12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/08/2019
விலங்கியல் - பரிணாமம்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
2.
ஊர்வன இனத்தின் பொற்காலம்
மீசோசோயிக் பெருங்காலம்
சீனோசோயிக் பெருங்காலம்
பேலியோசோயிக் பெருங்காலம்
புரோட்டிரோசோயிக் பெருங்காலம்
3.
ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கப்படும்?
மூதாதைத் தன்மை
ஆன்ட்டோஜெனி
பைலோஜெனி (இன வரலாறு)
தொல்லுயிரியல்
4.
வளர்கரு பிளாசம் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?
டார்வின்
ஆகஸ்ட் வீஸ்மேன்
லாமார்க்
ஆல்ஃப்ரட் வாலாஸ்
5.
பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.
காற்றில்
நிலத்தில்
நீரில்
மலைப்பகுதியில்
6.
டார்வினியக் கோட்பாடுகளுக்கான முக்கிய எதிர் கருத்துக்கள் யாவை?
7.
குவி பரிணாமம் மற்றும் விரிபரிணாம நிகழ்ச்சிகளை ஒவ்வொரு எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக
8.
மூன்று வகை புதைபடிவமாக்கல் வகைகளை விவரி.
9.
10.
11.
நியாண்டர்தால் மனிதன் மற்றும் நவீன மனிதனுக்கிடையே உள்ள தோற்ற வேறுபாடுகள் யாவை?
12.
திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.
13.
நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கிய தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக
14.
புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?
15.
லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?
16.
டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும் சொற்றொடரை நியாயப்படுத்துக.
17.
இயற்கைத் தேர்வு செயல்படுதலை,கரும்புள்ளி அந்திப்பூச்சியினை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்குக, இந்நிகழ்ச்சியை எவ்வாறு அழைக்கலாம்?
1.
(d)
2.
(a)
மீசோசோயிக் பெருங்காலம்
3.
(c)
பைலோஜெனி (இன வரலாறு)
4.
(b)
ஆகஸ்ட் வீஸ்மேன்
5.
(c)
நீரில்
6.
டார்வினியத்திற்கான எதிர் கருத்துக்கள்:
1. மாறுபாடுகள் தோன்றும் முறை குறித்து டார்வின் சரியாக விளக்கவில்லை.
2. தகுதியுடையன பிழைத்தவை மட்டுமே விளக்குகிறது. அத்தகுதியை எவ்வாறு பெறுகின்றன என்பதை விளக்கவில்லை.
3. அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத சிறு மாறுபாடுகளை மட்டும் டார்வின் கவனத்தில் கொண்டார்.
4. உடல் செல் மற்றும் இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்களை அவர் வேறுபடுத்தவில்லை.
5. எச்ச உறுப்புகள் அளவுக்கதிகமாக சிறப்பு பெற்றிருத்தலைக் குறித்து டார்வின் விளக்கவில்லை.
7.
| விரி பரிணாமம் | குவி பரிணாமம் | ||
| 1 | அமைப்பொத்த உறுப்புகள் விரி பரிணாமத்தை ஏற்படுத்தும் | செயலொத்த உறுப்புகள் குவி பரிணாமத்தை உருவாக்கும் | |
| 2 | உருவாக்கத்தை ஒரே மாதிரியாக அமைந்து வெவ்வேறு செயல்களை செய்யக் கூடிய உறுப்புகள் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும். | அமைப்பு அடிப்படையில் வேறுபட்டு ஒரே விதமான செயலைச் செய்யக் கூடிய உறுப்புகள் செயலொத்த உறுப்புகள் ஆகும். | |
| விலங்குகளில் எடுத்துக் காட்டுகள் | விலங்குகளில் எடுத்துக் காட்டுகள் | ||
| வெவ்வேறு முதுகெலும்புகளின் முன்னங்கால்கள் அமைப்பில் ஒற்றுமை காணப்படுகின்றன. | பாலூட்டி மற்றும் ஆக்டோபஸ் ஆகியவற்றின் கண்கள். பெங்குவின் மற்றும் டால்பின்களின் அகலத் துடுப்புகள். |
||
| தாவரங்களில் எடுத்துக் காட்டுகள் | தாவரங்களில் எடுத்துக் காட்டுகள் | ||
| காகிதப்பூக்கள் உள்ள முட்கள் மற்றும் பட்டாணியில் காணப்படும் பற்றுக் கம்பிகள் முள்பாதுகாப்பு பற்றுக்கம்பிகள் | சீனக் கிழங்குகளில் வேர் மாற்றுரு. உருளைக் கிழங்கின் தண்டின் மாற்றுரு. இரண்டு தாவரங்களிலும் இவை உணவு சேமிப்பு என்ற பொதுவான செயலை செய்கின்றன. |
||
8.
1) எஞ்சிய உடல் பகுதிகள்:
1. விலங்குகளின் மிகக் கடினமான உடல் பகுதிகளை எலும்புகள் பற்கள் அல்லது ஓடுகள் பூமியின் அடுக்குகளில் பாதுகாக்கப்படுகின்றன.
2. கடல் வாழ் விலங்குகளின் எலும்புகள் ஓடுகள் படிவுகளால் மூடப்படுகின்றன.
3. கடல் நீரின் உப்புத்தன்மையால் அவை கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன.
4. 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கம்பளி மாமுத் யானைகள் சைபீரியாவில் உறைந்த கடற்கரைப் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது.
5. சில மனிதர்களின் மற்றும் விலங்குகளின் உடல்கள் பொம்பெய் என்ற பழங்கால நகரத்தில் வெசுவியஸ் எரிமலைச் சாம்பலில் பாதுகாக்கப்பட்டிருந்தன.
2) கல்லாதல்:
1. விலங்குகள் இறந்த பின்னர் உடல் பகுதியின் மூலக்கூறுகள் தாது உப்புகள் மூலக்கூறுகளால் பதிலீடு செய்யப்படுகின்றன.
2. மூல உடல்பகுதிகள் சிறிது சிறிதாக அழிந்து விடுகின்றன.
3. இரும்பு பைரைட்டுகள், சிலிகா கால்சியம் கார்பனேட், மெக்னீசியம் பைகார்பனேட்டுகள் போன்ற முக்கிய தாது உப்புகள் பெரும் பணியாற்றுகின்றன.
3) இயற்கையான அச்சுகளும் வார்ப்புகளும்.
அச்சுகள்
இறந்த விலங்குகளின் உடல்கள் மென்மையான சேறு போன்ற பகுதியில் கடினமாகி பின்பு கல்லாக மாறுகிறது.
வார்ப்புகள்
அச்சுகளின் உட்புறக் குழிகள் தாது உப்புகளால் நிரப்பப்பட்டு படிவமாக மாறுகின்றன.
கோப்ரோலைட்டு
1. கடினமாக்கப்பட்ட மலப்பொருட்கள் சிறு உருண்டைகளாக காணப்படுதல் கோப்ரோலைட்டுகள் எனப்படும்.
2. இதன் மூலம் விலங்குகளின் உணவு பழக்கத்தினை அறிந்து கொள்ளலாம்.
9.
10.
11.
நியாண்டர்தால் மனிதன் நவீன மனிதரிடமிருந்து பின்வரும் பண்புகளால் மாறுபட்டுள்ளான்
1. பாதி நிமிர்ந்த நிலை
2. தட்டையான மண்டை ஓடு
3. சாய்வான நெற்றி
4. மெலிதான பெரிய கண் குழிகள்
5. கனமான கண்புருவ மேடுகள்
6. துருத்திய தாடைகள் கன்னங்கள் அற்றதன்மை
12.
திடீர் மாற்றம் இயற்கைத் தேர்வு, மரபியல் நகர்வு, மரபணு ஓட்டம் ஆகிய நான்கு காரணிகள் ஹார்டி - வீன்பெர்க் சமநிலையை பாதிக்கின்றன.
அ) திடீர்மாற்றம்:
திடீர் மாற்றம் என்பது மரபியல் மாறுபாடு ஆகும். திடீர் மாற்றம் மரபியல் மாறுபாடுகள் தோன்றுவதற்கான மூலகாரணமாக இருந்தாலும் பெரும்பாலான உயிரினங்களில் திடீர் மாற்ற வீதம் குறைவாகவே இருக்கும். எனவே ஒரு அல்லீல் நிகழ்வெண்ணில் ஏற்படும் புதிய திடீர் மாற்றம் அடுத்தடுத்த தலைமுறைகளில் பெரிய அளவில் இருக்காது.
ஆ) இயற்கைத்தேர்வு:
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு அல்லீல் (அல்லது வேறுபாடுடைய அல்லீல்களின் சேர்க்கை ஒரு உயிரினத்தை வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் தகுதிப்படுத்தும் போது இயற்கைத் தேர்வு நடைபெறுகிறது.
அந்த அல்லீல் தகுதியைப் குறைக்கும்போது அதன் நிகழ்வெண் அடுத்தடுத்த தலைமுறைகளில் குறைகிறது.
ஒரு குறிப்பிட்ட மரபணுவின் பரிணாமப்பாதை என்பது பல்வேறு பரிணாம செயல்முறைகள் ஒரே நேரத்தில் செயல்படுவதன் விளைவாகும். எடுத்துக்காட்டாக ஒரு மரபணுவின் அல்லீல் நிகழ்வெண், மரபணு ஓட்டம் மற்றும் மரபியல் நகர்வு ஆகிய இரண்டு காரணிகளால் மாற்றப்படலாம். அதே நேரத்தில்
மற்றோரு மரபணு திடீர் மாற்றத்தினால் இயற்கைத்தேர்வு ஏற்கத்தக்க புதிய அல்லீலை உருவாக்கலாம்.
இ) மரபியல் நகர்வு:
வாய்ப்புகள் காரணமாக அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு இனக்கூட்டத்தின் அல்லீல் நிகழ்வெண்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் பரிணாம நிகழ்வே மரபியல் நகர்வு ஆகும்.
மரபியல் நகர்வு இனக்கூட்டத்தின் அனைத்து அளவுகளிலும் நடைபெறும் ஆனால் இதன் விளைவுகள் சிறிய இனக்கூட்டத்தில் வலிமை உடையதாக இருக்கும். இதன் விளைவாக சில அல்லீல்கள் நிலை நிறுத்தப்படலாம்.
இயற்கை இடர்பாடு காரணமாக இனக்கூட்டத்தின் அளவு குறைந்திருந்தாலும். (சீசா கழுத்து விளைவு) அல்லது மூல இனக்கூட்டத்திலிருந்து ஒரு சிறுபகுதி பிரிந்து சென்று புதிய கூட்டத்தை உருவாக்கினாலும் (நிறுவனர் விளைவு) மரபியல் நகர்வின் விளைவு அதிகமாக இருக்கும்.
13.
நிலைப்படுத்துதல் தேர்வு:
1. நிலையான சுற்றுச்சூழல் இருக்கும் போது செயல்படுகிறது.
2. சராசரி புறத்தோற்றப் பண்புகள் உடைய உயிரிகள் தப்பிப் பிழைக்கும்.
3. இரு பக்கங்களிலும் உள்ள மிகை பண்புகள் உயிரினங்கள் உயிரினத் தொகையிலிருந்து நீக்கப்படும்.
4. புதிய சிறப்பினைமாக்கல் நிகழாது.
5. புறத்தோற்ற பண்புகளின் நிலைத்தன்மை தலைமுறைகளிலும் மாறாமல் பேணப்படும்.
6. உதாரணம் புயலின் போது தப்பி வாழ்ந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சராசரி அளவை ஒட்டி இருக்கும்.
7. புயலுக்குத் தாக்குப்பிடிக்க இயலாத சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை மாறுபாடுகளின் விளிம்புகளில் சேகரமாகி விடுகிறது. இப்போக்கு நிலைப்படுத்துதல் தேர்வினைக் குறிக்கும்.
இலக்கு நோக்கி முறை:
1. படிப்படியாக மாற்றம் பெறும் சுற்றுச்சூழல் இலக்கு நோக்கிய தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
2. புறத்தோற்றப் பண்புகள் பரவலின் ஒரு முனையிலிருந்து மறுமுனையை நோக்கி படிப்படியாக உயிரினங்கள் நீக்கப்படுகின்றன.
3. எடுத்துக்காட்டாக ஆண் மற்றும் பெண் சிட்டுக்குருவிகளின் உடல் அளவில் உள்ள வேறுபாடுகளைக் கூறலாம்.
4 ஆண் மற்றும் பெண் சிட்டுக்குருவிகளின் புறத்தோற்றத்தில் ஒன்று போல தோன்றினாலும் அவற்றின் உடல் எடை வேறுபாடுகள் காணப்படும்.
5. பெண் குருவிகள் அதன் உடல் எடையோடு தொடர்புடைய இலக்கு நோக்கிய தேர்வு முறையை வெளிப்படுத்துகிறது.
உடைத்தல் முறைத் தேர்வு:
1. ஒரே விதமான சுற்றுசூழல் நிலை மாற்றம் பெற்று பல்வகை சுற்றுசூழல் நிலைகளைக் கொண்டதாக மாறும் போது இவ்வகைத் தேர்வு முறை செயல்படுகிறது.
2. இரு முனைகளிலும் காணப்படும் புறத்தோற்ற பண்புகளை உடைய உயிரினங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
3. சராசரி புறத்தோற்ற பண்புகளை உடைய உயிரினங்கள் இனக்கூட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன.
4. இனக்கூட்டம் துணை இனக்கூட்டங்களாகப் பிரிகின்றன.
5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட சிற்றினங்கள் தோன்றுகின்றன.
6. எடுத்துக்காட்டு: காலபாகஸ் தீவுகளில் வாழும் டார்வீனின் குருவிகளில் உணவாகப் பயன்படும் விதையின் அளவுக்கேற்ப அவற்றின் அலகுகளின் நீளம் மாறுபடுகிறது.
14.
டி.விரீஸின் திடீர் மாற்றக் கோட்பாடு:
1. திடீர் மாற்றம் என்பது உயிரினங்களில் ஏற்படும் உடனடியான சீரற்ற மற்றும் மரபுக்கடத்தலில் பங்கேற்காத மாற்றங்கள் ஆகும்.
எ.கா: அந்திமந்தாரை (ஈனோதீரா லாமார்க்கியானா) தாவரத்தில் ஆய்வு மேற்கொண்டு அதில் திடீர் மாற்றம் காரணமாக ஏற்பட்ட மாறுபாடுகளை கண்டறிந்தார்.
2. பெரிய மற்றும் உடனடியாக ஏற்படும் மாறுபாடுகள் மட்டுமே புதிய சிற்றினம் தோன்றுவதற்குக் காரணம்.
3. ஆனால் லாமார்க் மற்றும் டார்வின் ஆகியோர் உயிரினங்களில் ஏற்படும் படிப்படியான மாறுபாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய சிற்றினம் உருவாகக் காரணமாகிறது என்று விளக்கினார்.
திடீர் மாற்றக் கோட்பாட்டின் காரணமாக சிறப்புப் பண்புகள்:
1. திடீர் மாற்றம் அல்லது தொடர்ச்சியற்ற வேறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.
2. இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தில் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் ஏற்படும்.
3. திடீர் மாற்றம் முழுமையான நிகழ்வு இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது.
4. திடீர் மாற்றம் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது ஆகும்.
15.
1. ஆகஸ்ட் வீஸ்மான் லாமார்க்கின் பெற்ற பண்புகள் கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிரூபித்தார்.
2. தனது சோதனையில் தொடர்ந்து 20 தலைமுறைகளாக சுண்டெலிகள் வாலினை துண்டித்து பின்னர் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினார்.
3. அனைத்து சுண்டெலிகளும் முழுமையான வாலுடனே பிறந்தன.
4. உடல் செல்களில் ஏற்படும் மாற்றம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாது.
5. இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே மரபுக் கடத்தலுக்கு உரியன என்றும் வீஸ்மான் நிரூபித்தார்.
16.
தகவமைப்பு பரவல்:
1. இது ஒரு பரிணாம முறை.
2. ஒரு மூதாதை இனத்திலிருந்து புதிய சிற்றினங்கள் புதிய வாழிடங்கள் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளுடன் தோன்றும் பரிணாம நிகழ்வு தகவமைப்பு பரவல் எனப்படும்.
டார்வின் குருவிகள்:
1. இப்பறவைகளின் மூதாதையர் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காலபாகஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தவை
2. டார்வின் குருவிகள் 14 சிற்றினங்களாக பரிணமித்திருந்தன.
3. உடல் அளவு அலகின் வடிவம் மற்றும் உணவுப்பழக்கம் ஆகிய பண்புகள் வேறுபட்டிருந்தன.
4. உடல் அளவு மற்றும் அலகின் வடிவம் ஆகியவற்றால் ஏற்பட்ட மாறுபாடுகளால் அவை வெவ்வேறு வகை உணவுகளான பூச்சிகள் விதைகள் கள்ளித் தாவரத்தின் மகரந்தத் தேன் மற்றும் உடும்பின் இரத்தம் ஆகியவற்றை உண்ண முடிகிறது.
5. ALX, மரபணுக்களால் ஏற்பட்ட மரபணு மாற்றங்களே வெவ்வேறு வகை அலகு வடிவங்களுக்கு காரணமாகும்.
ஆஸ்திரேலியாவின் பைப்பாலூட்டிகள்:
1. இவைகள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பொது மூதாதையரிடம் இருந்து தனியாக தோன்றின.
2. ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் தகவமைப்பு பரவல் மூலம் ஆஸ்திரேலியாவின் வெவ்வேறு வாழிடங்களில் பரவலாக வாழ்கின்றன.
17.
தொழிற்சாலை மெலானியாக்கம்:
1. எடுத்துக்காட்டு: இயற்கை தேர்வு கரும்புள்ளி அந்திப்பூச்சி (பிஸ்டன் பெட்டுலேரியா) மூலம் விளக்கலாம்.
2. தொழில்மயமாக்கத்திற்கு முன் வெள்ளை மற்றும் கருப்பு நிற அந்திப்பூச்சிகள் பரவலாக காணப்பட்டன.
3. தொழில்மயமாக்கத்திற்கு முன்பு கட்டிடங்களின் வெள்ளை நிற சுவரின் பின்புலத்தில் வெள்ளை நிற அந்திப்பூச்சுகளின் கொன்றுண்ணிகளிடமிருந்து எளிதில் தப்பித்தன.
4. தொழில்மயமாக்கத்திற்கு பின் மரங்களின் தண்டுப் பகுதிகள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகைக் கரியினால் கரியநிறமாக மாறின.
5. கருப்பு நிற அந்திப்பூச்சிகள் இந்த கரிய மரத் தண்டுகளில் உருவ மறைப்பு பெற்றன.
6. வெள்ளை நிற பூச்சிகள் கொன்றுண்ணிகளால் எளிதில் அடையாளம் காணப்பட்டன.
7. கரிய நிறமுடைய அந்திப்பூச்சிகள் இயற்கையால் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது.
8. இயற்கை கருப்பு நிற அந்திப்பூச்சிக்கு நேர்மறை தேர்வு அழுத்தத்தை வழங்கியது.
8. தகுந்த தகவமைப்புப் பெற்ற உயிரினங்கள் இயற்கைத் தேர்வு காரணமாக அதிகமான வாரிசுகளை உருவாக்கின.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards