12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிக் குறிப்பு வரைக.
2.
தமிழன்னை தம் பழமைநலம் புதுக்குதற்கு எவ்வாறெல்லாம் வரவேண்டும் என்று கவிஞர் சிற்பி அழைக்கிறார் ?
3.
உன்னையல்லால் ஏற்ற துணை வேறுண்டோ ?
இயம்பிடாயே செந்தமிழே! என்று கவிஞர் சிற்பி ஏன் கூறுகிறார் ?
4.
தொழிலாளர் எவ்வாறு உழைக்கின்றனர்?
5.
தமிழ்க் கவிஞர்களின் அவா யாது?
6.
பின்வரும் இரு பாக்களிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
1. பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே.
- நன்னூல்
2. மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!
- சிற்பி பாலசுப்பிரமணியம்
7.
'செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான், செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்' - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
8.
‘இளந்தமிழே’ என்னும் கவிதையில் சிற்பி கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
9.
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக.
1.
பெயர் : பாலசுப்பிரமணியம்.
சிறப்புப் பெயர் : சிற்பி (எழுத்துகளைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்).
பெற்றோர் : சி. பொன்னுசாமி - கண்டியம்மாள்.
ஊர் : ஆத்துப்பொள்ளாச்சி, கோவை.
பணி : பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர்.
சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்.
விருது : “ஒரு கிராமத்து நதி” எனும் கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது.
படைப்புகள் : ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், பூஜ்யங்களின் சங்கிலி.
2.
பழமை நலம்
(i) தமிழ்ச்சங்கங்கள் அமைத்து, பாண்டியர்கள் தமிழை வளர்த்தனர்.
(ii) பாரி முதலான கடையெழு வள்ளல்கள் காலத்தில் தமிழ்நாடெங்கும் தமிழ்மொழி பரவியிருந்தது.
தமிழ்க்குயிலே ! கூவி வா !
இத்தகைய பழமைநலமிக்க தமிழ்மொழி காலத்திற்கேற்ப புதிய புதிய இலக்கியங்களைப் பெற்று, மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் ஒரு வசந்த காலம் தோன்றிட தமிழ்க்குயிலாகக் கூவி வா என்று அழைக்கிறார் கவிஞர்.
சிங்கம் போலச் சீறி வா !
(i) மக்களிடம் காணப்பட்ட பிறமொழிக் கலப்பு மற்றும் ஆர்வமின்மையால் கூண்டுக்குள் அடைப்பட்டிருந்தது தமிழ்மொழி.
(ii) அதைத் தமது புதுப்புது இலக்கிய வளர்ச்சிகள் மூலம் உடைத்தெறிந்து விட்டு, குளிர்ந்த தென்றல் வீசும் பொதிகை மலையில் தோன்றிய தென்தமிழானது சிங்கம் போல விரைவாகப் பாய்ந்து வா என்று அழைக்கிறார் கவிஞர்.
3.
ஏற்ற துணை செந்தமிழே ! :
செந்நிறப் பூக்காடு:
(i) மேற்கு மலையில் சூரியன் மறைந்ததால் அதன் செந்நிறக் கதிர்கள் வானமெல்லாம் பரவி, மேகங்கள் யாவும் செந்நிறமானது.
(ii) அதனால், செந்நிறப்பூக்கள் நிறைந்த காடாக வானம் காட்சியளித்தது.
வியர்வை வெள்ளம் :
(i) செந்நிற வானத்தைப் போன்ற சிவந்த கைகளை உடைய, நாள்தோறும் தன் உடல் வருத்தி உழைக்கும் தொழிலாளரின் தோள் மீது காணப்படும் வெள்ளம் போன்ற உழைப்பின் வியர்வையை வியந்து பாட வேண்டும்.
தமிழின் துணை வேண்டும் :
(i) உழைப்பின் உயர்வைப் போற்றிப் பாட, உள்ளத்து உணர்வை எடுத்துக் கூற செந்தமிழே! உன்னையல்லால் ஏற்ற துணை வேறில்லை என்கிறார் கவிஞர் சிற்பி.
4.
சூரியன் மலைமுகட்டில் தலைசாய்க்கும் அந்திவேளையில் வானில் பரவும் செவ்வொளிபோல் கைகள் சிவக்குமாறும், உடல் நோக உழைக்கும் தோள்களின்மேல் வியர்வை வெள்ளம் முத்துமுத்தாக வீற்றிருக்கவும் தொழிலாளர் கடுமையாக உழைக்கின்றனர்.
5.
தமிழின் பெருமை பேசாத மரபுக் கவிஞர் இலர். பல புதிய உள்ளடக்கங்களால் தமிழ் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, பழஞ்சிறப்பையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பது, தமிழ்க் கவிஞர்களின் அவா ஆகும்.
6.
1. முற்கால இலக்கணங்கள் சில பிற்காலத்தில் வழக்கொழிந்துவிடும்.
(i) முன்பு இல்லாத சில, பிற்காலத்தில் இலக்கணமாவதுண்டு.
(ii) இவ்வாறு காலத்திற்கேற்ப மாறுவது குற்றமில்லை என்கிறது, நன்னூல்.
2. சங்க காலத்தில் மக்களும் மன்னரும் மானமுள்ளவராய் வாழ்ந்தனர்.
(i) பழிக்கு அஞ்சினர்; புகழை விரும்பினர்.
(ii) தன்னலம் கருதாது பொதுநலம் போற்றினர்.
(iii) சங்க காலம் இலக்கிய வரலாற்றிலும், மக்கள் வாழ்வியலிலும் பொற்காலமாய் விளங்கியது.
(iv) இத்தகைய பொற்காலம் மீண்டும் வரவேண்டும். எனவே, “பழமை நலம் புதுக்குதற்கு” என்று சிற்பி பாடுகிறார்.
7.
பகலெல்லாம் வெண்ணிற ஒளி வீசி வெப்பத்தைத் தருகிறான், கதிரவன்.
மாலையில் மேற்குத்திசையில், செந்நிற ஒளி பரப்பி வானத்தைச் செம்மை ஆக்குகிறான்.
அக்காட்சி, சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்த பூக்காடு போல இருப்பதாய் சிற்பி கூறுகிறார்.
8.
பொன்னிறப் பூக்காடு : மேற்கில் மாலையில் மறையும் கதிரவன் செந்நிற ஒளியால் வானத்தைச் செந்நிறமாக்கியது. அது செந்நிறப் பூக்கள் பூத்த பூக்காடு போல் விளங்குகிறது.
வருந்தி உழைக்கும் பாட்டாளி : வருந்தி உழைப்பதால் தொழிலாளர்களின் கரங்கள் சிவப்பேறியுள்ளன; தோள்களில் முத்துமுத்தாக வியர்வை தோன்றுகின்றது.
கவி பாட நீயே துணை : அந்திவானத்தின் செந்நிறக் காட்சி, உழைப்பாளர்களின் உழைப்பு ஆகியவற்றைப் பாடக் கிடைத்த செந்தமிழே எனக்குத் துணை.
சங்கத்தில் வீற்றிருந்த தமிழரசி : உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ், பல நூல்கள் உருவாகக் காரணமாக இருந்தது. சிறப்புமிக்க தமிழன்னை பாண்டியர் அமைத்த முச்சங்கங்களில் அரசியாய் கொலுவிருந்தாள்.
அந்த நாளும் வந்திடாதோ! : மொழியைப் போற்றி வளர்த்த புலவர்களும் அவர்களுக்கு ஆதரவளித்த பாரி உள்ளிட்ட வள்ளல்களும் அன்று வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புகள் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடு.
சிங்கமே, தடைகளைத் தகர்த்திடு : சிங்கம் தன்னை அடைத்து வைத்திருக்கும் கூண்டினை உடைத்து வெளியேறும். அதுபோல் பொதிகை மலையில் தோன்றிய தமிழே, உன் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பவற்றைத் தகர்த்திடு.
9.
பொன்னிறப் பூக்காடோ! : மேற்கில், மாலையில் மறையும் கதிரவன் செந்நிற ஒளியால் வானத்தைச் செந்நிறமாக்கியது. அது செந்நிறப் பூக்கள் பூத்த பூக்காடு போல் விளங்குகிறது.
வருந்தி உழைக்கும் பாட்டாளி ! : வருந்தி உழைப்பதால் தொழிலாளர்களின் கரங்களில் சிவப்பேறியுள்ளது; தோள்களில் முத்துமுத்தாய் வியர்வை தோன்றுகின்றது.
கவி பாட நீயே துணை ! : அந்திவானத்தின் செந்நிறக்காட்சி, உழைப்பாளர்களின் உழைப்பு ஆகியவற்றைப் பாடக் கிடைத்த செந்தமிழே எனக்குத் துணை.
சங்கத்தில் வீற்றிருந்த தமிழரசி ! : உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ், பல நூல்கள் உருவாகக் காரணமாய் இருந்தது. சிறப்புமிக்க தமிழ், பாண்டியர் அமைத்த முச்சங்கங்களில் அரசியாய் கொலுவிருந்தது.
அந்த நாளும் வந்திடாதோ ! : மொழியைப் போற்றி வளர்த்த புலவர்களும், அவர்களுக்கு ஆதரவளித்த பாரி போன்ற வள்ளல்களும் வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புகள் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடு.
சிங்கமே, தடைகளைத் தகர்த்திடு ! : சிங்கம் தன்னை அடைத்து வைத்திருக்கும் கூண்டினை உடைத்து வெளியேறும். அதுபோல், பொதிகை மலையில் தோன்றிய தமிழே, உன் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பவற்றைத் தகர்த்திடு.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards