12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை ? அவை யாவை ?
2.
கடலின் பெரிது எது?
3.
'தாகம் கொண்ட மீன் ஒன்று' - விளக்குக.
4.
செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவர் உரைப்பன யாவை ?
5.
‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ?' என்ற இராமனின் கூற்று பின்வரும் பழமொழிகளுள் எதற்குப் பொருந்தும்?
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும், ஆ) சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்
6.
நெடுநல்வாடை - பெயர்க்காரணம் எழுதுக.
7.
‘ஓங்கலிடை' எனத் தொடங்கும் பாடல் எப்பாவகையைச் சார்ந்தது? விளக்குக.
8.
இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
9.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
10.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
11.
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக.
12.
'பிறகொருநாள் கோடை' என்னும் கவிதை எடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு
மழைக்குப் பிறகும் மழை
நானென்பது வேறொருவன்
நீர்வெளி
அய்யப்ப மாதவன் கவிதைகள்
13.
'வம்சமணி தீபிகை' என்னும் நூலை வெளியிட்ட ஆண்டு ____________.
1880
1879
1875
1872
14.
'பாரதி கடிதங்கள்' என்னும் நூலைப் பதிப்பித்தவர் _________________.
பரலி.சு.நெல்லையப்பர்
கவிகேசரி சாமி தீட்சிதர்
ரா.அ. பத்மநாபன்
குத்தி கேசவர்
15.
அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்களுள் ஒன்று______________
வீரசோழியம்
இலக்கண விளக்கம்
முத்துவீரியம்
குவலயானந்தம்
16.
'இளந்தமிழே' கவிதை, இடம்பெற்றுள்ள நூல் ___________
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
சூரிய நிழல்
நிலவுப்பூ
17.
கடலின் பெரியது எது ?
உற்ற காலத்தில் செய்த உதவி
பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
தினையளவு செய்த உதவி
18.
வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
| (அ) | பாலை பாடினான் | 1 | தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான் |
| (ஆ) | பாலைப் பாடினான் | 2 | தேரினைப் பார்த்தான் |
| (இ) | தேரை பார்த்தான் | 3 | பாலினைப் பாடினான் |
| (ஈ) | தேரைப் பார்த்தான் | 4 | பாலைத்திணை பாடினான் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
19.
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை _________________.
அறவோர் துறவோர்
திருமணமும் குடும்பமும்
மன்றங்களும் அவைகளும்
நிதியமும் சுங்கமும்
20.
நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்ட ____________ பா ஆகும்.
வஞ்சி
வெண்
கலி
அகவல்
21.
தமிழில் உயிர்மெய்யெழுத்துகள் 216. அவ்வாறெனில் உயிர்மெய் நெடில் ________
120
116
136
126
22.
தமிழ்நாட்டில் வீதிதோறும் ___________ பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
ஆங்கிலப்
நர்சரி
தமிழ்ப்
இந்திமொழிப்
23.
'தன்னேர் இலாத தமிழ்' என்னும் பாடலில் அமைந்துள்ள அணி __________
வேற்றுப்பொருள் வைப்பணி
வேற்றுமையணி
செம்மொழிச் சிலேடையணி
பிரிமொழிச் சிலேடையணி
24.
பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
25.
''மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது.
ஆ) பொதிகையில் தோன்றியது.
இ) வள்ளல்களைத் தந்தது.
க மட்டும் சரி
க, ஆ இரண்டும் சரி
இ மட்டும் சரி
க, இ இரண்டும் சரி
26.
சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
27.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில், குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
28.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து - இடம். சுட்டிப் பொருள் விளக்குக.
29.
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடம் கட்டிப் பொருள் விளக்கம் தருக.
30.
படத்திற்குப் பொருத்தமான பின்வரும் திருக்குறளின் விடுபட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.

சினம்என்னும் _________ கொல்லி இனம்என்னும்
ஏமப் _______ சுடும்.
31.
முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருள் யாவை?
32.
Checkout
33.
Lobby
34.
Knowledge of languages is the doorway to wisdom.
35.
If you want people to understand you, speak their language.
36.
A new language is a new life.
37.
Learning is a treasure that will follow its owner everywhere
38.
பக்தவத்சல பாரதி எழுதிய நூல்கள் யாவை ?
39.
புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
40.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக எழுதுக
அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்.
41.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக எழுதுக
காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
42.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக எழுதுக
போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
43.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக எழுதுக
மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
44.
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களைக் கண்டுபிடி
தாய்மொழி : ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்.
45.
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களைக் கண்டுபிடி
தமிழறிஞர் : முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.
46.
47.
1.
கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது
அவை,
(i) பால காண்டம்
(ii) ஆரணிய காண்டம்
(iii) சுந்தர காண்டம்
(iv) அயோத்தியா காண்டம்
(v) கிட்கிந்தா காண்டம்
(vi) யுத்த காண்டம்
2.
பயன்கருதாது ஒருவர் செய்த உதவியை ஆராய்ந்தால், அதனால் விளைந்த நன்மை, கடலைவிடவும் பெரிதாகும்.
3.
1. பாரசீகக் கவிஞரான ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளுள் தேர்ந்தெடுத்த சில கவிதைகளை ‘கோல்மன் பர்க்ஸ்' என்பார், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
2. அவற்றை என். சத்தியமூர்த்தி, ‘தாகம் கொண்ட மீன் ஒன்று' என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார். இத்தொகுப்பின் ஒரு பாடலே, 'விருந்தினர் இல்லம்' என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
4.
ஒருவன், பிறன் பொருளைத் தன் பொருள் போலக் கருத வேண்டும்.
இந்த நெஞ்சழுக்கற்ற நிலையே செல்வம் பாதுகாப்பாய் இருப்பதற்கான வழியாகும்.
5.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
6.
நெடுமை + நன்மை + வாடை - நெடுநல்வாடை.
(i) வாடைக்காற்று, தலைவனைப் பிரிந்த தலைவியை வருத்தியது. எனவே, அவளுக்கு அது நெடுவாடையாய் அமைந்தது.
(ii) படையெடுத்துச் சென்ற தலைவனுக்கு வாடை நல்வாய்ப்பாய் அமைந்தது. எனவே, அவனுக்கு அது நல்வாடை ஆயிற்று.
7.
1. 'ஓங்கலிடை' எனத் தொடங்கும் பாடல் ‘நேரிசை வெண்பா' வகையைச் சார்ந்தது.
2. வெண்பாவின் இலக்கணங்களைப் பெற்று, நான்கடியில் அமைந்திருக்கும்.
3. முன்னிரண்டடிகளோடு ஒத்த எதுகையைப் பெற்ற தனிச்சொல் இரண்டாம் அடியின் நான்காம் சீராய் வந்துள்ளதால் இது நேரிசை வெண்பா.
8.
இனநிரை - இனம் + நிரை
(i) 'மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும்' என்னும் விதிப்படி, 'ம' கரமெய் (ம்) கெட்டது. ன(ன் + அ) உயிர் ஈறாய் நின்றது.
(ii) வருமொழி முதலில் மெல்லின 'ந'கரம் வந்ததால் இயல்பாய்ப் புணர்ந்தது. இன + நிரை - இனநிரை.
9.
அந்தி நேரத்தில் மேற்கு வானில் கதிரவன் மறையும் எழில் காட்சி.
வியர்வை சிந்தி, கடுமையாய் உழைத்துச் சிவந்த கைகளை உடைய தொழிலாளியின் நிலை. இவற்றைப் பாடத் தமிழின் துணை வேண்டும் என்கிறார், கவிஞர் சிற்பி.
10.
காரணம் கருதாமல் செய்த உதவி
ஒருவர் நமக்கு எந்த உதவியும் செய்யாதிருக்கையில், அவருக்கு நாம் உதவுவது 'செய்யாமல் செய்த உதவி' எனப்படுகிறது.
அப்படிப்பட்ட உதவியைச் செய்தவருக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் ஈடாகாது.
காலத்தினால் செய்த நன்றி
ஆபத்துக்காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறியதாய் இருக்கலாம்.
ஆனால், உரிய காலத்தில் செய்யப்பட்ட அந்த உதவியின் பயனை உணர்ந்தவர்கள் அஃது உலகத்தைவிடப் பெரிது எனப் போற்றுவர்.
பயன் தூக்கார் செய்த உதவி
ஒருவருக்கு உதவி செய்வதால், என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பாராது உதவி செய்ய வேண்டும். அத்தகைய உதவியை ஆராய்ந்து பார்த்தால், அது கடலைவிடப் பெரியது ஆகும்.
பனைத்துணையாய்க் கொள்பவர்
ஒருவர் செய்த சிறிய உதவியைப் பெரியோர் பெரிதாய்க் கருதுவர்.
இதனையே வள்ளுவர், தினையளவான சிறிய உதவியைப் பனையளவாய்க் கருதுவர் என்றார்.
நல்லதைக் கொள்; அல்லாததை விடு !
ஒருவர் செய்த நன்றியை என்றுமே மறத்தல் கூடாது.
ஒருவர் செய்த தீமையை அன்றே மறத்தல் வேண்டும்.
செய்ந்நன்றி கொன்றவர்க்கு உய்வில்லை!
எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் அந்தப் பாவத்திலிருந்து நீங்க வழியுண்டு.
ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு அப்பாவத்திலிருந்து நீங்க வழியில்லை.
11.
பொன்னிறப் பூக்காடோ! : மேற்கில், மாலையில் மறையும் கதிரவன் செந்நிற ஒளியால் வானத்தைச் செந்நிறமாக்கியது. அது செந்நிறப் பூக்கள் பூத்த பூக்காடு போல் விளங்குகிறது.
வருந்தி உழைக்கும் பாட்டாளி ! : வருந்தி உழைப்பதால் தொழிலாளர்களின் கரங்களில் சிவப்பேறியுள்ளது; தோள்களில் முத்துமுத்தாய் வியர்வை தோன்றுகின்றது.
கவி பாட நீயே துணை ! : அந்திவானத்தின் செந்நிறக்காட்சி, உழைப்பாளர்களின் உழைப்பு ஆகியவற்றைப் பாடக் கிடைத்த செந்தமிழே எனக்குத் துணை.
சங்கத்தில் வீற்றிருந்த தமிழரசி ! : உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ், பல நூல்கள் உருவாகக் காரணமாய் இருந்தது. சிறப்புமிக்க தமிழ், பாண்டியர் அமைத்த முச்சங்கங்களில் அரசியாய் கொலுவிருந்தது.
அந்த நாளும் வந்திடாதோ ! : மொழியைப் போற்றி வளர்த்த புலவர்களும், அவர்களுக்கு ஆதரவளித்த பாரி போன்ற வள்ளல்களும் வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புகள் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடு.
சிங்கமே, தடைகளைத் தகர்த்திடு ! : சிங்கம் தன்னை அடைத்து வைத்திருக்கும் கூண்டினை உடைத்து வெளியேறும். அதுபோல், பொதிகை மலையில் தோன்றிய தமிழே, உன் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பவற்றைத் தகர்த்திடு.
12.
(d)
அய்யப்ப மாதவன் கவிதைகள்
13.
(b)
1879
14.
(c)
ரா.அ. பத்மநாபன்
15.
(d)
குவலயானந்தம்
16.
(d)
நிலவுப்பூ
17.
(b)
பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
18.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
19.
(b)
திருமணமும் குடும்பமும்
20.
(d)
அகவல்
21.
(d)
126
22.
(c)
தமிழ்ப்
23.
(b)
வேற்றுமையணி
24.
(a)
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
25.
(d)
க, இ இரண்டும் சரி
26.
(i) ஒருவன் வலியவரிடத்துக் கோபம் கொண்டால் அஃது அவனுக்குத் தீங்காகும்.
(ii) மெலியாரிடத்துக் கோபம் கொண்டால் பழியும் பாவமும் உண்டாகும்.
(iii) ஒருவனுக்குத் தீமைகள் ஏற்படக் காரணமாவது கோபம். எனவே, அதனைத் தவிர்த்தல் வேண்டும்.
(iv) ஒருவரின் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் அழிப்பது, கோபம்.
(v) அக்கோபத்தைக் காட்டிலும் வேறு பகை அவனுக்கு இல்லை.
27.
(i) தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதால், கடனின்றி நிம்மதியாய் வாழ்கிறோம். இந்த நிலையில் என்னால் ஆன உதவிகளைச் செய்வேன்.
(ii) வீட்டிற்குத் தேவையான பால், செய்தித்தாள் போன்றவற்றைக் காலையில் வாங்கி வருவேன்.
(iii) காய்கறிகளை அரிந்து கொடுத்துச் சமையலுக்கு உதவுவேன்.
(iv) அப்பா துவைத்துத் தரும் துணிகளை உலர்த்துவேன்.
(v) மாலையில் பெற்றோர் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் பாலை காய்ச்சிக் கொடுத்து, தின்பண்டங்கள் கொடுத்துத் தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்வேன்.
(vi) உலர்ந்த துணிகளை மடித்து வைப்பேன்.
(vii) இவ்வாறு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.
28.
இடம் : இவ்வடிகள், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள் : விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்களை நல்லவரா கெட்டவரா என ஆராய்ந்து பார்த்து அனுமதிப்பதில்லை. அதுபோல, உன்னிடம் வருபவர் எவரானாலும் இன்முகத்துடன் வரவேற்று நன்றி செலுத்து. ஆண்டவன் ஏதோ ஒரு நல்வழியை உணர்த்துவதற்காக அவர் உன்னிடம் அனுப்பப்படுகிறார்.
29.
இடம் : ‘ஓங்கலிடை' எனத் தொடங்கும் தண்டியலங்கார மேற்கோள் பாடலில் இடம் பெற்ற அடி இது.
பொருள் : சூரியனும் தமிழும், கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்திலுள்ள இருளைப் போக்கும் தன்மை வாய்ந்தன.
விளக்கம் : சூரியன் உதயமாகி, மலையில் தோன்றி, உலகிலுள்ள புறஇருளைப் போக்குகிறது.
பொதியமலையில் தோன்றிய தமிழ், மக்களின் அகத்தில் உள்ள அறியாமை இருளைப் போக்குகின்றது.
30.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
31.
1. முடிந்தால் தரலாம் - இயன்றால் தரலாம்.
2. முடித்தால் தரலாம் - சொன்னபடி முடித்தால் தரலாம்
32.
வெளியேறுதல்
33.
ஓய்வறை
34.
பன்மொழி அறிவு என்பது ஞானவீட்டின் வாயில் ஆகும்.
35.
மக்கள் உன்னைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நீ, அவர்கள் மொழியில் பேச வேண்டும்.
36.
புதிய மொழி என்பது புது வாழ்க்கையைப் போன்றது.
37.
கற்றல் என்பது ஒரு புதையல் போன்றது. அது கற்பவரைத் தொடர்ந்து செல்லும்.
38.
நூல்கள் :
(i) இலக்கிய மானிடவியல்
(ii) பண்பாட்டு மானிடவியல்
(iii) தமிழர் மானிடவியல்
(iv) தமிழகப் பழங்குடிகள்
(v) உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
(vi) பாணர் இனவரைவியல்
(vii) வரலாற்று மானிடவியல்
(viii) தமிழர் உணவு
(ix) திராவிட மானிடவியல்
39.
(i) சங்க இலக்கியத்தில், தற்காலிகமாய்த் தங்குமிடம், புக்கில்.
(ii) கணவன், மனைவி ஆகியோர் பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழுமிடம், தன்மனை.
40.
அனைவரையும் அன்போடு அழைத்தவனுக்குத் துன்பம் தர யாருக்கு மனம் வரும் ?
41.
காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.
42.
போட்டியில் வெற்றி பெற்ற கலைச்செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.
43.
மாறனைப் பேச்சுத்திறனில் யார் வெல்ல முடியும் ?
44.
தமிழ்ஒளி
45.
மறைமலை அடிகள்
46.
47.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards