12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
விலங்கியல் - உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?
பாலூட்டிகள்
பறவைகள்
இருவாழ்விகள்
முட்தோலிகள்
2.
பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.
இலையுதிர் காடுகள்
வடகிழக்கு இந்தியாவின் மழைக்காடுகள்
ஊசியிலைக் காடுகள்
அமேசான் காடுகள்
3.
உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
எட்வேர்டு வில்சன்
வால்டர் ரோசன்
நார்மன் மியர்ஸ்
ஆலிஸ் நார்மன்
4.
உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம் ____.
WWF
IUCN
ZSI
UNEP
5.
பின்வரும் மண்டலங்களில் அதிகபட்ச பல்வகைத் தன்மை கொண்ட பகுதி எது?
குளிர் பாலைவனம்
வெப்ப மண்டலக்காடுகள்
மிதவெப்ப மழைக்காடுகள்
சதுப்பு நிலங்கள்
6.
உயிரிய பல்வகைத்தன்மையின் மூன்று நிலைகள் யாவை?
7.
8.
உயிரியப் பல்வகைத்தன்மையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும்?
9.
உயிரிய பல்வகைத்தன்மையின் இழப்பிற்கான பல்வேறு காரணங்களை பட்டியலிடுக.
10.
மூலச்சிற்றினங்கள் மரபற்று போவது உயிரிய பல்வகைத்தன்மை இழப்பிற்கு வழிவகுத்தது- நியாயப்படுத்துக
11.
உயிரியப் பல்வகைத்தன்மை முக்கியமானது ஏன்? பாதுகாக்கத் தகுதியானதா?
12.
மிகை உள்ளூர் உயிரினப்பகுதிகள் பொதுவாக எங்கு காணப்படுகிறது? ஏன்?
13.
நம் வெப்ப மண்டலங்களிலிருந்து துருவங்கள் நோக்கி நகரும் பொழுது உயிரிய பல்வகைத்தன்மையின் பரவல் குறைகிறது. ஏன்?
1.
(c)
இருவாழ்விகள்
2.
(d)
அமேசான் காடுகள்
3.
(b)
வால்டர் ரோசன்
4.
(b)
IUCN
5.
(b)
வெப்ப மண்டலக்காடுகள்
6.
(i) மரபியல் பல்வகைத் தன்மை
(ii) சிற்றினப் பல்வகைத் தன்மை
(iii) சமூக / சூழ்நிலை மண்டல பல்வகைத் தன்மை
7.
8.
உயிரியப் பல்வகைத் தன்மையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நம் பங்களிப்பு
பாதுகாப்பின் பொதுவான உத்திகள்:
(i) அபாயத்திலுள்ள அனைத்து சிற்றினங்களையும் அடையாளம் கண்டு பாதுகாத்தல்.
(ii) பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயிரிகளையும் அவற்றோடு தொடர்புடைய வனவிலங்குகளையும் அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதியில் பாதுகாத்தல்.
(iii) உணவு, இனப்பெருக்கம், பேணி வளர்த்தல், ஓய்விடம் ஆகியவற்றுக்கான வாழ்விடங்களில் மிக ஆபத்தான நிலையில் இருப்பவைகளை அடையாளம் கண்டு பாதுகாத்தல்.
(iv) உயிரினங்களின் உறைவிடம், உணவு மற்றும் இனப்பெருக்க பகுதிகளை கண்டறிந்து பாதுகாத்தல்.
(v) நிலம், நீர் மற்றும் காற்று முதலியவற்றை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாத்தல்.
(vi) வன உயிரிகளின் பாதுகாப்புச் சட்டம் அமல் படுத்துதல்.
9.
உயிரிய பல்வகைத் தன்மை குறைவதற்கான முக்கிய காரணங்கள்:
(i) வாழிட இழப்பு, காடுகள் துண்டாடப்படுதல் மற்றும் அழித்தல்
(ii) சுற்றுச்சூழல் மாசுறுதல் மற்றும் மாசுப்படுத்திகள் (புகைப்பனி, தீங்குயிர் கொல்லிகள், களைக் கொல்லிகள், எண்ணெய் கசிவுகள், பசுமை இல்ல வாயுக்கள்)
(iii) தட்பவெப்பநிலை மாற்றம்
(iv) வெளிநாட்டு சிற்றினங்களை அறிமுகப்படுத்துதல்
(v) வளங்கள் அதிகமாக சுரண்டப்படுதல் (ஆக்கிரமிப்பு, மரங்களை வரையறையின்றி வெட்டுதல், மிகை மீன்பிடிப்பு, வேட்டையாடல், சுரங்கங்கள்)
(vi) தீவிர வேளாண்மை, நீருயிரி வளர்ப்பு நடைமுறைகள்
(vii) உள்ளூர் இனங்களுடன் வெளி இனங்களை இணைத்து கலப்பினம் உருவாக்குவதால் உள்ளூர் இனங்கள் அழிதல்.
(viii) இயற்கை பேரழிவுகள்(ஆழிப்பேரலை, காட்டுத்தீ, நிலநடுக்கம், எரிமலை)
(ix) தொழில்மயமாக்கம், நகரமயமாக்கம், உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் கப்பல் போக்குவரத்து பணிகள், தகவல் தொடர்பு கோபுரங்கள், அணை கட்டுதல், கட்டுப்பாடற்ற சுற்றுலா, ஒற்றை பயிர் சாகுபடி ஆகியவை பொதுவான அச்சுறுத்தலாகும்.
(x) இணை மரபற்றுப்போதல்.
10.
(i) உலகின் எந்தப் பகுதியிலும் ஒரு இனத்தின் ஒரு உறுப்பினர் கூட உயிருடன் இல்லை என்ற நிலையை அடைந்த இனம் மரபற்றுப் போனதாகக் கருதப்படுகிறது.
(ii) கடந்த 450 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஐந்து பேரழிவுகள் நிகழ்ந்து அதன் விளைவாக உலகில் ஏறத்தாழ 50% தாவர மற்றும் விலங்கினங்கள் அழிந்துள்ளன.
(iii) உயிரினங்களின் அழிவிற்கு மிக கடுமையான சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் இனத்தொகை பண்புகளும் காரணமாகும்.
இயற்கை வழி மரபற்று போதல்:
(i) சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கொன்றுண்ணிகள், நோய்கள் போன்ற காரணங்களால் ஒரு சிற்றினம் மேம்பட்ட தகவமைப்புகளைக் கொண்ட மற்றொரு சிற்றினத்தால் மாற்றம் செய்யப்படுகிறது.
(ii) அகக்கலப்பின் வீரியக் குறைவு காரணமாக சிறு இனக்கூட்டங்கள் பெரிய இனக் கூட்டங்களை விட விரைவில் மரபற்று போகின்றன.
பெருந்திரள் மரபற்று போதல்:
(i) 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெர்மியன் காலத்தில் பேரழிவு ஏற்பட்டு ஆழமற்ற கடல்நீரில் வாழ்ந்த 90% முதுகு நாணற்ற உயிரினங்கள் மரபற்று போயின.
மானுட செயல்களால் மரபற்றுப் போதல்:
(i) வேட்டையாடுதல், வாழிடச் சீரழிவு, மிகை பயன்பாடு, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகள் அழிவைத் தூண்டுகின்றன.
(ii) வாழிட இழப்பு காரணமாக பல இருவாழ்விகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக அறியப்படுகிறது.
11.
நம் கோளத்தின் நல்வாழ்விற்கும், உயிரிகள் நிலைத்திருப்பதற்கும், உயிரியப் பல்வகைத் தன்மை அவசியமானதாகும்.
உயிரிய பல்வகைத் தன்மையின் முக்கியத்துவம்
இதை கீழ்கண்ட கோணத்தில் நோக்கி அதனை அளவீடு செய்யலாம்.
1. சூழ்நிலை மண்டல சேவைகள்
2. உயிரிய வளங்கள்
3. உயிரிய பல்வகைத் தன்மையின் சமூகப்பயன்கள்
முக்கிய செயல்பாடுகள்:
(i) ஊட்டச்சத்து சுழற்சி அல்லது உயிரிய புவி (N2, C, H2O, P, S) சுழற்சிகளின் தொடர்ச்சி.
(ii) மண் நுண்ணியிரிகள் வெவ்வேறு ஊட்ட நிலை உறுப்பினர்களோடு சேர்ந்து மண் உருவாக்கம், சீரமைப்பு அல்லது மண் வள பராமரிப்பு ஆகியவை நடைபெறுதல்.
(iii) சூழ்நிலை மண்டலத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் உணவு வளங்களை வழங்குதல்.
(iv) நீர் பிடிப்பு பகுதிகளாக, வடிகட்டிகளாக நீரோட்ட நெறி படுத்திகளாக மற்றும் நீர் சுத்திகரிப்பாளர்களாக செயல்படுதல்.
(v) தட்ப வெப்ப நிலையின் நிலைத்தன்மை, மழைப்பொழிவு, வெப்பநிலை நெறிப்படுத்துதல், Co2 உறிஞ்சப்படுதல், ஆகியவற்றிற்கு காடுகள் அவசியம். பதிலாக காடுகள் அங்குள்ள தாவரங்களின் வகைகளாகவும், அடர்த்தியையும் ஒழுங்குப்படுத்துகிறது.
(vi) காட்டு வளங்களின் மேலாண்மை மற்றும் நிலையான வளர்ச்சி.
(vii) உயிரியல் கூறுகளிடையே சமநிலையை பராமரித்தல்.
(viii) மனிதர்கள் உற்பத்தி செய்கின்ற குப்பைகள், கழிவு நீர், சாக்கடை மற்றும் வேளாண் கழிவுகள் ஆகியவற்றை சிதைப்பதில் நுண்ணுயிரிகள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.
(ix) உணவு வளங்கள், மரபியல் வளங்கள், மருந்து வளங்கள் மற்றும் எதிர்கால உயிரிய வளங்கள் போன்றவற்றிற்கான சேமிப்பு இடமாக உயிரிய பல்வகைத் தன்மை மண்டலங்கள் உள்ளன.
(x) தனித்துவமான அழகு உணர்வு, சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களைத் தருகிறது. சுற்றுலாவிற்கென வணிக முக்கியத்துவமும் உண்டு.
12.
(i) அபாய நிலை மிகை உள்ளூர் உயிரினப்பகுதி என்பது குறைந்தது 1500 குழல் காற்றைக் கொண்ட தாவர இனங்களில் 70%க்கும் அதிகமான மூல தாவர இனங்களை இழந்த பகுதியாகும்.
(ii) உலகில் 35 உயிரியப் பல்வகைத் தன்மை அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதிக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(iii) அதில் 4 இந்தியாவில் உள்ளது. அவை,
1) இமய மலை (முழு இந்திய இமய மலைத் தொடர் மண்டலம்)
2) மேற்கு தொடர்ச்சி மலைகள்
3) இந்தோ - பர்மா, அசாம் மற்றும் அந்தமான் தொகுதி தீவுகள்.
4) சுந்தா லேண்ட் - குமரிக்கண்டம் நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கியது.
13.
(i) வெப்பநிலை, மழைப்பொழிவு, நிலநடுக்கோட்டிலிருந்து தூரம், கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் ஆகியவை பல்வகைத் தன்மை பரவலின் பங்கினை நிர்ணயிக்கும் சில காரணிகளாகும்.
(ii) துருவங்களில் இருந்து பூமத்திய ரேகை வரை பல்வகைத் தன்மை அதிகரிக்கின்றது.
(iii) துருவப் பகுதியிலிருந்து மிதவெப்ப மண்டலத்தை நோக்கி நகரும்பொழுது பல்வகைத் தன்மை அதிகரித்து வெப்ப மண்டல பகுதிகளில் உச்சத்தை அடைகின்றது.
(iv) ஆகவே துருவ மற்றும் மிதவெப்ப மண்டலங்களை விட வெப்ப மண்டல பகுதிகள் பல்வகைத் தன்மையின் புகலிடமாக திகழ்கின்றன.
(v) மிதவெப்ப மண்டலங்களில் குளிர் காலத்தில் கடுமையான கால நிலையும், அதே நேரத்தில் துருவப் பகுதியில் ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் மிகக் கடுமையான காலநிலையும் நிலவுகின்றது.
(vi) தன் நிலப்பரப்பில் பெரும் பகுதியை வெப்ப மண்டலத்தில் கொண்ட இந்தியாவில் 1200 க்கும் அதிகமான பறவை இனங்கள் உள்ளன.
(vii) உயரமான மலைப்பகுதிகளில் மேலே செல்ல செல்ல வெப்பநிலை குறைவின் காரணமாக உயிரினங்களின் பல்வகைத் தன்மை குறைகின்றது.
வெப்ப மண்டல பகுதிகளில் உயிரிய பல்வகைத் தன்மையின் செழுமையான காரணங்கள்:
(i) நிலநடுக்கோட்டின் இருபுறங்களிலும் உள்ள கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில்
(ii) உயிரினங்கள் வாழ இணக்கமான வாழிடங்கள் உள்ளன.
(iii) வெப்ப மண்டலங்களில் உள்ள சூழ்நிலைக் கூறுகள் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதுவாக உள்ளன.
(iv) 27o C முதல் 35o C வரை வெப்ப நிலை நிலவுகிறது. இந்த வெப்பநிலை உயிரினங்களின் வளர்சிதை மாற்றங்கள் எளிதாகவும் மற்றும் அதிதிறனுடனும் செயல்பட உதவுகிறது.
(v) ஆண்டுக்கு 200 செ.மீ க்கும் அதிகமான மழை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards