12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Physics Important Question )
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
அதிக தொலைவில் உள்ள ஒரு மூலத்திலிருந்து வெளியாகும் 600 nm அலைநீளம் கொண்ட ஒளிக்கற்றை, 1 mm அகலம் உடைய ஒற்றைப் பிளவின் மீது விழுகிறது. இதனால் உருவாகும் விளிம்பு விளைவின் வடிவமைப்பு 2 m தொலைவிலுள்ள திரையில் பார்க்கப்படுகிறது. மையப் பொலிவு வரிக்கு இருமருங்கிலும் காணப்படும் முதல் கருமைவரிகளுக்கு இடையேயான தொலைவு எவ்வளவு?
2.
ஒளியிழை பற்றிச் சிறு குறிப்பு வரைக.
3.
எலக்ட்ரான் அலை இயல்பை விளக்கும் சோதனை ஒன்றினைக் குறிப்பிடுக. எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தும் இச்சோதனையில் எந்த நிகழ்வு உற்று நோக்கப்படுகிறது?
4.
\(_{ 47 }^{ 108 }{ Ag }\) அணுக்கருவின் நிறை இழப்பு மற்றும் ஒரு நியூக்ளியானுக்கான பிணைப்பாற்றல் ஆகியவற்றைக் கணக்கிடவும். (\(_{ 47 }^{ 108 }{ Ag }\) Agன் அணு நிறை = Ag = 107.905949 u)
5.
தரப்பட்டுள்ள மின்சுற்றில் இரண்டு நல்லியல்பு டையோடுகள் படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளன. மின்தடை R1 வழியே பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

6.
ஒரு ஜெட் விமானம் மேற்கு நோக்கி 1800 km/h வேகத்தில் செல்கிறது. விமானத்தின் இறக்கைகளுக்கு இடையே 25 m நீளத்தில் மின்னழுத்தங்களின் வேறுபாடு என்ன? அந்த இடத்தில் புவிக்காந்தப்புலம் 5 x 10-4 T மற்றும் கோணம் (dip angle) 300 என்க.
7.
மைக்ரோ அலையானது சமைக்கும் பொருளினுள் உள்ள நீரை சிறப்பாக சூடேற்ற தேவையான நிபந்தனைகளை கூறு
8.
மின் மற்றும் இயந்திர அளவுகளுக்கிடையேயான ஒப்புமைகளைக் கூறு.
9.
தொடரிணைப்பில் மின்தேக்கிகள் பற்றி விவரி
10.
அலுமினியம் மற்றும் தாமிரமானது சமமான நீளமும், கண்டுபிடிக்கப்பட்ட மின்தடையானது சமமாகும். அதனுடைய ஆரங்களின் தகவானது 1 : 3, அதனுடைய மின்தடை எண்களின் தகவைக் கணக்கிடுக.
11.
தயக்க இழப்பு விவரி.
12.
பெரும மதிப்பு 20 A கொண்ட ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் 60° கணநேர மதிப்பு, சராசரி மதிப்பு மற்றும் RMS மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுக.
13.
AC மின்னியற்றியின் நிலையான சுருளி – சுழலும் புல அமைப்பின் நன்மைகளைப் பட்டியலிடுக.
14.
படத்தில் காட்டியுள்ளவாறு நேரான கடத்தும் கம்பியில் பாயும் மின்னோட்டம் i குறைகிறது எனில், அதன் அருகில் வைக்கப்பட்டுள்ள உலோக சதுரச்சுற்றில் தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையைக் காண்க.
15.
மின்தடை எண் வரையறு.
16.
காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?
17.
q மின்னூட்டம் பெற்ற துகளொன்று \(\vec { B } \) காந்தப்புலத்தில் \(\vec { v } \) என்ற திசைவேகத்தில் நேர்க்குறி y – திசையில் செல்கிறது. பின்வரும் நிபந்தனைகளின்படி லாரன்ஸ் விசையைக் கணக்கிடுக.
(அ) காந்தப்புலம் நேர்க்குறி y – திசையில் உள்ளபோது
(ஆ) காந்தப்புலம் நேர்க்குறி z – திசையில் உள்ளபோது
(இ) துகளின் திசைவேகத்துடன் θ கோணத்தை ஏற்படுத்தும் காந்தப்புலம் zy தளத்தில் உள்ளபோது. மேற்கண்ட ஒவ்வொரு நிபந்தனைகளிலும் காந்தவிசையின் திசையினைக் குறிப்பிட்டு காட்டுக.
18.
சீரான காந்தப்புலத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தமொன்றின் அலைவு நேரம் \(T=2\pi \sqrt { \frac { I }{ { p }_{ m }B } } \) வினாடி என நிறுவுக. இங்கு I என்பது சட்டகாந்தத்தின் நிலைமத்திருப்புத்திறன், pm என்பது காந்தத்திருப்புத்திறன் மற்றும் B என்பது காந்தப்புலம்.
19.
படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து ஒளிமின்னோட்டம் எவ்வாறு மாறுபடுகிறது?
20.
கருந்துளைகள் என்றால் என்ன?
21.
நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் வேறுபடுத்துக.
22.
கிளர்வு ஆற்றல் என்றால் என்ன ?
23.
RADAR என்பது எதனைக் குறிக்கிறது?
24.
NPN மற்றும் PNP டிரான்சிஸ்டர்களில் சார்புபடுத்தும் முறைகளைப்பற்றி விவாதி.
25.
x - கதிர்கள் எவ்வாறு உருவாகிறது?
26.
திறன் காரணிக்கான மூன்று வரையறைகளை எழுது.
27.
மின்தேக்கிகளின் பயன்பாடுகளை எழுதுக
28.
வீடுகளில் மின்சுற்று துண்டிப்பான்கள் [Trippers] எவ்வாறு பயன்படுகிறது?
29.
மின்காந்தங்களை உருவாக்குவதற்கு ஏற்ற பொருட்களின் தன்மையை தருக.
30.
சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.
31.
மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் வீச்சுகள் முறையே 3 × 104 N C-1 மற்றும் 2 × 10-4 T கொண்ட, ஊடகத்தின் வழியே செல்லும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.
32.
ஒரு மீட்டர் சமனச்சுற்று ஆய்வில் 15 Ω என்ற படித்தர மின்தடையாக்கி வலது இடைவெளியில் இணைக்கப்பட்டுள்ளது. சமன்செய் நீளங்களின் விகிதம் 3 : 2 எனில் மற்றொரு இடைவெளியில் உள்ள மின்தடையாக்கியின் மதிப்பைக் காண்க.
33.
சம மின்னழுத்தப்பரப்பு என்றால் என்ன?
34.
நிறமாலைமானி ஒன்றின் வெவ்வேறு பாகங்களைக் கூறி, நிறமாலைமானியின் தொடக்கச் சீரமைவுகளைப் பற்றி விளக்குக.
35.
எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளத்திற்கான சமன்பாட்டினைப் பெறுக.
36.
மருத்துவ நோயறிதல் மற்றும் சிகிச்சையின் சமீபத்திய வளர்ச்சியைப் பற்றிய கருத்தைக் கூறுக.
37.
அணுக்கரு இணைவினை விளக்கி விண்மீன்களில் ஆற்றல் உருவாதலை விரிவாக எழுதுக.
38.
GPS பற்றி நீ அறிந்து கொண்டது யாது? GPS இன் சில பயன்பாடுகளை எழுதுக.
39.
ஒரு டிரான்சிஸ்டர் சாவியாக செயல்படுவதை விவரி.
40.
இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி
41.
0.12 m ஆரம் கொண்ட கோள வடிவ கடத்தியின் பரப்பு முழுவதும் 1.6 x 10-7 C மின்னூட்டம் சீராகப் பரவியுள்ளது.
i) கூட்டின் உள்ளே
ii) கூட்டின் மீது
iii) கூட்டின் மையத்திலிருந்து 0.18 m தொலைவில் உள்ள புள்ளியில் மின்புலம் என்னவாகும்?
42.
மின்னழுத்தமானியைப் பயன்படுத்தி மின்கலத்தின் அகமின்தடையைக் காணும் முறையை விவரி.
43.
மென் மற்றும் வன் ஃபெர்ரோ காந்தப் பொருள்களின் பண்புகளை ஒப்பிடுக.
44.
h = 1 mm இடைவெளி கொண்ட 5 V மின்னழுத்த வேறுபாடு அளிக்கப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றின் தட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு எலக்ட்ரானும், ஒரு புரோட்டானும் விழுகின்றன

(அ) எலக்ட்ரான் மற்றும் புரோட்டானின் பறக்கும் நேரத்தைக் கணக்கிடுக.
(ஆ) நியூட்ரான் ஒன்று விழுந்தால் அதன் பறக்கும் நேரம் எவ்வளவு?
(இ) இம்மூன்றில் எது முதலில் அடித்தட்டை அடையும்? (mp = 1.6 × 10-27kg, me = 9.1 × 10-31kg மற்றும் g = 10 m s-2)
45.
மின்காந்த அலைகளின் மூலங்களைப் பற்றி விளக்கவும்.
46.
மீட்டர் சமனச்சுற்றை பயன்படுத்தி தெரியாத மின்தடையை காண்பதை விளக்குக.
47.
மின்புலத்தை வரையறுத்து அதன் பல்வேறு தன்மைகளை விவாதிக்க.
48.
படத்தில் காட்டப்பட்டுள்ள யங் இரட்டைப் பிளவு ஆய்வில் ஒரு துளை கண்ணாடி ஒன்றினால் மூடப்படுகிறது எனில், மையப் பெருமம் எங்கு அமையும்?
கீழ்நோக்கி இடம்பெயரும்
மேல்நோக்கி இடம்பெயரும்
அங்கேயே தொடர்ந்து இருக்கும்
கொடுக்கப்பட்ட விவரங்கள் போதுமானதல்ல
49.
A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 Å அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் / உலோகங்கள் ______.
A மட்டும்
A மற்றும் B
அனைத்து உமிழும்
ஏதுமில்லை
50.
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு நிறையை அளிக்கும் துகள்_______.
ஹிக்ஸ் துகள்
ஐன்ஸ்டீன் துகள்
நானோ துகள்
பேரளவு துகள்
51.
52.
ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது____
பரப்பியல்
பண்பேற்றியல்
வழித்தடத்தில்
ஏற்பியல்
53.
பின்வருவனவற்றில் எது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்.




54.
மின்தேக்கி ஒன்றின் மின்பாய மாற்றம் 0.2 x 10-6 wb s-1 எனில், இடப்பெயர்ச்சி மின்னூட்டம் _______
18 mA
0.18 mA
0.018 mA
180 mA
55.
ஒரு 50 mH கம்பிச்சுருளில் 4A மின்னோட்டம் பாய்கிறது எனில் கம்பிச்சுருளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ________
0.4 J
4.0 J
0.8 J
0.04 J
56.
சீரற்ற மின்புலத்தில் வைக்கப்படும் மின்இருமுனை உணர்வது_______
விசை மற்றும் திருப்புவிசை
விசை மட்டும்
திருப்பு விசை மட்டும்
திருப்பு விசை அல்ல மொத்த விசையும் அல்ல
57.
நேர்க்குறி தாம்ஸன் விளைவு _________ நடைபெறும்.
துத்தநாகம்
நிக்கல்
கோபால்ட்
பாதரசம்
58.
அச்சுக்கோட்டின் (B அச்சு) எண்மதிப்பு, நடுவரைக் கோட்டின் (B நடுவரை) எண் மதிப்பைப் போன்று _________ மடங்காக இருக்கும்.
சமம்
இரண்டு
மூன்று
ஒன்றுமில்லை
59.
ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே i = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin(100πt ) A மற்றும் v = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin\(\left( 100\pi t +\frac { \pi }{ 3 } \right) \) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)_____ .
\(\frac 14\)
\(\frac {\sqrt 3}4\)
\(\frac 12\)
\(\frac 18\)
60.
வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம், \(\vec { E }\) = 10 x \( \hat { i } \) நிலவுகிறது. Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம், VA என்பது x = 2 m தொலைவில் மின்னழுத்தம் எனில் மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA இன் மதிப்பு _______.
10 V
– 20 V
+20 V
-10 V
61.
பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?
α - கதிர்கள்
β - கதிர்கள்
\(\gamma\) γ - கதிர்கள்
இவை அனைத்தும்
62.
q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன?
\(\frac {q }{m }\)
\(\frac {2q }{m }\)
\(\frac {q }{2m }\)
\(\frac {q }{4m }\)
63.
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை_____ .
R
2R
\(\frac{R}{4}\)
\(\frac{R}{2}\)
64.
a) அணுவின் நிறமாலை - தூயவரி நிறமாலை
b) சூரிய நிறமாலை - வரி நிறமாலை
c) மூலக்கூறு - பட்டை நிறமாலை
d) கார்பன் வில் - தொடர் உட்கவர் நிறமாலை
65.
| வரிசை I | வரிசை II | ||
| A | நேர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் | 1 | எதிர்க்குறி |
| B | எதிர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் | 2 | முடிவிலி |
| C | தான் இருக்கும் புள்ளியில் மின்னூட்டம் ஒன்றின் மின்னழுத்தம் | 3 | நேர்க்குறி |
| D | மின்னூட்டம் பெற்ற சீரான கோளம் ஒன்றின் மின்னழுத்தம் | 4 | அவற்றின் ஆர மதிப்பில் எதிர்த் தகவில் மாறும் |
66.
| அ | மின்தடையாக்கிகள் தொடர் இணைப்பு - RS | - | R1+ R2 |
| ஆ | மின்தடையாக்கிகள் பக்க இணைப்பு | - | \({ R }_{ P }=\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } \) |
| இ | அக மின்தடை | - | \(r=\left( \frac { \xi -V }{ V } \right) R\) |
| ஈ | திறன் | - | P = VI |
67.
1. வடதுருவ ஒளித்தோற்றம் - வடதிசையில் ஒளி
2. தென் துருவ ஒளித்தோற்றம் - தென்திசையில் ஒளி
3. நீலம் - வெளிர் மஞ்சள் - மோதல்
4. ஊதா-சிவப்பு - நைட்ரஜன் மூலக்கூறுகள்
68.
அ) மின்தூண்டல் அடுப்பு
ஆ) சூழல் மின்னோட்ட தடுப்பி
இ) மின்காந்த தடையுறுதல்
ஈ) நீரியல் தடுப்பி
69.
a) x - கதிர்
b) காமா கதிர்
c) மைக்ரோ கதிர்
d) புற ஊதாக் கதிர்
70.
(a) தங்கம்
(b) வெள்ளி
(c) அலுமினியம்
(d) எபோனைட்
71.
1kWh,
1Js-1 ,
1000Wh,
3.6x106J
72.
பாஸ்பர் வெண்கலம், மெல்லிய கம்பி இழை, திருகுமுனை, D-க்கள் (Dees)
73.
ஃபாரடே விதி _____
74.
மின்தேக்கியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் _______
75.
ஓசோன் படலத்தின் உட்கவரப்படும் மின்காந்த அலை ____________
76.
\(\frac { 1 }{ \sqrt { { \mu }_{ o } } } { B }^{ 2 }\)___
77.
இரு மின்னூட்டங்களுக்கான நிலைமின்னாற்றல் அம்மின்னூட்டங்களின் _______ நேர்த்தகவில் அமையும்
78.
மின்னூட்ட நீள் அடர்த்தி_____
79.
பாதரசமானது _________ வெப்பநிலையில் மீக்கடத்தும் தன்மையை வெளிப்படுத்தும்.
80.
மின்னோட்ட அடர்த்தி [J]_______
81.
காந்தப்புலத்திலுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தி ஒன்றின் மீது செயல்படும் விசையின் திசையை _____ மூலம் அறியலாம்.
82.
டேஞ்சன்ட் விதி _______
83.
a) வெற்றிடத்தில் x - கதிரின் திசைவேகம் - 3 x 108 ms-1
b) ஊடகத்தில் x - கதிரின் திசைவேகம் - 3 x 108 ms-1
c) மின்காந்த அலை - மின் மற்றும் காந்த புலன்களில் விலக்கும்
d) மின்காந்த அலையின் மின்புலக்கூறு - EZ = E0 Sin(kz - ωt)
84.
கார்பன் மின்தடையாக்கிகளில் நிறக்குறியீடுகள்
அ) பழுப்பு நிற வளையம் - 0
ஆ) மஞ்சள் நிற வளையம் - 1
இ) வெள்ளி நிற வளையம் - 10%
ஈ) நிறமற்றது - 5%
85.
| 1 | சுழற்சி காந்த விகிதம் | = 8.78 x 1010Ckg-1 |
| 2 | ஒரு எலக்ட்ரானின் நிறை | = 9.11 x 1031 kg |
| 3 | பிளாங்க் மாறிலி | = 6.63 x 10-24 Js |
| 4 | போர் மேக்னெட்டான் | = 9.27 x 10-34 Am2 |
86.
கூற்று: ஒரு கட்ட மின்னியற்றியை விட மூன்று கட்ட மின்னியற்றி அதிக திறனை உருவாக்குகின்றன.
காரணம்: மூன்று கட்ட மின்னியற்றி விலை மலிவானது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி
87.
கூற்று (A): (காஸ் விதி நிலை மின்னியல்), \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { dA } } \) = 0 (காஸ் விதி காந்தவியலின்)
காரணம் (R): ஏனெனில் தனித்த துகளின் இருக்க இயலாது. \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { dA } } \) = 0 ஏனெனில் தனித்த காந்த முனை இயக்க இயலாது
a) A சரி, R தவறு
b) A தவறு, R சரி
c) A மற்றும் R இரண்டும் சரி
d) A மற்றும் R இரண்டும் தவறு
88.
கூற்று: மின்புலத்தில் சமநிலையில் உள்ள மின்இருமுனை ஒன்றை நகர்த்தினால் அது பழைய சமநிலைக்கு திரும்பிவிடும்
காரணம்: மீள் திருப்புவிசை அவற்றை சமநிலைக்கு எடுத்து வரும்
a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
89.
கூற்று (A): நேர் மின்னூட்டமானது அதிகப்படியான மின்னழுத்திலிருந்து குறைவான மின்னழுத்தத்துக்கு செல்கிறது.
காரணம் (R): இந்த நேர்மின்னூட்டமானது பாயும் மின்னோட்டத்தை உண்டாக்கும்.
அ) (R) ஆனது (A) ஐ விளக்கவில்லை
ஆ) (R) ஆனது (A) ஐ விளக்குகிறது
இ) (A) மட்டுமே சரி: (R) ஆனால் தவறு
ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
90.
கூற்று: சைக்ளோட்ரான் எலக்ட்ரானை முடுக்கிவிக்க இயலாது.
காரணம்: எலக்ட்ரானின் நிறை மிக குறைவு.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறானது.
91.
அ) மின்மாற்றி DC - யில் செயல்படும்.
ஆ) மின்மாற்றி AC - யை DC - யாக மாற்றும்
இ) மின்மாற்றி AC - யில் மட்டும் செயல்படும்.
ஈ) மின்மாற்றி DC - யை AC - யாக மாற்றும்
92.
அ) ஓம் விதிக்கு உட்படும் பொருட்களுக்கு மின்தடை மாறிலியாகவும் செய்கிறேன்.
ஆ) V-I வரைபடம் நேர்கோடாக அமையாது இருக்கும் ஓம் விதிக்கு உட்படும் பொருட்களுக்கு
இ) ஓம் விதிக்கு உட்படாத பொருட்களுக்கு மின்தடை மாறிலியாகவும் அமையாது.
ஈ) V-I வரைபடம் நேர்கோடாக அமையும் ஓம் விதிக்கு உட்படாத பொருட்களுக்கு.
93.
i) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் காந்தத்தன்மையுள்ள வட்டவடிவ சட்டத்தின் மீது தாமிரக்கம்பிச் சுருள் சுற்றப்பட்டிருக்கும்.
ii) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் வெவ்வேறு எண்ணிக்கையில் அமைந்த ஒரு கம்பிச்சுருள் பொருத்தப்பட்டிருக்கும்.
iii) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் மெல்லிய அலுமினியக் குறிமுள்ள ஒன்று காந்த ஊசியில் இணைக்கப்பட்டுள்ளது.
iv) டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் சட்டம் எஃகு உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளது.
94.
அ) மின்தூண்டி ஆற்றல் சேமிக்க உதவும் சாதனம்.
ஆ) LC அலைவுகளில் மொத்த ஆற்றல் மாறாது.
இ) ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும் போது மற்றொரு சுருளில் மின்னியக்கு விசை தூண்டப்படுவது தன்மின்தூண்டல் ஆகும்.
ஈ) செய்யப்பட்ட வேலை, மின்தூண்டியில் காந்த நிலை ஆற்றலாக சேமிக்கப்படும்.
95.
i) ஒரு மின்சுற்றில் அம்மீட்டரை ஒரு இணைத் தொடரில் இணைக்க வேண்டும்.
ii) இணைதட மின்தடை என்பது அதிக மின்தடை ஒன்றை கால்வனோ மீட்டருடன் பக்க இணைப்பில் இணைத்தல் என்பதாகும்.
iii) ஒரு மின்சுற்றில் வோல்ட் மீட்டரை பக்க இணைப்பில் இணைத்தல் வேண்டும்.
iv) ஒரு நல்லியல்பு அம்மீட்டர் சுழி மின்தடையைப் பெற்றிருக்கும்.
96.
a) அகச்சிவப்பு கதிர்கள் கைபேசியில் பயன்படுகிறது
b) மூலக்கூறு நிறமாலை கூர்மையுடன் ஒரு பகுதியிலும், மறுபுறம் செல்லச் செல்ல மங்களாகவும் இருக்கும்
c) குளிர்விக்கப்பட்ட வாயுக்களின் வழியே பாயும் உயர்வெப்ப திண்ம பொருளினால் உருவாகும் நிறமாலை பட்டை நிறமாலை
d) பிரான்ஹோபர் வரி தனிமங்கள் கண்டறிய உதவுகின்றன
97.
மின்தேக்கியில் சேமித்து வைக்கும் ஆற்றல் \({ V }_{ E }=\frac { { Q }^{ 2 } }{ 2C } \) இவற்றில் எந்த கூற்று தவறு
I. மின்னூட்டம் சேமிக்கச் செய்யும் வேலை நிலைமின்னாற்றலாக கடத்தியில் \({ V }_{ E }=\frac { { Q }^{ 2 } }{ 2C } \) என உள்ளது
II. மின்தேக்கியில் மொத்த மின்னூட்டம் Q
III. தட்டு ஒன்றின் மொத்த மின்னூட்ட மதிப்பு Q
(a) I மட்டும்
(b) II மட்டும்
(c) I மற்றும் II
(d) I, II மற்றும் III
1.
\(n\lambda =dsin\theta \)
முதல் இருள் வரிக்கு
n = 1 சிறுமத்திற்கு
\(dsin\theta =\lambda \), இங்கு CO = Nc (தோராயமாக)
படத்திலிருந்து, \(sin\theta =\cfrac { x/2 }{ D } =x/2D\)
\(sin\theta =\lambda /d\)
\(\lambda /d=x/2D\ \therefore x=\cfrac { 2D\lambda }{ d } =\cfrac { 2\times 2\times 600\times { 10 }^{ -9 } }{ { 10 }^{ -3 } } \)
\(x=2.4\times { 10 }^{ -3 }m=2.4mm\)
மையப் பொலிவின் இரு மருங்கும் அமைந்துள்ள முதல் இருள் வரிகளுக்கு இடையேயானத் தொலைவு = 2.4 mm.
2.
(i) முழு அக எதிரொளிப்பு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, ஒளியிழைகளின் வழியே செய்திகளை அனுப்ப முடியும்.
(ii) ஒளியிழையின் உட்புறப்பகுதிக்கு உள்ளகம் (core) என்றும் வெளிப்புறப்பகுதிக்கு உறைப்பூச்சு (cladding or sleeving) என்றும் பெயர்.
(iii) முழு அக எதிரொளிப்பு ஏற்பட உள்ளகப்பொருளின் ஒளிவிலகல் எண், வெளிப்புற உறைப்பூச்சின் ஒளிவிலகல் எண்ணைவிட அதிகமாக இருக்க வேண்டும்.
(iv) ஒளிவடிவில் உள்ள செய்தியை, ஒளியிழையின் உள்ளகம் மற்றும் உறைப்பூச்சும் சந்திக்கும் பரப்பின் உட்புறமாக ஒரு குறிப்பிட்டப் படுகோணத்தில், அதாவது, மாறுநிலைக்கோணத்தைவிட அதிக படுகோணத்தில் செல்லும்போது, ஒளியிழையின் மொத்த நீளத்திற்கும் எவ்விதமான ஒளியிழப்பும் அடையாமல் தொடர்ந்து முழு அக எதிரொளிப்பு அடைந்து மறு முனையை அடையும்.
(v) உள்ளகத்தின் வழியே செல்லும் ஒளி, அதன் செறிவில் குறிப்பிடத்தக்க அளவில் இழப்பு ஏதும் ஏற்படாமல் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்குச் செல்லும்.
(vi) ஒளியிழை மடக்கப்பட்ட நிலையிலும் உள்ளகமும் உறைப்பூச்சும் சந்திக்கும் பரப்பின் மீது விழும் ஒளியின் படுகோணம் எப்போதும் மாறுநிலைக் கோணத்தைவிட அதிகமாகவே இருக்கும்.
(vii) ஒவ்வொரு எதிரொளிப்பின் போதும் முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதை இது உறுதிப்படுத்துகிறது
\({ i }_{ n }={ sin }^{ -1 }\left( \sqrt { { n }_{ 1 }^{ 2 }-{ n }_{ 2 }^{ 2 } } \right) \)
3.
டேவிசன் - ஜெர்மர் சோதனை :
படிகமாக உள்ள திண்மங்கள் மீது படும் எலக்ட்ரான் கற்றைகள் விளிம்பு விளைவு அடையும் நிகழ்வு உற்று நோக்கப்படுகிறது. பருப்பொருள் அலைகளுக்கு திண்மப்படிகம் முப்பரிமாண விளிம்பு விளைவு கீற்றணியாக செயல்படுவதால், எலக்ட்ரான் கற்றைகள் விளிம்பு விளைவு அடைந்து குறிப்பிட்ட திசையில் செல்கின்றன.
4.
கொடுக்கப்பட்டது:
A = 108
Z = 47
N = 108-47 = 61
mp = 1.007825 u
mn = 1.008665 u
M = 107.905949 u
\(\Delta m=Zm_{ p }+Nm_{ n }-M\)
\(BE=\Delta m\times 931MeV\)
\(\bar { BE } =\cfrac { BE }{ A }\)
(ஆ) Δm = (47 x 1.007825 + 61 x 1.008665 - 107.905949)
Δm = 47.367775 + 61.528565 - 107.905949
Δm = 108.89634 - 107.905949
Δm = 0.990391 u
(ஆ) BE = 0.990391 x 931 MeV = 922.0540 Mev
(இ) \(\bar { BE } =\cfrac { 922.0540 }{ 108 } =8.315MeV\)
5.
V = 10 V, R1 = 2 \(\Omega\), R3 = 2 \(\Omega\)
டையோடு D1 பின்னோக்கு சார்பு அதனால் மின்னோட்டம் கடத்த இயலாது. டையோடு DL பின்னோக்கு சார்பு அதனால் மின்னோட்டம் கடத்த முடியும்.
R = R1 + R3 = 2 + 2 = 4 \(\Omega\)
\(I=\frac{V}{R}=\frac{10}{4}=2.5 A\)
6.
வேகம் v = 1800 km/h = 500m/s
இறக்கை நீளம் l = 25m
புவி காந்தப்புலத்தின் செங்குத்துக் கூறு
BV = B sin ઠ
= 5 x 10-4 sin30
= 2.5 x 10-4 T
இறக்கைகளுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு
e = BVlV
= 2.5 x 10-4 x 25 x 500
= 3.125V
7.
(i) மைக்ரோ அலை சமையல்கலனில், அலையின் அதிர்வெண் நீர் மூலக்கூறுகளின் ஒத்திசைவு அதிர்வெண்ணுக்கு சமமாகும்
(ii) ஏனெனில் அலையின் ஆற்றல் நீர் மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலாக மாறும்
(iii) அவை சமைக்கும் பொருள் வெப்பநிலையை போதுமான அளவு உயர்த்தும்
8.
| மின் அமைப்பு | இயந்திர அமைப்பு | |
|---|---|---|
| 1 | மின்னூட்டம் q | இடப்பெயர்ச்சி x |
| 2 | மின்னூட்டம் \(i=\frac { dq }{ dt } \) | திசைவேகம் \(v=\frac { dx }{ dt } \) |
| 3 | மின்தூண்டல் எண் L | நிறை m |
| 4 | மின்தேக்குத்திறனின் தலைகீழி \(\frac { 1 }{ c } \) | விசை மாறிலி k |
| 5 | மின் ஆற்றல் = 1/2 \(\left( \frac { 1 }{ c } \right) { q }^{ 2 }\) | நிலை ஆற்றல் = 1/2 kx2 |
| 6 | காந்த ஆற்றல் = 1/2 Li2 | இயக்க ஆற்றல் = 1/2 mv2 |
| 7 | மின் காந்த ஆற்றல் U = 1/2 \(\left( \frac { 1 }{ c } \right) { q }^{ 2 }\) + 1/2 Li2 | இயந்திர ஆற்றல் E = 1/2 kx2 + 1/2 mv2 |
9.
(i) மூன்று மின்தேக்கிகள் தொடரிணைப்பில் இணைக்கப்படுகிறது
(ii) C1, C2, C3 அவைகளின் தேக்குத்திறன் ஆகும்
(iii) V1, V2, V3 அவைகளின் மின்னழுத்த வேறுபாடு
V=V1 +V2+V3
\(\frac { q }{ { C }_{ 3 } } =\frac { q }{ { C }_{ 1 } } +\frac { q }{ { C }_{ 2 } } +\frac { q }{ { C }_{ 3 } } \)
\(\frac { 1 }{ { C }_{ S } } =\frac { 1 }{ { C }_{ 1 } } +\frac { 1 }{ { C }_{ 2 } } +\frac { 1 }{ { C }_{ 3 } } \)
(iv) பல மின்தேக்கிகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் பொழுது, அவற்றின் மொத்த மதிப்பின் தலைகீழானது, அவற்றின் தனித்தனியான தேக்குத்திறனின் தலைகீழ் மதிப்பின் கூடுதலுக்குச் சமம்
10.
\({ r }_{ 1 }:{ r }_{ 2 }=1:3\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } =\frac { 1 }{ 3 } \)
\(R=\frac { { \rho l }^{ { r }_{ 2 } } }{ { \pi r }^{ 2 } } \)
\({ R }_{ 1 }=\frac { { \rho }_{ 1 }l }{ { \pi r }_{ 1 }^{ 2 } } \quad { R }_{ 2 }=\frac { { \rho }_{ 2 }l }{ { \pi r }_{ 2 }^{ 2 } } \)
\({ R }_{ 1 }={ R }_{ 2 }\)
\(\frac { { \rho }_{ 1 }l }{ { \pi r }_{ 1 }^{ 2 } } =\frac { { \rho }_{ 2 }l }{ { \pi r }_{ 2 }^{ 2 } } \)
\(\frac { { \rho }_{ 1 } }{ { r }_{ 1 }^{ 2 } } =\frac { { \rho }_{ 2 } }{ { r }_{ 2 }^{ 2 } } \)
\(\frac { { \rho }_{ 1 } }{ { \rho }_{ 2 } } ={ \left( \frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \right) }^{ 2 }={ \left( \frac { 1 }{ 3 } \right) }^{ 2 }=\frac { 1 }{ 9 } \)
\(\frac { { \rho }_{ 1 } }{ { \rho }_{ 2 } } =\frac { 1 }{ 9 } \)
\({ \rho }_{ 1 }:{ \rho }_{ 2 }=1:9\)
11.
1. பொருளொன்றை காந்தமாக்கும் சுற்றின் போது வெப்ப வடிவில் ஆற்றல் இழக்கப்படும்.
2. இவ்வாற்றல் இழப்பிற்கு காரணம் பல்வேறு திசையில் மூலக்கூறுகளின் சுழற்சி மற்றும் ஒருங்கமைவாகும்.
3. ஒரு முழு சுற்றில் காந்தமாக்கப்படும் பொருளின் ஓரலகு பருமனுக்கான ஆற்றல் இழப்பு, தயக்கக் கண்ணியின் பரப்புக்குச் சமம். \(\Delta E=\oint { \overrightarrow { H } .\overrightarrow { dB } } \)
12.
கோணம் , \( \theta=60^{\circ}\)
மின்னோட்டத்தின் பெரும மதிப்பு , \(I_{P_m}=20 \mathrm{~A}\)
(i) மின்னோட்டத்தின் 60o கணநேர மதிப்பு
\(i =I_m \sin \theta \)
\(=20 \times \sin 60^{\circ}=\frac{20 \times \sqrt{3}}{2} \)
\(=10 \times 1.732 \)
\(i =17.32 \mathrm{~A}\)
(ii) மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு,
\(I_{\mathrm{av}}=0.637 I_m \)
\(I_{\mathrm{av}}=0.637 \times 20 \)
\(I_{\mathrm{av}}=12.74 \mathrm{~A}\)
(iii) RMS மதிப்பு,
\(I_{\mathrm{rms}}=0.707 I_m=0.707 \times 20 \)
\(I_{\mathrm{rms}}=14.14 \mathrm{~A}\)
13.
1) தூரிகைத் தொடர்புகளைப் பயன்படுத்தாமல், மின்னோட்டமானது நேரடியாக நிலையி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள முனைகளில் இருந்து பெறப்படுகிறது.
2) நிலையான சுருளிச் சுற்றை மின்காப்பு செய்வது எளிமையானதாகும்.
3) நழுவும் தொடர்புகளின் (நழுவு வளையங்கள்) எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நழுவும் தொடர்புகள் குறைந்த மின்னழுத்த நேர்த்திசை மின்னோட்ட மூலத்திற்கு மட்டுமே பயன்படுகின்றன.
4) சுருளிச் சுற்றுகள் இயந்திரவியல் தகைவின் காரணமாக உருக்குலைவதைத் தடுக்கும் வகையில் அதிக உறுதியாக அமைக்க முடியும்.
14.
வலக்கை விதியிலிருந்து நேரான கம்பியினால் உருவாகும் காந்தப்புலமானது அருகில் உள்ள சதுர சுற்றின் தளத்திற்கு செங்குத்தாக உள்நோக்கிய திசையில் உள்ளது. கம்பியில் பாயும் மின்னோட்டம் i குறைகிறது எனில், சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயமும் குறைகிறது. அதனால் சுற்றில் தூண்டப்படும் மின்னோட்டம் ஏற்கனவே உள்ள காந்தப்புலத்தின் திசையில் மற்றொரு காந்தப்புலத்தை உருவாக்கி, பாயக்குறைவை எதிர்க்கிறது. மீண்டும் வலக்கை விதியைப் பயன்படுத்தி, உள்நோக்கித் தூண்டப்பட்ட காந்தப்புலத்தின் திசையில் இருந்து தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை வலஞ்சுழி என்பதைக் காணலாம்.
15.
பொருளின் மின்தடை எண் என்பது ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பும் கொண்ட கடத்தியானது, மின்னோட்டத்திற்கு அளிக்கும் மின்தடை ஆகும்.
16.
காந்தமாக்கும் புலத்தினால் பொருளில் தூண்டப்பட்ட காந்தமாகும் செறிவிற்கும் (\(\overset { \rightarrow }{ M } \)), பொருளுக்கு அளிக்கப்பட்ட காந்தமாக்குப் புலத்திற்கும் |\(\overset { \rightarrow }{ H } \)| உள்ள விகிதமே காந்த ஏற்புத்திறனாகும்.
\({ x }_{ m }=\frac { |\overset { \rightarrow }{ M } | }{ |\overset { \rightarrow }{ H } | } ;\overset { \rightarrow }{ P_m }= q_m \overset { \rightarrow }{ d } \)
17.
துகளின் திசைவேகம் = \(\vec { v } =v\hat { j } \)
அ) காந்தப்புலம், நேர்க்குறி y திசையில் உள்ளது இதிலிருந்து \(\vec { B } =B\hat { j } \)
லாரன்ஸ் விசையிலிருந்து \(\vec { { F }_{ m } } =q(v\hat { j } \times B\hat { j } )=0\)
எனவே, மின்துகள் காந்தப்புலத்தின் திசையில் இயங்கும்போது அதன் மீது எவ்வித விசையும் செயல்படுவதில்லை.
(ஆ) காந்தப்புலம் நேர்க்குறி z – திசையில் உள்ளது இதிலிருந்து \(\vec { B } =B\hat { k } \)
லாரன்ஸ் விசையிலிருந்து,
\(\vec { { F }_{ m } } =q(v\hat { j } \times B\hat { k } )=qvB\hat { i } \)
எனவே, லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு qvB. மேலும் அதன்திசை நேர்க்குறி x திசையின் வழியே அமையும்.
(இ) zy தளத்திலுள்ள காந்தப்புலம், துகளின் திசைவேகத்துடன் θ கோணத்தை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து
\(\vec { B } =Bcos\theta \hat { j } +Bsin\theta \hat { k } \)
லாரன்ஸ் விசையிலிருந்து,
\(\vec { { F }_{ m } } =q(v\hat { j } )\times (B\cos\theta \hat { j } +B\sin\theta \hat { k } )\)
= qvB\(\sin\theta \hat { i } \)
18.
சீரான காந்தப்புலம் \(\vec { B } \) இன் திசைக்கு இணையாக சட்டகாந்தத்தை ஒருங்கமைப்பதற்காக, சட்டகாந்தத்தின் மீது செயல்படும் விலக்கத்திருப்பு விசையின் எண்மதிப்பு (பொருளை சுழற்றும் திருப்புவிசை)
\(\left| \vec { \tau } \right| \) = pm B sinθ
சட்டகாந்தத்தின் மீது செயல்படும் மீட்சித்திருப்புவிசையின் எண்மதிப்பு
\(\left| \vec { \tau } \right| =I\frac { d^{ 2 }\theta }{ { d }t^{ 2 } } \)
சமநிலை நிபந்தனையின்படி, விலக்கத் திருப்புவிசையின் எண்மதிப்பு மற்றும்
மீட்சித்திருப்பு விசையின் எண்மதிப்பு ஒன்றுக்கொன்று சமமாகவும் எதிரெதிர் திசைகளிலும் செயல்படும்.
எனவே, I\(\frac { d^{ 2 }\theta }{ { d }t^{ 2 } } \) = -pm B sinθ
19.
ஒளிமின்னோட்டமானது, அதாவது ஒரு வினாடியில் உமிழப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை படுகதிரின் செறிவிற்கு நேர்த்தகவில் அமையும்.
20.
சூரியனைப்போல் 20 மடங்கிலிருந்து 1 மில்லியன் மடங்கு வரை நிறை கொண்ட விண்மீன்களின் இறுதி நிலை கருந்துளையாகும். இது பெருத்த அடர்த்தியும் எந்த ஒரு துகளும் அல்லது ஒளியும் கூட அதிலிருந்து தப்பிச் செல்லாதவாறு மிக வலிமையான ஈர்ப்பு விசையை கொண்டுள்ளது. இதனால் அவை மனித கண்களுக்கு புலப்படாது. ஒவ்வொரு விண்மீன் திரளும் அதன் மையத்தில் கருந்துளையைக் கொண்டுள்ளது.
21.
நானோ அறிவியல் என்பது 1- 100 nm (1nm = 10-9 m) அளவுகள், வரை கொண்ட பொருள்களின் அறிவியல் ஆகும். பருப்பொருளானது நானோ பொருள்களாக பிரிக்கப்பட்டால் அவற்றின் இயற்பியல் பண்புகளில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அறிவது ஆகும்.
நானோ தொழில்நுட்பம் என்பது நானோ அளவில் கட்டமைக்கப்பட்ட பொருள்களின் வடிவமைப்பு, உற்பத்தி, பண்புக்கூறுகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளடக்கியது ஆகும்.
22.
எந்தவொரு குறைந்த ஆற்றல் நிறையிலிருந்தும் அதைவிட அதிக ஆற்றல் நிலைக்கு ஒரு எலக்ட்ரானை கிளர்வுறச் செய்ய தேவையான ஆற்றல் கிளர்வு ஆற்றல் எனப்படும்.
ஹைட்ரஜனின் முதல் கிளர்வு ஆற்றல் E1 = 10.2eV
ஹைட்ரஜனின் இரண்டாம் கிளர்வு ஆற்றல் EII = 12.1eV
23.
ரேடார் (RADAR) என்பது RAdio Detection And Ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும்.
24.
செயல்படும் முன்னோக்கு சார்பு நிலை:
இந்த வகைச் சார்பில் உமிழ்ப்பான் - அடிவாய் சந்தி முன்னோக்குச் சார்பிலும், ஏற்பான் - அடிவாய் சந்தி பின்னோக்குச் சார்பிலும் இருக்கும். டிரான்சிஸ்டரானது செயல்படும் நிலையில் அமையும், இப்போது டிரான்சிஸ்டர் பெருக்கியாக செயல்படும்.
தெவிட்டிய நிலை:
இங்கு, உமிழ்ப்பான்-அடிவாய் சந்தியும், ஏற்பான்-அடிவாய் சந்தியும் முன்னோக்குச் சார்பில் அமையும். டிரான்சிஸ்டரின் சந்திகளின் குறுக்கே மிக அதிக அளவு மின்னோட்டம் பாயும், இந்நிலையில் டிரான்சிஸ்டரானது மூடிய சாவியாகச் செயல்படும்.
வெட்டுநிலை:
இந்த நிலையில் உமிழ்ப்பான் - அடிவாய் சந்தியும், ஏற்பான் - அடிவாய் சந்தியும் பின்னோக்குச் சார்பில் அமையும். இந்த நிலையில் டிரான்சிஸ்டர் திறந்த சுற்றாகச் செயல்படும்.
25.
உயர் அணு எண் கொண்ட தனிமத்தினால் வேகமாகச் செல்லும் எலக்ட்ரானை திடீரென எதிர்முடுக்கமடையச் செய்யும் போது x - கதிர்கள் கிடைக்கின்றன
26.
i) முந்தி (அ) பின்தங்கி உள்ள கட்ட கோணத்தின் கொசைன் மதிப்பு cosф திறன் காரணி எனப்படும்.
ii) திறன் காரணி = \(\frac { VIcos\phi }{ VI } \)
27.
(i) தானியங்கு எந்திரங்களின் எரிபொருள் எரியூட்டும் அமைப்புகளில் தீப்பொறி ஏற்படுவதைத் தவிர்க்க பயன்படுகிறது
(ii) மின்திறன் வழங்கிகளில் மின்னழுத்த ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதற்கும், மின்திறன் அனுப்பீட்டில் அதன் பயனுறு திறனை அதிகரிக்கச் செய்யவும், மின்தேக்கிகள் பயன்படுகின்றன
(iii) மின்தேக்கிகள் மின்காந்த அலைவுகளைத் தோற்றுவிக்கவும், ரேடியோ சுற்றுகளை ஒத்திசைவு செய்யவும் பயன்படுகின்றன.
28.
1. தவறான மின் இணைப்புகள் அல்லது அளவுக்கு அதிகமான மின்னோட்டம் மின்சுற்றில் பாயும்போது மின் துண்டிப்பான்களின் சாவி மின்சுற்றை திறந்துவிடும்.
2. பின்னர் மின்சுற்றின் பழுதை நீக்கியவுடன், நாம் மின் துண்டிப்பானின் சாவியை மூடிவிடலாம்.
29.
1. குறைந்த காந்தத் தேக்குத்திறன்
2. குறைந்த காந்த நீக்குத்திறன்
3. அதிக தொடக்க காந்த ஏற்புத்திறன்.
4. மெல்லிய காந்த தயக்கக் கண்ணி கொண்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
எ.கா: தேனிரும்பு மற்றும் மியூமெட்டல் (நிக்கல்) இரும்பு உலோக கலவை
30.
\(\oint \vec{B} \cdot \overrightarrow{d l}=\mu_o I_{\text {}}\)மூடப்பட்ட + \( +\mu_o \varepsilon_o \frac{d}{d t} \int \vec{E} \cdot \overrightarrow{d A}\)
31.
மின்புலத்தின் வீச்சு, E0 = 3 × 104 N C-1
காந்தப்புலத்தின் வீச்சு, B0 = 2 × 10-4 T.
ஊடகத்தின் வழியே பாயும் மின்காந்த அலையின் வேகம்
v = \(\frac{E_o}{B_o}=\frac { 3\times { 10 }^{ 4 } }{ 2\times { 10 }^{ -4 } } \) = 1.5 x 108ms-1
32.
Q = 15 Ω, l1: l2 = 3 : 2
\(\frac { { l }_{ 1 } }{ { l }_{ 2 } } =\frac { 3 }{ 2 } \)
\(\frac { P }{ Q } =\frac { { l }_{ 1 } }{ { l }_{ 2 } } \)
P = Q\(\frac { { l }_{ 1 } }{ { l }_{ 2 } } \)
P = 15 x \(\frac { 3 }{ 2 } \) = 22.5 Ω
33.
பரப்பிலுள்ள அனைத்து புள்ளிகளும் ஒரே மின்னழுத்தம் பெற்றிருந்தால், அது சம மின்னழுத்த பரப்பு எனப்படும்.
34.
பல்வேறு ஒளி மூலங்களிலிருந்து வரும் நிறமாலைகளை ஆராயவும், பொருள்களின் ஒளிவிலகல் எண்களைக் கணக்கிடவும். நிறமாலைமானிகள் பயன்படுத்துகின்றன. நிறமாலைமானி ஒன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது. அடிப்படையில் நிறமாலைமானி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை முறையே இணையாக்கி, முப்பட்டக மேடை மற்றும் தொலைநோக்கி ஆகும்.
நிறமாலைமானியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள்
நிறமாலைமானியைப் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொள்ளும் முன்பாகப் பின்வரும் சீரமைப்புகளைச் செய்ய வேண்டும். '
(அ) கண்ணருகு லென்சைச் சீரமைத்தல்:
தொலைநோக்கியை, ஒளியூட்டப்பட்ட பரப்பினை நோக்கிச் சுழற்றி, குறுக்குக் கம்பியை முன்னும் பின்னும் நகர்த்தித் தெளிவான பிம்பம் கண்களுக்குத் தெரியும் இடத்தில் அதனை நிலைநிறுத்த வேண்டும்.
(ஆ) தொலைநோக்கியைச் சீரமைத்தல்:
இணைகதிர்களைப் பெறும் வகையில் தொலைநோக்கியைச் சீரமைக்க, அதனை தொலைவில் உள்ள பொருள் ஒன்றைக் காணும் வகையில் நிலை நிறுத்த வேண்டும். பின்னர், கண்ணருகு லென்சுக்கும் பொருளருகு லென்சுக்கும் உள்ள தொலைவினைச் சரிசெய்து, தெளிவான பிம்பம் கண்ணருகு லென்சின் குறுக்குக் கம்பியில் விழும்படி அமைக்க வேண்டும்.
இ) இணையாக்கியைச் சீரமைத்தல்:
இணையாக்கியின் பிளவினைச் சரி செய்து, ஒளிமூலம் ஒன்றினால் அதனை ஒளியூட்ட வேண்டும். பின்னர், இணையாக்கியின் அச்சுக் கோட்டில் நிற்கும் வகையில் தொலைநோக்கியைச் சுழற்றி நிலைநிறுத்த வேண்டும். தொலைநோக்கியின் கண்ணருகு லென்சின் குறுக்குக் கம்பியில் தெளிவான பிம்பம் கிடைக்கும் வரை, இணையாக்கியின் பிளவிற்கும் லென்சுக்கும் இடையே உள்ள தொலைவைச் சரிசெய்ய வேண்டும். ஏனெனில், தொலைநோக்கி இணைகதிர்களைப் பெறும் வகையில் ஏற்கனவே சரிசெய்யப்பட்டுள்ளது. இணையாக்கியிலிருந்து வரும் கதிர்கள் இணையாக இருந்தால் மட்டுமே, தெளிவான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட பிம்பம் கிடைக்கும்.
(ஈ) முப்பட்டக மேடையைச் சீரமைத்தல்:
நீர்மட்டம் மற்றும் சரிசெய்யும் திருகாணிகளைப் பயன்படுத்தி, முப்பட்டக மேடையின் இணை வட்டத்தகடுகளை சரிசெய்யலாம்.
35.
தத்துவம்:
m நிறை கொண்ட எலக்ட்ரான் ஆனது V வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகிறது. எலக்ட்ரான் பெறுகின்ற இயக்க ஆற்றல்,
\(\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }=ev\)
இதில் என்பது எலக்ட்ரானின் திசைவேகம், \(v=\sqrt { \frac { 2eV }{ m } } \)
எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளம், \(\lambda =\frac { h }{ mV } =\frac { h }{ \sqrt { 2meV } } \)
தெரிந்த மதிப்புகளைப் பிரதியிட,
\(\lambda =\cfrac { 6.626\times { 10 }^{ -34 } }{ \sqrt { 2V\times 1.6\times { 10 }^{ -19 }\times 9.11\times { 10 }^{ -31 } } } =\cfrac { 12.27\times { 10 }^{ -10 } }{ \sqrt { V } } ,\lambda =\cfrac { 12.27 }{ \sqrt { V } } \mathring { A } \)
eV = K, என்பது எலக்ட்ரானின் இயக்க ஆற்றல் என்பதால் எலக்ட்ரானின் அலைநீளம் \(\lambda =\frac { h }{ \sqrt { 2mK } }\) எனவும் எழுதலாம்.
36.
தொழில்நுட்பத்தையும் அடிப்படை இயற்பியலையும் ஒருங்கிணைத்ததால் மருத்துவ நோயறிதலில் புதுமையும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவற்றுள் சில:
மெய்நிகர் உண்மை:
மருத்துவ மெய்நிகர் உண்மை மூலம் மூளை, வலியை செயலாக்குவதை நிறுத்த முடியும். நோயாளிகளின் 3D மாதிரி படங்களை பயன்படுத்தி அறுவை சிகிச்சையை திட்டமிடவும், அறுவை சிகிச்சைகளை மேம்படுத்தவும் முடியும். மன இறுக்கம், நினைவு இழப்பு மற்றும் மன நோயை குணப்படுத்த உதவுகிறது.
துல்லிய மருத்துவம் அல்லது தனிப்பயன் மருத்துவம்
மரபணு மாறுபாடுகள், சுற்றுச்சூழல் மற்றும் ஒவ்வொரு நபரின் வாழ்க்கை முறை ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஒவ்வொருவருக்குமான மருத்துவம் என்பதே துல்லிய மருத்துவம் ஆகும். இதன்மூலம் ஒரே நோய்க்கு தனிநபர் சார்ந்து வெவ்வேறு மருத்துவ முடிவுகள், சிகிச்சைகள், ஏற்றகருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி மருத்துவ சேவையை தனிப்பயன் ஆக்க இயலும்.
சுகாதார அணிகலன்கள்:
இது ஒரு கருவி. இதனை பொருத்தியிருப்பவரின் அல்லது அணிந்திருப்பவரின் நோய் அறிகுறிகள் அல்லது சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தொடர்பான தரவு ஆகியவற்றை கண்காணிக்க இயலும். செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரும் தரவுடன் கூடிய அணிகலன்கள் நோயறிதல், சிகிச்சை, நோயாளி கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்பு ஆகியவற்றில் ஒரு கூட்டப்பட்ட மதிப்பை அளிக்கும்.
செயற்கை உறுப்புகள்:
மனிதனுக்குள் பொருத்தப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வடிவமைக்கப்பட்ட கருவி அல்லது திசு செயற்கை உறுப்பு ஆகும். இது மனித உறுப்புகளின் செயல்பாட்டை அதிகப்படுத்தி நோயாளியை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் செயல்படுகிறது.
முப்பரிமாண 3D அச்சு
காது மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்ற மருத்துவ துறைகளில் மருத்துவர்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு நவீன 3D அச்சு அமைப்புகள் உதவுகின்றன.
கம்பியில்லா மூளை உணர்விகள்
இவை மண்டை ஓட்டினுள் உள்ள அழுத்தம் மற்றும் வெப்பநிலையை கண்காணிக்கின்றன. இவற்றின் பணி முடிந்ததும் இவை உடலினால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. எனவே இவற்றை நீக்க அறுவை சிகிச்சை தேவையில்லை.
ரோபோட்டிக் அறுவை சிகிச்சை:
இது ரோபோட்களால் செய்யப்படும் ஒருவகை அறுவை சிகிச்சை செயல்முறையாகும். இது குறைந்த அளவு துளையிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சையின் வரம்புகளை கடக்கவும், திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்களின் திறன்களை மேம்படுத்தவும் உதவுகின்றன.
மீத்திறன் உள் இழுப்பான்கள்:
ஆஸ்துமாவிற்கு முக்கிய சிகிச்சை 'வாய் உள் இழுப்பான்கள்' ஆகும். நோயாளிகளை மனதில் கொண்டு நோயாளிகளுக்குத் தக்கதாக மீத்திறன் இழுப்பான்கள் வடிவமைக்கப்படுகின்றன. புளூடூத் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுவதால் நோயாளிகள் மருந்து எடுத்துக்கொள்ளும் நேரத்தை நினைவூட்டுகிறது. மேலும் தொடர் கவனிப்புகளுக்கு உதவ தரவுகளை சேகரிக்கிறது.
37.
1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குறைந்த நிறை கொண்ட அணுக்கருக்கள் (A<20) இணைந்து அதிக நிறை கொண்ட அணுக்கருவை உருவாக்கும் நிகழ்வு அணுக்கரு இணைவு எனப்படும்.
2. அணுக்கரு இணைவில் உருவாகும் அணுக்கருக்களின் நிறையானது எப்போதும் தொடக்கத்தில் உள்ள இலேசான அணுக்கருக்களின் நிறையை விட குறைவானதாகவே இருக்கும். இந்த நிறை குறைபாடு ஆற்றலாக வெளிப்படும்.
3. அறை வெப்பநிலையில் அணுக்கருக்களுக்கு இடையேயான கூலூம் விலக்கு விசை மிக அதிகமாக இருக்கும்.
4. வெப்பநிலையானது 107K என இருக்கும்போது, இயக்க ஆற்றலின் காரணமாக, அணுக்கருக்கள் அருகில் வரும்போது அணுக்கரு விசை தோன்றும்.
5. இதன் காரணமாக அணுக்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருவை உருவாக்கும்.
6. உயர் வெப்பநிலையில் மட்டுமே நிகழ்வதால் இது வெப்ப அணுக்கரு வினை எனப்படும்.
விண்மீன் ஆற்றல்:
குறைந்த நிறை கொண்ட அணுக்கருக்கள் இணைந்து அதிக நிறை கொண்ட அணுக்கருவை உருவாக்கும் அணுக்கரு இணைவு நிகழ்வினால் ஏற்படுவதே விண்மீன் ஆற்றலாகும்.
விண்மீன்களின் வெப்பநிலை கிட்டத்தட்ட 107 K.
நம் சூரியன் உட்பட பெரும்பாலான விண்மீன்களிலும் ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைந்து ஹீலியம் அணுக்கருக்கள் உருவாகின்றன.
சில விண்மீன்களில் ஹீலியம் அணுக்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருக்கள் உருவாகின்றன.
விண்மீனின் தொடக்க கட்டத்தில் மேகமும், தூசுகளும் மட்டுமே காணப்படுகிறது. தன் ஈர்ப்பு விசையின் காரணமாக மேகங்கள் விண்மீன்களின் உள் நோக்கியே விழுகின்றன.
இதனால் ஈர்ப்பு அழுத்த ஆற்றலானது இயக்க ஆற்றலாகவும் இறுதியாக வெப்ப ஆற்றலாகவும் மாற்றமடைகிறது.
உருவாகும் வெப்பநிலையானது, அணுக்கரு இணைவை தூண்டுகிறது.
அதிக ஆற்றல் வெளிப்பட்டு உள்நோக்கிய வீழ்வு தடுக்கப்பட்டு விண்மீன் சமநிலையை அடைகிறது.
சூரியனின் உட்பகுதியின் வெப்பநிலை 1.5 x 107K.
சூரியன் ஒரு விநாடியில் 6 x 1011 kg ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றுகிறது. இந்த இணைவு வினை மேலும் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு நடைபெற தேவையான ஹைட்ரஜன் சூரியனில் உள்ளது.
அனைத்து ஹைட்ரஜனும் எரிந்த பிறகு சூரியனானது சிவப்பு பெருமீன் என்ற புதிய நிலையை அடைகிறது.
அப்பொழுது ஹீலியம் அணுக்கருக்கள் இணைந்து கார்பனாக மாறுகிறது.
இந்த சமயத்தில் சூரியன் அதிக அளவில் விரிவடைந்து அனைத்து கோள்களையும் தன்னுள் இழுத்துக்கொள்ளும்
சூரியன் மற்றும் விண்மீன்களில் நடைபெறும் முக்கியமாக அணுக்கரு இணைவு வினை புரோட்டான் புரோட்டான் சுற்று எனப்படும்
இந்த சுற்றில் மூன்று படிகள் உள்ளது. முதல் இரண்டு படிகளை பின்வருமாறு குறிப்பிடலாம்:
\(_{ 1 }^{ 1 }{ H }+_{ 1 }^{ 1 }{ H }\rightarrow _{ 1 }^{ 2 }{ H }+{ e }^{ + }+v\)
\( _{ 1 }^{ 2 }{ H+_{ 1 }^{ 1 }{ H }\rightarrow _{ 2 }^{ 3 }{ He }+\gamma }\)
மூன்றாவது படிநிலையில் பல விதமான வினைகள் நிகழலாம். அதில் மேலோங்கிய நிகழ்வு:
\(_{ 2 }^{ 3 }{ He }+_{ 2 }^{ 3 }{ H }\rightarrow _{ 2 }^{ 4 }{ He }+_{ 1 }^{ 1 }{ H }+_{ 1 }^{ 1 }{ H }\)
மேற்குறிப்பிட்ட வினைகளில் வெளிவிடப்படும் சராசரி ஆற்றல் 27 MeV.
சூரியனிலிருந்து நாம் பெரும் ஆற்றலின் காரணம் இந்த அணுக்கரு இணைவு வினைகளே.
38.
GPS என்பது Global Positioning System உலகளாவிய நிலையறியும் அமைப்பும் - என்பதன் சுருக்கமாகும். இது வழி நடத்தும் செயற்கைக் கோள்களின் உலகளாவிய அமைப்பு ஆகும். இதன் மூலம் பூமிக்கு அருகிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ இருக்கும் GPS ஏற்பிக்கு, புவிசார் அமைவிடம் மற்றும் காலம் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.
பல்வேறு செயற்கைக்கோள்களின் வலையமைப்பு உதவியுடன் GPS செயல்படுகிறது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் ரேடியோ அலைகள் போன்ற ஒரு துல்லிய சைகையை ஒலிபரப்புகிறது. இருப்பிடம் குறித்த தரவை அளிக்கும் இந்த சைகைகள் விண்ணலைக் கம்பியினால் பெறப்பட்டு, பிறகு GPS மென்பொருளால் தகவல்களாக மாற்றம் செய்யப்படுகிறது. மென்பொருளானது குறிப்பிட்ட செயற்கைக்கோளை கண்டுணர்ந்து, அதன் இருப்பிடம் மற்றும் ஒவ்வொரு செயற்கைக்கோளில் இருந்தும் சைகைகள் பயணம் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பிறகு, மென்பொருள் ஆனது ஒவ்வொரு செயற்கைக்கோளில் இருந்தும் பெறும் தரவுகளை செயல்முறைப்படுத்தி, ஏற்பியின் இருப்பிடத்தைக் கணிக்கிறது.
பயன்பாடுகள்: -
உலகளாவிய நிலையறியும் அமைப்பு பல துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவையாவன: இயங்கும் வாகன நிர்வாகம் (கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றின் தடம் பின்பற்றல்) வனவிலங்கு நிர்வாகம் (ஆபத்தான வன விலங்குகளைக் கணக்கிடல் மற்றும் பொறியியல் துறை (சுரங்கப்பாதைகள், பாலங்கள் ஆகியவற்றை உருவாக்குதல்) ஆகியவை ஆகும்.
39.
டிரான்சிஸ்டரானது தெவிட்டிய மற்றும் வெட்டு நிலையில் ஒரு சிறு கட்டுப்படுத்தும் சைகை மூலம் ஒரு மின்சுற்றை மூடி ON அல்லது OFF எலக்ட்ரானியல் சாவியாக செயல்படுகிறது.

உள்ளீடு அதிகமாக இருக்கும் போது:
மிக அதிக உள்ளீடு மின்னழுத்தம் (Vin = + 5V) அளிக்கப்படும் போது, அடிவாய் மின்னோட்டம் (IB) அதிகரிக்கும்.
இது ஏற்பான் மின்னோட்டத்தை (Ic) அதிகரிக்கும். இதனால், டிரான்சிஸ்டர் தெவிட்டிய பகுதிக்குள் நுழையும். (சாவி மூடுதல் - ON)
ஏற்பான் மின்னோட்டத்தில் (IC) உயர்வு, Rc இன் குறுக்கே மின்னழுத்த வேறுபாட்டை அதிகரிக்கும். இதனால், வெளியீடு மின்னழுத்தம் குறைந்து சுழியை நெருங்கும். எனவே, டிரான்சிஸ்டர் மூடிய சாவியாகச் செயல்பட்டு இயங்கு (ON) நிலைக்குச் சமமானதாக மாறுகிறது.
உள்ளீடு சுழியாக இருக்கும் போது:
மிகக்குறைந்த உள்ளீடு மின்னழுத்தம் (Vin = 0 V) அளிக்கப்படும்போது, அடிவாய் மின்னோட்டம் (IB) குறைந்து அதன் மூலம், ஏற்பான் மின்னோட்டம் (IC) குறைக்கப்படும்.
தற்போது டிரான்சிஸ்டர் RC ஆனது வெட்டுப் பகுதிக்குள் நுழையும். (இயங்காநிலை - OFF). இதன் பொருள், டிரான்சிஸ்டர் வழியாக எவ்வித மின்னோட்டமும் பாயாமல் இயங்கா (OFF) நிலையில் இருக்கும். இவ்வாறு டிரான்சிஸ்டர் திறந்த சாவியாகச் செயல்படுகின்றது.
40.
தட்டுகளுக்கிடையே மின்புலம்
\(E=\frac { \sigma }{ { \varepsilon }_{ 0 } } =\frac { q }{ { \varepsilon }_{ 0 }A } \)
q என்பது தட்டுகளின் மின்துகள் மின்பய தட்டில்
\({ \phi }=EA=\frac { q }{ { \varepsilon }_{ 0 }A } .A\frac { q }{ { \varepsilon }_{ 0 } } \)
இடப்பெயர்ச்சி மின்னோட்டம்
\({ I }_{ D }=\frac { d\phi }{ dt } ={ \varepsilon }_{ 0 }\frac { d }{ dt } \left[ \frac { q }{ { \varepsilon }_{ 0 } } \right] =\frac { dq }{ dt } \)
ஆனால் \(\frac { d }{ dt } \) = என்பது மின்னூட்டம் மாறும் வீதம் ID = IC
இடப்பெயர்ச்சி மின்னோட்டம் = கடத்தி மின்னோட்டம்
41.
R = 0.12m;q = 1.6 x 10-7C
i) கோளக்கடத்தியின் உட்புறத்தில் மின்புலம் சுழி. ஏனெனில் மின்னூட்டம் கோளத்தின் புறப்பரப்பில் உள்ளது
ii) கோளத்தின் மீது
Eon = \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ { R }^{ 3 } } =\frac { 9\times { 10 }^{ 9 }\times 1.6\times { 10 }^{ -7 } }{ 0.12\times 0.12 } \)
= \(\frac {144}{144} \) x 105 = 105NC-1
iii) கோளத்தின் மையத்தில் இருந்து 0.18 m தொலைவில் மின்புலம்
Eon = \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ { R }^{ 3 } } =\frac { 9\times { 10 }^{ 9 }\times 1.6\times { 10 }^{ -7 } }{ 0.18\times 0.18 } \)
= \(\frac {14.4}{324} \)x 106 = 4.445 x 104NC-1
42.
1. மின்கலத்தின் அகமின்தடையை அளவிட படத்தில் காட்டியுள்ளவாறு இணைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2. மின்கலத்தொகுப்பு (Bt) ன் நேர்மின்முனை மின்னழுத்தமானி கம்பியின் C முனையுடனும் எதிர்மின்முனை சாவி K1 வழியாக D முனையுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இதுவே முதன்மைச் சுற்றாக அமைகிறது.
3. அகமின்தடை காண வேண்டிய மின்கலம் ξ இன் நேர்மின்முனை மின்னழுத்தமானிக் கம்பியின் C முனையுடன் இணைக்கப்படுகிறது.
4. மின்கலத்தின் எதிர்மின் முனையானது கால்வனா மீட்டர், உயர்மின்தடையாக்கி வழியாக தொடுசாவி J உடன் இணைக்கப்படுகிறது.
5. மின்கலம் ξ ன் குறுக்கே ஒரு மின்தடைப் பெட்டி R மற்றும் K2 திறந்த நிலையில் சமன்செய் புள்ளி J கண்டறியப்பட்டு சமன்செய் நீளம் CJ = l1 அளவிடப்படுகிறது.
6. மின்கலமானது திறந்த சுற்றில் அமைவதால் அதன் மின்னியக்கு விசை
ξ ∝l1 ---- (1)
7. மின்தடைப்பெட்டி R-ல் ஒரு தகுந்த மின்தடையாக்கி தேர்ந்தெடுக்கப்பட்டு K2 சாவி மூடப்படுகிறது.
8. மின்தடை R மற்றும் மின்கலம் வழியே மின்னோட்டம் I ஆனது
\(I=\frac { \xi }{ R+r } \)
9. R -ன் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு
\(V=\frac { \xi R }{ R+r } \)
10. இந்த மின்னழுத்த வேறுபாடு மின்னழுத்தமானிக் கம்பிக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டால் சமன்செய்யப்படுகிறது. இந்த நீளத்தை l2 என்க எனவே
\(\frac { \xi R }{ R+r } \alpha { l }_{ 2 }\) ---- (2)
11. சமன்பாடு (1) மற்றும் (2)
\(\frac { \xi }{ \frac { \xi R }{ R+r } } =\frac { { l }_{ 1 } }{ { l }_{ 2 } } \)
\(\frac { R+r }{ R } =\frac { { l }_{ 1 } }{ { l }_{ 2 } } \)
\(1+\frac { r }{ R } =\frac { { l }_{ 1 } }{ { l }_{ 2 } } \)
\(r=R(-)\)
\(r=R\left( \frac { { l }_{ 1 }{ -l }_{ 2 } }{ { l }_{ 2 } } \right) \)
12. மின்கலத்தின் குறுக்கேயுள்ள புறமின்தடை மதிப்பு அதிகரிக்கும் போது அதிகரிப்பதை காணலாம்.
43.
| எண் | பண்புகள் | மென் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள் | வன் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள் |
| 1. | புற காந்தப்புலத்தை நீக்கும் போது | காந்தத்தன்மை மறைந்து விடும் | காந்தத்தன்மை மறையாது |
| 2. | தயக்கக்கண்ணினியின் பரப்பு | சிறியது | பெரியது |
| 3. | காந்த தேக்குத்திறன் | குறைவு | அதிகம் |
| 4. | காந்த நீக்குத்திறன் | குறைவு | அதிகம் |
| 5. | காந்த ஏற்புத்திறன் மற்றும் காந்த உட்புகுத்திறன் | அதிகம் | குறைவு |
| 6. | தயக்க இழப்பு | குறைவு | அதிகம் |
| 7. | பயன்கள் | வரிச்சுருள் உள்ளகம், மின்மாற்றி உள்ளகம் மற்றும் மின்காந்தங்கள் செய்ய பயன்படுகிறது. | நிலையான காந்தங்கள் செய்ய பயன்படுகிறது. |
| 8. | எடுத்துக்காட்டுகள் | தேனிரும்பு, மியூமெட்டல் ஸ்டெல்லாய் மற்றும் சில பொருட்கள் | எஃகு, ஆல்நிக்கோ, காந்தக்கல் மற்றும் சில பொருட்கள். |
44.
h = 1 x 10-3 m, e = 1.6 x 10-19 C, me = 9.1 x 10-31 kg, mp =1.6 x 10-27 kg
(அ) h = 1 x 10-3 m, e = 1.6 x 10-19 C, me = 9.1 x 10-31 kg, mp =1.6 x 10-27 kg
(a) எலக்ட்ரானின் பறக்கும் காலம் \(t_{c}=\sqrt{\frac{2 h m_{e}}{e E}}\)
இங்கு,
\(E =\frac{V}{d}=\frac{5}{1 \times 10^{-3}}=5000 \mathrm{Vm}^{-1} \)
\(t_{e} =\sqrt{\frac{2 \times 1 \times 10^{-3} \times 9.1 \times 10^{-31}}{1.6 \times 10^{-19} \times 5000}}=\sqrt{\frac{18.2 \times 10^{-34}}{8 \times 10^{-16}}}=\sqrt{2.275 \times 10^{-18}} \)
= 1.5 x 10-9s
te = 1.5 ns
(ii) புரோட்டானின் பறக்கும் காலம் \(t_{p}=\sqrt{\frac{2 h m_{p}}{e E}}\)
\(t_{p} =\sqrt{\frac{2 \times 1 \times 10^{-3} \times 1.6 \times 10^{-27}}{1.6 \times 10^{-19} \times 5000}} \)
\(=\sqrt{\frac{3.2 \times 10^{-30}}{8 \times 10^{-16}}}=\sqrt{\frac{3.2}{8} \times 10^{-14}}=\sqrt{4000 \times 10^{-18}} \)
tp = 63 x 10-9s
tp = 63 ns
(b) நியூட்ரானின் பறக்கும் காலம், \(t_{n}=\sqrt{\frac{2 h}{g}}\)
\(t_{n} =\sqrt{\frac{2 \times 1 \times 10^{-3}}{10}}=\sqrt{2 \times 10^{-4}} \)
\(=1,414 \times 10^{-2} \)
\(=14.14 \times 10^{-3} \mathrm{~s} \)
tn = 14.14 ms
(c) எனவே, எலக்ட்ரானின் பறக்கும் காலம் குறைவு, எலக்ட்ரான் முதலில் வந்தடையும்
45.
விளக்கம்:
ஓய்வில் உள்ள எந்த ஒரு மின்துகளும், மின்புலத்தை மட்டுமே உருவாக்கும்.ஆனால் அம்மின்துகள் சீரான திசைவேகத்தில் இயங்கும்போது மாறாத மின்னோட்டத்தை கடத்தியில் உருவாக்கி, மின்துகள் பாயும் கடத்தியைச் சுற்றிலும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது (இக்காந்தப்புலம் நேரத்தைச் சார்ந்தல்ல, வெளியைச் சார்ந்தது). மின்னூட்டப்பட்டத் துகள்கள் முடுக்கமடையும் போது, மின்புலத்துடன் கூடுதலாக காந்தப்புலத்தையும் உருவாக்குகிறது. மின்புலம் மற்றும் காந்தப்புலம் இவ்விரண்டு புலங்களும் நேரத்தைப்பொறுத்து மாற்றமடையும் புலங்களாகும். மின்காந்த அலைகள் குறுக்கலைகளாகும். எனவே மின்புலம் மற்றும் காந்தப்புலம் உள்ள தளங்களுக்கு செங்குத்தாக உள்ள திசையில் மின்காந்த அலை பரவும்.
எந்த ஒரு அலைவு இயக்கமும், முடுக்கப்பட்ட இயக்கமாகும். எனவே, ஒரு மின்துகளானது மையப்புள்ளியைப் பொறுத்து அலைவுறும்போது, (அல்லது மூலக்கூறு இருமுனை அலைவுறும்போது) மின்காந்த அலைகளைத் தோற்றுவிக்கும். வெற்றிடத்தில் மின்காந்த அலை பரவும் திசை z-அச்சு எனவும், அதன் மின்புல வெக்டரின் திசை x-அச்சு எனவும் கொண்டால் காந்தப்புல வெக்டரின் திசை, அலை பரவும் திசை மற்றும் மின்புல வெக்டரின் திசை இவ்விரண்டு திசைகளுக்கும் செங்குத்தான திசையில் செயல்படும். அதாவது
\({ E }_{ y }={ E }_{ 0 }sin(kz-\omega t),{ B }_{ x }={ B }_{ 0 }sin(kz-\omega t)\)
இங்கு E0 மற்றும் B0 என்பவை முறையே அலைவுறும் மின்புலம் மற்றும் காந்தப்புலங்களின் வீச்சுக்கள் (amplitude) ஆகும். k என்பது அலை எண், ω என்பது அலையின் கோண அதிர்வெண் மற்றும் \(\hat {k }\) (ஓரலகு வெக்டர். இதற்கு பரவு வெக்டர் என்று பெயர்) மின்காந்த அலை பரவும் திசையினைக் காட்டுகிறது.
மின்புலம் மற்றும் காந்தப்புலம் இரண்டும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் (மின்காந்த அலையின் அதிர்வெண்) அதிர்வுறுகின்றன. அந்த அதிர்வெண் மின்காந்த அலையின் மூலத்தின் (source of EM wave) அதிர்வெண்ணுக்குச் சமமாகும். (இங்கு அலைவுறும் மின்துகள் மின்காந்த அலைகளைத் தோற்றுவிக்கும் மூலமாகச் செயல்படுகிறது). வெற்றிடத்தில் E0 மற்றும் B0 இன் விகிதம் மின்காந்த அலையின் வேகத்திற்குச் சமமாகும். அதாவது ஒளியின் வேகத்திற்கு (c) சமமாகும்.
\(V=\frac { { E }_{ 0 } }{ { B }_{ 0 } } \)
எந்த ஒரு ஊடகத்திலும் E0 மற்றும் B0 இன் விகிதம் அந்த ஊடகத்தில் பரவும் மின்காந்த அலையின் வேகத்திற்கு (v) சமமாகும். எனவே, \(V=\frac { { E }_{ 0 } }{ { B }_{ 0 } } < c\)
மேலும் மின்காந்த அலையின் ஆற்றல், அலைவுறும் மின்துகள்களின் இயக்க ஆற்றலிலிருந்து கிடைக்கிறது.
46.
(i) மீட்டர் சமனச்சுற்று என்பது வீட்ஸ்டோன் சமனச்சுற்றின் இன்னொரு வடிவம் ஆகும்.
(ii) இதில் 1 மீட்டர் நீளமுள்ள AB என்ற சீரான மாங்கனின் (manganin) கம்பி உள்ளது.
(iii) இக்கம்பி ஒரு மீட்டர் அளவுகோலுக்கு இணையாக ஒரு மரப்பலகையில் C மற்றும் D என்ற இரு தாமிர பட்டைகளுக்கு இடையே நீட்டப்பட்டுள்ளது.
(iv) இரு தாமிரப்பட்டைகளுக்கு இடையில் E என்ற மற்றொரு தாமிர பட்டை G1 மற்றும் G2 என்ற இரு இடைவெளியில் படத்தில் காட்டியவாறு பொருத்தப்பட்டுள்ளது.
(v) G1 இடைவெளியில் ஒரு தெரியாத மின்தடையாக்கி P யும் G2 இடைவெளியில் ஒரு தெரிந்த மின்தடையாக்கி Q யும் இணைக்கப்பட்டுள்ளன.
(vi) ஒரு தொடுசாவியானது (J) மைய தாமிரப்பட்டையில் E என்ற முனையில் கால்வனாமீட்டர் (G) மற்றும் உயர் மின்தடையாக்கி வழியே இணைக்கப்பட்டுள்ளது.
(vii) கம்பியின் மீதுள்ள தொடுசாவியின் நிலையை (position) அளவுகோல் மூலம் அளவிடலாம்.
(viii) சமனச்சுற்று கம்பியின் முனைகளின் குறுக்கே ஒரு லெக்லாஞ்சி மின்கலமும் சாவியும் இணைக்கப்பட்டுள்ளன.
(ix) கம்பியின் மீது தொடுசாவியை நகர்த்தி கால்வனாமீட்டரில் சுழி விலக்கம் ஏற்படுமாறு செய்ய வேண்டும்.
(x) தொடுசாவியின் நிலையை J என எடுத்துக் கொள்வோம்.
(xi) AJ மற்றும் JB எனும் நீளங்கள் முறையே வீட்ஸ்டோன் சமனச்சுற்றின் மின்தடையாக்கிகள் R மற்றும் S க்கு பதிலாக அமைந்துள்ளது.
\(\frac { P }{ Q } =\frac { R }{ S } =\frac { { R }^{ ' }AJ }{ { R }^{ ' }JB } \)
இங்கு, r' என்பது ஓரலகு நீளத்திற்கான மின்தடை ஆகும்
\(\frac { P }{ Q } =\frac { AJ }{ JB } =\frac { { l }_{ 1 } }{ { l }_{ 2 } } \)
\(P=Q.\frac { { l }_{ 1 } }{ { l }_{ 2 } } \)
(xii) சமனச்சுற்று கம்பியானது தாமிரப்பட்டைகளின் மீது பற்ற வைத்திருப்பதால் முழுமையற்ற இணைப்பின் காரணமாக, இணைப்பில் மிகச்சிறிய அளவு மின்தடை அதிகரித்திருக்கக் கூடும். இந்த மின்தடையாக்கிகள் முனை மின்தடைகள் (End resistance) என்றழைக்கப்படும்.
(xiii) இப்பிழையை நீக்க P மற்றும் Q வை இடப்பரிமாற்றம் செய்து சோதனை மீண்டும் ஒருமுறை செய்யப்பட்டு மற்றொரு அளவீடு எடுக்கப்பட்டு P ன் சராசரி மதிப்பு கிடைக்கிறது.
47.
q என்ற புள்ளி மின்துகளிலிருந்து r தொலைவிலுள்ள புள்ளி P இல் வைக்கப்படும் ஓரலகு மின்னூட்டம் கொண்ட மின்துகளால் உணரப்படும் விசையே அப்புள்ளி P இல் உள்ள மின்புலத்தின் மதிப்பாகும்.
\(\vec{E}=\frac{\vec{F}}{q_0}=\frac{k q}{r^2} \hat{r}=\frac{1}{4 \pi \varepsilon_0} \frac{q}{r^2} \hat{r}\)
இங்கு \(\hat{r}\) என்பது q விலிருந்து நாம் எடுத்துக்கொண்ட புள்ளி P-க்கு வரையப்படும் ஓரலகு வெக்டராகும்.
மின்புலத்தின் முக்கிய பண்புகள்:
(i) மின்துகள் q நேர் மின்னூட்டம் (+) கொண்டதாக இருந்தால், மின்துகளிலிருந்து வெளிநோக்கிய திசையில் மின்புலம் இருக்கும். q எதிர்மின்னூட்டம் (-) கொண்டதாக இருந்தால் உள்நோக்கிய திசையில் மின்புலம் இருக்கும்.
(ii) P என்ற ஒரு புள்ளியில் மின்புலம் \(\vec { E } \), எனில் அப்புள்ளியில் வைக்கப்படும் சோதனை மின்துகள் qo ஆல் உணரப்படும் விசை \(\vec { F } ={ q }_{ o }\vec { E } \)
(iii) மின்புலமானது சோதனை மின்துகளின் மின்னூட்டம் qo ஐச் சார்ந்ததல்ல என்பதையும் மூல மின்துகளின் (Source charge) மின்னூட்ட மதிப்பு q ஐ மட்டுமே சார்ந்தது என்பதையும் சமன்பாடு (1) ன் மூலமாக அறியலாம்.
மின்புலம் ஒரு வெக்டர் அளவு என்பதால் அதற்கு தனித்தொரு திசையும் எண்மதிப்பும் இருக்கும். இதை படங்கள் (அ) மற்றும் (ஆ) வாயிலாக அறிய முடிகிறது. மின்துகளுக்கும் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரித்தால் மின்புலத்தின் எண்மதிப்பு குறையும் என்பதை சமன்பாடு (1), வாயிலாக அறியலாம் (அ) மற்றும் (ஆ) ஆகிய படங்களில் மூன்று வெவ்வேறு புள்ளிகளில் வரையப்பட்டுள்ள மின்புல வெக்டர்களின் நீளங்கள் வெவ்வேறாக உள்ளதைக் கவனிக்கவும். மின்புல மூலத்திற்கு அருகில் புள்ளி P அமைந்துள்ளதால் அங்கு மின்புலத்தின் வலிமை அல்லது எண்மதிப்பு Q மற்றும் R ஐ விட அதிகமாக உள்ளது.
(v) சோதனை மின்துகள் (q0) வைக்கப்படும்போது மூல மின்துகள் நகராமல் இருப்பதற்காக அதன் மின்னூட்ட மதிப்பு q0 மிகவும் சிறியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது அல்லது மூல மின்துகளின் மின்புலத்தைப் பாதிக்காதவாறு இருப்பதற்காக சோதனை மின்துகள் மிகச்சிறிய மின்னூட்ட மதிப்புடையதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
(vi) சமன்பாடு (1) புள்ளி மின்துகள்களுக்கு மட்டுமே பொருந்தும் மின்துகள்களின் தொடர் பரவல்களுக்கும். வரம்பிற்குட்பட்ட மின்னூட்ட அளவு கொண்ட மின்துகள் பரவல்களுக்கும் தொகையிடல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், வரம்பிற்குட்பட்ட மின்னூட்ட அளவு கொண்ட மின்துகளிடமிருந்து சோதனைப் புள்ளி வெகு தொலைவில் உள்ளபோது அத்துகளால் உருவாக்கப்படும் மின்புலத்திற்கான தோராயமான அளவீடாக இச்சமன்பாட்டைப் பயன்படுத்தலாம். புவியின் மீது சூரியன் ஏற்படுத்தும் ஈர்ப்புப் படலத்தைக் கணக்கிடும்போதும் புவியை ஒரு புள்ளி நிறையாகக் கருதியதை நினைவு கொள்ளவும்.
(vii) மின்புலங்களில் இரு வகைகள் உள்ளன. அவை சீரான (மாறாத) மின்புலம் மற்றும் சீரற்ற மின்புலம். புறவெளியில் உள்ள அனைத்து புள்ளிகளிலும் ஒரே திசையுடன் மாறாத எண்மதிப்பும் கொண்டிருந்தால் அது சீரான மின்புலம் எனப்படும் புறவெளியில் வெவ்வேறு புள்ளிகளில் வெவ்வேறு திசைகள் அல்லது வெவ்வேறு எண்மதிப்புகள் அல்லது இவ்விரண்டுமே கொண்டிருந்தால் அது சீரற்ற மின்புலமாகும். புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் மின்புலம் சீரற்ற மின்புலமே. அதன் சீரற்ற தன்மை திசையிலும் உள்ளது. எண்மதிப்பிலும் உள்ளது. அதன் திசை ஆரப்போக்கில் வெளிநோக்கியவாறு (அல்லது உள்நோக்கியவாறு) அமைகிறது. மேலும் தொலைவு அதிகரிக்கும்போது. அதன் எண் மதிப்பும் மாறுபடுகிறது.
48.
(b)
மேல்நோக்கி இடம்பெயரும்
49.
\(E = \frac{12400}{4100} = 3.02eV\)
50.
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் குவார்க்குகளால் உருவாக்கப்பட்டவை. புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களுக்கு 'ஹிக்ஸ் துகள்கள்' அல்லது 'கடவுள் துகள்கள்' நிறையைக் கொடுக்கின்றன.
51.
(b)
52.
(c)
வழித்தடத்தில்
53.
(a)

54.
(b)
0.18 mA
55.
(a)
0.4 J
56.
(a)
விசை மற்றும் திருப்புவிசை
57.
(a)
துத்தநாகம்
58.
(b)
இரண்டு
59.
Pav = Erms x Irms x cos A/c
\(= \frac{1}{2}\times\frac{1}{{2}}\times \cos \theta
= \frac{1}{2}\times\frac{1}{2}\times\frac{1}{2}=\frac{1}{8}\)
60.
\(\vec {E}\) = 10x\(\hat{i},\) இங்கு x = 2 m
\(\vec {E}\) = 10 x 2 x \(\hat{i}\) = 20\(\hat{i}\)
\(E=\frac{-dV}{dx}\) எனவே,
V = - ∫ E.dx = -∫ 10x dx
= -10x2/2 |x = 2m = -20V
\(\therefore V=+20 V\)
61.
(c)
\(\gamma\) γ - கதிர்கள்
62.
Pm = m x I
L = Iω
\(\frac{p_m}{L}=\frac{e}{2m}=\frac{q}{2m}\)
63.
\(\mathrm{V}_1 =220 \mathrm{~V}, \quad \mathrm{P}_1=60 \mathrm{~W} \)
\(\mathrm{~V}_{\mathrm{U}} =110 \mathrm{~V}, \mathrm{P}_{\mathrm{U}}=60 \mathrm{~W} \)
\(P =\frac{V^2}{R} \Rightarrow R=\frac{V^2}{P} \)
\(\therefore R_l =\frac{V_I^2}{P_l} \text { } \ \mathrm{R}_U=\frac{V_U^2}{P_U} \)
\(R_l =\frac{220 \times 220}{60} \quad \mathrm{R}_{\mathrm{U}}=\frac{110 \times 110}{60} \)
\(R_I =\frac{48400}{60} \quad R_U=\frac{12100}{60} \)
\(\frac{R_U}{R_l} =\frac{12100}{60} \times \frac{60}{48400}=\frac{1}{4} \)
\(R_U =\frac{R_l}{4}=\frac{R}{4}\)
64.
b) சூரிய நிறமாலை - வரி நிறமாலை
65.
d) மின்னூட்டம் பெற்ற சீரான கோளம் ஒன்றின் மின்னழுத்தம் - அவற்றின் ஆர மதிப்பில் எதிர்த் தகவில் மாறும்
66.
ஆ) \({ R }_{ P }=\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } \)ஏனெனில் \(\frac{1}{ R_P }=\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } \)
67.
நீலம் - வெளிர் மஞ்சள் - மோதல்
68.
ஈ) நீரியல் தடுப்பி
69.
c) மைக்ரோ கதிர்
70.
(d) எபோனைட்
71.
1Js-1 மற்றவை அனைத்தும் மின் ஆற்றலின் அலகு ஆகும்.
72.
D-க்கள் (Dees) சைக்ளோட்ரானின் ஒரு பகுதி. மற்றது இயங்குசுருள் கால்வனோமீட்டரின் பகுதிகள்
73.
( )
દ = -dΦ / dt
74.
( )
VE = Qm2 / 2C
75.
( )
புற ஊதாக் கதிர்கள்
76.
( )
மின்காந்த அலைகள்
77.
( )
பெருக்கற்பலன்
78.
( )
79.
( )
4.2K
80.
( )
nevd
81.
( )
பிளெமிங்கின் இடது கை விதி
82.
( )
\({ B }_{ H }tan\theta \)
83.
a) வெற்றிடத்தில் x - கதிரின் திசைவேகம் - 3 x 108 ms-1
84.
இ) வெள்ளி நிற வளையம் - 10%
85.
சுழற்சி காந்த விகிதம் - 8.78x1010Ckg-1
86.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
87.
a) A சரி, R தவறு
88.
a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
மீள் திருப்புவிசை திரும்பவும் சமநிலைக்கு எடுத்து வரும்
89.
ஆ) (R) ஆனது (A) ஐ விளக்குகிறது
90.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
91.
இ) மின்மாற்றி AC - யில் மட்டும் செயல்படும்.
92.
இ) ஓம் விதிக்கு உட்படாத பொருட்களுக்கு மின்தடை மாறிலியாகவும் அமையாது.
93.
வாக்கியம் (iii) மட்டும் சரியானது.
94.
இ) ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும் போது மற்றொரு சுருளில் மின்னியக்கு விசை தூண்டப்படுவது தன்மின்தூண்டல் ஆகும்.
95.
வாக்கியம் (ii) மட்டும் தவறானது.
96.
b) மூலக்கூறு நிறமாலை கூர்மையுடன் ஒரு பகுதியிலும், மறுபுறம் செல்லச் செல்ல மங்களாகவும் இருக்கும்
97.
(b) II மட்டும்
மின்தேக்கியின் மொத்த மின்னூட்டம் சுழி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards