12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
உவமையணியை சான்றுடன் விளக்குக.
2.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
3.
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள் இக்கவிதையின் அடி,
'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக
4.
| அ) நகரம் | 1) நரம்புக்குள் மீட்டுதல் |
| ஆ) பறவைகள் | 2) உதடுகள் |
| இ) வீணை | 3) வைரம் |
| ஈ) ஒளிக்கதிர்கள் | 4) சங்கீதம் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
5.
ஆயர்கள், தலையில் சூடியிருந்த _____________ மாலை கசங்கியது.
வாகை
காந்தள்
மல்லிகை
முல்லை
6.
கூற்று : இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று தவறு, காரணம் தவறு
கூற்று சரி, காரணம் சரி
7.
சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் காரணம் ____________
நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
அனைத்தும்
8.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | குரங்குகள் | 1 | கன்றுகளைத் தவிர்த்தன. |
| (ஆ) | பசுக்கள் | 2 | மரங்களிலிருந்து வீழ்ந்தன. |
| (இ) | பறவைகள் | 3 | குளிரால் நடுங்கின. |
| (ஈ) | விலங்குகள் | 4 | மேய்ச்சலை மறந்தன. |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
9.
நெடுநல்வாடையை இயற்றியவர் _________.
கபிலர்
பரணர்
ஒளவையார்
நக்கீரர்
10.
________________ பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகியது.
வீடு
காடு
நாடு
நகரம்
11.
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம் பெற்ற இலக்கண நூல் _______________.
நன்னூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
12.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
இடைச்சொல் தொடர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
13.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது _________________.
சூரிய ஒளிக்கதிர்
மழை மேகங்கள்.
மழைத்துளிகள்.
நீர்நிலைகள்.
14.
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை ‘முதல்கல்’ கதை எவ்வாறு வலியுறுத்துகிறது ?
15.
நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
16.
இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை - விளக்குக.
17.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களுள் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
1.
அணி இலக்கணம் :
உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு வெளிப்படையாகவும் வந்தால் உவமையணி ஆகும்.
சான்று :
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந்தற்று
உவமை : உடம்பாடு இலாதவர் வாழ்க்கை
உவமேயம் : குடங்கருள் பாம்போடு
உருபு : அற்று (வெளிப்படை
பொருத்தம் :
உள்ளத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றதாகும்.
2.
(i) வாடைக்காலத்தில் கோவலர்கள், தம் நிரைகளைக் காக்க பழகிய நிலத்தைவிட்டு மேட்டு நிலத்தை அடைந்தனர்.
(ii) உடலில் பட்ட குளிரைப் போக்கக் கோவலர் பலர் ஒன்றுசேர்ந்தனர்.
(iii) தீயை மூட்டிச் சுற்றி அமர்ந்து, தீயில் கைகளைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டனர்.
(iv) எனினும், குளிர் நீங்காது, மேல்வாயும் கீழ்வாயும் நடுங்கி, பற்கள் பறையடிப்பன போல் மோதி ஒலி உண்டாக்கின.
3.
(i) உழவர்கள், முறையான ஏட்டுக்கல்வி பயிலாதவர்கள்.
(ii) இயற்கையே அவர்களின் பாடப்புத்தகம்; காணும் காட்சியே பாடம்.
(iii) காட்சிவழி கற்கின்ற அனுபவமே அவர்கள் பெறும் அறிவு.
(iv) உழவன் ஒருவன் புலர்காலைப் பொழுதில் நிலம் நோக்கிச் செல்கிறான்.
(v) வழியில் ஒரு மூங்கில் இலைமீது, வெண்ணிறப் பனித்துளி படிந்திருக்கிறது.
(vi) இப்பனித்துளி கதிரவன் தோன்றியதும், சூரியக்கதிர்களால் உறிஞ்சப்பட்டுவிடும் என உழவன் சிந்திக்கிறான்.
(vii) படித்தறியாத உழவன், எதுகை மோனையோடு பாடுகிறான்.
''மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே !
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே !''
(viii) இதன் தொடர்ச்சியாய் அய்யப்பமாதவன் பாடல் அமைந்துள்ளது.
"நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்” என்கிறார்.
(ix) கதிரவன், தன் வெண்ணிறக் கதிர்களால், நீர்நிலைகளில் உள்ள நீரை உறிஞ்சி, ஆவியாய் மேலெழும்பச் செய்கிறான், என்கிறார் அய்யப்பமாதவன்.
(x) கவிஞர்களின் கவிவடிவமும் நிகழிடமும் வேறுபட்டாலும் கருத்து ஒருநிலைப்பட்டிருக்கும் கவிநயம் கண்டு மகிழ்வோம்.
4.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
5.
(b)
காந்தள்
6.
(d)
கூற்று சரி, காரணம் சரி
7.
(d)
அனைத்தும்
8.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
9.
(d)
நக்கீரர்
10.
(d)
நகரம்
11.
(c)
தொல்காப்பியம்
12.
(d)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
13.
(c)
மழைத்துளிகள்.
14.
ஊருக்கு வந்த சோதனை :
காவிரிக் கரையின் கடைமடையில் அமைந்ததுதான் அந்தக் கிராமம். எந்த மழையின் உதவியில் ‘சம்பா’ப் பயிர்களை நட்டார்களோ, அதே மழையின் ‘அதிகப்படியான அன்பினால்' இப்போது அப்பயிர்களெல்லாம் நீரில் தத்தளிக்கின்றன. இது போதாதென்று வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஒன்று, அச்சுறுத்தக் காத்திருக்கிறது. கடன்மேல் கடன் வாங்கி நட்ட பயிர்கள் தத்தளிக்க, மேலும் மழை என்றால், பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகும்.
சோதனையைச் சாதனையாக்க நினைத்த மருதன் :
மழை பெய்வது இயற்கை. மழைநீரை வடித்தெடுத்துத் தற்காத்துக் கொள்வது மனிதனின் கடமை. வெள்ளைக்காரன் கட்டிய வடிமதகு, எவ்வளவு நீர் வந்தாலும் விழுங்கி அமைதியாய் வடிவாய்க்கால் வழியாக வெளியேற்றும். வடிவாய்க்கால் முழுக்கக் காட்டாமணக்குச் செடிகள் முளைத்து, நீரை வடியவிடாமல் தடுத்து நிற்கின்றன. இதனால் மழைநீர் வயல்வெளிகளில் தேங்கிப் பயிர்களைப் பாழ்படுத்துகிறது. இந்தச் சோதனையிலிருந்து விடுபட, மருதன் செடிகளை அகற்றிச் சாதனை படைக்க விரும்பினான்.
தனிமரம் தோப்பாகாது :
பெருவெள்ளத்தை வடியச் செய்யத் தனிமனிதனால் முடியுமா? எனவே, மருதன் ஊர்மக்களின் உதவியை நாடினான். உதவிக்கரம் நீட்ட எவரும் முன்வரவில்லை. தானே தனித்து நின்று, பணி செய்யத் துணிந்தான்.
சமூகப் பற்றின்மை :
பயிர்களை வாழவைப்பது மழை. அது பெருமழையாகி வெள்ளமாய்த் திரண்டு தேங்குகையில், தான் உயிர்ப்பித்த பயிர்களையே இல்லாமல் ஆக்கிவிடுகிறது. அது மழையின் குற்றமன்று; வெள்ளம் தேங்காமல் வடிய வழிவகை செய்யாதது மனிதனின் குற்றம். அந்தப் பழியிலிருந்து விடுபட, மருதன் சொன்ன கருத்தை எவரும் ஏற்கவில்லை. இது, சமூகப் பற்றின்மையைக் காட்டுகிறது.
ஊர் கூடித் தேரிழுத்தல் :
தேரை வடம்பிடித்து இழுக்கப் பல கைகள் தேவைப்படும். அதுபோன்று மூன்று மைல் தொலைவு வளைந்து செல்லும் வாய்க்காலில் மண்டியுள்ள காட்டாமணக்குச் செடிகளைப் பிடுங்கி எறிந்து, நீரை வடியச் செய்ய வேண்டும். இது ஊர்கூடிச் செய்ய வேண்டிய பணியல்லவா? மருதனின் விடாமுயற்சியும் சமூகப்பற்றும் ஊரைக் கூட்டிப் பணிசெய்யத் தூண்டின. இப்பொழுது ஊர் ஒன்றுபட்டுள்ளது. பயிர்ப் பாதுகாப்பின்மூலம் ஊர், மகிழ்ச்சியின் வாழ்விற்குத் திரும்பியுள்ளது.
15.
மழைக்கால வருணனை
பருவம் தவறாது பொழியும் மேகம், உலகம் குளிர்ச்சி அடையும்படி புது மழையினைப் பொழிந்தது.
மழைவெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலை உடைய கோவலர்கள் தம்முடைய எருதுகள், பசுக்கள், ஆடுகள் அனைத்தையும் மேட்டு நிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் பழகிய நிலத்தை விட்டு வந்ததற்கு வருந்தினர்.
அவர்கள் சூடியிருந்த காந்தள் மலர்களால் ஆன கண்ணியில் நீர்த்துளி வீழ்ந்து அலைத்தது.
குளிர் அவர்கள் உடலை வருத்தியது.
தீ மூட்டி, கையைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்து வெம்மை சேர்த்தனர்.
பற்கள் பறைபோல் கொட்ட, குளிரில் நடுங்கினர்.
விலங்குகள் மேய்தலை மறந்து ஒடுங்கின.
குரங்குகள் குளிரால் நடுங்கி வருந்தின.
மரத்தில் தங்கிய பறவைகள் நிலத்தில் விழுந்தன.
பசுக்கள், தம் கன்றுகள் பாலுண்ணுதலை விடும்படி உதைத்துத் தள்ளின.
அஃறிணையாகிய மலையினையும் குளிரச்செய்தது.
இவ்வாறு மழைக்கால வருணனையை நெடுநல்வாடை கூறுகிறது.
16.
முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி.
இவை மூன்றையும் கலந்து உருவாக்கப்பட்ட கட்டடக்கலை.
சான்று :
(i) 1768 இல் உருவான சேப்பாக்கம் அரண்மனை
(ii) எழும்பூர் தொடர்வண்டி நிலையம்
(iii) ரிப்பன் கட்டடம்
(iv) மத்தியத் தொடர்வண்டி நிலையம்
(v) உயர்நீதிமன்றம்
(vi) விக்டோரியா அரங்கு.
17.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களுள் இன்றும் நிலைத்து இருப்பவை எழும்பூர் அருங்காட்சியகமும், கோட்டை அருங்காட்சியகமும் ஆகும்.
இந்தியாவின் முதல் பொது நூலகம், கன்னிமாரா; இன்று நவீனமாய் வளர்ந்து வருகிறது.
திரைப்படத் தொழில் சார்ந்த இடங்களும் திரையரங்கமும் சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்கள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards