12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
திருக்குறள் ____________ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
பதினெண்மேற்கணக்கு
2.
"தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்” - ‘தடக்கையான்' இலக்கணக் குறிப்பு
உரிச்சொற்றொடர்
வினைத்தொகை
உம்மைத்தொகை
மரூஉ
3.
'நட்பு கோட்படலம்’ அமைந்துள்ள காண்டம் _______________.
அயோத்தியா காண்டம்
ஆரணிய காண்டம்
யுத்த காண்டம்
கிட்கிந்தா காண்டம்
4.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் சிலவற்றை என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ள மொழி __________
தமிழ்
ஆங்கிலம்
பாரசீகம்
கிரேக்கம்
5.
'குடும்பு' எனும் சொல்லின் பொருள் _____________.
திருமணம்
வீடு
மனை
கூடிவாழுதல்
6.
‘நளிர்கடல்’ என்பதற்கு இலக்கணக் குறிப்பு _______________.
பண்புத்தொகை
வேற்றுமைத்தொகை
உவமைத்தொகை
வினைத்தொகை
7.
வாயிலுக்கே சென்று, இன்முகத்துடன் வரவேற்க வேண்டியவை ____________
வக்கிரம், அவமானம், மனச்சோர்வு
வக்கிரம், வஞ்சனை, அற்பத்தனம்
வக்கிரம், ஆனந்தம், விழிப்புணர்வு
வக்கிரம், அவமானம், வஞ்சனை
8.
பின்வரும் நாலடியார் பாடலுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்.
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
ஊழில் பெருவலி யாஉள மற்றொன்று
சூழினும் தான்முந்து உறும்.
9.
வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு ?
செய்யாமல் செய்த உதவி
பயன் தூக்கார் செய்த உதவி
தினைத்துணை நன்றி
செய்ந்நன்றி
10.
கடலின் பெரியது எது ?
உற்ற காலத்தில் செய்த உதவி
பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
தினையளவு செய்த உதவி
11.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் குறிப்பிடுவது எவற்றை?
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவை அனைத்தையும்.
12.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது _______________.
தனிக்குடும்ப முறை
விரிந்த குடும்ப முறை
தாய்வழிச் சமூகமுறை
தந்தைவழிச் சமூக முறை
13.
‘குடும்பம்’ என்னும் சொல் _______________ என்னும் நூலில் காணப்படுகிறது.
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
14.
எவற்றையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் ?
15.
செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவர் உரைப்பன யாவை ?
16.
மறக்கக்கூடாதது, மறக்கக்கூடியது - எவற்றை ?
17.
ஞாலத்தின் பெரியது எது ?
18.
முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார் ?
19.
நிலையாமை குறித்துச் சவரி உரைக்கும் கருத்து யாது?
20.
‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ?' என்ற இராமனின் கூற்று பின்வரும் பழமொழிகளுள் எதற்குப் பொருந்தும்?
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும், ஆ) சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்
21.
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
22.
கம்பரின் பெருமையைக் கூறும் தொடர்கள் யாவை ?
23.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
அ) அருங்கானம் ஆ)
24.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) செய்த (ஆ)
25.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?
26.
புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
27.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில், குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
28.
குகனொடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினை விளக்கி எழுதுக.
29.
சடாயுவைத் தந்தையாய் ஏற்று இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
30.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து - இடம். சுட்டிப் பொருள் விளக்குக.
31.
சினத்தைக் காத்தல் வாழ்வை மேம்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
32.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
33.
'எந்நன்றி' எனத் தொடங்கும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
34.
'வையத்துள்' எனத் தொடங்கும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
35.
இலக்கணக் குறிப்பு:
மறத்தல்
36.
இலக்கணக் குறிப்பு:
அன்பும் அறமும்
37.
"கம்பராமாயணம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'துன்பு' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
1.
(c)
பதினெண்கீழ்க்கணக்கு
2.
(a)
உரிச்சொற்றொடர்
3.
(d)
கிட்கிந்தா காண்டம்
4.
(a)
தமிழ்
5.
(d)
கூடிவாழுதல்
6.
(d)
வினைத்தொகை
7.
(d)
வக்கிரம், அவமானம், வஞ்சனை
8.
(c)
ஊழில் பெருவலி யாஉள மற்றொன்று
சூழினும் தான்முந்து உறும்.
9.
(a)
செய்யாமல் செய்த உதவி
10.
(b)
பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
11.
(d)
இவை அனைத்தையும்.
12.
(d)
தந்தைவழிச் சமூக முறை
13.
(a)
திருக்குறள்
14.
இன்முகத்துடன் வரவேற்றல் :
நம் வாழ்வில் சில பொழுது வந்து செல்லும் வக்கிரம், அவமானம், வஞ்சனை ஆகியவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
15.
ஒருவன், பிறன் பொருளைத் தன் பொருள் போலக் கருத வேண்டும்.
இந்த நெஞ்சழுக்கற்ற நிலையே செல்வம் பாதுகாப்பாய் இருப்பதற்கான வழியாகும்.
16.
மறக்கக்கூடாதது : பிறர் நமக்குச் செய்த நன்றியை.
மறக்கக்கூடியது : பிறர் நமக்குச் செய்த தீமையை.
17.
ஆபத்தில் ஒருவர் செய்த உதவி மிகச்சிறியதாய் இருக்கலாம்.
ஆனால், அது செய்யப்பட்ட காலத்தை நோக்கும் போது இந்நிலவுலகத்தைவிடப் பெரியது.
18.
இல்லற வாழ்வில் ஈடுபட்டுத் தானும் இன்பம் அனுபவித்துப் பிறர்க்கும் உதவி செய்ய வேண்டும்.
இத்தகைய வழியில் இல்வாழ்க்கை நடத்துபவனே 'முயல்வாருள் எல்லாம் தலை' என்கிறார், வள்ளுவர்.
19.
(i) உலகிலுள்ள பொருள்கள்மீது நாம் கொள்ளும் பற்று நிலையாமை.
(ii) நிலையற்ற வாழ்வில் நீண்ட தவம் செய்து நிலையான இன்பத்தைப் பெற வேண்டும் என்று கூறினாள்.
20.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
21.
(i) எதிர்பாராத நிகழ்வுகளான ஆனந்தம், மனச்சோர்வு, அனுபவம், விழிப்புணர்வு ஆகியன மனிதர்களிடத்தில் தோன்றி மறையும்.
(ii) இவற்றை விருந்தினர் இல்லத்திற்கு வரும் விருந்தாளிகளாய் உருவகம் செய்கின்றார், ஜலாலுத்தீன் ரூமி.
22.
(i) கல்வியில் பெரியவன் கம்பன்.
(ii) கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
(iii) கம்பநாடன் கவிதையிற் போல் கற்றார்க்கு இதயம் களியாதே.
(iv) கவிச்சக்கரவர்த்தி.
23.
அ) அருங்கானம் அருமை + கானம்.
‘ஈறு போதல்” என்னும் விதிப்படி 'மை' விகுதி கெட்டு 'அரு + கானம்' என்றானது. பின், ‘இனம் மிகல்' என்னும் விதிப்படி, வருமொழி வல்லினத்திற்கு (க்) இனமான ‘ங’ கரம் மிகுந்து அரு + ங் + கானம் - அருங்கானம் என்றானது.
24.
(அ) செய்த - செய் + த் + அ.
செய் - பகுதி; த் - இறந்தகால இடைநிலை; அ - பெயரெச்ச விகுதி.
25.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்கே உரிமையுடையனவாயின.
26.
(i) சங்க இலக்கியத்தில், தற்காலிகமாய்த் தங்குமிடம், புக்கில்.
(ii) கணவன், மனைவி ஆகியோர் பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழுமிடம், தன்மனை.
27.
(i) தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதால், கடனின்றி நிம்மதியாய் வாழ்கிறோம். இந்த நிலையில் என்னால் ஆன உதவிகளைச் செய்வேன்.
(ii) வீட்டிற்குத் தேவையான பால், செய்தித்தாள் போன்றவற்றைக் காலையில் வாங்கி வருவேன்.
(iii) காய்கறிகளை அரிந்து கொடுத்துச் சமையலுக்கு உதவுவேன்.
(iv) அப்பா துவைத்துத் தரும் துணிகளை உலர்த்துவேன்.
(v) மாலையில் பெற்றோர் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் பாலை காய்ச்சிக் கொடுத்து, தின்பண்டங்கள் கொடுத்துத் தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்வேன்.
(vi) உலர்ந்த துணிகளை மடித்து வைப்பேன்.
(vii) இவ்வாறு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.
28.
(i) இராமனுடன் பிறந்தவர்கள் பரதன், இலக்குவன், சத்துருக்கனன் ஆவர்.
(ii) சிற்றன்னையின் சூழ்ச்சியால் இராமன் காடு சென்றான்.
(iii) கங்கைக்கரையில் வேடர் குலத்தலைவன் குகன் இராமனைக் கண்டு வணங்கி, அன்பு செலுத்தினான்.
(iv) இராமன் அவனது அன்பைப் பாராட்டி, "உன்னைக் காண்பதற்குமுன் சகோதரர்கள் நாங்கள் நால்வராய் இருந்தோம்.
(v) "இனிமேல் நாம் ஐவரானோம்" என்று குகனிடம் கூறினான்.
(vi) சுக்கிரீவனைக் கண்டு, அவனின் பண்பு நலனைப் போற்றி அறுவரானோம் என்றான். இராமன்
(vii) அடுத்து இராவணனின் தம்பி வீடணனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு “"எழுவரானோம்''” என்றான், இராமன்.
29.
(i) 'எத்தகைய சிறப்பான விறகுகள்' என்று கண்டவர் வியக்குமாறு, இராமன் மணப்பொருள்களான அகில்கட்டைகள், சந்தனக்கட்டைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து குவித்தான்.
(ii) வேண்டிய தருப்பைப் புற்களைத் திருத்தி அமைத்துக் கொண்டுவந்தான்.
(iii) பூக்களையும் கொண்டுவந்து தூவினான்.
(iv) மணலில் சடங்குகள் நிகழ்த்துவதற்குரிய மேடையை அமைத்தான்.
(v) தெளிந்த நீரையும் கொண்டுவந்து வைத்தான்.
(vi) தன் தந்தையாய் ஏற்று சடாயுவின் உடலைத் தன் நீண்ட கைகளால் தூக்கிக்கொண்டு சென்று அடுக்கப்பட்ட விறகுகள்மீது இட்டான்.
30.
இடம் : இவ்வடிகள், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள் : விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்களை நல்லவரா கெட்டவரா என ஆராய்ந்து பார்த்து அனுமதிப்பதில்லை. அதுபோல, உன்னிடம் வருபவர் எவரானாலும் இன்முகத்துடன் வரவேற்று நன்றி செலுத்து. ஆண்டவன் ஏதோ ஒரு நல்வழியை உணர்த்துவதற்காக அவர் உன்னிடம் அனுப்பப்படுகிறார்.
31.
சினத்தை அடக்கி ஆளுதலே வெகுளாமை எனப்படும்.
பிறர் குற்றங்களைக் கண்டால் எழுவது, சினம்.
காக்கில் என், காவாக்கால் என் ?
கோபம் செல்லக்கூடிய இடம், செல்லிடம்; செல்லாத இடம், அல்லிடம் என்கிறார்.
வலியவரிடம் கோபம் கொண்டால் தீமை விளையும்; அடக்கி ஆள்வோம்.
ஆனால், எளியவரிடம் கோபத்தை அடக்குதலே சிறப்பு.
வலியவரிடம் அச்சத்தால் கோபம் கொள்வதில்லை. அதனால், அங்குச் சினத்தைக் காத்தாலும் காக்காவிட்டாலும் ஏதுமில்லை.
ஒருவனுக்கு ஏற்படும் அனைத்துத் தீமைகளுக்கும் கோபமே காரணம்.
ஆதலால், யாரிடத்தும் கோபம் கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
முகத்தில் தோன்றும் சிரிப்பையும், மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் அழிக்கின்ற கோபமே ஒருவருக்குப் பகையாகும்.
துன்பம் நேராமல் தன்னைக் காத்துக்கொள்ள நினைப்பவன், கோபத்தை அடக்க வேண்டும்.
கோபத்தை அடக்காவிட்டால், அதுவே அவனை அழித்துவிடும்.
கோபமாகிய கொடிய நெருப்பு தன்னை உடையவர்களை அழிக்கும்; உடன், காவலாய் அமைந்த தெப்பத்தையும் அழித்துவிடும்.
32.
காரணம் கருதாமல் செய்த உதவி
ஒருவர் நமக்கு எந்த உதவியும் செய்யாதிருக்கையில், அவருக்கு நாம் உதவுவது 'செய்யாமல் செய்த உதவி' எனப்படுகிறது.
அப்படிப்பட்ட உதவியைச் செய்தவருக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் ஈடாகாது.
காலத்தினால் செய்த நன்றி
ஆபத்துக்காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறியதாய் இருக்கலாம்.
ஆனால், உரிய காலத்தில் செய்யப்பட்ட அந்த உதவியின் பயனை உணர்ந்தவர்கள் அஃது உலகத்தைவிடப் பெரிது எனப் போற்றுவர்.
பயன் தூக்கார் செய்த உதவி
ஒருவருக்கு உதவி செய்வதால், என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பாராது உதவி செய்ய வேண்டும். அத்தகைய உதவியை ஆராய்ந்து பார்த்தால், அது கடலைவிடப் பெரியது ஆகும்.
பனைத்துணையாய்க் கொள்பவர்
ஒருவர் செய்த சிறிய உதவியைப் பெரியோர் பெரிதாய்க் கருதுவர்.
இதனையே வள்ளுவர், தினையளவான சிறிய உதவியைப் பனையளவாய்க் கருதுவர் என்றார்.
நல்லதைக் கொள்; அல்லாததை விடு !
ஒருவர் செய்த நன்றியை என்றுமே மறத்தல் கூடாது.
ஒருவர் செய்த தீமையை அன்றே மறத்தல் வேண்டும்.
செய்ந்நன்றி கொன்றவர்க்கு உய்வில்லை!
எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் அந்தப் பாவத்திலிருந்து நீங்க வழியுண்டு.
ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு அப்பாவத்திலிருந்து நீங்க வழியில்லை.
33.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.*
34.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.*
35.
தொழிற்பெயர்
36.
உம்மைத்தொகை
37.
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம்*
குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை*
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards