12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
தாய்மொழிவழிக்கல்வியின் சிறப்புகள்.
எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணைநிற்கும் - இதனை வலியுறுத்தி பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
தாய்மொழிக் கல்வியின் தேவை - தாய்மொழிச் சிந்தனை - அறிஞர்களின் பார்வை கற்கும் திறன் பயன் - இன்றைய நிலை.
2.
‘கடிதம் - ஓர் இலக்கிய வகை’ - நிறுவுக.
3.
‘இளந்தமிழே’ என்னும் கவிதையில் சிற்பி கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
4.
சொல்லோவியங்கள் (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளியாசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றையும் எழுதுக.
5.
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக.
6.
சரியானதைத் தேர்க.
கி.ரா - கி.ராமராஜன்
அறுப்பு - நாடகம்
கொம்மை - புதினம்
முத்தையன் - அல்லி
7.
| அ) பேசுபவன், கேட்பவன், பேசப்படும் பொருள் | 1) ஆண்பால் பெண்பால் பொதுப்பெயர் |
| ஆ) பத்துத் தேங்காய் | 2) பலர்பால் சொல் |
| இ) தங்கமணி | 3) அஃறிணை பன்மை விகுதி கட்டாயமில்லை |
| ஈ) மாணவர் வந்தனர் | 4) தன்மை, முன்னிலை, படர்க்கை |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 3 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
8.
'முதல் கல்' கதையின் நாயகன் மருதனின் மனைவி
முல்லையம்மாள்
மாரியம்மாள்
அல்லி
வள்ளி
9.
புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கல் என்று கூறிய இங்கிலாந்தின் அறிவியல் கருத்தாளர்
டேவிட் ஷெப்பர்டு
டேவிட் கிங்
நைட் ஜான்
வில்லியம் ஹென்றி
10.
________________ என்னும் எழுத்துகளுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று/கள் விகுதி/வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும்.
ய், ர், ல், ழ், ள்
ற், ட்
ங, ஞ, ண, ர, ம
க், ச், ட், த், ப்
11.
'குடும்பம்' எனும் சொல் முதன் முதலில் காணப்படும் இலக்கியம் ____________.
திருக்குறள்
தொல்காப்பியம்
நற்றிணை
புறநானூறு
12.
போன மழை திரும்பவும் வருமென்று நான் வெறித்துப் பார்த்தது __________.
ஈரமான மரங்களை
மேகங்களை
மழைக்கனவை
வீட்டுச்சுவரை
13.
எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றி 'வம்சமணி தீபிகை’ என்னும் நூலை எழுதியவர்.
பாரதியார்
கவிகேசரி சாமி தீட்சிதர்
பத்மநாபன்
பரலி.சு.நெல்லையப்பர்
14.
| (அ) | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் | 1 | சேர்ந்தாரைக் கொல்லி |
| (ஆ) | பயன்தூக்கார் செய்த உதவி | 2 | ஞாலத்தின் மாணப் பெரிது |
| (இ) | சினம் | 3 | தெய்வத்துள் வைக்கப்படும் |
| (ஈ) | காலத்தினாற் செய்த நன்றி | 4 | நன்மை கடலிற் பெரிது |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
15.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் குறிப்பிடுவது எவற்றை?
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவை அனைத்தையும்.
16.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | அவன் அவள் அவர் | 1 | உளப்படுத்தாத் தன்மைப் பன்மை. |
| (ஆ) | நாங்கள் முயற்சி செய்வோம் | 2 | உளப்பாட்டுத் தன்மைப் பன்மை |
| (இ) | நாம் முயற்சி செய்வோம் | 3 | தன்மைப் பன்மைப் பெயர்கள் |
| (ஈ) | நாங்கள், நாம் | 4 | பதிலிப் பெயர்கள் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
17.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
இடைச்சொல் தொடர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
18.
பிழையான தொடரைக் கண்டறிக.
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
19.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் _____________
அடிமோனை, அடிஎதுகை
சீர்மோனை, சீர்எதுகை
அடிஎதுகை, சீர்மோனை
சீர்எதுகை, அடிமோனை
20.
கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப்பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
கருத்து 1 சரி
கருத்து 2 சரி
இரண்டு கருத்தும் சரி
கருத்து 1 சரி, 2 தவறு
21.
வலிமை பெற வழி எனப் பாரதியார் குறிப்பிடுவது எதை?
22.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
அ) அவையெல்லாம் ஆ)
1.
முன்னுரை : நாடோடிகளாய் வாழ்ந்த மக்கள், பின்பு ஓர் இடத்தில் சமுதாயமாய் வாழத் தலைப்பட்டனர். அக்காலத்தில் தோன்றியது, மொழி. மக்கள் சமயம், குலம், தொழில் முதலியவற்றால் வேறுபட்டாலும் பேசும் மொழியால் ஒன்றுபடுகின்றனர்.
தாய்மொழியின் தனிச்சிறப்பு : குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும் போதே, அவள் வழியாய்த் தன் ஊனிலும் உயிரிலும் உள்ளத்திலும் மொழியினைப் பெற்றுக்கொள்கிறது. ஆதலால், இது குழந்தையின் தாய்மொழி எனப்படுகிறது.
அறிவுக்கண் கொடுக்கும் ஆசான் : தாயே குழந்தைக்கு முதல் ஆசிரியர். தாயிடம் மழலை பேசும் குழந்தை பள்ளிக்கூடத்தில் மொழியின் ஒலி, வரி வடிவங்களைக் கற்கின்றது. கல்வியுடன் மெய்யறிவு பெறுவதற்கும் உரிய மொழி, தாய்மொழி.
சிந்தனை, மொழி இரட்டைக் குழந்தைகள் : சிந்தனையையும் அதனை வெளிப்படுத்தும் மொழியையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க இயலாது. சிந்தனையும் மொழியும் ஒருங்கே வளர்க்கப்பட வேண்டும். அதுவே மொழி வளர்ச்சிக்கு வழியாகும்.
உயர்தனிச் செம்மொழியே நம் தாய்மொழி! : தன் நாட்டின்கண் வழங்கும் பல மொழிகளுக்குத் தலைமை சான்ற உயர்மொழி; தனித்து இயங்கும் வல்லமை பெற்ற தனிமொழி; திருந்திய பண்பும் சிறந்த நாகரிகமும் பொருந்திய செம்மொழி, தமிழ். இதுவே நமது தாய்மொழி!
அறிவு வாயிலை அகலமாய்த் திறக்கும் ! : மொழியறிவு வளர வளர, இலக்கியச்சுவையுணர் ஆற்றலும், திறனாயும் பாங்கும் உண்டாகும்; இலக்கியப்பற்று, மொழிப்பற்று ஆகியவை உண்டாகும். கல்விக் கழகங்களை விட்டு நீங்கிய பிறகும் வாசிப்புத் தொடரும்.
அந்நியர் அகன்றனர்; அந்நிய மொழி தொடர்கிறது : நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரிடம் அலுவலகப்பணியில் சேர ஆங்கிலம் கற்றனர். ஆங்கிலத்தை ஒரு பாடமாய்க் கற்றுத் தேர்ச்சி பெறுவது தவறன்று. அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்கும் மோகம் இன்று பெருகிவிட்டது. ஒரு மொழியைக் கற்பது தவறன்று; அதற்கு அடிமை ஆவதே அவலம்.
தாய்மொழிக்கல்வி பற்றிக் காந்தியடிகளின் கருத்து : தேசத்தந்தை காந்தியடிகள், “இந்திய மக்களுள் சிலர் தாய்மொழியை மறந்தனர். ஆங்கிலப்படிப்பின்மீது நமக்கு மோகம் ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலக் கல்வியால் நாம் ஆண்மை இழந்துவிட்டோம்; அறிவும் குன்றிவிட்டது; பேடிகளாகிவிட்டோம்” என்று வருத்தப்படுகிறார்.
தாய்மொழியால் முடியும் : ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை பெற்றது. ஆனால், ஆங்கில மொழியிடம் இருந்து சிலர் விடுதலை பெறவில்லை. கருத்தை வெளிப்படுத்த உதவும் தாய்மொழி, கல்வி கற்கவும் உதவும். அனைத்து வகையான பாடங்களையும் தாய்மொழியான தமிழ்மொழியில் கற்க இயலும்.
முடிவுரை : தமிழ்ப்பற்று மிக்கோர் அனைவரும் ஒன்றுபடுவோம்! அனைத்துக் கல்வித்துறையிலும் தமிழ்வழிக் கல்வியை நிறுவுவோம்! அன்னைத்தமிழ், பன்முகச்சிறப்புப் பெறட்டும்! தமிழ் அன்னை உயர்புகழ் பெற உழைப்போம்!.
2.
உறவுக்கு, அறிவுறுத்தலுக்கு, வேண்டுதலுக்கு, வணிகத்திற்கு என்று கடிதங்கள் எழுதுகையில், அவற்றின் மொழியாட்சி மாறுபடுகிறது. கடித வடிவில், சொல்ல வேண்டியவற்றை வெளியிடும் முறை உண்டு. பாரதியார், தாம் நேரில் பேசுவது போன்றே, கடிதத்தில் எழுத்து வடிவில் பேசிவிடுகிறார். இது, ஒரு வகையான புது உத்தியாகும்.
கடித இலக்கியம் :
கடிதங்களை இலக்கியமாக்கும் எழுத்தாளர்கள், மொழிக்கு அதன் வழியாகத் தனி அழகை உருவாக்கித் தருகிறார்கள். தனிப்பட எழுதும் கடிதங்களிலும் ஈர்க்கும் மொழியில் அழுத்தமான எண்ணங்களை, ஆழமான கருத்துகளைத் தந்து, அவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறார்கள்.
கடிதத் தாக்கங்கள் :
பண்டித நேரு, தம் மகளுக்கு எழுதிய கடிதங்கள், அறிஞர் அண்ணா தம் தம்பிமார்க்கு எழுதிய கடிதங்கள், அரசியலிலும் சமூகத்திலும் தாக்கங்களை ஏற்படுத்திப் புதுப்பாதைக்கு வழிவகுத்தன.
கற்பனையும் கருத்துச் செறிவும் :
நேரில் கண்டு அன்பைத் தெரிவிப்பதும், பாராட்டுவதும் மகிழ்ச்சியைத் தரவல்லன என்றாலும், கடிதம் மூலமாக உணர்த்துவது வெளிப்படுத்துவது என்பது, உள்மனத்தில் பதிய வைப்பது, உணர்ச்சி வயப்படுத்துவது. கற்பனைநயம், சொல்நயம், கருத்துநயம் அமைந்த கடிதங்கள், இலக்கிய வகையில் இடம் பெற்றுள்ளன. கண்டு பேசுவதிலும், காணாமல் கடிதத்தின் மூலம் கருத்துகளையும், கற்பனைகளையும், வருணனைகளையும் நிரம்பத் தரமுடியும் என்பதுவே உண்மை.
3.
பொன்னிறப் பூக்காடு : மேற்கில் மாலையில் மறையும் கதிரவன் செந்நிற ஒளியால் வானத்தைச் செந்நிறமாக்கியது. அது செந்நிறப் பூக்கள் பூத்த பூக்காடு போல் விளங்குகிறது.
வருந்தி உழைக்கும் பாட்டாளி : வருந்தி உழைப்பதால் தொழிலாளர்களின் கரங்கள் சிவப்பேறியுள்ளன; தோள்களில் முத்துமுத்தாக வியர்வை தோன்றுகின்றது.
கவி பாட நீயே துணை : அந்திவானத்தின் செந்நிறக் காட்சி, உழைப்பாளர்களின் உழைப்பு ஆகியவற்றைப் பாடக் கிடைத்த செந்தமிழே எனக்குத் துணை.
சங்கத்தில் வீற்றிருந்த தமிழரசி : உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ், பல நூல்கள் உருவாகக் காரணமாக இருந்தது. சிறப்புமிக்க தமிழன்னை பாண்டியர் அமைத்த முச்சங்கங்களில் அரசியாய் கொலுவிருந்தாள்.
அந்த நாளும் வந்திடாதோ! : மொழியைப் போற்றி வளர்த்த புலவர்களும் அவர்களுக்கு ஆதரவளித்த பாரி உள்ளிட்ட வள்ளல்களும் அன்று வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புகள் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடு.
சிங்கமே, தடைகளைத் தகர்த்திடு : சிங்கம் தன்னை அடைத்து வைத்திருக்கும் கூண்டினை உடைத்து வெளியேறும். அதுபோல் பொதிகை மலையில் தோன்றிய தமிழே, உன் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பவற்றைத் தகர்த்திடு.
4.
தலைமைத் தமிழாசிரியர்
வ.வேலுச்சாமியின்
சொல்லோவியங்கள்
(கவிதை நூல்)
வெளியீட்டு விழா
இடம் : நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி
நாள் : 20-03-2019 நேரம் : மாலை - 4 மணி
நிகழ்ச்சி நிரல்
| தமிழ்த்தாய் வாழ்த்து | செல்வி காவியவள்ளி |
| வரவேற்புரை | திரு. தமிழரசன் அவர்கள் (தமிழாசிரியர்) |
| தலைமை ஏற்பவர் | திருமதி ஜெ. ஜெயலட்சுமி அவர்கள் (தலைமையாசிரியர், நாடார் சரசுவதி உயர்நிலைப்பள்ளி) நூலை வெளியிட்டுச் சிறப்புரை : திரு. சி. இராஜேந்திரன் (தொழிலதிபர், உசிலம்பட்டி) |
| முதற்பிரதியைப் பெறுபவர் | கவிஞர் என். பரமநாதன் |
| வாழ்த்துரை | எழுத்தாளர் குமரி அனந்தன் அவர்கள் |
| ஏற்புரை | திரு. வ. வேலுச்சாமி |
| நன்றியுரை | செல்வன் அ. கதிர்வேல் (மாணவர் தலைவர்) |
நாட்டுப்பண்
நன்றியுரை
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
தலைமையேற்ற இலக்கிய ஆர்வலரான என் பள்ளித் தலைமையாசிரியர், 'மாணவர்கள் அனைவரும் பள்ளிப் பாடங்களுடன் பைந்தமிழ் நூல்களையும் பல்வகைக் கலைகளையும் கற்றுச் சிறப்புற வேண்டும்' எனக் கூறுவார்கள். அத்தகைய நல்லுள்ளமும் இலக்கிய ஈடுபாடும் மிக்க தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி.
தமிழைத் தமது இரு கண்களாய்ப் போற்றும் தொழிலதிபர் ஐயா திரு. இராஜேந்திரன் அவர்கள் தம் இராசியான திருக்கரங்களால் 'சொல்லோவியங்கள்' நூலினை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றிச் சிறப்பித்தார்கள். அவர்களுக்கு என் பள்ளியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கவிதை நூலின் முதல் பிரதியைப் பெற்றுச் சிறப்பித்த ஐயா கவிஞர் பரமநாதன் அவர்கள், கவிதையில் சுவைத்த தம் கருத்துகளைச் சுருக்கமாய்க் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி.
பல்வேறு பணிகளுக்கு இடையில், எங்கள் அன்பான அழைப்பை ஏற்று வந்தவர், ஐயா, எழுத்தாளர் திரு. குமரி அனந்தன் அவர்கள், எழுச்சிமிகு உரையால் மாணவர்களைத் தம் வசப்படுத்தி, நற்கருத்துகளை மாணவ மனங்களில் பதியச்செய்தார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
நாளும் வகுப்பில் சொற்களை மாணவர் மனங்களில் ஓவியமாய்ப் பதிவு செய்து வருபவர் என் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் அவர்கள். அவர்கள் இயற்றிய "சொல்லோவியங்கள்” என்னும் நூலை நம் பள்ளியில் வெளியிட வாய்ப்பளித்த அவர்களுக்கும் என் நன்றி.
வரவேற்புரை நல்கி, விழா ஏற்பாடுகளை நெறிப்படுத்திய என் தமிழாசிரியர் ஐயா திரு. தமிழரசன் அவர்களுக்கும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சகோதரிக்கும் நன்றி.
விழா நிகழ்வில் பங்கேற்ற பெரியோர்கள், மாணவ நண்பர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி.
விழா நடத்த அனுமதி தந்த பள்ளி நிர்வாகத்தினருக்கும் ஒலி, ஒளி அமைத்துத் தந்த நண்பர்களுக்கும் நன்றி.
மீண்டும் அனைவருக்கும் நன்றி.
5.
பொன்னிறப் பூக்காடோ! : மேற்கில், மாலையில் மறையும் கதிரவன் செந்நிற ஒளியால் வானத்தைச் செந்நிறமாக்கியது. அது செந்நிறப் பூக்கள் பூத்த பூக்காடு போல் விளங்குகிறது.
வருந்தி உழைக்கும் பாட்டாளி ! : வருந்தி உழைப்பதால் தொழிலாளர்களின் கரங்களில் சிவப்பேறியுள்ளது; தோள்களில் முத்துமுத்தாய் வியர்வை தோன்றுகின்றது.
கவி பாட நீயே துணை ! : அந்திவானத்தின் செந்நிறக்காட்சி, உழைப்பாளர்களின் உழைப்பு ஆகியவற்றைப் பாடக் கிடைத்த செந்தமிழே எனக்குத் துணை.
சங்கத்தில் வீற்றிருந்த தமிழரசி ! : உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ், பல நூல்கள் உருவாகக் காரணமாய் இருந்தது. சிறப்புமிக்க தமிழ், பாண்டியர் அமைத்த முச்சங்கங்களில் அரசியாய் கொலுவிருந்தது.
அந்த நாளும் வந்திடாதோ ! : மொழியைப் போற்றி வளர்த்த புலவர்களும், அவர்களுக்கு ஆதரவளித்த பாரி போன்ற வள்ளல்களும் வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புகள் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடு.
சிங்கமே, தடைகளைத் தகர்த்திடு ! : சிங்கம் தன்னை அடைத்து வைத்திருக்கும் கூண்டினை உடைத்து வெளியேறும். அதுபோல், பொதிகை மலையில் தோன்றிய தமிழே, உன் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பவற்றைத் தகர்த்திடு.
6.
(c)
கொம்மை - புதினம்
7.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
8.
(c)
அல்லி
9.
(b)
டேவிட் கிங்
10.
(a)
ய், ர், ல், ழ், ள்
11.
(a)
திருக்குறள்
12.
(b)
மேகங்களை
13.
(b)
கவிகேசரி சாமி தீட்சிதர்
14.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
15.
(d)
இவை அனைத்தையும்.
16.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
17.
(d)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
18.
(c)
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
19.
(c)
அடிஎதுகை, சீர்மோனை
20.
(c)
இரண்டு கருத்தும் சரி
21.
1. சிலர் நம்மைவிட அறிவிலும் பொருளிலும் வலிமை குறைந்தவராய் இருப்பர்.
2. அவர்களுக்குக் கைகொடுத்து உதவி நமக்குச் சமமாக்க வேண்டும்.
3. இதுவே நாம் வலிமை பெறுவதற்கான வழி என்கிறார், பாரதியார்.
22.
அ) அவையெல்லாம் - அவை + எல்லாம்
i) இ ஈ ஐ வழி யவ்வும் என்ற விதிப்படி
ய் - உடம்படு மெய் தோன்றியது
அவை + ய் + எல்லாம்
ii) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி
ய் + எ = 'யெ' ஆனது
= அவையெல்லாம்
= என்று புணர்ந்தது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards