12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
25%
50%
100%
75%
2.
XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாகக் கூறலாம்?
வேறுபட்ட இனச்செல் ஆண்
வேறுபட்ட இனச்செல் பெண்
ஒத்த இனச்செல் ஆண்
ஆ மற்றும் இ
3.
பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளின், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை?
அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்
இரண்டில் ஒரு பங்கு Rh+ வாக இருப்பார்கள்
நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள்
நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்
4.
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?
A மற்றும் B மட்டும்
A,B மற்றும் AB மட்டும்
AB மட்டும்
A, B, AB மற்றும் O
5.
இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?
Y - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்
Y - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்
X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்
X - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்
6.
பீனைல்கிடோநியூரியாவின் அறிகுறிகளை குறிப்பிடுக?
7.
ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?
8.
பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல் ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது?
9.
10.
லையோனைசேஷன் என்றால் என்ன?
11.
வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.
12.
மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
13.
14.
இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?
15.
டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?
16.
இனமேம்பாட்டியலின் முறைகளை பற்றி எழுதுக.
17.
குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?
18.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?
19.
தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி
1.
(b)
50%
2.
(a)
வேறுபட்ட இனச்செல் ஆண்
3.
(d)
நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்
4.
(d)
A, B, AB மற்றும் O
5.
(d)
X - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்
6.
(i) அதி தீவிர மூளை குறைபாட்டு நோய்.
(ii) தோல் மற்றும் முடிகளில் குறைவான நிறமிகள் உண்டாகின்றன.
(iii) பைருவிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றது.
7.
(i) Y குரோமோசோமின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள் Y சார்ந்த மரபணுக்கள் அல்லது ஹோலண்டிரிக் ஜீன்கள் எனப்படும்.
(ii) 'Y' சார்ந்த மரபணுக்களுக்கு இணையான அல்லீகள் X குரோமோசோமில் இல்லை.
(iii) 'Y' சார்ந்த மரபணுக்கள் Y குரோமோசோமுடன் சேர்ந்தே கடத்தப்படுகிறது.
(iv) ஆண் பாலினத்தின் மட்டுமே அல்லீல்கள் பண்புகளை புறத்தோற்றத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.
8.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு X குரோமோசோம் பொதுவானது இதில் பல மரபணுக்கள் காணப்படுகின்றன. இந்த மரபணுக்கள் பால் சார்ந்த மரபணுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றால் கட்டுப்படுத்தப்படும் பண்புகள் பால் சார்ந்த பண்புகள் எனவும் இவ்வகை மரபுக்கடத்தல் பால் சார்ந்த மரபுக்கடத்தல் எனவும் அழைக்கப்படுகிறது.
பால் சார்ந்த பண்புகள் பெண்களை விட ஆண்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஏனெனில் ஆண்களில் வேறுபட்ட குரோமோசோம் நிலை (XY) காணப்படுகின்றது.
ஒரு ஆண் தன் தாயிடமிருந்து X சார்ந்த ஒடுங்கு அல்லீலை பெறும்போது அவரது Y குரோமோசோமில் அதற்கு இணையான அல்லீல் இல்லாததால் அப்பண்பினை வெளிப்படுத்துகிறார்.
X இணைந்த ஒடுங்கு மரபணு ஒரு குறைபாட்டினை தோற்றுவிக்குமானால் அது பெண்களைவிட ஆண்களில் அதிகமாகக் காணப்படும். ஏனெனில் அக்குறைபாடு ஒரு ஒற்றை அல்லீலால் ஏற்படுத்தப்படுகிறது. Y குரோமோசோமில் இணையான அல்லீல் காணப்படுவதில்லை. எனவே பால் சார்ந்த ஒடுங்கு பண்புகள் ஆண்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
9.

10.
லியோன் கொள்கை -ஒரு X குரோமோசோம் செயல்படாமல் இருப்பது.
(i) XY குரோமோசோம் வகை பால் நிர்ணயித்தலில் ஆண் உயிரிகள் ஒரு X குரோமோசோம் கொண்டுள்ளது.
(ii) பெண் உயிரிகள் இரண்டு X குரோமோசோம்கள் கொண்டுள்ளன.
(iii) பாலினத்திற்கு இடையேயான இந்த அளவீட்டு வேறுபாடு ஈடு செய்யப்படுகிறது.
(iv) ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலின உயிரிகளிலும் ஒரு செல்லுக்கு ஒரு X குரோமோசோம் மட்டுமே செயல்திறன் பெற்றுள்ளது.
(v) மேரி லியோன் கருதுகோளின்படி பார் உறுப்புகள் செயல்படாமல் உள்ளது.
(vi) பெண் உயிரிகளில் இவை மிக நெருக்கமாக சுருண்டு குரோமோட்டினை காணத்தக்க வடிவமான ஹைட்ரோ குரோமேட்டின் ஆக மாறுகிறது.
(vii) ஹெட்டிரோகுரோமேட்டின் என்பது எங்கு புரத உற்பத்தியில் பிரித்தெடுத்தல் நடக்கவில்லையா ஆகும்.
11.

இவ்வகையான பால் நிர்ணயித்தலில் ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்புகளை (ஹெடிரோகேமிட்டிக்) உடையவர்.
XX -XO வகை
(i) எ.கா.பூச்சிகள்,கரப்பான்பூச்சி,வெட்டுக்கிளி.
(ii) ஆண்கள் ஹெட்டிரோகேமிட்டிக் வகையினர் ஒரு X குரோமோசோம் உடையவர்.
(iii) இரண்டு வகையான விந்துகளை உற்பத்தி செய்கின்றன.
(iv)ஒன்று X குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இல்லை.
(v) சேய்களின் பால் அவைகளின் விந்துகள் எந்த அண்டத்துடன் இணைகிறதோ அதைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. X விந்து அல்லது Y விந்து.
XX-XY வகை(லைகஸ் வகை )
(i) உ.ம். மனிதன் மற்றும் பழப்பூச்சி
(ii) ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்பினை உடையவர்.
(iii) அவர்கள் இரண்டு விதமான விந்துக்களை சில 'X' குரோமோசோம் கொண்டும் உள்ளன.
(iv) கருவின் பாலானது அது எவ்வகை விந்துவால் கருவுறுதல் அடைகிறது என்பதை பொறுத்தது.
(v) 'X' குரோமோசோம் உடைய விந்துக்கள் பெண் உயிரியையும் 'Y' குரோமோசோம் உடைய விந்துக்கள் ஆண் உயிரியையும் உருவாக்கும்.
12.

(i) பால் நிர்ணயம் செய்யும் ஜீன்கள் பால் குரோமோசோம்களில் அமைந்துள்ளன.
(ii) ஆண் பெண் பால் நிர்ணயம் குரோமோசோம்களின் வேறுபாடுகளில் நடைபெறுகிறது.
(iii) பெண் உயிரிகள் XX குரோமோசோம்களையும் ஆண்கள் XY குரோமோசோம்களையும் ஆண்கள் XY குரோமோசோம்களை உடையவர்.
(iv) பெண்கள் ஒத்த இனச்செல்களை கொண்டு ஒரே வகையான முட்டையை உற்பத்தி செய்கின்றனர்.
(v) ஆண்கள் வேறுபட்ட இனச்செல்களை கொண்டு இரண்டு வகை விந்து செல்களை உற்பத்தி செய்கின்றனர்.
(vi) XY-XX வகை பால் நிர்ணயம் பழம் பூச்சியில் நடைபெறுகிறது.
(vii) கருவுறச் செய்யக்கூடிய விந்து செல்லின் வகையை கருக்களின் பாலினத்தை நிர்ணயம் செய்கின்றன.
(viii) X குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை பெண் உயிரியாகிறது.
(viii) Y குரோமோசோமை கொண்ட விந்து செல்லால் கருவுற்றால் அவை ஆண் உயிரியாகவும் மாறுகின்றன.
13.
14.
| இடைபால் உயிரி | |
| குரோமோசோம் ஜீனோடைப் மற்றும் பாலின புறத்தோற்ற சேர்ந்த XY ஆண் மற்றும் XX பெண் அல்லாத அமைப்பு | மிகைபெண் அதிக எண்ணிக்கையில் X குரோமோசோம் உடையவர் அவர்களில் 44 உடல் குரோமோசோம் மற்றும் 3X குரோமோசோம் உள்ளது. மும்மய X நோய் குறியீடு என்று பெயர். |
| பால் பண்புகளில் மாற்றத்தை முக்கியமாக ஒரே குரோமோசோம் இனச்செல்கள் பால் ஹார்மோன்கள் அல்லது பிறப்புறுப்புகள் உண்டு ஆண் அல்லது பெண் என்று கருத முடியாது. | மூளை வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை மிகை ஆண் (XYY ஆண்) |
| அதிகப்படியான X மற்றும் Y குரோமோசோம் உள்ளது. | XYY குறியீடு என அழைக்கப்படுகிறது. |
| இருபால் உயிரினம் அல்லது ஹெர்மாப்ரோடைட் ஆகும். | அதிகப்படியான Y குரோமோசோம் உண்டு. |
| அண்டக மற்றும் விந்தக திசுக்கள் காணப்படும். | மூளை குறைபாடு மற்றும் குற்றச்செயலில் ஈடுபடும் தன்மை |
| வெளிப்புற பிறப்புறுப்பு துளைகள் குறைபாடுயுடையவை |
15.
(i) தீவிர மூளை வளர்ச்சி குறைபாடு
(ii) மைய நரம்பு மண்டல வளர்ச்சி பாதிக்கப்படுதல்
(iii) தட்டையான மூக்கு
(iv) செவி குறைபாடு
(v) வாய் எப்போதும் திறந்திருத்தல்
(vi) நாக்கு வெளியே நீட்டியவாறு இருத்தல்
16.
இனமேம்பாட்டியலின் முறைகள்
இன மேம்பாட்டியல் என்பது மனித இனத்தை மேம்படுத்துவதற்காக மரபியல் விதிகளை பயன்படுத்துவது ஆகும். 1885 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கால்டன் அவர்கள் யூஜெனிக்ஸ் என்ற சொல்லினை உருவாக்கினார். யூஜெனிக்ஸ் என்பதன் பொருள் நல்ல பிறப்பு ஆகும். நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் பிரான்சிஸ் கால்டன் ஆவார்.
நேர்மறை இனமேம்பாட்டியல்
சிறந்த அல்லது விரும்பத்தக்க வளர்கரு பிளாசத்தினை தொடர்ந்து நிலையாக அதிகரிக்கவும், சமூகத்தின் சிறந்த வளர்கரு பிளாசத்தினை பாதுகாக்கவும் முயல்வது நேர்மறை இனமேம்பாட்டியல் ஆகும்.
எதிர்மறை இனமேம்பாட்டியல்
எதிர்மறை இனமேம்பாட்டியல் என்பது சமூகத்தில் குறைபாடு உடைய வளர்கரு பிளாசத்தினை வெளியேற்றுவது ஆகும்.
17.
குரோமோசோம் சாரா மரபு கடத்தல்:
குரோமோசோம் சாராத மரபுக் கடத்தல் என்பது சைட்டோபிளாசத்தில் உள்ள மரபு சாரா மரபணுக்களினால் ஏற்படும் மரபுக் கடத்தல் என அழைக்கப்படுகிறது.
(எ.கா) லிம்னேயே நத்தை ஓட்டின் சுருள் தன்மை
பாரமீசியத்தின் கப்பா துகள்கள்
18.
(i) பாலினங்களை அடையாளம் காண உதவுகின்றது.
(ii) நீக்கம் இரட்டித்தல் இடம் பெயர்தல் குரோமோசோம்கள் பிரியாநிலை போன்ற குரோமோசோம் பிறழ்ச்சிகளை கண்டறிய பயன்படுகிறது.
(iii) ஒழுங்கற்ற பன்மயம் கண்டறிய பயன்படுகிறது.
(iv) சிற்றினங்களுக்கிடையேயான பரிணாம உறவுகளை கணிக்க உதவுகின்றது.
(v) மனிதனில் காணப்படும் மரபியல் நோய்களை கண்டறியலாம்.
19.
ஒற்றைமயம் - இரட்டைமயம் நிலை [உ.ம்] தேனீ,எறும்பு, குளவி.
(i) இம் முறையில் சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(ii) கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளாக வளர்ச்சியடைகின்றன.
(iii) கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் வளர்ச்சியடைகின்றன.
(iv) ஆண் தேனீக்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியளவே உள்ளன. (ஒற்றைமயம்)
(v) பெண் தேனீக்களில் குரோமோசோம் இரு மடங்காக உள்ளன. (இரட்டை மயம்) இதனால் இம்முறை ஒற்றைமய-இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards