12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒளிமின் விளைவு விதிகளை வரிசைப்படுத்துக
2.
படுஒளியின் அதிர்வெண்ணைப் பொருத்து நிறுத்து மின்னழுத்தம் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை விவரி.
3.
ஒளிமின்னோட்டத்தின் மீதான மின்னழுத்த வேறுபாட்டின் விளைவை விளக்குக.
4.
ஹெர்ட்ஸ், ஹால்வாக்ஸ் மற்றும் லெனார்டு ஆகியோரின் சோதனைகளை சுருக்கமாக விவாதி.
5.
எலக்ட்ரான் உமிழ்வு என்பதன் பொருள் என்ன? பல்வேறு வகை எலக்ட்ரான் உமிழ்வுகளைச் சுருக்கமாக விவரி.
1.
(i) கொடுக்கப்படும் படுகதிர் அதிர்வெண்ணுக்கு உமிழப்படும் ஒளி எலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது படுகதிரின் செறிவிற்கு நேர்த்தகவில் அமையும். மேலும் தெவிட்டு மின்னோட்டமும், ஒளிச்செறிவிற்கு நேர்த்தகவில் அமையும்.
(ii) ஒளிஎலக்ட்ரான்களின் பெரும் இயக்க ஆற்றலானது படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து அமையாது.
(iii) கொடுக்கப்படும் உலோகத்திற்கு, ஒளிஎலக்ட்ரான்களின் பெரும் இயக்க ஆற்றலானது படுகதிரின் அதிர்வெண்ணிற்கு நேர்த்தகவில் அமையும்.
(iv) கொடுக்கப்படும் உலோகப்பரப்பிற்கு படுகதிரின் அதிர்வெண் ஒரு குறிப்பிட்ட சிறும அதிர்வெண்ணை விட அதிகமாக இருந்தால் மட்டுமே ஒளிஎலக்ட்ரான் உமிழ்வு ஏற்படும் இந்தச் சிறும அதிர்வெண் பயன் தொடக்க அதிர்வெண் எனப்படும்.
(v) உலோகத்தின் மீது ஒளி படுவதற்கும் ஒளி எலக்ட்ரான்கள் உமிழப்படுவதற்கும் இடையே காலதாமதம் இருக்காது.
2.
1. படுகதிரின் செறிவு மாறிலி,
2. வெவ்வேறு அதிர்வெண்களுக்கு ஒளிமின்னோட்டம் ஆராயப்படுகிறது.
3. நிறுத்து மின்னழுத்தமானது அதிர்வெண்ணைப் பொறுத்து மாறுகிறது என்பது தெரிகிறது.
4. படுகதிரின் அதிர்வெண் அதிகரிக்கும் பொழுது நிறுத்து மின்னழுத்தமும், இயக்க ஆற்றலும் அதிகரிக்கின்றன.
5. ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணிற்கு ஒளி எலக்ட்ரான்கள் உமிழப்படுவதில்லை. இந்தச் சிறும அதிர்வெண் பயன்தொடக்க அதிர்வெண் எனப்படும். இதில் நிறுத்து மின்னழுத்தம் சுழி.
3.
1. படுகதிரின் அதிர்வெண் மற்றும் செறிவு மாறிலி.
2. ஆனோடை நேர் மின்னழுத்தத்தில் வைத்து கேத்தோடிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான் மூலம் ஒளி மின்னோட்டம் குறிக்கப்படுகிறது.
3. ஆனோடின் நேர் மின்னழுத்தம் அதிகரித்தால் ஒளி மின்னோட்டமும் அதிகரிக்கும்.
4. ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒளி மின்னோட்டம் தெவிட்டிய நிலையை அடைகிறது.
5. ஆனோடிற்கு எதிர்மின்னழுத்தம் அளிக்கும் போது உடனடியாக ஒளிமின்னோட்டம் சுழியாவதில்லை.
6. ஒரு குறிப்பிட்ட எதிர் மின்னழுத்தத்தில் ஒளி மின்னோட்டம் கழி ஆகிறது.
7. பெரும இயக்க ஆற்றலை கொண்ட ஒளி எலக்ட்ரான்கள் நிறுத்தி ஒளி மின்னோட்டத்தை சுழியாக்க ஆனோடிற்கு அழிக்கும் எதிர் மின்னழுத்தம் நிறுத்து மின்னழுத்தம் ஆகும்.
4.
ஹெர்ட்ஸின் சோதனை :
1887 இல் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் என்பவர், ஒரு உயர் மின்னழுத்த தூண்டு சுருள்களின் முனைகளில் இரு உலோகக் கோளங்களை இணைத்து அவற்றின் இடையே மின்னிறக்கத் தீப்பொறியை ஏற்படுத்தினார். தீப்பொறி ஏற்பட்டவுடன் மின் துகள்கள் முன்னும் பின்னும் தீவிரமாக அலைவுறுவதால் மின்காந்த அலைகள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்காந்த அலைகளைக் கண்டறிவதற்கு வட்ட வடிவில் வளைக்கப்பட்ட தாமிரக்கம்பி பயன்பட்டது. வெற்றிகரமாக அலைகள் கண்டறியப்பட்டாலும் சிறு தீப்பொறிகளைக் காண்பது கடினமாக இருந்தது. தீப்பொறிகளை எளிதில் காண்பதற்கு ஹெர்ட்ஸ் பல்வேறு முயற்சிகளைச் செய்தார். இறுதியில் புறஊதாக் கதிர்களை தீப்பொறி மீது விழச்செய்யும் போது அலை மேலும் தீவிரமடைவதைக் கண்டறிந்தார்.
தீப்பொறியின் இந்த செயல்பாட்டிற்கான காரணம் அந்தத் தருணத்தில் தெரியவில்லை. ஒளிமின் உமிழ்வே இச்செயலுக்கு காரணம் என பின்னர் கண்டறியப்பட்டது. புறஊதாக் கதிர்கள் உலோகக் கோளத்தின் மீது படும்போது அதன் மேற்பரப்பிலிருந்து எலக்ட்ரான் உமிழப்படுவதால் தான் தீப்பொறியின் தன்மை தீவிரமடைகிறது.
ஹால்வாக்ஸ் சோதனை
வில்ஹெம் ஹால்வாக்ஸ் எனும் ஜெர்மானிய இயற்பியலாளர் 1888 இல், தீப்பொறியின் மேற்கண்ட வித்தியாசமான இயல்பானது புறஊதாக் கதிரினால் ஏற்படுகிறது என்பதை எளிய சோதனை மூலம் நிரூபித்தார். மின்காப்பு தூணின் மீது வைக்கப்பட்ட தூய்மையான வட்ட வடிவ துத்தநாகத் தட்டு ஒன்று தங்க இலை மின்னூட்டங்காட்டியுடன் ஒரு கம்பி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வில் விளக்கிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களை மின்னூட்டமற்ற துத்தநாகத் தட்டின் மீது படுமாறு செய்தால் தட்டானது நேர்மின்னூட்டத்தைப் பெறுகிறது. ஆகவே படத்தில் காட்டியுள்ள இலைகள் ஒன்றுக்கொன்று விலகல் அடைகின்றன.
மேலும் எதிர் மின்னூட்டம் பெற்ற துத்தநாகத் தட்டின் மீது புற ஊதாக் கதிர்களைப் படுமாறு செய்தால் மின் துகள்கள் வேகமாக கசிவதால் இலைகள் மூடிக் கொள்கின்றன. நேர் மின்னூட்டம் பெற்ற துத்தநாகத் தட்டின் புறஊதாக் கதிர்கள் படும்போது, அது மேலும் நேர்மின்னூட்டம் கொண்டதாக மாறுகிறது. அதனால் இலைகள் மேலும் திறந்து கொள்கின்றன. மேற்கண்ட சோதனைகளிலிருந்து புறஊதாக் கதிர்களின் செயல்பாட்டினால் துத்தநாகத் தட்டிலிருந்து எதிர்மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன என்று முடிவாகிறது.
லெனார்டு சோதனை:
1902 ஆம் ஆண்டில், லெனார்டு என்பவர் எலக்ட்ரான் உமிழ்வு நிகழ்வினை விரிவாகச் சோதனை செய்தார். அவரது எளிய சோதனை படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த சோதனைக் கருவியில் A மற்றும் C என்று இரு உலோக தட்டுகள் வெற்றிடமாக்கப்பட்ட குவார்ட்ஸ் குழாயினுள் வைக்கப்பட்டுள்ளன. கால்வனாமீட்டர் G மற்றும் மின்கலத் தொகுப்பு B ஆகியவை மின் சுற்றில் இணைக்கப்பட்டுள்ளன.
C எனும் எதிர்மின் தட்டின் மீது புறஊதாக் கதிர்கள் படும்போது, மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதை கால்வனாமீட்டரின் விலக்கம் மூலம் அறியலாம். ஆனால் புறஊதாக் கதிர்கள் நேர்மின் தட்டின் மீது படும்போது, சுற்றில் எவ்வித மின்னோட்டமும் ஏற்படுவதில்லை. மேற்கண்ட சோதனைகளிலிருந்து, எதிர்மின் தட்டின் மீது புறஊதாக் கதிர்கள் விழும்போது எலக்ட்ரான்கள் உமிழப்படுகின்றன. அவை நேர்மின் தட்டு A வினால் கவரப்படுகின்றன என்று முடிவாகிறது. வெற்றிடக் குழாயின் வழியே எலக்ட்ரான்கள் நேர்மின் தட்டை அடைந்தவுடன் மின்சுற்று மூடப்பட்டு, மின்னோட்டம் பாய்கிறது. எனவே எதிர்மின் தட்டின் மீது படும் புறஊதாக் கதிர்கள் தட்டின் மேற்பரப்பில் இருந்த எலக்ட்ரான் உமிழ்வு நடைபெறுவதற்கு காரணமாக அமைகின்றன.
5.
உலோகத்தின் மேற்பரப்பில் இயங்கும் கட்டுறா எலக்ட்ரான்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றலை அளிப்பதன் மூலம் அதன் பரப்பின் மின்னழுத்த அரணிருந்து எலக்ட்ரான்கள் வெளியேற்றப்படும். பொருளின் எந்தவொரு பரப்பிலிருந்தும் எலக்ட்ரான் வெளியேற்றப்படும் நிகழ்வு எலக்ட்ரான் உமிழ்வு எனப்படும்
(i) வெப்ப அயனி உமிழ்வு:
ஒரு உலோகத்தை உயர் வெப்பநிலைக்குச் சூடேற்றும் போது, உலோகத்தின் பரப்பில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்கள் வெப்ப ஆற்றல் வடிவில் போதுமான ஆற்றலைப் பெற்று பரப்பிலிருந்து வெளியேறுகின்றன. இவ்வகை உமிழ்வு வெப்ப அயனி உமிழ்வு எனப்படும்.
வெப்ப அயனி உமிழ்வின் செறிவு (உமிழப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை) ஆனது பயன்படுத்தப்படும் உலோகம் மற்றும் அதன் வெப்பநிலையைப் பொருத்தது. எடுத்துக்காட்டுகள்: கேத்தோடு கதிர் குழாய்கள், எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் x கதிர் குழாய்கள் போன்றவை.
ii) புல உமிழ்வு: மிக வலிமையான மின்புலத்தை உலோகத்தின் குறுக்கே அளிக்கும் போது மின்புல உமிழ்வு ஏற்படுகிறது. இந்த வலிமையான மின்புலம் கட்டுறா எலக்ட்ரான்களை கவர்ந்திழுத்து, அவை பரப்பு மின்னழுத்த அரணைக் கடந்து வெளியேற உதவுகின்றது.
எடுத்துக்காட்டுகள்: புல உமிழ்வு வரிசை சுரங்க எலக்ட்ரான் நுண்ணோக்கிகள், புல உமிழ்வு காட்சிக் கருவி போன்றவை
(iii) ஒளியின் உமிழ்வு
குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சு உலோகப் பரப்பின் மீது படும்போது ஆற்றலானது கதிர்வீச்சில் இருந்து கட்டுறா எலக்ட்ரான்களுக்கு மாற்றப்படுகிறது. எனவே கட்டுறா எலக்ட்ரான்கள் பரப்பு அரணைக் கடந்து வெளியேறுவதற்கு போதுமான ஆற்றலைப் பெறுவதால் ஒளிமின் உமிழ்வு நடைபெறுகிறது. உமிழப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது படுகதிர்வீச்சின் செறிவினைப் பொருத்து அமையும்.
எடுத்துக்காட்டுகள்: ஒளி டையோடுகள், ஒளி மின்கலங்கள் முதலியன
(iv) இரண்டாம் நிலை உமிழ்வு
மிக வேகமாகச் செல்லும் எலக்ட்ரான் கற்றை உலோகத்தின் பரப்பின் மீது மோதும்போது, அதன் இயக்க ஆற்றல் உலோகப் பரப்பிலுள்ள கட்டுரா எலக்ட்ரான்களுக்கு மாற்றப்படுகிறது. இதனால் கட்டுறா எலக்ட்ரான்கள் போதிய அளவு இயக்க ஆற்றலைப் பெறுவதால் இரண்டாம் நிலை எலக்ட்ரான் உமிழ்வு ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டுகள்: பிம்பச் செறிவாக்கிகள், ஒலிபெருக்கிக் குழாய்கள் முதலியன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards