{ 0 }A } \)
q என்பது தட்டுகளின் மின்துகள் மின்பய தட்டில்
\({ \phi }=EA=\frac { q }{ { \varepsilon }_{ 0 }A } .A\frac { q }{ { \varepsilon }_{ 0 } } \)
இடப்பெயர்ச்சி மின்னோட்டம்
\({ I }_{ D }=\frac { d\phi }{ dt } ={ \varepsilon }_{ 0 }\frac { d }{ dt } \left[ \frac { q }{ { \varepsilon }_{ 0 } } \right] =\frac { dq }{ dt } \)
ஆனால் \(\frac { d }{ dt } \) = என்பது மின்னூட்டம் மாறும் வீதம் ID = IC
இடப்பெயர்ச்சி மின்னோட்டம் = கடத்தி மின்னோட்டம்
41.
1. கம்பி CD வழியே ஒரு நிலையான மின்னோட்டம் ஏற்படுத்தப்படுகிறது.
2. மின்கலத்தொகுப்பு, சாவி மற்றும் மின்னழுத்தமானி கம்பி ஆகியவை தொடரினைப்பில் இணைக்கப்பட்டு முதன்மைச் சுற்றாக அமைகிறது.
3. மின்னியக்கு விசை ξ கொண்ட மின்கலத்தின் நேர்மின்முனை C புள்ளியுடனும் எதிர் மின்முனை கால்வான மீட்டர் மற்றும் உயர் மின்தடை வழியாக தொடுசாவியுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இது துணைச் சுற்றாக அமைகிறது.
4. தொடுசாவி உதவியுடன் J என்ற புள்ளியில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
5. CJ பகுதியின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு, மின்கலத்தின் மின்னியக்கு விசை ξ க்கு சமமானால் கால்வானோமீட்டர் வழியே எவ்வித மின்னோட்டமும் பாயாமல் அது சுழி விலக்கத்தை காட்டும்.
6. CJ என்பது சமன்செய் நீளம் l என்று அழைக்கப்படும்.
7. CJ க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு Irl.
8. r என்பது ஓரலகு நீளத்திற்கான மின்தடை ஆகும்.
9. ξ = Irl -----(1)
ξ ∝ l
10. I மற்றும் r மாறிலிகள் ஆகும்.
11. மின்கலத்தின் மின்னியக்கு விசை சமன்செய் நீளத்திற்கு நேர்த்தகவில் அமையும்.
42.
1. தொடர்ச்சியான மூடப்பட்ட வளைகோடுகள்
2. காந்தபுலத்தின் திசை காந்தத்திற்கு வெளியே வடமுனை தென்முனை நோக்கிப் பாயும். காந்தத்திற்கு வெளியே - தென்முனை வடமுனை நோக்கி இருக்கும்.
3. மூடப்பட்ட வளைக்கோட்டின் எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலத்தின் திசையை, அப்புள்ளியில் உள்ள காந்தப்புலக்கோட்டிற்கு வரையப்படும் தொடுகோட்டின் திசையில் அறியலாம்.
4. காந்தப்புலக் கோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டாது.
5. வலிமையான காந்தப்புலத்திற்கு கோடுகள் மிக நெருக்கமாக இருக்கும்.
6. வலிமை குறைந்த காந்தப்புலத்திற்கு கோடுகள் இடைவெளிவிட்டு காணப்படும்.
43.
ஒரு சுற்றின் திறன் என்பது அச்சுற்றில் மின் ஆற்றல் நுகரப்படும் வீதம் என வரையறுக்கப்படுகிறது. அது மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் ஆகியவற்றின் பெருக்குத்தொகையால் குறிக்கப்படுகிறது. ஒரு மாறுதிசை மின்னோட்டச் சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் நேரத்தைப் பொருத்து தொடர்ச்சியாக மாறுகின்றன. முதலில் ஒரு கணத்தில் உள்ள திறனை நாம் கணக்கிட்டு, பிறகு ஒரு முழுச்சுற்றுக்கு அதன் சராசரியை மதிப்பிடலாம்.
தொடர் மின்தூண்டி RLC சுற்றில், கணநேர மாறுதிசை மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டமானது
\(\upsilon \) = Vm sin ωt மற்றும் i = Im sin (ωt + ф)
இங்கு ϕ என்பது υ மற்றும் i இடையே உள்ள கட்டக்கோணம் ஆகும். கணநேர திறனை (Instantaneous power) இவ்வாறு எழுதலாம்.
கணநேர திறன் P = \(\upsilon \)i
= Vm Im sin ωt sin (ωt + ф)
= Vm Im sin ωt (sinωt cos ф - cosωt sinф)
P = Vm Im (cosфsin2 ωt - sinωt cosωt sinф)
இங்கு ஒரு சுற்றுக்கான sin2 ωt ன் சராசரி \(\frac { 1 }{ 2 } \) ஆகும் மற்றும் sin c ω ω t t os இன் சராசரி சுழியாகும். இந்த மதிப்புகளைப் பிரதியிட்டு, ஒரு சுற்றுக்கான சராசரி திறனைப் பெறலாம்.
Pav = VmIm cos ф x \(\frac { 1 }{ 2 } \)
\(\frac { { V }_{ m } }{ \sqrt { 2 } } \frac { { I }_{ m } }{ \sqrt { 2 } } cos\phi \)
∴ Pav = VRMS IRMS cos ф
இங்கு VRMS IRMS தோற்றத்திறன் எனப்படும். cos ф திறன் காரணி (Power factor) ஆகும். ஒரு மாறுதிசை மின்னோட்டச் சுற்றின் சராசரி திறன் சுற்றின் உண்மைத் திறன் (True power) எனவும் அழைக்கப்படுகிறது.
சிறப்பு நேர்வுகள்:
i) மின்தடைப் பண்புள்ள சுற்றுக்கு, மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்டக்கோணம் சுழியாகும் மற்றும் cos φ = 1.
∴ Pav = VRMS IRMS
ii) மின்தூண்டல் அல்லது மின்தேக்கிப் பண்புள்ள சுற்றுக்கு கட்டக் கோணமானது
ф = 土 π/2 மற்றும் \(\left( \cos\pm \frac { \pi }{ 2 } \right) \)= 0
∴ Pav = 0
iii) தொடர் RLC சுற்றுக்கு கட்டக் கோணம்
\(\phi ={ \tan }^{ -1 }\left( \frac { { X }_{ L }-{ X }_{ C } }{ R } \right) \)
∴ Pav = VRMS IRMS cos ф
iv) ஒத்ததிர்வில் உள்ள தொடர் RLC சுற்றுக்கு கட்டக்கோணம் சுழியாகும் மற்றும் cos 0o = 1
∴ Pav = VRMS IRMS
44.
1. முதல் சமன்பாடு வேறு எந்த சமன்பாடுமல்ல அது காஸ்விதி மட்டுமே. இது நிகர மின்புலபாயத்தை, மூடப்பட்ட பரப்பிலுள்ள நிகர மின்னூட்டத்தோடு தொடர்புபடுத்துகிறது. கணித சமன்பாட்டின்படி பின்வருமாறு இதனை எழுதலாம்.
(காஸ் விதி) ... (1)
\( \vec{E}\) என்பது மின்புலம் மற்றும் Qமூடப்பட்ட என்பது மூடப்பட்ட பரப்பிலுள்ள மின்துகள்களின் நிகர மின்னூட்டமாகும். இச்சமன்பாடு தனித்தனியான (discrete) மின்துகள்கள் மற்றும் மின்துகள்களின் தொடர்பகிர்வு (continuous distribution) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். மேலும் மின்புலக்கோடுகள் நேர்மின்துகள்களில் தொடங்கி எதிர்மின் துகள்களில் முடிவடைகின்றன என்பதையும் இது நமக்கு விளக்குகிறது. மேலும் மின்புலக்கோடுகள் ஒரு மூடப்பட்ட வளைவுப் பாதையை உருவாக்குவதில்லை என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. வேறுவகையில் கூறுவோமாயின் தனித்த நேர்மின்துகள் அல்லது எதிர் மின்துகள் இயற்கையில் தோன்றுகின்றன.
2. இரண்டாவது சமன்பாட்டிற்கு பெயர் ஏதும் இல்லை. ஆனால் இது நிலைமின்னியலின் காஸ்விதியை ஒத்துள்ளது. எனவே இவ்விதியை காந்தவியலின் காஸ்விதி என்று அழைக்கலாம். இவ்விதியின்படி, ஒரு மூடப்பட்ட பரப்பிலுள்ள காந்தப்புலத்தின் பரப்பு தொகையீட்டு மதிப்பு சுழியாகும். கணிதவியல் சமன்பாட்டின் படி
\(\oint \vec{B} \cdot d \vec{A}=0\) ....(2)
இங்கு \(\vec{B}\) என்பது காந்தப்புலத்தை குறிக்கிறது. காந்தவிசைக் கோடுகள் அல்லது காந்தப்புலக் கோடுகள் ஒரு மூடப்பட்ட தொடர்பாதையை உருவாக்கும் என்பதை இவ்விதி நமக்கு உணர்த்துகிறது. வேறுவகையில் கூறுவோமாயின் தனித்த காந்த ஒருமுனை (வடமுனை அல்லது தென்முனை) எப்போதும் இயற்கையில் உருவாகாது என்பதை நமக்கு இது உணர்த்துகிறது.
3. மூன்றாவது சமன்பாடு பாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதியாகும். இவ்விதி மாறுபடும் காந்தப்பாயத்துடன் மின்புலத்தைத் தொடர்புபடுத்துகிறது.
\(\oint \vec{E} \cdot d \vec{l}=-\frac{d}{d t} \Phi_B\) (பாரடேயின் விதி) ....(3)
இங்கு, \( \vec{E}\) என்பது மின்புலமாகும்.
ஒரு மூடப்பட்ட பாதையைச் சுற்றியுள்ள மின்புலத்தின் கோட்டுவிழித் தொகையீட்டு மதிப்பு, மூடப்பட்ட பாதையால் சூழப்பட்ட பரப்பு வழியே செல்லும் காந்தப்பாயத்தின் நேரத்தைப் பொருத்தமாற்றத்திற்குச் சமம். நமது நவீன தொழில் நுட்பப்புரட்சிக்குக்காரணம் பாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளாகும். மின்சார வாரியத்தால் நம் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்னாற்றல் பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதியின் அடிப்படையிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
4. நான்காவது சமன்பாடு ஆம்பியர் சுற்றுவிதியின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகும். இதனை ஆம்பியர்-மேக்ஸ்வெல் விதி என்றும் அழைக்கலாம். இவ்விதி ஒரு மூடப்பட்ட பாதையைச் சுற்றியுள்ள காந்தப்புலத்தையும், அம்மூடப்பட்டப் பாதையில் பாயும் கடத்து மின்னோட்டம் மற்றும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தையும் தொடர்புபடுத்துகிறது.
ஆம்பியர்-மேக்ஸ்வெல் விதி
இங்கு \( \vec{B}\) என்பது காந்தப்புலமாகும். இவ்விதி கடத்து மின்னோட்டம் மற்றும் இடப்பெயர்ச்சி மின்னோட்டம் இரண்டுமே காந்தப்புலத்தை உருவாக்கும் எனக் காட்டுகிறது. இந்த நான்கு சமன்பாடுகள் மின்னியக்கவியலின் மேக்ஸ்வெல் சமன்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. இச்சமன்பாடுகள் மின்காந்த அலைகளின் இருப்பை உறுதி செய்கின்றன.
விண்மீன்கள், விண்மீன் தொகுப்புகள், கோள்கள் போன்றவற்றைப் பற்றிய புரிதல், இவ்வாறு பொருட்களிலிருந்து வெளியிடப்படும் மின்காந்த அலைகளை ஆய்வு செய்வதாலேயே ஏற்படுகின்றது என்றால் அது மிகையல்ல.
45.
டேஞ்சன்ட் விதி
ஒன்றுக்கொன்று செங்குத்தாகச் செயல்படும் சீரான இரண்டு காந்தப்புலங்களுக்கு நடுவே தொங்கவிடப்பட்டுள்ள காந்த ஊசி, இவ்விரண்டு புலங்களின் தொகுபயன் புலத்தின் திசையில் நிற்கும்.
டேஞ்சன்ட் கால்வனோமீட்டரின் கம்பிச்சுருள் வழியாக மின்னோட்டம் பாய்வதால் ஏற்படும் காந்தப்புலத்தை B என்க. புவிக்காந்தப்புலத்தின் கிடைத்தளக் கூறு BH ஆகும்.இவ்விரண்டு காந்தப்புலங்களின் செயல்பாட்டால் காந்தஊசி கிடைத்தளக்கூறு BH உடன் \(\theta \) கோணத்தை ஏற்படுத்தி ஓய்வு நிலையை அடையும், எனவே
B = BH tan \(\theta\)
அமைப்பு
டேஞ்சன்ட் கால்வனோமீட்டரில் காந்தத்தன்மையற்ற வட்டவடிவ சட்டத்தின் மீது தாமிரக் கம்பிச்சுருள் சுற்றப்பட்டிருக்கும். இச்சட்டம் பித்தளை அல்லது மரத்தால் செய்யப்பட்டு கிடைத்தள மேடைக்கு (சுழல் மேடைக்கு) செங்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். படத்தில் காட்டியுள்ளவாறு இம்மேடை மூன்று சரிசெய்யும் கிடைமட்டத்திருகுகளைப் பெற்றுள்ளது. வெவ்வேறு எண்ணிக்கையில் அமைந்த இரண்டு மூன்று கம்பிச்சுருள்கள் டேஞ்சன்ட் கால்வனோமீட்டரில் பொருத்தப்பட்டுள்ளன. நாம் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தும் பெரும்பாலானவற்றில் 2 சுற்றுகள், 5 சுற்றுகள் மற்றும் 50 சுற்றுகள் கொண்ட வெவ்வேறு தடிமனுடைய கம்பிச் சுருள்கள், வெவ்வேறு வலிமைகொண்ட மின்னோட்டங்களை அளவிட பயன்படுத்தப்படுகின்றன. சுழல் மேடைக்கு நடுவே சற்றே மேலெழும்பிய அமைப்பு உள்ளது. அதில் காந்த ஊசிப்பெட்டி (விலகு காந்தமானி) பொருத்தப்பட்டுள்ளது. காந்த ஊசிப் பெட்டியின் மையமும், வட்டவடிவக்கம்பிச்சுருளின் மையமும் மிகச்சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்தும் வகையில் இவ்வமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மெல்லிய அலுமினியக்குறிமுள் ஒன்று பொருந்தும் வகையில் இவ்வமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மெல்லிய அலுமினியக் குறிமுள் ஒன்று காந்த ஊசிக்கு செங்குத்தாக, வட்ட அளவுகோலின் மீது சுழலும்படி இணைக்கப்பட்டுள்ளது. வட்ட அளவுகோல் நான்கு கால்வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு டிகிரி அளவீடுகள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த அளவீட்டினைப் பயன்படுத்தி வட்ட அளவுகோலின்மீது குறிமுள்ளின் விலக்கத்தை அளக்கலாம். இடமாறு தோற்றப்பிழையைத் தவிர்க்க, குறிமுள்ளுக்கு கீழே கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.
கருவியை பயன்படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
1. கருவியின் அருகில் உள்ள அனைத்து காந்தப்பொருட்களையும் அகற்ற வேண்டும்.
2. இரச மட்டத்தைப் பயன்படுத்தி (Spirit level), கிடைமட்டத் திருகுகளை சரிசெய்ய வேண்டும். அவ்வாறு சரிசெய்யும்போது மிகச்சரியாக காந்த ஊசி கிடைத்தளத்திலும், சட்டகாந்தத்தின்மீது சுற்றப்பட்ட கம்பிச்சுருள் செங்குத்தாகவும் அமையும்.
3. கம்பிச்சுருளின் செங்குத்து அச்சைப்பொருத்து அதனைச் சுழற்றி, கம்பிச்சுருளின் தளம் காந்தஊசிக்கு இணையாக வரும்படி அதனை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும்போது கம்பிச்சுருள் தொடர்ந்து காந்ததுருவத் தளத்திலேயே இருக்கும்.
4. காந்தஊசிப்பெட்டியைச் சுழற்றி, குறிமுள் 0o - 0o ஐக் காட்டும்படி அமைக்க வேண்டும்.
கொள்கை
டேஞ்சன்ட் கால்வனோமீட்டர் ஆய்வின் மின்சுற்று படத்தில் காட்டப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் வழியே மின்னோட்டம் பாயாத நிலையில் காந்தஊசி புவிக்காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறின் திசையிலேயே ஒருங்கமைந்திருக்கும். மின்சுற்றினை இயக்கும்போது கம்பிச்சுருளின் வழியே மின்னோட்டம் பாய்ந்து காந்தப்புலத்தை உருவாக்கும். தற்போது ஒன்றுக்கொன்று செங்குத்தாகச் செயல்படும் இரண்டு காந்தப்புலங்கள் உருவாகும். அவை
1. மின்னோட்டம் பாயும் கம்பிச்சுருளின் தளத்திற்குச் செங்குத்தாக செயல்படும் காந்தப்புலம் (B)
2. புவி காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு (BH).
ஒன்றுக்கொன்று செங்குத்தாகச் செயல்படும் இவ்விரண்டு காந்தப்புலங்களுக்கு நடுவே கூர்முனையில் பொருத்தப்பட்டுள்ள காந்த ஊசி \(\theta\) கோண அளவு விலகலை ஏற்படுத்தும். சமன்பாட்டில் குறிப்பிட்டுள்ள டேஞ்சன்ட் விதியிலிருந்து
B = BH tan \(\theta\)
46.

47.
(i) R ஆரமும் Q மின்னூட்டமும் கொண்ட, சீரான மின்துகள் பரவல் பெற்ற உள்ளீடற்ற கோளம் ஒன்றைக் கருதுவோம், காஸ் விதியைப் பயன்படுத்தி கோளத்திற்கு வெளியேயும் உள்ளேயும் உள்ள புள்ளிகளில் மின்புலத்தைக் கருதுவோம்.
(ii) நேர்வு (அ) கோளத்திற்கு வெளியில் உள்ள புள்ளியில் (r > R)
(iii) கோளத்தின் மையத்திலிருந்து r தொலைவில் கோளத்தின் வெளியே உள்ள புள்ளி P ஐக் கருதுவோம்.
(iv) மின்துகள்கள் கோளத்தின் புறப்பரப்பில் சீராக பரவியுள்ளன (கோளகச் சமச்சீர் தன்மை). ஆகவே Q > 0 எனில் மின்புலம் ஆர வழியே வெளிநோக்கிய திசையிலும் Q < 0 எனில் ஆர உள்நோக்கிய திசையிலும் இருக்கிறது.
(v) r ஆரம் கொண்ட கோள வடிவ காஸியன் பரப்பினைக் கருதுவோம். இப்பரப்பினால் சூழப்படும் மின்துகள்களின் மொத்த மின்னூட்டம் Q என்க. காஸ் விதியைப் பயன்படுத்தி
(vi) காஸியன் பரப்பின் அனைத்து புள்ளிகளிலும் மின்புலம் (\(\vec { E } \)) பரப்பளவுக்கூறும் (d\(\vec { A } \) ) ஒரே திசையில் (வெளிநோக்கிய திசையில், செங்குத்தாக) அமைகின்றன.
(vii) மின்துகள் நிலையமைப்பின் கோளகச் சமச்சீர் தன்மையால் காஸியன் பரப்பில் உள்ள அனைத்து புள்ளிகளிலும் \(\vec { A } \) ன் எண்மதிப்பும் சமமாகவே இருக்கும்.
எனவே
ஆனால் \(E.4\pi { { r }^{ 2 } }=\frac { Q }{ { { \varepsilon }_{ o } } } \)
\(E.4\pi { { r }^{ 2 } }=\frac { Q }{ { { \varepsilon }_{ o } } } \)
\(E=\frac { Q }{ 4\pi { \varepsilon }_{ o } } \)
வெக்டர் வடிவில் \(\vec { A } =\frac { Q }{ 4\pi { \varepsilon }_{ o }{ r }^{ 2 } } \hat { r } \)...(3)
(viii) நேர்வு (ஆ): கோளத்தின் புறப்பரப்பில் உள்ள புள்ளியில் (r = R)
கோளக் கூட்டின் புறப்பரப்பில் உள்ள புள்ளிகளுக்கு (r = R) மின்புலமானது.
\(\vec { A } =\frac { Q }{ 4\pi { \varepsilon }_{ o }{ R }^{ 2 } } \hat { r } \) ....(4)
நேர்வு (இ): கோளத்திற்கு உள்ளேயுள்ள புள்ளியில் r < R
\(\oint { \vec { E } .\vec { dA } = } \frac { Q }{ { \varepsilon }_{ o } } \)
\(E4\pi { { r }^{ 2 } }=\frac { Q }{ { { \varepsilon }_{ o } } } \)
Q = 0
E = 0
இந்த காஸியன் பரப்புக்குள்ளே எந்த ஒரு மின்துகளும் இல்லாததால் Q = 0. எனவே, சமன்பாடு )-ன் படி E = 0 (r < R) மேற்பரப்பின் மீது மின்துகள்கள் சீராக பரவப் பெற்ற உள்ளீடற்ற கோளத்தின் உள்ளே அமைந்துள்ள அனைத்து புள்ளிகளுக்கும் மின்புலம் சுழியே.
48.
\(d = \frac{xa}{1.22\lambda}\\ \lambda = 500 = 500 \times 10^{-9}m\\ x = 3 mm = 3 \times 10^{-3}m\\ a = 1 mm = 1 \times 10^{-3}m\\ d = \frac{3 \times \ 10^{-6}}{1.22 \times 500 \times 10^{-9}}\\ = \frac{3 \times 1 \times 10^{-6}}{6.10 \times 10^{-7}}\\ d = \frac{30}{6.1} = 5m\)
49.
(c)
50.
\(\frac{hc}{\lambda}=\pi+K.E .....(1)\\ \frac{2hc}{\lambda} = \pi+ K.E ....(2)\\ (1) \times 3\\ \frac{3hc}{\lambda}=3\pi+3K.E ...(3)\\ (3) - (2)\\ \frac{hc}{\lambda} = 2\pi\\ \pi = \frac{hc}{2\lambda}\)
51.
(c)
வழித்தடத்தில்
52.
\(\frac{1}{4\pi \epsilon_0}\frac{q_1}{q_2}=\frac{1}{2}mv^2 = qv\\ 9 \times 10^9 \times \frac{Ze \times 2e}{r_o}=2e \times V\\ r_o= 9\times 10^9 \times \frac{Ze \times 2e}{2eV}=9 \times 10^9 \times \frac{Ze}{V}\\ r_0 = 9 \times 10^9 \times Z \times \frac{1.6 \times 10^{-19}}{V} = 14.4 \frac{Z}{V}\)
53.
(a)
0.7 V
54.
(a)
1.141 x 10-8 T
55.
(a)
2H
56.
(d)
Q மற்றும் C
57.
(a)
6 Ω
58.
(a)
தென்முனை, வடமுனை
59.
(d)
2rBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்
60.
\(U=\frac{1}{4\piε_0}\frac{q_1q_2}{r_{12}}\)
\(i) U=\frac{1}{4\piε_0}\frac{Q(-Q)}{r}=\frac{1}{4\piε_0}[\frac{-Q^2}{r}]\)
\(ii) U=\frac{1}{4\piε_0}\frac{(-Q)(-Q)}{r}=\frac{1}{4\piε_0}[\frac{Q^2}{r}]\)
\(iii) U=\frac{1}{4\piε_0}\frac{Q(2Q)}{r}=\frac{1}{4\piε_0}[\frac{2Q^2}{r}]\)
\(iv) U=\frac{1}{4\piε_0}\frac{Q(-2Q)}{2r}=\frac{1}{4\piε_0}[\frac{-Q^2}{r}]\)
மதிப்புகளிலிருந்து, 1 = 4 < 2 < 3
61.
Bo = 3 x 10-6T
மின்புலத்தின் மதிப்பு, Eo = Boc
Eo = 3 x 10-6 x 3 x 108 = 900 V m -1
62.
லாரன்ஸ் விசை \(B=\frac { { \mu }_{ ° }I_ 2}{ { 2\pi r }}\)
\(\frac {F}{l}=\frac { { \mu }_{ ° }I_ 1I_ 2}{ { 2\pi r }}\)
\(B=\frac { 8N{ \mu }_{ ° }I }{ { 5 }^{ 3 / 2 }R } \)
63.
வட்டத்தின் சுற்றளவு = 2πr = 2π x 1 = 2π
மின்தடை = 2 x 2π
மின்தடை = 4π/2 = π/2 Ω
∴ தொகுபயன் மின்தடை = \(\frac {2π \times 2π}{2π + 2π} = \frac {4π^2}{4π} \)= exe π Ω
64.
b) பாயிண்டிங் வெக்டர் - \(\vec { S } ={ C }^{ 2 }{ \varepsilon }_{ o }(\vec { B } \times \vec { E } )\)
65.
d) மின்னூட்டம் பெற்ற சீரான கோளம் ஒன்றின் மின்னழுத்தம் - அவற்றின் ஆர மதிப்பில் எதிர்த் தகவில் மாறும்
66.
அ) மின்னியக்கு விசை - செயல்படும் விசை ஏனெனில் மின்னியக்கு விசை என்பது மின்னழுத்த வேறுபாடு
67.
போர் மேக்னெட்டான் - \(\frac {4\pi m }{eh}\)
68.
ஈ) நீரியல் தடுப்பி
69.
c) \({ \mu }_{ o }{ I }_{ o }\)
70.
(d) AC மின்னியற்றி
71.
ஜூல் விதி ஏனெனில் முதல் மூன்றும் கிர்க்காஃப் விதிகளை சேர்ந்தது.
72.
உயர்ந்த காந்த தேக்குதிறன் - நிலையான காந்தத்தின் பண்பு மற்றது மின்காந்தங்களின் பண்புகள்
73.
\(\\ \\ \\ \\ \\ \overrightarrow { J } =\frac { { ne }^{ 2 }\tau }{ m } \overrightarrow { E } \)
74.
வெபர்
75.
( )
மின்காந்த தூண்டல்
76.
( )
96 - 99%
77.
( )
\(\frac { U }{ C } \)
78.
( )
கருத்தியல் ரீதியாக மின்காந்த அலையினை உறுதி செய்தவர்
79.
( )
பெருமம்
80.
( )
மின்னூட்டங்களின் தொடர் பரவல்
81.
( )
கிர்க்காஃப் விதிகள்
82.
( )
நிலையாக இருக்கும்
83.
d) பொருளின் தன்மை - உட்கவர் நிறமாலை
84.
அ) வீட்டு உபயோகச் சாதனங்கள் - பக்க இணைப்பு
85.
இணைதட மின்தடை - கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் இணைத்தல்
86.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
87.
a) A சரி, R தவறு
88.
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
89.
ஆ) (R) ஆனது (A) ஐ விளக்குகிறது
90.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது.
91.
இ) மின்மாற்றி AC - யில் மட்டும் செயல்படும்.
92.
ஈ) அலைபேசி மின்னேற்றம் அடைகிறது.
93.
வாக்கியம் (iii) மட்டும் சரியானது.
94.
ஆ) தூண்டப்பட்ட மின்னியக்கு விசை மின்னோட்டத்தை உருவாக்கும்.
95.
வாக்கியம் (ii) மட்டும் தவறானது.
96.
b) மூலக்கூறு நிறமாலை கூர்மையுடன் ஒரு பகுதியிலும், மறுபுறம் செல்லச் செல்ல மங்களாகவும் இருக்கும்
97.
(d) I, II மற்றும் III
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards