12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை ‘முதல்கல்’ கதை எவ்வாறு வலியுறுத்துகிறது ?
2.
'ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு' - நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் ஒரு கட்டுரை எழுதுக.
3.
சென்னையின் தொன்மையைத் தக்க சான்றுகளுடன் விளக்குக.
4.
நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
5.
குன்று குளிர்ப்பன்ன கூதிர் - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு _______________.
உவமானம்
உவமை
உவமை உருபு
உவமைச்சொல்
6.
பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது ____________.
வெளிச்சம்
நீர்நிலை
மரங்கள்
நகரம்
7.
கூற்று : இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று தவறு, காரணம் தவறு
கூற்று சரி, காரணம் சரி
8.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | குரங்குகள் | 1 | கன்றுகளைத் தவிர்த்தன. |
| (ஆ) | பசுக்கள் | 2 | மரங்களிலிருந்து வீழ்ந்தன. |
| (இ) | பறவைகள் | 3 | குளிரால் நடுங்கின. |
| (ஈ) | விலங்குகள் | 4 | மேய்ச்சலை மறந்தன. |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
9.
________________ கண்ட பறவைகள் உற்சாகம் பீறிடச் சங்கீதம் இசைக்கின்றன.
வெயில்
மழை
குளிர்
உணவு
10.
தலையசைத்து உதறுகிறது மீதமான சொட்டுகளை - எது ?
ஆடு
மாடு
மரம்
குருவி
11.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | அவன் அவள் அவர் | 1 | உளப்படுத்தாத் தன்மைப் பன்மை. |
| (ஆ) | நாங்கள் முயற்சி செய்வோம் | 2 | உளப்பாட்டுத் தன்மைப் பன்மை |
| (இ) | நாம் முயற்சி செய்வோம் | 3 | தன்மைப் பன்மைப் பெயர்கள் |
| (ஈ) | நாங்கள், நாம் | 4 | பதிலிப் பெயர்கள் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
12.
யார் ? எது ? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே _________________.
அஃறிணை, உயர்திணை
உயர்திணை, அஃறிணை
விரவுத்திணை, அஃறிணை
விரவுத்திணை, உயர்திணை
13.
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம் பெற்ற இலக்கண நூல் _______________.
நன்னூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
14.
தமிழில் திணைப்பாகுபாடு ________________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
பொருட்குறிப்பு
சொற்குறிப்பு
தொடர்க்குறிப்பு
எழுத்துக்குறிப்பு
15.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
இடைச்சொல் தொடர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
16.
For thirty years
17.
Deforestation
18.
Shocked
19.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) தீட்டிய (ஆ)
20.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) பொழிந்த (ஆ)
21.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
அ) வலனேர்பு ஆ)
1.
ஊருக்கு வந்த சோதனை :
காவிரிக் கரையின் கடைமடையில் அமைந்ததுதான் அந்தக் கிராமம். எந்த மழையின் உதவியில் ‘சம்பா’ப் பயிர்களை நட்டார்களோ, அதே மழையின் ‘அதிகப்படியான அன்பினால்' இப்போது அப்பயிர்களெல்லாம் நீரில் தத்தளிக்கின்றன. இது போதாதென்று வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒன்று, அச்சுறுத்தக் காத்திருக்கிறது. கடன்மேல் கடன் வாங்கி நட்ட பயிர்கள் தத்தளிக்க, மேலும் மழை என்றால், பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகும்.
சோதனையைச் சாதனையாக்க நினைத்த மருதன் :
மழை பெய்வது இயற்கை. மழைநீரை வடித்தெடுத்துத் தற்காத்துக் கொள்வது மனிதனின் கடமை. வெள்ளைக்காரன் கட்டிய வடிமதகு, எவ்வளவு நீர் வந்தாலும் விழுங்கி அமைதியாய் வடிவாய்க்கால் வழியாக வெளியேற்றும். வடிவாய்க்கால் முழுக்கக் காட்டாமணக்குச் செடிகள் முளைத்து, நீரை வடியவிடாமல் தடுத்து நிற்கின்றன. இதனால் மழைநீர் வயல்வெளிகளில் தேங்கிப் பயிர்களைப் பாழ்படுத்துகிறது. இந்தச் சோதனையிலிருந்து விடுபட, மருதன் செடிகளை அகற்றிச் சாதனை படைக்க விரும்பினான்.
தனிமரம் தோப்பாகாது :
பெருவெள்ளத்தை வடியச் செய்யத் தனிமனிதனால் முடியுமா? எனவே, மருதன் ஊர்மக்களின் உதவியை நாடினான். உதவிக்கரம் நீட்ட எவரும் முன்வரவில்லை. தானே தனித்து நின்று, பணி செய்யத் துணிந்தான்.
சமூகப் பற்றின்மை :
பயிர்களை வாழவைப்பது மழை. அது பெருமழையாகி வெள்ளமாய்த் திரண்டு தேங்குகையில், தான் உயிர்ப்பித்த பயிர்களையே இல்லாமல் ஆக்கிவிடுகிறது. அது மழையின் குற்றமன்று; வெள்ளம் தேங்காமல் வடிய வழிவகை செய்யாதது மனிதனின் குற்றம். அந்தப் பழியிலிருந்து விடுபட, மருதன் சொன்ன கருத்தை எவரும் ஏற்கவில்லை. இது, சமூகப் பற்றின்மையைக் காட்டுகிறது.
ஊர் கூடித் தேரிழுத்தல் :
தேரை வடம்பிடித்து இழுக்கப் பல கைகள் தேவைப்படும். அதுபோன்று மூன்று மைல் தொலைவு வளைந்து செல்லும் வாய்க்காலில் மண்டியுள்ள காட்டாமணக்குச் செடிகளைப் பிடுங்கி எறிந்து, நீரை வடியச் செய்ய வேண்டும். இது ஊர்கூடிச் செய்ய வேண்டிய பணியல்லவா? மருதனின் விடாமுயற்சியும் சமூகப்பற்றும் ஊரைக் கூட்டிப் பணிசெய்யத் தூண்டின. இப்பொழுது ஊர் ஒன்றுபட்டுள்ளது. பயிர்ப் பாதுகாப்பின்மூலம் ஊர், மகிழ்ச்சியின் வாழ்விற்குத் திரும்பியுள்ளது.
2.
முன்னுரை
தமிழ் இலக்கியக் கருவூலங்களான சங்க இலக்கியங்களைத் தந்த மண், மதுரை. இன்றைய மதுரை தூங்கா நகரம் என்று வழங்கப்படுகிறது. மணக்கும் மல்லிகை, சுடச்சுடச் சுக்குக் காபி, பூவாய் இட்டி, ஜில்ஜில் ஜிகர்தண்டா, காணும் இடமெல்லாம் கண்கவர் கோபுரங்கள் எனப் பல பெருமைகளை உடையது, மதுரை. இது பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்று. மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் உலகப் புகழ்பெற்ற திருத்தலமாகும்.
பல பெயர்கள் கொண்ட மதுரை
2500 ஆண்டுகளுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியாய் இருந்தது, மதுரை. எனவே, கடம்ப வனம் என்று வழங்கப்பட்டது. மருத மரங்கள் அதிகம் இருந்ததால் மருதை என்று வழங்கப்பட்டதாகவும், அதுவே பின் மதுரை என்று மருவியதாகவும் கூறுவர். புலவர்கள் கூடி இலக்கிய விவாதம் செய்ததால் கூடல் நகர் என்று வழங்கப்பட்டது. நான்கு நதிகள் கூடுமிடம் என்பதால் நான்மாடக்கூடல் என்று வழங்கப்பட்டது. நீர்நிலைகளுக்கு நடுவில் இருப்பதால் ஆலவாய் என்றும் வழங்கப்பட்டது. மதுராபுரி என்ற பெயரும் பெற்றுள்ளது.
பழைமையான நகரம்
உலக நாகரிகங்களுள் பழைமையானது தமிழர் நாகரிகம். தமிழகத்தில் வைகை நதி நாகரிகமும் மிகவும் பழைமை வாய்ந்தது. மதுரை மாநகரம் பாண்டிய மன்னர்களால் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்யப்பட்டது. தொடர்ந்து நாயக்கர்கள் ஆண்டனர். அதன் அடையாளமே மீனாட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள திருமலை நாயக்கர் மகால் ஆகும்.
மதுரை நகரின் அமைப்பு
மதுரை மாநகரின் அமைப்பு சிந்துசமவெளி நாகரிகத்தைப் போன்று அமைந்துள்ளது. மதுரையைப் பலர் ஆண்டனர் பாண்டியர், நாயக்கர் ஆகியோர் காலமே மதுரையின் பொற்காலம் ஆகும். சுல்தான்கள், ஆங்கிலேயர்கள், நாயக்கர் காலங்களில் பல சாதனைகளையும் சோதனைகளையும் மதுரை கண்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மையமாய் வைத்து அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் மதுரையின் வரலாற்றுச் சான்றுகள். வடிவமைப்பில் சிறப்புப் பெற்ற இந்திய நகரங்களில் மதுரை நகரும் ஒன்று. இங்கு ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். மதுரையில் தெருக்களின் பெயர்கள் சித்திரை, மாசி, ஆவணி என்று மாதங்களின் பெயரால் அமைந்துள்ளன. நீர்நிலைகளைப் பெருமைப்படுத்தும் விதமாய்த் தங்கள் ஊருக்கு மாடக்குளம், ஆத்திகுளம், கரிசல் குளம் போன்ற பெயர்களை வைத்தனர்.
மதுரையின் சிறப்பு
மதுரையின் அடையாளம், மீனாட்சி அம்மன் கோவில். கிறிஸ்து பிறப்பதற்கு முன் இது கட்டப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இக்கோவில் பாண்டியர்களால் கட்டப்பட்டது. பின், இஸ்லாமியப் படையெடுப்பினால் இக்கோவில் அழிக்கப்பட்டது. பின், 15ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. சித்திரைத் திருவிழா 30 நாள்கள் சிறப்பாய் நடைபெறும்.
ஆயிரங்கால் மண்டபம், நாயக்கர் மகால், அருங்காட்சியகம், காந்தி அருங்காட்சியகம் போன்ற சிறப்புமிக்க இடங்கள் மதுரையில் உள்ளன. மதுரை மாநகருக்கு அருகில் கிளிமூக்கு அருவி, கிளிநொச்சி அருவி, காட்டுப்பாறை அருவி, ஒத்தப்பாறை அருவி போன்றவை அமைந்துள்ளன.
முடிவுரை
மதுரையில் 24 மணிநேரமும் மலிவு விலையில் உணவு கிடைக்கும். தமிழையும் மதுரையையும் பிரிக்க இயலாதபடி அவை ஒன்றிணைந்துள்ளன. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை மதுரையின் பெருமையைப் பேசுகின்றன.
3.
1. சென்னையும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த பகுதி என்பதற்குரிய தடயங்கள் உள்ளன.
2. சென்னைக்கு அருகே குடியம், அத்திரம்பாக்கம் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
3. அப்பகுதிகளின் நாகரிகப்பழைமை ஓர் இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என நிறுவப்பட்டுள்ளது.
4. அங்கு ஓடக்கூடிய கொற்றலையாற்றுப்படுகை மனித நாகரிகத்தின் முதன்மைக் களங்களுள் ஒன்று.
5. பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி அகழ்வாய்வின் திருப்புமுனை.
6. கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் கிடைக்கும் தொல்பழங்காலப் பொருள்கள் தொன்மையை விளக்குகின்றன.
7. பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டு சென்னையில் கிடைத்தவற்றுள் பழைமையான கல்வெட்டு ஆகும்.
8. அகழ்வாய்வு, ஆற்றுப்படுகை, கோவில் கல்வெட்டுகள் போன்றவை சென்னையின் தொன்மையை அறியத் துணை நிற்கின்றன.
4.
மழைக்கால வருணனை
பருவம் தவறாது பொழியும் மேகம், உலகம் குளிர்ச்சி அடையும்படி புது மழையினைப் பொழிந்தது.
மழைவெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலை உடைய கோவலர்கள் தம்முடைய எருதுகள், பசுக்கள், ஆடுகள் அனைத்தையும் மேட்டு நிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் பழகிய நிலத்தை விட்டு வந்ததற்கு வருந்தினர்.
அவர்கள் சூடியிருந்த காந்தள் மலர்களால் ஆன கண்ணியில் நீர்த்துளி வீழ்ந்து அலைத்தது.
குளிர் அவர்கள் உடலை வருத்தியது.
தீ மூட்டி, கையைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்து வெம்மை சேர்த்தனர்.
பற்கள் பறைபோல் கொட்ட, குளிரில் நடுங்கினர்.
விலங்குகள் மேய்தலை மறந்து ஒடுங்கின.
குரங்குகள் குளிரால் நடுங்கி வருந்தின.
மரத்தில் தங்கிய பறவைகள் நிலத்தில் விழுந்தன.
பசுக்கள், தம் கன்றுகள் பாலுண்ணுதலை விடும்படி உதைத்துத் தள்ளின.
அஃறிணையாகிய மலையினையும் குளிரச்செய்தது.
இவ்வாறு மழைக்கால வருணனையை நெடுநல்வாடை கூறுகிறது.
5.
(c)
உவமை உருபு
6.
(d)
நகரம்
7.
(d)
கூற்று சரி, காரணம் சரி
8.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
9.
(a)
வெயில்
10.
(c)
மரம்
11.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
12.
(b)
உயர்திணை, அஃறிணை
13.
(c)
தொல்காப்பியம்
14.
(a)
பொருட்குறிப்பு
15.
(d)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
16.
தொடர்ந்து முப்பது ஆண்டுகள்
17.
காடுகள் அழிக்கப்பட்டதால்.
18.
மனம் வெதும்பி (அதிர்ச்சி அடைந்து).
19.
(அ) தீட்டிய - தீட்டு + இ(ன்) + ய் + அ
தீட்டு - பகுதி
இ(ன்) - இறந்த கால இடைநிலை. 'ன்' புணர்ந்து கெட்டது விகாரம்
ய் - உடம்படுமெய் சந்தி
அ - பெயரெச்ச விகுதி
20.
(அ) பொழி + த்(ந்) + த் + அ.
பொழி - பகுதி; த் - சந்தி, ‘ந்' ஆனது விகாரம்; த் - இறந்தகால இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி.
21.
அ) வலனேர்பு - வலன் + ஏர்பு
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி, நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணர்ந்து (ன் + ஏ - னே) 'வலனேர்பு' என ஆனது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards