12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
விலங்கியல் - உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
உயிரித் தொழில்நுட்பவியலை பயன்படுத்தும் நான்கு பெரிய துறைகள் யாவை?
2.
மரபு மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்களின் நேர்மறையான செயல்கள் யாவை?
3.
மரபணு வெளியேற்றம் என்றால் என்ன?
4.
உடல் செல் கரு மாற்றம் என்றால் என்ன?
5.
நமது உடலின் இன்சுலின் ஹார்மோனின் பங்கு யாது?
6.
குறுதிறன் வரையறு.(அ) குறுதிறனை எடுத்துக்காட்டுடன் வரையறுக்கவும்.
7.
பல்திறன் வரையறு.
8.
இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன?
9.
10.
எலைசா தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி – எதிர்பொருள் வினை அடிப்படையிலானது. இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக்குறைபாடான ஃபினைல் கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?
11.
rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?
12.
ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்று வேறுபடுகின்றது என்பதை விளக்குக.
13.
மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட இன்சுலின் என்பது யாது?
14.
பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகின்றது?
15.
PCR-ன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன? PCRல் மற்றும் டி.என்.ஏ பாலிமரேஸ் பங்கு யாது? PCR சுற்றில் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகின்றது?
1.
(i) உடல் நலம் (மருத்துவம்)
(ii) வேளாண்மை
(iii) தொழில் துறை
(iv) சுற்றுச்சூழல் ஆகியவை.
2.
(i) நீர்வளர்ப்பு
(ii) உயிரிகளால் சீரமைக்கப்படுதல்
(iii) சுற்றுச்சூழல் மேலாண்மை
(iv) உயிர் பாதுகாப்பு
(v) டி.என்.ஏ மறுசேர்க்கை செயல்முறைகள்
(vi) நிலையான விவசாய மற்றும் காடுகளின் உற்பத்தி போன்றவையாகும்.
3.
மரபணு வெளியேற்றம் என்பது ஒரு உயிரியிலுள்ள குரோமோசோம்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களை மரபுப்பொறியியல் வாயிலாக செயல்பட இயலாமல் செய்வதாகும்.
4.
உடற்செல் உட்கரு மாற்றிப் பொருந்துதல் எனும் தொழில்நுட்பத்தில் ஒரு உடற்செல்லையும் ஒரு அண்ட செல்லையும் கொண்டு ஒரு உயிருள்ள கரு உருவாக்கப்படுகிறது.
5.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை இன்சுலின் கட்டுப்படுத்துகிறது. செல்கள் குளுக்கோஸை எடுத்துக்கொண்டு அதை ஆற்றலாக மாற்றி வெளியிடுவதற்கு இன்சுலின் உதவுகிறது.
6.
குறுதிறன் எனப்படுவது தண்டு செல்கள் சில வகை செல்களாக மட்டும் வேறுபாடடையும் திறனாகும். எடுத்துக்காட்டாக லிம்ஃபாய்டு அல்லது மாயலாய்டு தண்டு செல்கள் B மற்றும் T செல்களாக மட்டும் வேறுபாடடைதல், ஆனால் RBC யாக வேறுபாடடைவதில்லை.
7.
பல்திறன் எனப்படுவது தொடர்புடைய பல்வகை செல் வகைகளாக மாற்றமும் தண்டு செல்களின் திறனாகும். எடுத்துக்காட்டாக இரத்தத்தண்டு செல்கள், லிம்ஃபோசைட்டுகள், மோனோசைட்டுகள், நியூட்ரோஃபில்கள் மற்றும் பிற செல்களாக வேறுபாடடைதல்.
8.
பாலூட்டிகளின் செல்கள் வைரஸ்களால் பாதிக்கப்படும் போது அச்செல்களால் உற்பத்தி செய்யப்படும் சிற்றினக்குறிப்பீடு தன்மையுடைய, புரதத்தாலான வைரஸ் எதிர்ப்பு பொருட்களே 'இன்டர்ஃபெரான்கள்' ஆகும்.
9.
10.
(i) ஆம், எலைசா (ELISA) தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக் குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை கண்டறியலாம்.
(ii) எலைசா தொழில்நுட்பத்தில் நோயாளிகளின் உடலில் உள்ள சீரத்தில் ஃபினைல்கீட்டோனூரியாவின் எதிர்ப்பொருள் அளவைத் தீர்மானித்து குறிப்பிட்ட எதிர்ப்பொருள் தூண்டிகளை கண்டறிந்து நோயினை கண்டறிய முடிகிறது.
11.
(i) முற்காலத்தில் பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெறப்பட்டது.
(ii) விலங்கு இன்சுலினுக்கு மனித இன்சுலினுக்கும் சிறிய அளவில் வேறுபாடுகள் இருந்தால், சில நோயாளிகளில் இது ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
12.
(i) 1997ல் முதன் முதலில் ரோஸி எனும் மரபியல்பு மாற்றப்பட்ட பசு உருவாக்கப்பட்டது.
(ii) இப்பசுவின் பால், மனித லேக்டால்புமின் கொண்ட புரதச் செறிவு மிக பாலாகக் காணப்பட்டது.
(iii) சாதாரண பசுவின் பாலை விட, புரதம் செறிந்த இப்பசும்பாலானது பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவூட்டம் மிக்க ஒரு சரிவிகித உணவாகும்.
13.
(i) டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் இன்சுலின் ஆகும்.
(ii) 1982 ம் ஆண்டு சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக இந்த இன்சுலினைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.
(iii) 1986 ல் ஹியுமுலின் என்னும் வணிகப் பெயரோடு சந்தையில் மனித இன்சுலின் விற்பனை செய்யப்பட்டது.
14.
(i) இது இயல்புதிரிபு உற்பத்தி நீட்சி ஆகிய மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
(ii) அதிக வெப்பநிலையை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் இரட்டைச் சுருள் டி.என்.ஏ வின் இயல்பைத் திரித்து இரண்டு தனித்தனியான இழைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவை 95o C வெப்ப நிலையில் நடைபெறுகிறது.
(iii) முதன்மை இணைப்பு இழையின் நீட்சி அல்லது உருவாக்கத்தின் போது கலவையின் வெப்ப நிலை 75o C-க்கு உயர்த்தப்பட்டு போதுமான கால அளவிற்கு நிலை நிறுத்தப்படுகிறது.
(iv) இதனால் Tag டி.என்.ஏ பாலிமரேஸ் தனித்த அச்சு வார்ப்பு டி.என்.ஏ விலிருந்து நகலெடுக்கப்பட்டு முதன்மை இணைப்பு இழை நீட்சியடையச் செய்கிறது.
(v) அடைகாப்புக் காலத்தின் இறுதியில் இரு அச்சு வார்ப்பு இழைகளும் பகுதியளவு இரட்டைச் சுருள் இழைகளாக மாற்றப்படும்.
(vi) இவ்வாறு உருவாகும் இரட்டைச் சுருள்களிலுள்ள ஒவ்வொரு புது இழையும் கீழ் நோக்கிய வேறுபட்ட தொலைவுகளில் நீண்டு காணப்படும்.
15.
PCR ன் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு முன்னோடிகள் தேவைப்படுகின்றன. அவையாவன முன்னோக்கு மற்றும் பின்னோக்கு முன்னோடிகள்.
PCR ல் டி.என்.ஏ பாலிமரேஸின் பங்கு:
PCR ல் முதன்மை இணைப்பு அச்சு வார்ப்பு இழையைக் கொண்டு Taq டி.என்.ஏ பாலிமரேஸைப் பயன்படுத்தி டி.என்.ஏ உருவாக்கப்படுகிறது.
டி.என்.ஏ பாலிமரேஸ் நொதியின் மூலம்:
கொதிநிலையில் வாழும் பாக்டீரியா தெர்மசு அக்குவாட்டிக்கசில் இருந்து பெறப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards