12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
"செம்பரிதி".... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரிய நிழல்
2.
இலக்கணக் குறிப்பு தருக - சிவந்து
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உருவகம் ஈ) வினையெச்சம்
3.
முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார் ?
4.
நிலையாமை குறித்துச் சவரி உரைக்கும் கருத்து யாது?
5.
‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ?' என்ற இராமனின் கூற்று பின்வரும் பழமொழிகளுள் எதற்குப் பொருந்தும்?
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும், ஆ) சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்
6.
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
7.
இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
8.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
9.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
10.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில், குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
11.
குகனொடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினை விளக்கி எழுதுக.
12.
சடாயுவைத் தந்தையாய் ஏற்று இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
13.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து - இடம். சுட்டிப் பொருள் விளக்குக.
14.
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடம் கட்டிப் பொருள் விளக்கம் தருக.
15.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
16.
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள் இக்கவிதையின் அடி,
'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக
17.
'செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான், செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்' - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
18.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் குறிப்பிடுவது எவற்றை?
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவை அனைத்தையும்.
19.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது _______________.
தனிக்குடும்ப முறை
விரிந்த குடும்ப முறை
தாய்வழிச் சமூகமுறை
தந்தைவழிச் சமூக முறை
20.
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை _________________.
அறவோர் துறவோர்
திருமணமும் குடும்பமும்
மன்றங்களும் அவைகளும்
நிதியமும் சுங்கமும்
21.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | குரங்குகள் | 1 | கன்றுகளைத் தவிர்த்தன. |
| (ஆ) | பசுக்கள் | 2 | மரங்களிலிருந்து வீழ்ந்தன. |
| (இ) | பறவைகள் | 3 | குளிரால் நடுங்கின. |
| (ஈ) | விலங்குகள் | 4 | மேய்ச்சலை மறந்தன. |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
22.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | அவன் அவள் அவர் | 1 | உளப்படுத்தாத் தன்மைப் பன்மை. |
| (ஆ) | நாங்கள் முயற்சி செய்வோம் | 2 | உளப்பாட்டுத் தன்மைப் பன்மை |
| (இ) | நாம் முயற்சி செய்வோம் | 3 | தன்மைப் பன்மைப் பெயர்கள் |
| (ஈ) | நாங்கள், நாம் | 4 | பதிலிப் பெயர்கள் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
23.
யார் ? எது ? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே _________________.
அஃறிணை, உயர்திணை
உயர்திணை, அஃறிணை
விரவுத்திணை, அஃறிணை
விரவுத்திணை, உயர்திணை
24.
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம் பெற்ற இலக்கண நூல் _______________.
நன்னூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
25.
தமிழில் திணைப்பாகுபாடு ________________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
பொருட்குறிப்பு
சொற்குறிப்பு
தொடர்க்குறிப்பு
எழுத்துக்குறிப்பு
26.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
இடைச்சொல் தொடர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
27.
பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
28.
பிழையான தொடரைக் கண்டறிக.
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
29.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் _____________
அடிமோனை, அடிஎதுகை
சீர்மோனை, சீர்எதுகை
அடிஎதுகை, சீர்மோனை
சீர்எதுகை, அடிமோனை
30.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது _________________.
சூரிய ஒளிக்கதிர்
மழை மேகங்கள்.
மழைத்துளிகள்.
நீர்நிலைகள்.
31.
''மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது.
ஆ) பொதிகையில் தோன்றியது.
இ) வள்ளல்களைத் தந்தது.
க மட்டும் சரி
க, ஆ இரண்டும் சரி
இ மட்டும் சரி
க, இ இரண்டும் சரி
32.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
33.
'உரிமைத்தாகம்' என்னும் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் ............................ கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
34.
பண்பின் படிமமாய்ப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
35.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு ? விளக்குக.
36.
பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்புநலத்தை விவரிக்க.
37.
நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
38.
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக
தாமரை இலை நீர் போல
39.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
அலை, அளை, அழை
40.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
கலை, களை, கழை
41.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
தலை, தளை, தழை
42.
படத்திற்குப் பொருத்தமான பின்வரும் திருக்குறளின் விடுபட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.

சினம்என்னும் _________ கொல்லி இனம்என்னும்
ஏமப் _______ சுடும்.
43.
வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
44.
உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்றுவருமாறு இரு தொடர்களை எழுதுக.
45.
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை ?
46.
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
47.
முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருள் யாவை?
48.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?
49.
புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
50.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் எவ்வாறு ?
51.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்றுக் கொடுக்கும்.
52.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக்கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
53.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும்பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும்.
54.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
55.
"கம்பராமாயணம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'துன்பு' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
1.
2.
3.
இல்லற வாழ்வில் ஈடுபட்டுத் தானும் இன்பம் அனுபவித்துப் பிறர்க்கும் உதவி செய்ய வேண்டும்.
இத்தகைய வழியில் இல்வாழ்க்கை நடத்துபவனே 'முயல்வாருள் எல்லாம் தலை' என்கிறார், வள்ளுவர்.
4.
(i) உலகிலுள்ள பொருள்கள்மீது நாம் கொள்ளும் பற்று நிலையாமை.
(ii) நிலையற்ற வாழ்வில் நீண்ட தவம் செய்து நிலையான இன்பத்தைப் பெற வேண்டும் என்று கூறினாள்.
5.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
6.
(i) எதிர்பாராத நிகழ்வுகளான ஆனந்தம், மனச்சோர்வு, அனுபவம், விழிப்புணர்வு ஆகியன மனிதர்களிடத்தில் தோன்றி மறையும்.
(ii) இவற்றை விருந்தினர் இல்லத்திற்கு வரும் விருந்தாளிகளாய் உருவகம் செய்கின்றார், ஜலாலுத்தீன் ரூமி.
7.
இனநிரை - இனம் + நிரை
(i) 'மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும்' என்னும் விதிப்படி, 'ம' கரமெய் (ம்) கெட்டது. ன(ன் + அ) உயிர் ஈறாய் நின்றது.
(ii) வருமொழி முதலில் மெல்லின 'ந'கரம் வந்ததால் இயல்பாய்ப் புணர்ந்தது. இன + நிரை - இனநிரை.
8.
அந்தி நேரத்தில் மேற்கு வானில் கதிரவன் மறையும் எழில் காட்சி.
வியர்வை சிந்தி, கடுமையாய் உழைத்துச் சிவந்த கைகளை உடைய தொழிலாளியின் நிலை. இவற்றைப் பாடத் தமிழின் துணை வேண்டும் என்கிறார், கவிஞர் சிற்பி.
9.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
- இக்குறட்பாவில் பயின்று வரும் அணி நிரல்நிறை அணி.
அணி விளக்கம் : பெயரையோ வினையையோ ஒரு வரிசைப்பட நிறுத்தி, அவற்றோடு தொடர்புள்ளவற்றைப் பின்னர் அவ்வரிசைப்படக் கூறுவது, நிரல்நிறை அணி.
பொருத்தம் : இல்வாழ்க்கையில் அன்பிருந்தால் பண்பு ஆகும்; அறன், பயனாகும். குறளில் 'அன்பு, அறம்' ஆகியவற்றை முதலடியில் வரிசைப்படுத்தி, அவற்றிற்கு ஏற்ப அடுத்த அடியில் பண்பு, பயன் ஆகிய சொற்களை அதே வரிசைப்படி அமைத்ததால் இது நிரல்நிறை அணியாகும்.
10.
(i) தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதால், கடனின்றி நிம்மதியாய் வாழ்கிறோம். இந்த நிலையில் என்னால் ஆன உதவிகளைச் செய்வேன்.
(ii) வீட்டிற்குத் தேவையான பால், செய்தித்தாள் போன்றவற்றைக் காலையில் வாங்கி வருவேன்.
(iii) காய்கறிகளை அரிந்து கொடுத்துச் சமையலுக்கு உதவுவேன்.
(iv) அப்பா துவைத்துத் தரும் துணிகளை உலர்த்துவேன்.
(v) மாலையில் பெற்றோர் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் பாலை காய்ச்சிக் கொடுத்து, தின்பண்டங்கள் கொடுத்துத் தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்வேன்.
(vi) உலர்ந்த துணிகளை மடித்து வைப்பேன்.
(vii) இவ்வாறு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.
11.
(i) இராமனுடன் பிறந்தவர்கள் பரதன், இலக்குவன், சத்துருக்கனன் ஆவர்.
(ii) சிற்றன்னையின் சூழ்ச்சியால் இராமன் காடு சென்றான்.
(iii) கங்கைக்கரையில் வேடர் குலத்தலைவன் குகன் இராமனைக் கண்டு வணங்கி, அன்பு செலுத்தினான்.
(iv) இராமன் அவனது அன்பைப் பாராட்டி, "உன்னைக் காண்பதற்குமுன் சகோதரர்கள் நாங்கள் நால்வராய் இருந்தோம்.
(v) "இனிமேல் நாம் ஐவரானோம்" என்று குகனிடம் கூறினான்.
(vi) சுக்கிரீவனைக் கண்டு, அவனின் பண்பு நலனைப் போற்றி அறுவரானோம் என்றான். இராமன்
(vii) அடுத்து இராவணனின் தம்பி வீடணனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு “"எழுவரானோம்''” என்றான், இராமன்.
12.
(i) 'எத்தகைய சிறப்பான விறகுகள்' என்று கண்டவர் வியக்குமாறு, இராமன் மணப்பொருள்களான அகில்கட்டைகள், சந்தனக்கட்டைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து குவித்தான்.
(ii) வேண்டிய தருப்பைப் புற்களைத் திருத்தி அமைத்துக் கொண்டுவந்தான்.
(iii) பூக்களையும் கொண்டுவந்து தூவினான்.
(iv) மணலில் சடங்குகள் நிகழ்த்துவதற்குரிய மேடையை அமைத்தான்.
(v) தெளிந்த நீரையும் கொண்டுவந்து வைத்தான்.
(vi) தன் தந்தையாய் ஏற்று சடாயுவின் உடலைத் தன் நீண்ட கைகளால் தூக்கிக்கொண்டு சென்று அடுக்கப்பட்ட விறகுகள்மீது இட்டான்.
13.
இடம் : இவ்வடிகள், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள் : விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்களை நல்லவரா கெட்டவரா என ஆராய்ந்து பார்த்து அனுமதிப்பதில்லை. அதுபோல, உன்னிடம் வருபவர் எவரானாலும் இன்முகத்துடன் வரவேற்று நன்றி செலுத்து. ஆண்டவன் ஏதோ ஒரு நல்வழியை உணர்த்துவதற்காக அவர் உன்னிடம் அனுப்பப்படுகிறார்.
14.
இடம் : ‘ஓங்கலிடை' எனத் தொடங்கும் தண்டியலங்கார மேற்கோள் பாடலில் இடம் பெற்ற அடி இது.
பொருள் : சூரியனும் தமிழும், கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்திலுள்ள இருளைப் போக்கும் தன்மை வாய்ந்தன.
விளக்கம் : சூரியன் உதயமாகி, மலையில் தோன்றி, உலகிலுள்ள புறஇருளைப் போக்குகிறது.
பொதியமலையில் தோன்றிய தமிழ், மக்களின் அகத்தில் உள்ள அறியாமை இருளைப் போக்குகின்றது.
15.
(i) வாடைக்காலத்தில் கோவலர்கள், தம் நிரைகளைக் காக்க பழகிய நிலத்தைவிட்டு மேட்டு நிலத்தை அடைந்தனர்.
(ii) உடலில் பட்ட குளிரைப் போக்கக் கோவலர் பலர் ஒன்றுசேர்ந்தனர்.
(iii) தீயை மூட்டிச் சுற்றி அமர்ந்து, தீயில் கைகளைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டனர்.
(iv) எனினும், குளிர் நீங்காது, மேல்வாயும் கீழ்வாயும் நடுங்கி, பற்கள் பறையடிப்பன போல் மோதி ஒலி உண்டாக்கின.
16.
(i) உழவர்கள், முறையான ஏட்டுக்கல்வி பயிலாதவர்கள்.
(ii) இயற்கையே அவர்களின் பாடப்புத்தகம்; காணும் காட்சியே பாடம்.
(iii) காட்சிவழி கற்கின்ற அனுபவமே அவர்கள் பெறும் அறிவு.
(iv) உழவன் ஒருவன் புலர்காலைப் பொழுதில் நிலம் நோக்கிச் செல்கிறான்.
(v) வழியில் ஒரு மூங்கில் இலைமீது, வெண்ணிறப் பனித்துளி படிந்திருக்கிறது.
(vi) இப்பனித்துளி கதிரவன் தோன்றியதும், சூரியக்கதிர்களால் உறிஞ்சப்பட்டுவிடும் என உழவன் சிந்திக்கிறான்.
(vii) படித்தறியாத உழவன், எதுகை மோனையோடு பாடுகிறான்.
''மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே !
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே !''
(viii) இதன் தொடர்ச்சியாய் அய்யப்பமாதவன் பாடல் அமைந்துள்ளது.
"நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்” என்கிறார்.
(ix) கதிரவன், தன் வெண்ணிறக் கதிர்களால், நீர்நிலைகளில் உள்ள நீரை உறிஞ்சி, ஆவியாய் மேலெழும்பச் செய்கிறான், என்கிறார் அய்யப்பமாதவன்.
(x) கவிஞர்களின் கவிவடிவமும் நிகழிடமும் வேறுபட்டாலும் கருத்து ஒருநிலைப்பட்டிருக்கும் கவிநயம் கண்டு மகிழ்வோம்.
17.
பகலெல்லாம் வெண்ணிற ஒளி வீசி வெப்பத்தைத் தருகிறான், கதிரவன்.
மாலையில் மேற்குத்திசையில், செந்நிற ஒளி பரப்பி வானத்தைச் செம்மை ஆக்குகிறான்.
அக்காட்சி, சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்த பூக்காடு போல இருப்பதாய் சிற்பி கூறுகிறார்.
18.
(d)
இவை அனைத்தையும்.
19.
(d)
தந்தைவழிச் சமூக முறை
20.
(b)
திருமணமும் குடும்பமும்
21.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
22.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
23.
(b)
உயர்திணை, அஃறிணை
24.
(c)
தொல்காப்பியம்
25.
(a)
பொருட்குறிப்பு
26.
(d)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
27.
(a)
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
28.
(c)
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
29.
(c)
அடிஎதுகை, சீர்மோனை
30.
(c)
மழைத்துளிகள்.
31.
(d)
க, இ இரண்டும் சரி
32.
காரணம் கருதாமல் செய்த உதவி
ஒருவர் நமக்கு எந்த உதவியும் செய்யாதிருக்கையில், அவருக்கு நாம் உதவுவது 'செய்யாமல் செய்த உதவி' எனப்படுகிறது.
அப்படிப்பட்ட உதவியைச் செய்தவருக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் ஈடாகாது.
காலத்தினால் செய்த நன்றி
ஆபத்துக்காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறியதாய் இருக்கலாம்.
ஆனால், உரிய காலத்தில் செய்யப்பட்ட அந்த உதவியின் பயனை உணர்ந்தவர்கள் அஃது உலகத்தைவிடப் பெரிது எனப் போற்றுவர்.
பயன் தூக்கார் செய்த உதவி
ஒருவருக்கு உதவி செய்வதால், என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பாராது உதவி செய்ய வேண்டும். அத்தகைய உதவியை ஆராய்ந்து பார்த்தால், அது கடலைவிடப் பெரியது ஆகும்.
பனைத்துணையாய்க் கொள்பவர்
ஒருவர் செய்த சிறிய உதவியைப் பெரியோர் பெரிதாய்க் கருதுவர்.
இதனையே வள்ளுவர், தினையளவான சிறிய உதவியைப் பனையளவாய்க் கருதுவர் என்றார்.
நல்லதைக் கொள்; அல்லாததை விடு !
ஒருவர் செய்த நன்றியை என்றுமே மறத்தல் கூடாது.
ஒருவர் செய்த தீமையை அன்றே மறத்தல் வேண்டும்.
செய்ந்நன்றி கொன்றவர்க்கு உய்வில்லை!
எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் அந்தப் பாவத்திலிருந்து நீங்க வழியுண்டு.
ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு அப்பாவத்திலிருந்து நீங்க வழியில்லை.
33.
பெற்றோர் போல் பேணி வளர்த்தனர் ; முத்தையன் தம்பி, வெள்ளைச்சாமி; அவன் இளமையிலேயே பெற்றோரை இழந்தான். எனினும், முத்தையனும் அவன் மனைவி மூக்கம்மாளும் வெள்ளைச்சாமியை அன்புடன் வளர்த்தனர்.
சொத்துப்பிரிவினை : முத்தையன் தன் தம்பி வெள்ளைச்சாமிக்குத் திருமணம் செய்து வைத்தான். வெள்ளைச்சாமி மனைவி தனிக்குடித்தனம் செல்லப் போர்க்கொடி தூக்கினாள். முத்தையன் அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்தான். வெள்ளைச்சாமி மனைவி அடுத்துச் சொத்தைப் பிரிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினாள். முத்தையன், தந்தையின் நிலத்தில் பாதியையும், இரண்டு மாடுகளையும் தம்பிக்குக் கொடுத்தான்.
நிலத்தை இழந்தான், தம்பி : ஐந்து ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள், மேலத்தெரு வேலப்பன், முத்தையனைச் சந்தித்தான்; 'உன் தம்பி கந்துவட்டிக் கருப்பசாமிக்கு நிலத்தை எழுதிக் கொடுத்த விவரம் உனக்குத் தெரியுமா?” என்று அவன் கேட்டான்.
முத்தையனுக்குத் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. "ஐந்து வருடத்திற்கு முன் வாங்கிய 200 ரூபாய் கடன் இப்போது வட்டிக்கு மேல் வட்டியாய்க் குட்டி போட்டுப் பெருந்தொகை ஆனதால், தம்பியால் பணத்தைக் கொடுக்க முடியவில்லையாம். இப்போது நிலத்தைக் கருப்பசாமி எழுதி வாங்கிவிட்டானாம்" என்றான், வேலப்பன்.
செய்தி கேட்ட முத்தையனுக்குத் தலைசுற்றியது.
அண்ணனா கந்துவட்டிக்காரனா ? : முத்தையன் வெள்ளைச்சாமி வீட்டிற்குச் சென்றான். “கந்துவட்டிக்கு நிலத்தை இழந்தது உண்மையா? அன்றே நான் 200 ரூபாய் தருகிறேன் என்றேன். என்னிடம் வாங்கிக்கொள்ளாமல் கந்துவட்டிக்காரனிடம் சென்றாயே!" என்று வருத்தத்துடன் முத்தையன் கேட்டான்.
"நீ கடன் பத்திரம் எழுதிக் கொடுத்தால்தானே கொடுப்பேன் என்றாய்" என்று வெள்ளைச்சாமி கேட்டான். “ஆமாம், இன்று கந்துவட்டிக்காரனிடம் கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துத்தானே 200 ரூபாய் பெற்றாய்" என்று வெள்ளைச்சாமியிடம் முத்தையன் கேட்டான்.
“நீயும் கந்துவட்டிக்காரனும் ஒன்றா ? என் அண்ணனில்லையா?” என்று கன்னத்தில் அறைவது போலக் கேட்டான், வெள்ளைச்சாமி.
முத்தையனுக்கு அன்று மனைவி சொன்னது, காதில் கோவில்மணி போல் ஒலித்தது. “அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கலாம். அதற்காகக் கூடப்பிறந்தவனிடம் கடன்பத்திரம் எழுதிக் கேட்கலாமா ? இது எனக்குச் சரியாகப் படவில்லை. 200 ரூபாய்தானே ! தம்பி திருப்பிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. செலவோடு செலவாய்ச் சேர்க்க வேண்டியதுதான். தண்ணீர் முட்டித் தண்ணீர் விலகுமா ?"
"மனைவியின் மந்திரச்சொல்லை உதறினோம். தம்பி என்னும் உறவை இழந்தோம். தகப்பன் தந்த சொத்தும் போனது' என்று புலம்பியபடி, தள்ளாடித் தள்ளாடி நடந்தான், முத்தையன்.
34.
முன்னுரை : அனைத்து உயிரினங்களையும் அன்பில் இணைத்திடும் அறமாய் விளங்குபவன், இராமன்; இன்பதுன்பங்களைச் சமநிலையில் கருதுபவன்; மனிதநேயம் மிக்கவன்; பிறன் மனை நோக்காப் பேராண்மை கொண்டவன். அவன் பிற உயிர்களிடம் கொண்டிருந்த உறவு நிலையைக் காண்போம்.
விதிமுன் செல்லப் பின் சென்றான் : “அரியணை விடுத்து ஆரணியம் சென்று ஏழிரண்டு ஆண்டு கழித்து வா !” என்று சிற்றன்னை கைகேயி சொன்னாள். இராமன், தம்பி இலக்குவனுடனும் மனைவி சீதையுடனும் கானகம் சென்றான். அம்மூவரும் கங்கைக்கரையில் முனிவர்கள் ஆசிரமம் ஒன்றில் தங்கினர் ; இராமனைக் காணக் குகன் வந்தான்.
காணிக்கைப்பொருள்களுடன் காண வந்தான் : குகன், வேடர் குலத் தலைவன். கல்விகேள்விகளில் சிறந்தவன் அல்லன். எளிய குகன், இராமன் சிறப்புகளை அறிந்து, காணிக்கைப் பொருள்களுடன் அவனைக் காண வந்தான்.
அன்பின் வசப்பட்டான் : குகன் காணிக்கையாய் மீனும் தேனும் கொண்டுவந்தான். இராமன் குகனின் அறியாமையைப் புரிந்துகொண்டான்; அன்பையும் அறிந்தான்; 'அன்போடு கொண்டுவரப்பட்டவை நான் உண்டதற்குச் சமம்' என்றான். இராமனைத் துறவுக்கோலத்தில் கண்டதால் மிகவும் வருந்தினான், குகன்.
குகனின் அன்புள்ளத்தைக் கண்ட இராமன், "இதற்கு முன் நாங்கள் நால்வர்; இன்றுமுதல் நாம் உடன் பிறந்தவர் ஐவர் ஆனோம்" என்று கூறினான். நாடாளும் இராமன், நாவாய் ஓட்டும் வேடுவனான குகனைத் தன் தம்பியாய் ஏற்றான்.
இறுதிக்கடன் செய்தான் : தசரதனுக்கு நண்பன் கழுகரசனான சடாயு ஆவான். சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனுடன் போரிட்டு இறந்தான், சடாயு. இராமன், சடாயுவைப் பறவைதானே என்று கருதாமல், தன் தந்தையாகவே கருதி, முறைப்படி அவனுக்குரிய ஈமச்சடங்குகளைச் செய்தான்.
பிறப்பு நிலையை ஒழித்த பெருமாட்டி : காட்டில், சுக்கிரீவனைக் காண இராமலக்குவர்கள் சென்றனர். வழியில் மதங்க ஆசிரமத்தைக் கண்டனர்; அங்குச் சவரியைக் கண்டனர். அவள் பல்லாண்டுகளாய் இராமனை நினைத்துத் தவம் செய்து வந்தாள். இராமன் அவளிடம் தாயன்பு செலுத்தினான். இராமனைக் கண்ட சவரி, “உன்னைக் கண்டதால் நிலையற்ற உலகப்பற்று நீங்கியது; பிறப்பு என்னும் தொடர் ஒழிந்தது” என்றாள்.
உயிரிகள் ஒரு நிலையின : தமையனால் தாக்கப்பட்ட வானரனாகிய சுக்கிரீவனை, அனுமன் இராமனிடம் அழைத்து வந்தான். இராமன் அவனை அன்புடன் வரவேற்றான்; 'உன் பகைவர், நண்பர், உறவினர் அனைவரும் எனக்கும் அத்தகையவரே. நீ என் இன்னுயிர்த் துணைவன்” என்றான். வானர குலத்தவனாய் இருந்தாலும் உயிரிகள் அனைத்தும் ஒரு நிலையின எனக் கருதுபவன், இராமன்.
எதிரியல்லன், உடன்பிறந்தான் ! : இராவணனைப் பிரிந்து வந்த வீடணனைப் பகைவனுக்குத் தம்பி என்று கருதாது, சரண் என வந்தவரைத் தாங்கி ஆதரவு அளிப்பதே அறம் என முடிவு செய்தான், இராமன். "முன்பு உடன்பிறந்தோர் நால்வரானோம்; குகனோடு ஐவரானோம்; பின் சுக்கிரீவனோடு சேர்ந்து அறுவரானோம். இப்போது உன்னோடு சேர்ந்து எழுவரானோம்" என்றான், இராமன்.
முடிவுரை : இவ்வாறு காட்டுவேடன், வானர வீரன், பகைவன் தம்பி ஆகியோரை உடன்பிறந்தாராய் ஆக்கி அன்பின் உச்சத்தைத் தொட்டுவிட்டான், இராமன்.
35.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பு, சமூகம் என்னும் பரந்த அமைப்பாதல்.
(i) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
(ii) குடும்பம் என்பதில் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்னும் அமைப்புவரை விரிவடைகிறது.
(iii) குடும்பம், மனித சமூகத்தின் அடிப்படை அலகு.
(iv) குடும்பம் அமைய அடிப்படை, திருமணம்.
(v) ‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள், கூடி வாழ்தல். அது ‘அம்’ விகுதி பெற்றுக் ‘குடும்பம்’ என்றானது.
(vi) குடும்பம் பல கட்டங்களைக் கடக்கிறது; பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது.
(vii) குடும்பத்தின் தொடக்கம், திருமணம்; மணமக்கள் வாழும் வீடு, மணந்தகம். ‘திருமணம்’, ‘குடும்பம்’ என்னும் சொற்கள் தொல்காப்பியத்தில் இல்லை; திருக்குறளில் தான் காணப்படுகின்றன.
(viii) சங்க காலத்தில் தாயே குடும்ப முறைக்குத் தலைமையேற்றாள். அது தாய்வழிக் குடும்பமாய் அமைந்தது.
(ix) பதிற்றுப்பத்தில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை தாய்வழிக் குடும்பத்திற்குச் சான்றாகும்.
(x) சங்க இலக்கியங்களில் ‘இவள் மகன்' என்ற கூற்றே காணப்படுகிறது; 'இவன் மகன்' என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
(xi) சங்க காலத்தில், திருமணமான பெண், தாய்வீட்டிலேயே கணவனுடன் தொடர்ந்து வாழும் நடைமுறை இருந்தது. தாய்வழிச்சொத்து பெண்களையே சேர்ந்தது. சங்க காலத்திலேயே ஆண்வழிச் சமூக முறையும் வேர் ஊன்றிப் பரவியது. திருமணத்திற்குப் பின் பெண்கள், கணவன் இல்லத்திற்குச் சென்று வாழ்ந்தனர்.
(xii) ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' என்னும் குறுந்தொகைப்பாடல் பெண், தன் கணவனை முழுமையாய்ச் சார்ந்து வாழ்ந்தமையைக் கூறுகிறது.
(xiii) தனிக்குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியோர் சேர்ந்து வாழும் நிலை. தனிக்குடும்பத்துடன் கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் நிலையே 'விரிந்த குடும்ப
முறை' எனப்பட்டது. இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்கள் மற்றும் சுற்றத்துடன் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயன். குடும்பம் என்னும் அலகின் தொடர்ச்சியே இன்றைய சமூக அமைப்பாகும். இதனைக் கூட்டுக் குடும்பமும், தந்தைவழிக் குடும்ப அமைப்பும் கட்டமைக்கின்றன.
36.
முன்னுரை : ஊர் கூடித் தேர் இழுப்பது போல, ஊரின் நன்மைக்குப் பயன் அளிக்கும் ஒரு செயலைச் செய்யப் பலரின் உழைப்புத் தேவை. அத்தகைய செயலுக்கு முதல் ஆளாய் 'வடம் பிடித்தவன்’ மருதன். அவனது பண்புநலத்தை அறிவோம்.
கெடுப்பதும் வாழவைப்பதும் மழையே ! : மருதன், வளவனாற்றின் வடகரையில் நின்று வடக்கே பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்று வயல்கள். மழையை நம்பிப் பயிரிட்டவை. இப்போது கொட்டும் மழையால் பயிர் கெட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ‘மழைநீர் வயலில் தேங்காமல் வடிந்து செல்ல என்ன செய்யலாம்' என்று மருதன் சிந்தித்தான்.
தடுக்கும் செடிகளை ஒதுக்கும் வழி : மருதன் வடிகால் வாய்க்கால்வழி நடந்து சென்றான். அந்த வடிகால் வாய்க்கால் மூன்று மைல் நீளமுள்ளது. அதில் முழுவதும் காட்டாமணக்குச்செடிகள் மண்டிக்கிடந்தன. அவற்றை அகற்றினால் உபரிநீர் வடிந்துவிடும். ஆனால், அவை முழுவதையும் எப்படி அகற்றுவது ?
ஊரார் உதவ முன்வராமை : வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டாமணக்குச்செடியை அகற்ற ஊர் மக்கள் உதவுவார்கள் என்ற எண்ணம் மருதனுக்கு ஏற்பட்டது. எதிரில் வந்த மாரியிடம் சொன்னபோது, ''ஊரை ஒன்றுகூட்டு; மற்றதைப் பிறகு பார்ப்போம்'' என்று பொறுப்பில்லாமல் கூறிச் சென்றான்.
மருதன், மிராசு காளியப்பனிடம் விஷயத்தைக் கூறிய போது, அவர் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய், மறுநாள் மகள் வீடு செல்ல வேண்டும் என்று சொல்லி ஒதுங்கிவிட்டார்.
'பொதுச்சேவை’ என்று பொழுதைக் கழிக்கும் பிரேம்குமாரிடம் மருதன், கால்வாய் பற்றிக் கூறினான். அதற்கு, ‘அரசாங்கம் உள்ளது; எனக்குப் பலவேலைகள் உள்ளன' என்று அவனும் பொறுப்பைத் தட்டிக் கழித்தான்.
பிள்ளையார் சுழி போட்ட மருதன் : ஒருவரும் ஒத்துவராத நிலையில், இரவில் சிந்தித்தபடியே தூங்கிய மருதன், அதிகாலையில் தனி ஆளாய் ஆமணக்குச்செடியை வெட்டத் தொடங்கினான். கணவனைக் காணாத மருதனின் மனைவி கால்வாய்க்கு வந்தாள். கணவனுக்கு உதவியாய், வெட்டப்பட்ட காட்டாமணக்குச்செடிகளை வெளியே கொண்டுபோய்ப் போட்டாள்.
தூரத்தில் மீன் பிடித்த மாரியின் கண்ணில் இந்தக் காட்சி பட்டதும் அவனும் உதவிக்கு வந்தான். அந்த வழியாய் மாட்டுவண்டியில் சென்ற மிராசுதார் காளியப்பன், வண்டியை நிறுத்தச் சொல்லி, வாய்க்காலில் இறங்கி உதவினார். வண்டிக்காரன் மூலம் செய்தி ஊருக்குள் பரவியது. உறுத்தல் தாங்காத ஊர்மக்கள் உதவிக்கு வந்தனர். கால்வாய் சுத்தமானது. வயல் பிரச்சினைக்கும் தீர்வு வந்தது.
முடிவுரை : எல்லோரும் நல்லவர்களே. ஆனாலும், தனிமனித நோக்கைத் தாண்டிப் பொதுநல நோக்கோடு செயல்பட ஒரு தூண்டுகோல் வேண்டும். அத்தகைய தூண்டுகோலே மருதன். அவனின் பண்பு போற்றத்தக்கது.
37.
மழைக்கால வருணனை
பருவம் தவறாது பொழியும் மேகம், உலகம் குளிர்ச்சி அடையும்படி புது மழையினைப் பொழிந்தது.
மழைவெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலை உடைய கோவலர்கள் தம்முடைய எருதுகள், பசுக்கள், ஆடுகள் அனைத்தையும் மேட்டு நிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் பழகிய நிலத்தை விட்டு வந்ததற்கு வருந்தினர்.
அவர்கள் சூடியிருந்த காந்தள் மலர்களால் ஆன கண்ணியில் நீர்த்துளி வீழ்ந்து அலைத்தது.
குளிர் அவர்கள் உடலை வருத்தியது.
தீ மூட்டி, கையைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்து வெம்மை சேர்த்தனர்.
பற்கள் பறைபோல் கொட்ட, குளிரில் நடுங்கினர்.
விலங்குகள் மேய்தலை மறந்து ஒடுங்கின.
குரங்குகள் குளிரால் நடுங்கி வருந்தின.
மரத்தில் தங்கிய பறவைகள் நிலத்தில் விழுந்தன.
பசுக்கள், தம் கன்றுகள் பாலுண்ணுதலை விடும்படி உதைத்துத் தள்ளின.
அஃறிணையாகிய மலையினையும் குளிரச்செய்தது.
இவ்வாறு மழைக்கால வருணனையை நெடுநல்வாடை கூறுகிறது.
38.
பண்பட்டவர்களிடம் பழக நேரிட்டால், தாமரை இலைத் தண்ணீர் போலப் பட்டும் படாமலும் பழக வேண்டும்.
39.
கரை நோக்கி வீசிய அலையில் வந்த அளைகள் (நண்டுகள்) கடல் அழைத்ததால் மீண்டும் கடல் நோக்கிச் சென்றனவோ?
40.
களையான முகமுடைய இளம்பெண், கழைமீது கட்டப்பெற்ற கயிற்றில் ஏறி ஆடிய ஆட்டக்கலையைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
41.
தளையிடப்பட்டிருந்த மாடு அவ்வப்போது தலையை அசைத்துத் தழையைத் தின்றது.
42.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
43.
அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று கண்காட்சியைக் கண்டனர்.
44.
நண்பர் உண்டனர் (அர்)
நண்பர் உண்பர் (ப்)
45.
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன திணை, பால், எண், இடம்.
46.
பிழையின்றி எழுத :
1. மொழியின் இயல்பை உணர வேண்டும்.
2. இலக்கண விதிகளை அறிய வேண்டும்.
3. தவறின்றி எழுத முயற்சியும் பயிற்சியும் தேவை.
47.
1. முடிந்தால் தரலாம் - இயன்றால் தரலாம்.
2. முடித்தால் தரலாம் - சொன்னபடி முடித்தால் தரலாம்
48.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்கே உரிமையுடையனவாயின.
49.
(i) சங்க இலக்கியத்தில், தற்காலிகமாய்த் தங்குமிடம், புக்கில்.
(ii) கணவன், மனைவி ஆகியோர் பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழுமிடம், தன்மனை.
50.
(i) பண்டைய விரிந்த குடும்பம், இன்றைய கூட்டுக் குடும்பம்.
(ii) சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்றது.
(iii) கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் 'விரிந்த குடும்ப' முறையைக் காண இயலும்.
(iv) இன்று பெண்கள் திருமணத்திற்குப் பின், கணவனின் குடும்பத்தாருடன் வாழ்வதைக் காணலாம்.
(v) பொருளாதாரம், கல்வி, பணிநிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் பெண்கள் உயர்ந்திருப்பினும் அவள், கணவன் குடும்பத்தினரைச் சார்ந்து வாழும் அமைப்பே இன்று காணப்படுகிறது.
(vi) கணவன் வீட்டில் அவன் பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோருடன் வாழும் கூட்டுக் குடும்பநிலை, பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சி ஆகும்.
51.
ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துகொண்டு, அறியாமையினை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்றுக் கொடுக்கும்.
52.
மாணவர்கள் பெற்றோர்களைத் தம் நண்பர்களாய்ப் பாவித்து நட்புக்கொள்ள வேண்டும். தம் இன்பதுன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
53.
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்த்த கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும்.
54.
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு, ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
55.
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம்*
குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை*
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards