12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
பொருள் வேற்றுமை அணியை விளக்குக.
2.
சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
3.
சடாயுவைத் தந்தையாய் ஏற்று இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
4.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து - இடம். சுட்டிப் பொருள் விளக்குக.
5.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
6.
7.
8.
9.
தன்மனை எனப்படுவது
தற்காலிகத் தங்குமிடம்
மனைவியின் இல்லம்
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்
திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக வாழுமிடம்
10.
‘உத்தம சோழன்’ அவர்களின் இயற்பெயர்
செல்வன்
செயராஜ்
செல்வராஜ்
செல்லத்துரை
11.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் சிலவற்றை என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ள மொழி __________
தமிழ்
ஆங்கிலம்
பாரசீகம்
கிரேக்கம்
12.
சமூகத்தின் அடிப்படை அலகு _____________.
குடும்பம்
வருமானம்
உழைப்பு
பெரியோர்
13.
'அவர்கள் வந்தார்கள்' என்ற தொடரில் உள்ள ‘அவர்கள்’ என்பது _______________.
வினைச்சொல்
இடைச்சொல்
பதிலிடு பெயர்ச்சொல்
தன்மை பன்மை சொல்
14.
சொல்லின் தொடக்கமாக மட்டுமே வருவது ____________.
நகரம்
னகரம்
ணகரம்
னாகாரம்
15.
பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது ____________.
வெளிச்சம்
நீர்நிலை
மரங்கள்
நகரம்
16.
நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்ட ____________ பா ஆகும்.
வஞ்சி
வெண்
கலி
அகவல்
17.
தமிழ்நாட்டில் வீதிதோறும் ___________ பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
ஆங்கிலப்
நர்சரி
தமிழ்ப்
இந்திமொழிப்
18.
பிழையான தொடரைக் கண்டறிக.
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
19.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் _____________
அடிமோனை, அடிஎதுகை
சீர்மோனை, சீர்எதுகை
அடிஎதுகை, சீர்மோனை
சீர்எதுகை, அடிமோனை
20.
21.
22.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
23.
பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்புநலத்தை விவரிக்க.
24.
குடும்பம் எனும் அமைப்பு எவ்வாறு ஏற்படுகிறது ?
25.
மணந்தகம் - விளக்குக.
26.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) முயல்வார் (ஆ)
27.
28.
29.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் எவ்வாறு ?
30.
Metro-Train
31.
Level Crossing
32.
தமிழாக்கம் தருக.
In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end, Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life—and that is the main theme of this chapter- let it be clearly stated that educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.
33.
வாகைத் திணையை விளக்குக:
34.
திருவள்ளுவரைப் போற்றும்வகையில் அரசு செய்தன யாவை?
35.
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக
உள்ளங்கை நெல்லிக்கனி போல
36.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
கலை, களை, கழை
37.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக்கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
38.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும்பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும்.
39.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
40.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறைமீதுதான்; அவர்கள் எல்லா
பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
41.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக எழுதுக
காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
42.
இலக்கிய நயம் பாராட்டுக.
(மையக்கருத்துடன் ஏற்புடைய நயங்களை எழுதுக)
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக்கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
43.
எண்ணங்களை எழுத்தாக்குக.

44.
45.
46.
47.
48.
1.
இலக்கணம் : செய்யுளில் இருவேறு பொருள்களுக்கான ஒற்றுமையை முதலில் கூறிப் பின்னர், அவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் கூறுவது, ‘பொருள் வேற்றுமை அணி’யாகும்.
எ - கா : ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ் !
விளக்கம் : இப்பாடலில் தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன்சார்ந்த ஒற்றுமை முதலில் கூறப்பட்டது. பின்னர், அவற்றுள் தமிழ் தன்னேர் இலாதது எனும் தன்மை, வேறுபடுத்திக் காட்டப்பட்டது. எனவே, இப்பாடலில் ‘வேற்றுமை அணி'யின் ஒரு பிரிவான 'பொருள் வேற்றுமை அணி' அமைந்துள்ளது.
2.
(i) ஒருவன் வலியவரிடத்துக் கோபம் கொண்டால் அஃது அவனுக்குத் தீங்காகும்.
(ii) மெலியாரிடத்துக் கோபம் கொண்டால் பழியும் பாவமும் உண்டாகும்.
(iii) ஒருவனுக்குத் தீமைகள் ஏற்படக் காரணமாவது கோபம். எனவே, அதனைத் தவிர்த்தல் வேண்டும்.
(iv) ஒருவரின் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் அழிப்பது, கோபம்.
(v) அக்கோபத்தைக் காட்டிலும் வேறு பகை அவனுக்கு இல்லை.
3.
(i) 'எத்தகைய சிறப்பான விறகுகள்' என்று கண்டவர் வியக்குமாறு, இராமன் மணப்பொருள்களான அகில்கட்டைகள், சந்தனக்கட்டைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து குவித்தான்.
(ii) வேண்டிய தருப்பைப் புற்களைத் திருத்தி அமைத்துக் கொண்டுவந்தான்.
(iii) பூக்களையும் கொண்டுவந்து தூவினான்.
(iv) மணலில் சடங்குகள் நிகழ்த்துவதற்குரிய மேடையை அமைத்தான்.
(v) தெளிந்த நீரையும் கொண்டுவந்து வைத்தான்.
(vi) தன் தந்தையாய் ஏற்று சடாயுவின் உடலைத் தன் நீண்ட கைகளால் தூக்கிக்கொண்டு சென்று அடுக்கப்பட்ட விறகுகள்மீது இட்டான்.
4.
இடம் : இவ்வடிகள், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள் : விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்களை நல்லவரா கெட்டவரா என ஆராய்ந்து பார்த்து அனுமதிப்பதில்லை. அதுபோல, உன்னிடம் வருபவர் எவரானாலும் இன்முகத்துடன் வரவேற்று நன்றி செலுத்து. ஆண்டவன் ஏதோ ஒரு நல்வழியை உணர்த்துவதற்காக அவர் உன்னிடம் அனுப்பப்படுகிறார்.
5.
(i) வாடைக்காலத்தில் கோவலர்கள், தம் நிரைகளைக் காக்க பழகிய நிலத்தைவிட்டு மேட்டு நிலத்தை அடைந்தனர்.
(ii) உடலில் பட்ட குளிரைப் போக்கக் கோவலர் பலர் ஒன்றுசேர்ந்தனர்.
(iii) தீயை மூட்டிச் சுற்றி அமர்ந்து, தீயில் கைகளைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டனர்.
(iv) எனினும், குளிர் நீங்காது, மேல்வாயும் கீழ்வாயும் நடுங்கி, பற்கள் பறையடிப்பன போல் மோதி ஒலி உண்டாக்கின.
6.
(a)
7.
(d)
8.
(a)
9.
(c)
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்
10.
(c)
செல்வராஜ்
11.
(a)
தமிழ்
12.
(a)
குடும்பம்
13.
(c)
பதிலிடு பெயர்ச்சொல்
14.
(a)
நகரம்
15.
(d)
நகரம்
16.
(d)
அகவல்
17.
(c)
தமிழ்ப்
18.
(c)
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
19.
(c)
அடிஎதுகை, சீர்மோனை
20.
21.
22.
காரணம் கருதாமல் செய்த உதவி
ஒருவர் நமக்கு எந்த உதவியும் செய்யாதிருக்கையில், அவருக்கு நாம் உதவுவது 'செய்யாமல் செய்த உதவி' எனப்படுகிறது.
அப்படிப்பட்ட உதவியைச் செய்தவருக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் ஈடாகாது.
காலத்தினால் செய்த நன்றி
ஆபத்துக்காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறியதாய் இருக்கலாம்.
ஆனால், உரிய காலத்தில் செய்யப்பட்ட அந்த உதவியின் பயனை உணர்ந்தவர்கள் அஃது உலகத்தைவிடப் பெரிது எனப் போற்றுவர்.
பயன் தூக்கார் செய்த உதவி
ஒருவருக்கு உதவி செய்வதால், என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பாராது உதவி செய்ய வேண்டும். அத்தகைய உதவியை ஆராய்ந்து பார்த்தால், அது கடலைவிடப் பெரியது ஆகும்.
பனைத்துணையாய்க் கொள்பவர்
ஒருவர் செய்த சிறிய உதவியைப் பெரியோர் பெரிதாய்க் கருதுவர்.
இதனையே வள்ளுவர், தினையளவான சிறிய உதவியைப் பனையளவாய்க் கருதுவர் என்றார்.
நல்லதைக் கொள்; அல்லாததை விடு !
ஒருவர் செய்த நன்றியை என்றுமே மறத்தல் கூடாது.
ஒருவர் செய்த தீமையை அன்றே மறத்தல் வேண்டும்.
செய்ந்நன்றி கொன்றவர்க்கு உய்வில்லை!
எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் அந்தப் பாவத்திலிருந்து நீங்க வழியுண்டு.
ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு அப்பாவத்திலிருந்து நீங்க வழியில்லை.
23.
முன்னுரை : ஊர் கூடித் தேர் இழுப்பது போல, ஊரின் நன்மைக்குப் பயன் அளிக்கும் ஒரு செயலைச் செய்யப் பலரின் உழைப்புத் தேவை. அத்தகைய செயலுக்கு முதல் ஆளாய் 'வடம் பிடித்தவன்’ மருதன். அவனது பண்புநலத்தை அறிவோம்.
கெடுப்பதும் வாழவைப்பதும் மழையே ! : மருதன், வளவனாற்றின் வடகரையில் நின்று வடக்கே பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்று வயல்கள். மழையை நம்பிப் பயிரிட்டவை. இப்போது கொட்டும் மழையால் பயிர் கெட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ‘மழைநீர் வயலில் தேங்காமல் வடிந்து செல்ல என்ன செய்யலாம்' என்று மருதன் சிந்தித்தான்.
தடுக்கும் செடிகளை ஒதுக்கும் வழி : மருதன் வடிகால் வாய்க்கால்வழி நடந்து சென்றான். அந்த வடிகால் வாய்க்கால் மூன்று மைல் நீளமுள்ளது. அதில் முழுவதும் காட்டாமணக்குச்செடிகள் மண்டிக்கிடந்தன. அவற்றை அகற்றினால் உபரிநீர் வடிந்துவிடும். ஆனால், அவை முழுவதையும் எப்படி அகற்றுவது ?
ஊரார் உதவ முன்வராமை : வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டாமணக்குச்செடியை அகற்ற ஊர் மக்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் மருதனுக்கு ஏற்பட்டது. எதிரில் வந்த மாரியிடம் சொன்னபோது, ''ஊரை ஒன்றுகூட்டு; மற்றதைப் பிறகு பார்ப்போம்'' என்று பொறுப்பில்லாமல் கூறிச் சென்றான்.
மருதன், மிராசு காளியப்பனிடம் விஷயத்தைக் கூறிய போது, அவர் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய், மறுநாள் மகள் வீடு செல்ல வேண்டும் என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்.
'பொதுச்சேவை’ என்று பொழுதைக் கழிக்கும் பிரேம்குமாரிடம் மருதன், கால்வாய் பற்றிக் கூறினான். அதற்கு, ‘அரசாங்கம் உள்ளது; எனக்குப் பலவேலைகள் உள்ளன' என்று அவனும் பொறுப்பைத் தட்டிக் கழித்தான்.
பிள்ளையார் சுழி போட்ட மருதன் : ஒருவரும் ஒத்துவராத நிலையில், இரவில் சிந்தித்தபடியே தூங்கிய மருதன், அதிகாலையில் தனி ஆளாய் ஆமணக்குச்செடியை வெட்டத் தொடங்கினான். கணவனைக் காணாத மருதனின் மனைவி கால்வாய்க்கு வந்தாள். கணவனுக்கு உதவியாய், வெட்டப்பட்ட காட்டாமணக்குச்செடிகளை வெளியே கொண்டுபோய்ப் போட்டாள்.
தூரத்தில் மீன் பிடித்த மாரியின் கண்ணில் இந்தக் காட்சி பட்டதும் அவனும் உதவிக்கு வந்தான். அந்த வழியாய் மாட்டுவண்டியில் சென்ற மிராசுதார் காளியப்பன், வண்டியை நிறுத்தச் சொல்லி, வாய்க்காலில் இறங்கி உதவினார். வண்டிக்காரன் மூலம் செய்தி ஊருக்குள் பரவியது. உறுத்தல் தாங்காத ஊர்மக்கள் உதவிக்கு வந்தனர். கால்வாய் சுத்தமானது. வயல் பிரச்சினைக்கும் தீர்வு வந்தது.
முடிவுரை : எல்லோரும் நல்லவர்களே. ஆனாலும், தனிமனித நோக்கைத் தாண்டிப் பொதுநல நோக்கோடு செயல்பட ஒரு தூண்டுகோல் வேண்டும். அத்தகைய தூண்டுகோலே மருதன். அவனின் பண்பு போற்றத்தக்கது.
24.
(i) குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.
(ii) குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன.
25.
(i) திருமணமானவுடன் கணவனும் மனைவியும் சேர்ந்து வாழுமிடம், 'மணந்தகம்.'
(ii) முதல் குழந்தை பிறக்கும்வரையுள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கும்.
(iii) தனிக் குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலை இது.
26.
(அ) முயல்வார் - முயல் + வ் + ஆர்.
முயல் - பகுதி; வ் - எதிர்கால இடைநிலை; ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.
27.
28.
29.
(i) பண்டைய விரிந்த குடும்பம், இன்றைய கூட்டுக் குடும்பம்.
(ii) சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்றது.
(iii) கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் 'விரிந்த குடும்ப' முறையைக் காண இயலும்.
(iv) இன்று பெண்கள் திருமணத்திற்குப் பின், கணவனின் குடும்பத்தாருடன் வாழ்வதைக் காணலாம்.
(v) பொருளாதாரம், கல்வி, பணிநிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் பெண்கள் உயர்ந்திருப்பினும் அவள், கணவன் குடும்பத்தினரைச் சார்ந்து வாழும் அமைப்பே இன்று காணப்படுகிறது.
(vi) கணவன் வீட்டில் அவன் பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோருடன் வாழும் கூட்டுக் குடும்பநிலை, பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சி ஆகும்.
30.
மாநகரத் தொடர்வண்டி
31.
இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
32.
"மனிதவள மேம்பாட்டின் நோக்கங்கள்" என்னும் முறையில் கல்வி என்பது தன்னளவில் நிறைவு பெற்ற ஒன்றாய்க் காணப்படினும், அதனை முடிந்த பொருளாய்ப் பொருள் கொள்ள இயலாது. கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். இதுவே மக்களின் பொருளாதார, சமூக அரசியல் வாயிலுக்குத் திறவுகோலாகவும் விளங்குகின்றது. கல்வியானது வருவாய்ப் பெருக்கத்தையும், வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகின்றது. பொருளாதார வல்லுநர்கள் கல்வியின் முக்கியத்துவம்பற்றி ஆய்வு செய்தபிறகு பெரும்பாலும் அது வாழ்வில் மிக நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாய்க் கூறுகின்றனர். பொருளாதார வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாமல் பார்த்தால், மக்களைக் கல்வி பெறச் செய்வது பயனுள்ள இலக்காகும்.
33.
வாகைத் திணை:
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை ஆகும்.
34.
திருவள்ளுவர் நினைவைப் போற்றும்வகையில், தமிழ்நாடு அரசு, கன்னியாகுமரியில் 133 அடி உயரச் சிலை அமைத்துள்ளது; வேலூரில், 'திருவள்ளுவர் பல்கலைக்கழக'த்தை நிறுவியுள்ளது.
35.
பகைவர்களின் தீவிரவாதம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாய்த் தெரிகிறது; எனினும், நம்மீது வீண்பழி சுமத்துகின்றனர்.
36.
களையான முகமுடைய இளம்பெண், கழைமீது கட்டப்பெற்ற கயிற்றில் ஏறி ஆடிய ஆட்டக்கலையைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
37.
மாணவர்கள் பெற்றோர்களைத் தம் நண்பர்களாய்ப் பாவித்து நட்புக்கொள்ள வேண்டும். தம் இன்பதுன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
38.
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்த்த கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.
39.
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு, ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
40.
என் நம்பிக்கை முழுவதுமே புதிய தலைமுறைமீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல் எதிர்கொண்டு தீர்ப்பார்கள்.
41.
காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.
42.
'கவியரசர்' என்று புகழ் பெற்றவர் கண்ணதாசன் அவர்கள். இவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசைப் பாடல்களை எழுதியவர். அரசவைக் கவிஞராய்ப் போற்றப்பட்டவர். இவர் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.
திரண்ட கருத்து
தலைவியாய் விளங்கும் தமிழரசியே! பாண்டியர்களைக் கொண்டு முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று தமிழ்ச்சங்கங்கள் மதுரையில் அமைந்திடச் செய்தாய். அச்சங்கங்களில் அறிவிலும் வயதிலும் முதிர்ச்சி பெற்ற புலவர் பல நூறு பேரைப் பங்கு கொள்ளச் செய்தாய். அவர்களைக் கொண்டு, அளவற்ற பலவித உட்பொருள்களைக்கொண்டு இனிமை துலங்கிடும் கவிதைகளைப் படைத்திடுமாறு செய்தவளே! வாழ்க.
மையக்கருத்து
பாண்டியர்களைக்கொண்டு முச்சங்கங்கள் அமைக்கச் செய்து, பொருள்வளமும் சொல்நயமும் மிக்க பல நூறு பாடல்களைப் பல நூறு புலவர்களால் ஆக்கி அளித்திடச் செய்த தமிழரசி, வாழ்க!
தொடை நயம்
எதுகை : முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது, எதுகை.
முச்சங்கம், அச்சங்கம்
சொற்சங்க, அற்புதங்க - ‘ற்'
மோனை : முதல் எழுத்து ஒன்றி வருவது, மோனை.
முச்சங்கம், முதுபுலவர் - 'மு'
அச்சங்க, அளப்பரிய ‘அ’
சொற்சங்க, சுவைமிகுந்த - ‘சொ, சு’
அற்புதங்க, அமைத்த - 'அ'
இயைபுத்தொடை : அடிதொறும் ஈற்றுச்சீர் அல்லது ஈற்றசை அல்லது ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத்தொடை.
தமைக்கூட்டி, பொருள்கூட்டி, கவிகூட்டி, பெருமாட்டி - 'கூட்டி', 'ட்டி'.
சந்தம் : 'சந்தம்' என்பது இனிய இசை. இப்பாடலில் வல்லினமும் மெல்லினமும் இணைந்து ஓசை நயத்தைத் தருகின்றன.
அணி : தமிழின் பெருமையை உள்ளது உள்ளபடி கூறியதால், இயல்பு நவிற்சியணி.
43.
பண்பாட்டையும் மொழியையும்
பாறையில் பொறித்தாய்!
ஈரடி நாலடி இலக்கியம் கண்டு
கீழடி நாகரிகம் வியப்பைத் தந்தாய்!
நாடோடி வாழ்விலும் முத்திரை பதித்து
நதிக்கரை தோறும் நாகரிகம் கொண்டாய்!
சிந்துவெளியிலும் செந்தமிழ் நாகரிகம்
செழித்து வளர்த்து சிந்தை கவர்ந்தாய்!
44.
45.
46.
47.
48.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards