12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
வீச்சு பண்பேற்றத்தை தேவையான படங்களுடன் விவரி.
2.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு என்பதன் பொருள் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?
3.
தகவல் தொடர்பு அமைப்பின் அடிப்படை உறுப்புகளைத் தேவையான கட்டப்படத்துடன் விவரி.
4.
பண்பேற்றம் என்றால் என்ன? பண்பேற்றத்தின் வகைகளைத் தேவையான படங்களுடன் விளக்குக.
5.
டீ மார்கன் முதல் மற்றும் இரண்டாவது தேற்றங்களை கூறி நிரூபிக்கவும்.
1.

(அ) அடிக்கற்றை சைகை (ஆ) ஊர்தி சைகை (இ) வீச்சுப் பண்பேற்றப்பட்ட சைகை
அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி சைகையின் வீச்சு மாற்றப்பட்டால் அது வீச்சுப் பண்பேற்றம் எனப்படும். இங்கு ஊர்தி சைகையின் அதிர்வெண் மற்றும் கட்டம் மாறாமல் உள்ளன. வீச்சுப் பண்பேற்றமானது வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பில் பயன்படுகிறது.
தகவல்களைச் சுமந்து செல்லும் அடிக்கற்றை சைகை காட்டப்பட்டுள்ளது. உயர் அதிர்வெண் ஊர்தி சைகை மற்றும் வீச்சுப் பண்பேற்றப்பட்ட சைகை ஆகியவை தரப்பட்டுள்ளன. அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தத்திற்கு ஏற்ப, ஊர்தி அலையின் வீச்சு மாற்றப்படுவதைக் காணலாம்.
2.
செயற்கைக்கோள் தகவல்தொடர்பானது செயற்கைக்கோள் வழியாக பரப்பி மற்றும் ஏற்பி இடையே சைகையைப் பரிமாற்றும் தகவல்தொடர்பின் ஒரு வகையாகும். தகவல் சைகையானது புவி நிலையத்தில் இருந்து, வானில் நிலைகொண்டுள்ள செயற்கைக்கோளுக்கு மேலிணைப்பு (அதிர்வெண் பட்டை 6 GHz) ஒன்றின் மூலமாகப் பரப்பப்படுகிறது. பின்னர், அங்குள்ள டிரான்ஸ்பான்டர் என்ற கருவியால் பெருக்கப்பட்டு கீழிணைப்பு (அதிர்வெண் பட்டை 4 GHz) மூலமாக மற்றொரு புவி நிலையத்திற்கு மீண்டும் பரப்பப்படுகிறது.
பயன்பாடுகள்:
செயற்கைக்கோள்களானது அவற்றின் பயன்பாடுகள் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சில செயற்கைக்கோள்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
வானிலை செயற்கைக்கோள்கள்: மேகங்களின் நிறையை அளப்பதன் மூலம் மழை, அபாயகரமான சூறாவளி மற்றும் புயல்கள் ஆகியவற்றை முன்கணிப்பு செய்வதற்கு இந்தச் செயற்கைக்கோள்கள் நமக்கு உதவுகின்றன.
தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள்: இவை தொலைக்காட்சி, வானொலி, இணையச் சைகைகள் ஆகியவற்றை பரப்புவதற்குப் பயன்படுகின்றன.
வழிநடத்தும் செயற்கைக்கோள்கள்: கப்பல்கள், விமானங்கள் அல்லது வேறு எந்த பொருளின் புவிசார் அமைவிடத்தை கண்டறியும் பணிகளில் இவை ஈடுபடுகின்றன.
3.
(1) தகவல் (அடிக்கற்றை அல்லது உள்ளீடு சைகை)
தகவலானது பேச்சு, இசை, படங்கள் அல்லது கணினித்தரவு போன்ற வடிவில் இருக்கலாம். இந்தத் தகவலானது உள்ளீடு ஆற்றல் மாற்றிக்கு உள்ளீடாக அளிக்கப்படுகிறது.
(2) உள்ளீடு ஆற்றல் மாற்றி
பேச்சு, இசை, ஒலி போன்ற தகவல்களை அதற்குச் சமமான மின் சைகையாக மாற்றும் சாதனமே உள்ளீடு ஆற்றல் மாற்றியாகும். அசல் தகவலின் சமமான மின் சைகையானது அடிக்கற்றை சைகை எனப்படும். ஒலி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒலிவாங்கி உள்ளீடு ஆற்றல் மாற்றிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
(3) பரப்பி
இது பெருக்கி, அலையியற்றி, பண்பேற்றி மற்றும் திறன் பெருக்கி போன்ற சுற்றுகளைக் கொண்டுள்ளது. ஆற்றல் மாற்றியிலிருந்து பெறப்பட்ட மின்சைகை, பெருக்கியால் பெருக்கப்படுகிறது. இந்த அடிக்கற்றை சைகையை அலையியற்றியால் உருவாக்கப்பட்ட உயர் அதிர்வெண் கொண்ட ஊர்தி அலையோடு பண்பேற்றியால் மேற்பொருந்தச் செய்யப்படுகிறது. இந்த பண்பேற்றப்பட்ட சைகை நீண்ட தொலைவுக்கு செல்லும் வகையில் திறன் பெருக்கியால் திறன் அதிகரிக்கப்பட்டு விண்ணலைக் கம்பிக்கு அனுப்பப்படுகிறது.
(4) பரப்பும் விண்ணலைக் கம்பி
இது ரேடியோ சைகையை வெளியில் அனைத்து திசைகளிலும் பரப்புகிறது. சைகை, மின்காந்த அலை வடிவில், ஒலியின் திசைவேகத்தில் (3 x 108 மீ/வி) செல்கிறது.
(5) தகவல் தொடர்பு வழித்தடம்
பரப்பியில் இருந்து ஏற்பிக்கு குறைந்த இரைச்சல் அல்லது குலைவுடன் மின்சைகைகளாக பரப்புவதற்கு அல்லது கொண்டுச் செல்வதற்கு பயன்படுவது தகவல் தொடர்பு வழித்தட ஊடகமாகும். இது இரு வகைப்படும்.
(i) கம்பிவழி தகவல் தொடர்பு
கம்பிகள், கம்பிவடங்கள் மற்றும் ஒளி இழைகள் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி தகவல் பரப்புதல் கம்பிவழி தகவல் தொடர்பு ஆகும். இது நீண்ட தொலைவு பரப்புகைக்கு உகந்தல்ல. தொலைபேசி, உள் இணைப்பு மற்றும் கேபிள் தொலைக்காட்சி ஆகியவை உதாரணங்களாகும்.
(ii) கம்பியில்லா தகவல் தொடர்பு
வெளியை தகவல் தொடர்பு ஊடகமாக பயன்படுத்துகிறது. பரப்பு விண்ணலைக் கம்பியின் உதவியால், சைகைகள் மின்காந்த அலைகள் வடிவில் பரப்பப்படுகின்றன. நீண்ட தொலைவு பரப்புகைக்கு பயன்படுகிறது. செல்லிடப்பேசி, வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஆகியவை உதாரணங்களாகும்.

(6) ஏற்பி
தகவல் தொடர்பு ஊடகத்தின் வழியாக பரப்பப்பட்ட சைகைகள் ஒரு ஏற்கும் விண்ணலைக்கம்பியால் ஏற்கப்பட்டு, மின்காந்த அலைகளை ரேடியோ அதிர்வெண் சைகைகளாக மாற்றி, ஏற்பிக்கு அளிக்கப்படுகிறது. ஏற்பியானது பண்பிறக்கி, பெருக்கி, பகுப்பான் ஆகிய எலக்ட்ரானியக் சுற்றுகளைக் கொண்டுள்ளது. பண்பிறக்கியானது பண்பேற்றப்பட்ட அலையிலிருந்து அடிக்கற்றை சைகையைப் பிரித்தெடுக்கிறது. பின்னர் அடிக்கற்றை சைகை, பெருக்கிகளால் பெருக்கப்படுகிறது. இறுதியாக இவை வெளியீடு ஆற்றல் மாற்றிக்கு அளிக்கப்படுகிறது.
(7) மறுபரப்பிகள்
மறுபரப்பிகள், சைகைகள் அனுப்பப்படும் நெடுக்கம் அல்லது தொலைவை அதிகரிக்கப் பயன்படுகின்றன. இது பரப்பி மற்றும் ஏற்பியின் தொகுப்பாகும். சைகைகள் ஏற்கப்பட்டு, பெருக்கப்பட்டு மற்றும் மாறுபட்ட அதிர்வெண் கொண்ட ஊர்தி சைகை மூலம் மறுபடியும் சேருமிடத்திற்கு அனுப்பப்படுகிறது. விண்வெளியில் உள்ள தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(8) வெளியீடு ஆற்றல் மாற்றி
இது மின் சைகையை மீண்டும் அதன் தொடக்க வடிவமான ஒலி, இசை, படங்கள் அல்லது தரவு ஆகியனவாக மாற்றுகிறது. ஒலிப்பான்கள், படக்குழாய்கள், கணினித் திரை ஆகியன வெளியீடு ஆற்றல் மாற்றிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
4.
குறைந்த அதிர்வெண் கொண்ட அடிக்கற்றை சைகையானது (உள்ளீடு சைகை) அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ சைகையின் மீது மேற்பொருத்தப்படும் நிகழ்வு பண்பேற்றம் எனப்படும்.
வீச்சுப் பண்பேற்றம்:
அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி சைகையின் வீச்சு மாற்றப்பட்டால் அது வீச்சுப் பண்பேற்றம் எனப்படும். இங்கு ஊர்தி சைகையின் அதிர்வெண் மற்றும் கட்டம் மாறாமல் இருக்கும்.
அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தத்திற்கு ஏற்ப, ஊர்தி அலையின் வீச்சு மாற்றப்படுகிறது.
அதிர்வெண் பண்பேற்றம்:
அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்றாற்போல் ஊர்தி சைகையின் அதிர்வெண் மாற்றப்படுகிறது. இங்கு ஊர்தி சைகையின் வீச்சு மற்றும் கட்டம் மாறுவதில்லை.
விளைவுகள்:
1. அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தத்தில் ஏற்படும் உயர்வு, ஊர்தி சைகையின் அதிர்வெண்களை அதிகரிக்கிறது மற்றும் அதன் மறுதலையும் சாத்தியமாகும். இதனால் பண்பேற்றப்பட்ட அலையின் நிறமாலை அமுக்கங்களையும் தளர்வுகளையும் கொண்டுள்ளன.
2. அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் சுழியாக உள்ளபோது உள்ளீடு சைகை இயலாத போதும் ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றமில்லை, ஊர்தி அலை அதன் இயல்பான அதிர்வெண்ணில் உள்ளது. அது மைய அதிர்வெண் அல்லது ஓய்வு நிலை அதிர்வெண் என அழைக்கப்படுகிறது.
கட்டப் பண்பேற்றம்
* கட்டப்பண்பேற்றுதல், அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சானது ஊர்தி சைகையின் கட்டத்தை மாற்றுகிறது மற்றும் ஊர்தி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் மாறுவதில்லை,
* இது அதிர்வெண் பண்பேற்றத்தைப் போன்றதே ஆகும். ஆனால் ஊர்தி அலையின் அதிர்வெண்ணை மாற்றுவதற்கு பதிலாக இங்கு ஊர்தி அலையின் கட்டம் மாற்றப்படுகிறது.
* அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் நேர்க்குறி திசையில் அதிகரிக்கும் போது பண்பேற்றப்பட்ட அலையின் கட்ட முன்னணி மதிப்பு அதிகரிக்கிறது. அடிக்கற்றை சைகையின் எதிர் அலைச்சுற்றில் ஊர்தி அலையின் கட்டம் பின்தங்குகிறது.
*சைகை மின்னழுத்தம் குறியாக உள்ள போது ஊர்தி அதிர்வெண் மாறாமல் உள்ளது.
* கட்டப் பண்பேற்றத்திலும் ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றம் ஏற்படுகிறது. அதிர்வெண் மாற்றமானது பண்பேற்றும் சைகையின் மின்னழுத்தம் மற்றும் சைகையின் அதிர்வெண் ஆகியவற்றைச் சார்ந்தது.
5.
டீ மார்கனின் முதல் தேற்றம்:
தேற்றம்:
முதல் தேற்றத்தின் கூற்றானது, இரு லாஜிக் உள்ளீடுகளின் கூடுதலின் நிரப்பியானது, அவற்றின் நிரப்பிகளின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்.
நிரூபணம்:
NOR கேட்டின் பூலியன் சமன்பாடு வருமாறு, y = \(\overline{A+B}\)
குமிழ் இணைக்கப்பட்ட AND கேட்டுக்கான பூலியன் சமன்பாடு வருமாறு, y = \(\overline{A}\). \(\overline{B}\)
சமமான உள்ளீடுகளுக்கு இரு நேர்வுகளிலும் ஒரே வெளியீடு உருவாகிறது. அதனைக் கீழ்க்காணும் உண்மை அட்டவணையைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
| A | B | A+B | \(\overline{A+B}\) | \(\overline{A}\) | \(\overline{B}\) | \(\overline{A}\).\(\overline{B}\) |
| 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| 0 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 |
| 1 | 0 | 1 | 0 | 0 | 1 | 0 |
| 1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
மேற்கண்ட உண்மை அட்டவணையில் இருந்து பின்வரும் முடிவுக்கு வரலாம்.
\(\overline{A+B}\) = \(\overline{A}\) . \(\overline{B}\)
ஆகவே, டீ மார்கனின் முதல் தேற்றம் நிரூபிக்கப்பட்டது. ஒரு NOR கேட்டானது ஒரு குமிழ் இணைக்கப்பட்ட AND வாயிலுக்குச் சமம் என இது உணர்த்துகிறது.
தொடர்புடைய லாஜிக் சுற்று வரைபடம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

NOR கேட், குமிழ் இணைக்கப்பட்ட AND கேட்டுக்குச் சமமானது
டீ மார்கனின் இரண்டாம் தேற்றம்:
தேற்றம்: இரண்டாம் தேற்றத்தின் கூற்றானது, இரு உள்ளீடுகளின் பெருக்கற்பலனின் நிரப்பியானது, அதன் நிரப்பிகளின் கூடுதலுக்குச் சமமாகும்.
நிரூபணம்:
NAND கேட்டுக்கான பூலியன் சமன்பாடு வருமாறு, y = \(\overline{A.B}\)
குமிழ் இணைக்கப்பட்ட OR வாயிலுக்கான பூலியன் சமன்பாடு வருமாறு, y = \(\overline{A}\) + \(\overline{B}\)
A மற்றும் B உள்ளீடுகள் மற்றும் Y வெளியீடு ஆகும். சமமான உள்ளீடுகளுக்கு மேற்கண்ட இரு சமன்பாடுகளும் ஒரே வெளியீட்டை உருவாக்குகிறது. அதனைப் பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
| A | B | A.B | \(\overline{A.B}\) | \(\overline{A}\) | \(\overline{B}\) | \(\overline{A}\) + \(\overline{B}\) |
| 0 | 0 | 0 | 1 | 1 | 1 | 1 |
| 0 | 1 | 0 | 1 | 1 | 0 | 1 |
| 1 | 0 | 0 | 1 | 0 | 1 | 1 |
| 1 | 1 | 1 | 0 | 0 | 0 | 0 |
மேற்கண்ட உண்மை அட்டவணையில் இருந்து நாம் பின்வரும் முடிவுக்கு வரலாம். \(\overline{A.B}\) =\(\overline{A}\)+\(\overline{B}\)
ஆகவே, டீ மார்கனின் இரண்டாம் தேற்றம் நிரூபிக்கப்பட்டது. ஒரு NAND கேட்டானது ஒரு குமிழ் இணைக்கப்பட்ட OR கேட்டுக்குச் சமமானது என அது உணர்த்துகிறது.
தொடர்புடைய லாஜிக் சுற்று வரைபடம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards