12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
“ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்'' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
4.
5.
கோடைமழை கதை வாயிலாய் விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை விளக்குக.
6.
எச்.ஏ. கிருட்டிணனார் 'கிறித்தவக் கம்பர்' என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.
7.
8.
9.
10.
11.
12.
13.
1.
2.
3.
இடம் : 'இரட்சணிய யாத்திரிகம்' என்னும் நூலில், கொடியவர்கள் இறைமகன்மீது பகை கொண்டு அவருக்கு இழிவான செயல்களைச் செய்தனர். அப்போது இறைமகனின் நிலையை நூலாசிரியர் 'ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்' எனக் கூறுகிறார்.
பொருள் : எந்த உதவியும் பெற இயலாத ஏழை ஒருவனைப் போல இறைமகன் அமைதியுடன் நின்றார். இதனை எண்ணிப்பாருங்கள்.
விளக்கம் : பகைவர்கள் இறைமகனைக் கயிற்றால் கட்டும்போது அதற்கு அவர் உடன்பட்டு நின்றார். தமக்கு இழிவான செயல்களைச் செய்த அம்மனிதர்கள், காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களே என்று எண்ணி, அவர்களுக்காக இரக்கப்பட்டு, அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார். இதை எண்ணிப் பாருங்கள் என்கிறார், ஆசிரியர்.
4.
5.
முன்னுரை :
பெண் படைப்பாளர் சாந்தாதத் எழுதிய 'கோடைமழை' என்னும் சிறுகதையில் வெளிப்படும் அடிப்படைப் பண்பாய் மனிதநேயம் விளங்குகிறது. இக்கதையில் வரும் கதைமாந்தர் வாயிலாக மனிதநேயப் பண்புகளை பின்னிப் பிணைத்துக் காட்டியுள்ளார் படைப்பாளர் சாந்தாதத்.
ஆறுமுகத்தின் துயரம் :
கைக்குழந்தையை விட்டுவிட்டு, நான்கு நாள் காய்ச்சலில் கட்டியவள் கண் மூடியபின், வாழப் பிடிக்கவில்லையென்று ஆறுமுகத்தின் மகனும் விஷத்தை விழுங்கிப் போய்ச் சேர்ந்துவிட்டான்.
'உனக்கு நான், எனக்கு நீ' என்றாகிவிட்ட நாதியற்ற அவஸ்தையுடன் ஆறுமுகம் அந்தப் பச்சை மண்ணுடன் அவஸ்தைப்பட்டார் ஆறுமுகம்.
பாசப்பிணைப்பு :
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாய் நிழலாக இருந்த ஆறுமுகத்தின் மனைவி, பூமியில் தன் கணக்கை முடித்துக்கொண்டபின் மனைவியின் சிதையில் அவர் விழவில்லை; மகனுக்காக வாழ்ந்தார். ஒற்றை ஆளாய் வளர்த்து ஆளாக்கி, வேலையில் அமர்த்தி, அவனுக்கு ஒரு குடும்பத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், அவனும் அவன் மனைவியும் கைக்குழந்தையோடு ஆறுமுகத்தைத் தவிக்கவிட்டுப் போய்விட்டனர்.
பாபுவின் கருணை :
குழந்தையின் காய்ச்சலுக்கு மருத்துவமனை சென்று மருந்துச் சீட்டோடு வந்த ஆறுமுகம் நீண்ட நாள்களாய் அந்த மருந்துக்கடை பாபு சொன்னதை யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.
தள்ளாத வயதில் இருக்கும் தன் காலத்திற்குப் பிறகு குழந்தையின் நிலைமை என்னவாகும் என யோசித்துத்தான் குழந்தையைத் தத்துக் கொடுக்க முடிவு செய்தார், ஆறுமுகம்.
மனம்மாறிய ஆறுமுகம் :
“அம்மா என்கிற பாசமே தெரியாமல் இருக்க இதுமட்டும் என்ன பாவம் செய்தது ? தாயின் பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் நல்லாப் புரிஞ்சது, பாபு. இதைப் பிரிஞ்சிருக்க முடியாதே என்கிற என்னோட சுயநலத்துக்காக இதை அநாதையா விட்டுவிட்டுப் போறது எவ்வளவு பெரிய பாதகம்!" என்று மனிதநேயத்துடன் மனம் திறந்தார், ஆறுமுகம்.
தத்து எடுத்த தம்பதி :
மறுநாள் பாபுவுடன் வந்த தம்பதி, முறைப்படி குழந்தையைத் தத்து எடுத்தனர். குழந்தையைப் பெற்றுக்கொண்ட கணவனின் முகத்தில் ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு ஆகிய அத்தனையும் தெரிந்ததைப் பார்த்த ஆறுமுகம், விழிநீரைப் பிடிவாதமாய், வந்த வழி அனுப்பி வைத்தார்.
அப்போது, குழந்தையைத் தத்து எடுத்த கணவன், "ஐயா! ரொம்பப் பெரிய மனசோட எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கீங்க. நீங்களும் எங்களோட வந்துடுங்கய்யா !" என்றான்.
முடிவுரை :
குழந்தையைப் பிரிந்த அந்த முதியவர் அநாதையாகிவிடக்கூடாது என்பதற்காகக் குழந்தையோடு சேர்த்து அவரையும் தத்தெடுக்கும் மனிதநேயப் பண்பினை தத்தெடுத்த தம்பதி பாத்திரப் படைப்பில் வெளிப்படுத்துகிறார், ஆசிரியர்.
6.
முன்னுரை :
எச். ஏ. கிருட்டிணனாரின் இரட்சணிய யாத்திரிகம் ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய 'பில்கிரிம்ஸ் புரோகிரஸ்' என்னும் ஆங்கில நூலின் தழுவல் ஆகும். எச்.ஏ. கிருட்டிணனார் கம்பரின் கவிநடையைப் பின்பற்றி இரட்சணிய யாத்திரிகத்தை இயற்றியுள்ளார்.
மாசில்லாத அருள்நிறைந்த இறைமகன் :
அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல், எந்த உதவியும் பெற இயலாத ஏழை ஒருவனைப் போல அமைதியுடன் நின்றார் இறைமகன் என்பதை,
"நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி
ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்"
என்கிறார்.
கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி எனும் கொடிய தீக்கொள்ளியானது மாசில்லாத அருள் நிறைந்த இறைமகன் இதயத்தில் அழுந்தியது என்பதை, "பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி” என்கிறார்.
இவை போன்ற உவமை, உருவகத்தொடர்களை உள்ளத்திற்குக் களிப்பூட்டும் வகையில் காப்பியம் முழுவதும் எச். ஏ. கிருட்டிணனார் தருகிறார்.
வற்றிய கிணறு கடலை அடக்க முடியுமா ? :
இறைமகனுக்குத் தண்டனை பெற்றுத்தர கொடியவர்கள் உறுதியாய் இருந்ததை, 'வற்றிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா ?' என்னும் அழகான கற்பனை நயத்தோடு வெளிப்படுத்துகிறார், கிருட்டிணனார்.
இறைமகனுக்கு நேர்ந்த இன்னல் :
இறைமகன் கையிலிருந்த கோலினைப் பிடுங்கிய முரடர்கள், முள்முடியை அவரது தலையின்மீது சூட்டி வன்மையாய் அடித்து வேதனையுறச் செய்தனர். மேலும், அவர் திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து, திட்டிப் பழித்துக் கேலி செய்தனர்.
மக்களின் புலம்பல் :
இறைமகனாருக்கு நேர்ந்த இன்னலைப் பார்த்த மக்கள்,
"இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும்
இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே...... !
வானம் இடிந்து விழவில்லையே.......!
கடல்நீர் வற்றிப் போகவில்லையே.......! இஃது என்னே !
இந்த உலகம் இன்னும் அழியாமல்
தாமதிப்பதும் ஏனோ ?”
என்று கூறுவதாய்க் கிருட்டிணனார் குறிப்பிடும் கற்பனை கம்பரையே நமக்கு நினைவூட்டுகிறது.
முடிவுரை :
எச்.ஏ. கிருட்டிணனாரின் கவிநடை. கம்பரின் கவிநடையைப் போன்றே அமைந்துள்ளதை அறிந்த தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், மனம் திறந்து இவரைக் ‘கிறித்தவக் கம்பர்' என்று பாராட்டி மகிழ்ந்தனர்.
7.
8.
9.
10.
11.
12.
13.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards